Friday 28 January, 2022

நவன நாகரீகத்தின் அடித்தளம் இஸ்லாம்!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

நான் 2001ல் அமெரிக்கா சென்றபோதும், 2011ல் ஆஸ்திரேலியா சென்றபோதும்  அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள், வாகன வசதிகள், மற்றும் நாகரீக அமைப்பினைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஆனால் அராபிய நாடுகள் செல்வத்தில் மிகைத்திருந்தாலும் ஏன் நவீன முன்னேற்றங்கள் அடைய முடியவில்லை என்று என் எண்ண அலைகளை ஓட விட்டேன். நான் 1971ம் ஆண்டு மாநில கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த சட்டசபை தேர்தலில் அன்றைய மந்திரி நாவலருக்காக தேர்தல் வேலை செய்தேன். ஆனால் அதே நாவலர் ஒரு தடவை தமிழக சட்டசபையில் ஒரு முஸ்லிம் லீகு தலைவரைப் பார்த்து 'நீங்களெல்லாம் கருவாடு விற்கும் பாய்கள் தானே' என்று சொல்லியது கேட்டு எனது மனம்  கருவாடு விற்றகாசு வீசாது என்றாலும் ஏன் நமது சமுதாயம் இன்னும் பின்தங்கியுள்ளது, நமது முஸ்லிம் அறிஞர்கள் அதற்கான வழிகாட்ட வில்லையா என்று  எண்ண ஓட்டங்களை செலுத்தி பல்வேறு நூல்களை எடுத்துப் பார்க்கும்போது தான் தெரிந்தது, நமது சமுதாய அறிஞர்கள் தான் இன்றைய உலகின் நவீன வாழ்க்கைக்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர், அவர்கள் கை வைக்காத துறையே இல்லை என்ற அளவிற்கு வழி காட்டியுள்ளார்கள்  என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இஸ்லாம் அராபியாவின் இருண்ட உலகில் அருளப்பட்ட படிப்பறிவில்லாத முகமது என்ற நம்பிக்கைக்கு பாத்திரமான ரஸூலல்லாஹ்விற்கு  அல்லாஹ் தனது வானவரை அனுப்பி, 'இக்ரா' ஓதுவீராக என்ற வசனத்தினை இறக்கி வைத்ததின் பயனாக பல்வேறு திசைகளிலும் முஸ்லிம்களின் அறிவுச் சுடர் ஒளி வீசத்தொடங்கியதே முஸ்லிம் நாகரீக கண்டுபிடிப்புகளின் அடிகோலாக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவுப் புரட்சி 1000ஆண்டுகளாக எகிப்து, சீனா, கிரேக்கம், ரோமன் மற்றும் இந்திய அறிஞர்களால் விரிவு படுத்தப் பட்டுள்ளன என்றால் மிகையாகாது. இஸ்லாமிய அறிவுப் புரட்சியின் பொற்காலம் என்று அதனை கூறுகிறார்கள்.

            அராபிய புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. உலகிலேயே முதன் முதலில் ‘கிராவின்’ என்ற  பல்கலைக் கழகம் மொரோக்கோ நாட்டின் ‘பெஸ்’ என்ற நகரத்தில் ஆரம்பித்தது ‘பாத்திமா அல் பஹாரி’ என்ற துனீசியா நாட்டு பெண் அறிஞர் ஆவர். அதனை கின்னஸ் புத்தகமும் அங்கீகரிக்கின்றது. அந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் விஞ்ஞானம், அறிவியல், கணித கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்தினர்.

            ‘பறவைகள் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடல் நமக்குப் பழக்கப் பட்டது. அதற்கு உதாரணமாக 1903 ம் ஆண்டின் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தினைச் சார்ந்த ரைட்ஸ் சகோதரர்கள் சொல்வார்கள். ஆனால் கி.பி 852ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு அறிஞர் ‘அபபாஸ் இபின் பிர்னாஸ்’ இறகுகளை கட்டிக் கொண்டு ஸ்பெயின் நாட்டின் க்ராண்ட் பள்ளிவாசல் பகுதியில் குதித்ததாக வரலாறு கூறுகிறது. அதனைத் தொடர்ந்து 17ம் நூற்றாண்டில் துருக்கிய நாட்டினைச் சார்ந்த அறிஞர் ‘அசார் பெண் அகமத் செலிபி’ கழுகுகளின் சிறகுகளை கட்டிக் கொண்டு 2300 அடி அகலமான துருக்கியின் பாஸ்போரஸ் நதியினை கடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

            ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராக் தலைநகர் பாக்தாதில் 'House of Wisdom' என்று அழைக்கப் பட்ட 'Bayi-Al-Hikma' என்ற தலை சிறந்த அறிஞர்கள் கொண்ட கூட்டமைப்பு இருந்தது. அபபாஸ் கலீபா வம்சத்தினைச் சார்ந்த Al-Mamun என்பவர் கி.பி 813-833 ஆண்டுகளில் ஆட்சி செய்த கலீபா முஸ்லிம்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து சிந்திக்கத் தூண்டும் வகையில் ஆட்சி செய்து ஒட்டகங்கள் மூலம் பல்வேறு புத்தகங்களை 'அறிவு களஞ்சியத்திற்கு' கொண்டு வந்து சேர்த்தார் என்று சொல்லப் படுகிறது. அவரை கவுரவப் படுத்த சந்திரனில் உள்ள பெரிய பள்ளத்திற்கு அவர் பெயரினை சூட்டியுள்ளது பெருமையல்லவா? பக்தாதினைத் தொடர்ந்து மற்ற முஸ்லிம் நகரங்களிலும் 'House of Wisdom' அமைக்கப் பட்டது. கணிதத்தில் 'Algebra' என்று சொல்லும் சொல் பாக்தாதின் அறிவு களஞ்சியத்தில் பணியாற்றிய 'Al Khwarizmi' எழுதிய Al Jabr Wa-L Muqabalah' புத்தகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. துனிசியா நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நூலகமான 'Zayatuna Mosque' ல் லட்ச புத்தகங்கள் இருந்ததாக கூறப் படுகிறது.

            ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கும்போது முஸ்லிம்கள் கணிதத்தில் பல்வேறு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  பாரசீக நாட்டின் அறிஞர் al-Khwarizmi லத்தீன் மொழியில் 'Algoritmi' என்று அழைக்கப் பட்டார். அவர் எழுதிய புத்தகம் 'Al -Jabr wa-I-Muqabala' கி.பி. 830ல் கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்டதாகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல் அவர் கண்டுபிடித்ததாகும். Al-Piruni என்ற ஈரான் நாட்டு அறிஞர் பூமியின் அகலம், கடலிருந்து பூமியின் தூரம் போன்ற அளவுகளை துல்லிதமாக கண்டுபிடித்து மாலுமிகளுக்கு உதவியாக இருந்த 'Trigonometry' கண்டுபிடித்தார். அராபிய எண்ணிக்கைகள் ‘Ghubari’ என்று அழைக்கப் பட்டது ரோமன் எழுத்துக்களான X, V, I, C மற்றும் M என்பதினை விட எளிதானதாக கூறப் படுகிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் வட ஆப்ரிக்கா, தெற்கு ஐரோப்பா நாடுகளில்  முஸ்லிம் மையங்களில் பயின்ற மாணவர்கள் எண்களை ஐரோப்பாவிற்கு அறிமுகப் படுத்தினர். அன்று கண்டுபிடித்த Trigonometry தான் இன்று பூமிக்கும்-நட்சத்திரங்களுக்கும் உள்ள தூரம், கட்டிடங்கள் நீளம், அகலம், உயரம் போன்றவற்றினை கணிக்க பயன்படுகிறது.

            கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு தத்துவ மேதையும், விஞ்ஞானியுமான 'Al-Hindi' நவீன கண் சிகிச்சைக்கு வழிகோலியவர் என்று கூறப் படுகிறது. Al-HIndi யினை தொடர்ந்து Ibn Al Haythan கண்ணுக்கு ஒளி வெளியிலிருந்து  ஊடுருவதால் ஏற்படுவதாகும் மாறாக கண்ணிலிருந்து ஒளி வருவதில்லை என்பதினை கண்டுபிடித்தார். Ibn Al Haytham தான் காமிராவினில் உள்ள துளைமூலம் பார்க்கும் 'camera obscura' என்பதினை கண்டுபிடித்து 1827ல் பிரான்ஸ் நாட்டில் 1827ல் முதல் படம் எடுக்கப் பட்டதாம். Camera Obscura என்பது 'dark room' சொல்லக் குறிக்கும்.

            700 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் தண்ணீர் சுழற்சியில் ஓடும் கடிகாரத்தினை கண்டுபிடித்தார்கள். மணித்துளிகளை அளவிடுவது முஸ்லிம்களுக்கு முக்கியமானது. ஏனென்றால் இறை வணக்கத்திற்கு  மற்றும் முஸ்லிம் நோன்பினை எப்போது ஆரம்பிப்பது மற்றும் முடிவிற்கு கொண்டு வருவது என்பதற்கு கால அளவு முக்கியமானதாகும். கால அளவினை கணக்கிடுவதினை 'horology' என்கிறார்கள். துருக்கியில் பிறந்த இயந்திரவியல்  என்ஜினீயர் Ismail Al-Jazari 13ம் நூற்றாண்டில் தண்ணீரால் இயங்கக்கூடிய 'Elephant Clock' கண்டுபிடித்தார். அது ஒவ்வொரு அரை மணி துளிகளையும் துல்லிதமாக கணித்து ஒலியையும் எழுப்பக்  கூடிய சிறிய robot ஆக இருந்தது ஆச்சரியம் தானே! அது கி.பி. 1656ம் ஆண்டு டச் தேச விஞ்ஞானி Christian Huygens கண்டுபிடித்த 'Tell Time' என்ற 'pendulam clock' வரை இருந்தது.

            நமது குழந்தைகள் பலரும் கையில் வைத்து விளையாடுவது ரூபிக் என்ற கன சதுர கட்டையினைக் காணலாம். உலக கின்னஸ் ரெகார்ட் ஆக ரூபிக் என்ற கன சதுரம் மிக வேகமாக ‘பெபிள்ஸ்’ என்பவர்  4.22 வினாடியில் சாதனை படைத்துள்ளார் என்ற வரலாறு. ஆனால் அந்த ரூபிக்கினை முதன் முதலில் ஒன்பதாம் நூற்றாண்டில் கணிதத்தில் கைதேர்ந்த மூன்று ஈராக்கிய சகோதரர்கள் ஆன 'பனு மூஸா' ஆவார்கள். அவர்கள் கி.பி 850ல் புதிர்கள் எழுதிய புத்தகத்தில் 100 ட்ரிக் காட்ஜெட்ஸ் மற்றும் எந்திரங்கள் ஆகியவற்றை அடங்கும். Al Biruni என்ற முஸ்லிம் அறிஞர் Number Puzzles  என்ற கணித  புதிர்களில் சம்பந்தமாக புத்தகமே எழுதியுள்ளார்.

            முஸ்லிம் மன்னர்கள் மக்களுக்கு உதவக் கூடிய மருத்துவ மனைகளை உருவாக்குவதில் போட்டி போட்டுகொண்டு முன்னேற்றம் செய்தனர். முதன் முதலில் 872-874ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் 'Ahamed ibn Tulun' என்ற மன்னர் மிகப் பெரிய மருத்துவ மனை காட்டினார். நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ வசதிகள் செய்யப் பட்டது. துனிசியா நாட்டில் தொழு நோயாளிகளுக்கென்று தனி மருத்துவமனை இருந்தது. இன்றுள்ள நடமாடும் மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக முஸ்லிம் பாக்தாதினைச் சார்ந்த விஞ்ஞானி 'Sinan Ibn Thabit' நடமாடும் மருத்துவமனையினை ஆரம்பித்தார்.  13ம் நூற்றாண்டு சிரியா நாட்டு விஞ்ஞானி Ibn al Nafis எப்படி இதயத்திலிருந்து ரத்தம் நுரையீரலுக்கு வந்து காற்றுடன் கலக்கின்றது என்பதினை கண்டுபிடித்தார்..இதனையே தான் 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மருத்துவர் வில்லியம் ஹார்வி ரத்த ஓட்டத்தின் முழு விபரங்களையும் கண்டுபிடித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் மருத்துவ அறிஞர் ibn Sina மருத்துவ அகராதியினை எழுதியுள்ளார். அந்த மருத்துவ அகராதியினை ரோம நாட்டில் 1593ல் புத்தகமாக வடிவமைத்து ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. ஸ்பெயின் நாட்டு டாக்டர் Al-Zahrawi மருத்துவம், அறுவை சிகிச்சை சம்பந்தமாக ஒரு புத்தகமே எழுதியுள்ளார். எகிப்தில் இருந்த 'Ahamad ibn Tulun' என்ற மருத்துவ மனை உலகிலேயே முதலாவதாக மன நோய்க்கான சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால் நாம் இன்று ஆண்களையும், பெண்களையும் மன நோய்களுக்கு முறையான சிகிச்சையளிக்காமல் வீட்டிலேயே சங்கிலியால் கட்டி வைப்பதும், அல்லது தர்காக்களில் அனாதையாக விட்டு விடுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளோம் என்பது வருத்தமாக இல்லையா?

            நீங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் ஸ்பெயின் நாட்டில் பிறந்திருப்பீர்கள் என்றால் அங்கே பொது மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களை காண முடிந்திருக்கும். ஸ்பைனியில் அறுவை சிகிச்சையின் தந்தை என்று Al-Zahrawi அழைக்கப் பட்டார். அவர்தான் அறுவை சிகிச்சைக்குத் தேவையான Scalpel என்ற கத்திகளை கண்டுபிடித்தார். சிறுநீரக பையில் உண்டாகும் கற்களை உடைக்கும் Lithotripter என்ற உபகரனத்தினை கண்டுபிடித்தார். அவர் எழுதிய 30 அத்தியாயம் கொண்ட புத்தகங்கள்  லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப் பட்டது. 10ம் நூற்றாண்டு ஈராக்கிய கண் சிகிச்சை நிபுணர் Al-Mawasill கண் புரை நோயினை ஊசி கொண்டு உறிஞ்சி எடுத்து கண் தெரிய வைத்தார். முஸ்லிம் கண் நிபுணர்கள் தான் retina, uvea மற்றும் cornea போன்ற குறைபாடுகளை அராபிய மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். பிராணிகளுக்கும் சிகிச்சையளித்த செவிலி நாட்டினைச் சார்ந்த Ibn Zuhr மற்றும் பாரசீகத்தினைச் சார்ந்த Al-Razi போன்றவர்கள் இருந்துள்ளனர். 

            பூலோக மண் ஆராச்சியினை முஸ்லிகள் மேற்கொண்டு விலங்கியல், தாவரவியல் போன்றவற்றில் மிகைத்திருந்தது மட்டுமில்லாமல் பூமிக்குள் கிடைக்கும் வைரம், வைடூரியம், பவளம், போன்றவற்றினை ஆராய்ச்சிமூலம் கண்டுபிடித்தனர். Al-Hamdani என்ற அறிஞர் பத்தாம் நூற்றாண்டில் அராபிய மொழியில் தங்கம், சில்வர் மற்றும் விலையுயர்ந்த மண் வளங்களை பற்றி புத்தகமாக எழுதியுள்ளார். Al-Biruni என்ற 11ம் நூற்றாண்டின் ஈரானிய அறிஞர் மண் ஆராய்ச்சி பற்றிய புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் கங்கை நதியின் அமைப்பு மற்றும் பால்டிக் கடலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிகு வரை பூகோள அமைப்பினை விரிவாக எழுதியுள்ளார். பஸ்ராவில் பிறந்த Ibn Al Haythem ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்தி கட்டுக்கடங்காத நைல் நதி நீரோட்டத்தினை எப்படி கட்டுப் படுத்துவது என்று ஆராய்ததின் பயனாக Aswan அணைக்கட்டு கட்டப் பட்டது எகிப்திய நாட்டில். பாரசீக நாட்டு பத்தாம் நூற்றாண்டு சூரியனை ஆராய பெரிய observatory கண்டுபிடித்தார். 9ம் நூற்றாண்டின் ஸ்பெயின் Cordoba நாட்டு அறிஞர் Abbas ibn Firnas வானிலை அமைப்பினை கண்டுபிடிக்க ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். துனிசியா நாட்டின் அறிஞர் இயற்கை மருத்துவ செடிகள் 3000பற்றியும் அதன் பயனைப் பற்றியும் விரிவாக புத்தகமாக எழுதியுள்ளார்.

            இஸ்லாமிய கட்டிடக் கலைகளுக்கு அலங்காரமாக துருக்கிய ஏழு மலைகளை இணைக்கும் சினான் நகர ‘சுலைமானிய’ பள்ளிவாசலை உதாரணமாகிச் சொல்லலாம். ஒவ்வொரு பள்ளிவாசலில் உள்ள மினாராவை கலங்கரை விளக்கமாக கூறலாம். இந்தியாவின் தாஜ் மஹால், ஒவ்வொரு வருடமும் குடியரசினை கொடியேற்றி பறைசாற்றும் Redfort அங்கே பூங்காவில் ஓடும் நீரோட்டம் ஆகிவை முஸ்லிம் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகும். நாகரீகத்திற்கு எடுத்துக் காட்டு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகியவையாகும். விதவிதமான பல்வேறு வர்ணங்களைக் கொண்ட உடைகள் ‘ஆளி’ எண்ணெயிலிருந்து, ‘தங்க’ இழைகளால் இஸ்லாமிய நாடுகளில் தயாரிக்கப் பட்டது. முஸ்லிம்களால் தயாரிக்கப் பட்ட 400 தரை விரிப்புகள் ஆங்கிலேய மன்னர் ஹென்றி VIII அரண்மனையினை அலங்கரித்ததாம்.

                        முஸ்லிம்கள் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவினை என்பதால் சீனா வரை பயணம் செய்து பல நாடுகளை வென்றனர். பாலஸ்தீனிய பூகோள ஆராய்ச்சியாளர் Al-Muqaddasi 10ம் நூற்றாண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 14ம் நூற்றாண்டு மொரோக்கா நாட்டின் ஆராய்ச்சியாளர் Ibn Battuta உலகில் ஆப்பிரிக்கா, ஆசிய, ஐரோப்பா கண்டங்களில் 75000 மைல்கள் பயணம் செய்து பல அறிய செய்திகளை கொண்டு வந்ததினால் அவரை முஸ்லிம்களின் Marco Polo என்று அழைக்கப் படுவார். அவருடன் சீன தேசத்தினைச் சார்ந்த Zheng He என்ற முஸ்லிம் 15ம் நூற்றாண்டின் தலை சிறந்த கடல் பயண கண்டுபிடிப்பாளர் என்று சொல்லப் படுகிறது.

            முதலாம் நூற்றாண்டில் சீனர்கள் Saltpeter என்ற potassium nitrate பயன்படுத்தி வெடிப் பொருள் கண்டுபிடிக்கப் பட்டது. அதனையே முஸ்லிம் தளபதிகள் நவீனப் படுத்தி ஆயுதங்களை தயாரித்தனர். அதன் பயனாக சிலுவை யுத்தத்தினை வெடிபொருள் கையாண்டு வெற்றிகொண்டனர். முஸ்லிம்கள் முதன் முதலில் பீரங்கிகளை கையாண்டனர். அவர்கள் தயாரித்த பீரங்கிகளால் ஒரு மைல் தூரம் வரை வெடிப் பொருட்களை உபயோகிக்க முடியும். மைசூரை 1750-1799 வரை ஆட்சி செய்த திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்க்க ராக்கெட் பயன் படுத்தியதாகவும் ஆகவே அதன் பிரதிபலிப்பாக அமெரிக்கா நாசாவில் அவர் படத்தினை பார்த்ததாக தனது பயணக் குறிப்பில் முன்னாள் குடியரசு தலைவர் அபுல் கலாம் குறிப்பிட்டுள்ளது எவ்வளவு பெருமையாக உள்ளது. 1867ம் ஆண்டு சுல்தான் மெஹ்மத் இங்கிலாந்து அரசி விட்ட்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுத்த பீரங்கி இன்றும் இங்கிலாந்து போர்ட்மவுத் அருங்காட்சியகத்தினை அலங்கரிக்கின்றது. சிரியா நாட்டு அறிஞர் Hasan Al Rammah பல்வேறு ஆயுத யுக்திகளை புத்தகங்களாக எழுதியுள்ளார். அதனில் நீரை கிழித்துக் கொண்டு சீறிப் பாயும் torpedo முக்கியமானதாகும்.

            ஐரோப்பாவில் காற்றாலை கண்டுபிடிப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் காற்றாலைகளை 7ம் நூற்றாண்டில் கலீபா உமர் காலத்தில் கண்டுபிடித்து மாவை அரைப்பதிற்கும், செடிகளுக்கு நீர் பாச்சுவதிற்கும் தெரிந்திருந்தனர்.

            முற்காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் முன்னேற முயன்றாலு, தற்போதய முஸ்லிம் மன்னர்கள் ஆராய்ச்சிகளுக்கு முக்கியம் கொடுக்காது, தங்களது நாடுகளின் பாதுகாப்பிற்கு உட்பட மேலை நாடுகளை நம்பி இருப்பது மன வருத்தமாக இருக்கின்றது தானே! உலகிலேயே சீனா, பிரான்ஸ், ஹார்வார்ட் பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சியில் முன்னெனியில் உள்ளன. இந்தியாவில் கூட ‘டாடா, பிர்லா, CSIR’ ஆராய்ச்சி மையங்கள் முன்னேறியுள்ளன. ஆனால் இந்திய முஸ்லிம் ஸ்தாபனங்கள் வெறும் கல்லூரிகளை ஆரம்பிக்க போட்டிப் போடுகின்றன,  ஆராய்ச்சிக்காக எந்த முயற்சியிலும் எடுக்காததால் நம்மைப் பற்றி ஏளனமாக ஏச்சுக்கும், பேச்சுக்கும் இடம் கொடுத்துள்ளோம். ஆகவே நமது முன்னோதையர் எவ்வாறெல்லாம் ‘மெடீவல்’, வரலாற்றின் இடைக்  காலங்களில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு பெருமையினை சேர்த்தார்கள் என்று எண்ணி நாமும் முயற்சி செய்யலாமே!