Tuesday 20 September, 2011

நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.

வரலாறு மாணவனாக சென்னை புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயிலும் பொது கீழக்கரை சீதக்காதியின் வள்ளல் தன்மையினை படித்திருக்கிறேன், அனால் என் வாழ்க்கையில் கண்ணாரப் பார்த்த வள்ளல் சீதக்காதி ஒருவர் இருகின்றார் என்றால் அவர் தான் பெரியவர் பி.எஸ்.ஏ.
இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடற்க்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ள ஒளிவிளக்கு அவர்.
எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்றதினை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ.வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு 1983 இல் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார். அப்போது ஒரு நபர்(பின்பு தெரிந்து கொண்ட உடன்குடி தாஹா) வந்து உங்களுக்குத் தெரிந்த ஒரு பெரியவர் கூப்பிடுகிறார் என்றார். உடனே அவர் யார் என்று பார்ப்பதிற்காக அவரிடம் சென்றேன். கூடத்தின் ஒரு மூலையில் பொன் நிறத்தில் தற்போதைய இஸ்ரேயில் பிரதமர் நத்னாயகு போன்று இருந்த பி.எஸ்.ஏ.வினை முதன் முதலில் பார்த்தேன்.,
என்னை எந்த ஊர் என்றுக் கேட்டார். நான் இளையான்குடி என்றதும் அடே நம்ம மாவட்டம் என்றதோடு மட்டுமல்லாமல் எங்கலூரைச்சர்ந்த அவரிடம் வேலைப் பார்த்த யாசின் அவர் தம்பி தெரியுமா என்று கேட்டார். நான் அவர்கள் என் வீட்டு அருகில் உள்ளவர்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மேடை அருகில் சென்று விட்டேன். கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் காரில் ஏறினர் மறு பக்கம் பி.எஸ்.ஏ. ஏறியது கண்டு ஆச்சரியப் பட்டேன். அவரை இரண்டாவதாக சந்திக்கும் வாய்ப்பு 1985 ஆம் ஆண்டு கிடைத்தது.
விருந்தோம்பலுக்கு முன்மாதிரி
1985 ஆம் வருடம் நான் ஏ.டி.எஸ்.பி யாக ஊட்டியில் பணியாற்றினேன். எனது அலுவல் காரணமாக சென்னை சென்றேன். வெள்ளி ஜும்மா தொழுவதிற்கு அண்ணா சாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் சென்றேன். தொழுது முடிந்ததும் வெளியே வரும்போது பி.எஸ்.ஏ. மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியிடம் பள்ளியினை புதுப்பிற்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே வந்தீர்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்த மெஜெஸ்டிக் கரீம் மற்றும் நிர்வாகத்தினரிடம் அறிமுகப் படுத்தி விட்டு காரில் ஏறுங்கள் என்று அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு வந்து சாப்பாடு வைக்கச் சொன்னார். கறி சாப்பாடு பரிமாரிகொண்டிருண்டபோது பிரிட்ஜில் உள்ள நேற்றைய மீன் குழம்பையும் சூடு பண்ணி வைக்கச் சொல்லி தானே எடுத்து வைத்தார்.
1996 ஆம் ஆண்டு நான் குடும்பத்துடன் டெல்லி சென்றபோதும், 1999 ஆம் ஆண்டு அலுவல் காரணமாக மக்கா, மதீனா சென்றபோது பி.எஸ்.ஏ சென்னையில் இல்லை. அவருடைய பி.ஏ. ஹசனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். எங்களுடைய பயணம் ஹசன் மூலம் அறிந்து தேவையான உதவிகளைச் அங்கெல்லாம் செய்தார்.
1999 ஆம் ஆண்டு அவருடைய கூடுவான்சேரியிலுள்ள பண்ணை வீட்டுக்கு அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ், அலாவுதீன் ஐ.ஏ.எஸ் மற்றும் என் குடும்பத்தினரை ஒரு நாள் அழைத்திருந்தார்கள்.நாங்கள் அங்கு சென்றோம். குழந்தைகளை கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் தொட்டிகளை சுற்றிக் காட்டினார்கள். பின்பு எனது மகன்களை குதிரை சவாரி செய்யச் சொன்னார். அங்குள்ள சிறிய நீச்சல் குளத்தில் குளிப்போமா என்று அழைத்துக்கொண்டு சிறு பிள்ளைபோல் நீச்சலடித்தார். மதிய சாப்பாடு ஆண்களும் குழந்தைகளும் ஒரு இடத்திலும் பெண்கள் ஒரு இடத்திலும் சாப்பிடும் போது இடையில் எழுந்து பெண்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று அவர்களிடம் கூச்சல்லாமல் சாப்பிடுங்கள் என்றும் சொல்லி வந்தார். அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது எவ்வளவு பெரிய மனிதர் குழந்தைகள் முதல் பெண்கள் வரை மிகவும் எளிமையாக அன்புடன் விருந்தோம்பல் செய்கின்றாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . ஆகவே தான் சொன்னேன் அவர் விருந்தோம்பலுக்கும் முன்மாதரி என்று.
பிற்பட்டோர் கல்வித்தந்தை:
ஒருங்கிணைத்த இராமநாதபுர மாவட்டம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பபில் மிகவும் பின் தங்கியது. அதுவும் பெண் கல்வியில் மிக, மிக பின் தங்கியது. ஆகையால் கீழக்கரையில் பெண்களுக்கான கல்லூரியினை நிறுவினார். அது மட்டுமல்லாமல் மதுரை மட்டும் நாகூரில் கல்லூரிகள் வரக் காரண கர்த்தாவாக இருந்தார். அது மட்டுமல்லாமல் அனாதை சிறுவர்களுக்கான இல்லங்களை மதுரை, ஓட்டபிடாரம், சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவினார். என்னிடம் எப்போதும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என அடிக்கடி சொல்லுவார். தன்னிடம் கல்விக்காக உதவி கேட்டு வருபவர்களை வெறுங்கையோடு ஒருபோதும் அனுப்பியதில்லை என்று 3 உதாரணத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
1) இளையங்குடியில் கல்லூரி ஆரம்பிக்க காரண கர்த்தாவாக இருந்தவர்களில் நானும் ஒருவனாவேன். எனது உறவினரும் எங்களூர் கல்வித் தந்தையுமான அமீன் நைனார் ஹௌத் அவர்கள் பி.எஸ்.ஏ. அவார்களை 1971 ஆம் ஆண்டு சந்தித்து கல்லூரிக்கு உதவிக் கேட்டுள்ளார். பி.எஸ்.ஏ. எப்போதும் உதவி கேட்டு வரும் நபர்களை எடை போட தயங்க மாட்டார். பி.எஸ்.ஏ. அவர்கள் ஒரு சிறு தொகையினை சொல்லி அதுதான் தர முடியும் எனச் சொல்லி உள்ளார். உடனே நைனார் கோவித்துக்கொண்டு உங்க காசு எங்களுக்கு வேண்டாம் என்று கோபமாக சொல்லி விட்டு வெளியே செல்ல கதவு வரை சென்ற வரைக் கூப்பிட்டு சமாதானமாக என்னிடம் எவ்வளவு எதிர் பார்த்து வந்தீர்கள் என்று கேட்டு விட்டு நைனார் கேட்ட தொகையினை உடனே கொடுத்து அனுப்பியதாக நைனார் மட்டுமல்ல பி.எஸ்.ஏவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
2) 1999 ஆம் ஆண்டு இளையான்குடி கல்லூரிக்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்து அதன் நிர்வாகிகள் கல்லூரியில் ஒரு லேப் கட்ட தீர்மானித்து பி.எஸ்.ஏவினை அணுகலாம் என என்னிடம் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் வந்தார்கள். நான் மதியெம் ஒரு மணிக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களைக் கூட்டி கொண்டு புஹாரியா கட்டிடத்திற்குச் சென்றேன். பி.ஏ. ஹசன் 'சார், இப்போது பெரியார்கள் போர்டு மீடிங்கில் இருக்கிறார்கள், மீட்டிங் முடிந்ததும் அனைவருக்கும் இங்கேயே சாப்பாடு ஏற்ப்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே இன்று சந்திப்பது முடியாது என்று சொல்லி விட்டார். நான் பிடிவாதமாக ஊரிலிருந்து பத்து பேர் வந்துள்ளார்கள் அவர்களை ஏமாற்றத்துடன் அனுப்ப முடியாது மறுத்து நாங்கள் மீட்டிங் முடியும் வரை நிற்கின்றோம், எங்களைப் பார்த்தால் சரி அல்லது போய் விடுகிறோம் என்றேன். மீட்டிங் சரியாக இரண்டரை மணிக்கு முடிந்தது. நான் மீட்டிங் அறைக்கு முன்னே நின்று கொண்டேன். பி.எஸ்.ஏவினைத் தொடர்ந்து அனைவரும் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என்ன போலீஸ் காரர் வந்திருக்கார் கூட்டத்தோட நம்மை கைது செய்ய வந்திருக்கிறார என்று சொல்ல கேலியாக அனைவரும் சிரித்து விட்டார்கள் . பின்பு எ
ன்ன விஷயம், நாங்கள் சாப்பிடப் போறோமே என்றுக் கேட்டார். நான் உங்களை கல்லூரி நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் பார்க்க வேண்டும் ஒரு நிமிடம் தாங்கள் என்றேன். அவரும் சரியென்று அறைக்குள் அழைத்துச் சென்றார். உடனே இதுதான் சமயம் என்று பி.எஸ்.ஏவிடம் லேப் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றோம். அவரும் விபரம் கேட்டு விட்டு சரி என்று சொன்னதோடு அல்லாமல் கட்டியும் கொடுத்தார்.
3) என் இரண்டு மகன்களான பைசல் மற்றும் சதக்கத்துல்லாஹ்விற்கு பி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கொடுத்ததினால் இன்று அவர்கள் இன்ஜிநீர்களாக அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்கள்.
வண்டலூரில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரி மூலம் பயன் பெற்று நல்ல வேளையில் இருக்கும் பலரை நான் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றபோது நேரில் கண்டேன். அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய பி.எஸ்.ஏ.வின் முயற்சியினை அவர்கள் வாயார புகழக் கேட்டுள்ளேன். ஆகவேதான் பி.எஸ்.ஏ. பிற்பட்டோர் கல்வித் தந்தை என்றேன்.
சமூக சிந்தனை சிற்பி:
இஸ்லாமிய சமுதாயம் பொருளாதரத்தில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லிகொண்டிருப்பர்கள். அந்த சிந்தனையில் உதித்தது தான் யுனைட்டடு எகோநோமிக் பாரம். அதில் உறுப்பினர்களாக ஒத்தக் கருத்துடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழலகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து முஸ்லிம் ஊர்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்தார்கள். பி.எஸ்.ஏ. சிந்தனையில் முஸ்லிம்களுக்கென்ற தனி பத்திரிக்கை, தொலைக்காட்சி வேண்டும் என்றார். அவருடைய சிந்தனையில் உதித்தது தான் இன்று காணப்படும் பல பத்திரிக்கைகள் மற்றும் மூன் தொலைக்காட்சி என்றால் மிகையாகாது.
சமுதாயக் காவலர்:
பி.எஸ்.ஏ. எப்படி சமுதாயக் காவலர் என்று ஒரு உண்மை நிகழ்ச்சியினைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன். 1983 திருசெந்தூர் சட்டமன்ற உப தேர்தலில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.ஏ. வந்திருந்தார் என முன்பு சுட்டிக் கட்டினேன். ஒரு இரவு காயல்பட்டினத்தில் எம்.ஜி.ஆர் பேசுவதாக இருந்தது. அங்கே உள்ள சுல்தான் ஹாஜியார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு தனது வாகனத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு புறப்படும் முன்பு காயல் மௌலான என்ற கட்சிக் காரர் நீங்கள் தெருக்கள் வழியாக வந்தால் பெண்கள் உங்களைப் பார்க்க ஏதுவாகும் என்றதும் எம்.ஜி.ஆறும் போலிசுக்கு முன் அறிவிப்பின்றி வாகனத்தினை குறுகிய சந்துக்களில் விடச் சொல்லி விட்டார். ஆனால் ஒரு சவுக்கையில் டி.எம்.கே. கூட்டத்தில் அப்துல் சமது, சுப்புலட்சுமி ஆகியோர் அமர்திருன்தனர். எம்.ஜி.ஆர். வாகனம் வருவது அறிந்து டி.எம்.கே. தொண்டர்கள் கல்லெறிய ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர். வாகனத்தில் கல்லும் விழுந்து விட்டது. உடனே எம்.ஜி.ஆர். தனது வண்டியினை பின் நோக்கி எடுக்கச் சொல்லி பொதுக்கூட்ட மேடைக்கு வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வாகனத்தில் கல் விழுந்ததும் ஏ.டி.எம்.கே. தொண்டர்கள் கொதித்தெழுந்து விட
்டார்கள். நிலைமையினை அறிந்து பி.எஸ். ஏ. மேடையில் ஏறி சிலர் தெரியாமல் கல் வீசியதிர்க்காக எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்பதாக பகிங்கரமாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆர் மைக்கினைப் பிடித்து முஸ்லிம்களைக் காப்பது நமது அரசாங்கத்தின் கடமை ஆகவே ஒரு சிலர் செய்த தப்பிர்க்காக முஸ்லிம் மக்களுக்கு தொண்டர்களால் எந்த தீங்கும் நான் சென்ற பின்பு ஏற்படாது என்று பி.எஸ்.ஏவிடம் உறுதி கூறுகிறேன் என்று தொண்டர்களை அமைதிப் படுத்தினார். இல்லையென்றால் பெரும்பாலான ஆண்கள் வெளி நாட்டில் இருக்கும் பொது பெண்கள் மட்டும் இருக்கும் காயல்பட்டினத்தில் அன்று கலவரம் எற்பட்டிரும். அதனை என்னுடைய, 'காக்கிச் சட்டைப் பேசுகிறது' என்ற புத்தகத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

இன்னலிலும் இன்முகம் காட்டுபவர்:
பி.எஸ்.ஏவின் வெற்றிக்குப் பின்னணி ஆங்கில எழுத்தாளர் டேல் கார்நேஜ் எழுதிய 'ஹௌ டு வின் பிரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுவன்ஸ் தி பியுப்பில்' என்ற புத்தகத்தில் வெற்றிக்குப் பின்நெனி முகத்தில் புன்னகையும் மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இன்றி பழகுவதுதான் என்று சொல்லி உள்ளார். அது பி.எஸ்.ஏக்கு நூறு விதத்தில் பொருந்தும். டிரைவரிலிருந்து பெரிய அதிகாரி வரை அவர் பேச்சில் மயங்கி விடுவார்கள். அதே நேரத்தில் துன்பத்திலும் மனம் தளராதவர் என்பதினை பி.எஸ்.ஏ துணைவியார் இறந்தபோது பார்த்தேன். துக்கம் விசாரிக்க வந்த ஆண் பெண் அத்தனை பேர்களிடமும் சக்கர நார்க்காலியில் உட்கார்ந்து கொண்டு நலம் விசாரித்தார். அது சஞ்சய் காந்தி இறந்ததும் பிரதமர் இந்திரா காந்தி துக்கம் கேட்க வந்த பிரமுகர்களை வரவேற்றது போல இருந்தது.
என் மகன் சதக்கத்துல்லாஹ் திருமண அழைப்பிதழ் 2007 இல் கொடுக்கும்போது படுக்கையில் இருந்தார் பி.எஸ்.ஏ.பத்திரிகையினை வாங்கி படித்துப் பார்த்து விட்டு டி கொடுக்கச்சொல்லி அனுப்பினார். திருமணம் ஹோட்டல் மெரினாவில் இரவில் நடந்தது. நான் நிக்கா மேடையில் இருந்தபோது என் உறவினர் ஓடி வந்து பி.எஸ்.ஏ சக்கர நாற்காலியிலும் அவர் துணைவியாரும் வருகிறார் என்றார். எனக்கு மட்டுமல்லாது அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தோசதினைத் தந்தது. இவ்வளவிற்கும் நான் அப்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதோடு அல்லாமல் விருந்தும் சாப்பிட்டுச் சென்றார்கள். இதனை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் முடியாத நிலையிலும் தனக்குப் பிடித்தவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த தெரிந்தவர் அத்தனை பேர்களிடமும் பேசி மகிழ்ந்தார்கள்.
என்னிடம் என் மகன்களில் யார் என்னைப் போல் வருவார்கள் என்று பி.எஸ்.ஏ ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு நான் நீங்கள் பெற்றது அனைத்தும் நன் முத்க்கள் அதில் தரம் பிரிக்கும் தகுதி என்னிடம் இல்லையென்றேன். அதுக் கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டார்கள் பி.எஸ்.ஏ. நான் அவரிடம் நீங்கள் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்றேன். அதற்கு பி.எஸ்.ஏ. அது அல்லா கையிலல்லவா இருக்கிறது என்றார். இந்த தருணத்தில் சமுதாயத்திற்காக உழைத்த பி.எஸ்.ஏ நல்ல உடல் சுகத்துடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வினை வேண்டும் அனைவருடனும் நானும் சேர்ந்து துவாக் கேட்டு விடை பெறுகிறேன்.

Friday 16 September, 2011

இரு ரத யாத்திரை-ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்? (டாக்டர் ஏ.பீ. முஹம்மத் அலி, ஐ.பீ.ஏஎஸ்(ஓ)

சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து பெட்ரோலியம் ப்ரோடக்ட்டுகள் உபயோகித்து வேகமாக செல்லும்
மோட்டார் வாகனங்கள் இருக்கும்போது இது என்ன புதுக்கதை" என்று கேட்கத்தோணும். ஆமாம் எதிகை மோனை இல்லாத புதுகவிதைபோல இதுவும் காவிச்சட்டை தலைவர்கள் கண்டுபிடித்த புதுகதைதான்.

1990ஆம் ஆண்டில் காவிச் சட்டை தலைவர்களால் பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட துவங்கப்பட்ட ஏர் கண்டிஷன் பொருத்தப்பட்ட சொஹுசு வாகன யாதிரைதான் ரத யாத்திரையாகும்.அயோத்தியில் பாபரி மஸ்ஜிதும் 1992 இல் இடிதாச்சு, அதன் பின்பு மத்தியில் அரியணையிலும் 1996 ஆம் ஆண்டு ஏறியாச்சு. அதன் பின்பு 2002 இல் கோத்ர ரயிலில் தீ பிடித்ததும் மனித வேட்டையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொன்று குவித்தாச்சு . அப்போதெல்லாம் ரத யாத்திரிகைக்கு வேலையில்லை என நினைத்திப்பிருப்பர்கள் போல இந்த புது காந்தி குள்ள வாதிகள்.குஜராத்தில் போலி என்கவுண்டர் என்ற பெயரில் சொஹ்ரபுட்டின் அவரது மனைவி கவுசர் பீ மற்றும் இஷராத் ஜஹான் போன்ற முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட போது ஹஜாரே என்ன செய்து கொண்டிருந்தார் என்று நாடு நிலையாளர்கள் கேள்வி எழுப்பாமளிலையே!கோத்ரா சம்பவத்திற்கு பின்பு கொல்லப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்கள் பற்றி விசாரணை நடத்த இப்போது ஹசாரே அணியில் உள்ள பிரபல வக்கீல்கள் சாந்தி பூசனும் அவர் அருமை மகனுமான பிரசாந்த் பூசன் நீதி விசாரணைக் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தொடுக்கவில்லியே அது ஏன்? ஆனால் மனத் துணிச்சல் உள்ள பெண் வழக்கறிஞர் ச்டீல்வாத் மட்டும் வழக்குத் தொடர்ந்தாரே அது எப்படி என்று பலர் கேட்காமளில்லையே!பல தொண்டு நிறுவனங்களின் நிர்வாகியான ஹசாரே அணியின் கேஜ்ராவாளுக்கு வெளிநாட்டிலுருந்து பெறப்பட்ட பணம் எவ்வளவு என்றோ அல்லது கிரேன்பேடி, கேஜ்ராவால் மற்றும் பூசன் குடும்பச் சொத்தை இதுவரை அறிவிக்கவில்லையே அது ஏன்? அது போன்ற கேள்வி எழக்கரணம் சாந்தி பூசன் முன்னாள் ஜன சங் மத்திய அமைச்சராக இருந்தவர். கிரேன் பேடியும் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுபோன்று ஹசறேவும் இதுவரை தனது சொத்து பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றே சொள்ளபடுகிறேதே! மத்திய பிரதேச மாநிலத்தில் ப.ஜ.க. தலைவர் ஒருவருக்கு 300 அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததே ஏன் அங்கே சென்று ஹசாரே அணி ஆர்பாட்டம் செய்யவில்லை? அது மட்டுமா அந்த மாநிலத்தில் உள்ள முதல்வர் பற்றி செய்தி வெளியிட்ட பெண் நிருபர் ஷீலா மசூது என்பவர் சுட்டுக் கொல்லபட்டரே ஏன் அங்கே சென்று ஆர்ப்பாட்டம் ஹசாரே அணி செய்யவில்லை?
சரி பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி மறுபடியும் ஒரு ரத யாத்திரை என்று கூறியிருக்கிறரே அது ஏன் என்று பாமர மக்கள் கேட்காமலில்லையே! அது தான் காவி உடை நாணயத்தின் மறு பக்கம். கர்நாடகாவில் முதலில் எட்டியூரப்பவிற்கு எதிராக அமைச்சர் ஜனார்தன ரெட்டி மற்றும் அவர் சகோதரர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொது எட்டியூரப்பாவினை ஏன் ப.ஜ.க பதவி நீக்கம் செய்யவில்லை? எட்டியூரப்பவினை தொடர்ந்து ஜனார்தன ரெட்டியினை சி.பி.ஐ. கைது செய்த உடன் ஏன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று பொது மக்கள் கேட்கவில்லையா? பாராளு மன்றத்தில் ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்துக் காட்டிய ப.ஜ.க. முன்னால் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே அதற்கு அத்வானியின் பதில் இது வரை சொல்லவில்லையே? அது ஏன் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைதானே!
முன்னால் ப.ஜ.க. தலைவர் பங்காரு லக்ஷ்மணன் கையூட்டுப் பெறும்போது ஒரு டி.வீ. சேனல் படம் போட்டு காட்டியதே அப்போது அவரை கட்சியிலிருந்து ப.ஜ.க. நீக்கியதா இல்லையே? இப்போது கூட டூ ஜி ஊழலில் அருண்குமார் மற்றும் அருண் சோரி பெயர்கள் அடிபடுகிறேதே அவர்களை கட்சி நீக்கியதா, இல்லையே! ஒடிசா மாநிலத்தில் ராஜ்ய சபா தேர்தலில் ஆளும் பி.ஜே.டி கட்சியுடன் சேர்ந்து பணம் கொடுத்து வெற்றி பெட்டதாக கூறப்படுகிறதே அப்படி பணம் வாங்கிய பி.ஜே.பே. எம்.எல்.ஏக்கள் கட்சியினை விட்டு நீகப்பட்டனரா, இல்லையே!மத்திய பிரதேச ப.ஜ.க. அரசு அரசின் 300 ஏக்கர் நிலத்தினை அந்த மாநில ப.ஜ.க தலைவர் நடத்தும் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாக ஊடகங்கள் சொன்னதே அப்போது ஏன் எந்த யாத்திரையும் நடத்தவில்லை?
ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம் தான் மிக சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநித்துவ சபை. அந்த சபை உறுப்பினர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததால் ஹஜாரேயின் அணியினரான பிரசாந்த் பூசன், கிரேன் பேடி மற்றும் கேஜ்ராவால் போன்றோருக்கு உரிமை மீறல் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அது எப்படி தவறாகும்? ஒரு நாட்டுக்கொடி மேல்நோக்கிதான் பறக்க விட வேண்டும். ஆனால் கிரேன் பேடி முன்னால் காவல் துறை அதிகாரி. அவர் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது தேசியக்கொடியினை பெரிய கம்பில் கட்டி கீழ் நோக்கி வீசுவதினை அனைவரும் தொலைகாட்சியில் பார்த்திருக்கலாம். அதனை எப்படி சரி என்று சொல்லாம்? சில ஆயிரம் பேர்களை கூட்டி அவர்களுக்கு சாதகமான காரியம் சாதிக்க நினைத்தால், 15 சதவீத மக்கள் உள்ள முஸ்லிம்கள் பத்து சதவீத ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதிக்கீடு செய்ய நீதிபதி ரங்கநாத மிஸ்ரா சொல்லியபடி கொடுங்கள் என்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை? காரணம் அந்த தலைவர்களிடையே ஒற்றுமை இல்லையே?
ஹசாரே என்ன நாட்டின் சுதந்தர வீரரா? இல்லையே? ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன. அத்வானி நாட்டின் சுதந்திர போராட்ட வீரரா? அவர்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம்? 1965 ஆம் ஆண்டு ராணுவத்தில் ஹசாரே போன்று முன்னால் எஸ்.பீ. முஹம்மது இக்பாலும் இருந்து நாட்டுக்காக போராடினார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் விடுதலை புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தார். அவரை எந்த அரசும் ஞாபகப் படுத்துகிறதா, இல்லையே! ஏன் இந்த பாரபட்சம்?
ஹசாரே என்ன பேட்டை முதலாளி காயிதே மில்லத் போன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் செல்வதினை தொலைத்தவரா? இல்லையே!
அல்லது1924 இல் பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதினால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஜெயிலில் ஓராண்டு வாடிய தியாகி அப்துல் சலாம் போன்று தியாகம் செய்தாரா? இல்லையே!
ஹசாரே அணியில் இருந்த சுவாமி அக்னிவேஷ் மற்றும் நடுநிலை எழுத்தாளரும், உயர்ந்த மேகசய்சே அவார்ட் வாங்கியவருமான அருந்ததி ராய் முதலில் ஹசாரே அணியில் இருந்தனர் பின் அவரை சில சுயநல வாதிகள் தங்கள் ஆளுகையில் வைத்து அதன் படி ஆட்டி வைத்ததால் ஹசாரே அணியிலிருந்து விலகவில்லையா? அது சரி, குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் சுரேஷ் மேஹ்தாவும், சடப்பியாஹ்வும் குற்றம் சாடியுள்ளனரே அதனால் தானே குஜராத்தில் ஊழலை விசாரிக்க லோகயுக்தா கவர்னர் நியமித்ததும் எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளாரே ஏன் அங்கே சென்று அத்வானியும், ஹஜாரேயும் ரத எதிரியோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ செய்யவில்லை? முன்பு அத்வானி ரத யாத்திரையும், கரசேவகையும் தடுத்து நிறுத்த உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்க் போன்ற ஒரு முதல்வரும், லாலுப் பிரசாத் யாதவ் போன்ற பீகார் முதல்வரும் இல்லையே என்ற தைரியத்தில் அத்வானி தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அதுபோல ஹஜாரேயும் தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அவர்களுடைய திட்டத்தின் பின்னணியில் பல கும்பல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக .ஆர்.எஸ். எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் காங்கிரசில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதகவும் ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு முத்தாப்பு வைத்ததுபோல ஆஜ்மீர்,மலேகான்,ஹைதராபாத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்ட அபினவ் பாரத் என்ற அமைப்பினரின் ஒன்பது பேர்களுடைய ஜாமீன் மனுவினை போலிசார் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே ரத யாத்திரை மூலம் அயோத்தியில் நாசவேலையை நடந்தது போல மறுபடியும் ஒரு நாச வேலை நடக்ககூடாது என்றும் பலரும் எதிர்பார்ப்பது இயற்கைதானே! அதற்குத்தானே மத்திய அரசு மத எதிர்ப்பு தடைச் சட்டம் கொண்டு வருகிறது. அதனை ஏன் ப.ஜ.கவும் அதன் கூட்டணிகளும் எதிர்க்கிறார்கள்.
இரு ரத யாத்திரைகளின் பின்னணியில் மூன்று மறைமுக திட்டம் உள்ளதாக நடுநிலையாளர்கள் எண்ணுகிறார்கள்:
1) 2004 ஆம் ஆண்டினுக்குப் பின்பு மத்தியில் ப.ஜ.க ஆட்சியினைப் பிடிக்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மோடியினை முன் நிறுத்தி ஆகவே இதுபோன்ற ரத யாத்திரை நடத்தி சிருபான்மையினரினைடியே பயத்தினை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் ஆட்சியினை பிடிப்பது.
2) அதன் பின்பு மத சார்பற்ற அரசியலமைப்பினை மாற்றி பெரும்பைமையினர் பயன்படும் மத சார்பான சட்டத்தினை கொண்டு வருவது.
3) அப்படியும் முடியவில்லையென்றால் நாடு முழுவதும் ஹசாரே டெல்லியில் நடத்திய தர்பார் போன்று நாடெங்கும் சடத்தி மத்திய அரசினை மாற்றுவது.
இந்த கருத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல அமெரிக்க காங்கிரசின் அறிக்கையில் வலது சாரி ஹிந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு அச்சாரமாக மலேகான், ஆஜ்மீர்,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள அபினவ் பாரத் அமைப்பு தீவிரவாதிகளின் ஜாமீன் மனுவினை காவல் துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் ஊடகங்கள் சொல்லுகின்றன.
ஆகவேதான் இந்த தேவை இல்லா இரண்டு ரத யாத்திரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றேன். அது சரிதானே!

Monday 5 September, 2011

கை விடப்படும் குழந்தைகள், கவனிக்குமா சமுதாயம்? டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ .பீ .எஸ் .(ஓ)

ஆறறிவுள்ள மனிதனுக்கு ' திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது'. அந்த பாக்கியம் வில்ங்கினங்களுக்கில்லை.ஆணுக்குப் பெண் இளைப்பாறும் விளை நிலமாக அல்லாஹ்வால் பாரினிலே படைக்கபட்டாள். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு மற்றும் பாச பரிமாற்றத்தால் உண்டாகும் நன் முத்துக்கள் தான் குழந்தை பாக்கியம் என்றால் மிகையாகாது.விதைககபடும் எல்லா நிலங்களிலும் பயிர்கள் உண்டாகாது. அதேபோல் உண்டாகிய அணைத்து பயிர்களும் உயிருடன் நிலைத்து நிற்குமா என்றும் சொல்ல முடியாது. அதே போன்றுதான் தம்பதிகளுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் உயிருடன் வாழ்வார்களா என்றும் அறிதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது. அடுத்தபடியாக ஓரிரு குழந்தைகள் உள்ளவர்கள் தான் உலகத்தில் வறுமை இல்லாமல் வாழ்வார்கள், அதிக பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் கஷ்ட கண்ணீர் கடலில் மூழ்குவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஐந்து அல்லது ஆறு ஆண் மக்களை பெற்ற பெற்றோர்கள் பஞ்சத்தில் துவல்வார்கள் ஆனால் ஏழு எட்டு பெண் மக்களை பெற்றவர்கள் செல்வக்கொளிப்பில் வாழ்வதினை நாம் கண்கூடாக காண்கிறோமல்லவா? அதுபோன்ற பாக்கியம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருகிருபைதானே?
பெண்ணுக்குத்தான் தெரியும் ஒரு குழந்தையினை பெற்று எடுப்பது எவ்வளவு சிரமமென்று . சில பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போதே இறந்து விடும் பரிதாப நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். ஆகவே சாவின் விளிம்பிலிருந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் அந்தக் குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்காமல் பராரியாக விடப்பட்ட சில சம்பவங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.
1)திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்த செய்யது யூசுபிற்கு இரண்டு பெண் குழந்தைகள். அவருடைய மனைவி பாத்திமா மூன்றாவது குழந்தைக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது யுசுப் தினமும் குதித்துவிட்டு வேலைக்கு வருவதால் அவர் வேலை போய்விட்டது. பாத்திமாவும் அழகான மூன்றாவது பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள். வீட்டில் விளையாடிய பஞ்சத்தால் மனதினை கல்லாக்கிக் கொண்டு பிறந்தே ஒருமாத பெண் குழந்தையினை தாய் பாதிமவிற்குத் தெரியாமல் மும்பை வியாபாரிக்கு ரூ 40000/ விளை பேசி விற்றுவிட்டார். பெற்ற மனது பொறுக்குமா? கொதித்தெழுந்தாள் பாத்திமா. விளைவு காவல்துறையினரிடம் புகார் சென்றது. காவல்துறையினர் விரைந்து செயல் பட்டு குழந்தையினை மீட்டு பாத்திமாவிடம் கொடுத்ததோடு நில்லாமல் குடிகார கணவனான யூஸுபையும் கைது செய்ததாக செய்திகள் சொல்லுகின்றன.
2) கேரளா மாநிலம் கொசியினைச் சார்ந்த பேரலூர் என்ற நகரத்தில் பதிமூன்றே வயதான ஒரு சிறுமியை தன் குடும்ப வருமையினைப் போக்க தாய் விபச்சாரத்தில் தள்ளி உள்ளாள். ஒன்றும் அறியாத அந்த சிறுமியினை பால் படுத்தியாக கேரளா காவல் துறையினர் இது வரை எண்பது பேரை கைது செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டினைச் சார்ந்த அதிகாரிகளும் பிரமுகர்களும் அடங்குவார்கள். இதுபோன்ற வெளி வராத செய்திகளும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் மறுக்க முடியாது என்றே சொல்லலாம்.
3) உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு பார்க் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் அக்கு லால். இவர் அனாதையாக இருக்கும்போது ஒரு முஸ்லிம் பிரமுகர் எடுத்து வளர்த்து ஆளாக்கினராம். ஒரு நாள் இரவு தனது டீக்கடையினை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது பார்க் அருகில் ஆறு வயது சிறுவன் முடங்கி படுத்து தூங்கியுள்ளான். அந்த பெரியவர் அவனை எழுப்பி அவனைப்பற்றிய விவரம் கேட்டபோது தனது பெயர் அக்பர் என்றும் தனது பெற்றோர் தன்னை விட்டு விட்டு சென்று விட்டனர் என்றும் சொல்லியுள்ளான். அந்தப் பெரியவர் அவனை தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று அவனை பராமரித்து வந்தது மட்டுமல்லாமல் அவனை ஏழாவது வரை படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த சிறுவனை தொழுக வைத்தும், ரமழான் மாதத்தில் நோன்பு வைக்கவும் பழகிக் கொடுத்துள்ளார். அதனைப் பற்றி அந்தப் பெரியவர் சொல்லும்போது தன்னை வளர்த்த முஸ்லிம் பெரியவருக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவதிர்க்காக தானும் அக்பரை முஸ்லிமாக வளர்ப்பதாக பேட்டி கொடுத்துள்ளார்.
நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிருந்து கீழ்கண்டவைகள் தெளிவாக புரிகின்றன:
1)இருண்ட கால அரேபியாவில் பெண் குழைந்தைகளை ஒரு பாரமாக எண்ணி அவைகளை மண்ணில் புதைத்த நிலையிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ரசூலில்லாவின் போதனைகள் இன்னும் சமுதாய மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழந்தைகளை பேணிகாக்க சமுதாயத்தில் ஏதும் திட்டம் இல்லையா என்ற கேள்விக்குறி எழாமலில்லையல்லவா?
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழைதைகளுக்காக தனியாக மதர்சாவுடன் கூடிய அனாதை பெண் காப்பகம் நிறுவுவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே?
2) ஆண் குழந்தைகளை பராமரிக்க எத்தனையோ அனாதை ஆசிரமங்களும், மதரசாக்களும், பிற்பட்டோருக்காக அரசு விடுதிகளும் உள்ளன. அவைகளில் மேற்குறிப்பிட்டது போன்ற குழந்தைகளை சேர்க்க உதவலாம்.
3) நோன்பு சகர் நேர பிரசங்கங்களில் ஏழை எளியோருக்கு உதவ பைத்துல் மால் நிதி வழங்குங்கள் என்று பிரச்சாரங்கள் சொல்லப்பட்டன. அனால் அதுபோன்று வசூல் செய்த பணம் ஒவ்வொரு வருடமும் எவ்வளுவு என்ற கணக்கினை இணைய தளத்திலோ அல்லது பொது விளம்பரத்திலோ வெளியிட்டர்களா என்றல் இது வரை இல்லை என்றே சொல்லலாம். அது போன்ற பைத்துல் மால் பணத்தினை சமுதாயத்தில் நலிந்தோர் வியாபாரம் செய்ய உதவலாம்.
குடி குடியினை கெடுக்கும் என்ற வாசகத்திணங்க நான் மேலே குறிப்பிட்ட நெல்லையினைச்ச்சர்ந்த யூசுப் குடித்து கேட்டது போன்று எந்தக் குடும்பத்திலும் நடக்காது பர்த்துகொள்ளுவது ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் கடமைகள் தானே என்றல் சரிதானே சகோதரர்களே?