Monday, 23 November, 2020

 

 மிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம்!

(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ் ( )

உலகின் நம்பர் ஒன் நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா ஜனாதிபதியின் மணி மகுடம் நவம்பர் 3ம் தேதி நடந்த தேர்தலில் உருண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.அதற்கு முக்கிய காரணம் கொரானா என்ற கொடிய நோயினை அவர் கட்டுப் படுத்த தவறியதால் 1,45,000 அமெரிக்கர்களை உலகப் போரில் இழந்ததினை விட இழந்து விட்டோம் என்ற கோபத்தில் தான் என்றால் மிகையாகாது. அந்த நோய் உலக அளவில் 13, 46,576 மற்றும் இந்தியாவில் 1,30,993 உயிர்களையும் பலி வாங்கி விட்டது என்பது நமக்கும் வருத்தம் தானே! நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் குளிர் காலம் என்பதால் மக்கள் மிகவும் கவனமாக தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்று உலக சுகாதார இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. கிருமிகள் உயிரற்றத்தாக கருத முடியாது ஆனால் பரவக்கூடியது. கிருமிகள் தனது உயிரினை கிரியா ஊக்கியாக மாற்ற முடியாது. அவைகள் தன்னால் உயிர் வாழ முடியாது. வைரஸின் உயிரணுக்கள் மற்ற உயிரணுக்கள் மீது பற்றி பரவுகின்றது. அது மனிதர்கள் மீது படரும்போது சுகவீனத்தினை உண்டாக்கின்றது. உலகளவில் 3,20,200 பாலூட்டிகளை தாக்கின்றது(mammal ) அதனில் 219 கிருமிகள் மனிதர்களை தொற்றுகின்றது என்று அமெரிக்காவின் மருத்துவ நூலகம் கூறுகின்றது.

1)      ஒவ்வொரு மழைக் காலத்திலும் மழைத்துளிகள் விழும்போது நாம் சிறுவர்களாக வாயினைத் திறந்து சுவைத்திருப்போம். ஆனால் அவைகள் கிருமிகளையும், நுண்ணுயிர்களும் தாங்கி வருகின்றன என்று தெரிவதில்லை. அவைகள் அதிஷ்டவசமாக நோய் கிருமிகளை பரப்பக்கூடியதல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மழைத்தண்ணீரை பானைகளில் சேகரித்து உபயோகிப்பதினை கண்டிருப்போம். ஆனால் அந்தத் தண்ணீரை கொதிக்க வைக்காமல் உபயோகிக்கக் கூடாதாம்.

2)      நோய் கிருமிகளை வெரும் கண்ணால் பார்க்க முடியாது. அவைகளை டெலெஸ்கோப்பின்னால் மட்டுமே காண முடியும். நோய் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை வெவ்வேறாக பிரித்துப் பார்க்க முடியாது. பாக்ட்ரியா என்ற நுண்ணுயிர் தனி உறுப்பானது. அவை மற்ற உயிர்களை பரப்பக் கூடியது. குளிர் பிரதேசத்தில் ஒருவருக்கு நோய் கிருமிகள் பற்றினால் அவை நான்கு பேர்களுக்கு பரப்பிவிடும். ஆனால் வெயில் பிரதேசத்தில் தொற்று நோய் ஒருவரோடு  நின்று விடும்.

3)      ஆஸ்துமா மற்றும் டீ.பி. என்ற காச னாய் நிபுணர் ‘காதலின் தாஸ்’ கூறும்போது ஒருவருக்கு நோய் தொற்றி பின்பு குணமானால் அவருடைய உடலில் அவைகளை மறுபடியும் எதிர்க்கும் சக்தி மற்ற உயிரணுக்களுக்கு வந்து விடுகிறது என்கிறார். அவை பரவுவது அவரவர் உடல் வாகினை பொறுத்தது என்றும் கூறுகின்றார்.

4)      ஒருவரை கொரானா தாக்கிவிட்டது என்பது வெளியே தெரியாது; அவை பாலின நோய் போன்றவையாகும். அவை ஒரு சிலரை அறியாமல் தாக்குவதில்லை, மாறாக நூற்றுக் கணக்கானவர்களை தாக்கக் கூடியவை என்று அமெரிக்காவின்  (CDC) சென்டர் பார் டிஸீஸ் கண்ட்ரோல் கூறுகிறது. அந்த அமைப்பு நோய் பரப்பும் கிருமிகளை கண்டு பிடித்து அழிக்கும் தொழில் நுட்பத்திற்கான அமைப்பாகும். அதன் தலைவர் டாக்டர் பாசி என்பவர் இருக்கின்றார். அவருக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் தான் ஏழாம் பொருத்தமாக இருக்கின்றது என்று நீங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கண்டிருப்பீர்கள்.

5)      'நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின்' வெளியிட்ட ஆராய்ச்சிப்படி, 'Influenza' என்ற சளி காச்சல் வந்து விட்டால் நெஞ்சிலும், மூக்கிலும் எரிச்சலை உண்டாக்கும், பின்பு உடல் வீக்கமும் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். அதனை உடனே சரி செய்யாவிட்டால் ரத்த ஓட்ட நாளங்களில் அடைப்பினை ஏற்படுத்தி இதயத்தினை பாதிக்கும் என்று கூறுகிறது.

6)      வாஷிங்டனில் உள்ள 'Sola Med Solution'  தலைமை நிர்வாகி 'சரளயன் மார்க்', 'சாதாரண குளிரில் நடந்தால் நோய் பரவாது, ஆனால் தொடர்ந்து குளிரில் இருந்தால் சளி சவ்வு காய்ந்து அதன் மூலம் கிருமிகள் நுழையும்' என்று எச்சரிக்கின்றார். ஆகவே ஏசி வெயில் காலத்தில் நல்லது, இதமானது தான்  ஆனால் குளிர் காலத்தில் அதனை உபயோகிப்பதால் கிருமியின் தொற்றால் அவதிப் பட வேண்டுமாம்.

7)      சிறியவர் முதல் பெரியவர் வரை ஏதோ சிந்தனையில் அல்லது படிக்கும்போதோ, அல்லது எழுதும்போதோ நகத்தினை கடிப்பதினை பார்த்திருப்போம். அந்த நகம் தான் கிருமிகளை தங்கிச் செல்லும் கப்பலாக பயன் படுகிறது என்று பலருக்குத் தெரியாது. குழந்தைகள் பல மூக்கினுள் கைவிட்டு பின்பு வாயில் வைத்து சுவைப்பதினையும், ஏன் பெரியவர் சிலர் வேலையில்லா நேரத்தில் புத்தகங்கள் படிப்பதினை விட்டு,விட்டு மூக்கினுள் உள்ள முடிகளை பிடுங்கும் பழக்கத்தினையும் கொண்டுள்ளனர். ஆனால் அந்த மயிர்கள் தான் வெளியில் உள்ள தூசி மூக்குக்குள் செல்லாமல் தடுக்கின்றது என்று அவர்களுக்குப் புரியாது. அப்படி செய்பவர்களை நோய் கிருமிகள் எளிதாக பற்றிக் கொள்கின்றன.

8)      2019 ம் ஆண்டு வெளியிடப் பட்ட 'the journal of  exprimental medicine' அறிக்கையில் உடலுக்கு ஓய்வு கொடுத்து அதிக நேரம் தூங்கினால் T-Cell என்ற நோய் எதிர்ப்பு சக்தியினை கொடுக்குமாம். நீங்கள் நோயுள்ள சிலர் வெகு நேரம் தூக்கம் வராமல் அவதிப் படுபவர் குணமாக்குவது நெடுநாள் ஆகுமென்பதையும், அதிக நேரம் தூங்குபவர் சீக்கிரமே குணமாய்வதினையும் காணலாம்.

9)      நான் மதுரையில் 1982 ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியாற்றிய போது எனது 10 மாத மகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று எனது மனைவி கீழ வெளி வீதியில் உள்ள டாக்டர் திருஞானம் என்பரிடம் காட்ட எடுத்துச் சென்றார். அந்த டாக்டர் மருந்து கொடுத்து விட்டு குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் என்று கூறினாராம். அதற்கு என் மனைவி ஏன் டாக்டர் குழந்தை காய்ச்சல் என்றால் நீங்கள் குளிர் நீரில் குளிக்க வையுங்கள் என்று கூறுகின்றீர்களே என்று கேட்டதிற்கு நான் டாக்டரா நீங்கள் டாக்டரா என்று சொல்லி அனுப்பி விட்டாராரம். இதனையே தான் பாட்டிமார்களும் தங்கள் பேரக் குழந்தைகளுக்குச் செயகின்றார்கள். குழந்தைகள் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி நிபுணர் Whitley-William  கூறும்போது, 'குழந்தைக்கு ஜுரம் வந்தால் குளிரான நீரில் குளிக்க வைக்கக் கூடாது. மாறாக மிதமான நீரில் தான் குளிக்க வைக்க வேண்டும் என்று சொல்கின்றார்.

10)  நீங்கள் நோயுற்றிருந்தால் புகை பிடிக்கவோ அல்லது புகைப்பவர் அருகிலோ இருப்பதனை தவிர்க்கவும். ஏனென்றால் புகைப்பவர் நுரையீரலை சீக்கிரமே கிருமிகள் தாக்குகின்றனவாம்.

11)  வைட்டமின் 'D' என்ற ஊட்டச்சத்து மனிதனுக்கு மிக முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கின்றது. அவை பால், முட்டை, மீன்களில் உள்ளது. சூரிய ஒளியிலியிலும் உள்ளதாக அறிவோம். அதனையே 'Nutrient' என்ற பத்திரிக்கையில் கூறப் பட்ட குறிப்பில் சொல்லப் பட்டுள்ளது. அதுவும் அதிகாலை சூரியன் உதயமாகும் நேரம் மற்றும் மாலை அந்தி மயங்கும் நேரம் ஓசோன் என்ற ஊட்டச் சத்து அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

12)  சில நாடுகளில், மற்றும் சில மாநிலங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அப்படி அணிவதால் நோய் பரவுவதை அறவே தடுக்க முடியாது. மாறாக அந்த நோய் வேகமாக பரவுவதை தடுக்கமுடியும் என்று CDC Dr. Horovitz கூறுகின்றார்.

13)  உங்கள் கால்களில் பெருவிரல்களில் வீக்கம் வந்தாலும், விரல்களில் குளிர்ந்த நீர்பட்டால் அரிப்பு எடுக்கின்றது என்றால் அது கொரானாவிற்கான அறிகுறி என்று Dr.Mathew G Heinz, MD,, Tuscon Medical Centre, Arizona மாநிலத்தில் பணியாற்றுபவர் கூறுகின்றார்.

14)  கொரானா வந்தால் சுவையினை இழக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று Dr Heniz கூறுகின்றார். அதுவும் இளைஞர்களுக்கு அதிகமாக தென்படும். ஹரியானா மொஹாலியில் உள்ள நேஷனல் விவசாய மற்றும் உணவு மருத்துவதிற்கான முதுகலை பட்டப் படிப்பு மையம் கூறுகையில் தைல(peppermint) அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றினை நுகரும் சக்தியினை இழக்கும் தன்மை கொண்டதாக அமையும்.

15)  ‘Annals of Nurology’ என்ற விஞ்ஞான புத்தகத்தில் கொரானாவால் பாதிக்கப் பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் வரும் நோயாளிகளின் மூலைகளின் நரம்பு மண்டலத்தினை பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, தலை சுற்றல், மயக்கம், வலிப்புத்தன்மை மற்றும் சிலருக்கு இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப் படவும் வாய்ப்புள்ளதாக கூறப் பட்டுள்ளது.

16)  முதுமையில் வருகின்ற 'alzheimer' மறதி மூலம் வடிக்கும் வானி என்ற உமிழ் நீரால் அல்லது பெண்கள் பிறப்புறுப்பின் வெளிப்பக்கம் ஏற்படும் கட்டிகள் உடைந்து 'HSV-!' என்ற ஹெர்பெஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் வெளியேறுவதால் மிகவும் ஆபத்தானதும், சீக்கிரம் பரவக்கூடியதாகும் என்று தைவான் நாட்டு ஆராய்ச்சிக் குறிப்பு கூறுகின்றது. அதனை கண்டு பிடித்து சரியான மருந்து எடுத்துக்கொண்டால் 90 சதவீதம் குணமாக் கிவிடலாம் என்றும் கூறுகின்றது.

17)  கொரானா வைரஸ் பிளாஸ்டிக், உலோக பொருட்களில் 2-3 நாட்களுக்கும், பேப்பர்-அட்டைகளிலும் 24 நேரத்திக்கு இருக்கும், என்று 'New England Journal of Medicine' என்ற பத்திரிக்கைக் குறிப்பு கூறுகின்றது., வைரஸ்  தொலைபேசி, கைப்பிடி, ரிமோட், கம்ப்யூட்டர் கி போர்டு, குழாய்கள், கதவு, மின் இயக்கி கைப்பிடிகள், பொது இடங்களில் உள்ள பெட் சீட், போர்வை, தலையணை, ATM, பெட்ரோல்பம்ப் ஹாண்டில், ஜிம்மில் உள்ள சாதனங்கள், பாத்திரங்கள் போன்றவற்றில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து இருக்கும். ஆகவே தான் sanitizer வைத்து சுத்தம் செய்யவும், பாத்திரங்களை சூடு தண்ணீரில் கழுகவும் அறிவுரை சொல்லப் படுகிறது.

18)  செலியாக்(Celiac) என்ற ஒவ்வாமை நோய் வயிற்றுப் போக்கு, வயிற்று பொருமல் போன்றவை போன்றவை நோய்களினை எதிர்க்கும் திறனை எதிர்கொண்டுள்ளது  என்று எடுத்துக் கொள்ளலாம் என 'Celiac Virus Foundation' செய்தி குறிப்பு சொல்கிறது. தசை பிடிப்பு மற்றும் முதுகு வலி போன்றவையும் அதனுடைய அறிகுறியாகுமாம்.

19)  EVD எபோலா Zika வைரஸ் நோய்கள் ஆப்பிரிக்க நாடுகளான கினியா, காங்கோ போன்ற நாடுகளில் முதலில் கொசு கடியினால் மிருகங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி பின்பு மனிதர்களிடம் பரவி அதனால் 50 சதவீதம் பேர் இறந்துள்ளதாக செய்தி குறிப்பு கூறுகிறது. ஆ ண்கள் உடல் உறவு கொள்ளும்போது வெளியாகும் விந்துக்களால் பெண்களுக்கும் பரவுதாம். அதன் பிறகு பெண்களால் தொற்று ஏற்படுகின்றது என்றும் சொல்லப் பட்டுள்ளது. அதன் அறிகுறிகள் காய்ச்சல், களைப்பு, தலைவலி, தொண்டை வறண்டு போதல், வயிற்று போக்கு போன்றவையாகும். மேற்பாதித்த 28,616எபோலா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பாதித்த 28,616பேரில் 11,310 இறந்து விட்டனர் என்று கூறப் படுகின்றது.

20)  Rabbies என்ற சொறி நாயால் கடிபட்டவர் அல்லது அதன் நாவில் வடியும் நீரின் தொடர்பு கொண்டவர் உடனே ஊசி போட்டுக் கொள்ளவேண்டும். நான்கு மாதத்திற்குள் போட்டுக் கொள்ளாவிட்டால் அவருக்கு காய்ச்சல், தலைவலி, தூக்கமின்மை, மயக்கத்தினால் அவதிப் படுவர்.

21)  Meningitis என்ற மூளை காய்ச்சல் நோய் எப்படி அறிந்து கொள்வதென்றால், பாதிக்கப் பட்ட நபர் தனது தாடையினை நெஞ்சை நோக்கி கீழே கொண்டு வந்தால் முடியாது. அத்துடன் தூக்கமின்ம, குளிர் காய்ச்சல் வந்தது போல நடுக்கம், இதய துடிப்பு அதிகமாகுதல், முதுகு பிடிப்பு போன்றவை ஏற்படும். உடனே டாக்டரை அணுக வேண்டும். பெரும்பாலும், பால் கொடுக்கும் பெண்கள், சிறுவர் இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் இருந்தால் அதன் ஈர்ப்பால் முதுகு தண்டின் நீரில் கிருமி தொடர்பு ஏற்பட்டு மூளை காய்ச்சல் வருமாம். உடனே டாக்டரை அணுக வேண்டும்.

22)  தோலின் மேல் பகுதியில் ஏற்படும் பாலுண்ணிகள் இதுவரை தேரைகள் மூலம் ஏற்படுகிறது என்று எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால் popiloma virus என்ற புற்று நோயால் ஏற்படுகிறதாம். அவைகள் பெண்களின் கருப்பை வாய் புற்று நோய், யோனி புற்று நோய், ஆண் மற்றும் பெண் குறிகளின் மேல் பகுதியில் ஏற்படும் புற்று நோயாகுமாம். அவை 30-40 சதவீதம் பாலுறவு மூலமே உண்டாகிறது என்றும் கூறப் படுகிறது.

23)  நோய்கள் வந்தால் உடனே ஆண்டிபயோடிக்ட்ஸ் ஊசி போட்டுக் கொள்ளாதீர்கள். அவை உடலில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து விடும். Bactria என்ற நுண்ணுயிர் தான் virus என்ற கிருமிகளை அளிக்கக்கூடியது என்று 'Royal Society of Medicine' ஆய்வு குறிப்பு கூறுகிறது. நோய்கள் வந்து விட்டால் ஒவ்வொரு காரியமும் முடிந்த பின்பு சோப்பு தண்ணீரில் 20 நொடிகள் நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டுமாம். அப்போது தான் பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும் என்றும் சொல்கிறது.

Flu, Corona தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது அவசியம், ஆனால் அது எப்போது வரும் என்று கூற முடியாது. Remdesivir  மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஊசி அதனை அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா அதிபர் சொன்னார். ஆனால் பரிசோதனையில் அது பக்க விளைவு ஏற்படுத்தி விட்டதால் அதன் உற்பத்தி நிறுத்தப் பட்டது. தற்போது Pfizer, Covin-tech, Covaxin, Bharath-tech, ரசியா sputnik, Astra நெட், ஜான்சன் அன்ட் ஜான்சன், Bio N tech போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊசிகளை இன்னும் WHO என்ற உலக சுகாதார நிறுவனத்தில் கொடுத்து சோதனை செய்யப் பட்டு விநியோக அனுமதியினைப் பெறவில்லை. ஏனென்றால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களே பொறுப்பானதால் நூறு சதவீத வெற்றி என்று எதனையும் கூறமுடியாது. நிறுவனங்கள் தாங்கள் ஊசி கண்டு பிடித்து விட்டதாகவும் அதனை உலக சுகாதார மையம் அங்கீகரிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்றும் கூறுகின்றன. ஆனால் நோய்க்கான மருந்து அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் தான் உபயோகத்தில் வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றார். ஏனென்றால் அந்த மையம் உயிர்களை பலி கொடுப்பதினை விட பாதுகாப்பதுதான் தங்கள் தலையாய கடமை என்றும் கூறுகின்றது. Corona pandemic முதல், இரண்டு என்று தற்போது மூன்றாம் நிலைக்கு வந்துள்ளது என்றும் கூறப்பது. அதில் உண்மை இருப்பதுபோல அமெரிக்காவில் தினமும் 2 லட்சமும் டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வருவதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகோள் விடப் பட்டுள்ளது.

24)  கூடியமான வரை கூட்டம் நெருக்கமான இடங்களை தவிர்க்கவும், முக கவசம் அணியவும், சமூக இடைவெளியில் இருக்கவும், பரந்த வெளிப் பரப்பில், பூங்காவில் நடப்பதும், மூச்சிப் பயிற்சி செய்யவும், கைகளை சுத்தமாக கழுவுவதும் அவசியம் என்னும் கூறப் படுகிறது. பால் போடாத கிரீன் டீ, காய்கறி சூப்பு மற்றும் ஆட்டு கால் மற்றும் எழும்பு சூப்பு போட்டு குடிக்கவும் சொல்லப் படுகிறது. நாம் winter என்ற குளிர் காலத்தில் இருப்பதினால் சளி நோய் வராமல் காத்துக் கொண்டால் நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றிக் கொள்ளலாமா?

Sunday, 1 November, 2020

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

 

            

           (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ )

நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம் என எண்ணுகின்றேன்.

1)    பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியா, சீனா, மெக்ஸிகோ, ஆப்ரிக்கா, அர்ஜென்டைனா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த டைனாசர் படிமங்கள், முட்டைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அவைகள் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டன. அந்த மிருகம் பறவையினம் என்றும் அவைகள் இறக்கை கொண்டுள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. அவைகளை வைத்து பறக்கும் ‘ரோபோ பாம்ப்’ என்றும் படம் எடுத்துள்ளனர். அவைகள் சில அவதாரங்களை வாகனமாகவும் பயன் பட்டதாகவும் இலக்கிய கதைகளில் கூறப்படுகிறது உங்களுக்கு ஆச்சரியமாக தெரியவில்லையா!

2)    டால்பின் என்ற மீன் தெற்காசியா, மற்றும் அமேசான்  நீர் நிலைகளில் வாழ்ந்து வருவதனை நீங்கள் அறியலாம். அவைகள் அடிக்கடி தண்ணீருக்கு மேலே துள்ளி பார்வையாளர்களை கவரும். அவைகள் ஏன் அடிக்கடி நீருக்கு மேலே வருகின்றது என்றால் அவைகள் பத்து நிமிடங்களுக்கு மேல் தண்ணீருக்குள் மூழ்கியிருக்க முடியாது. ஆனால் கரடியினத்தினைச் சார்ந்த ‘ஸ்லோத்’ என்ற மிருகம் நீருக்கு அடியில் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை தம் பிடிக்க முடியுமாம்.

3)    தீக்கோழி தென் ஆப்பிரிக்கா, இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழுகின்றன. அவை 9 அடி வரை வளரும். அவை எதிரி மிருகங்கள் கண்டால் தலையினை மண்ணுக்குள் புதைத்து விடுவதினைப் பார்த்திருக்கின்றோம். அவற்றினைப் பற்றி ஒரு பழமொழி கூட இருக்கின்றது. 'தீக்கோழி தலையினை மண்ணுக்குள் புதைப்பதால் உலகமே இருண்டு விடுவதில்லையென்று'. ஆனால் உண்மையில் தலை முழுவதும் மண்ணுக்குள் புதைத்தால் அது மூச்சுத் திணறி இறந்து விடும். ஆகவே அவை மூச்சு விடும் அளவிற்குத் தான் தன் தலையினை மண்ணுக்குள் புதைக்குமாம்.

4)    அமெரிக்காவில் அனைத்து மகளிருக்கும் ஓட்டுரிமை 1920 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் மக்கள் பிரநிதிச்சட்டம் 1918 படி 21 வயதான ஆண்களுக்கும், 30 வயதான பெண்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது.1928 சட்டப்படி தான் அனைத்து 21 வயதானவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது. ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு 1918ம் ஆண்டு சொத்துரிமை உள்ள பெண்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்கியது. 1950ம் ஆண்டு அரசியல் சட்டத்தில் தான் 21 வயதான ஆண், பெண் இரு பாலாருக்கும் ஓட்டுரிமை கொடுக்கப் பட்டது.

5)    இது வரை நிலவில் தண்ணீர் இல்லையென்று பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் அக்டோபர் மாதம், 2020 அமெரிக்கா நாசா விண்வெளி  விஞ்ஞானிகள் நிலவில் தண்ணீர் துளிகளை கண்டறிந்தனர். அதன் படி மனிதர் வாழலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாம்.

6)    விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் கூடத்திலிருந்து வெளியே வந்தால் காற்றில் பறப்பது போல பூமி ஈர்ப்பு சக்தியில்லாமல் மிதப்பது போல தோன்றுவார்கள். தற்போது அந்த விஞ்ஞானிகள் யாரும் அழுதால் கூட நீர் அவர்களின் தாடையில் ஒரு உருண்டையாக நிர்ப்பதினைக் காணலாம். ஏனென்றால் அதற்கு ஈர்ப்பு சக்தியில்லாததால் கீழே விழவில்லை!

7)    உலக கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கால்களை அலங்கரிக்கும் ‘அடிடாஸ் மற்றும் பூமா’ என்ற காலணிகளுக்குச் சொந்தக் காரர்கள் ‘ஆடி மற்றும் ரூடி டேஸ்லர்’ இருவரும் அமெரிக்க சகோதரர்கள். அவர்கள் முதன் முதலில் 1929ல் இணைந்து கம்பனியின ஆரம்பித்தனர். அது எப்போது பிரபலமானது என்றால் 1936ம் ஆண்டு ஜெர்மனி தலைநகரம் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் கொடுத்த காலணிகளைக் கொண்டு ஒடித்தான் அமெரிக்கா தடைகளை வீரர் ‘ஜெஸ்ஸி ஓவென்’ 4 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்ததால் அவைகள் மிகவும் பிரபலியமானது. அதன் பின்பு அவர்களுக்குள் கருத்து மோதல்கள் வந்து ஆடி என்பவர் ‘அடிடாஸ்’ காலணிகளையும், ரூடி ‘பூமா’ என்ற காலணிகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர்.

8)    உலகிலேயே ஈராக்-ஈரான் நாடுகளுக் கிடையே நடந்த 8 வருடப் போர் கேள்விப் பட்டிருக்கின்றோம், ஆனால் உலகிலேயே 38 நிமிடங்களுக்குள் நடந்த போரினை கேள்விப்பட்டிருக்கின்றோமா?

இந்திய கடற்பகுதி மத்திய ஆப்ரிக்க நாடான ஜான்சிபார் என்ற குட்டித் தீவின் சுல்தான் இறந்து விட்டார். அவருக்குப் பின்பு 1896ல் அரியணையில் ஏறிய சுல்தான் பிரிட்டிஷ் அரசினை எதிர்த்தும், தன்னிச்சையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதனை எதிர்பார்க்காத பிரிட்டிஷ் அரசு தனது போர் கப்பலை அனுப்பி குண்டு மழை அந்த தீவின் மீது வீசி அந்த தீவினை 38 நிமிடங்களில் கைப்பற்றியது தான் மிக குறுகிய கால போராக கருதப் படுகிறது.

9)    நியூஜிலாந்து நாட்டினை ஏன் ‘கிவிஸ்’(Kiwis}  என்று அழைக்கின்றோம் தெரியுமா? கிவிஸ் என்றால் தமிழில் கூஸ்பெரி பழம் என்கின்றோம்.  அந்த செடிகள் சீனர்களால் வளர்க்கப் பட்டு வந்தது. அதனை நியூஜிலாந்துக்கு அன்பளிப்பாக சீனர்கள் வழங்கினர். அந்தப் பழம் நியூ ஜிலாந்து  நாட்டினர் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். ஆகவே அந்த செடிகள் பெரும் அளவிற்கு வளர்க்கப்பட்டது. பின்பு அந்தப் பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தனர். அங்குள்ள மக்கள் அதனை பெருமளவிற்கு விரும்பினர். ஆகவே தான் அந்த நாட்டு மக்களை கிவிஸ் என்று அழைக்கின்றனர்.

10)  ஒரு இடத்தில் தீ ஏற்பட்டால் நாம் வெறும் தண்ணீரை ஊற்றினால் தீ அணைய நீண்ட நேரமாகும். ஆனால் தீயணைப்புப் படையினர் தண்ணீரை குழாய் மூலம் தண்ணீரை பீச்சியடித்தால் அணைந்து விடுகிறதே ஏன் தெரியுமா? அதன் காரணம் என்னெவென்றால் அந்த தண்ணீருடன் ‘பொட்டாசியம் பை கார்போனேட்’ என்ற வேதியப் பொருளை கலந்து தண்ணீர் அடிப்பதால் தீ சீக்கிரமே அணைந்து விடுகிறது.

11)  நீங்கள் பெரிய பாம்பு சிறிய பாம்பினை விழுங்குவதினைப் பார்த்திருப்பீர்கள். தவளைகள் பெரிய கண்களைக் கொண்டுள்ளன. அவைகள் இறையினை விழுங்கும்போது கண்களை மூடிக் கொள்ளும். அது ஏன் தெரியுமா?  தவளை இறையினைப் பிடித்ததும், அதன் கண்கள், அதன் விழிக் குழிக்குள் தள்ளும். பின்பு அந்த விழிகளை மேல் நோக்கித் தள்ளி வாயில் உள்ள உணவினை வயிற்றுக்குள் தள்ளிவிட்ட பின்பு தான் கண்ணைத் திறக்கும்.

12)  ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, ஜாம்பியா நாடுகளில் அதிகமாக காணப் படும். அவைகள் ஏன் தனது நாக்கினை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு வருகின்றன, ஏன் என்று தெரியுமா. முதலில் அந்த நாக்கின் நீளம் 8 அங்குலம் கொண்டது என்று காணலாம். அதன் பின்பு நாக்கு நீல நிறத்தில் இருக்கும். அந்த நாக்கு பாலைவனம், முள் காடுகளில் உள்ள வெயிலின் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது.

13)  சிகரெட் பற்றவைக்கும் தீப்பட்டி கண்டு பிடிக்கும் முன்பு 'ளைட்டரை' கண்டு பிடித்து விட்டார்கள். 1823 ம் ஆண்டு ஜெர்மன் வேதியல் நிபுணர் ‘டோபனீர்’ என்பவர் தொழிற்சாலைக்கு தேவையான லைட்டரை கண்டு பிடித்தார்.  3 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற் புரட்சிக் காரணமாக ஆங்கிலேய வேதிய நிபுணர் தொழிற்சாலைக்கு தேவைப் படும் லைட்டரினை கண்டு பிடித்து, அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பரவி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வழி வகுத்தது.

14)  ஒருவர் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்ச்சிகளான பிறந்த நாள், திருமண நாள், கல்யாண நாள் போன்ற வெற்றிக்கு பின்பு இறப்பதினை கேள்விப் பட்டிருக்கின்றோம். அப்படி ஏன் நடக்கின்றது என்றால் ஒருவர் மகிழ்ச்சியான தனது வயதிற்கேற்ற உணவினை சாப்பிடாதலால் மாரடைப்பால் மரணம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே வயதிற்கு மாறாக சாப்பிடுவதும், புணர்வதும் உடல் சுகவீனங்களுக்கு வழி வகுக்கும். ஏன் இட்லியினை போட்டிபோட்டு சாப்பிட்டு தொண்டையில் அடைத்து உயிர் போவதினை பத்திரிக்கை மூலமாக அறிந்திருப்பீர்கள். ஆகவே எதற்கும் ஒரு அளவு உள்ளது என்று விழாக்களில் மூக்குப் பிடிக்க உண்ண  வேண்டாம்.

15)  நீங்கள் வாய்க்குள் ஹம்மிங் என்ற ரீங்காரம் செய்யும் ஒலி எதன் மூலம் வருகின்றது தெரியுமா? அவ்வாறு ஹம்மிங் செய்யும்போது காற்று மூக்கு வழியே வெளியேறும். நீங்கள் பரிசோதனைக்காக மூக்கினைப் பிடித்துக் கொண்டு ஹம்மிங் செய்யுங்கள் பார்க்கலாம். ஒலி வராது. ஆகவே அரை மூக்குள்ளவர்களை மூக்குறையா என்று அழைக்கின்றோம். அவர்களுக்கு ஒலி வருவது குதிரைக்கொம்பேயாகும்.

16)  நமது உடலில் ஓடும் ரத்தம் சிகப்பாக இருந்தாலும், வெளியே இருந்து பார்க்கும்போது அது நீல நிறமாக காட்சியளிக்கும். அது ஏன் தெரியுமா? நமது ஒளி உடலில் உள்ள திசுக்களினை ஊடுருவி நரம்புகளில் ஓடும் ரத்தத்தினை பார்ப்பதால் ரத்தம் நீல நிறமாக காட்சியளிக்கின்றதாம்.

17)  நாம் சாப்பிடும் மிளகாய் ஏன் காரமாக இருக்கின்றது என்று தெரியுமா?  மிளகாயின் தோலில் காரத் தன்மையில்லை, மாறாக மிளகாய் உள்ளே இருக்கும் நரம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளில் தான் காரம் அதிகமாக இருக்கும். நீங்கள் மிளகாயினை வெயிலில் காயவைத்து, அதனை அணில் போன்ற விலங்குகள் அல்லது புறா, காக்கை போன்ற பறவைகள் கொத்திவிட்டு வெறும் தோலினை மட்டும் அரைத்தால் காரம் இல்லாதிருப்பதினைக் காணலாம்.

18)  உலகிலேயே பெரும் பாலைவனம் என்று ஆப்பிரிக்கா நாட்டின் சகாரா பாலைவனத்தினை சொல்வோம். ஆனால் அமெரிக்கா பூலோக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகா தான் பிக பிரமாண்டமான பாலைவனமாக கூறுகின்றனர். அவை பெரும்பாலும் பனிக்கட்டியால் மூடப் பட்டிருக்கும். சகாரா பாலைவனம் 85,46,960 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. ஆனால் அண்டார்டிகா 1,42,44,934 கிலோ மீட்டர் பரப்பளவாகும்.

19)  கி.பி. 60 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் ஏன் அவ்வாறு அழைக்கப் பட்டார் தெரியுமா? அவர் பிரசவத்தின் போது அவருடைய தாயாருக்கு 'சிசேரின்' என்ற அறுவை சிகிச்சை செய்து பிறந்ததால் அவருக்கு அந்த பெயர் வந்ததாம். லத்தீன் மொழியில் 'Caedae' என்பதற்கு 'cut' என்று அர்த்தமாம்.

20)  'Lady Bird' என்ற சிகப்பு நிறவண்டு வயதினை எவ்வாறு விலங்கியல் நிபுணர்கள் நிர்ணக்கின்றனர் தெரியுமா? அந்த ஓட்டின் மேல் உள்ள கரும் புள்ளிகளை எண்ணி அதன் வயதினை நிர்ணயிக்கின்றனராம்.

21)  மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுத்திறனை தட்பவெப்ப சூழலுக்குஏற்ப எப்படி கணிக்கப் படுகிறது தெரியுமா. அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் 543 மாணவிகளை ஒரு கட்டிட அறைகளிலும் , அதே அளவிலுள்ள கட்டிட அறைகளில்  அதே அளவு மாணவர்களையும் வைத்து 33.8 டிகிரி சீதோஷ்ண அளவில் மாணவிகளின் அறைகளில் ஒவ்வொன்றாக சீதோஷ்ணத்தினை அதிகப் படுத்தும்போது வினாக்களுக்கு சரியான பதில்களை சொன்னார்களாம். அதே நேரத்தில் மாணவர்கள் அறைகளில் ஒவ்வொரு டிகிரியாக குறைக்கும்போது சரியான பதில்களைச் சொன்னார்களாம். இதிலிருந்து பெண்கள் வெட்பத்தினை விரும்புவர்களாகவும், ஆண்கள் குளிரினை விரும்புகின்றவர்களாகவும் இருப்பது தெரிகின்றதல்லவா?

நீண்ட கட்டுரைகள் தந்த எனக்கு வாசகர்களுக்கு ஒரு மாற்றாக அறிவு சார்ந்த செய்திகளை தர வேண்டும் என்று நினைத்து உங்களுக்கு மேற்படி தகவல்களை தந்துள்ளேன். அவைகள் பல உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதிற்காக இதனை எழுதியுள்ளேன்.

உங்களுடைய விருப்பு, வெறுப்பினை என்னுடன் தொடர்பு கொள்ள கீழ்கண்ட மெயில் விலாசத்தினை தேடவும்:

mdaliips@yahoo.com

Tuesday, 25 August, 2020

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே! !

 

                        

         ( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

சிறு குழந்தைகளை போட்டோ ஸ்டூடியோவிற்கு படம் பிடிக்க செல்லும்போது, எப்படி நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, ஸ்மைல் ப்ளீஸ் என்பார் போட்டோகிராபர் என்பதும், அப்படியும் அந்த குழந்தை சிரிக்காவிட்டால் ஒரு சாக்கிலேட்டினை கையில் வைத்துக் கொண்டு சிரி இந்த சாக்கிலேட்டு தருகிறேன் என்பார். அந்த குழந்தையும் சிறிது சிரித்தவுடன் ஒரு க்ளிக் என்ற சத்தத்துடன் அவர் காரியம் முடிந்து விடும். இதேபோன்று தான் சிலர் எப்போதும் முகத்தினை கடு கடுப்பாக வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்து நண்பர்கள் விளையாட்டாக சொல்வார்கள், அவருக்கு சிரிப்பதற்கு காசு கொடுக்க வேண்டுமென்று. அப்படிப் பட்டவர்களிடமிருந்து கவலையை எப்படி விரட்டி சாதாரண மனிதராக செய்வது என்று அறிவு சார்ந்த மனோதத்துவ அறிஞர்கள் சில வழிமுறைகளை சொல்லியுள்ளார்கள், அவைகள் என்னென்ன என்று கிழே பட்டியலிடுகிறார்கள். அவைகளை நாம் காணலாம்.

            கவலைகளுக்கு மனோதத்துவ நிபுணர் கிறிஸ்டின் புஹார் தன்னுடைய 'The worry workout' என்ற புத்தகத்தில் மூன்று காரணங்களை சொல்லியுள்ளார். அவைகள் : 1) கவலை 2) மன அழுத்தம், 3) பதட்டம் ஆகியவற்றினை குறிப்பிடுகிறார்.

1) கவலை ஏற்பட முக்கிய காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்ட அல்லது ஏற்படுகின்ற நேர்மறை எண்ணெங்கள் ஆகும்

2) மன அழுத்தம்: நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற அழுத்தங்களால் நமது செயல் முறைகளில் மாற்றம் ஏற்படுகின்றது.

3) பதட்டம் எவ்வாறு ஏற்படுகின்றது என்றால் நமது அன்றாட வாழ்க்கையில் கவலை ஏற்படும்போது மனதளவில் மற்றும் உளவியல் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு அதனால் ஒரு பாதுகாப்பின்மை பின் தொடரும்போது பதட்டம் ஏற்படுகின்றது.

கவலை மனதளவில் இருக்கும்போது மன அழுத்தத்தினால் இதயத் துடிப்பு அதிகமாகிறது. அதனுடைய பக்க விளைவுகள் தூக்கமின்மை, மற்றும் அன்றாட நடவடிக்கையிலிருந்து மாறுபட்ட நடவடிக்கையாக பதட்டம் ஏற்படுகின்றது.

            கவலையின் அளவு: ஒரு மனிதனுக்கு கவலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அளவிடவேண்டும்என்றால், உங்களுடைய அலுவகத்தில் ஒரு முக்கியமான பெரிய கருத்தரங்கு வைத்திருப்பார்கள். அதற்காக நீங்கள் இரவு, பகல் என்று பாராமல் கண் விழித்து அறிக்கை தயார் செய்யும்போது இரவு தூக்கத்தினை மறந்து, காலம்தாழ்த்தி உணவருந்தி, நோய்களுக்கான அன்றாட மருந்து வகைகளை காலந்தாழ்த்தி எடுக்கும்போது படபடப்பு ஏற்பட்டு சில சமயங்களில் உடல் சுகவீனமாவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் நடந்துவிட்டால் உலகமே  இருண்ட மாதிரி நினைத்து கவலை கொள்வீர்கள். அவைகள் எல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் நடப்பது தான் என்று நினைத்து உங்கள் வாழ்க்கையினை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் கவலைகளால் நன்மையையும் நடக்கக் கூடும், அவைகள் என்னெவென்றால் உணவினை நேரத்தோடு உண்பீர்கள், மருந்தினை காலம் தாழ்த்தாது எடுத்துக் கொள்வீர்கள். கார் ஓட்டும்போது சீட் பெல்ட்டினை காவலர்கள் பிடிப்பார்கள் என்று மாட்டிக் கொள்வீர்கள். இரு சக்கர வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிவீர்கள். வெளியில் நடமாடும் போது முகக் கவசம் மறக்க மாட்டீர்கள். நீங்கள் படுக்கப் போகுமுன் தேவையான லைட்டுகளைத் தவிர மற்றவையினை அனைத்து விடுவீர்கள். சமையல்  கேஸினை மூடி விடுவீர்கள். வெளியூர் செல்லும்போது பூட்டு சரியாக பூட்டினோமா என்று பூட்டினை பல தடவை இழுத்துப் பார்ப்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர் புஹார் கூறுகின்றார்.

சில சமயங்களில் தேவையில்லாமல் கவலைப் படுவீர்கள். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து சிந்திப்பீர்கள் என்றால் ஆகா நாம் அப்படி கவலை கொண்டிருக்கக் கூடாது என்று தெளிவாகும்.

கவலைகளை எவ்வாறு சமாளிப்பது:

சில சமயங்களில் பல வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்துப் போட்டு செய்வீர்கள். அதனால் ஒரு வித படபடப்பு ஏற்படும். அதேபோன்று ஒரே நேரத்தில் செய்ய வேண்டுமென்றால் ஒரு பட்டியலிட்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என்று அமைதியாக தீர்மானியுங்கள். அப்படி தீர்மானித்தால் உங்கள் படபடப்பு குறையும் என்று, மனோதத்துவ நிபுணர், 'வந்திதா துபே' கூறுகிறார்.

  சில சமயங்களில் நமது சக்திக்கு மேல் உள்ள காரியங்கள் செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக கவலை ஏற்படும். அதனைத் தொடர்ந்து பயம் ஏற்படுவதும் இயற்கையே. அதுபோன்ற நேரத்தில் எப்படி எட்டாமல் இருக்கும் திராட்சை கனியினை தாவி, தாவி களைத்து பலிக்காத நரி ,'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' என்று சென்று விடுகின்றதோ அதேபோன்று அப்படிப் பட்ட சமயங்களில் அகலக் கால் வைக்காமல் இருப்பது நன்று.

நம்மை சுற்றி குழப்பமான சம்பவங்கள் ஏற்படும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். அதனை முன்னிட்டு தொலைக் காட்சியினை பார்ப்பதும், செல்போன் தகவல்கள் பார்ப்பதும் என்ற அமைதியின்னைக்கு ஆளாக நேரிடும். அந்த நேரத்தில் எது சரியான தகவல் என்று பகுத்தறிந்து அமைதியாக செயலில் இறங்க வேண்டும் என்று கொல்கத்தா மனநல ஆஸ்பத்திரி சீனியர் டாக்டர் ஜாய் ரஞ்சன் கூறுகிறார்.

நமக்கு வயதாகும்போது நோய்களால் சங்கடப் பட வேண்டுமே, அப்படி வந்தால் நமது மருத்துவ செலவிற்கு என்ன செய்ய முடியும் என்று இப்போதே நினைத்து குழம்பி இருக்கக் கூடாது. அது காலன் செய்யும் செயல் என்று அதனையும் எதிர் நோக்க தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் கோபம், ஏமாற்றம் போன்ற எதிர் மறையான செயல்கள் எதிர் கொள்ள நேரிடும். அவைகளெல்லாம் ஒவ்வொரு சராசரி மனிதனும் எதிர்கொள்ளும் செயல்கள் தான் என்று எண்ண வேண்டும். அவைகள் எல்லாம் நீங்கள் மட்டும் தான் சந்திக்கின்ரீர்கள் என்று எண்ணக் கூடாது என்று மனோதத்துவ நிபுணர் துபே கூறுகின்றார். ஒரு காகிதத்தை எடுத்து வருகின்ற ஐந்து வருடங்களில் என்னென்ன காரியங்களுக்காக கவலைப் பட வேண்டியிருக்கும் என்று பட்டியலிட வேண்டும். அவைகளில் ஒரு சில தான் நீங்கள் கவலைப் பட வேண்டியதாக இருக்கும். ஆகவே வாழ்க்கையினை கவலைப் பட்டே காலந்தாழ்த்தக் கூடாது.

கனடா நாட்டில் , 'Quiet company' என்ற தியான கூடத்தினை நடத்தும், 'எமிலி திரிங்'(Emily Thring) என்ற நிபுணர் சொல்லும்போது உங்கள் கவலையைப் போக்கும் மருந்து என்னெவென்றால் தியானம் மூலம் மனதினை ஓர் அமைதி நிலைக்கு கொண்டு வருவதுதான் என்கிறார். மூச்சினை இழுத்து வெளியே விடுவதும், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியினையும் அவர் சிறந்த மருந்தாக சொல்கின்றார்.

நீங்கள் சமீப காலமாக செய்தி தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் கொரானா நோய், அதனால் பாதித்தவர், இறந்தவர் என்ற பட்டியல் உலகிலே நீண்டு கொண்டே போகின்றது என்று அறிவீர்கள். கொரானா நோய் பாசிட்டிவ் என்றால் நாம் செத்து விடுவோம் என்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் இறங்கி சிலர் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு வந்து விடுவதினையும் காணலாம். மனிதனைப் படைத்த இறைவன் நோய்களுக்கான மருந்துகளையும் கண்டு பிடிக்கும் திறமையையும் கொடுத்திருக்கின்றான் என்ற போது பின்பு ஏன் அந்த கோழைத் தனமான முடிவையும் எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் மரணத்தினையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் பழங்குடியினரிடையே voodu என்ற ஒரு பழக்கம் இருக்கின்றது. அது என்னவென்றால் ஒரு குற்றம் நடந்து விட்டால் அந்த பழங்குடியின் தலைவர் தலைமையில் கிராம மக்கள் கூடுவர். தலைவர் ஒரு பொம்மையினை கொண்டு வரச் சொல்லுவார். பொம்மை வந்ததும் ஒரு நீண்ட ஊசியினை எடுத்து அந்த பொம்மையின் நெஞ்சுப் பகுதியில் செலுத்துவார்.  அதன் பின்பு அவர், 'குற்றம் செய்தவர் வருகிற ஞாயிறு இரவுக்குள் இறந்து விடுவார்’ என்று சொல்லுவார். பின்பு ஊர் மக்கள் களைந்து செல்வார்கள். அவர் சொல்லியபடி குற்றம் செய்தவரும் ஞாயிறுக்குள் இறந்து விடுவார். அவர் உடம்பினை பரிசோதனை செய்தால் அதில் எந்த வித விஷமும் இருக்காது. பின்பு எப்படி இறக்கின்றார் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தும்போது குற்றம் செய்தவர் தவறு செய்து விட்டோம் என்ற மன நிலையில் பயத்தினால் இதயத் துடிப்பு அதிகமாகி இறந்து விடுகின்றார் என்று கண்டு பிடித்தனர்.

அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அப்போது அந்த கைதியினைக் கொண்டு விஞ்ஞானிகள் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அதற்கான அனுமதியும் பெற்றார்கள் அந்த கைதி தூக்கிலப் படுவார் என்பதிற்குப் பதிலாக விஷ கருநாகம் தாக்கிக் கொல்லப் படுவார் என்று அறிவிக்கப் பட்டது. அதனை கைதிக்கும் தெரிவிக்கப் பட்டது. ஒரு விஷப் பாம்பினையும் கைதிக்கு முன்பு கொண்டு வரப் பட்டது. அதனைத் தொடர்ந்து கைதியின் கண்ணை இறுக மூடி கட்டப் பட்டது. கைதியினை ஒரு நாற்காலியில் அமரவைத்து நாகமும் அவருடைய கையில் நாற்காலியோடு சேர்த்துக் கட்டப் படும்படி அமைக்கப் பட்டது. அதன் பின்பு நாகம் கைதியின் கையில் கொத்துவது போல சிறிய ஊக்கால் குத்தப் பட்டது. அந்தக் கைதி அலறியபடி இரண்டு நிமிடங்களில் இறந்து விட்டார்.

மருத்துவர் அவரது பிரேதத்தினை பரிசோதித்தார்கள். என்னே ஆச்சரியம் அவர் உடம்பில் பாம்பு கொத்துவதுபோல  ஒரு விஷம் இருந்தது. அந்த விஷம் எங்கிருந்து வந்தது, அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று ஆய்வு நடத்தப் பட்டது. என்னே ஆச்சரியம் அந்த விஷம் அவர் உடம்பிலிருந்தே தயாரிக்கப் பட்டதாகும் என்றால் நம்புகிறீர்களா

இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் நாம் எடுக்கும் ஒவொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உள்ளுக்குள்  உருவாக்கின்றது. அதன் படி உங்கள் உடல் ஹார்மோனை உருவாகின்றது. 90 சதவீத நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணெங்களால் உருவாகும் நோய் எதிர்ப்பு குறைதலே ஆகும்.

நாம் இப்போது கொரானா கால நெருக்கடியில் இருக்கின்றோம்  நோய் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே என்று அஞ்சாமல், சிறு நோய் வந்தாலும் நமக்கு கொரானா நோய் வந்து விட்டது என்று பதட்டப் படாமல், இவ்வளவு காலம் நாம் நோய்களை, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டோம், இதுவும் அதுபோன்ற ஒன்று தான் என்று நினைத்து நமது வாழ்க்கை வாழவதிற்கே, பயந்து சாவதற்கு அல்ல மாறாக சிரித்து மற்றும் சிந்தித்து வாழ்வதிற்கே என்ற மன தைரியத்தோடு வாழ வேண்டும் என்று வீறு நடைபோடுவோமா?

 

 

Thursday, 20 August, 2020

 

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

உலகம் முதலும் கொரானாவில் பாதிப்பு ஏற்படுத்திய கொரானா என்ற கொடிய நோய் மிகவும் தாமதமாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவினையும் விடவில்லை. அதன் பலன் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப் பட்ட ஊரடங்கு இன்னமும் முடியாமல் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையை ரோடுரோலர் இயந்திரத்தின் சக்கரத்தில் போட்டு நசுக்கிய நேரத்தில் சில மனிதர்களின் தனிப் பட்ட முயற்சிகளால் மனித நேயம் இன்னும் மறையவில்லை என்பதினை எடுத்துக் காட்டவும், கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கி  தவித்த பயணிகள் தங்கள் தாய்நாடு திரும்ப ஏர் இந்திய வந்தே பாரதம் என்ற விமானத்தில் 10.8.2020 அதிகாலை இறங்க சந்தோசமான நேரத்தில் விபத்து ஏற்பட்டு விமான கேப்டன், உதவி பைலட் உள்பட 18 பேர்கள் இறந்தும், 129 பேர்கள் காயம் அடைந்தும் நிர்கதியாக நின்ற நேரத்தில் மலப்புர மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடு பட்டதையும் உங்களுக்கு படம் பிடித்துக் காட்டலாம் என நினைக்கின்றேன்.

1) ஹைதராபாதில் பாலன் நகரில் லேத் பட்டறை வைத்திருக்கும் கொடூரி பாலலிங்கம் மூன்று அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சொந்தக்காரர். அதில் குடியிருப்போர் 70 தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர், அன்றாட கூலி வேலை பார்த்தும், வியாபார நிறுவனங்களில் வேலையும் செய்பவர்கள். கொரானா லாக் டவுனில் அணைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் வருமானமின்றி தவித்தனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி அவரிடம் தயங்கி, தயங்கி வந்து தான் வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் அது திறக்கும் வரை வாடகை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்கு பாலலிங்கமும் அவருடைய நிலையை அறிந்து இருந்ததால், சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவரும் ஒரு  காலத்தில் சிறு வயதில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் தான் என்பதால் அந்த தொழிலாளர்களின் கஷ்டத்தினை உணர்வார். 1995ம் வருடம் தன்னுடைய 16 வயதில் வறுமையில் சிர்சிலா என்ற கிராமத்திலிருந்து ஐராபாத் வந்து பிழைப்புத் தேடினார். மது பாரில் உள்ள மேஜைகளை சுத்தம் செய்வதிலிருந்து பல தொழில்களில் வேலைபார்த்து உழைத்து கையை ஊன்றி கர்ணம் பாய்ந்து இன்று ஒரு welding  பட்டறைக்கு அதிபதியாக இருக்கின்றார். அவர் அதனை நினைத்துப் பார்த்து வாடகைப் பணம் தர  வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். அவர் அவ்வாறு செயல்பட்டதால் லாக் டவுன் முடிந்து வீட்டில் குடியிருப்போர் வேலைக்கு சென்றதும் தாங்களாகவே முன் வந்து வாடகை செலுத்தியுள்ளனர். நாம் இங்கு சில பரிதாபமான சம்பவங்களை கண்டிருப்போம். வீட்டின் உரிமையாளர் வாடகை தாரர்களை வெளியே தள்ளி பூட்டி விட்டதும், போவதற்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகள் படம்போட்டுக் காட்டின அதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதற்கு மத்தியில் பாலலிங்கம் போன்ற வர்கள் மனிதாபமிக்கவர்களில்லையா?

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா-கடார் பகுதிற்கு டி.எஸ்.பீ யாக ஜெஸ்வால் என்பவர் பணியாற்றுகிறார். அவர் கட்டுப்பாட்டிற்குள் தேசிய நெடுசாலை வருகின்றது. லாக் டவுனால் தன் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் குடும்பத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியோர் தகதகக்கும் கோடை வெயிலையும் பொறுப்படுத்தாது சாரை  சாரையாக செல்வதினைக் கண்டார். அவர்களில் பலர் வெயிலைத் தாங்ககூட செருப்புகளுமில்லை என்று அறிந்து இரக்கப்பட்டு தனது சகாக்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பதேபாட், சம்சாபட் மற்றும் குவாலியர் பகுதிகளில் கூடாரம் அமைத்து அவர்கள் இளைப்பாறவும், தண்ணீர் பந்தல் அமைத்தும், உணவு பொட்டலங்கள் வழங்கியும் உதவி செய்ததோடு சிறு குழந்தைகள் பருக பாலும் கொடுத்து உதவினார். அவரின் உதவியினை இடம் பெயர்வோர் வாயார வாழ்த்தினர். ஆனால் அதே நேரத்தில் சில மாநிலங்களில் அப்படி இடம் பெயர்ந்தவர்களை இரக்கமில்லாமல் தடி கொண்டு தடுத்து நிறுத்தியதையும் பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் மத்தியில் இரக்ககுணம் கொண்ட போலீசும் ஜெஸ்வால் போல  நமது மத்தியில் பணி செய்கிறார்கள்.

 

 

மகாராஷ்டிரா மாநிலம் பூனா நகரைச் சார்ந்த தேசிய வேதியல் லாபரட்ரியில் ஆராய்ச்சி மாணவியான 23 வயது சாய்ஸ்ரீ அக்கோன்ட் தன்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழியினை பார்ப்பதற்கு கர்நாடக மாநிலம் மணிபாலுக்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் தேசிய லாக் டவுன் அறிவிக்கப் பட்டு தன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார். அந்த சமயத்தில் மே மாதம் 11ந்தேதி ரோட்டில் செல்லும்போது காவல் துறையினர் சுமார் 50 தங்கள் மாநிலத்திற்கு இடம் பெயர்பவர்களிடம் நிறுத்தி விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ரயில்வே ஒப்பந்ததாரால்  பணியமர்த்தப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னதால் கால் நடையாக தங்கள் சொந்த ஊரான 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெலுங்கானா மஹபூப் நகருக்கு செல்பவர்கள் என்றும் அறிந்தார். அவர்களில் 10 சிறுவர்கள்களும், ஒரு கற்பிணியும் இருந்தார்கள். உடனே ஆராய்ச்சி மாணவி துரிதமாக செயல்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உடுப்பி ரயில் நிலையத்தால் தங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் அந்த மாநிலத்திற்குள் சென்று வர 'இ' பாசும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்பு Humaanitarian Relief Society என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்க உதவி செய்தார். அது மட்டுமா, கர்ப்பிணிக்கு தேவையான சானிட்டரி பேடுகளையும் வழங்கினார்.

அதன் பின்பு சமூக தளங்கள் வாயிலாக தெலுங்கானா அரசிற்கு அவர்கள் நிலையினை எட்ட செய்து அனைவரும் தெலுங்கானா அரசு உதவியுடன் மே மாதம் 19 ஊர் திரும்ப ஏற்பாடு செய்தார். அவர்கள் அனைவரும் ஊர் திரும்புமுன் நிர்கதியாக இருந்த தங்களுக்கு அடுத்த மாநிலத்தினைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவி அகோண்டி முயற்சியால் ஊர் திரும்புகிறோம் என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அதற்கு பின்னரும் லாக் டவுன் முடிந்தாலும் தனது பூனாவிற்கு திரும்பாமல் வேலையிழந்த கிட்டத்தட்ட 3000 தொழிலாளர்கள் அஸ்ஸாம், ஜார்கண்ட், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு திரும்ப தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும், அந்தந்த அரசுகள் உதவியுடனும் ஏற்பாடு செய்தார். இது இதனை காட்டுகின்றது என்றால் மலைக்குன்றையும் சிறு எறும்பு அசைத்து விடும் என்று தானே!

            கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் 10.8.2020 இரவு ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்த கேரள மக்கள் 180 பேர்களை துபாயிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த 'வந்தே பாரத்' ஏர் இந்திய விமானம் தரையில் இறங்கும்போது விபத்துக்குள்ளாகி மூன்றாக உடைந்து கேப்டன், உதவி விமானி உள்பட 18 இறந்தும், 172 பேர்கள் காயத்துடனும் தப்பினர் என்று பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள். அது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது ஒரு புறம் இருந்தாலும், எவ்வாறு 3 பகுதிகளாக உடைந்த விமானத்தில் 172 பேர்கள் உயிர் பிழைத்தார்கள் என்று அறிந்தால் நீங்கள் உண்மையிலேயே ஆர்ச்சரியப் படுவீர்கள்.

             அந்த இரவில் மழையும் பெய்து கொண்டு இருந்தது. விமானம் பயங்கர சப்தத்துடன் விபத்துக்குள்ளாகி விட்டது என்று அறிந்த மலப்புர மக்கள் சிறிதும் தாமதிக்காது, ஆம்புலன்சுக்கு காத்திராமல் செயல் பட்டனர். சுதந்திர போராட்ட நேரத்தில் மாப்பிள்ளைமார் எவ்வாறு ஒருங்கிணைந்து ஆங்கிலேயரை 1921 ம் ஆண்டு எதிர்த்து நின்றார்களோ அதேபோன்று ஒரு தேசிய மீட்புப் படை போல  செயல் பட்டனர். உலகில் நம்பர் ஒன் நாடு அமெரிக்கா என்று பீற்றிக்கொள்ளும் அங்கே ஒரு கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் லாயிட் கழுத்து நெறிக்கப் பட்டு மின்னாடாபோலிஸ் என்ற நகரில் இறந்ததும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய அமெரிக்கர்கள் அங்குள்ள கடைகளை சூறையாடி கையில் கிடைத்ததெல்லாம் எடுத்துச் சென்றது நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

            ஆனால் இயற்கையிலேயே இறக்கக் குணம் கொண்ட மலப்புற மக்கள் அங்கே சிதறிக் கிடந்த பொருளினை ஒன்றையும் தொடவில்லை. மாறாக காயம் பட்டவர்களை ஆம்புலன்சுக்குக் கூட காத்திராமல், அவர்கள் தலையில் குல்லாய் போட்டவர்களா அல்லது நெற்றியில் பொட்டு வைத்திருப்பவர்களா என்று பாராமல், கடும் கொரானா நோய் பயம் இருந்தாலும், தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் விலையுயர்ந்தது என்றும் பாராமல், அல்லது தங்களது கார்களின் சீட் கவர் மிகவும் காஸ்டிலி என்றும் எண்ணாமல் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை தங்களது வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று அவர்களுடைய உயிர்களை காப்பாற்றினார். பெற்றோரை இழந்து அழுது கொண்ட குழந்தைகளை ஆறுதல் செய்து அவர்களை  நெஞ்சோட அணைத்து, அவர்களுடைய உறவினருக்கு தகவலும் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் காயம் பட்டவர்களை காப்பாற்ற தேவியான ரத்தங்களை கொடுக்க மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும்போது வரிசையாக நிற்பதுபோல நின்று ரத்தம் தானம் செய்தனர்.

            நான் மேற்கோள் காட்டின மனிதாபிமான செயல்கள் நமது நாட்டில் மத வேறுபாடுகள் இருந்தாலும், சாதிச் சண்டைகள் இருந்தாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வு இருந்தாலும் மனித நேயம் மக்களிடமிருந்து மறைய வில்லை என்றால் சரிதானே, சொந்தங்களே!

  

 

 

Tuesday, 4 August, 2020

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.(ஐ.பீ.எஸ் (ஓ )

உலகில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 80 லக்சமும் இறப்பு 6 லக்சம் 89 ஆயிரமும், இந்தியா உலகில் நான்காவது இடத்தில் 18,12,770 பாதிப்பும்,  இறப்பு 38, 249 ம் இதுவரை உள்ளது. ஆனால் அதற்கான மருந்தும், ஊசியும் பல கோடிகள் செலவு செய்து கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளன, ரஷ்யா நாடு ஊசியினை கண்டு பிடித்து விட்டோம் என்று கூறினாலும் அதன் பயன்பாட்டிற்கு அக்டோபர் மாதம் ஆகும் என்று கூறுகிறது. ஆக  இந்த வருட கடைசியாகும் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலக சுகாதார சேர்மன் டாக்டர் டெட்ரஸ் அதனான் அவர்கள் 3.8.2020 ல் கொடுத்தப் பேட்டியில் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்காமலும் போகலாம் என்றும் ஆகவே மக்கள் கை கால்கள் சுத்தம், மனித இடைவெளி, முகக் கவசம், மக்கள் கூடுவதினை தடுப்பதும்,  ஆரோக்கியமாக வாழப் பழகிக் கொள்வதோடு, மூச்சுப் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

            பிறகு எப்படி கொரானா ஆபத்திலிருந்து மீண்டார்கள் என்று சொல்கின்றார்கள் என்றால், பழங்கால சித்தா, ஆயுர்வேதிக், யுனானி, மருந்துகளாலும், ரம்டசிவர் என்ற நோய் எதிர்ப்பு மாத்திரையாலும், தனிமைப்படுத்துதலாலும், தனிமனிதர் இடைவெளியினாலும், உடல் வெளி சுத்தத்தினாலும், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியாலும், முகக்கவசம் அணிவதாலும் கட்டுப்படுத்தமுடிகிறது என்று சொல்லலாம்.

            இதனையே தான் நமது முன்னோர்கள் தங்களுக்கு அருகில் கிடைக்கும் பல மூலிகைகளால் பல நோய்களை விரட்டி உள்ளார்கள். உதாரணத்திற்கு கொரானா ஒருவருக்கு இருக்கின்றது என்றால் வேப்பிலை, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் பவுடர், கல் உப்பு,கலந்து சூடாக்கி உள் நாக்கு தொண்டை வரை படும் படி வாய் கொப்பளிக்கும் படியும், ஆவியினை மூக்கின் வழியாகவும், வாய் வழியாகவும் சுவாசிக்கவும், நாட்டு பருந்துகள் கலந்த கபசுர நீர் அருந்தியும், வெளியில் சென்று வந்தால் கைகால்கள் தண்ணீரால் சுத்தம் செய்யவும், சாவு வீட்டுக்கு சென்று வந்தால் ஆடைகளை துவைக்கச் சொல்லியும், வெளி காற்று உள்ளே வரும்படி வீடுகள் அமைத்து வாழ்ந்து, வயல்களில் இறங்கி குடும்பமே வேலை பார்த்தும், வயல்களில் கிடைக்கும் காய் கறிகள், கனி வகைகள், கம்பு, சோளம், கேப்பை போன்ற தானியங்களில்  சமைத்த உணவுகள் அதிகமாக உபயோகித்ததாலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக வாழ்ந்தார்கள்.  ஆனால் அவைகளை எல்லாம் மறந்ததினாலும் நாகரீக வாழ்க்கையும், துரித உணவு பழக்கங்களாலும் உடல் வலுவிழந்து  இன்று கொரானா நோய் பாதிப்பில் இந்தியாவில் டாக்டர்கள் 43 பேர்கள் உள்பட 38, 249பேர்கள்  மடிந்துள்ளனர் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறவில்லையா?

            அவ்வாறு நாம் மறந்ததினால் நோயினைக் கட்டுப் படுத்த அரசே 'லாக் டவுன்' என்று கட்டுப் பாடுகளை விதித்துள்ளது நான்கு மாதங்களாக. இந்தியா தன்னிறைவு அடைய வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது இந்த கொடிய நோய் பாதிப்பு அதனைத் தொடர்ந்த கட்டுபாடால், பொருளாதாரம், பிள்ளைகளின் படிப்பு பாதித்து, உடல் உழைப்பின்றி வீட்டினில் முடங்கிக் கிடந்து உடல் பாதித்து, பல்வேறு குடும்பப் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தும், பாலின தவறுகளும், கொலை, கொள்ளை, வழிப்பறி, மதுக்கடத்தல் போன்றவற்றில் மாணவர்கள் உள்பட சம்பந்தப் பட்டிருப்பது சமூக பிரட்சனையாக இருக்கவில்லையா? அது மட்டுமா, லாக் டவுனால் 43 சதவீத மக்கள் மன உளைச்சலில் உள்ளனர் என்று மன நல ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். இந்தியாவில் மார்ச் மாதம் கொரானா நோய் பரவ ஆரம்பித்ததுமே உலக சுகாதார நிறுவனம், மும்பையிலுள்ள தாராவியில் அதிக பாதிப்பும், இறப்பும் ஏற்படும் என்று கூறின. ஏன் அவர்கள் அப்படி கூறினார்கள் என்றால் 2.5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தாராவியில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதனால் மஹாராஷ்டிரா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. ஆனால்அதற்கு மாறாக அங்கு பாதிப்பு குறைவே. அதற்கு காரணம் என்ன என்று ஆய்வாளர்கள் கூறும்போது 57 சதவீத மக்கள் உழைப்பாளர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தாராவி மக்கள் கொரானா பாதிப்பில் பெரிதும் பாதிக்கவில்லை.

            சென்னையில் தான் தமிழ்நாட்டிலே பாதிப்பு அதிகம். ஆனால் பாதையோர மக்களை நோய் பாதித்ததா அல்லது அவர்கள் மிகக் கவசம் அணிகிறார்களா என்றால் குறைவே எனலாம். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலும் உடல் உழைப்பால் வாழ்க்கை நடத்துபவர்கள், ஏதாவது நோய் ஏற்பட்டால் அருகில் கிடைக்கும் பொருளை வைத்து சுகமாக்கிக் கொள்வார்கள், ஏனென்றால் அவர்களால் எங்கே ரூபாய் ஐநூறு ஆயிரம் என்று டாக்டர் பீஸ் கொடுக்க முடியும்? அல்லது லக்ஷ கணக்கில் செலவழித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியும்? ஆகவே நாமும் வருமுன் காப்பாற்றிக்கொள்ள என்னென்ன நடவடிக்கையோ அவைகளை நமது தாத்தா -பாட்டி எப்படி கடைப் பிடித்தார்களோ அதேபோன்று நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்னென்ன  பொருள்களைக் கொண்டு நோய்களை தடுத்தார்கள் என்று கீழ்கண்டவாறு காணலாம்:

1) இருமல், கக்குவான், சளித்தொல்லை என்றால் வீட்டின் முன்போ அல்லது, வீட்டின் பின்போ வளர்க்கும் ஓம வள்ளி இலை, துளசி இலை ஆகியவற்றை கொதிக்க வைத்துதேனுடன் கலந்து  சாப்பிட்டும் , ஆவி பிடித்தும் வந்தால் இருமல், சளித்தொல்லை படிப்படியாக குறையும்.

 2) மனிதனுக்கு மலம், ஜலம் சரியான நேரத்தில் வந்து விட்டால் உடலில் கழிவு ஓடிவிடும். ஆனால் மலச்சிக்கல் ஏற்பட்டால் அவஸ்திப் படுவதுடன், மூல நோய்க்கும் வழிவகுக்கும். ஆகவே  அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் புசிவிஸ் ஆளி விதைகளை பொடி செய்து ஒரு நாளைக்கு  2 அல்லது 3 தேன் கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் ஆளி விதையில் நார் சத்து இருப்பதினால் மலச்சிக்கல் குறையும் என்று கூறுகிறார்.

3) மனச்சோர்வு அல்லது மனக்கவலையுடன் இருந்தால், ஏலக்காய் பவுடரில் கொதிக்க வைத்த டீயினை 2 அல்லது 3 தடவை குடித்து வந்தால் மனசோர்வு குறையும் என்று மும்பையில் இருக்கும் தலை சிறந்த ஊட்டச்சத்து நிபுணர் சார்மின் டி. ஸ்யோசா கூறுகின்றார்.

4) டெல்லியினைச் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் லங்கேட் பத்ரா அவர்கள் டயாரியா வயிற்றுப்போக்கினை தவிர்க்க வாழைப் பழம் சாப்பிட பரிந்துரைத்துள்ளார். ஏனென்றால் வாழைப் பழத்தில் 'பெக்டின்' என்ற வேதியம் இருப்பதால் குடலில் உள்ள நீரை உறுஞ்சி டயாரியாவினை கட்டுப் பாட்டுக்குள் வைப்பதுடன், மலச்சிக்கலையும் சரி செய்யும் என்று கூறுகிறார்.

5) அதிக நேரம் விழித்திருந்தால் கண்ணெரிச்ச ஏற்படும். அப்போது வெள்ளரிக்காயினை நறுக்கி இரண்டு கண் இமையின் மேல் வைத்து 15 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தகள் கண்ணுக்கு ஓய்வு கொடுத்ததுடன், கண் எரிச்சலும் சரியாகும்.

6) காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் வந்தால், வெந்தயத்தினை வறுத்து, மிளகு, கருஞ்சீரகம், இலவங்க பட்டை பவுடர்  ஆகியவற்றினை கலந்து கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் பறக்கும் என்று மும்பை நிபுணர் டி.சோஸா கூறுகின்றார்.

7) சிலருக்கு ஜீரணிக்காமல் சாப்பிட்ட உணவு வயிற்றிலிருந்து தொண்டை வரை reflux என்று சொல்லுவது போல வந்தால் அமிர்த வள்ளி இலை, கொய்யா இலை ஆகியவற்றினை கொதிக்க வைத்து குடித்து வந்தால் மேல் நோக்கி சாப்பிட்டது வருவதனை தடுக்கலாம். அத்துடன் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

8) கவுட்' என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் யூரிக் ஆசிட்  கை, கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வேதனை ஏற்பட்டால் கோகிலாக்ஸ்சா என்ற நீர் முள்ளி இல்லை, பூவினை கொதிக்க வைத்து குடித்தால் கவுட் குறைந்து விடும்.

9) வேலைப் பழு, மன அழுத்தம் ஏற்படும்போது பருப்புக் கீரையினை சமைத்து சாப்பிட்டாலும், அதன் எண்ணெயினை நெற்றியில் தடவினாலும் குறைந்து விடும்.

10) விக்கல் ஏற்படும்போது ஒரு கட்டி சீனியினை சாப்பிட்டால் அது ஈரலுக்கும், குடலுக்கும் இடையே உள்ள சவ்வில் பரவி விக்கலை நிறுத்தும் என்று அமெரிக்கா கலிபோர்னியா ஓக்லாண்ட் ஊட்டச்சத்து நிபுணர் கிளார் மார்ட்டின் கூறுகின்றார்.

 

11) சாப்பிட்ட பொருள் ஜீரணமாவதற்கு பெரும்சீரகத்தினை கொஞ்சம் சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிட்டால் இலகுவாக ஜீரணிக்கும். பெரும்பாலான பெரிய ஹோட்டல்களில் இதனை பில்லுடன் சேர்த்து தருவதினைக் காணலாம்.

12) தூக்கமின்றி தவிக்கும்போது அமுக்கிரா செடியிலிருந்து தயாரிக்கப் படும் அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் நரம்பினை இலகுவாக்கி சீக்கிரத்தில் தூக்கம் வரும்.

13) கிட்னியில் கால்சியம் சேராமல் தடுப்பதற்கு ஒரு நாளைக்கு 100-120 மில்லி எலுமிச்சை சாறு சாப்பிட்டால் கால்சியம் சேருவதினை தடுக்கலாம்.

14) பெண்களின் ரத்தப் போக்கு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பிரியாணி இலை, மிளகு பவுடர், சீரகம், மஞ்சள் பவுடர் ஆகியவற்றினை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் ரத்தப் போக்கு சீராகும் என்று டாக்டர் டி சோசா கூறுகிறார்.

15) மயக்கம் வருவதுபோலோ அல்லது கற்பிணி  பெண்கள் 'மார்னிங்' சிக்கன்ஸ் என்ற மயக்கம் ஏற்பட்டாலோ இஞ்சியினை சாராக்கி சிறிது தேன் கலந்து சாப்பிட்டால்  மயக்கம் சரியாகும்.

16) சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குருதி நெல்லி அல்லது சீமை களாக்காய் என்று அழைக்கப் படும் 'கிரேன் பெரி' என்ற பழத்தின் சாறை குடித்து வந்தால் சிறு நீரக பாதையில் ஏற்படும் நோய் தடுக்கப் படும் என்று 373 பாதிக்கப் பட்ட பெண்களிடம் ஆய்வு செய்ததில் நல்ல பலன் கிட்டியதாக சொல்லப் படுகிறது.

17) சித்த, ஆயுர்வேத மருத்துவங்களிலும் ஆப்ரிக்கா, சீன மருத்துவத்தில் பெரிதும் பயன் படத்தப் படும் மூலிகை Gotukola என்ற வல்லாரையாகும். இந்த செடியின் இலையை எடுத்து வேகவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் குட்டம், கால் நரம்புகள் சுருங்கி முடிச்சு விழுவது(vericos vein) தடுக்கப் பட்டும், நினைவு சக்தி குறைவு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மருந்தாகும்.

19) கண் பார்வை சீராக அமைய மீன்கள் சாப்பிடுவது அவசியம். அது மட்டுமல்லாமல் டூனா,வஞ்சரம், நங்கூர மீன், சால்மன் என்ற கிழங்கன் என்ற மீன்களில் தயாரிக்கப் படும் 'cod liver oil' கண்ணில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகப் படுத்தும்.

20) தேன் பலவகைகளில் மருத்துவ குணங்கள் கொண்டது. தீக்காயம் பட்டால் அந்த இடத்தில் தடவவும், தீட்டு நின்ற நடுத்தர பெண்களுக்கு சத்துக் குறைவினை ஈடு கட்டவும், வாய், பெண் உறுப்பில் அரிப்பு ஏற்பட்டால் தடுத்து நிறுத்தவும் உதவும். ரத்தத்தில் சுகர் அளவினை சீராக்க ஸ்வீட்ட்னர் என்ற சீனி கட்டிக்கு பதிலாகவும், கிட்னியில் ஏற்படும் கேன்சர் நோய் பரவாமல் கட்டுப் படுத்த, மூல நோய், மலத்தில் ரத்தம் பரவாமல் தடுக்க, காயங்கள் ஏற்படும் போது குணமாக, கர்ப்பம் உண்டாக்க ஆண் மற்றும் பெண் அணுக்கள் உற்பத்தியாக, தோல் அரிப்பு நோயை தடுக்கவும் தேன் சிறந்த மருந்தாகும்.

21) வைட்டமின் சி அடங்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறு இருமல், வயிற்றுப் போக்கு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தடுத்து நிறுத்தும்.

22)  காட்டு சீதா பழங்கள் புற்று நோயிக்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.

            நான் மேலே சொன்ன தகவல் ஆய்வுக்குப் பின்னர் குணமடைந்து வெளியிட்ட தகவல்கள். அவை அனைத்தும் நம் கண்முன்னே கிடைக்கின்றன. நம் முன்னோர்கள் எத்தனை பேர்கள் ஆங்கில மருந்துக்காக ஆஸ்பத்திரி நோக்கி படையெடுத்தார், சொல்லுங்கள் பார்ப்போம். நான் சிறு பின்னையாக இருந்தபோது கபடி, கால்பந்து விளையாட்டில் அடிபட்டால் என்னுடைய தாய் அம்மிக்கல்லில் மஞ்சள் அரைத்து அதன் மேல் போட்டால் அடுத்த நாள் சரியாகிவிடும். சளி தொல்லையிருந்தால் துளசி செடி  சாற்றை பிழிந்து தேன் கலந்து கொடுத்து சரி செய்து விடுவார்கள். அல்லது அருகில் உள்ள நாட்டு வைத்தியரிடம் காட்டி மருந்து வாங்கி சரி செய்வார்கள். அதனையெல்லாம் நாம் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல மறந்தோம் ஆகவே நம்

 பிள்ளைகள் மருத்துவமனை மருத்துவமனையாக அழைத்து கொண்டுள்ளார்கள். நமது வீட்டின்கொல்லைப் புறத்திலோ, மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ துளசி, ஓமவல்லி, அலோ வேரா என்ற கத்தாழை போன்ற

 செடிகள் வளர்க்க வேண்டும். வீட்டில் தேன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும், துரித உணவு வகைகளை ஊக்குவிக்கக்கூடாது. கம்பு, கூலு, கேட்பை போன்ற  உணவுகளை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்து உடலில் ஊட்டச்சத்தினை கொடுத்தால் எந்த நோயையும் எதிர் கொள்ளலாம்.

 


Thursday, 25 June, 2020

வெள்ளை மனிதன் வடிக்கும் ஆனந்த கண்ணீரும், கருப்பு மனிதன் சிந்தும் வேர்வையின் சுவை உப்பே!(டாக்டர் ஏ. பீ. முகமது அலி, பி.எச், டி. ஐ.பீ.எஸ்(ஓ )
அமெரிக்காவின் மின்னாபோலிஸ் என்ற இடத்தில் 25.5.2020 அன்று ஒரு கடையில் கறுப்பின வாலிபர் 20 டாலர் நோட்டினை கொடுத்து பொருள் வாங்கும்போது கடைக்காரர் நோட்டின் தரம் குறித்து சந்தேகம் வர அவசர காவல் துறையினருக்கு(911) தகவல் கொடுத்துள்ளார். காவல் ரோந்துப் படையினர் விரைந்து வந்து ஜார்ஜ்   பிளாய்டு என்ற வாலிபரை  பிடித்து புறங்கையினில் விலங்கு மாட்டி காவல் வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்பு கீழே குப்பறத்தள்ளி அவரின் கழுத்தில் முனங்காலை வைத்து மூச்சு விடமுடியாது அழுத்த அவர் பரிதாபமாக இறந்தார். அந்தக் காட்சியினை சாலையில் நின்ற அனைவரும் கண்டு வெகுண்டெழுந்தனர். அதன் விளைவு உலகில் பல இடங்களில் அதுவும் குறிப்பாக  அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளில் போராட்டங்கள் எழுந்ததினை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு 'Black lives matter' என்று பெயர் இடப்பட்டுள்ளது. அது  மக்கள் இன வெறிக்கு எதிரான அஹிம்சா வழியில் ஒத்துழையாமை இயக்கம் என்று பொருளாகும். (Non violent civil disobedience ) அது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால், 'No more corps' ' abolish the Police' எங்களுக்கு போலீசே தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு சென்று விட்டது.
            இதேபோன்ற சம்பவம் 2014ல் கிளீவேளாண்ட் என்ற இடத்தில் பொம்மை துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருந்த 14 வயது கறுப்பின சிறுவன் ட்டமிட் ரைஸ் என்ற சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜார்ஜியா மாகாணத்தில் பிப்ரவரி 23 ந்தேதியில் அஹமத் அர்பே என்ற கறுப்பின இளைஞரும்,  மே 13 ந்தேதி, கறுப்பின பெண் ப்ரகோன டயபே கொல்லப் பட்டது மற்றும்  அட்லாண்டா மாகாணத்தில் ரெசார்ட் புரூக் என்ற கறுப்பினத்தவர் தனது மகனின் பிறந்த நாள் அன்று 14 ந் தேதி கொல்லப் பட்டார். ஒரு தொடர் கதையாக  இருந்தது.
அமெரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் 1492 ம் ஆண்டுகளிலிருந்து ஆரம்பமானது. அதற்கு முன்னர் அங்குள்ள அமரிக்கர்கள்(Native Americans or Indigenous Americans) 15000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.  அவர்கள் 570 பழங்குடியினர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை செவ்விந்தியர் என்றும் கூறப்படுகிறது. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கு பின்பு அவர்கள் மலைப் பகுதிகளுக்கு விரட்டப் பட்டனர். தற்போது அங்குள்ள மக்கள் தொகையில் 63 சதவீதம் வெள்ளை இனத்தவரும், 13 சதவீதம் கறுப்பினத்தவரும், 17 சதவீதம் ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களாக உள்ளனர்.
அது சரி, அமெரிக்காவில் இருக்கும் கறுப்பினத்தவர் யார் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஐரோப்பியர் மேற்கு மற்றும்  மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் தங்கள் காலனி ஆதிக்கத்தில் அடிமைப்படுத்தப் பட்ட நாடுகளிலிருந்து அமரிக்காவிற்கு பிணைக் கைதிகளாக கொண்டு வந்து அடிமைப் படுத்த மக்களாவர். அப்படி பிடித்து வரப்பட்ட கறுப்பின மக்களைக் கொண்டு அமெரிக்காவில், ரோடுகள், பாலங்கள் அணைக்கட்டுகள், விவசாய நிலங்கள், தோட்டத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப் பட்டனர். எந்த கறுப்பின மக்களை இன்று வெறுக்கின்றார்களோ அவர்களால் தான் இன்று அமெரிக்கா வளம் மிக்க நாடாக திகழ்கின்றது என்றால் ஆச்சரியமில்லை எனலாம். சுமார் 1.07 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப் பட்டனர். அவர்கள் விடுதலைக்கு 1.1.1863 ல் வித்திட்டவர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் என்று சொல்லலாம். அதன் பின்பு அவர்களுக்கு Civil Rights Act, 1866ல் கறுப்பர்களுக்கு முழு பிரஜை உரிமையும், 1870 ல் அவர்களுக்கு ஓட்டு போடும் உரிமையும் வழங்கப் பட்டது.
ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு கொடுக்கப் பட்டாலும் அவர்களை வெள்ளை அமெரிக்கர்கள் தீண்டத்தகாதவர்போலத்தான் நடத்தினர். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவில்லாதவர்களாகவும், கடைநிலை ஊழியர் வேலைகளை செய்து கொணடும், குற்ற செயல்களில் ஈடுபட்டும் இருந்தனர். ஆகவே அமரிக்க காவல் துறையினர் கறுப்பின மக்களை பிரித்து நிறவெறி சட்டம் இருப்பதுபோல நடத்த ஆரம்பித்ததின் விளைவு தான் இன்று காணும் ஆர்பாட்டமாகும். அதேபோன்று தான் ஆஸ்திராலியாவில் பழங்குடியினரை வெள்ளை நிறத்தினவரினில் இருந்தும் மாறுபட்டு நடத்த ஆரம்பித்தனர். ஆகவே தான் அங்கும் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது எனலாம்.
ஆபிரிக்க-அமெரிக்கா மக்களின் உரிமைகளுக்காக போராடிய நோபல் பரிசு வென்ற மார்ட்டின் லூதர் கிங் 1968 ல் நிற வெறியர்களால் கொல்லப் பட்டார். அதேபோன்றே கறுப்பின மக்களின் உரிமைக்குப் போராடி ஜெஸ்ஸி ஜாக்சன்  ஜனாதிபதியாக 1983-1984லிலும் 1987-1988 லிலும் முயன்று தோல்வியுற்றார். ஆனால் பாரக் ஒபாமா தனது முயற்சியால் 2008 ம் ஆண்டு ஜனாதிபதியாகி இராண்டாம் முறையும் வெற்றி கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!
எப்படி இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை என்று அரசியல் சட்ட அமைய காரணமான டாக்டர் அம்பேத்கார்  பௌத்த மதத்திற்கு மாறினாரோ அதேபோன்று கறுப்பின மக்களும் உரிமை கிடைக்கவில்லை என்று கருதி இஸ்லாத்தில் தான் அனைத்து மக்களுக்கும் இன வேறுபாடு இல்லாமல் கிடைக்கின்றது என்று முதன் முதலில், 'Nation of Islam' என்ற அமைப்பினை யாகூப் என்பர் ஆரம்பித்து, வாளாஸ் பார்ட் முகமது ஒருங்கிணைத்து, எலிஜா முஹமது விரிவு படுத்தி கறுப்பின மக்கள் இஸ்லாத்தின் பால் திரும்ப வழி வகை செய்தார்.
அமேரிக்காவில் முதன் முதலில் 1838 ம் ஆண்டு பாஸ்டன் நகரில் காவல் துறை ஆரம்பிக்கப் பட்டது, அதன் பிறகு 1845ல் நியூயார்க் நகரில் ஆரம்பித்து பல மாநிலத்திலும் அமைக்கப் பட்டது. போலீசின் அத்து மீறல்களை சட்டத்திற்குள் கொண்டு வர அமெரிக்க மக்கள் சபை 42 சட்டம், 14141 விதிகளின் படி ஜஸ்டிஸ் துறை அவர்கள் மீது வழக்குப் பதிய உரிமை கொடுத்தது.
அமெரிக்காவில் மக்கள் போராட்டம் எந்தளவிற்கு போய்விட்டடது என்றால், மேரிலாண்டில் உள்ள பால்டிமோர் நகரில் உள்ள அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜெனெரல் ஜார்ஜ் வாஷிங்டன் சிலையில் சாயம் பூசுவதும், வாசிங்டனிலுள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் புகும் அளவிற்கு வந்து விட்டதும் மக்கள் எழுச்சியினை இன வேறுபாடு இல்லா அமெரிக்கர்களின் கோபத்தினை காட்டுகின்றது. இங்கிலாந்து நாட்டிலும், இரண்டாம் உலகப் போர் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில் சிலையையும் கலங்கப் படுத்தி விட்டனர். காரணம் அவர்தான்  உலகப் போருக்குப் பின்பு கறுப்பின மக்களை அடிமைகளாக உலகமெங்கும் பரவ காரணம் என்று.
ஆர்ப்பாட்டங்கள் பலனாக பல மாகாணங்கள் போலீஸ் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தன.
முதன் முதலில் டல்லாஸ் மாகாணம் கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுத்தன:
1) துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு எச்சரிக்கை விடுவது
2) மாதாந்திர வழக்குகள் விபரம்
3) உடையில் பொருத்தப் பட்டிருக்கும் கேமராவில் பதிவான தகவல் வெளியிடுதல்,
4) காவலரின் நடவடிக்கைகளை மாநில காவல் துறையில் உள்ள மேலாளர் பரிசீலனை செய்வது.
5) காவலரின் அத்து மீறலுக்கு எந்த விதத்தில் அவர்களை நடவடிக்கையிலிருந்து விதிவிலக்கு அளிக்கலாம்.
அமெரிக்கரில் சுப்ரீமாசிஸ்ட் என்ற வெள்ளை இன மக்களிடையே ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் தாங்கள் தான் இனத்தில் முதன்மையானவர்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. அந்த எண்ணத்தில் உள்ள சிலர் காவல் துறையில் சேர்ந்திருப்பதால் கறுப்பினத்தவரை கீழ்த்தனமாக நடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன. ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் அதனை ஆதரிக்கவில்லை. அப்படி ஆதரிக்காததினால் தான் பாரக் ஒபாமா இரண்டு தடவை ஜனாதிபதியானார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த பெரும்பாலான அமெரிக்கர் எந்தவிதமான போலீஸ் சீர்திருத்தங்களை விரும்புகின்றார்கள் என்பதினை கீழே காணலாம்:
1) குற்றவியல் நிபுணர் டேவிட் கென்னெடி, 'பொதுவாக போலீசுக்கும், கறுப்பின மக்களுக்கும் ஒரு விதமான நம்பிக்கையின்மை நிலவுகிறது. அவர்களிடையே நம்பிக்கையூட்டும் செயலில் காவல் துறையினர் ஈடுபடவேண்டும். காவல் துறையினர் இன்னும் கறுப்பினத்தினவரை அடிமைகள் போல நடத்துவதினை விட்டு விட வேண்டும்.'
2) போலீஸ் பயிற்சியில் கறுப்பின மக்களை மனிதர்களாகவும், சமஉரிமை உள்ளவர்களாகவும் மதிக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். படவேண்டும்.
3) போலீஸ் தங்களுடைய பலபிரவேசம் வன்முறை குறையாத போதுதான் உபயோகிக்கவேண்டும் என்று பயிற்சி கொடுக்கப் படவேண்டும்.
4) காவல் துறையினர் பலபிரவேசம் செய்யும் போது வெளிப்பட தன்மை வேண்டும்.
5) காவல் துறையினர் சமுதாயத்தில் அமைதியை சீர் குழைக்கும் சம்பவங்களிலும், குற்றங்கள் தடுப்பதிலும்  கவனம் செலுத்த வேண்டும்.
6) காவலருக்கு போதிய ஓய்வு, கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
7) காவலர் செயலுக்கு பொறுப்பு ஏற்கச் செய்யும் முறை வேண்டும்.
8) காவல் துறையினர் செயல் மற்றும் அவர்கள் குற்றங்கள் தடுப்பதும், கண்டு பிடிப்பதிலும் எவ்வாறு திறமையுடன் செயல் படுகின்றனர் என்று ஆராய படவேண்டும்.
9) காவல் துறைக்கு சேரும் ஒவ்வொருவரும் ஒரு பட்டதாரியாக இருக்கவேண்டும்.
10) போலீஸ் பயிற்சியின் போது மின்னாபோலிஸில் ஜார்ஜ் பிளாய்டு கழுத்து நெரித்து சாகடித்த, 'choke hold' என்ற பயிற்சியினை கைவிடுவது.
இந்திய காவல் துறை ஆங்கிலேய வழி முறைகளை பின்பற்றி கொள்கையினை வகுக்கப் பட்டுள்ளது எனலாம். ஆங்கிலேய உள்துறை அமைச்சராக இருந்த சர் ராபர்ட் பீல் என்பவர் காவல் துறையினர் எவ்வாறு செயல் படவேண்டும் என்று 1822 ல் வகுத்துள்ளார். அவைகளையே கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் கடைப் பிடித்து வருகின்றன. அதில் காவல் துறையினர் சீருடையில் இருக்கின்ற இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களின் செயல் பாடுகள் வெளிப்படையாகவும், சட்டத்திற்கு  உட்பட்டும், அவர்கள் பொறுப்பினை ஏற்ககூடியாதாகவும் இருக்க வேண்டும் என்று ஒன்பது கொள்கையினை வகுத்தார்.
அவை பின் வருமாறு:
1)    காவல் துறையினர் குற்றங்களை தடுப்பதும், அமைதிக்கு பங்கம் விளைவிக்காது பார்த்துக் கொள்ளவும் செய்ய வேண்டும்.
2)     காவல் துறையினர் செயலை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்.
3)     சட்டத்தினை அமல் நடத்துவதினை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்
4)     போலீஸ் பணியாற்றும் போது  குறைந்த பலப்பிரவேசம் செய்ய வேண்டும்.
5)     இன, மொழி, மத பாகுபாடு இல்லாது செயலாற்ற வேண்டும்.
6)     பலபிரவேசம் எச்சரிக்கைகள் தோல்வி அடையும் போது உபயோகிக்க வேண்டும்
7)     காவல் துறையினருக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளமும், வசதியும் செய்து தரப் படுகின்றது என்று எடுத்திறுரைக்க வேண்டும்
8)     காவலர் நீதிமன்ற அதிகாரங்களை கையில் எடுக்காது நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
9)     போலீசின் செயல் பாடுகளை ஆய்வு நடத்தும் போது  அவர்கள் எவ்வாறு குற்றங்களை தடுத்தார்கள், மக்களிடையே அமைதியின்மையினை தடுத்து அமைதி ஏற்படுத்தினார்கள் என்று ஆராய வேண்டும்.
இந்தியாவில் போலீஸ் ஆங்கிலேயர் வகுத்துத் தந்த 'Police Act 1861' படி நடைமுறைப் படுத்தப் படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் காவல் துறையினர் செயல் பட போலீஸ் மேனுவல் உள்ளது. National Police Commission 1977 ல் அமைக்கப் பட்டு அதன் பரிந்துரைகளை 1979, 1981 ஆண்டுகளில் 8 அறிக்கையாக வழங்கப் பட்டது.  இந்த நேரத்தில் தான் இந்தியாவெங்கும் காவலர் வேலை நிறுத்தம் 1979 ம் ஆண்டு ஆரம்பித்தது. முக்கியமாக காவலருக்கு .தொழிற்சங்கம் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. அவர்களுடைய கோரிக்கைகளை கமிஷனும் பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.  அவர்கள் கொடுத்த அறிக்கைகள் போலீஸ் அமைப்பு,  அதன் செயல், பொறுப்பேற்றுதல், மக்களுடன் அவர்கள் தொடர்பு, காவல் துறையில் அரசியல் தலையீடு, குறைந்த பலபிரவேசம், காவலர் தவறான செயல் பாடு, அவர்களின் செயல்பாட்டுக்கு தகுந்த அரையாண்டு மற்றும்  ஆண்டு அறிக்கை ஆகியவை அடங்கும். இது தவிர முன்னாள் இந்திய Attorney General சோலி சோராபிஜி தலைமையில்   2005 ல் ஒரு குழு அமைக்கப் பட்டு Model Police Act 2006 அமலுக்கு வந்தது.
      இந்தியாவில் காவல் துறையினருக்கு .303 ரைபிள் கொடுக்கப் பட்டடது. அது மனித உடம்பை துளைத்துக் கொண்டு வெளியேறும். அதன் பின்னர் காவலர் குறைந்த பால்பிரவேசம் செய்வதிற்காக .410 என்ற மஸ்கட் கொடுக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் ஸ்டெரிலைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்ட SLR(self loading gun) ஆயுதப் பிரிவினருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காவலருக்கு அல்லது போக்குவரத்து காவலருக்கு இல்லை. இந்திய சட்டத்தில் ஒரு குற்றவாளி காவலர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் பலபிரவேசம் செய்யக் கூடாது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று ஜெயராஜ் என்ற வியாபாரியும், அவருடைய பென்னிக்ஸ் என்ற மகனும் துன்புறுத்தப் பட்டு  அதன் பின்பு ஒருவர் பின் ஒருவர் இறந்தது போன்ற செயல்களை விசாரிக்க Executive Magistrate விசாரித்து, அவர்களுடைய மரணம் இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்று ஆய்வு நடத்தி பிரேத பரிசோதனை மூன்று மருத்துவர் மூலம் செய்யப் பட்டு அதனை விடியோவும் எடுக்கப் படும். அந்த Excutive Magistrate அவர்கள் மரணம் செயற்கையானது என்றாலே அவர் பரிந்துரைமேல் கொலை வழக்காக மாற்றப் படும். அதுபோன்ற பல வழக்குகளில் காவல் துறையினர் ஆயுள் தண்டனை கூட அடைந்துள்ளனர் தமிழ்நாட்டில். ஆனால் அமெரிக்காவில் அந்த நடைமுறை இன்னும் அமல் படுத்தவில்லை. அதேபோன்று மக்கள் போராடும் போது வன்முறை ஏற்பட்டால் இந்தியாவில் முதலில் எச்சரிக்கை ஒலி பெருக்கியில் செய்யப் படும், அதற்கு பிறகும் வன்முறை ஏற்பட்டால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும், அதற்குப் பிறகும் வன்முறை நடந்தால் லத்தி கொண்டு அடக்கப் படும். அதன் பிறகும் நிற்கவில்லை காவலர் உயிருக்கும், பொது சொத்து சேதப் படுத்துதல் போல ஈடுபட்டால் குறைந்தளவு துப்பாக்கி பிரயோகம் செய்யப் படும் அதுவும், இடுப்பிற்கு கீழே தான் சுட வேண்டும். காரணம் காவலர் பயிற்சியிலேயே குறைந்த பலபிரவேசம், அதிக பலன் என்று தான் இந்தியாவில் போதிக்கப் படுகிறது.
ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள மக்களுக்கு கட்டுப் பாடு கிடையாது. ஆகவே தான் அங்குள்ள காவல் துறையினர் ஒவ்வொரு சந்தேகிக்கும் நபரையும் துப்பாக்கியுடன் உள்ளவர் என்று சுட்டு விடுகின்றனர். அது சட்டம், ஒழுங்கு சம்பந்தமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து விதி மீறலானாலும் சரியே. நமதூரில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று அதேபோன்ற கதை தான் அமேரிக்காவில் நடந்த கறுப்பின துப்பாக்கி சூடுகள். அது மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்றாலோ குற்றம் செய்பவர்கள் என்ற காமாலை கண்  உள்ளவர்களாக காவல் துறையினர் உள்ளார்கள் என்பது வேதனையிலும் வேதனையே. ஒரு இனத்தின் வண்ணத்தினை வைத்து அவனை எடைபோடுவதினை விட்டு விட்டு    அவன் ஒரு தன்னைப்போன்ற மனிதன் அதுவும் இந்த நாட்டின் குடிமகன், அவன் கொடுக்கும் வரிப் பணத்தில் தான் தனக்கு சம்பளமும் மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப் படுகின்றது என்ற எண்ணத்தினை காவலரிடையே புகுத்த பயிற்சியிலேயே சொல்லிக் கொடுக்கவேண்டும். அத்துடன் மனநல ஆலோசகர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நியமனம் செய்து காவலர் மனம் பண் பட முயற்சி எடுத்தால் அமெரிக்காவில் சமீப காலங்களில் நடந்த இனவெறி சம்பவங்களும், அத்து மீறல்களும் நடக்காது என்பது திண்ணமே!