(ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )
தமிழக மக்கள் மழைக் காலத்தில் குளங்கள், ஏரிகள்,லெகூன் போன்றவை தண்ணீர் நிறைந்து இறை தேடும் பறவைகளை கவர்ந்து இழுக்கும், அதில் வெளி நாட்டுப் பறவைகள் பல்வேறு நிறங்கள் கொண்டவை வெகு தூரத்தில் இருந்து வந்து தாழ்வான செடிகளில் அமர்ந்து மீன்கள், புழுக்கள் ஆகியவற்றை தின்று, கறைகள். மரங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, அதன் பின்பு நீர் வற்றியவுடன் தங்கள் நாட்டிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை நகரத்தில் கொட்டித் தீர்த்த மழையில், மூக்கைப் பிடிக்குமளவிற்கு நாற்றமடிக்கும் கூவம் ஆற்றின் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தூர் வாரப் பட்டதால் அழுக்கு தண்ணீர் கடலிலும், கடல் தண்ணீர் கூவத்திலும், அது மட்டுமல்லாமல் மழை நீர் கலந்ததாலும் நிரம்பி இருந்தது. ஆதலால் வெளி நாட்டுப் பறவைகளான செங்கால் நாரை, கொக்கு, கூழக்கிடா போன்ற பறவைகள் வருகை தந்ததினைக் கண்டு கழிக்க சென்னை மற்றும் புற நகர் மக்கள் குவிந்ததினை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.
அதே போன்று தான் அரசியலிலும் சிலர் தங்கள் உடைகளை மாற்றி பழம் திண்ணிப் பறவைகளாக இருப்பதனை தமிழக அரசியலில் உள்ளதினை படம் பிடித்து உங்களுக்குத் காட்டலாம் என எண்ணுகிறேன். 1965ம் ஆண்டு தமிழகமெங்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதில் மாணவர்கள் முக்கிய பங்காற்றினார்.
மாணவர் தலைவர்களாக இருந்த காமராஜர், காளிமுத்து போன்றோர் ஒரு வருட தண்டனை வழங்கப் பட்டும், சிலர் தீக்குளித்தும் இறந்தனர் என்பது வரலாறு. அதன் பின்பு 1967ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. அமர் 1969ம் ஆண்டு மறைவிற்குப் பின்பு கலைஞர் பதிவியேற்றார் முதல்வராக. அதன் பின்பு 1971ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க 205 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் தொடர்ந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் இரும்பு பெண் என்று உலகில் பெயரெடுத்த இந்திரா காந்தி பாகிஸ்தான் பகுதியான பங்களா தேசத்தில் படையெடுத்து தனி நாடாக்கி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த நேரத்தில் தி.மு.க மாநாடு கோவையில் நடந்தது அதில் தி.மு.க 1971ல் அமோக வெற்றியினைத் தொடர்ந்து சில ஆர்வமிக்க தொண்டர்கள் கலைஞரை பங்களா தேச அடுத்த்த மு ஜிபுர் ரஹ்மான் என்று கூச்சல் போட்டனர். ஏற்கனே திராவிட நாடு திராவிடருக்கே என்று கொள்கை கொண்ட கட்சி எங்கே மறுபடியும் தனித்தமிழ் நாடு என்ற கோரிக்கையினை வைக்குமோ என்று பயந்த மத்திய அரசு தக்க தருணம் நடவடிக்கை எடுக்க காத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். சில கோரிக்கைகளை பொதுக் கூட்டத்தில் 1972ல் வைத்தார், அதன் பின்னெனியில் மத்திய அரசு மற்றும் உளவு படை இருந்ததாக கூறப் பட்டது. அது கட்சி கட்டுப்பாட்டினை மீறியதாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். அவரும் எ.டி.எம்.கே என்ற கட்சியினை ஆரம்பித்து பலரையும் தி.மு.கவை விட்டு பிரித்தார்.
1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலையினை இந்திரா அறிவித்தார். அதன் பின்பு
தி.மு.க ஆட்சியினை கலைக்க பல்வேறு திட்டங்கள் போடப் பட்டன. அதில் ஒன்று தான் ஊழல் குற்றச் சாட்டு. அப்போது கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த கல்யாண சுந்தரம், மத்தியில் இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சேலம் முன்னால் எம்.பி கண்ணன் ஆகியோர் மத்தியில் ஊழல் குற்றச் சாற்றினை வைத்தனர். அதன் பின்பு 1976ம் ஆண்டு தி.மு.க அரசு கலைக்கப் பட்டது. இந்த தகவலை சேலம் எம்.பி.யாக இருந்த கண்ணன் நான் 1986ம் ஆண்டு சேலம் எஸ்.பி.யாக பதவியேற்றபோது
மரியாதை நிமித்தமாக என்னைப் பார்க்க வந்த கண்ணன் சொன்னார். தி.மு.கவிலிருந்த முக்கிய பிரமுகர்கள் பி.யு.சண்முகம், மாதவன், மதுரை முத்து, மதியழகன், அரங்கநாயகம்
போன்றோர்எ டி.எம்.கே.யில் இணைந்ததனர். இவையும் ஒரு வரலாறு.
தி.மு.க ஆட்சி அகற்ற ப்பட்டு 1977ம் நடந்த தேர்தலில் எம்ஜியார் ஆட்சி அமைத்தார். இந்திரர காந்தியினை தி.மு.க ஆட்சியினை கலைத்திற்காக துரோகி என்று அழைத்த தி.மு.க, ‘துரோக நண்பனுக்கு நண்பன் கூட்டாளி’ என்பது போல எம்.ஜி.ஆர் பாணியில் அவர் மீது ஊழல் குற்றச் சாட்டு நீதிபதி ரே தலைமையில் அமைக்கப் பட்டு 1980ம் ஆண்டு கலைக்கப் பட்டு, சட்டசபை தேர்தலும் நடந்தது. அதில் எம்.ஜி.ஆர் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார், அது அவர் மரணம்
1987ம் ஆண்டு வரை நடந்தது. அவர் கட்சியும் உடைந்தது. அதன் பின்பு கலைஞரை எதிரியாக கருதிய ஏ.வே. வேலு, முத்துசாமி, கண்ணப்பன், ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ,சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோர் தி.மு.காவில் சேர்ந்து மந்திரியாகவும் உள்ளனர்.
1989ம் ஆண்டு தி.மு.கா ஆட்சி அமைத்ததும், மத்திய அரசிற்கு கண்ணை உறுத்தியது, ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா, எப்படியாவது கலைக்க திட்டம் போட்டு சட்டசபையில் ஜெயலலிதா நாடகம் நடத்தி ப் பார்த்தார். ஆனால் முடியவில்லை. அதன் பிறகு தி.மு.கா தலைவருக்கு தூண் போல இருந்த வைகோ செய்த செயல் தீயாக பற்ற வைத்தது. இலங்கை உடன் இந்தியா செய்த ஒப்பந்தத்தில் ஐ.பி.கே.எப் என்ற இந்திய படை அனுப்பி விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பறிக்க அனுப்பி வைக்கப் பட்டது. வைகோ கட்சி தலைமைக்குத் தெரியாமல் படகில் ஜாப்பினா சென்றார். அப்போது இந்திய படைகளால் பிடிக்கப் பட்டார். அதன் பின்னர் தான் தி.மு.க தலைமைக்குத் தெரிய வந்தது. அதன் பின்பு தலையிட்டு விடுதலை செய்யப் பட்டார். தலமைக்கு தெரியாமல் அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியும் கொடுத்ததார். விடுதலைப் புலிகளுடன் இணைந்து தலைமைக்கு ஊறு விளைவிக்க திட்டமிட்டதாக கட்சியில் இருந்து நீக்கப் பட்டார். 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் கொல்லப் பட்ட பின்பு நடந்த தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார்.
1994ம் ஆண்டு வைகோ ம தி.மு.க என்ற கட்சியினை ஆரம்பித்தார். தி.மு.க. 9 மாவட்ட செயலாளர்கள் அவர் கட்சியில் சேர்ந்தனர். மத்தியில் ஆட்சியின் பங்கில் செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன், கண்ணப்பன் போன்றோர் மந்திரியாக பதவி வகித்தனர். 1994ம் ஆண்டு அறிவாலயத்தினை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று பொன். முத்துராமலிங்கம் தலைமையில் ஊர்வலம் கிண்டி அண்ணா சாலையிலிருந்து மாலை நேரத்தில் புறப்பட்டனர். அப்போது நான் டி.சி.பி ஆகா பதவியில்
பாதுகாப்பு பொறுப்பில் அமர்த்தப் பட்டதால் எலடாம்ஸ் ரோடு அண்ணா சாலையில் தடுத்து நிறுத்தி எச்சரித்து ஊர்வலத்தினை அனுப்பி வைத்தேன். அப்போது தி.மு.க.தலைவர் பாதுகாப்பாக அறிவாலய வாசலில் நாற்காலி போட்டு உயிர் போனாலும் பரவாயில்லை யாரையும் நுழைய விட மாட்டேன் என்றதினை அன்றைய பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அதன் பின்பு ஒவ்வொரு மாவட்ட செயலாளராக மரத்திலிருந்து பனிக் காலத்தில் உதிரும் இலைகள் போல விலகினர். அதில் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்த லட்மணன் ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டையே வைகோ மீது வைத்து கடிதம் எழுதி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்தார்
அதனை சி.பி.சி.ஐ.டி.யும் விசாரித்தனர். இன்று கலைஞர் இறந்ததிற்குப் பின்பு தி.மு.காவுடன் கூட்டணி வைத்து மகனை எம்.பி.யாக ஆக்கியதும் ஒரு வரலாறு
.
பி.ஜெ.பி கூட்டணி
ஆட்சி மத்தியில் 1998ம் ஆண்டு அமைக்கப் பட்டவுடன் மக்கள் கட்சியும் பாட்டாளி சேர்ந்தது. அதில் ரயில்வே தொழிற்சங்க தலைவர் தலித் ஏழுமலை, சண்முகம் ஆகியோர் மந்திரியாக ப.ம.க சார்பில் மந்திரியாகினர். தலித் ஏழுமலை ப.ம.க தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏழுமலை விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். அதேபோன்று தான் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும், பேராசிரியர் பொன்னுசாமியும்
இணைந்தனர். என் குடும்ப உறுப்பினர் ஆட்சியில் பங்கு வகித்தால் என்னை நடு ரோட்டில் வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று முழங்கிய ராமதாஸ் தனது 36 வயது மகனான அன்புமணியை கேபினெட் சுகாதார மந்திரியாக்கினார். தற்போது அன்புமணி அப்பாவிடமிருந்து பிரிந்தவுடன் கண் கெட்டபின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல அன்புமணியை இளம் வயதில் மந்திரியாக்கியது வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று கூறுகிறார். பழம் திண்ணி பறவைகள் லாபத்தினை நோக்கி படையெடுக்கும் என்று பலாப்பழ ஊர்காரருக்கு தெரியாமல் போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே. அதோடு அவர் நிற்கவில்லை அன்புமணி மீது சி.பி.ஐ பதிந்த ஊழல் வழக்கினை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவருடைய செயற்குழு தீர்மானத்தில் சேர்த்துள்ளார்.
வைகோவினை பொடா சட்டத்தில் ஜெயிலில் அடைத்த பின்னர், அவர் பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது மர நிழலில் வெகு நேரம் வயது மூப்பிலும் காத்துக்கொண்டிருந்த கலைஞர், ஆனால் அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.காவினை கைவிட்டு அ.தி.மு.கவில் இணைந்தார். அது பற்றி ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அரசியலில் யாரும் நிரந்தர நண்பரும், பகைவருமில்லை' என்றார்.
தமிழ் நாட்டில் கஜா புயல், மற்றும் பேரிடர் நேரத்தில் தொண்டு நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை போல அமைப்பில் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயில உதவி செய்யாமல் தனது இளம் வயது சினிமா வருமானத்தில் லாபம் ஈட்டி நடுத்தர வயதானதும் தனது சினிமா நடிப்பினை ரசித்த வீசில் குஞ்சுகளை ஒருங்கிணைத்து அதனை அரசியல் கட்சியாக உருவாக்கி முதல்வர் ஆகலாம் என்று கணக்கு ஒரு நடிகர் திட்டம் போட்டுள்ளார். வெளிநாட்டு ஆடம்பரக்
காரை இறக்குமதி செய்ததிற்காக விதிக்கப் பட்ட வரியினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது விசாரணை செய்தபோது, அந்த நீதிபதி சொன்னது நினைவிற்கு வருகிறது, அது என்னவென்றால், 'சினிமாவில் நடித்து அதில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பார்த்ததினால் பல கோடிகளை ஈட்டிய நடிகருக்கு மக்களுக்கு உபயோகமாகும் ஒரு சில கோடிகளை வாரியாக செலுத்த முடியாதா' என்பது தான். பல முன்னணி நடிகர்கள் எல்லாம் தேர்தலில் தோற்றதும் பின் வாங்கிய பின்னால் தற்போது குழப்பத்தில் உள்ள அரசியல் சூழ் நிலையில் புது கட்சி கொடியினை பறக்க விட்டுள்ளார். அதில் விசிலடிச்சான் குஞ்சுகளும் அப்பாவி மக்களும் 41 பேர்களை பலி வாங்கியது தான் மிச்சம். அதில் என்ன ஆச்சரியம் என்றால் பழம் அ.தி.மு.க விசுவாசி ஒருவரும், பேச்சினை வைத்தே பணம் சம்பாதிக்கும் பேச்சாளரும், பல கட்சிகளில் தாவியரும் சேர்ந்ததுதான் ஆச்சரியம். ஒரு நிருபர் அவரிடம் 'நீங்கள் அந்த நடிகரின் கட்சியினை பற்றி மட்டமாக பேசிவிட்டு இப்போது அதிலே சேர்ந்தது கண்டு மக்கள் காரி துப்ப மாட்டார்களா என்று கேட்டதிற்கு, அவர் சொன்ன பதில் எச்சியினை துண்டால் துடைத்துக் கொள்ள வேண்டுவது தான் என்பது, எருமை மாட்டில் பெய்த மழையாக உங்களுக்குத் தெரியவில்லையா? கிராமத்தில்
ஒரு கதையினை வைத்து பழமொழி சொல்வார்கள். ஒரு
விதவை இரண்டு மகன்களை வீடுகளில் சுத்தம் செய்து,
பாத்திரம் கழுவி இரண்டு மகன்களை வளர்த்து படிக்க வைத்து நல்ல வரனாகப் பார்த்து திருமணம்
செய்து வைத்தாளாம். மகன்கள் தன்னை பாதுகாப்பான் என்று. ஆனால் அவர்கள் மனைவிகளின் சொல்
கேட்டு பிரிந்து சென்று விட்டார்களாம். அதுதான், 'பொண்டாட்டி ஆத்தா பெரியாத்தா பொழைக்க
மதியை சொல்லாதா' என்று. அதுபோல பழந்திண்ணி பறவையாகியதாக உங்களுக்கு தெரியவில்லையா
இன்னொரு
கட்சியான தே.மு.தி.க நடிகரும் அதன் தலைவருமான விஜயகாந்திற்கு பின்பு அவர் துணைவியார்
கட்சியினை நடத்தி வருகிறார். கடந்த தேதலில் அ.இ.அ.தி.மு.க தேர்தலில் கூட்டணி வைக்கும்போது
தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில்
உள்ளார். அவர் தனது கூட்டணி முடிவினை 2026ம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப் படும் என்று
சொல்லியுள்ளார். தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்காவது எம்.பி சீட் வாங்கி விட வேண்டும்
என்று வேகத்தில் உள்ளதால் அவர் கட்சி எப்படி சாயும் என்று சொல்ல முடியாது. அது மதில்
மேல் ஏறிய பூனையாகத் தான் இருக்கும் என்று அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளனர்.
ஆகவே 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்க கட்சித் தாவலும், கூட்டணி கலைவதும் நாம் பார்க்கத்தான் போகிறோம். அதற்குத் தான் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பற்றி 2026ம் ஆண்டு ஜனவரியில் தான் முடிவு செய்வோம் என்று சொல்கின்றன. ஆகவே பறவைகள் பணத்திக்காக படையெடுக்கும்
காட்சியினை நாமும் பார்க்கத்தான் போகிறோம் என்று சொன்னால் சரியா?
No comments:
Post a Comment