Wednesday, 25 December 2024

ஒரு நாடு ஒரு தேர்தல் எதற்கு வழி வகுக்கும்?

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்( )

இந்திய  பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து எதிர் கட்சிகள்  கொண்டிருக்கிறது.'இந்தியா' ஒருங்கிணைந்து பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக குரல் எழுப்பும் போது அவர்களுடைய குரல்களுக்கிடையே 17.12.2024 அன்று அரசுஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மசோதாவினை அறிமுகப் படுத்தியதால் அதன் மீது பல்வேறு விவாதங்கள் நடை பெற்று வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவில் அப்படி ஒரு திட்ட முன்வரைவை உருவாக்க முன்னாள் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்டு, அந்த குழுவும் தனது அறிக்கையினை சமர்ப்பித்து அது மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் அளித்த பின்பு, பாராளுமன்றத்தில் முன் மொழியப்பட்டுள்ள்ளது. அதற்கு எதிர் காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பு பாராளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதற்கெல்லாம் மூல காரணம் 2018ம் ஆண்டு அமைக்கப் பட்ட 'Law Commission of India' சட்ட குழு பரிந்துரையில் பஞ்சாயத்திலிருந்து மக்களவை வரை ஒரே தேர்தல் ஒரு வருடத்திற்குள் நடத்தப் பட வேண்டும் கூறியிருந்தது.

             நமது நாடு 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய அரசிலமைப்பினை உருவாக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்ட மன்ற தேர்தல் நடத்த முயன்றார்கள்.1952ம் ஆண்டு இந்தியாவில் முதல் தேர்தல் நடத்தும்போது அந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. ஆனால் 1967ம் ஆண்டு இந்தியாவில் ஒரே தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ள, உத்திர பிரதேசத்தினை தவிர நான்கு முறை படிப்படியாக தேர்தல் நடத்தப் பட்டது. அதே தேர்தல் 520 மக்களைவைக்கும், 3563 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்தப் பட்டது.

            அந்த மசோதாவின் படி, 129வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா,தேர்தலுக்கு பின்பு மக்களவை முடியும் போது, மற்ற மாநில சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடத்தப் படும். கூட்டுக் குழு ஆய்வுக்குப் பின்னர், மக்களவை முடியும் போது மற்ற சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப் படும். இந்த சட்ட மசோதாவினை நிறைவேற்ற பாராள மன்ற உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும், அத்துடன் தற்போதைய சட்ட சபைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஒத்துக் கொண்டால் தான் சட்ட திருத்தம் நிறைவேற்றப் படும். தற்போதைய மக்களவை 2029ல் தான் முடிவிற்கு வரும் போது தான் அமலுக்கு வரும். பக்கத்தில் உள்ள பாகிஸ்தானில் 2015 முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடை பெறுகிறது. அதே போன்று நேபாள், தென் அமேரிக்கா,சுவீடன், பெல்ஜியம், ஜெர்மன், இந்தோனேசியா பிலிபைன்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் அமல் நடத்தப் படுகிறது.

            இந்த நடை முறையினை நிறைவேற்ற பல்வேறு சட்ட திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்.

அவைகள் என்னென்ன என்று பார்ப்போம்:

1) சட்டப் பிரிவு 83ன் படி பாராளுமன்றத்தின் காலத்தினை நிர்ணயிக்க வேண்டும்.

2) சட்டப் பிரிவு 85படி மற்றும் 174படி எவ்வளவு நாட்கள் சபை நடக்க வேண்டும், யார் சபையினை முடித்து வைப்பது

3) சட்டப் பிரிவு 174 மாநில சட்டசபைகளை பற்றி நிர்ணயிப்பது.

            அவ்வாறு தேர்தல் நடந்தால் நாட்டிற்கு என்ன பயன்கள் என்று பார்ப்போமா:

 

1) தேர்தல் நடத்துவது மூலம் அனாவசிய செலவு குறையும்.

2) தேர்தலில் பங்காற்றும் அதிகாரிகளின் அனாவசிய அலைச்சலும், மன உளைச்சலும் தவிற்கப் படும்.

3) தேர்தலில் பாது காப்பு படைகளையும், காவல் துறையினரையும் இடத்திற்கு இடம், அடிக்கடி மாற்றம் செய்யும் முறை ஒழிக்கப் படும்.

4) அதற்குப் பதிலாக அவர்களை நாட்டினை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கு, குற்ற நடவடிக்கை எடுக்கும் கவனத்தில் திருப்பி விடப்படும்.

5) 2029ம் ஆண்டு தேர்தல் நடத்தும் தேதி நிர்ணயிக்கப்படும்,

6) மாநில சட்ட சபை ஐந்து வருடம் முடிந்து விட்டால் 2029 வரை தேர்தல் நடத்தப் படாது.

7) மாநில காட்சிகள் அடிக்கடி மாநில அரசுகளை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் காவிழச் செய்து மாநிலத்தில் ஸ்திரமின்மையினை ஏற்படுத்தி தேர்தல் நடத்த முடியாது.

8) மாநில காட்சிகள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்று நாடகம் நடத்தி வன்முறையில் ஈடுபட முடியாது.

9) வாக்குச்சாவடிகளில் புகுந்து தேர்தல் உபகரணங்களை உடைத்து மறு தேர்தலுக்கு வழி வகுக்க முடியாது.

அனாவசிய தேர்தல் வழக்குகள் இழுத்தடிக்க முடியாது.

10) காங்கிரஸ் அல்லாத மாற்று நம்பூதிரி பாத் தலைமையிலான கேரளா கம்யூனிஸ்ட் அரசு 1957ம் ஆண்டு பதவியேற்ற இரண்டு வருடத்தில் 1959ல் கலைக்கப் பட்டது போல மாநிலங்களையினை கலைத்து விட்டு மூன்று வருடத்திற்குள் தேர்தல் நடத்த முடியாது.

            பாதகமான செயல்கள் என்னென்ன என்று பார்ப்போமா:

1) மாநில பிரச்சனைகளை மறந்து விட்டு தேசிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும்.

2) நானே நாடு, நானே இந்த நாட்டின் மஹாராஜா என்ற அகம்பாவித அடாவடி அரசு எப்படி அமெரிக்காவில் அமையப் போகிறதோ அதே போன்ற ஜனாதிபதி ஆட்சிக்கு வழி வகுக்கும்.

3) மாநில சட்டசபைகள் தங்கள் காலம் முடியும் முன்பே முடிவிற்கு வரும். அதன் மூலம் மத்திய அரசுக்கு இணையாத மாநில அரசுகள் முடிவிற்கு வரும்.

4) மத்திய, மாநில அரசுகளின் செயல் பாடுகளை மக்கள் ஆய்வு செய்ய பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5) மாநில காட்சிகள் துணையுடன் மத்தியில் ஆட்சி முறை மறைந்து தேசிய நிலை அரசுக்கு வழி வகுக்கும்

6) தேர்தல் நடத்த பத்தாயிரம் கோடி மின்னணு வாங்க வேண்டும்.

           

           

                        இந்த சட்டம் நிறைவேறினால் என்னென்ன நடக்கும்:

 

1) முதல் நடவடிக்கையாக மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கும்.

2) அதன் பிறகு நகர சபைகளுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும் நூறு நாட்களுக்குள் தேர்தல் நடக்கும். அப்படி நடத்தப் படும்போது சட்டப் பிரிவு 324A  படி படம் ஒட்டிய அட்டைகளுடன் கூடிய அடையாள அட்டைகள் காண்பித்து தேர்தல் நடத்தப் படும்.

3) புதியதாக அமைக்கப் பட்ட சட்டசபைகள் காலம் முடிவடையச் செய்து பொதுதேர்தலோடு சேர்ந்து நடத்தப் படும்.

4) நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப் பட்டாலோ அல்லது தொங்கு சபை என்ற நிலை வந்தாலோ கலைக்கப் பட்டு அடுத்த பொதுத் தேர்தலுடன் நடத்தப் படும்.

            இதுபோன்ற நடைமுறைகள் இந்திய ஜனநாயக நாட்டிற்கு நல்லதா என்பதினை கணிக்கும் பொறுப்பினை உங்களிடமே விட்டு விடுகிறேன். ஏனென்றால் நாட்டிலே சிறுபான்மையினர் உணவிலிருந்து உறைவிடம்,  வணக்கஸ்தலங்கள் வரை அச்சுறுத்தல் இருப்பதாக பல ஏடுகள் மற்றும் ஐக்கிய நாடு சபை அறிக்கைகளும் கூறுகின்றன. அது உண்மையா என்று தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது என்று சொல்லலாமா?