Wednesday, 17 June 2026

ஹஜ்ஜில் முஸ்லிம் சகோதர, சமத்துவம் வியப்பு!

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்()

அமெரிக்காவில் கறுப்பின ஆப்பிரிக்கர்கள் அதிகம் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் சம உரிமைகளுடன் வாழ்ந்தார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர்கள் வாழ்க்கை மற்ற அமெரிக்கர்களோடு ஒப்பிட்டும், ஆனால் இஸ்லாமியர்கள் மனிதர்களில் எந்த வேற்றுமை இல்லாமல் புனித ஹஜ் ஹஜ்ஜினை நிறைவேற்றுவார்கள் என்று அமரிக்காவின் சிவில் உரிமை பாதுகாப்புத் தலைவர் டாக்டர் மால்கம் எக்ஸ் படம் பிடித்து தனது அமெரிக்க மனைவிக்கு ஆகஸ்ட் 15, 1964ல் கடிதம் எழுதியுள்ளார். ஏன் அவர் சௌதி அராபியா ஜெத்தாவிலிருந்து எழுதியுள்ளார் என்பதும், அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் எப்படி அங்கே குடியேறினார்கள் என்றும் உங்களுக்கு விளக்க இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

               அமெரிக்க கண்டத்தினை கண்டு பிடித்தது பற்றி பல்வேறு செய்திகள் இருந்தாலும் 1492ம் ஆண்டு இத்தாலியினைச் சார்ந்த கொலம்பஸ் ஸ்பெயின் இளவரசர் பெர்டினாட் உதவியுடன் கண்டு பிடித்ததே ஆதாரமாக உள்ளது. ஐரோப்பிய வல்லரசுகள் தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் பயணம் செய்து கண்டு பிடித்தது தான் ஆபிரிக்க கண்டமாகும். ஸ்பெயின் வர்த்தகர்களால் பிடிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகளை ஆங்கிலேய தனியார் கப்பல் ஊழியர்களால் கடத்தப் பட்டு ஆங்கிலேய அமெரிக்க குடியேற்ற வாசிகள் வசதிக்கு அமரிக்க ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஓல்ட் பிண்ட கம்போர்ட் துறைமுகத்தில் 25, ஆகஸ்ட், 1619ல் இறக்கப் பட்டும், அதன் பின்னர் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து வர்தகர்களால் பிடிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள் அமெரிக்காவில் உள்ள காலணிகளை விற்கப் பட்டனர்.

          அப்படி விற்கப் பட்ட அடிமைகளை அமெரிக்க காலணிகள் புகையிலை, கோதுமை, நெல், கரும்பு, இலவம் பஞ்சு, கொக்கோ விளையும் நிலங்களில் தங்களது விவசாயத்தினை பெருக்க உபயோகித்தனர். அது மட்டுமல்லாமல் பாலங்கள், சாலைகள், அணைகள் கட்டுவதற்கும் பயன் படுத்தினர். நான் அமெரிக்கா 2010ம் ஆண்டு சென்ற போது லாஸ் வேகா அருகில் உள்ள கொலோராடோ நதி அணைக்கட்டு, அந்த நதி மீது 890 அடி உயரத்திற்கு கட்டப் பட்ட பாலத்தினைக் கண்டேன். அந்த பாலத்தினை கட்ட ஈடுபட்ட பல ஆபிரிக்க தொழிலாளர்கள் இறந்ததாக கூறப் படுகிறது. அது மட்டுமல்லாமல் அவர்களை ஆடு மாடுகளை மேய்ப்பதிற்கும், பெண்களை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்கும் பயன் படுத்தினர். சாதாரண மனிதனுக்குத் தேவையான சாதாரண தேவைகள் கூட அவர்களுக்கு மறுக்கப் பட்டதால் எலிஜா முகமது என்ற கறுப்பின தலைவர் 'நேசன் ஆப் இஸ்லாம்' என்ற இயக்கத்தினை ஆரம்பித்து பல ஆபிரிக்கர்களை இஸ்லாமிய சிந்தனைக்கு மாற்றினார்.  அப்படி மாற்றப் பட்டவர் தான் மால்கம் எக்ஸ் ஆகும். அவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு வருமுன் சிறு வயதில் போதைப்பொருள், சூதாட்டம், வழிப்பறி, மாமா வேளைகளில் ஈடுபட்டு முரட்டுத் தலைவராக வலம் வந்தார். அப்படிப் பட்ட நபரை இஸ்லாமிய இயக்கத்திற்கு 1948ம் ஆண்டு இழுத்த பெருமை எலிஜா முகமது அவர்களைச் சாரும். அதன் பின்பு தீவிர இஸ்லாமிய பற்றுள்ள பணிவான மார்க்க வாதியாக மாறியதால் தான் , மால்கம் எக்ஸ் மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக செல்லும்போது அங்குள்ள வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஆச்சரியப் பட்டு தனது இல்லத்தரசிக்கு ஜெத்தாவிலிருந்து கடிதம் 1964ல் எழுதியுள்ளார். எலிஜா முகம்மதுவின் 'Nation of Islaam' போதித்த மூன்று தாரகை மந்திரங்கள் என்னவென்றால்:

1) கறுப்பின மக்கள் தான் ஆதி மக்கள்

2) வெறுக்கப் பட வேண்டிய மக்கள் வெள்ளை நிறத்தவர்

3) வெள்ளை நிற மக்கள் ஒழிவது காலத்தின் கட்டாயம்.

 எலிஜா முகமது அவர்களுக்குப் பின்பு தீவிர இஸ்லாமிய பக்தரான மால்கம் எக்ஸ் அவர்களை 1965ம் ஆண்டு கொலை செய்தார்கள். காலங்கள் மாறினாலும் இன வெறி மறையாத வெள்ளை இனத்தவர் அமெரிக்காவில் நுழைய ஜுனே , 2025முதல் ஆப்பிரிக்க நாடான சாட், காங்கோ குடியரசு, கினியா, எரிற்றியா, சோமாலியா, சூடான் போன்றவற்வர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது ஆச்சரியமும், அநியாயமுமல்லவா? 2026இந்த ஆண்டில் அமெரிக்காவில் நடைபெறும் உலக கால் பந்தாட்ட விளையாட்டுகளில் அகில உலக விளையாட்டு சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்ட கால் பந்தாட்ட நடுவர் உமர் அதான் சோமாலிய நாட்டவராக இருந்ததால் அவரை உடனே திருப்பி அவருடைய நாட்டிற்கே அனுப்பியது மிகவும் அப்பட்டமான நிறைவேறி அல்லவா?

இந்த 2026 ஆம் ஆண்டு சோமாலிய குடியரசின் ஜனாதிபதி ஹசன் முகமது ஷைக் அவர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட போது முக்கிய பிரமுகர்கள் போர்வையில் இல்லாது, எந்த வித முன்னறிவிப்பு இல்லாமல் சாதாரண ஹாஜிகளோடு கலந்து கொண்டு முஸ்தலிபா மைதானத்தில் மேலே போர்த்தியிருந்த இக்ராம் துண்டினை தரையில் விரித்து படுத்திருந்தது படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட நாட்டின் மக்களையும் அமெரிக்காவில் தீவிரவாதிகள் போல வருவதினையும் தடை செய்யப் பட்டுள்ளது எப்படிப்பட்ட நிறவெறி என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.  இஸ்லாமிய மார்க்கம் சாந்தியும், சமாதானமும் கடைப் பிடிக்கும் நாடு என்றும், அவர்கள் வன்முறையாளர்களில்லை என்று அவர்களுக்கு எங்கே புரிய போகிறது. வன் முறை, போர்கள் இஸ்லாமியர் மீது ஏவப் பட்டால் அதனை கைகட்டி பார்த்துக் கொண்டா இருக்க வேண்டும்?

               இந்தியாவில் முன்பு மனுசமிரித்தி படி மக்கள் ஜாதிகள் அடிப்படையில் நடந்து வந்தது. ஒரு காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானம் சாணார், நாடார் பெண்மணிகள் மேல் சட்டை அணிவதினையும், மார்புக்கென்ற வரியும் விதித்தார்கள். அதன் பின்பு நாடார் மற்றும் சாணார்கள் கிருத்துவ மதத்திற்கு மாறியதால் அதனை விலக்கப் பட்டது. தாழ்த்தப் பட்ட மக்கள் மற்ற சமுதாயத்திலிருந்து தனிமைப் படுத்தப் பட்டனர். அவர்கள் சொத்துரிமை இல்லை, மேல் ஜாதியினர் நிலங்களில் வேலைபார்த்து அவர்கள் கொடுக்கும் பழைய சாதத்தினை சாப்பிட வேண்டும். காலில் செருப்பு அணியக்கூடாது, மேலில் துண்டு போடக்கூடாது, மேல் ஜாதியினர் தெருக்களில் கீழ் ஜாதியினர் வரக்கூடாது, பொது மயானத்தில் கீழ் ஜாதியினர் இறந்தால் அடக்கம் செய்ய தனி சுடுகாடு, பழங்குடியினர் மனித மலங்கள் எடுக்கப் பயன் படுத்த வேண்டும், கீழ் ஜாதியினர் மேல் ஜாதி குருமார்களை சுமக்க வேண்டும், அவர்களுக்கென்ற தனி காலணிகளும், வட சென்னை ஸ்டாண்லி ,மருத்துவ மனை எதிரில் உள்ள ஆடு தொட்டி போல இருந்ததினை அதி திராவிட மற்றும் பட்டியலின மக்கள் படித்து உயர் வேளையில் அமர்ந்ததால் அவைகளெல்லாம் தலை கீழாக மாறி எல்லா சமுதாயமும் வேற்றுமையின்றி சகோதரர்களாக, வாழ இந்திய தலைவர்கள் படாத பாடுபட்டனர் என்பது மறுக்கப் படாது. இருந்தாலும் இன்றும் அதுபோன்ற பட்டியலின மக்கள் வன் கொடுமைகளுக்கும் ஆளாவது அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கின்றது வேதனையாக இல்லையா?

அமெரிக்காவில் 1964ம் ஆண்டு சிவில் உரிமை சட்டம் இயற்றப் பட்டு நிறத்தால், இனத்தால், பாலினத்தால் நாட்டின் பெயரால் உள்ள வேறுபாடுகள் ஒழித்துக் கட்டப் பட்டன. அதேபோன்று ஆங்கிலேயர் இந்திய நாட்டினை விட்டு வெளியேறிய பின்பு டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைக்கப் பட்ட அரசியலமைப்பு சபை 1948ம் ஆண்டு பட்டியலின மக்கள் வாழ்க்கையில் சம உரிமை பெற இட ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டத்தினை மறுக்க முடியாது.

 

 

ஒருவன் எப்போது இஸ்லாத்தினை ஏற்றானோ அப்போதே அவன் சகோதரனாகி சம அந்தஸ்து பெறுகிறான். அதற்கு உதாரமாக ஹஸ்ரத் பிலால் என்ற கறுப்பினத்திவரை தாயிப் நகரில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு சொல்ல ரசூலுல்லாஹ் அழைத்தார்கள், அந்த இடத்தினை நான் 2017ம் ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றபோது காண முடிந்தது.  நான் அமெரிக்க தலை நகர் வாஷிங்க்டன் 2008ம் ஆண்டு சென்றபோது ஜும்மா தொழுகைக்கு அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன். அங்கே குத்பா பிரசங்கம் செய்தது ஒரு கறுப்பின முஸ்லிம் தான்.நாம் உலகில் இஸ்லாமிய பிரிவுகளான சுன்னி, ஷியா, ஷாபி, பல்வேறு அமைப்புகளாக பிரிந்துள்ளதால், இஸ்லாமிய நாடுகளான இரான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா நாடுகளை மேற்கத்திய நாடுகள் கில்லிக்கீரையாக வேட்டையாடுகின்றனர். இஸ்லாமிய மார்க்கம் வன்முறையினை ஒரு போதும் ஆதரித்ததில்லை, ஆனால் வலிய வந்த வன் முறைகளை தடுக்கவில்லையென்றால் கோழைகள் என்று தானே அழைக்கப் படும்.

தமிழ் நாட்டில் இஸ்லாமியர் போர்வையில் பல அமைப்புகள் உள்ளன. அவைகள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து செயல் படுவதால் வலிமை இழந்து கேலிக்கூத்தாக சமுதாயத்தினை ஆக்குகின்றனர். சிலர் லெட்டர் பேடு கட்சிகள் நடத்துகின்றனர். ஆனால் தேர்தல் நேரங்களில் நாலு காசு சம்பாதிக்கும் நோக்குடன் செயல் படுகிறார்கள் என்று சொல்லப் படுவது உண்மையா அல்லது பொய்யா என்ற கேள்விக்கான பதிலை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.

 

No comments:

Post a Comment