(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஏ.பீ.முகமது அலி,(பிஎச்.டி, ஐ.பீ.எஸ்)
இஸ்லாமிய கலாசார இலக்கியங்கள் திருக்குரானில் சொல்லப் பட்ட செய்திகளையும், 'அலாவூதீன் அற்புத விளக்கு' போன்ற கற்பனை கதைகளையும், கவிதைகள், மக்கமா, வதுது, பயண கதைகள், உமர் கயாமின் 'ரூபியாத்', ரூமியின் 'மஸ்னவி' கலீல் கிப்ரான், கதீதுகள், நவீன நாவல்கள், கதைகள், சரபி இலக்கியங்கள், ஆகிய இஸ்லாமிய இலக்கியங்கள், பண்பாடு, கலாசாரம், ஐரோப்பிய மற்றும், ஆசிய நாடுகளில் பரவியுள்ளது என்பதினை மறுக்க முடியாது.. அதே சமயத்தில் இஸ்லாமிய கருத்துக்கு எதிராக கருத்துக்களை சொன்ன இந்திய பிரஜை விரட்டப் பட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த 'சாட்டானிக் வெர்சஸ்' என்ற கற்பனை கருத்துக்களை சொன்ன சல்மான் ருசடி போன்றவர்களும் இருக்கத்தான்
செய்கின்றனர். சூரியனை கை கொண்டு மறைக்க முடியாதோ அதேபோன்று இஸ்லாத்தின் கருத்துக்களை ஆழமாக படித்து தெரிந்து கொள்ளும் நிலை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது என்று சொன்னாலும் மறுக்க முடியாது.
இஸ்லாமிய இலக்கியங்கள் கிருத்துவ, யூத இலக்கியங்களில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. இஸ்லாம்,கிருத்துவம்,ஜீடாயிஸம், ஆகியவை இப்ராஹிம்(அலைஹி) அவர்களின் வழித்தோன்றலாக கருதப் படுகிறது. ஆகவே தான் அவர்களால் 'People of the Book' என்று அழைக்கப் படுகிறது. .கிரேக்க எழுத்தாளர் 'அரிஸ்டாட்டில்' போன்ற இலக்கியவாதிகளின் மொழிபெயர்க்கவும், பாதுகாத்து கிருத்துவ மதம் பயனடைய வழிவகை செய்தது. அதேபோன்று இஸ்லாமிய இலக்கியவாதி 'மைமோனிட்ஸ்'
போன்றவர்களால் ஐரோப்பிய நாடுகளில் யூதம் பரவ ஏணியாக இருந்தது.
சூபிகளின் தியான வழிபாடுகளால் மேற்கத்திய நாடுகளின் மக்களின் அமைதியின்மைக்கு வழி வகுத்துத் தந்து ஏக இறைவனிடம் வேண்டுகோள் வைக்கத் தூண்டியது. இஸ்லாமிய கருத்துக்கள் ஆசியாவின் கலை, இலக்கிய சொல்களில் நேரடி தாக்கத்தினை ஏற்படுத்தியது. எராளமான தத்துவ விஞ்ஞான கருத்துக்கள் ஐரோப்பியா முழுவதிலும் பரவியது. இருண்ட காலத்திய கவிதைகளும், இஸ்லாமிய காலத்து உரை நடையும் ஒன்றாக இணைய பாலம் அமைத்தது. இஸ்லாமிய இலக்கிய, பண்பாடு உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவியது மட்டுமல்லாமல் தமிழகத்திலும் ஆக்கிரமிப்பு செய்தது. இஸ்லாமிய இலக்கிய கவிதைகள்,கல்வியின் வரலாற்றில் அறிவு ஞான வளர்ச்சியையும், பண்பாட்டையும் மதரஸாக்கள் மூலமாக பயன் பெற செய்தது. இஸ்லாமிய இலக்கியங்கள் கல்வி நிலையங்களால் மேலும் விரிவடையச் செய்தது.
மத்திய காலங்களில் இஸ்லாமிய வர்த்தக மூலமாகவும்,பண்பாடுகளாலும்,அரேபிய, பாரசீக படைப்புகளாலும்,கையெழுத்து பிரதிகளால் ஒழுக்கக் கட்டுப்பாடு,தியான வழிபாடு அதிகரித்தது. இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளத்திற்கு நாயக்கர் புராணம், நாகூர் புராணம், முகைதீன் புராணம் போன்றவை முக்கிய பங்கு வகித்தது. கலம்பகம், அந்ததி, பரணி, உலா, சோலை, துத்து, கடகம், பிள்ளைத்தமிழ், வண்ணம், போன்ற கவிதைகள் தமிழக இலக்கியத்தினை மேம்படுத்தியது. இஸ்லாமிய இலக்கிய வரலாறும், கவிதைகளும், இந்துக்கங்களின், வைஷ்ணவம், சைவிஷம், ஜெனிசம் மத வழிபாடுகளுக்கு விரிவாக்கம் செய்தது. அதில் முக்கியமாக தாயுமானவர், அருணகிரிநாதர் போன்ற அறிவாளிகளால் மெருகூட்டப் பட்டது.
தமிழ் இலக்கியங்களின் மகுடமாக எட்டயாபுரம் கவிஞர் உமறுப் புலவர் உருவாக்கிய சீறாப் புராணம், தலை சிறந்ததாக கருதப் படுகிறது. அதில் இஸ்லாமியருக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று முதன் முதலில் கற்பித்த பெருமானார் முகமது நபி(ஸல்) அவர்களின் ஒப்பற்ற வாழ்க்கை நெறிகளை 5027 கவிதைகளால் வடிவமைத்துள்ளார். அது தவிர நன்மணி மாலை, குணங்குடி மஸ்தானின் பத்திரப்படி அந்ததி, ஷேய்க் அப்துல் காதரின் கலம்பகம், இரண்டு தள புராணம், அந்ததி, மக்கா நகரம் முக்கிய படைப்புகளாகும். கவிஞர் இப்ராஹிம் அந்ததி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், இரண்டு தலபுராணம், திருப்புகழ் பாராட்டத் தக்கது. வண்ணக் கஞ்சியப்ப கவிஞர் முகைதீன் புராணம் மூலம் நாகூர் பள்ளியின் சிறப்பினை அறிய வாய்ப்பு அளிக்கப் பட்டது.
கவிஞர் ஹுசைன் ஒழுக்க சிறப்புக்களை குரல் வெண்பா, மகளின் அறிவுரையாக பெண் புத்தி மாலை
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அப்துல் மஜீத் அவர்களின் இலக்கிய புதல்வர்கள், கவி பஞ்சோலை, இலக்கிய பூங்கா போன்றவை அறிவு பெட்டகமாகும். மலேசியாவில் வாழும் என் தந்தை பீர் முகமது அவர்கள் எங்கள் ஊர் இளையான்குடி வந்த சமயத்தில் நான் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தவனை அழைத்துக் கொண்டு பனைக்குளம் அப்துல் மஜீத் அவர்களை பார்க்க அழைத்து சென்றார்கள், அப்போது அவர் உடல் நலியுட்டிருந்தார், அந்த சமயத்தில் கூட எங்களிடம் கலந்துரையாடல் செய்து அவர் அன்பளிப்பாக என்னிடம் அவர் உருவாக்கிய அற்புத படைப்புகளான புத்தகங்களை என்னிடம்.அளித்தது இன்னும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
இருபதாம் நூற்றாண்டு இரண்டு கன்னிகைகள் கொண்ட ரஸூலல்லாவையும், அவர்கள் போதித்த பண்பாடுகளையும், மார்க்க வழிபாடுகளையும் சிராஜ் பாக்கவி அவர்கள் நேர்த்தியான முறையில் ஆர்வத்தினை தூண்டும் வகையில் தொகுத்துள்ளார்.
இஸ்லாமிய இலக்கியம், கலாசாரம் பல்வேறு சர்வதேச அறிஞர்களை கவர்ந்துள்ளது என்பதினை சில உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என எண்ணுகிறேன்.
1) அமெரிக்க ஹார்வர்டு பல்கழகத்தில்
மாஷா வாசிலேசிக்(Masha waseleusky) திருக்குரானையும்,அதனைத் தொடர்ந்து வெளி வந்த நூல்களை படித்து
விட்டு, 'திருக்குரான் மார்க்க
அடிப்படையினை வைத்து வடிவமைத்த சிறந்த இலக்கியமாகும், இலக்கிய
நயமும் கொண்டுள்ளது என பாராட்டியுள்ளார். ஆரம்பத்தில்
இஸ்லாமிய 'அதப்' என்பது ஆங்கிலத்தில் இலக்கியதினைத்
தான் குறிக்கும்.
2)
அமெரிக்காவின் வரலாற்று
பேராசிரியர் சபியாஸ்(Sabeas)
ரசூலுல்லாஹ் வாழ்க்கை
வரலாற்றையும், இஸ்லாமிய
படை எடுப்பினையும் விரிவாக
எழுதியுள்ளார்.
3)
ஜோனஸ் டெமாசெனி (Joannas Demaseeni) சிரியாவின் கிருத்துவ
சாமியார் (caliph of Demascus) டெமாகஸ் கலீபாக்கள்
என்ற சரிதையில் இஸ்லாமிய
வளர்ச்சியை வடிமைத்துள்ளார்.
4)
துவன்(Du Huan) என்ற அறிஞர்
(Battle of Tallas) தலஸ் என்ற யுத்த களத்தில் பிடிபட்டு(676-749)
இஸ்லாமிய நாடுக்ளில்
பத்து வருடம் பயணம் மேற்கொண்டு(Jing Xingji) பயண வரலாறு என்ற நூலை எழுதியது பிற்காலத்தில்
சீனாவின் களஞ்சியமாக
கருதப் படுகிறது.
5) சங்கரா(788-820) கேரள ஹிந்து மக்களின்
சீர்திருத்தவாதியும் 'அத்வைதா வேதாந்த' ஆத்மாவின் ஒருங்கிணைப்பாளரும், 'Sufi wuhdat al wujud' என்ற கொள்கையின் படி ஓரிறையினை ஆதரித்துள்ளார்.
6) Abd al Mash ibn Ishaq al Kindi என்பவர் அப்பாஸ்(ரலி) கலீபா காலத்தில் 'Rissalah'(ரிஸாலா) என்ற படைப்பின் மூலம் Pedro de Toledo என்ற லத்தின் மொழியில் எழுதிய 'Apology' மன்னிப்பு என்றது ஐரோப்பிய உலகம் முழுவதும் பரவி இஸ்லாத்தின் புகழ் பரப்பியது.
7) Mardan
-Farrok என்ற ஈரானிய எழுத்தாளர் ஒன்பதாம் நூற்றாண்டில் 'Sikkah Gumanik Vigar' என்ற நூலில் 'சொராஸ்டராணிசம் என்ற மதத்தில் உள்ள ஜூடாஸிம், கிருத்துவம், இஸ்லாம் சொல்லியுள்ள கருத்துக்கள் ஒற்றுமை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
தென் இந்தியாவில்
இஸ்லாம் அராபிய வர்த்தகர் கடற்கரை ஒர நகரங்களில் காலடி வைத்து அவர்களின் இஸ்லாமிய ஓரிறை கொள்கையில் கவரப் பட்டு, மனிதர்களில் மதத்தால், ஜாதியால் வேற்றுமையில் மண்ணில் பிறந்த அனைவரும் சகோதரர், சகோதரிகளே என்று வேற்றுமையில் ஒற்றுமையினை போதனை செய்ததால் வேகமாக பரவியது. சோழ மண்டல அரசி குந்தவி தேவி தன் மூத்த அண்ணனை கொலை செய்த அந்தணர் உயர் ஜாதியினர் என்பதால் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கவில்லை என்று வெறுத்து திருச்சியில் குடியேறி இஸ்லாமிய உன்னத கருத்துக்களை மத்திய தமிழகத்தில் பரப்பிய நத்தர்சா அவர்களை சந்தித்தபின்பு இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியது தாழ்த்தப் பட்ட,பிற்படுத்தப் பட்ட மக்களை வெகுவாக கருதி பரவ ஆரம்பித்தது.
நமது நாட்டினை பொறுத்த மட்டில் கொல்கத்தாவினை தலைமை இடமாக கொண்ட 'பிரம்மசமாஜ்' என்ற இயக்கத்தினை தோற்றுவித்த ராம் மோகன் ராய்(1772-1833) என்பவர் Gift of
Unitarian(1803-1804('Tuhfal-al-Muwahahin) ஒற்றுமை பற்றி விளக்கியுள்ளார். இஸ்லாத்தின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்ட பிரபலங்கள் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களெல்லாம் இஸ்லாமிய அரசர்களின் வாளுக்கும், பயமுறுத்துக்களுக்கும் நிர்பந்தப்பட்டு இஸ்லாத்தினை போற்றியுள்ளார்களா என்றால் அதுதானில்லை.ஆனால் சமீப கால மத்திய அரசு, சில மாநில அரசுகள் இஸ்லாமிய இலக்கிய கருத்துக்களும், பண்பாடுகளும் தங்கள் பகுதிகளில் பரவி விடாது என்ற கண்ணோட்டத்தில் இருப்பதினால் திருச்சியில் 2025ம் ஆண்டு மே மாதம் மூன்று நாட்களுக்கு விரிவான ஏற்பாடுகளை பேராசிரியர் சேமுமு அவர்கள் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது பாராட்டப் பட வேண்டியது ஒன்று தான், அதே நேரத்தில் இப்படிப் பட்ட இஸ்லாமிய இலக்கிய பண்பாட்டு கருத்துக்களை அந்தப் புறத்தில் நடத்தாமல் பெரிய ஆயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கூடும் 'இஸ்திமா' போன்ற அமைப்புகளில் ஒரு நாள் கேட்டுப் பெற்று அறிஞர்களைக் கொண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தினால் பலர் பயன் அடைவர் என்று என் மனதிற்கு தோன்றியதினை உங்களுடன் கலந்து கொள்வது தவறில்லை தானே!