Sunday 5 February, 2012

பாரா உசார்-கபட்தார்

முன்பெல்லாம் கிராமங்களின் வீதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையினை நேபாள குர்காக்கள் ஈடுபட்டு வரும்போது இரவு வேளையில் ரோட்டிலும் கடைகளில் உள்ள கல்களிலும் தங்களுடைய கைத்தடியால் தட்டி ஒலி எழுப்பி உசார் என்று சொல்லி வருவதினைப் பார்த்திருப்போம். அதேபோன்று நமது ஊரிலுள்ள பெரியவர்கள் தங்கள் வீட்டிலுள்ள குழைந்தைகளை எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லும்போது ‘கபட்தார்’ என்று சொல்லுவார்கள். அதேபோன்று இன்றைய நவீன உலகில் நமது குழந்தைகள் வழி தவறிப் போகக் கூடாது எச்சரித்து வழி நடத்த வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

சென்னையினை அடுத்த நகரத்தில் இருக்கும் இஸ்லாமியர் நடத்தும் ஒரு கல்வி நிறுவனக் கட்டிடத்துக்குள் அமைந்திருக்கும் ஊழியர் குடியிருப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒரு தாய் கொலையில் மாண்டிருக்கிறார். அதுவும் எதற்காக என்றால் அந்த தாயின் கல்லூரி செல்லும் மகள் செய்த தவறினால் நடந்திருக்கின்றது என்று அறியும் பொது நம் நெஞ்சமெல்லாம் கொதிக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் பெற்றோர் வயித்தை வாயைக் கட்டி பெற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியினைக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையின் முன்னேறும் படிக்கல்லாக் அமைய வேண்டுமே என்பதிற்காக உயர் கல்வியினை கொடுக்கிறார்கள். அந்த பிள்ளைகள் உபயோகத்திற்காக நல்ல உடைகளை பல கடைகள் ஏறி இறங்கி வாங்கிக் கொடுக்கிறார்கள், பலர் வைத்திருக்கிறார்கள் என்று மேசைக் கணினி, மடிக் கணினி வாங்கிக் கொடுக்கிறார்கள், கைச் சிலவிற்கு நாலு காசுவினையும் கொடுத்து, கல்வி நிலையங்களில் பிள்ளைகள் பசியோடு இருக்கக் கூடாது என்று அதிகாலையிலே எழுந்து உணவு தயாரித்து வாசல் வரை வந்து வழியும் அனுப்புகிறார்கள். எதற்காக என்றால் பிள்ளைகளுக்கு அறிவுக்கண்ணை திறக்க வேண்டுமே என்பதால்தான். ஆனால் அப்படிப் பட்ட பிள்ளைகளில் சில சேற்றில் புரளும் பன்றிகளோடு குலாவி வீட்டை அடையும் போது பெற்றோர் மனம் கொதிப்பது இயற்கையே!
26.1.2012 அனைத்து இந்தியருக்கும் குடியுரிமைக் கொடுக்கப் பட்ட குடியரசு தினமாகும். அந்த நாளில் மகளுக்கு உரிமைக் கொடுத்ததினால் தௌசிக் நிஷா என்ற தாய் கொல்லப் பட்டிருக்கிறார். அதற்குக் காரணம் கல்லூரி செல்லும் 17 வயது செல்ல மகள் ஷர்மிதாதான். மகளை கல்லூரி செல்ல வைத்தும், மகளுக்கு அறிவினை அதிகப் படுத்த கணினி வாங்கிக் கொடுத்தும் அழகுப் பார்த்திருக்கிறார் ஷர்மிதாவின் தந்தை கல்லூரி நூலகத்தில் வேலைப் பார்க்கும் ஜியாவுதீன். ஆனால் மகள் ஷர்மிதா இன்டர்நெட்டில் அறிவினைத் தேடாது வருங்கால துணையினைத் தேடியிருக்கிறார். தாய் தௌசிக் நிஷாவினைக் கொன்ற சாந்தக் குமார் என்ற வாலிபர் கைது செய்த பிறகு போலீசில் வாக்கு மூலம் கொடுக்கும்போது, 'நான் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கிறேன். நான் இன்டர்நெட்டில் சாட்டிங் செய்யும்போது ஷர்மிதா பழக்கமானார். அது காதலாக மாறியது. நான் அவர் குடியிருக்கும் கால்லூரி வளாக வீட்டிற்கு சென்று யாரும் வீட்டில் இல்லாத வேளையில் ஷர்மிதாவின் தாயார் தௌசிக் நிஷாவிடம்
தான் காதலிக்கும் ஷர்மிதாவினை திருமணம் செய்து தரவேண்டும் என்று வலியுறித்தினேன்,
அதனை அவர் மறுத்து விட்டார், உடனே ஆத்திரத்தில் கத்தியினை எடுத்து குத்திவிட்டு ஓடிவிட்டேன்'
என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார். மகள் செய்த தப்பிற்கு தாய் உயிரை மாய்க்க வேண்டி உள்ளது பரிதாபமாக
இருக்க வில்லையா?
இது ஒரு நிகழ்ச்சி என என்ன வேண்டாம். இதுபோன்று செல் போனில் மிச்செடு அழைப்பு அனுப்பியும், இன்டர்நெட் சாட்டிங்கிலும் மைனர் பெண்களையும், திருமணமான பெண்களையும் தங்கள் ஆசை வலையில் சிக்க வைத்து மோசம் செய்வது அன்றாட நிகழ்வுகளாகத்தான் உள்ளது. சில செய்திகள் நமக்கு அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. அது என்ன வென்றால் முஸ்லிம் மார்க்கப் பெண்களை ஆசை வழியில் கவர்ந்து, அனுபவித்து விட்டு பின்பு நடுத் தெருவில் விட்டுவிடும் மாற்று மத நிறுவனங்களின் சதியாகக் கூட சொல்லப் படுகிறது.
அதனை நிருபவிக்கும் விதமாக இளையான்குடி சாலையில் ஒரு குடும்பப் பெண்ணுக்கு மிச்செடு அலைப்பு அனுப்பிய
இராமநாத புறத்தினைச் சார்ந்த மாற்று மத திருமணமான நபர் அந்தப் பெண்ணை கவர்ந்து கடத்திச் சென்று விட்டார். செய்தி தெரிந்து சமூக தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் தலையிட்டு போலீசில் புகார் செய்து அந்தப் பெண்ணை நீதிபதி முன் நிறுத்துவதிற்காக கொண்டு வரும்போது ‘இந்தப் படைபோதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா’ என்ற இஸ்லாமிய எழுச்சியினைக் காட்டி மீட்டிருக்கின்றார்கள் என்று பார்க்கும்போது இது போன்ற ஒரு சதி இருக்குமோ என்றும் யோசிக்கத் தோனத்தான் செய்கிறது இல்லையா?
அது இன்று மிகவும் பாதுகாப்பான இஸ்லாமிய கல்வி நிலைய கோட்டைக்குள் கொலையாக தௌசிக் நிஷா கொலை விசயத்தில் நடந்திருக்கிறது. ஆகவே தான் ‘பாரா உசார்’ என்று குரல் கொடுத்தேன்.
இண்டர்நெட் சாட்டிங்கில் மூன்று விதமான கிரிமினல் செயல் நடக்கின்றது:
1) கணினி டிஜிட்டல் சாட்சிகளை பாதுகாக்கும் பெட்டகமாகும். அதில் பதிவு செய்யப் பட்ட தகவல்களை
செல்போன், கையடக்க கணினி மற்றும் பல்வேறு எலக்ரோனிக்ஸ் சாதனங்களில் அதனை பரிமாற்றம் செய்யலாம். ஒருவருடைய ரகசிய பரிமாற்றங்களை உலகிற்கே போட்டுக் காட்டி அவரை அசிங்கப் படுத்தலாம்.
2) கணினியினை சமூக விரோதிகள் ஏமாற்று வேலைக்கும், குழந்தைகளை ஆசைகாட்டி செக்ஸ் மோசம் செய்வதிற்காகவும், போதைப் பொருள் கடத்தல், விற்றல் போன்றவைக்காகவும், ஆள் கடத்தல், பயமுறுத்துதல், ஆட்களை தங்கள் தேவைக்காக இழுத்தடித்தல் போன்ற சமூக விரோத செயல்களுக்காகவும் பயன் படுத்துகின்றனர்.
என்றும் பதினாறு மைனர் சிறுமி தன் கணினியில் நண்பர்கள் தேடியபோது ஒரு நபர் கிடைத்தார். அவர் தன்னை 25 வயது ஆணழகன் என்று விவரித்து அந்த சிறுமியினை தன் வலையில் வீழ்த்தினார் . அதன்பின்பு தான் உங்களுக்குத் தெரியுமே
அவன்தான் தன் கனவு கதா நாயகன் என்று சிறுமி அவன் சொன்னதெற்கெல்லாம் சரி என்று ஆடினாள். ஒருநாள் ஒரு சந்திப்பு இடத்திற்கு வந்த சிறுமிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அவளது கதா நாயகன் 46 வயது மனிதன் என்று. அப்படி மோசம் செய்தது காவல் நிலையம் வரை சென்றதாக உண்மையான செய்தியாக வெளிவந்தது.
3) கணினி வலயத்தினையே நிறுத்தி வைக்கவும், சேதப் படுத்தவும், திருடவும் சமூக விரோதிகள் ஈடுபடுகிறார்கள்.
ஏன் பல நாடுகளும் ஈடுபடுவதாக கூறப் படவில்லையா? உதாரணத்திற்கு அமெரிக்காவின் ரகசியமான ராணுவ தலைமையிடமான பெண்டகானின் கணினி தகவல்களை சீன நாடு திருடுகிறதாக சில மாதங்களுக்கு முன் குற்றம்
சாட்டப் படவில்லையா?
உலகின் கணினி வலைகளை திருடும் முயற்சியினை தடுப்பதிற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐயும், லண்டன் போலுசும் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று கருத்துக்களை கணினி மூலம் பரிமாறிக் கொண்டதை வலை திருடும் கும்பல்(Hackers) சி.டி. வடிவில் வெளியிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலினை வெளியாகி உள்ளதினைப் பார்க்கும்போது கணினி பரிமாற்றங்களை எவ்வளவு ரகசியமாகவும், கண்காணிப்புடனும் செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கணினி கலந்துரையாடல் எல்லையில்லா பலனை அளிக்கின்றது.
அப்படி குற்றனடவடிக்கைகளில் ஈடுபடுவதினைத் தடுத்து குற்றவாளிகளைப் பிடிப்பது கடினமானதாக அமைந்து விடுகிறது. அதற்குக் காரணம்:
1) கணினி வலயத்தில் பொய் விலாசம் பதிவு செய்வது.
2) இலவச மெயில் கணக்கு.
3) ஈமெயில் விலாசத்தினை திருடி மெயில் அனுப்புவது.
4) பெயரினை மறைத்து ஈமெயில் அனுப்புவது.
மைனர் குழந்தைகள் கணினி வளையத்தில் என்ன காரணத்திற்காக விழுகின்றனர்:
1) அவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாட்டில் அளவில்லா மகிழ்ச்சி அடைவது. அதனை பெற்றோரும் ஆதரிப்பது,
'என் குழந்தை கணினியில் மிகவும் கெட்டிக்காரப் பிள்ளை என்ற தவறான மகிழ்ச்சியில் பெருமைப்படுவது.
2) வீட்டில் அன்பைப் பெறமுடியாமல் அடுத்தவர்களின் ஆதரவினை நாடுவது.
3) 'டேட்டிங்' என்ற மெய்மறந்த கானல் நீரான காதல் சந்திப்பினை வெளியே ஏற்படுத்திக் கொள்வது. இதில் சில ஆண் குழந்தைகளுக்கு ஆசை காட்டி ஹோமோ புணர்ச்சியில் ஈடுபடும் கும்பலும் உள்ளது என்று அறியாத மைனர் பையன்களும் அடங்குவர்.
ஆகவே பெற்றோர்கள், உறவினர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை மிகுந்த பராமரிப்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
"காதல் ஒரு கானல் நீர், 'கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு எப்போதும் வரும்', நல்ல குணங்கள் உள்ள மாப்பிளை வரும் வரை காத்திரு என்று காதல் கனவு உலகத்தில் தவழும் பெண்களுக்கு புத்திமதி சொல்ல தவறக்கூடாது.
பெற்றோர்களும் கணினி பற்றிய கல்விகளை சிறிதளவாவது தெரிந்திருப்பது நல்லது. அப்போதுதான் குழந்தைகள்
கணினியில் என்னதான் மணிக் கணக்கில் செய்கின்றனர் என அறிய ஏதுவாகும். அதற்கு சமுதாய இயக்கங்கள்
பெற்றோர்களுக்கு கணினி விழிப்புணர்வு நிகழ்சிகள் செய்வார்களா? ஏனன்றால் கல்வி அறிவிற்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவைதானே!

கடந்த 7.2.2012 தமிழகத்தினை மட்டுமல்ல, மாறாக அகில இந்தியாவினையே உலுக்கிய சம்பவம் ஒன்று சிங்கார சென்னையில் பாரி முனையிலுள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் நடந்தது. ஹிந்தி வகுப்பில் சரியாக கவனம்
செலுத்தாத முகமது இஸ்மாயில் என்ற ஒன்பதாவது படிக்கும் மாணவனை ஹிந்தி ஆசிரியை உமா மகேஸ்வரி கண்டித்ததால் மாணவன் இஸ்மாயில் மன உளைச்சல் அடைந்து கொடூரமாக ஆசிரியைனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.
இஸ்மாயிலைப் பற்றி அறிந்த சிலர் சொல்லும்போது 'இஸ்மாயில் மிகவும் சாந்தமானவன், அமைதியானவன், அவன் ஏன் இவ்வாறு கொடும் செயலைச் செய்தான் என்பது புதிராக இருக்கிறது' என்கின்றனர்.
மண்ணில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே.ஆனால் குற்றங்களில் ஈடுபடுவதிற்கு முக்கிய காராணம் சூழ் நிலையே என்றால் மிகையாகாது. அதிக செல்லம், கையில் தேவைக்கு அதிகமான பணம் புரளுதல்,
பெற்றோர் கண்காணிப்பு குறைதல், தீய நண்பர்களின் நட்பு, சில பொழுது போக்கு சினிமாவில் வரும் வன்முறை காட்சிகளின் பாதிப்பு, பாலின உணர்சியினைத் தூண்டும் ஆபாச புத்தகங்கள், படங்கள் போன்றவை செல்வமுள்ள குழந்தைகளை கெடுக்கின்றன.
ஏழைக் குழந்தைகளைப் பாதிப்பது, வசதி குறைவான வீடு, நெருக்கமான குடியிருப்பு, பொழுது போக்க வசதியான விளையாட்டு திடல்கள் மற்றும் படிப்பதிற்கு வசதியான நூலகங்கள் இல்லாதது போன்றவையாகும். நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் சீக்கிரமே மது, போதைக்கு அடிமையாகுதல், சூதாட்டம், விபசாராம், வன்முறைகளை சீக்கிரமே கற்றுக் கொண்டு சமயம் வரும்போது அரங்கேற்றவும் செய்கிறார்கள்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நன்நடத்தையினை முக்கியமாக போதிக்க வேண்டும்.
மாணவர்கள் பாடத்தில கவனம் செலுத்தவில்லை என்றால் குற்றம் கண்டு பிடிப்பதே முக்கியமான செயலாக கருதாது, அவர்கள் கவனம் செலுத்தாததிற்கு முக்கிய காரணம் என்னவென்று அறிந்து அவர்களை நல்வழிப் படுத்த
மனோதத்துவ ஆசிரியர்களை பள்ளியில் நியமிக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் மனோதத்துவ மருத்துவரின் உதவியினை நாட வேண்டும். எப்படி தரிசு நிலத்தினை பண்படுத்தி விளச்சலினை அதிகரிக்க விவசாய அதிகாரிகளை நடுகிறோமோ அதே போன்று மேல்கூறிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
மேலை நாடுகளில் அரசு நிறுவனங்களும், சிட்டி கவுன்சிலும், தொண்டு நிறுவனமும் ஏழை மக்கள் நெருக்கமாக
வாழும் இடங்களில் 'பாய்ஸ் கிளப்' என்ற சிறார்கள் பொழுது போக்கு தளங்களை ஏற்படுத்தி அவர்களை பள்ளி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் கவனத்தினை திருப்புகிறார்கள். சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் அதுபோன்ற 'பாய்ஸ் கிளப்' இருக்கின்றன. ஆனால் அவை அவ்வளவு சிறப்பாக செயல் படுவதில்லை. காரணம் அதற்கு வழங்கப்படும் நிதி குறைந்த அளவே! அதுபோன்ற பாய்ஸ் கிளப்களை பெரும் நகரம், சிறு நகரங்களில் ஏற்படுத்தி அங்கே மனோவியல் படித்த ஆசிரியர்களின் கண்காணிப்பில் செயல் பட செய்யலாம்.
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் ராணுவ சேவை கட்டாயமாக்கப் படுகிறது. அதுபோன்று சமூக சேவை மாணவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உதாரணத்திற்கு மாணவனை என்.சி.சி, என்.எஸ்.எஸ், டிராபிக் வார்டன், ஸ்கௌட், யூத் கிளப், பர்ஸ்ட் எய்ட் கிளப் போன்ற சேவைகளில் பழக்கலாம். ஒரு மாடு தண்ணீர் குடிக்கவில்லைஎன்றால் அந்த மாட்டினை தாரை வைத்துக் குத்தி ரத்தக் காயமாக்கது, அந்த மாடு தாகத்தினை அறிந்து தண்ணீர் காட்டுகின்றதுபோல படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை மன உளைச்சல் உண்டாக்கினால் அவன் சாதுவானாலும், அது மிரண்டால் காடு கொள்ளதுபோல்தான் செயின்ட் மேரிஸ் பள்ளியில் நடந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
ஆகவே குழந்தைகள் களி மண்ணைப் போன்றவர்கள். குயவர்கள் தான் அந்த களி மண்ணை நன் பண்டங்களாக உருவாக்க வேண்டும். சிறார்களை பெற்றால் மற்றும் போதாது அவர்களை பேணிக் காப்பது பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் பணியென்பது இன்றைய நவீன உலகின் தலையாய கடைமைதானே!

1 comment:

  1. அதிர்ச்சி தரும் தகவலுடன் எச்சரிகையூட்டி அதற்கு வாழும் வழி விளக்கத்தை கொடுத்து சிறந்து விளங்குகின்றது இந்த அருமையான கட்டுரை.இஸ்லாமிய மார்க்கத்தினை முறையாக கற்று அதன்படி வாழ்த்து வந்தால் இம்ம்மாதிரியான ஒழுக்கக் கேடுகள் குறையும்,கல்வி கற்பது நம்மை நல்வழி படுத்திக் கொள்வதற்குத்தான் என்பதனை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். இறைவா! இருலோகத்திலும் நல் வாழ்வினை தந்தருள்வாயாக

    ReplyDelete