Saturday, 20 September 2025

உலமாக்களுக்கு உயர் கல்வி தேவையா?

 

(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்()

இஸ்லாமிய மார்க்க அறிவுரைகள் படி உலமாக்கள் அறிவுரையாளர்கள் தான் என்று சொல்கிறது. ஆனால் அறிவு எங்கிருந்து வரும், எப்படி நீரே இல்லாத இடத்தில் தோண்டத் தோண்ட நீர் வருகிறதோ அதே போன்றுதான் அறிவும் வளரும். மதரஸாக்களில் ஓதி பட்டம் பெற்றால் போதும் என்ற மன நிலை யாருக்கும் வரக் கூடாது. மாறாக இன்னும் அறிவினைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், உந்துதலும் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை எழுதுகிறேன். அவ்வாறு இல்லாதிதினால் சில இயக்கத் தோழர்கள் இளைஞர்களை தவறான வழி கெடுக்க நேரிடுமல்லவா. இன்றைய காலக் கட்டத்தில் இளைஞர்கள் தங்களுடைய கேள்விகளுக்கு விளக்கம் பெற பல்வேறு வழிகள் உள்ளன. இருந்தாலும் ஒரு நாளைக்கு  5 வேலையும் இமாம்களை நேரில் பார்க்கும் அவர்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தால் அவர்கள் திசை மாற்றமாட்டார்களல்லவா? ரசூலுல்லாஹ்சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவுஎன்றார்கள், ஏன் என்றால் அந்தக் காலக் கட்டத்தில் வாகன வசதியில்லாமல் கரடு-முரடான பாதைகள், காடுகள் மற்றும் ஆறுகள் கடந்து கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்றது மக்கள் அறிவினை சேர்த்துஅய்யாமே ஜகிளியா’ என்ற இருண்ட காலத்தினை அடித்து விரட்டி கல்வி பெற்று அறிவாளிகளாக தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தால் என்றால் மறுக்க முடியுமா?

               பள்ளியில் தொழ ஹாபிஸ் மற்றும் ஆலிம்கள் வேண்டும். ஹாபிஸ்கள் 3 வருட மனனம் செய்யும் தகுதியும், ஆலிம்கள் 7 வருடம் அரபிக் மற்றும் கதிஸ்களை பயின்றுக்க வேண்டும். ஆலிம்கள் தமிழில் இலக்கணம் மற்றும் இலக்கியம் இருப்பது போல அராபிக்கில் இலக்கணம் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் +வேலை யிலிருக்கும் இமாம்களின் நிலை பரிதாபமானது. வருமானம் இல்லாமல் இருக்கின்ற பள்ளிகளில் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரமும், வருமானம் உள்ள பள்ளிகளில் வருமானம் ரூபாய் 15ஆயிரத்திலிருந்து ரூபாய் 20 ஆயிரம் வரும். சில பள்ளிகளில் இமாம்களுக்கு குடும்பமில்லா இருப்பிடமும், வருமானம் உள்ள பள்ளிகளில் குடும்ப வாடகையும், அல்லது இருக்கையும் கொடுக்கின்றார்கள். பள்ளிகளில் வக்ப் போர்ட் நிர்வாகம் செய்யும் பள்ளிகளும், வக்ப் போர்டில் சேரா நிர்வாகமும் உள்ளன. வக்ப் போர்ட் நிர்வாகம் அமைந்தால் வருமானத்தில் 7 சதவீதம் வக்ப் போர்டுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது. தற்போது தூய்மைப் பணியாளர்களுக்கே சம்பளம் ரூபாய் 10000/ மாதாந்தோறும் கொடுக்கும்போது இமாம்களில் நிலையினை சற்று யோசித்துப் பாருங்கள். இமாம்கள் மற்ற தொழிலுக்கும் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு. ஆசிரியர்கள் கூட பள்ளி முடிந்ததும் பல்வேறு தொழில்கள் செய்கின்றனர். ஆனால் இமாம்கள் அவ்வாறு தொழில் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. சென்னை மண்ணடியில் ஒரு இமாம் இரும்பு வியாபாரிகள் சங்க உறுப்பினராக மனு செய்ததினை அறிந்து அவர் நீக்கப் பட்டதும் உண்டு.

               இமாம்கள் குரல் வளமும், சொல் ஆழமும் இருக்க முடியாதவர்கள் ஒரு பள்ளியில் நிரந்தரமாக பணியாற்ற முடியாது. குறைந்த வருமானமும், அதிகப் படியான தினசரி செலவுகளும் உள்ள தற்போது இமாம்கள் தங்களுடைய கல்வித் திறனை மேம்படுத்த வேண்டும். இந்தியாவில் 156 அராபிக் கல்லூரிகளும், 44 பல்கலைக் கழகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் 10 அரபிக் கல்லூரியும், ஆராய்ச்சி பட்டம் கொடுக்கும் மதராஸ் பல்கலைக் கழகம், புதுக் கல்லூரி, பி.எஸ்.. வண்டலுர் என்ஜினீரிங் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஆகும். இது வரை ஆலிம்களில் ஆராய்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் 34 பேர்கள் ஆவர்.

               யுனஸ்கோ கின்னஸ் பதிவின் படி உலகில் முதன் முதல் பல்கலைக் கழகம் ஆப்பிரிக்கா மொரோக்கோ நாட்டில் கி.பி.857-859ல் நிறுவப் பட்டதாக சொல்லுகிறது. அது இஸ்லாமியர்களின் கோல்டன் காலமாக இருந்ததாம்.  அது இரண்டாம் உலகப் போர் வரை இருந்துள்ளது. அங்கே மார்க்க சம்பந்தமான விளக்கம் கொடுக்கப் பட்டதாம். அதற்கு அடுத்தப் படியாக எகிப்திய நாட்டின் தலை நகரான கெய்ரோவில் அல் அசார், இராக் நாட்டின் பாக்தாத்தில் அல் முசுடான், டூனிசியாவிலுள்ள எஸ்ஸிடோனா, மாலி நாட்டின் திம்புக்கில், உத்திரபிரதேசம் தியோபந்தில் உள்ள தாருல் இஸ்லாம் பல்கலைக் கழகங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாகும்..

               அவ்வாறு உலகில் முதன் முதலில் பல்கலைக் கழகம் ஆரம்பித்த இஸ்லாமியர் தமிழ் நாட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் 34 பேர்களே என்றால் சிந்திக்கத்தானே வேண்டும். ரஸூலல்லா காலங்களில் போர் குற்றவாளிகளை விடுதலை செய்ய அவர்களில் கல்வி கற்ற சிலரை அங்குள்ள மதினாவாசிகளுக்கு கற்பிக்கச் சொல்லி விடுதலையும் செய்யப் பட்டது என்று சொல்லும்போது உலமாக்கள் ஏன் ஆராய்ச்சி படிப்பினை தொடர்ந்து உயர் பதவியினை அடையக் கூடாது.

               2025 வருடம் யு.ஜி.சி பல்கலை கழக சட்டம் 1956ன் படி கல்லூரியிலோ அல்லது பல்கலைகழகத்திலோத்திலோ விரிவுரையாளர்களாக பணியாற்ற உலமாக்கள் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருந்தாலும், நெட் என்ற தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் தகுதியானவர்கள். அல்லது மாநிலத்தில் நடக்கும் செட் அல்லது ஸ்லேட் என்ற தேர்வில் வெற்றி பெற்றாலும் தகுதியானவர்கள். அப்படி தகுதியானவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 65,000 லிருந்து 2,50,000/ வரை கிடைக்கும். வயது முதிர்ச்சியடைந்தால் பணி ஓய்வு ஊதியம் கிடைக்கும். அதனை விட்டுவிட்டு உலமாவே இருக்க ஆசைப் படலாமா? வேலையும் நிரந்திரமானதா? விலைவாசி விண்ணை பிளக்கும் இந்த காலத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யக் கூடாதா?

               தனது குழந்தைகள் சிறந்த கல்வி பெற இந்தக் காலத்தில் மாதம் ரூபாய்.10000-15000/ ஆயிரம் சம்பளம் போதுமா? ஒரு தடவை நான் காலை நடப் பயிற்சிக்கு சென்றபோது மண்ணடி பகுதியில் உள்ள பள்ளியில் இமாமாக இருப்பவர் மிதி வண்டியில் வந்து கொண்டு இருந்தார். அவரிடம் நலம் விசாரித்து விட்டு 'எங்கே போயிட்டு வரீங்க என்று கேட்டேன். அதற்கு என் பையனை இந்தப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியரை சந்திக்க சென்றேன், அவர் நீங்கள் எவ்வளவு நன்கொடை கொடுப்பீர்கள் என்றார். தான் யார் என்று சொல்லியும் மசியவில்லை என்று சோர்வோடு சொன்னார். இது எதனைக் காட்டுகிறது என்றால் தற்போதைய வருமானம் உலமாக்களுக்கு போதவில்லை தானே?

               இது இப்படி இருக்க பிஎச்.டி பட்டம் பெற்ற ஒரு ஆலிம் முஸ்லிம்கள் நடத்தும் கல்லூரியில் இலகுவாக பணியில் சேர முடிகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் உள்ள  முஸ்லிம்கள் நடத்தும் கல்லூரிக்கு அரபிக் விரிவுரையாளர் தேர்விற்காக சென்னையில் பணி புரியும் இமாம் பிஎச்.டி பட்டம் வாங்கியவர் நேர்முக ஆய்வில் உங்களால் கல்லூரிக்கு டொனேஷன் எவ்வளவு கொடுக்க முடியும் என்றார்களாம், அப்போது என்னால் ரூபாய் ஐந்து லட்சம் தரலாம் என்றாராம். அதற்கு இன்டெர்வியூ நடத்தியவர் இன்னொருவர் ரூபாய் 35 லட்சம் தர தயாராக உள்ளார் என்றாரும், அந்த இமாமிற்கு அதிர்ச்சியாம். அப்போது வெளியே  வந்து அங்கே காத்திருந்த மற்றொரு நேர்முக தேர்விற்கு வந்தவரிடம் வினவினாராம், அவரும் சரிதான் என்று சொன்னாராம். ஏனென்றால் அரசு மானியம் பெரும் கல்லூரிக்கு யு.ஜி.சி. சம்பளம் மாதம் தோறும் கொடுப்பதால் அவர்கள் அவ்வாறு கேட்டார்களாம். இந்த வேதைனையான சம்பவத்தினை என்னிடம் அந்த இமாம் பகிர்ந்து கொண்டார். முஸ்லிம்கள் நடத்தும் கல்லூரிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டால் தான் இமாம்கள், ஆலிம்கள் மேற்படிப்பினை தொடர்வார்கள் என்றால் சந்தேகமில்லையல்லவா?

               1993ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய இமாம்கள் பேரவை தொடுத்த வழக்கு ஒன்றில் இமாம்களுக்கு மாநில வக்ப் போர்டுகளே சம்பளம் கொடுக்க உத்தரவு செய்தது, ஏனென்றால் மாநில அரசுகள் இமாம்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு எந்த விதமான கொள்கையும் வகுக்கவில்லை. அதேபோன்று தான் கோவில்களின் பூசாரிகளுக்கும் சம்பளம் நிர்ணயிக்கவில்லை.

               அமெரிக்காவில் பணியாற்றும் இமாம்களுக்கு வருடத்திற்கு 62,882/ டாலர்கள் ஆகும். மாதம் 5240 டாலர்கள் ஆகும். அது இந்திய ரூபாயில் 4,45,000/ இந்தியாவில் ஒரு குடிமகன் மாதாந்திர சராசரி வருமானம் ரூபாய் 15,000-20000/ ஆகும். புது டெல்லி இமாம்களுக்கு மாதம் ரூபாய் 18,000/ அரவிந் கெஜராவால் அரசு நிர்ணயம் செய்தது. கோவில் பூசாரிகளுக்கு ரூபாய் 8000/ நிர்ணயம் செய்தது.

               சென்னையில் உள்ள மசூதிகளில் இமாம்கள் சம்பளமும் மற்ற சலுகைகளும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. மண்ணடி பகுதியில் உள்ள ஒரு பள்ளி இமாம் சிங்கப்பூர் சென்று பணியாற்றி வந்தவர். அவரிடம் சிங்கப்பூரில் எவ்வளவு சம்பளங்கள் கொடுத்தார்கள் என்றேன். அவர் மாதம் 2000 டாலர் என்றார். ஒரு டாலர் மதிப்பு ரூபாய் 55/ அப்போது. சென்னையில் சம்பளம் ரூபாய் 40000/ ஆயிரம் என்றார். அவர் பாக்கவி ஆவார். மற்றொரு பள்ளியின் இமாம் ரூபாய் 15000/ என்றார். அவர் உலமா ஆவார். இமாம்கள் கூடுதல் வருமானத்திற்கு பயான், வீடுகளுக்கு துவா, கத்தம் ஓதச் சென்றால் தான் செலவினை சரிக்கட்ட முடிகிறதாம். இருவருமே இளம் இமாம்கள். அவர்கள் பிஎச்.டி படித்திருந்தால் கல்லூரியில் மாதம் சராசரி ரூபாய் 75,000/ பெற முடியும், அத்துடன் அவர்கள் ஓய்வு பெற்றால் பென்சனும் கிடைக்கும்.

தமிழ் நாட்டில் சமீபத்தில் உலமாக்கள் பென்ஷன் ரூபாய் 1500லிருந்து ரூபாய் 3000/ உயர்த்தப் பட்டது. அதுமட்டுமல்லாமல் இரு சக்கர வாங்க மானியத்தொகையும் அறிவித்துள்ளது. இவைகள் எல்லாம் யானை பசிக்கு போடப் படும் சோளப்பொரியாகும் என்றால் சரியாகுமா?

               தற்போது தமிழ்நாடு அரசு பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு தொடர மாந்தோறும் ரூபாய் 25000/ மானியமாக கொடுக்கிறது. ஆகவே மார்க்க கல்வி கற்ற இளம்கள் இதனை கோல்டன் தருணம் என்று கருதி பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

              

              

              

No comments:

Post a Comment