Thursday, 6 September, 2012

அழும் பிள்ளையே நீ பால் குடிப்பது எப்போது?


இந்திய அரசாங்கம் இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு முஸ்லிம்களின் சமூக, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலையினை கண்டறிய இரண்டு முஸ்லிம் அல்லாத நீதி அரசர்களான ராஜேந்திரா சச்சார், ரங்கநாத மிஷ்ரா போன்ற அப்பழுக்கற்றவர்கள் தலைமையில் தனித்தனியே கமிசன்களை நியமித்தது. அந்த நீதியரசர்களும் அரசு உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு நன்மை செய்யத் தான் தங்களை நியமித்ததாக எண்ணி பல்வேறு நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் பரிசோதனை செய்து விட்டு இரண்டு கமிசன்களும் தங்கள் அறிக்கையினை சமர்ப்பித்தன
அந்த கமிசன்களின் இரண்டு முக்கிய முடிவுகள் பின் வருமாறு:
1) இந்திய முஸ்லிம்கள் 15 சதவீத மக்கள் அடங்குவர். அவர்களில் பெரும்பாலோர் சமூக, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் தலித் மக்களை விட பின் தங்கியவர்களாக உள்ளனர்.
2) முஸ்லிம் மக்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பினில் வழங்க வேண்டும்.

அந்தப் பரிந்துரைகள் அடங்கியப் பெட்டிகள் எங்கோ தூசித் தட்டப் படாமல் கிடக்கின்றன என்று எண்ணும்போது உங்களுக்கு ஆத்திரம், ஆத்திரமாக வருவது இயற்கையே! ஆனால் 2012 உத்திரப் பிரதேச தேர்தலில் நடுவண்  மைனோரிட்டி அமைச்சர் தன் மனைவிக்கு ஓட்டு சேகரிக்கப் போன 
இடத்தில் தங்கள் கட்சி ஆட்ச்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஒன்பது சதவீத இட ஒதிக்கீடு தருவோம் என்று முழக்கமிட்டு அதன் பின்பு அவருடைய கட்சியினராலேயே வாங்கிக் கட்டிகொண்டார்.
சமூதாய இயக்கங்களும் இட ஒதுக்கீடு கேட்டு கருத்தரங்கு, ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல், பொதுக்கூட்டம் போன்றவைகள் நடத்தி அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக போய் விட்டன.
உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்ச்சியில்  இருந்தபோது தலித் இன மக்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தரும் சட்டம் கொண்டு வந்தார். அந்தச் சட்டம் அலஹாபாத் உயர் நீதி மன்றத்திலும், அதன் பின்பு உச்ச நீது மன்றத்திலும் செல்லாது என்று தள்ளுபடி செய்து விட்டது.
அதே போன்று தான் ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கான தனி இட ஒதிக்கீடு நான்கு சதவீதம் கொண்டு வந்தது. அதுவும் உச்ச நீதி மன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப் பட்டது.
ஆனால் ஆந்திர மாநில முஸ்லிம்களுக்கு ஒதிக்கீடு தள்ளுபடி செய்யப் பட்ட மசோதாவிற்கு உயிர் கொடுக்கும் விதமாக 
அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வராமல் மாயாவதி கொண்டு வந்த தலித் பதவி உயர்வில் இட ஒதிக்கீடு சட்டத்திற்கு மட்டும் உயிர் கொடுக்க சட்டத் திருத்தம் தற்போதைய பாராளு மன்றத்தில் 5.9.2012 அன்று  கொண்டு வந்தது ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பார பட்சம் காட்டும் பம்மாத்து வேலையாக உங்களுக்குத் தெரிய வில்லையா?
தலித் இன மக்களுக்கு ஏற்கனவே 18 சதவீத ஒதிக்கீடு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளது.
தற்போது கேட்பது பதவி உயர்வில் முன்னுரிமை. இது எப்படி இருக்கிறது என்றால் அரை வயிற்றிற்கு  போடுதள்ளாடும்  முஸ்லிம்களை போடும் முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு வயிறு முட்ட  சாப்பிட்டு விட்டு ஏப்பம் போடுகிறவனுக்கு இறக்கப் பட்டு அபரிமிதமான சுவை மிகு உணவினை அள்ளி திணிப்பது போன்ற செயல் என்று உங்களுக்கு நினைக்கத் தோணவில்லையா
அது என்ன பதவி உயர்வில் 22.5 சதவீத ஒதுக்கீடு என்று உங்களுக்குக் கேட்கத் தோணும்
உதாரணத்திற்கு மூன்று ..எஸ் அதிகாரிகள் 1976 ஆம் வருடத்தில் பதவியில் சேர்ந்துள்ளனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு அதிகாரி தலித் இன ஓடிக்கீடில் தேர்வாகி இருந்து ரேங் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார் என்றால், இரண்டு செயலாளர் பதவி காலியாக இருக்கும்போது ஒருவர் பொது ஓதிகீடிலும், மற்றுமொருவர் தலித் இனத்தவர் ரேங்கில் சூனியவராக இருந்தாலும் அவருக்குத் தான் வழங்கப் படும். அப்போது பொது ஓதிக்கீடில் வந்த சீனியர் அதிகாரி மனம் புழுங்குவது இயற்கைதானே! ஆகவே தான் தற்போது பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருக்கும் பதவி உயர்வில் தலித்துகளுக்கு முன்னுரிமை மசோதா அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று முழக்கமிட்டுள்ளார்.
ஆமாம் தற்போது இந்த மசோதாவிற்கு அப்படி என்ன இப்போது முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம்.
2 ஜி, காமன் வெல்த் விளையாட்டு, நிலக்கரி ஒதிக்கீடு போன்ற பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளால் தலை நிமுர  இருக்கும் முடியாமல் அரசினை வாசிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகையும் நமது பத்திரிக்கைகளும் வெளிச்சம் போட்டு காட்டுவதினை மறைக்கவே இந்த மசோதா கொண்டு வந்திருப்பதாக நாடு நிலையாளர்கள் சொல்லவில்லையா?
நமது மக்களுக்கும் தலித் இன மக்களுக்கு சலுகையினை காட்டுவதினை எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால் நமது ஆதங்கமெல்லாம் முஸ்லிம்களுக்கும் கமிசன்களால் கோடிட்டு காட்டிய இட ஓதிகீடுக்கு ஏன் அக்கறை காட்ட வில்லை அரசு என்பது தான் என்றால் சரிதானே!
5.9.2012 மசோதா தாக்கல் செய்த பொது சமாஜ் வாடி கட்சி  மற்றும் பி.எஸ்.பி. கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு கூட வந்து விட்டது. ஆனால் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு தந்து விட்டு அதன் பின்பு தலித்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தாருங்கள் என்று குரல் எழுப்ப வில்லையே என்று உங்களுக்கெல்லாம் மன 
வருத்தம் இருப்பது நியாயமே!
நான் சென்னைப் புதுக் கல்லூரி மாணவனாக 1967 ஆம் வருடம் படித்த பொது அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது ஆற்றிய உரையில், 'தான் மக்களுக்கு உதவி செய்ய முடிய வில்லையென்றால் தோளில் இருக்கும் துண்டினை உதறி விட்டு வெளியே வந்து மக்களுக்காக பணியாற்றுவேன்' என்று குரல் கொடுத்தார். ஆகவே தான் குறைந்த நாட்கள் ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப் படுகிறார். ஆனார் நம்மிடையே இருக்கும் உறுப்பினர்களும், தலைவர்களும்  தங்கடைய பதவி நிலையானது என்று கோட்டு, சூட்டு, சபாரி செட், அணிந்து கொண்டும், சொகுசு கார்களில் பவனி வந்தும் கொண்டு இருக்கிறார்களே தவிர சமுதாய மக்களுக்காக ஏன் இந்தத் தருணத்தில் குரல் எழுப்ப தயங்குகிறார்கள் என்று உங்களுக்கு கேட்கத்தான் தோன்றும்.
நான் சென்னையில் புதுக் கல்லூரியில் இயங்கும் மியாசி என்ற தென்னக முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் அமைப்பில்
செயற்க் குழு உறுப்பினராக இருகின்றேன். 12.4.2012 அன்று நடந்த செயற்க் குழுக் கூட்டத்தில் நான் கொண்டு வந்த ..எஸ் மற்றும் சிவில் செர்விசெஸ் பயிற்சி மையம் புதுக் கல்லூரி வளாகத்தில் அமைக்கும் தீர்மானம் ஒரு மனதாக 
நிறைவேற்றப் பட்டது. அதனை விரும்பாத சிலர் அதற்கான குழுவினை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே நான் அதன் தலைவர் அவர்களுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு, 'நீங்கள் அடுத்தக் கூட்டத்தில் குழு அமைத்து மையம் செயல் பட வழி வகுக்க வில்லை என்றால் நான் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதுடன் அணைத்து முஸ்லிம் இயக்கங்களுடன் எதிர் நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்றேன்'. உடனே தலைவரும் வருகிற 13.9.2012 செயற்குழுக் கூட்டத்தில் ஒரு குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப் படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதனை நான் ஏன் இங்கு கோடிற்று காட்டுகிறேநென்றால் சமுதாயத் தலைவர்களும், இயக்க இளைஞர்களும் நமது இட ஒதிக்கீடு நோக்கி ஒரு மித்தக் குரல் எழுப்ப வில்லை என்றால் பால் குடிக்காது வாடும் பிஞ்சு சவளைக் குழந்தைகளாகி விடுவோம் என்றால் சரியாகுமா
2 comments:

 1. முஸ்லிம்கள் பின் தங்கி இருப்பது இஸ்லாமினால்தான். இதற்காக அவர்கள் வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனால் அது தான் முஸ்லிம்களின் வாடிக்கை. இந்தியாவில் மட்டுமல்ல எங்கெல்லாம் முஸ்லிம்கள் மைனாரிட்டிகளாக உள்ளார்களோ அங்கெல்லாம் இதே புலம்பல் தான். சகிக்க முடியவில்லை.

  முஸ்லிம் மாணவர்கள் தினமும் மணிக்கணக்காக பாடங்களைப் படிக்காமல் குரானை ஓதுவது, கைகால்களை அலம்புவது, காதுகளை துடைப்பது, மூக்கை துடைப்பது என்று நேரத்தை வீணடிக்க வில்லையா ,

  முஸ்லிம் பெரியவர்களும் பொருள் ஈட்டவேண்டிய நேரத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே செய்து கொண்டிருப்பது. எவ்வளவு முட்டாள் தனம். உலகில் வேறு மக்கள் யாரேனும் இப்படி செய்கிறார்களா?

  வேலை நேரத்தில் தான் தொழுவேன் என்றால் யார் தான் இவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்?

  இது போதாது என்று ஒரு மாதம் முழுவதும் நோன்பு. பகலில் சோம்பித் திரிவது. (ஆனால் இரவில் மூன்று வேளை மூக்கு முட்ட தின்பது. அலாரம் வைத்து எழுந்து வயிறு நிறைத்துக் கொண்டு நோன்பு ஆரம்பிப்பது) இவர்களுக்கு யார் வேளை கொடுப்பார்கள்?

  மற்ற மதத்தினரை நஜீஸ் (தீட்டானவர்கள் ) என்று எண்ணி அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவில்லையா?,

  பெரும்பாலான முஸ்லிம் பெண்களை அவர்கள் ஏதேனும் வேலை செய்வதற்கோ தொழில் செய்வதற்கோ முடியாதவாறு பர்தாவிலும் உள்வீட்டிலும் ஒளித்து வைக்க வில்லையா?

  நீங்கள் எப்படி முன்னேற முடியும்?

  ஒருவேளை நூறு சதம் ஒதுக்கீடு கொடுத்தால் முன்னேறி விடுவீர்களா? இஸ்லாமிய நாடுகளில் உள்ளதைப் போல?

  ReplyDelete
 2. //தலித் இன மக்களுக்கு ஏற்கனவே 18 சதவீத ஒதிக்கீடுகல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளது.
  தற்போது கேட்பது பதவி உயர்வில் முன்னுரிமை. இதுஎப்படி இருக்கிறது என்றால் அரை வயிற்றிற்கு போடுதள்ளாடும் முஸ்லிம்களை போடும்முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ஏப்பம் போடுகிறவனுக்கு இறக்கப்பட்டு அபரிமிதமான சுவை மிகு உணவினை அள்ளிதிணிப்பது போன்ற செயல்//

  //இரண்டுசெயலாளர் பதவி காலியாக இருக்கும்போது ஒருவர்பொது ஓதிகீடிலும், மற்றுமொருவர் தலித் இனத்தவர்ரேங்கில் சூனியவராக இருந்தாலும் அவருக்குத் தான்வழங்கப் படும். அப்போது பொது ஓதிக்கீடில் வந்தசீனியர் அதிகாரி மனம் புழுங்குவது இயற்கைதானே!//

  பல தலித் மக்கள் மற்றும் தலித் தலைவர்கள், இஸ்லாமியர்களை தங்கள் தோழர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உங்களின் இந்த கருத்துக்களைப் பார்க்க நேர்ந்தால் ரத்தக் கண்ணீர் தான் விடுவார்கள்.

  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாமல் தலித் மக்கள் பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுக்கப் படுவது நேர்மையான முறையில் நடந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இந்தியாவில் மிகவும் ஒடுக்கப் பட்ட மற்றும் படுபவர்கள் தலித் மக்கள் தான். அவர்களின் நீதியான கோரிக்கையை இப்படி கொச்சைப் படுத்தி இருக்கிறீர்கள்.

  ReplyDelete