Sunday, 19 October 2025

படிக்காத மேதைகளும் பாரினிலுண்டு!

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்()

 

உலக அளவில் பல்வேறு காலக் கட்டங்களில்  தலைவர்கள் சமுதாய சிந்தனைகளுடன் செயல்பட்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்றியுள்ளனர். அப்படி பட்டவர்களில் படித்தவர்களும், முறைப்படி கல்வி கற்காதவர்களும் உள்ளனர். அவர்களில் முறைப் படி கல்வி கற்காத மேதைகளைப் பற்றி உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கின்றேன்.

         தொழிற்புரட்சிக்கு பிற்பட்ட காலத்தில் இரண்டு முக்கிய தலைவர்களை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். ஒருவர் அமெரிக்காவின் 16வது ஜனாதியான ஆப்ரஹாம் லிங்கன் ஆகும். அவர் 1860-1864 ஆண்டுகளில் முதலாவதாக தேர்ந்தேடுக்கப் பட்டார். எப்படி நமது நாடு பல சமஸ்தானங்களாக இருந்ததினை ஆங்கிலேயர் பிடித்து இந்தியா என்ற ஒன்றை உருவாக்கினார்களோ அதேபோன்று அமெரிக்காவில் பல நாட்டு ஆட்சி செய்யும் மாநிலங்கள் இருந்தன. அவைகளை கைப்பற்றி அமேரிக்கா எனற நாட்டிற்கு ஒரு உருவம் கொடுத்தார். அதனால் இரண்டாவது தடவையாக 1865ல் தேர்தெடுக்கப் பட்டார். அதனை விரும்பாத ஒருங்கிணைந்த மாநிலங்களின் நிறவெறி கொண்ட ஒருவரால் சுட்டு கொல்லப் பட்டார்.

           வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போரினில் மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்த இங்கிலாந்தின் பிரதமர் ஆவார். அவர் 1940-1945, 1951-1955 இரண்டு தடவை பதவி வகுத்தவர். இங்கிலாந்தில் ஆஸ்க்போர்ட, காம்பிரிட்ஜ், எடின்பரோ, இம்பீரியல் காலேஜ் போன்ற சிறந்த கல்லூரிகள் இருந்தாலும் அவர் எதிலும் முறைப்படி கல்வி பயிலாதவர். ஆனால் தனது அறிவாலும், முயற்சியாலும் உலகப் போரினை வழி நடத்தி மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றியினை தேடி தந்தாதிலும், அதன் பிறகு இங்கிலாந்து நாட்டின் வளத்தினை பெருக்கி வலிமையாக்கியவர் என்ற பெருமையுள்ளது.

         தமிழகத்தில் இரண்டு முக்கிய பிரமுகர்கள் படிக்காதவர்களாக இருந்து இந்திய அளவில் சிறந்தவர்களாக போற்றப் படுகின்றனர். ஒருவர் கர்ம வீரர் காமராஜர், அதுதவிர கலைஞர்.

முதலில் காமராஜரைப் பற்றி அறிவோம். அவர் பள்ளிப் படிப்பைதாண்டாதவர். ஆனால் சிறு வயதினிலேயே வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்து வெஞ்சிறையை அனுப்பித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய காங்கிரசின் தலைவராக பணியாற்றியவர். தமிழகத்தில் ஜாதிக் கொடுமையும், ஒரு குறிப்பிட்ட மக்கள் பெண்கள் சட்டை அணியக்கூடாது என்பதும், பெண்களை தேவதாசி முறைகளில் தள்ளியும், உயர் ஜாதியினர் தான் கல்வி கற்க வேண்டும் மற்றவர்கள் கல்விக்கு பள்ளிக்கூட வாசலைக்கூட மிதிக்கக் கூடாது என்ற குலக்கல்வி முறையும் இருந்து வந்தது. பெண்களுக்கு கல்வி அறிவு கூடாது,  மாறாக அவர்களுக்கு சமையல் கற்றுக் கொடுக்கவேண்டும், தையல் கலை பழகிக் கொடுக்க வேண்டும், வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும், போன்ற கட்டுப் பாடுகள் இருந்தது. இதற்கு உதாரணமாக மஹாராஷ்டிராவினைச்  சார்ந்த மீராபாய் சைன்ஸ் கல்லூரியில் படிக்க ஆசை. அவர் அங்குள்ள கலோரிக்கு வீட்டுக்கு, ஊருக்குத் தெரியாமல் மனு செய்து விட்டார். கல்லூரியும் அவர் ஒரு ஆண் எனக் கருதி சேருவதற்கு அனுமதிக் கார்டு அனுப்பியப் பின் வீட்டுக் சொன்னார். அவர்கள் அனுமதிக் கொடுக்கவில்லை. அவர் யோசனை செய்து வீட்டுக்குத் தெரியாமல் அந்தக் கல்லூரி இருக்கும் நீதிமன்றத்திற்கு சென்று முறைளையிட்டார். அந்த நீதிபதி மீராபாயை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று அவரே பணம் தந்து சேர்த்து விட்டது அல்லாமல் அந்த மீராபாய் என்ற வீரப் பெண்ணையும் திருமணம் செய்து விட்டாராராம்.  அதுபோன்ற் கொடுமைகளும் இந்த தருணத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

 தமிழக மாகாணத்தில் 1953ம் ஆண்டு முதலைவராக இருந்த ராஜாஜி அவர்கள் ஒரு கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்து, 'ஐயா, எங்கள் கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளி கூட இல்லை, நாங்கள் கல்வி கற்க வேண்டுமென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும். ஆகவே அருள் கூர்ந்து ஒரு பிரைமரி கல்வி நிலையம் அமைத்துத் தாருங்கள்' என்று சொல்லியுள்ளார். உடனே ராஜாஜி உங்கள் அப்பா என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டிருக்கிறார். அந்தப் பையன் சலவைத் தொழில் என்று கூறியுள்ளான். உடனே ராஜாஜி அவர்கள், தம்பி உங்கள் அப்பாவிற்கு துணையாக இருந்து துணி துவைத்தால் நாலு காசு கூடுதல் வரும், அதனை வைத்து இன்னொரு கழுதை வாங்கி நீயும் தனியாக துணி துவைத்தால் உனக்கு பணம் கிடைக்குமல்லவா, அதனை விட்டுவிட்டு கல்வி நிலையம் எதற்கு என்றாராம் என்பதும் ஒரு வரலாறு. அது மட்டுமல்லாமல் குலக்கல்வி முறையினை சட்டமாக கொண்டு வந்தாராம். அதனை ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்திற்காக வந்த காமராஜர் சென்னை திரும்பி ராஜாஜியிடம் குலக்கல்வி மசோதாவை கைவிட செய்தாராம். அது மட்டுமல்ல அவரே தமிழகத்தில் முதல்வராக 1954ம் ஆண்டு பொறுபெற்றாராம்

மகாத்மா காந்தி சொன்னார் ஆயிரம் கள்ளுக்கடைகளை மூடி ஒரு பள்ளிக் கூடம் திறக்க வேண்டுமென்று. ஆனால் காமராஜர் 1000கல்வி நிலையங்களை திறந்தார். அப்படி செய்தது மூலம் அறியாமையை ஒழித்தது மட்டுமல்லாமல், ஜாதிகள் வேறு பாட்டினை ஒழிக்க முடியும் என்று நினைத்தார். படிக்க வரும் குழந்தைகள் பசியோடு இருக்கக் கூடாது என்று மதிய உணவு, சீருடை  வழங்கச் செய்தார். விவசாயத்திற்காக மணிமுத்தாறு, பவானி சாகர், சாத்தனுர் அணை போன்று 13 அணைகள் கட்டி விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சார வசதி செய்து கொடுத்தார். திருச்சி BHEL, ICF போன்றவற்றினை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 9.10.1963ல் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஒரு தடவை காமராஜரின் அறிவை சோதனை செய்ய வேண்டி, அப்போதைய  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே மந்திரியாக இருந்த அனுமந்தப்பா, கூட்டத்தில் காமராஜ் அவர்களே தமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறதே அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றார், அதற்கு சிறுதும் யோசிக்காமல் 'சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை அமைத்தால் விவசாயம், தொழில் பெருகும், பலருக்கு வேலை.யும் கொடுக்கலாம் என்றாராம், அதனைக் கண்ட அவரும், அங்கு கூடியிருந்த மற்றவர்களும் பார்த்து அசந்து விட்டார்களாம். ஆகவே தான் நாம் அவரை படிக்காத மேதை என்று அழைக்கின்றோம். அதேபோன்று தான் மஹாராஷ்டிரா முன்னாள் முதல் முதல்வர் வசந்த் தாதா நான்காவது வரை தான் படித்தவர். அவர் காலத்தில் தான் அங்கே சக்கரை ஆலைகள், கல்லூரிகள், மருத்துவ, எஞ்சினீரிங் கல்லூரிகள் பெருகி இன்று அமெரிக்காவில் கூட அதிகம் அங்கே பயின்றவர் தானாம்..

அதன் பின்பு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரை சொல்லலாம். பள்ளி பருவத்திலேயே இந்தி திணிப்பிற்கு எதிராக படிப்பினை விட்டு வெளியேறி, செயல் அறிவைப் பெற்று எழுத்தாளர், கவிஞர், சினிமா கதை வசன கர்த்தா, நாடக நடிகர், மற்றும் கொண்ட கொள்கையை மாறாத தலைவர் சொன்னால். கலைஞரை சொல்லலாம்.  அவர் முதல்வராக 1969ம் ஆண்டு முதல் முறையாக அமர்ந்ததிலிருந்து பல்வேறு காலக் கட்டங்களில் சமூக நீதியோடு, தன்மானத்தோடும், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். மாநில ஆளுநர்கள் சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் கொடி ஏற்றுவதினை மாற்றி மாநில முதல்வர்கள் சுதந்திர தின கொடி பறக்க விட மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக பெற்று தந்தார். அது மட்டுமல்ல பெண்களுக்கு சொத்துரிமை, பிற்படுத்தப் பட்டோர், ஒடுக்கப் பட்டோர் தனி ஒதுக்கீடு, அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர், சமத்துவபுரம், உழவர் சந்தை, நியாய விலைக் கடை, குடிசை மாற்று வாரியம், இலவச வீட்டு பட்டா, பிச்சைக்காரர் வாழ்வு திட்டம், கண்னொளி திட்டம், மூவலூர் ராமசாமி திருமண உதவித் தொகை, கர்ப்பிணி உதவித் தொகை, பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு, மதிய உணவில் முட்டை சேர்த்தல், பெண்கள் கல்வி இலவச கற்கஉதவி, இலவச தொலைக்காட்சி, மாற்று   திறனாளிகளுக்கு உதவி மையம் போன்றவை குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.

வரலாற்று இடைப் பட்ட காலமான ஆறாம், மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சௌதி அராபியாவில் பிறந்து, படிப்பறிவில்லாத காட்டரபிகள் கூட்டத்தில் பிறந்து, தவிழ்ந்த பெருமானார் முகமது(ஸல்) அவர்கள் கண்ணறியா அல்லாஹ் அருளால் ஞானம் பெற்று ஓரிரை  கொள்கையினை பரப்ப சொல்லடி, கல்லடி பட்டு, ரத்தம் சொட்ட பொறுமையுடன் ஓரிரு தோழர்களுடன் அஞ்சா நெஞ்சராக, கொண்ட கொள்கையிலிருந்து விலகாமல்,  தனது கொள்கையினைப் பரப்பி, தன்னை முன்னிறுத்தாமல் செயலாற்றியதால் இன்று உலகில் 25

சதவீதமான 200 கோடி மக்களாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அரசு தலைவராகவும், மார்க்க உபதேசராகவும் இருந்த 23 வருடங்களில் பல்வேறு சமூக சீர் திருத்த கொள்கைகளை மக்களிடையே பரப்பி, செயல் படுத்தவும் செய்தார்கள். ஆகவே தான் இன்றும் உலக அளவில் முகமது என்று அவர் பெயரை கொணடவர்கள் உலகிலேயே அதிகமாவும், அவர்கள் உருவமோ, சிலையோ அல்லது ஒரு சிறு கீறலோ உலகிலேயே எங்காவது இருக்கின்றதா? இல்லையே, அதுதான் அவர்கள் போதித்த அறிவு.

          முகமது(ஸல்) அவர்கள் அமல் படுத்திய சமுதாய சீர்திருத்தங்கள் பின் வருமாறு:

1) சமுதாயத்தில் வறுமை ஒழிக்க ஸகாத், ஸதகா அன்பளிப்புகள்

2) மானிடவருக்குள் நிறம்,ஜாதி,மதம், ஏழை, பணக்காரன், எஜமான், வேலையாள் என்ற வேற்றுமை இல்லாத இனம் உருவாக்குதல்.

3) கடனாளிகள் ரத்தத்தினை உறிஞ்சும் அட்டைபோல உள்ள வட்டியினை அறவே வேரறுத்தல்.

4) பொருளாதாரத்தில் தன்னிறைவு செய்தது

5) ஆடம்பரத்தினை ஒழித்துக் கட்டுதல்

6) உடல், உடை சுத்தம் வேண்டும் என்ற போதனை

7) எதனையும் வீண் விரையம் செய்யக் கூடாது என்ற கட்டுப் பாடு

8) மன்னிப்பதில் முதல் நபராக இருக்கச் செய்தல்

9) வேலையாட்களின் வியர்வை காயுமுன் சம்பளம் கொடுக்கச் செய்தது

10) சகோதர, பெற்றோர், அடுத்த வீட்டுக் காரர் நலம் பேணிக்காத்தல்

11) தான் தான் கல்வி கற்க வாய்ப்பில்லையென்று மற்றவர்களாவது அறிவுடன் உலா வர suffah சபா அமைத்தல்.

      போர் கைதிகள் கற்றவர்களாக இருந்தால் அவர்கள் அங்குள்ள அராபியருக்கு கல்வி போதிக்க விடுதலை செய்தல்

12) பெண் குழந்தைகள் பலியினை தடுத்து, அவர்களுக்கு சொத்தில் பங்கு, திருமணத்திற்கு முன்பு ஒப்புதல், மண முறிவுக்கும் குலா முறையினை எளிதாக்கியது

13) திணிக்கப் பட்ட போர்களில் முன்னின்று நடத்தியது.

14) ஆளுநர்கள் தங்களது செயல்களுக்கு பொறுப்பேற்க செய்தது.

15) வியாபாரத்தில் நேர்மை, தீர்ப்பில் நியாயம் கடைப் பிடித்தல்

16) விதவைகள், அனாதைகள் மறு வாழ்வுக்கு வழி வகுத்தல்

17) படை வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் போரில் சரணடைந்தால் மன்னிப்பது, நீர் நிலைகள்,குளங்கள், மரங்கள், பயிர்கள், பிராணிகளை அழிக்காமல் பார்த்துக் கொள்ள செய்தது

என்ற எண்ணற்ற சமூக தீர்த்தங்கள் ரசூலுல்லாஹ் அவர்களால் கொண்டு வரப்பட்டது.

இதனை இன்றும் முஸ்லிம்கள் கடைப் பிடித்து வருவது தான் காலத்திலும் மறையாத கல்வி கற்காக ஞான போதனைகள்.  அதனால் தான் சொல்கிறேன் படிக்காத மேதைகளிலும் மிக சிறந்த மேதை ரசூலுல்லாஹ் அவர்கள் தானே!