(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ,எஸ்.(ஓ)
தற்போதைய சூழலில் எங்கே ம போர் மேக கூட்டம் வட்டமடிப்பதினை பார்ப்போமேயானால் எங்கே மூன்றாவது உலகப் போர் வந்து பேரழிவினை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் இருக்கிறதல்லவா? முதலில் மேகம் பூமியில் உள்ள நீர் நிலைகளிருந்து தண்ணீரை உறிஞ்சுகிறது, காற்றில் உள்ள ஈரப் பசைகளால் மழை சிறு, சிறு கட்டிகளாகவும்,மழைத்துளிகளாகவும் உருவம் கொடுக்கின்றது, அதன் மீது வானின் வெப்பம் கூடிய காற்று பட்டால் மழை பூமியில் விழுகின்றது, சில சமயங்களில் ஆலங்கட்டியாகவும் விழுகிறது. அதேபோன்று தான் உலகில் இருநூறாம் ஆண்டு முதலாவது, மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடந்துள்ளன. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சமீபத்தில் உள்ள பதட்டமான சூழல் உருவாகி உள்ளது என்பது உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதல்லவா?
முதலாம் உலகப் போர் பல்வேறு கூட்டணிகள் உருவெடுத்ததும், வல்லமை நாடுகள் முஷ்டி முறுக்களும்,தேசிய பற்றும், பால்கான் மற்றும் முரோகா நாடுகளில் உள்ள வேறுபாடுகளால் ஜெர்மனி, ஆஸ்திரிய, ஹங்கேரி, இத்தாலி, ஆகிய நாடுகள் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வல்லமை, ரஸ்யா நாட்டின் ஆளுமை என்ற மூவர் கூட்டணி தொடங்கியது. அந்த கூட்டணியை எதிர்க்க பிரான்ஸ் நாடும், ரஷ்ய நாடுகளும் இணைந்து மற்றொரு கூட்டணி அமைத்து போரில் ஈடுபட்டது. இதுவரை வலுவான கடற்படையினை கொண்ட இங்கிலாந்தினை எதிர்க்க ஜெர்மனியும் கடற்படை உருவாக்கியது.
ஆப்பிரிக்க நாடான மொராக்கோ பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தினை எதிர்த்தது. பால்கான் என்பது துருக்கி பிரதேசத்தினையும், மலைகளின் நாடுகளான பல்கெரியா,ரோடோனா மலை பிரதேசத்தினையும் குறிக்கும். அவைகளில் அமைதியையும், செர்பியா மக்கள் வாழும் பகுதிகளான ஹங்கேரி இணைக்கும் போது அமைதியின்மையும், ஆஸ்திரிய, ஹங்கேரி இணைந்து போஸ்னியா மற்றும் ஹாசோகோவினா பகுதிகள் இணைக்கும் போது செர்பியாவையும்,ரஸ்யாவிற்கும் கோபத்தினை ஏற்படுத்தியது. அதன் உச்ச கட்டமாக ஹங்கேரி அரச வாரிசு ‘ஆர்ச்சுடுக் லென்ஸ் பெர்டினாண்ட்’ செர்பியர்களால் கொல்லப் பட்டார். அது ஒரு தீப்பொறியாக இருந்து முதலாம் உலகப் போர் ஏற்பட்டது. அந்த யுத்தங்களில் 4 கோடி மக்கள் இறந்ததாக கூறப் படுகிறது.
இரண்டாம் உலகப் போர் 1939-1945வரை நடந்தது. அதற்கான காரணங்கள் முதலாம் உலகப்போரில் தீர்க்கப் படாத செயல்களுக்கும், ஆக்கிரமிப்பு கொள்கைகளாலும், சர்வதேச அமைதி பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததாலும் நடந்தது என்றால் மறுக்க முடியாது. முதலாம் உலகப் போர் முடிவில் ஜெர்மானிக்கு 'வெர்சாலிஸ்' ஒப்பந்தத்தில் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டதாலும், ஜெர்மனிக்கும், வல்லரசு நாடுகளுக்கும் பகைமை ஏற்பட்டது. ஆகவே ஜெர்மானிய, இத்தாலி, ஜப்பான் நாடுகள் தங்கள் நாடுகளின் ராணுவங்களை பலப் படுத்தின. அதற்கு மும்முரமாக ஜெர்மனியின் ஹிட்லரும், இத்தாலியின் முசோலினியும்,
ஜப்பானின் அரசரும் களங்களில் இறங்கினர். ஜப்பானிய ராணுவம் மஞ்சூரியாவினை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
அதனால் உலகில் நிலையற்ற தன்மை நிலை கொண்டது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த போலந்து நாட்டின் மீது 1939ம்
ஜெர்மன் இறங்கியதால் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை எதிர் அணியில் இறக்கியது. அதில் அமெரிக்காவினையும் இணைத்துக் கொண்டது. ஜெர்மன் தனது ராணுவத்தலத்திற்கு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஒரு ரகசிய அனுப்பிய செய்தியில் அணுகுண்டை வீசும் படி சொன்னதை இங்கிலாந்து கப்பற்படை கேப்டன் வழி மறித்து அறிந்து கொண்டதால் அதனை செயல் படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து அனுப்பியவுடன் அமெரிக்கா முந்திக் கொண்டு ஜப்பான் நாட்டின் ராணுவம் இனியும் முன்னேறாமல் ஜப்பான் நாட்டின் முக்கிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டை வீசி முற்றிலும் அழித்ததால் ஜப்பான் நாட்டை மட்டுமல்ல அதன் தோழமை நாடுகளான ஜெர்மனி, இத்தாலியையும் கதிகலங்க வைத்தது மட்டுமல்ல மாறாக ரஸ்யாவிற்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு உலகில் வலிமை மிக்கது என்று காட்டதான் என்று சொல்லப் படுகிறது. இந்தப் போரில் எட்டரைக் கோடி மக்கள் உயிர் பறிகொணடது என்ற ஆய்வு அறிக்கை கூறுகிறது.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் ஏற்பட்ட மக்கள் அழிவுகள் எங்கே தொடருமோ அதன் முன்னோட்டமாக அச்சப் பட வேண்டிய சூழ்நிலை இப்போது தொடங்கி விட்டது என்று சில காரணங்களை நான் சுட்டிக் காட்ட கடமைப் பட்டிருக்கிறேன்.
1) போலந்து நாடு தற்போது ஐரோப்பிய யுனியன் கூட்டு நாடுகளுடன் உள்ளதால், அதற்கு பக்கத்து பெரிய நாடான ரசியாவிற்கு தீராத கோபத்தினை ஏற்படுத்தியது. அதேபோன்று பக்கத்து நாடான யுக்ரைன் ஐரோப்பிய யூனியனில் சேர்த்தால் தனக்கு ரஸ்யாவிடமிருந்து பாதுகாப்பு கிடைக்குமென்று அதன் அதிபர் கெலன்ஸ்கி சொன்னதுதான் தாமதம் தனது நீண்டகால பகையினை தீர்த்துக் கொள்ள படையெடுப்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திக்
கொண்டு வருகிறது. யுக்ரைனுக்கு ஆதரவாக
அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியன் நாடுகளும் உள்ளன.அது எங்கே அடுத்த உலகப் போராக மாற்றிவிடுமோ என்ற அச்சம் உலக அளவில் இருக்கிறதே!
2)
ஹாங்காங் நாட்டினைவிட்டு 1997ம்
இங்கிலாந்து வெளியேறி சீனாவின் முழு கண்ட்ரோலில் வந்து விட்டது. அதேபோன்று தைவான் தீவு நாட்டையும் தங்களது நாட்டுடன் இணைத்துக் கொள்ள சீனா பயமுறுத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டு நாடுகள் முட்டுக் கட்டையாக இருப்பதால் கோபத்தில் உள்ளது.
3)
சீனாவிற்கு கிழக்கே உள்ள யாரும் வாழாத 'செனக்' தீவுகளை யார் ஆதிக்கத்தில் கொண்டு வருவது பற்றி சீனாவிற்கும், ஜப்பான் மற்றும் தைவானுக்கும் அடிக்கடி புகைச்சல் இருந்து கொண்டே உள்ளது.
4)
ஆபிரிக்க தெற்கு சூடான் நாட்டில் அரசு படைகளுக்கும், அதிவிரைவு படைகளுக்கும் யார் தங்களுடைய ஆளுமையை காட்டுவது என்ற போராட்டத்தில் சாதாரண மக்கள் சீரழிந்து கொண்டுள்ளனர்.
5)
அதேபோன்றே டாக்டர் காங்கோ-ருவாண்டா, கென்யா, நைஜீரிய, சோமாலியா போன்ற நாடுகளும், லிபியா அதிபதி கர்னல் கடாபி பிரான்ஸ் மற்றும் கூட்டுப் படைகளால் கொல்லப் பட்டபின்னர், அங்கே பல்வேறு குழுக்களிடையே தீராத போர்கள் நடந்து கொண்டுள்ளதினை நாம் அறிவோம்.
6)
மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து யூத மக்களைக் கொண்டு வந்து இஸ்ரேயில் என்ற நாட்டினை இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் குடியமர்த்தப் பட்டதால் அதற்கு உலகின் பல்வேறு பலம் வாய்ந்த யூதர்களால் பல்வேறு வகைகளில் உதவுவதால் பக்கத்து நாடுகளான பாலஸ்தீனம், எகிப்து, சிரியா,லெபனான் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன.
அதன் உச்ச கட்ட நடவடிக்கையாக ஹமாஸ் அமைப்பினர் 22.7.2025ல் இஸ்ராயில் நாட்டினுள் நுழைந்து தாக்குகள் நடத்தியதால் இஸ்ராயில் ஹமாஸ் அமைப்பினரை அறவே அழிக்கக் எடுக்கும் நடவடிக்கையாக போரில் இறங்கி அதற்கு அமெரிக்காவும் உறுதுணையாகி ஹமாஸ் நகரங்களில் குண்டு மழைகள் பொழிந்து இதுவரை 57000 பேர்கள் கொல்லப் பட்டும் பல நகரங்கள் அழிக்கப் பட்டும் உள்ளதனை நீங்கள் அறிவீர்கள். அதற்கு அமெரிக்காவும் ஆதரவாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக இஸ்ராயில் ஏமன்,ஈரான், சிரியா,லெபனான் நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
7)
காஸ்மீரில் 22.4.2025 அன்று பகல்கலாமில் சுற்றுலா மையத்தில் நடந்த கொடூர தீவிர தாக்குதலுக்குப் பின் சுதந்திர போராட்டத்திற்கு முன்பாக அண்ணன்-தம்பியாக இருந்த இந்தியாவும்-பாகிஸ்தானும் சச்சரவில் இறங்கி எங்கே பெரிய போராக மாறிவிடும் என்று அச்சத்தில் இருக்கும் போது, யார் செய்த காரியமோ தெரியவில்லை தாற்காலியமாக நிறுத்தப் பட்டுள்ளது, ஆனால் புகை அணைத்த மாதியில்லையே!
8)
தென் கொரியாவிற்கும்-வட கொரியாவிற்கும் நீண்ட நாள் பகை இருந்து கொண்டே உள்ளது. இதேபோன்று தான் கிழக்கு ஜெர்மனியும்-மேற்கு ஜெர்மனியும் இரண்டு துருவங்களாக இருந்தன. ஆனால் 3.10.1990அன்று இணைந்து இரண்டையும்
பிரித்த பெர்லின் சுவரும் இடிக்கப் பட்டது போல, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற மனப் பக்குவம் வேண்டும் நாடுகளிடையே, ஏனென்றால் உலக யுத்தம் வந்தால் அணுகுண்டு அழிவினை விட மிக சக்தி வாய்ந்த ஆயுதமான நீகுளியர்(அணுகுண்டு) ஆயத்தங்கள் உலகில் புள், பூண்டு கூட இல்லாத நிலை ஏற்படுத்துமாம்.
9)
உலகமே சைபர் என்ற கம்பூட்டர் இயக்கத்திலும், AI என்ற செயற்கை அமைப்பிலும் இயங்கிக் கொண்டுளது. அதனை சைபர் கிரைம் மற்றும் AI மாற்றான இயக்கம் வந்தால் எதனையும் செயல் படுத்த முடியாத நிலை ஏற்படுமல்லவா?
10)
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் இணைந்து 24.10.1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் தலைமை இடமாக நியூயார்க் நகரத்தில் உள்ளது. நாடுகளுக்கிடையே ஏற்படும் போர்களை நிறுத்துவதிக்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நியூ யார்க் நகரில் தான் அமைந்துள்ளது. அதன் நிரந்தர அமைப்பாளராகவும், பலம் வாய்ந்த வீட்டோ என்ற உரிமையையும் அவர்களுக்கு வழங்கியதின் காரணமாக அந்த வீடோ உரிமை உள்ள நாடுகளே ரசியா, அமேரிக்கா, சீனா ஆகியவைகள் நான் மேலே கூறிய சம்பவங்களால் போர்களில் இறங்கியோ அல்லது போர்களில் ஈடுபடும் மற்ற உறுப்பு நாடுகள் அல்லது
பெரிய
நாடுகளுக்கோ
பெரிய அண்ணன்கள்
ஆதரவு கொடுப்பதினால் ஐநா சபை கையேலாத அமைப்பு என்றால் மறுக்க முடியாது.
முன்பெல்லாம் கத்திகளைக்கொண்டோ, அதன் பின்பு இயந்திர புரட்சியால் வெடி மருந்து உபயோகித்து துப்பாக்கி, பீரங்கி கலாசாரம் வந்தது.
அதன் பிறகு, கை எரிகுண்டு, தரையிலிருந்தும், வானிலிருந்தும், நீர்
மூழ்கி கப்பலிருந்தும் குண்டுகள் வீசுவதும், தற்போது வானிலிருந்து ஆள் உள்ள அல்லது ஆளில்லா விமானங்கள் மூலமும் குண்டு மழை பொழியும் உள்ளது.. இப்போது கண்ணுக்கு எட்டாத சேட்டிலைட் மூலம் குண்டுகள் வீசினால் சொல்லவொண்ணா அழிவு ஏற்படுமல்லவா? ஆகவே மூன்றாம் உலக யுத்தம் ஏற்பட்டு பேரழிவினை மக்கள் சந்திக்காமல் அவசர நடவடிக்கைகள் எடுப்பது ஐ.நா.சபையின் காலத்தின் கட்டாயமல்லவா?