Wednesday 20 September, 2023

சனாதன தர்மமும்-நிழல் யுத்தமும்!

சனாதன தர்மமும்-நிழல் யுத்தமும்!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

சனாதன தர்மம் பற்றி பல்வேறு கருத்து பரிமாற்றங்களும், கடுமையான வார்த்தைகளும் சமீப காலங்களில் எண்ணையில் போட்ட சோளப் பொறி போல பொரிந்து கொண்டுள்ளது. இது எப்படி இருக்கின்றது என்றால் நான்கு பேர்கள் சேர்ந்து பொழுது போகாமல் வெட்டி பேச்சு பேசுவது போன்றுள்ளது  சிலர் ஒன்றும் கிடைக்காத நேரத்தில் அவலை மெல்லுவது போல இருக்கின்றது.

சனாதன தர்மம் பற்றி வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மீக சான்றோரும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். சனாதன தர்மம் என்பது சமஸ்க்ரித சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவ ஞானம்,  நிலையான நம்பிக்கை, அசைக்க முடியா நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என்ற பொருளாகும். சனாதன தர்மமத்தினை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சனாதன தர்மம், மற்றொன்று வர்ணாஸ்வர தர்மம். இவற்றில் சனாதன தர்மம் என்பது பொதுவான ஆன்மீக கடமையாகும். வர்ணாஸ்ரம தர்மம் என்பது காலம், ஒருவரின் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை குறிக்கும். எல்லா உயிரினத்திற்கும் அன்பும், பாசமும், பரிவும், செலுத்தி பராமரிக்கப்படுவது போன்ற நிலையான செயல் முறையாகும்  அதில் காலப் போக்கில் தடம் மாறிப் போனதால் சச்சரவிற்கு வழி வகுத்துள்ளது.

            சனாதனம் என்பது மகாபாரதத்திலும், திருக்குறளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆன்மீக வாதிகள் சொல்லும்போது சனாதன தர்மம் என்பது  பழமையான பண்பாடு, பெற்றோர்களை, பெரியோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும் என்ற வழிமுறையாகும். ஆனால் பிற்காலத்தில் சாதி, மத, இன என்ற வார்த்தைகளால் செயல்படுத்த முயலும் பொது முரண்பாடு  ஏற்படுகின்றது. இது சாமன்ய தர்மம், வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம், ஸ்திரி தர்மம்,  வியாஸ்தி தர்மம், ராஷ்ட்ரிய தர்மம் போன்ற பத்து வகையாகும். இவையெல்லாம் தனிமனிதன் முதல் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டிகளாகும்.

            மேலும் சனாதன தர்மம் என்பது ஆன்மா மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நம்பும் நித்ய மதங்களாகும். இவை ஹிந்து மதத்தினை அனுசரித்து வருகிறது என்றாலும் ஜெயின், பவுத்த மதத்தினராலும் பயன் படுத்தப் படும் வார்தைகளாகும். 19ம் நூற்றாண்டில் தான் சனாதன தர்மம் மற்ற மதங்களிருந்து வேறுபட்டு ஹிந்து மதத்தினை குறிக்கும் வார்த்தையாக சொல்லப் படுகிறது. இந்த மண்ணுலகில் கண்டு பிடிக்க வேண்டிய அதிசயங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு நாம் வேற்றுலக கிரக வாசிகள் இருப்பதாக எண்ணுகிறோம். ஆனால் பார்க்கவில்லை. சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் நடந்த ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் இரு உருவங்களின் படிவங்கள் காட்சிக்காக வைக்கப் பட்டன. அவை வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கியதிற்கு ஆதாரமாக காட்டப் பட்டது. இது போன்ற இன்னும் கண்டுபிடிக்க முடியாத அதிசயங்கள் இருக்கும் போதும் சந்திரனின் தெற்குப் பகுதியான இருண்ட பகுதியை வெற்றிகொண்ட சந்திராயன் என்ற விண்கலமும், சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பப் பட்ட விண்வெளி ஓடம் வெற்றிகரமான அனுப்பப் பட்ட நிலையில்  ஏன் ஒரே மனித இனத்திற்குள் அத்தனை  வேறுபாடுகள் என்று காணும்போது சனாதன தர்மம் பற்றிய கூச்சலே மேலோங்கியுள்ளது என்றால் ஆச்சரியமில்லையல்லவா. மனிதன் எல்லாம் பூமியில் உள்ள மண்ணிலிருந்து முளைத்த பொருட்களை தான் உணவாக உண்ணுகிறோம், ஆகவே அவனுக்குள்ளே ஏன் வேறுபாடுகள். மனிதன் என்ன தான் முயன்றாலும் ஒரு மரமாகவோ, நாயாகவோ, பூனையாகவோ, யானையாகவோ அல்லது புலியாகவோ மாறமுடியுமா? ஆகவே அவற்றையெல்லாம் நிர்வாகிக்கும் ஒரு விதி முறையுள்ளது. ஜனநாயக இந்தியாவில் அரசியல் சட்ட வடிவமைப்பு ஒரு தர்மமாகும். சட்டங்களின் படியே சட்டசபை, பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை செயல் படுகிறது. அவை ஒன்றுக்கொன்று எல்லை மீறாது பணியாற்றுவதே தர்மமாகும்.

            இப்போது இந்தியாவில் எவ்வாறு ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்பட்டது என்று பார்க்கலாம். இந்தியாவில் சிந்து நதிக்கரை ஓரம் வளமான பகுதிநோக்கி பலவிதமான நாடோடி ஆரியர்கள்  தங்கள் கால் கடைகளுக்கு தீவனமும், தங்கள் உயிர் வாழ செழுமையான பகுதியான இங்கே குடி புகுந்தனர். அவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவை நோக்கியே குறிவைத்தனர். அங்கு வாழ்ந்த மக்களை தெற்கு நோக்கி விரட்டினர். இதனை பழமை இந்திய வரலாற்று(Ancient Indian History) ஆசிரியர்கள் 'சிந்து வெளி நாகரீகம்' என்ற  தலைப்பில் எடுத்துக் கூறுகின்றனர்.பல்வேறு நாடோடி இனத்தவரை இணைக்கும் தர்மம் என்ற கோட்பாடு அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் வந்த பின்பு தான் ஜாதி, மத இன வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். அவர்களின் கோட்பாடுப்படி வர்ணம் என்ற வேறுபாடு பிரம்மாவின் உடலிலிருந்து தோன்றியதாக கூறப் படுகிறது. பிராமணர்கள் பிரம்மாவின் தொப்புலிருந்தும், சத்ரியன் கைகளிருந்தும், வைஷ்ணவர் தொடையிலிருந்தும், ஷத்ரியர்கள் கால்களிருந்தும் படைக்கப் பட்டதாக நம்பிக்கையுள்ளது. அதனையே தான் மநுஸ்மிருதி என்ற இந்து மத கோட்பாடு கூறுகிறது.(manu codu 1:31)

            சூத்திரர்கள் பிராமணர்களுக்கு அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு கூலி எதுவுமில்லையாம்.ஏனென்றால் அவர்கள் பிராமணர்களுக்கு வேலை செய்வதிற்காகவே பிறந்திருக்கிறார்கள் என்று மனு v iii -50,56,59 கூறுகிறது.சூத்திர பெண்களை ஒரு காட்சிப் பொருளாகவே கருதினார்கள்.

            பெரியார் இந்திய தேசிய காங்கிரசில் 1919ல் சேர்ந்து சுதந்திரப் போராட்ட வீரரானார். ஆனால் 1925ம் ஆண்டு அதனை விட்டு விலகினார். ஏன் தெரியுமா? காங்கிரசில் பிராமண ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று. இருந்தாலும் ராஜாஜி போன்றவர்களுடன் நட்புடன் கடைசி வரை இருந்தார். அவர் இறந்தபோது கூட சுடுகாடு வரை சென்றவர் பெரியார். அதன் பின்பு சுய மரியாதை இயக்கத்தினை ஆரம்பித்தார். அதன் முக்கிய நோக்கமே சமூகத்தில் உள்ள பிராமணர் ஆதிக்கத்தினை எதிர்த்து, பெண்களுக்கு சமூகத்தில் சம அடித்தளமாக்கவே சுய மரியாதை இயக்கமாகும்  தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது. பிராமணர்கள் சம்ஸ்கிருத மொழியை தூக்கிப் பிடித்தபோது, பெரியார் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னணிதான் பிற்காலத்தில் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது.

            தமிழக இந்து மகாசபை ஊடகங்களின் விவாதங்களில் பங்கேற்கும் ராம சுப்பிரமணியம் சமீபத்தில் அவர் பிராம்மணக் குடும்பத்தில் தனது தாயார், அக்காள் கணவர்களை இழந்த போது எப்படி சமூகத்தால் ஒதுக்கப் பட்டு மூலையில் அமர்த்தப் பட்டார்கள் என்பதனினை வேதனையுடன் தொலைக் காட்சியில் கூறியது அனைவரும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வெள்ளை சேலைத்தவிர எதுவும் அணியக்கூடாது, கலர் கண்ணாடி வளையல் அணியக்கூடாது போன்றவைகளும் அடங்கும். அனைத்துப் பெண்களும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடாது என்றும், பெண்களுக்கு சமையல் தவிர வேறெதுவும் தெரியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. குழந்தை திருமணம் ஆதரிக்கப் பட்டது. மகாத்மா காந்தி 13 வயது கஸ்தூரிபாவினையும், ராஜாஜி ஆர்மேலு என்ற மங்கம்மாவை 10 வயதிலும் திருமணம் செய்தார்கள் என்பது அந்தக் காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக இருந்ததினை காட்டவில்லையா? கணவர் இறந்து விட்டால் மறுமணம் கூடாது என்றும் மறுக்கப் பட்டது. இப்படி குழந்தை திருமணம் செய்த தேசிய தலைவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

            நாமெல்லாம் ஆங்கிலேயர்களை ஆதிக்கக்காரர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம் உண்மைதான். ஆனால் இந்திய புரையோடிய சமூக வேறுபாடுகளை தூக்கியெறிந்தனர் என்று தினமணி பத்திரிக்கையில் 2007ம் ஆண்டு வந்த கட்டுரையில் கோடிட்டு காட்டப் பட்டுள்ளது. ஆங்கிலேயர் 1773ம் ஆண்டு சனாதன சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தனர்.. சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ளலாம் என்பதினை மாற்றி 1795ம் ஆண்டு அனைவரும் சொத்து வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினர். பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கொல்லும் பாதக செயலை 1804ம் ஆண்டு கொண்டு வந்தனர். கொத்தடிமையினை அறவே ஒழித்துக் கட்டும் சட்டம் 1813ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிராமணப் பெண்ணைக் கெடுத்த சூத்திரன் கொல்லப் பட வேண்டும் என்ற மனுசாஸ்த்ர சட்டம் vii 374, 375 நீக்கப் பட்டது. ஒரு பிராமணன் சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம், அதன் விளைவாக குழந்தை பிறந்தால் அது பிணமாகவே கருத வேண்டும் என்ற பிராமண மனுஷர சட்டம்(ix 178) நீக்கப்பட்டது. பிராமணன் ஒரு குற்றம் செய்தால் அது குற்றமாக கருதக் கூடாது, அதற்கு எந்த தண்டனையுமில்லை என்ற கோட்பாட்டினை 1817ம் சட்டம் மூலம் நீக்கப் பட்டது.

            சூத்திர பெண் திருமணம் செய்த அன்றே பிராமணருக்கு பணிவிடை செய்ய 7 நாட்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற கொடுமையினை 1819ம் ஆண்டு பிரிட்ஷார் முடிவிற்கு கொண்டு வந்தனர். பிராமணர் மட்டுமே கல்வி கற்க தகுதியானவர் என்பதினை பிரிட்டிஷ் லார்ட் மெக்காலே 1835ம் ஆண்டு கொண்டு வந்த சட்டம் மூலம் சூத்திரனும் கல்வி கற்க முடிந்தது.

            அவர்கள் கொண்டு வந்த சமூக சீர்திருத்த சட்டங்களால் ராம்ஜி என்ற அம்பேத்கர் போன்ற சூத்ரன் பிற்காலத்தில் கல்வி கற்று மேலை நாட்டிற்கு சென்று சட்டம் பயின்று இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கும் சபையின் தலைவரானார் என்பதினை யாரும் மறைக்க முடியாது. பிசி, எம்பிசி,  எஸ்சி என்றவர்கள் படித்து பட்டம் பெற்று பிராமணரர்களுக்கு இணையான பதவிகளில் உள்ளனர் என்பதினை அனைவரும் அறிவோம். ஆனால் சமீபத்தில் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இந்திய சமூகத்தினை ஜாதிகள் மூலம் பிரித்தனர் என்று பிதற்றுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதைதானே. மனுஷர சட்டத்தின் படி பெண்களின் மார்பக மறைக்கக் கூடாது என்கின்ற கொடுமை, ஆண்களின் மீசை வரி, மேலில் துண்டு போட்டால் அதற்கும் வரி, தெய்வத்திற்கு நரபலி, பனை வரி, உடன் கட்டை ஏறுதல் போன்ற சட்டங்களை பிரிடீஷார் நீக்கினர். சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு மேலே சொல்லப் பட்ட சமூக கொடுமைகளைக் கண்டு வெதும்பி 'mad ashylam' ஜாதீய புகலிடம் என்று கண்டித்தார்..

            கேரளா கம்யூனிஸ்ட் அரசினை சார்ந்த அறநிலைய அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒரு தலித். அவருக்கே நடந்த ஜாதீய பகிஷ்கரிப்பினை வெளிச்சம் போட்டு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு தடவை கண்ணனூரில் உள்ள ஒரு கோவில் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது முதல் நிகழ்ச்சிக்காக பெரிய குத்துவிளக்கு வைக்கப் பட்டிருந்தது. தலைமை பூசாரி சிறிய விளக்கில் தீபத்தினை கொண்டு வந்து பெரிய விளக்கில் ஏற்றுவதிற்குப் பதிலாக அமைச்சருக்கு கையில் சிறிய விளக்கினை  அவர் தலித்தினைச் சார்ந்தவர் என்பதால் தரையில் வைத்தாராம், அதனை மந்திரி எடுத்துக் கொள்ளலாம் என்று. இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் உள்ளதா?

            பிராமணர் தான் தலித்துகளை தீண்டத்தகாதவர் என்று எண்ணுகிறீர்களா என்றால் இல்லை அவர்கள் போன்று பிசி, எம்பிசி பிரிவினைச் சார்ந்தவர்களும் பல கொடுமைகள் செய்கிறார்கள் என்பதினை கீழ்கண்ட நடப்புகள் மூலம் தெரியலாம்:

1) 76வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவரை கொடியேற்ற தடுப்பதும்,

2) கிராமசபை கூட்டத்தில் தலித் தலைவரை நாற்காலியில் உட்காரக் கூடாது தரையில் தான் உட்கார வேண்டும், மற்ற உதவி தலைவர், உறுப்பினர்கள் உயர் ஜாதியினர் என்பதால் அவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப் பட்டனர்.

3) பள்ளி கழிவறையில் சுத்தம் செய்ய தலித் மாணவர்களை கட்டளை விட்டதும் இங்கே தானே!

4) பள்ளியில் தலித் சமையல் உதவியாளர் சமைத்த உணவினை சாப்பிடக்கூடாது என்று பெற்றோர் கட்டளையிட்டதும்

5) கோவில் அன்னதானத்திற்கு கையேந்திய குறவர் பெண்ணை விரட்டி அடித்ததும்,

6)  தலித் சின்னசிறிய பிஞ்சு சிறுவன் தின்பதிற்கு இனிப்பு கடலை மிட்டாய் கேட்டதும் கிராம கடைக்காரர் உங்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடு என்று சொன்னதும்,

7) மதுரை உத்தமபுரத்தில் தலித்துகள் தங்கள் பகுதியில் வரக்கூடாது என்று பெரிய சுவர் எழுப்பியதும் போன்ற சம்பவங்கள் பிராமணர்களால் செய்யவில்லை மாறாக பிராமணர் அல்லாத பிற ஜாதி இந்துக்களே செய்தது எவ்வாறு காலங்காலமாக தீண்டாமை கடைப் பிடித்து வரப்படுகிறது என்பதினை காட்டவில்லையா?

            சனாதன தர்மம் என்பது ஒரு மதத்தவர் கோட்பாடு. அதனையே உயர் பதவியில் உள்ளவர் உயர்த்தி பிடிப்பதும், சிலர் ஒழிக்க வேண்டும் என்பது சாலச்சிறந்தது அல்ல. மாறாக பிராமணர் அல்லாதவர் தீண்டாமையினை தடுக்கப் பாடுபடவேண்டும். முத்தமிழ் அறிஞர்கள் யாரும் அவ்வாறு கூறவில்லை. ஆனால அதனையே சனாதன தர்ம வெறி அல்லது தீண்டாமையினை ஒழிக்கலாம் என்று கூட கூறுவது பொருத்தமாகும். இஸ்லாம் கூட உன் மதம் உனக்கு என் மார்க்கம் எனக்கு என்று தான் அடுத்த மத நெறிகளை சீண்டாதீர் என்று சொல்லியுள்ளது. பிரிட்டிஷாரால் ஒழிக்கப் பட்ட சட்டங்களை மறுபடி உயிர் கொடுத்து தீண்டாமையினை கடைப்பிடிப்பதும் இனிமேலும் எடுபடாது. ஜனநாயக நாட்டில் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டுமல்லவா?