Friday, 7 November 2025

வெறும் கை முழம் போடுமா?

 


(டாக்டர் .பீ. முகமது அலி, .பீ.எஸ்()

 

உலக நாடுகள் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவைகளில் கூட்டமைப்பு கொண்டுள்ளன என்பது உங்கள் பலருக்கும் தெரிந்து இருக்கும். அதனை உங்களுக்கு நினைவு படுத்தும் போது முஸ்லிம் நாடுகள் அதுபோன்ற அமைப்புகள் உள்ளனவா என்ற கேள்விகளை உங்கள் முன் வைத்து அதற்கான அவசியத்தினையும் விளக்கலாம் என எண்ணுகிறேன்.

         இப்போது அவ்வாறு என்னென்ன உள்ளன அதன் உறுப்பு நாடுகள் அதன் நோக்கம் உங்களுக்கு விளக்குகிறேன். 1) நேட்டோ: North Atlantic Treaty Organisation: இது மிகப் பெரிய கூட்டு அமைப்பாகும். இதன் படி இந்த அமைப்பில் உள்ள நாடுகளை எந்த நாடாவது தாக்கினால் அந்த நாடுகள் ஒன்று சேர்ந்து போர் தொடுக்கும். இதன் உறுப்பு நாடுகளாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளான, அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, குரேசியா, செக் குடியரசு, டென்மார்க், இசிடோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லத்வியா, லிதுவாகியா, லக்ஸம்பர்க், மாண்ட்நெகிறோ, நெதர்லாந்து, வட மெசிடோனியா, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவிகா, சலோனியா, ஸ்பெயின், இங்கிலாந்து, துருக்கி ஆகும். இந்த அமைப்பில் சேர்வதற்குத்தான் ரசியாவிற்கு பக்கத்துக்கு நாடான உக்ரைனுடன் போர் தொடர்ந்துள்ளது.

         அதேபோன்று தான் முன்னாள் ரஷ்யா குடியரசு நாடுகளான ஆர்மீனியா, பெலாரசுஸ், கஜாக்ஷ்டாகிரிகிஸ்தான், ரஸ்யா, தஜிகிஸ்தான், ஆகியவை சேர்ந்தும் CSTO என்ற கூட்டு பாதுகாப்பு குழுவினை வைத்துள்ளது. ANZUS என்பது ஆஸ்திரெலியா, நியூஜிலாந்து, அமெரிக்கா நாடுகளின் கூட்டு அமைப்பாகும்.

பாதுகாப்பு அம்சம் இல்லாமல் நாடுகளுடன் ஆலோசனை செய்து கொள்ள (FPDA) என்ற அமைப்பு ஆஸ்திராலியா, மலேசியா, நியூஜிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து சேர்ந்து உள்ள கூட்டு அமைப்பாகும்.

QUAD ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ராணுவ சம்பந்தமான ஆலோசனை செய்து கொள்வதாகும்.

                  2025 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அணு ஆயுதம் வைத்திருக்கும் பாகிஸ்தானும், பொருளாதாரத்தில் வலுவாக உள்ள சௌதி அராபியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.

உலகில் பாதுக்கப்பிற்காக அதிக அளவு செலவழிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. ருசியா அமெரிக்காவிற்கு சவால் விடும் சூப்பர்சோனிக் ஏவுகளையினை 29.10.2025ல் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அது மட்டுமல்ல கடலுக்குள் பாய்ந்து தாக்கும் ஏவுகணையையும்  சோதனை செய்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா முதல் ஆளிலில்லா AI என்ற செயற்கை  விஞ்ஞாத்தில் யாரும்  வழி மறித்து தாக்க முடியாத ஒரு அணு ஆயுதத்தினை தயாரித்து வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இது எங்கே கொண்டு  போய் விடுமோ என்று தெரியவில்லை? நமது நாடு 15 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்ட பெரிய நாடாக உள்ளது. ஆனால் போர்  விமானம் போன்றவற்றை பெற இன்னும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளை நம்பி இருக்கிறது. தொழில் நுட்பத்தில் விரைவாக முன்னேறி வரும் நம் நாடு சீக்கிரமே அவைகளில் தன்னிறைவு கொள்ளும் என்ற நம்பிக்கையுள்ளது.

         முன்னாள் காலனியாக இருந்த 38நாடுகளில் வளர்ந்த நாடுகள் தங்கள் ராணுவ தளங்களை அமைத்து சூழ்நிலைக்கேட்ப நடவடிக்கை எடுக்க அமைத்துள்ளன. ஆகவே தான் ஆப்கானிஸ்தானில் உள்ள முன்னால் ராணுவ தலமான போக்ராமை எப்படியாவது பெற்றுவிட அமேரிக்கா முயல்கிறது. அதற்குக் காரணம் அந்த இடத்திலிருந்து ரஷ்ய, சீன, ஆசிய மற்றும் மேற்காசிய நாடுகளில் நடவடிக்கை  சுலபமாகுமல்லவா? கரிபியன் கடலில் செல்லும் வெனிசுலா மற்றும் கொலம்பியா கப்பல்களை அவைகளெல்லாம் போதைப் பொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் என்று விசாரணை செய்யாமல் ஏவுகணைகளை அனுப்பி அமேரிக்கா மூழ்கடித்து விட்டு 60 பேர்களையும் காவு வாங்கி விட்டது. அப்படி இருக்கும் பொது வல்லரசு நாடுகள் எந்த நாட்டினையும் பணிய வைக்க  அதுபோன்ற போர்களை நடத்துமல்லவா?

        

         தெற்காசிய நாடுகளான புரூனை, பர்மா , கம்போடியா, இந்தோனேசிய, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், நாடுகள் சேர்ந்து ASEAN என்ற தடையின்றிய வர்த்தகம், பயணம், போன்ற  வகைகளுக்காக ஒரு அமைப்பு உள்ளது. அது சமீபத்தில் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவில் ஒரு மாநாடு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் நடந்து உங்களுக்குத் தெரியும். அதில் நீண்ட காலமாக கம்போடியா, தாய்லாந்து எல்லை சச்சரவிற்கு ஒரு முடிவு வந்தது.

         உலக பனிப்போரில் ரசிய, அமெரிக்கா என்ற இரு குழுவினையும்  சாரா Nan Aligned nations என்று 1955ம் ஆண்டில் முதல் மாநாடு இந்தோனேசியாவில் நடந்தது. அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முக்கிய பங்கு வகித்தார்.

         இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் அப்பப்போ உரசல் ஏற்பட்டு பதற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஆபரேஷன் சிந்தூர் போரை நிற்பாட்ட தான்தான் காரணம் என்கிறார். பாகிஸ்தான் பாதுகாப்பு நிலை, பொருளாதாரம், ஆட்சியினர் நடத்தும் ஆடம்பர வாழ்க்கை பற்றி அமெரிக்க முன்னாள் சி... என்ற உளவுப் படைஉயர் அதிகாரி 'ஜான் கிராக்கோ' ஒரு புத்தகத்தில் மக்கள் வறுமையில் வாடும்போது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 15 மில்லியன் சொகுசு பங்களாவில் துபையில் வாழ்ந்ததாக கூறியுள்ளார்.  அது மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி முஷரப் தங்களுடைய சட்டைப் பையில் இருந்ததாக எழுதியுள்ளது, அதிர்ச்சி அளிக்கத்  தானே செய்யும் சாதாரண குடி மகனுக்கு.

         உலகில் 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அதில் சக்தி வாய்ந்த தலைவர்களாக கத்தார் அமீர் தமீம், சௌதி மன்னர் சல்மான், ஈரான் சுப்ரீம் தலைவர் கொமேனி, துருக்கி ஜானகிபதி ரிசப் தாயிப், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஐக்கிய அரப் குடியரசு, குவைத், புரூணை, மலேசியா, துருக்கி பொருளாதாரத்தில் வலிமையாக உள்ளன, இந்தோனேசியா உள்நாட்டு ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் அளவிற்கு உள்ளது.  ஆப்ரிக்க கண்டத்தில்   அல்ஜீரிய நாடும் வலிமையாக உள்ளது. ஈராக் நாட்டின் ராணுவம் 1, 93, 000 ஆகும்.  நாடுகள் தங்கள் சுன்னி, ஷியா என்ற பிரிவுகளை மறந்தால் இஸ்ராயில் நாட்டினை எதிர்க்கலாம், ஆனால் அமெரிக்க, ரசிய போன்ற அணு ஆயுத நாடுகளை எதிர்க்க சக்தி இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எகிப்து, கத்தார் நடத்திய சமரச பேச்சு வார்த்தை முறிந்து விட்டது.

         ஆகவே தான் எந்த முஸ்லிம் நாடும் இஸ்ராயில் காஸாவில் 96 சதவீத கட்டுமானங்களை அழித்த பின்னும், 70 ஆயிரம் மக்களை கொன்ற பிறகும் மனித உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் முன் கொண்டு வரவில்லை, மாறாக அதிகமாக கிருத்துவர்கள் வாழும் தென் ஆப்பிரிக்கா தனது குரலை எழுப்பி அனைத்துலக பார்வையையும் அதன் பக்கம் திரும்பச் செய்துள்ளது.

         நைஜீரிய நாட்டில் உள்நாட்டு கலவரத்தில் தேவாலயங்களும் தாக்கப் பட்டது, கிருத்துவர்கள் கொல்லப் படுகின்றனர், அதுபோன்று இனிமேலும் நடந்தால்  அமெரிக்கா தலையிட்டு ராணுவ நடவடிக்கையில் இறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி நைஜீரிய நாட்டிற்கு ஒரு பயமுறுத்தல் விட்டுள்ளார்.  ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ராயில் ராணுவத்தால் மசூதிகள் அழிக்கப் பட்டபோதும், 80000 உயிர்கள் பலி வாங்கிய போதும்  அதுபோன்ற ஒரு பயமுறுத்தலை விடுதலுக்காவது முஸ்லிம் நாடுகள் முடிந்ததா, இல்லையே! பணம் இருந்தும், ராணுவத்திலும், தொழில் நுட்பத்திலும் பலம் இழந்து காணப் படுவதால் செயலிழந்து உள்ளனர். வெறும் கை முழம் போடுமா? போடாது. ஆகவே காலத்திற்கேற்ப இன்ஜினியரிங், தொழில், ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி  செயலாற்றவில்லையென்றால் செல்வ நாடுகள் என்ற வீண் தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லையல்லவா?

        

         நமது நாட்டு மக்களும், மற்ற வளரும் நாடுகளும் வேற்றுமை மறந்து நாடுகளின் நலன் கருதி ஒற்றுமைளையுடன் இருந்தால் நாமும் நலம் பெறலாம், நாட்டு மக்களும் நலன் பெறுவர் அதனை விட்டு விட்டு மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடுமா? அல்லது வெறும் கை முழம் போடுமா? ஆகவே சூழ்நிலையறிந்து  ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டுமல்லவா?