Sunday 20 December, 2015

தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பி.எச்டி; ஐ.பீ.எஸ்(ஓ)
தமிழகத்தில் 2015 நவம்பர் 14ல் பிடித்த வட கிழக்கு அடை மழை டிசம்பர் 11 வரை நீடித்தது மட்டுமல்லாமல், பள்ளி  செல்லாமல் இருந்த பிள்ளைகள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் மக்களும் 'ரெயின், ரெயின் கோ எவே' அதாவது ,'மழையே, மழையே நீ எப்போது போவாய்' என்று பாட்டுப் படிக்கும் அளவிற்கு, அண்டை மாநில அரசுகள் தண்ணீர் தரமறுத்து தரிசு நிலமான தமிழகத்தில்   சொல்லவென்னா துயரத்தினையும், துன்பத்தினையும் ஏற்படுத்தி விட்டது என்றால் மிகையாகாது
உலகத்தில் கி.மு.2500லிருந்து கி.மு.2300க்குள் அதாவது கி.மு.2348ம் ஆண்டு இறை தூதர் நோவா அல்லது நூஹு என்று அழைக்கப் படும் நேசரை அங்குள்ள மக்கள் துன்புறுத்தியதால் இறைவன் கட்டளைப் படி ஒரு மரக் கப்பலை தயார் செய்து தன் அடியார்கள், வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றினை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் போது, துரத்தி வந்த எதிரிகள் கடல் பொங்கி மூழ்கடிக்கப் பட்டதாக வரலாறு. அப்போது ஏற்பட்ட மாற்றத்தால் தான் உலகின் உயரமான எவரெஸ்ட் மலை, அண்டார்டிகா, ஆல்ப் மலை போன்றவை கடலிலிருந்து மேலே வந்ததாக கூறப் படுகிறது.
20ஆம் நூற்றாண்டு, மற்றும் இந்த நூற்றாண்டில் நடந்த வெள்ளங்களில் முக்கியமாக கருதப் படுவது 1931 ஆம் ஆண்டு சீனாவின் வெள்ளமாகும். அந்த வெள்ளம் 1,04,000 மக்களை பலி வாங்கியது.
2) 2004 ஆம் ஆண்டு ஆசியா கண்டத்தில் பல நகரங்களை புரட்டிப் போட்டு 2,80,000 மக்களை காவு கண்டது சுனாமி ஆகும்.
3) 2005 ஆண்டு அரேபியக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாக்கத்தால் மும்பை நகரம் ஸ்தம்பித்து வெள்ளத்தில் 1094 பேர்கள் உயிரிழின்தனர்.
4) ஜப்பான் நாட்டில் 2011 மார்ச் மாதத்தில் புகிஷிமா தீவு நகரத்தில் ஏற்பட்ட பூகம்பும், பெரு வெள்ளமும் 15,893 உயிர்களை பலி வாங்கியது.
5) பூனா நகரில் பைரோபா நல்லா, வகதி நல்லா, வகோலி நல்லா, ராம் நதி, அம்பில் ஓடை, நந்துகி போன்ற  ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் மறைக்கப் பட்டு 2010, 2013 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் சேதத்தினை உண்டாக்கியது.
2015 ஆண்டு நவம்பர் 13,14 தேதிகளில் ஆரம்பித்த அடை மழை டிசம்பர் 11 வரை வெளுத்து வாங்கி செம்பரம்பாக்கம், பூண்டி,புழல், போரூர் போன்ற ஏரிகள் நிரம்பி 1918 ஆண்டு108.8 செ.மீ பெய்த மழையின் அளவினை விட 119.73 செ.மீ தாண்டியது.
2015 ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி மழை பெய்த பொது 30, 000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றாலும், நீர் வரத்து அதிகமானதாக இருந்ததால் ஒரு லட்சம் கன அடியினைத் தாண்டியிருக்கும் எனக் கூறப் படுகிறது. அப்படி திறந்து விடப் பட்ட நீர் அடையார், பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு நிறைந்து தென் சென்னை பகுதிகளான அடையாறு, வேளச்சேரி, நீலாங்கரை, பெரும்பாக்கம், தாம்பரம்,பல்லாவரம், வளசரம் பாக்கம், விருகம் பாக்கம், போரூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் திறந்து விட்டததினால் மாதவரம், அம்பத்தூர், ஆவடி, முகப்பையூர், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, நேத்தாஜி நகர் போன்றவை பாதிக்கப் பட்டு மக்கள் சொல்லவொன்னா துன்பம் அனுபவித்தனர். ஏழை, பணக்காரன், குடிசையில் வாழ்பவன், கோபுரத்தில் குடியிருக்கும் கோமான் போன்றோர் தண்ணீரில் தத்தளித்தது ஒரு பிடி சோற்றுக்காகவும் , ஒரு மடக்கு தண்ணீருக்காகவும் ஏங்கும் பரிதாப நிலை கண்டு நெஞ்சை உருக்கியது. பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்களும், பத்திரப் படுத்திய பத்திரங்களும், பகட்டான உடைகளும் களி மண்ணோட, மண்ணானது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் 172 கிலோ மீட்டர் சுற்றலளவுள்ள ஜார்ஜ் டவுண், ராயபுரம், வண்ணாரபேட்டை போன்ற பழைய சென்னை நகரத்தில் வெள்ள நீர் வடிய  ஆங்கிலேய காலத்தில் கட்டப் பட்ட கால்வாய்கள் உள்ளன. ஆனால் 254 கிலோ மீட்டர் சதுர பரப்பிலுள்ள தென் சென்னையில் அபரிமிதமான மழை நீர் ஓடி நதிக் கரைகளில் கலக்கும் திட்டம் எதுவுமில்லாததால் சேதம் அதிகமானது. தற்போது உள்ள நிலையில் சென்னை நகரம் 3 செ. மீ. மழைத் தண்ணீரைத் தான் தாங்கும் சக்தி கொண்டது. நெதர் லாந்து, ஐரோப்பிய நாடுகள் இணைந்து  ரூ 1000/ கோடி உலக வங்கிக் கடனுடன் அடியார், கூவம் நதிகளை சீரமித்து 6.8 செ.மீ. மழையினை வடிகாலுக்குக் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. ஆனால் கோசல் தலையார், கோவளம் நீர்நிலை ஆகியவைகளில் மழைநீர் வடிய திட்டம் தீட்டப் பட்டும் எந்த நிறுவனமும் அமல் படுத்த முன்வரவில்லை.
ஒரு மாத அடை மழையின் தாக்கம் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. கடலூர் மாவட்டம் கடல் பகுதியானதால் வட கிழக்கு பருவமழை பெய்யும் போது எப்போதுமே பாதிப்பதினை சந்திக்கும் மாவட்டமாகும். சுனாமி காலத்தில் பல் வேறு துன்பங்களை சந்தித்தது இந்த மாவட்டம். அத்துடன் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் பக்கத்து பயிர் நிலங்களையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையில் அதிகமாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக கருதப் படுவது பின் வருமாறு:
1) வழக்கம் போல வட கிழக்கு பருவ மழை பெய்யாமல், இந்தத் தடவை வானம் பொத்துக் கொண்டு கொட்டியது போன்ற கன மழை 'எல் நினோ' காற்று சுழற்சியால்  பெய்தது.
2) சென்னையில் ரோடு, தண்ணீர், மின்சாரம், கட்டமைப்புக்கு பஞ்சமில்லை என்று வெளி முதலீட்டார்களை இழுக்க அபாயகரமான கட்டமைப்புகளை சென்னை புறநகரில் ஏற்படுத்தியது.
3) அதனால் நீர் நிலைகள், குழாங்கள், ஏரிகள்,பெரும்பாக்கம், பள்ளிக் கரனை போன்ற சதுப்பு நிலங்களில் வானளாவிய கட்டிடங்கள் எழுப்பியது சிறிய மழைக்குக் கூட வடி வாய்க்கால் அமைக்காமல் இருந்ததால் வெள்ள சேதம் அதிகமானதாக சுற்றுப் புற சூழல் கட்டமைப்பு மைய டைரக்டர் சுனிதா நாராயணன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் 1980 இல் 600 நீர் நிலைகள் 1130ஹெக்டார் ஏக்கர் நிலம் சென்னையினை சுற்றி இருந்தது. அது 2000 ஆம் ஆண்டு 645 ஹெக்டார் நிலமாக மாறியது.
பள்ளிக் கரனை, போரூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், முகைப்பையூர் ஏரி போன்ற பல கட்டமைப்பு வரைவு திட்டங்கள் நீர் நிலைகளை மறைத்து விட்டது. அதில் சில அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் தங்கள் பலத்தினை உபயோகித்து பக்கத்து நிலையங்களைக் கூட வளைத்துப் போட்ட சம்பவங்களும் உண்டு என்பதிற்கு ஒரு உதாரணத்தினை உங்களுக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்.
மணப்பாக்கத்தில் உயர் காவல் அதிகாரிகள் இல்லத்திற்கு கூட்டுறவு சொசைட்டி ஏற்படுத்தி நிலங்கள் கைப்பற்றப் பட்டு போரூர் ஆறு ஓரத்தில் உள்ள தனியார் நிலத்திலும் கை வைக்க ஆரம்பமானதால் அதனை தடுக்க வந்த நில உரிமையாளர் தள்ளி விடப் பட்டு மரணமானதால் ஒரு உயர் காவல் அதிகாரி மீது அந்த நில சொந்தக் காரர் மகன் கொடுத்த புகாரில் விசாரணையே நடந்தது 2002 ஆம் ஆண்டு. ஆனால் அந்த மணப்பாக்கம் கிராமம் கூட வெள்ளத்தில் தத்தளித்தது. பலர் உடுத்திய துணியோடு படகில் வெளியேறிய காட்சியினை தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.
சென்ற மழை 280 உயிர்களை பலி கொண்டது, 20.000/ கோடிக்கு மேல் சேதம் ஏற்படுத்தியது. வீடு இழந்த 1,64,000/ மக்கள் 460 முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர்.
பாதிப்பு உண்டான செய்திகளில் நெஞ்சை உருக்கும் சம்பவம் சில மட்டும் உங்கள் முன்பு வைக்கலாம் என நினைகின்றேன்:
1) வெள்ளம் வருகின்றதே என்று வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு கணவனும், மனைவியும், பெஞ்ச் மேல் ஏறி நின்றனர், ஆனால் வெள்ளம் அதன் மேலும் வந்ததால் ஒரு மேஜை அதன் மேல் போட்டு ஏறி நின்றனர். ஆனாலும் வெள்ளம் அவர்கள் முனங்காலுக்கு வந்ததால் மேலே உள்ள காற்றாடியினைப் பிடித்துக் கொண்டு நின்றனர். அந்தோ, மனைவி கைப்பிடி நழுவி விடுகிறது தண்ணீரில் விழுந்து மூழ்கிறாள், கணவன் கண் முன்னாள். வயதான அவர் மனம் எப்படி பதைத்திருக்கும் என்று உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
2) நந்தம்பாக்கத்தில் ராணுவ குடியிருப்பில் ஓய்வு பெற்ற ஒரு கர்னலும், அவர் மனைவியும் வெள்ளம் வருகின்றதே என்று கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கிறார்கள், அவர்களால் தப்ப முடியவில்லை. அதன் பின்பு மீட்புக் குழுவினர் கதவை உடைத்து உள்ளே செல்லும்போது இருவரும் இறைவனிடம் சேர்ந்தது கண்டு சோகமே உருவானது.
3) சென்னை புறநகர் பகுதியில் தாயும், மகனும் தரைப் பாலத்தினைக் கடக்கும் போது தண்ணீரின் வேகத்தில் தாய் கண் முன்னே மகன் இழுத்துச் செல்லப் படும் தொலைக் காட்சி பாழும் நெஞ்சை  உருக்கியது.
4) கோயிலம்பாக்கத்தில் பேங்க் ஊழியர், தனது உதவி தலைமை ஆசிரியையான மனைவியை டெல்லியில் நடக்கும்  ஒரு கருத்தரங்கிற்கு வழியனுப்ப, இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு வாடைகைக் காரில் விமான நிலையம் இரவில் செல்லும்போது, அங்கே சென்றதும் தான் தெரியும் அடை மழையால் விமான நிலையமே ஒரு சிறு குளமாக இருந்து, விமான சேவை ரத்து செய்யப் பட்டு, 1500 பயணிகள் அங்கேயே காத்திருந்தனர் என்று. பின்பு அவர்கள் வீடாவது  போய் சேரலாம் என்று கேளம்பாக்கம் வரும்போது அங்கே வெள்ளம் கடை புரண்டு ஓடியது. வாடகை கார் டிரைவர் தான் வண்டி ஓட்ட முடியாது என்று சொல்லி விட்டதால், பிள்ளைகள் இரவில் வீட்டில் தனியாக இருக்குமே, நடந்தாவது வீடு போய் சேருவோம் என்று பொடு நடையாய் வீடு திரும்பும்போது வெள்ளம் அவர்களை காவு கொண்டது. பிள்ளைகள் வீட்டில் பெற்றோரைக் காணாது தவியாய் தவித்தன. 5 நாட்கள் பிறகு தான் அவர்கள் உடல் மீட்கப் பட்டது என்று சொல்லும்போது 'பாச மலர்' பட ஞாபகம் வந்து உங்கள் நெஞ்சம் பதைக்க வில்லையா உங்களுக்கு?
5) மணப்பாக்கத்தில் அமைந்திருக்கும் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிட்சைப் பிரிவில் சேர்ந்து சிகிட்சை செய்ய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயிக்கு மேலாகும். எப்படியும் உற்றார், உறவினர் பிழைத்து விடுவார்வளே என்று கடனை, உடனை வாங்கி வைத்தியம் செய்த 18 நோயாளிகள் பிராண வாய்வு இல்லாமல் இறந்தது பரிதாபமில்லையா?
6) ஏழை மக்கள், நடுத்தர வகுப்பினர், சொகுசு பங்களாவில் வாழும் மக்கள் வித்தியாசமில்லாமல் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 30 விற்கவேண்டியது ரூ 150 க்கும், ஒரு லிட்டர் பால் ரூ 50க்கு விற்கப் படுவது ரூ 100 க்கும் விற்றாலும் கிடைக்காமல் அவதிப் பட்டக் கொடுமைமையிலும், கொடுமையில்லையா?
ஈர நெஞ்சங்கள்:
தமிழக மக்கள் படும் பாட்டினைக் கண்ட அனைத்து சமூகத்தினவரும் தங்களால் முடிந்த அளவு போட்டிப் போட்டுக் கொண்டு உதவ முன் வந்தது பாராட்டத் தக்கது. 'தானத்தில் சிறந்தது அன்ன தானம்' என்பார்கள். வெளி மாநில நல்ல உள்ளங்கள் கூட ஓடோடி வந்து சமைத்து மக்களுக்கு வழங்கினர். வெளி நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூட உதவி செய்யத் தவறியதில்லை. 'கவலைப் பட்டவரின் கண்ணீரைத் துடைப்பதும் ஒரு வணக்கம் தான் என்று இஸ்லாம் சொல்லுவது பொய்க்கவில்லை.
அல்குரான் 23:52 இல் 'நிச்சயமாக உங்கள் சமூதாயம் ஒரே சமூதாயம் தான்' என்றும் கூறுகிறது. அனைத்து ‘சமூகமும் ஒற்றுமை’ என்று  இந்த நிவாரண வேலையில் எடுத்துக் காட்டியது.
நிவாரண உதவியினைத் தடுக்க சில சம்பவம் நடந்தாலும் அதையெல்லாம் பெரிதாகக் கவலை கொள்ளாது 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நோக்கத்துடன்  உதவி செய்தது போற்றத் தக்கது.நிவாரணப் பணியில் சிறப்பு வாய்ந்தவை:

1)  தொழிலதிபர் யூனுஸ் தன் சகாக்களுடன் நிவாரணப் பணியில் ஈடுபட்டபோது, அவருக்கு ஒரு தகவல் கிடைக்கின்றது. என்னவென்றால் ஒரு நிறைமாதக் கற்பிணிப் பெண் மொட்டை மாடியில் காப்பாற்ற கத்திக் கொண்டு இருக்கிறாள் என்று. உடனே ஒரு படகு  ஏற்பாடு செய்து வெள்ளத்தில் அந்த வீட்டிற்க் சென்று அந்தப் பெண்மணியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றார். அந்தப் பெண்ணுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அந்தக் குழந்தைக்கு தன்னைக் காப்பாற்றிய தொழிலதிபர் யூனுஸ் பெயரையே வைக்கின்றார் அதனுடைய தாய், அவர் வேற்று மதத்தினரானாலும். உடனே அந்த அதிபரும் அந்தக் குழந்தை படிப்புச் செலவு முழுவதும் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.
2)  பேரிடர் மீட்ப்புக் குழுவினர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது ஒரு மொட்டை மாடியில் ஒரு பெண் பிரசவ வலியால் அவதிப் படுவது அறிந்து அந்தப் பெண்ணை மிகவும் சிரமப் பட்டு மீட்டு போரூர் மருத்துவ மனையில் மீட்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இந்திய ஏர்-மார்சலே அங்கு சென்று பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து சொன்னதாக தகவல் கூறுகிறது.
3)  பெரு வெள்ளத்தால் வீட்டை விட்டு சென்ற ஒரு குடும்பத்தினர் வெள்ளம் சிறிது வடிந்ததும் வீடு திரும்பி நனைந்த பொருட்க்களை வெளியே தூக்கிப் போடும் பொது ஒரு பழைய துணிப் பையையும் தூக்கி வெளியே எறிந்துள்ளார்கள். அப்போது கழிவுகளை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சமூக சேவை அமைப்பினர் அந்தப் பையினை மீட்கும் போது அதனில் ஒரு டிபன் கேரியர் இருந்துள்ளது. அதனை திறந்து பார்க்கும் போது 10 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும் இருந்ததாம். அருகில் விசாரிக்கும் போது பையினை போட்ட வீட்டுக் காரர்கள் சரியாக அடையாளம் காட்டி தனது பிள்ளை படிப்பிற்காக சேர்த்து வைத்திருந்ததினை தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டதாக சொல்லி கண்ணீர் மல்க நன்றி செல்லி பெற்றுக் கொண்டார்களாம்.
4)  திருவெற்றியூர் நகரைச் சார்ந்த இம்ரான் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் பள்ளி விடுமுறையானதால் காய்ச்சலோடு இருந்துள்ளான். கார்கில் நகரில் மக்கள் படும் துயரம் கேட்டு மனசு கேட்காமல் தாயாரிடமும் சொல்லாமல் மழையோடு மழையாக நிவாரணக் குழுவினருடன் சென்று முனங்காள் அளவு தண்ணீரில் சென்று உதவி, இரவில் வீடு வந்தவன் ஜன்னி கண்டு அவதிப் பட்டுள்ளான். உடனே அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அவனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பயனில்லாது இறந்தது கண்டு திருவெற்றியூர் நகரமே சோகத்தில் மூழ்கியது.
தமிழ் நாட்டு மக்கள் சிலர் சினிமா கதாநாயகர்களை தங்கள் ஹீரோக்களாக கருதுவார்கள். 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு தமிழகம், புதுச்சேரி கடலோர மக்கள் சொல்லவொன்னா துன்பம் அனுபவித்தபோது வடநாட்டில் மிகப் பிரபலமான நடிகர் விவேக் ஓபராய் தன் காதலி தடுத்தும் கேட்காது இங்கே ஓடி வந்து 3 மாதங்கள் தங்கி இருந்து வீடுகள் கட்டித் தந்தார்.  அனைத்து பத்திரிக்கை உலகமே பாராட்டியது.
சமீபத்தில் பெய்த மழையில் இளம் நடிகர்கள் பல வெள்ள  நிவாரணம் செய்தும், நிதியாக ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 15 லட்சம் வரை கொடுத்தார்கள் முன்னணி நடிகர் உள்பட. ஆனால் உடலில் ரத்த கேன்சருடன் போராடி, அனாதை இல்லம் நடத்தும், டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ரூபாய் ஒரு கோடியும், வடநாட்டு நடிகர் அக்ஷை குமார் ரூபாய் ஒரு கோடியும் வெள்ள நிவாரணம் கொடுத்து அசத்தியதும், இங்கே உள்ள முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், அந்த அளவிற்கு தாராளமாக அள்ளிக் கொடுக்க மனம் வராததும், விவேக் ஓபராய் மாதரி முன்னணி நடிகர்கள் வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் சந்திக்காது, வெளி நாட்டில் படப் பிடிப்பிற்காக இடம் தேடுவதும் வெட்கமாக தெரிய வில்லையா உங்களுக்கு?
பெரு வெள்ளம் ஒரு மன நிறைவினைத் தந்துள்ளது. என்னவென்றால் எங்கே மழை பெய்யாது நிலத்தடி தண்ணீர் முழுவதும் உப்பாகி விடுமோ என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கும்போது வர்ண பகவானாக இறைவன் வந்து மழையினைப் பொழிந்து தள்ளியது மூலம் ஏற்கனவே இருந்த உப்பு நிலத்தடி தண்ணீரும் சுவை மிக்க தண்ணீர் ஆனது.
'விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியணுத்து உன்னின்று ஊற்றும் பசி' வள்ளுவர்.
கடல் நீர் சூழ்ந்து உலகமாயினும் மழை பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை தாளாது என்றும் பொருள். ஆகவே தான் அண்டை மாநிலத்தவர் விவசாயத்திற்கும், குடிப்பதிற்கும் தமிழகத்திற்குக் கொடுக்காமல் வஞ்சகம் செய்வதினைப் பார்த்த இறைவன் அடை மழை வெள்ளம் தந்தான்.

குறை என்று சொல்லும் போது ஒன்றே ஒன்றை பதிவு சொல்லாமல் இருக்க முடியவில்லை:
பெரு வெள்ளத்தினைத் தடுத்து நிறுத்தி கல்லணை கட்டிய கரிகால் சோழனையும், முல்லைப் பெரியார் அணையினை கட்டிய பென்னி குகையும் பின் பற்றாது. வெள்ள நீர் அநியாயமாக கடலில் கலந்தது மனத்தினை வருடியது. வடத் தமிழகத்தில் பாலார் என்ற மணல் நதியும், தென் தமிழகத்தில் வைகையும் இந்தத் தடவை கரைப் புரண்டு ஓடியது. அந்த வெள்ளத்தினைக் கூட இடை, இடையே தடுத்து செக் டேம்ஸ் கட்டாது விட்டது காலத்தின் கொடுமையா அல்லது மனிதத் தவறா, மழை நீர் வடிகால் அமைக்காது வீதிகள் தோறும் மழை நீர் கண்ணீர் மல்கிய சோக கதைகள் சொன்னது யார் தவறு என்று கருத்து சொல்லும் கடமையினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!.

Sunday 22 November, 2015

Sentiments of Ordinary Muslim

அன்புள்ள சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அழைக்கும்.
இத்துடன் சென்னை மண்ணடி பகுதியில் புதுத்தெருவில் 9/17 கதவிலக்கம் உள்ள வீட்டில் வசிக்கும் காயல் பட்டணத்தினைச் சார்ந்த ஏ. எம். பாருக் என்பவர் உலக, இந்திய, தமிழக இன்றைய நிலை பற்றியும் அவருடைய ஆதங்கத்தினையும் கூடிய 20.11.2015 தேதியிட்ட கடிதத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். உங்களுடை கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்:
அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
 அன்புள்ள முகமது அலி அண்ணன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்!

முக்கியம் தாங்கள் எழுதிய 'சமுதாய பிரட்சனைகளும், தீர்வுகளும்' என்ற  புத்தகம் சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து வாசித்தேன். சூப்பர். அல்ஹம்து லில்லாஹ்!
அதில் நம் இஸ்லாமிய சமூதாயத்திலும், நம் நாட்டிலும், உலக அளவிலும் மலிந்துள்ள அவலங்களையும் விரிவாக குறிப்பிட்டிருந்தீர்கள்.
நம் சமூதாயத்தின் சீரழிவிற்கு காரணம்-35-50 கூட இருக்கலாம். இப்படி ஆளாளுக்கு இயக்கங்கள் துவக்கி ஈகோவால் இவர்கள் பற்றி அவர்களும், அவர்கள் பற்றி இவர்களும் ஆனா, ஆவன்ன, ஈனா, ஈயன்னா என பல பெயார்களை வைத்துக் கொண்டு, வசைபாடி, அதை, இதைச் சொல்லி பண வசூல் செய்து, தமது நிலையில் சொகுசாக வாழ்கின்றனர். அவர்களில் யாருக்குமே நம் சமுதாய முன்னேற்றத்திற்கான உருப்படியான காரியங்கள் செய்ததாகக் காணோம்.
நம் தமிழ்நாட்டினைப் பொருத்தமட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் சீரழிவு ஆரம்பம் . மது, லாட்டரி, இலவசங்கள், சினிமாவுக்கு வரிவிலக்கு, தலைவர், தலைவிக்காக உயிர் விட்ட கழிசடைகளுக்காக இழப்பீடு இப்படி லக்ஷக்கணக்கில், எதற்கும், யாருக்குமே பயனில்லாதவர்களுக்கு சிலை, மணிமண்டபம், பிறந்த நாள், நினைவு நாள் விழா என இப்படி கோடிக் கணக்கில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறது.
மேலும் நமது தாய்நாடு இந்தியாவைப் பொறுத்தவரை B.J.P, V.H.P, R.S.S, Siva sena போன்ற காவி பயங்கர ஹிந்துத்வா கட்சிகள் முஸ்லிம்களுக்கு அடுத்தடுத்து துவேசத்தைப் பரப்பி பல இடங்களில், பல விதங்களில், பலவித பயங்கர தாக்குதல்கள்(அரசு, காவல்த் துறை கூட்டாக இணைந்து)நடத்தி முஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு பல ஆயிரம்,லக்ஷம், கோடிக் கணக்கில் பேரிழப்புகள் துணிந்தே செய்கின்றனர். பாதிக்கப்பட்ட நமக்கு ஏதோ பெயரளவில் நஷ்டஈடு வழங்கி அந்த கொலைகார, கொள்ளைக்காரர்களுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படுவதில்லை.அப்படியே ஏதும் தண்டனை எனில் வழக்குகள் 15, 20 வருடம் என நடந்து கைது, ஜாமீன், விடுதலை என நடக்கும்.
அதே சமயம் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப் பட்டவர் முஸ்லிம் எனில் கைது, கடும் விசாரணை, சிறையில் வன் கொடுமை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என துரிதமாக அப்பாவி முஸ்லிம்கள் கூட தண்டிக்கப் படுகிறார்கள். நம் நாட்டில் முஸ்லிம்களுக்கு சோதனை காலம். அல்லாஹ்விடம் நமது பாதுகாப்புக்கு இருகை ஏந்தி துவா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நம்மை பாதுகாக்க அவன் ஒருவனே போதுமானவன். நமது ஈமான் மிகவும் பலவீனமாக, சரீஅத்துக்கு புறம்பாக நாம் நடப்பதால் அநியாயக்கார ஆட்சியாளர்கள் நம்மீது போடப் பட்ட தண்டனை.
மேலும் உலகளவில் அமேரிக்கா, இஸ்ரேயில், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற யஹூதி-நாசகார கொடுங்கோலர்கள் , முஸ்லிம் நாடுகளில்(எகிப்து, லிபியா, துனிஸ், ஏமன், ஈராக், ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான்) பல பொய் காரணங்களை சாட்டி, அத்து மீறி புகுந்து அந்நாடுகளை இன்னும் 40,50 ஆண்டுகள் இன்னும் சீர் செய்ய முடியாத அளவிற்கு சீரழித்து விட்டனர். அரபு நாடுகளை யஹூதிகள் அடிமைகளாக்கி ட்ரில்லியன் டாலர்கள் அளவில் கொள்ளை அடித்து அவர் தம் நாடுகளை வளமாக வைத்துள்ளனர்.
அநியாயமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனையும், லிபியா அதிபர் முஆம்மர் கடாபியை சுட்டுக் கொன்றும், மேலே எழுதிய பிற நாட்டு முஸ்லிம் தலைவர்களை நாட்டை விட்டு விரட்டி, அந்நாடுகளில் மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழ வழியில்லாமல் செய்து விட்டனர். உலக அழிவு நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

அல்லாஹ் முஸ்லிம்களை சகல சோதனைகளை விட்டும் காப்பாற்றுவானாக, ஆமீன். தாங்களும் துவா செய்து கொள்ளுங்கள், மற்றவை பின் வஸ்ஸலாம்.

Thursday 12 November, 2015

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!
தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)

1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர்  உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2)     20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின் புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளோம்.
ஆனால் அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும் கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3)     உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான 2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4)     மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால் இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5) வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால் உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.

6) மது பிரியர்கள் மது அருந்துவது உஸ்னத்தினை அதிகப்படுத்தி வீரியத்தினைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் மது அருந்தினால் உடலின் சீதோசனத்தினைக் குறைத்து தாம்பத்திய நேரத்தில் வெடிக்காத புஸ் வானமாகும்.

7) உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக் கூடாது, அவ்வாறு அருந்தினால் ஜீரணத்திற்குத் தடுக்கும் என்று நம்பிக்கை.
ஆனால் உணவு உண்ணும் பொது சிறிது நீர் அருந்துவது ஜீரணத்திற்கு உதவி செய்யும்.

7) மரங்கள், வீடுகளில் தலை கீழாகத் தொங்கும் வௌவாலுக்கு கண் பார்வை தெரியாது என்று சொல்வார்கள்.
உண்மையில் வௌவாலுக்கு கண் நன்றாகவே தெரியும். அத்துடன் எதிராளியின் ஒலியினையும் நன்கு தெரியும்.

8) தினந்தோறும் முகச் சவரம் செய்வதால் முடி தடிப்பாக சொர  சொரப்பாக தெரியும் என்று சொல்வார்கள்.
உண்மையில் முகச் சவரம் செய்யும் போது முடி முனை மங்கி லேசாகவும் இருக்கும்.

9) தூக்கத்தில் நடப்பவனை தட்டி சுய உணர்விற்கு வர செய்யக் கூடாது என்பார்கள்.
உண்மையில் தூக்கத்தில் நடப்பவனை தட்டி எழுப்புவது மூலம் அவன் எங்காவது மோதி விபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.

10) காளை  மாடுகளுக்கு சிகப்பு அல்லது வெள்ளைத் துண்டு ஆகியவினைக் காட்டினால் கடுங்கோபம் வந்து முட்ட ஆக்ரோசமாக வரும் என்பார்கள்.
மாறாக காளை மாடுகள் முன்பாக ஏதாவது ஒரு துணியினை ஆட்டினால் முட்ட வரும் என்பது தான் உண்மை.

11) இருட்டில் போனால் பேய், பிசாசு வரும் என்பார்கள்.
ஆனால் சுடுகாடே கதி என்று கிடக்கின்ற வெட்டியானை மட்டும் ஏன் பேய் விட்டு வைத்திருக்கின்றது.
இருட்டாக இருக்கும் இடங்களில் வெளிச்சம் போட்டு வைத்தால் பேய் என்ற சொல்லுக்கே இடமில்லை.
முன்பெல்லாம் மின்சாரம் இல்லாத வீடுகளில் இரவில் காண்டா விளக்கு அல்லது சிறு சிம்னி விளக்கினை இரவிலும் எரிய விட்டு இருப்பதினை நாம் பார்த்திருக்கின்றோம். அது எதற்காக என்றால் சிறு குழந்தைகள் அல்லது பெண்கள் பயப்படக் கூடாது என்ற எண்ணமே!
12) 13) சிங்கம் மரம் ஏறாது என்றும், காட்டுக்குள் செல்லுபவர் சிங்கம் வந்தால் மரம் மேலே ஏறி தப்பலாம் என்று கூறுவார்.
உண்மையில் சிங்கம் நீண்டு வளர்ந்த 30 அடி ஓக் மரத்தில் கூட ஏறும்.

ஆகவே நாம் மடமையுனைப் போக்கி, தன் குழந்தைகளுக்கும் விழிப் புணர்வு அடைய அறிவுப் பூர்வாமாக எதனையும் சிந்தித்து செயலாற்றலாமே!

Saturday 31 October, 2015

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல் படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். அதில் உறுப்பினர் யார், யார் என்பது அந்த பொது நிர்வாகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.
பள்ளி வாசல்களை வக்ப்த் சட்டம் மற்றும் ஸ்கீம் வழிமுறைகள் படி நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப் பட்டவர் களே பள்ளி வாசல்களை நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப் பட்டவர் களே பள்ளி வாசல்களை நிர்வாகித்து வருகின்றனர்.
ஆனால் இறைவனின் இறை இல்லங்களில் நிர்வகிப்பது சம்பந்தமாக அல் குர்ஆனில்  அத்தியாயம் 9 அத் தவா வில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
9:17 இறை நிராகரிப்போருக்கு பள்ளி நிர்வாக நிர்ணயம் செய்யும் உரிமையில்லை .
9: 18 அல்லாஹ்வின் பள்ளியினை பரிபாலனம் செய்கின்றவரேல்லாம் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையும் நிறைவேற்றி, சக்காத்துக் கொடுத்தும், அல்லாஹ்வையன்றி மற்றவருக்குப் பயப்படாதவராகவும் இருக்க வேண்டும்.
9: 19 விசுவாசம் கொள்ளாமல் இருந்து கொண்டு, ஹாஜிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம் என்று கூறிக் கொள்கின்றவர்களும், இறை இல்லத்தினை சிறப்புற பராமரிப்போர்களும், இறை இணை வைக்காதவர்களும் ஒன்றாக மாட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட சரத்துக்கள் படி பள்ளி நிர்வாகிகள் தொழுகையினை நிறைவேற்ற வேண்டும், சக்காத்துக் கொடுக்க பொருளீட்ட வேண்டும். ஏனென்றால் பொருளீட்டினால் தான் அல்லாஹ் சொன்ன சக்காத்தினைக் கொடுக்க முடியும். பள்ளியினை நிர்வகிக்கின்றேன், ஓடாய் தேய்கின்றேன் என்பதும் , ஹாஜிகளுக்கு தண்ணீர் கொடுக்கேன்றேன் என்பதும் இறைவன் கூறிய கருத்திற்கு மாறு பட்டது.

அத்துடன் இறைவன் கருத்துக்கு மாறான கருத்தாக;
1) பாரம்பரிய, பரம்பரை என்று நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
2) பிறரின் மதிப்பினைப் பெற வேண்டும் என்று வருகின்றனர்.
3) தனது பிரபலத்தினைக் காட்டுவதிற்காக சிலர் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
4) முகஸ்துதிக்கும், பொருளாதார தகுதிகளுக்காகவும் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.

தேர்தல் நடக்கும், பல வாக்குறிதிகள் பறக்கும். பொதுத் தேர்தல் போன்று வீடுகள், வீதிகள் தோறும் ஆள் சேர்ப்பதும், பிட் நோட்டீஸ் அடிப்பதும், ஒருவர் பற்றி ஒருவர் வசை படுவதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதல்லவா? வெற்றி பெற்ற . நிர்வாகத்தினர் தரையில் கால் படாதவாறு நடக்காமல், மக்கள் பார்வையில் வெற்றி மதிப்பிற்குரியதாகத் தெரியலாம், ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈமானுக்கும், நல்ல பண்புகளுக்குமே மதிப்பளிப்பான். குடும்ப, குலப் பெருமைக்கோ இறைவன் ஒருகாலமும் மதிப்பு அளிக்க மாட்டான்.
 அல் பகறா 2:247 இல் நபி மூஸா அலைஹி வஸலாம் அவர்கள் தனக்குப் பிறகு அரசராக 'தாலூத்' அனுப்பியுள்ளான் என்று இஸ்ரவேலர்களிடம் எதிர்ப்பிற்கு நேர்மாறாக கூறும்பொழுது, 'தாலூத் கல்வியிலும், தேகத்திலும் உங்களைவிட சிறந்தவர் என்று கூறினார்கள்.
இந்த ஆயத்து கூறும் கருத்து  என்னவென்றால், ஒருவர் பொருளாதார வசதியில் மிக்கவர், பரம்பரை செல்வந்தர், உடல் அல்லது ஆள் பலம் என்பதிற்காக எந்த பதவியும் வழங்கக் கூடாது. அதே சமயம் ஒருவர் செல்வந்தர் இல்லை என்பதிற்காக பதவியினை மறுக்கக் கூடாது.
புனிதமான இறை பள்ளிக்கு பொறுப்பு வகிக்கும் ஒருவர் திருக் குரானை கொஞ்சமாவது ஓதி கற்று இருக்க வேண்டும்.
நபி வழியை, ஷரீயத்தினை  பூரணமாக உணந்தவர்கள், இஸ்லாத்தை, இஸ்லாமிய வரலாற்றை அறிந்தவர்களே பொருத்தமானவர்கள். குர்ஆனில் உள்ளவை பற்றி சில கேள்விகள் பாடமாக கேட்டாலும் கூறத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தொழுகையினைப் பேனுவராகவும், தன் குடும்பத்தினை தான் ஏற்றிருக்கும் பொறுப்பிற் கேற்ப நெறிப் படுத்திச் செல்வோராக இருப்போர் மட்டுமே தகுதியானவர்.
பள்ளி நிர்வாகிகள் 'பைத்துல் மால்' பொருளை இறை நேசமுள்ள பயனுள்ள வழியில் செலவு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். மாறாக பொருளை சுரண்டு வராகவோ, ஆடம்பர வழியில் செலவு செய்வராகவோ இருக்கக் கூடாது.
ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் வீதி வழி செல்லும் போது பொது நிலம் ஒன்றில் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, அருகிலிருந்தோரிடம் இந்த மாடு எவருடையது என்றார்கள். அங்கே இருந்தவர்கள், 'இந்த மாடு உங்கள் மகன் அப்துல்லாவிற்கு சொந்தமானது' என்றார்களாம். உடனே அந்த இடத்திலேயே மகனை அழைத்து வரச் செய்து, பைத்துல்மால் சொத்தில் மேய்ந்த இந்த மாட்டை சந்தைக்குக் கொண்டு சென்று விற்று விடு. அப்பணம் முழுவதையும் பைத்துல்மால் மக்களுக்கான பொது நிதியகத்தில் சேர்த்து விடு' என்று உத்தரவிட்டார்கள் என்பது வரலாறு.ஆகவே பைத்துல் மால் சொத்தை தான் சொத்தாக பாவிக்காது, அதனை நெருப்பாக பாவிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பள்ளியின் தலைவர் நீண்ட நாள் நோயில் இருந்து கொண்டு, ஜும்மா தொழுகைக்குக் கூட வரமுடியாத நிலை இருந்தும் நீடித்துக் கொண்டு இருந்தார். அதற்கான காரணத்தினைக் கேட்டபோது, 'அவர் தான் மரித்ததும், தன் ஜனாஸா தெருவில் போகும்போது 'யார் ஜனாசா என்று பிறர் கேட்டால், ஊர் ஜமாத்துத் தலைவர் ஜனாஸா' என்று சொல்ல ஆசைப் பட்டாராம்.
இன்னும் சிலர் பள்ளிவாசல் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் குடியிருந்தாலும், தான் செய்த தொண்டிற்காக பள்ளியின் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டும் கேட்பதிணை பார்த்திருக்கின்றேன்.
 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வருவதிற்கு முன்பு ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து நாம் இஸ்லாமிய வரலாறு சொன்ன நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவரா என்று சுய சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்று சொன்னால்  சரியாWednesday 14 October, 2015

என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!


(டாக்டர் ஏ பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 11.9.2001 அன்று தாக்கப் பட்டதிற்கு பின்பு ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் எழுப்பப் பட்டு அமெரிக்கக் கூட்டுப் படை ஆப்கானிஸ்தான் 2001 ஆண்டு   படையெடுப்பின் போதும், இராக் 2003 ஆண்டு படையெடுப்பின் போதும் தனது நாட்டுப் படைகளை ஆஸ்திரேலியாவும்  அனுப்பியது அனைவரும் அறிவர்.  அதன் எதிரொலியாக முஸ்லிம்களை கறுப்புக் கண்ணாடியோடு பார்க்க ஆரம்பித்தனர் ஆஸ்திரேலிய மக்கள். அப்படிப் பட்ட நாட்டில் 'கிப்ஸ் லாண்ட்' என்ற சிறு நகரத்தில் வாழும் சாரா ப்ரைஸ் என்ற கிறுத்துவ மதப் பெண்மணி பிற்காலத்தில் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்ற கதையினைச் சொல்ல, அதனை  உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்!

மரியா பிரைஸ் ஆஸ்திரேலியா நாட்டில் மனாஸ் பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று பத்திரிக்கையாளராக உலகில் பல நாடுகளுக்குச் சென்று செய்திகள் தயாரிப்பவர் ஆவார். அவர் கிருத்துவ மதத்தில் மிகுந்த நம்பிக்கையும், இயேசு பெருமான் மீது அளவற்ற பாசத்தினையும் கொண்டவராவார். ஏனெறால் மனித இனத்திற்குத் தேவையான -பரிவு, இறக்கக் குணம், அன்பு, பாசம் ஆகியவை கிருத்துவ மதத்தில் போதிப்பதாலும், சமூக சேவையில் அதனைக் காட்டுவதாலும் அதன் மீது பிடிப்புடன் இருந்தார். கிருத்துவ மதத்தின் மீது இருந்த அசைக்க முடியா நம்பிக்கை அவர் ஒரு முறை மலேசியா சென்றது வரை இருந்தது.
மலேசியாவிற்கு மாணவர் பண்பாடு பரிமாற்றத்தின் அடிப்படையில் ஒரு முறை சென்றார். அந்த நாட்டிற்கு செல்வதிற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தெரியாது. அதுவும் முஸ்லிம் பெண்கள் என்றால் கருப்பு ஆடை தலை முதல் கால் வரை அணிபவர்கள், மேற்காசியா நாட்டினைச் சார்ந்தவர்கள், நாகரீகத்திற்கும் அவர்களுக்கும் ஒரு காத தூரம், ஆண்களால் நசுக்கப் படுபவர்கள், கணவர் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், வெளி வேலைக்குச் செல்வது அபூர்வம் என்று எண்ணி இருந்தார்.
ஆனால் மலேசியா சென்ற பிறகு அவர் கண்ட காட்சி முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தினை மாற்ற ஆரம்பித்தது. அப்படி என்ன அவர் அங்கே கண்டார் என்று நீங்கள் கேட்கலாம்.
அவைகள்: 1) முஸ்லிம் பெண்கள் வித வித மான கலர் கொண்ட ஹிஜாப் மற்றும் ஆடைகளை அணிந்து உலா வந்தனர். 2) பல்கலைக் கழக மேல் படிப்பினை தொடரும் ஏராளமான பெண்களைக் கண்டார். 3) பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதினைக் கண்டார். 4) சிலர் மட்டும் முகத்திரையினை அணிந்திருந்தார்கள். 5) இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றுடன் இருந்தனர்.
பத்திரிக்கை மாணவரான மரியாவிற்கு முஸ்லிம் பெண்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களைப் பற்றியும் வெளி உலகிற்கு தெரிய எழுத தூண்டியது. அவர் எழுத, எழுத செய்திகள் நீருற்று போல வெளியே பீறிட்டு கிளம்பின.
அவைகளில் சில: 1) முஸ்லிம் பெண்கள் திருமணம் அவர்கள் சம்மதத்தோடு தான் நடந்தது.
2) சொத்துரிமை, பணபரிமாற்ற உரிமை மேற்கத்திய நாட்டு பெண்களுக்குக் கூட இல்லாத அளவு முஸ்லிம் பெண்களுக்கு இருந்தது.
3) இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு இருந்தனர்.

ஆகவே மரியா அல் குரானையும் பல்வேறு ஹதீதுக்களையும்  அர்த்தத்தோடு படிக்க ஆரம்பித்து, அவைகளை தன் எழுத்துத் திறன் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.
கோலாலம்பூர் நகரில் உள்ள துங்கு அப்துர் ரஹ்மான் பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு முறை சென்றார். அவர் அங்கு கண்ட காட்சி அமைதி, நிசப்தம், ஆடம்பர மில்லாத அமைப்பு அவரது உள்ளத்தினை கொள்ளைக் கொண்டது. அப்போது பாங்கு சப்தம் கேட்டு தொழுகைக்கு அழைப்பதினை அறிந்தார். வாழ்க்கையில் முதல் முறையாக காபாவினை நோக்கி தலை சாய்த்தார். ஆனால் மலேசியா இருந்தது வரை அவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறவில்லை.
இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணினார். அப்போது தான் ஐக்கிய நாட்டு சபையால் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது மலேசியாவினை 27 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மகாதீர் மூத்த மகள் மரினா மகாதீருக்கு கிடைத்திருந்தது. அவர் சமூக சேவைக்கான அந்த விருதினைப் பெற்றிருந்தார்.  உடனே அவரை அணுகி இஸ்லாம் பற்றிய பல்வேறு கேள்விக் கணைகளை விடுத்தார். அத்தனைக்கும் மிக விரிவான பதில்களை மரினா கொடுத்தார்.  அவரிடமிருந்து விடை பெறும்போது மரினா, 'நாமெல்லாம்(கிருத்துவர்கள், முஸ்லிம்கள்) ஒன்று பட்டவர்கள்  ஆனால் பல்வேறு நாட்டில் வாழ்வதினால், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் மாறு பட்டுள்ளோம்.  ஆனால் நாம் சிந்தும் ரத்தமும், சுவாசிக்கும் காற்றும் ஒன்றே என்று தினம், தினம் நினைவு கொள் என்று  சொன்னது ஆஸ்திரேலியா திரும்பிய பின்னரும் அவர் காதுகளில் ரீங்காரம் இட்டு ஏதோ ஒன்று அவர் மனதினை நெருடியது.
நாடு திரும்பியதும் கிருத்துவ மற்றும் முஸ்லிம் மார்க்கத்தினை பற்றிய பல்வேறு ஒற்றுமை, வேற்றுமையினை புனித புத்தகங்களான பைபிள், அல் குரான்  மூலமும், வராற்று புத்தகங்கள் மூலமாகவும், கிருத்துவ, முஸ்லிம் பெரியவர்களிடையே நடந்த பட்டி மன்றம் மூலமும்  ஆராய ஆரம்பித்தார்.
அதில்: 1) குர்ஆனில் கிருத்துவர்கள், யூதர்கள் புனித நூல்களின் மக்கள் என்று கூறியிருப்பதினை அறிந்தார்.
2) கிருத்துவர்களும், யூதர்களும் இப்ராஹிம்(அலை) அவர்களின் வழிதோன்றல்கள் என்று அறிந்தார்.
3) இயேசு பிரான் பற்றி அல் குர்ஆனில் முகமது(ரசூலல்லா) விட அதிகமான இடத்தில் சொல்லப் பட்டத்தினையும் அறிந்தார்.
4) முஸ்லிம்கள் எப்படி கிருத்துவர்களை நடத்த வேண்டும் என்று ரசூலுல்லா கூறியிருப்பதாவது, 'கிருத்துவர்களை மரியாதையுடன் நடத்துங்கள், எந்த அளவிற்கு என்றால் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவப் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் கிருத்துவ மதத்தினை வழிபடுவதிலிருந்து தடுக்காதீர்கள் என்பது வரை' என்றார்கள்.
5) இயேசு பிரானை முஸ்லிம்கள் தூதராக ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் கிருத்துவர்கள் இயேசு பிரானை கடவுளாக கண்டார்கள்.
தனது ஆராய்ச்சியின் முடிவில் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக் கொண்டார். கிருத்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் மாறிய பின்பு பல்வேறு சிரமங்கள் இருந்தன.
அவைகள்: 1) புற சுத்தம், உள  சுத்தத்துடனான ஐவேளை தொழுகை.
2) பெண்களின் பாலின வெளித் தெரியா ஆடை
3) ஏழைகளுக்கு கொடுக்கப் படும் சக்காத்து, சதக்கா
4) குடும்ப, சமூக மாறு பட்ட கண்ணோட்டம்
5) முக்கியமாக இது வரை பயன் படுத்தி வந்த மது ஒழித்தல்
 அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு இஸ்லாமில்லாத அந்நிய நாட்டில் இன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்க்கப் பட்டு இஸ்லாம் பற்றி மிக உயர்வாக தனது பத்திரிக்கை தொடர்பினை  வைத்துக் கொண்டு வெளி உலகிற்கு பறை சாட்டுகிறார், மரியா பரிஸ்.

ஆனால் நாம் முஸ்லிம்களாக பெயரளவில் இருந்து கொண்டு, இயக்கங்களிடையே நானா நீயா என்று பதவி வேட்கையில் இறங்கி, நாலு காசு சம்பாதிக்க நினைப்பதும், நம் வீட்டுப் பெண்கள் தடம் புரள்வதினை கண்டும் காணாது இருப்பதும், சகோதரிடையே சொத்து சுகத்திற்காக சண்டை இடுவதும், பெண்களுக்கு கல்வியினை மறுப்பதும், பொது நிறுவனங்களில் பதவிக்கு வந்தவர்கள் சுரண்டுவதிற்கு வழி தேடுதலும், உலக முஸ்லிம்கள் கூடாரத்திற்குள்ளே குத்து வெட்டு நடப்பதும்  சரியா சகோதர சகோதரிகளே!

Friday 11 September, 2015

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!
( டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
உலகின் கால் பகுதி நிலப் பரப்பு, முக்கால் வாசி நீர்ப் பகுதியாகும்.. அந்த நிலப் பரப்பில் ஏற்றத்தாழ்வு வராமல் நிரந்தரமாக  நிலை நிறுத்தி வைப்பது மலைப் பகுதியாகும். ஐஸ்லேண்ட் பகுதியிலும், பாலை வனத்திலும் மரங்கள்,  செடிகொடிகள் வளர்வது மிகவும் அரிது. இறைவனின் வரப் பிரசாதத்தால் அவைகள்  நீர் பிடிப்பு, காடுகள், மலைகள் , மற்றும் மழைப் பகுதிகளில் வளர்கின்றது..
மனிதன் உயிர் வாழ அவசியமாக கருதப் படுவது தண்ணீர், காற்று. மழையினால் குளங்கள், ஆறுகள், ஊற்றுகள் ஏற்படுகின்றன. .மரங்கள், செடி கொடிகள் மூலம் சுத்தமான காற்றினை மனிதன் சுவாசிக்க முடிகிறது. அந்த இயற்கை செல்வங்களிடையே சற்று காலாற நடப்பது, அதன் அழகை ரசிப்பது, தென்றல் காற்றினை ஸ்வாசிப்பது எந்தந்த விதத்தில் நோயற்ற வாழ்வினைத் தருகின்றது என்று உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த ஆய்வின் முடிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
அவைகள் பின்வருமாறு:
1) கனடா நாட்டின்  குடும்ப மருத்துவர், மெலிசா ஏலம், 'மரஞ்செடி, கொடிகள் உள்ள பூங்காவில் 20 நிமிட நேரம் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் ஒரு மனிதன், அவனுக்கு  கொடுக்கும் மருந்து, ஊக்க மாத்திரையினை விட மேலானது' என்கிறார்.
2) 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆராச்சியாளர்களின் குழுத் தலைவர் 'விக்கி செர்பர்', ' ஒரு கருத்தரங்கில் பங்கு பெரும் ஒரு நபர் அந்தக் கருத்தரங்கில் பங்கு பெறுமுன் சில மணித்துளிகள் ஒரு பசுமையான சூழலில் நடைப் பயணம் மேற்கொண்டால் அவருக்கு புது விதமான சிந்தனைகள் 60 சதவீதம் கூடுகின்றது' என்று கூறுகிறார். இதனேயே தான் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மாஸ்கோவிலோ, பாரிசிலோ, பெர்லினிலோ அல்லது வாசிங்டனிலோ கூடும்போது ஒரு பார்க்கில் கூட்டாக நடந்து செல்வதினைப் பார்க்கலாம்.
3) 2009 ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்திய ஆய்வில் 'வீட்டுகுள்ளிலில்லாது நடைப் பயிற்சியின் மூலம் வெளி உலகின் இயற்கைக் காற்றினை சுவாசித்தால் ஒரு மனிதனின் படபடப்பும், பதட்டமும் தணிந்து நிதானத்துடன் செயல் படுவான்' என்று சொல்கிறது. ஒரு மனிதன் ஒரு அறைக்குள் இருக்கும் ஜிம்மில்லில் உடற்பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும், பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

4) அமெரிக்கா மற்றும் தைவான் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் ஆய்வு நடத்தியபோது, 'ஜன்னல்  இல்லாத குடியிருப்புகளில் தூங்கும் தொழிலாலர்களை விட ஜன்னல் திறந்திருக்கும் வீடுகளில் தூங்கும் தொழிலாளர்கள் 45 நிமிடம் நிம்மதியாக களைப்பு நீங்கத் தூங்குகிறார்களாம்'. நீங்கள் சென்னை போன்ற நகரங்களில் தெருவோரம் வசிக்கும் மக்களைப் பார்க்கலாம், அவர்கள் அருகில் கனரக வண்டி கூடப் போகும். ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் வசதியுடன் இருப்பவர்கள் ஏசி அறையில் படுப்பார்கள், ஆனால் தூக்கம் வராது புரள் வதினைக் கேள்விப் படலாம்.

5) ஜப்பானில் பூங்காக்களில் நடப்பவர்களை 'சின்ரின் யோக்கு' என்று அழைப்பார்களாம். அப்படியென்றால் அவர்களை காடுகளில் குழிப்பவர்கள் என்று அர்த்தமாம். பூங்காக்களில் நடப்பது மூலம் ரத்த ஓட்டம் சீராகவும், நாடித் துடிப்பு அதிகமாகவும், புற்று நோயினை தடுக்கும் அரு மருந்தாகும்' என்கிறார்கள்.

6) ஜப்பான் டோக்யோ நகரில் இயற்கை சூழலில் வாழும் 3144 நபார்களை பற்றி ஆய்வு நடத்தியதில் அவர்கள் இயற்கை சூழல் இல்லாது வாழும் நபர்களைவிட அதிக நாட்கள் வழ்கின்றனராம்.

7) ‘டச்’ நாட்டில் 2009ஆம் ஆண்டு 10,089 நபர்களிடம் நடத்திய ஆய்வில், 'இயற்கை சூழலில் வாழும் நபர்கள் தாங்கள் தனியாக வாழ்கின்றோம் என்ற உணர்வினையே  மரம், செடி, கொடி என்ற பசுமையினை கண்டதும் மறந்து விடுகின்றனராம்.

8) இங்கிலாந்து நாட்டில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் இரண்டு விதமான நபர்களிடம் ஆய்வு நடத்தினார்களாம். அவர்களில் ஒரு குழுவினர் கடைப் பகுதியில் பயிற்சியினை மேற்கொண்டோர். மற்றொரு பகுதியினர் பூங்காக்களில் பயிற்சியினை மேற்கொண்டோர். அவர்களில் இயற்கை சூழலில் பயிற்சியனை மேற்கொண்டோர் மிகவும் அமைதியாகவும், மூளை சிந்தனையினை உடனுக்குடன் செயல் படுத்துவர்களாகும் உள்ளனராம்.

9) 2001 ஆம் ஆண்டு அமெரிக்க வாசிங்டன் நகரில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியபோது, ஒரு நாளைக்கு 20 நிமிடம் பயிற்சியினை மேற்கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை கூடியவர்களாகவும், தோழ்வி மனப்பான்மை குறைந்தவர்களாகவும் இருந்தார்களாம்.
10) 2001ஆம் ஆண்டு அமெரிக்கா சிக்காக்கோ நகரில் இயற்கை சூழ கூட்டமாக அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள் திருட்டுப் பயமில்லாமல், சுயக் கட்டுபாடுடன் நடந்து கொள்கிறார்களாம்.

11) 1984இல் அமேரிக்கா பென்சில்வேனியா நகர் மருத்துவமனையில் நடத்திய ஆராய்ச்சியில் சிகிச்சை எடுக்க வரும் நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளின் ஜன்னல் பக்கம் மரம்,செடி, கொடிகள் இருந்தால் அவர்கள் நோயின் வலியினை மறந்து, சீக்கிரமே குணமாகி விடுகின்றார்கலாம். நான் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யூனியன் சிட்டியில் உள்ள பிரசவ மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே பார்வையாளர் பகுதியில் ஒரு பெரிய மீன் தொட்டி வைத்து அதில் பல்வேறு மீன்கள் விளையாட விட்டிருந்தார்கள். அதன் நோக்கத்தினைக் கேட்டபோது, 'மீன்கள் வாலை அடித்து விளையாடும்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயிற்றில் விளையாடும் சிசுகளுக்கு இணையாக நினைத்து டாக்டரைப் பார்க்க காத்திருக்கும் நேரத்தில் இருக்கும் வலியினையே மறந்து விடுவார்களாம்.

11) ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ மரம், செடி, கொடிகள் அதிகமாக இருந்தால் தொழிலாளர்கள் லீவு எடுப்பது குறைவாகவும், தொழிற்சாலை உற்பத்தி அதிகமாக இருக்கின்றதாம்.

12) மேலை நாட்டில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவோருக்கும், நமது நாட்டில் பார்க்கில் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு காணலாம். அமெரிக்காவில் நடைப் பயிற்சியின் போது ஒரு அமெரிக்கரை பார்த்தால், 'ஹாய்' என்பதுடனும், சிட்னியில் பயிற்சி மேற்கொள்ளும்போது 'ஹலோ' என்று பெயரளவிற்கு சொல்லிவிட்டு  நகன்று விடுவார்கள். ஆனால் நம் நாட்டில் அறிமுகமான நபரின் பூர்வீக சரித்திரத்தினையே பயிற்சி முடிவதிற்குள் கேட்டு விடுவார்கள். பந்த, பாச உணர்வுடன் நடந்து கொள்வார்கள். இன்பம், துன்பத்தினில் கலந்து கொள்வார்கள். அதில் சில நேரங்களில் சிரிப்பாகவும் மாறி விடும் என்பதினை ஒரு உதாணரம் மூலம் விளக்கலாம் என எண்ணுகின்றேன். எங்களுடன் பார்க்கில் நடைப் பயிற்சிக்கு வரும் தேவா என்ற நண்பர் அன்று பார்க்குக்கு வரவில்லை. அவர் வராதது பற்றி விசாரித்த ஒரு நண்பர் தவறாக அவருடைய மாமி இறந்து விட்டார்களாம், அவரை வரும் வழியில் சாவு வீட்டில் பார்த்தேன் என்றார். உடனே சில நண்பர்கள் ஒரு மாலையினை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றபோது அப்போது தான் தெரிந்ததாம் அவருடைய மாமி இறக்கவில்லை, மாறாக பக்கத்தில் குடியிருக்கும் ஒரு மாமி இறந்து விட்டது என்று. அந்த அளவிற்கு நடைப் பயிற்சியில் ஜாதி, மதம், இனம், வயது, உத்தியோகம், வசதி என்று பாராது ஒரு பழக்கக் கூட்டம் ஒன்று சேரும் இடம் நடைப் பயிற்சி பூங்காவாகும். சில நேரங்களில் சம்பந்த பேச்சும், வியாபார ஒப்பந்தமும் நிறைவேறும். எல்லா பார்க்கிலும் ஒரு அசோசியேசன் அமைத்து அந்த பூங்கா வளர்ச்சிக்கு யோசனையும், வழியும் செய்வார்கள். 
ஆகவே மேற்கூறிய ஆராய்ச்சிகள் பழமை காலத்தில் கிராமங்களில் வாழ்ந்தவர்களும், காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர், தவம் செய்த முனிவர், சித்தர் ஆகியோர் ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்களுக்கு வாழ்ந்த ரகசியம் இயற்கையில் அவர்கள் வாழ்ந்ததால் தான். நாம் சரித்திரத்தில் அசோக சக்கரவர்த்தி குளங்கள், தோண்டினார், மரங்கள் வெட்டினார், ரோடுகள் அமைத்தார் என்றெல்லாம் படித்து இருக்கின்றோம். ஆனால் அந்த நீர் நிலைகள் தூந்து போனதிற்கும் காரணம் அவைகளில் வீட்டு மனைகள் அமைத்த மனிதன் தான் காரணம். மரங்கள், மற்றும் சாலைகள் வெட்டப் பட்டதிற்கு காரணம் போராட்ட காலங்களில் அரசியல் கட்சிகள் அவைகளை வெட்டியும்,   தோண்டியதும்  தான் காரணம்.  அதனால் மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும், வாழ்வாங்கு வாழ மரங்கள் அழிப்பதினை விட்டு விட்டு, மரங்கள் நட்டு அந்த மரங்களின் அழகினை ரசிக்க சிறிது காலாற நடப்போமா?

Friday 4 September, 2015

தேவையா தண்டுவடம் ?

                  
                   (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்)
தண்டு வடம் ஒரு மனிதனுக்கு உயிர் வாழ அவசியம். தண்டு வடம் இல்லாத மனிதனை  வளையும் வெண்டைக்காயிற்கு ஒப்பிடுவார்கள்.
தண்டு வடம் ஏன் அவசியம் என்று இப்போது பார்க்கலாம்:
 தண்டு வடமானது மூளை  இடும் கட்டளையினை உடல் மூலம் செயலாற்றுகிறது. மூளை க்கு எடுத்துச் செல்லும் உணர்வு நரம்புகளை வழி நடத்துவது முதுகெலும்பாகும். நரம்புகள் துண்டிக்கப் பட்டால் உடல் செயழிழந்து விடும்.
அதற்கு இப்போது என்ன வந்தது என்று கேட்கலாம்?
இந்திய ஜனநாயக நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் முஸ்லிம் இயக்கங்கள் தண்டு வடத்தோடு உள்ளனவா என்ற கேள்விக்கு விடைகாணும் விதமாக இந்தக் கட்டுரையினை வரைகின்றேன்.
1) இந்தியாவின் 2015 ஜனத்தொகை கணக்கின் படி முஸ்லிம்கள் 14.2 சதவீதம் உள்ளனர். ஹிந்து மக்கள் தொகையான 79.8 சதவீதத்ததிற்கு அடுத்த இடத்தில்  உள்ளனர்.
2) 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் 545 உறுப்பினர் கொண்ட மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் வெறும் 22 பேர். இது தான் மக்களவை வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கை. 49 அதிகமான உறுப்பினர்களை 1980 மக்களவையில் முஸ்லிம்கள் பெற்றனர்.
3)  தமிழ்நாட்டின் ஜனத்தொகை 7,66,57,206/ படித்தவர் எண்ணிக்கை 81 சதவீதம்.
முஸ்லிம்கள் 42,56,199/ அது 5.9 சதவீதம். முஸ்லிம்கள் படிப்பறிவு 82.9 சதவீதம். ஹிதுக்கள் படிப்பறிவு 72 சதவீதம்.
4) தமிழ்நாடு சட்டசபை மொத்த உறுப்பினர் 234/
1935 இல் 215 உறுப்பினர் கொண்ட சட்டசபையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 28/
அப்போதைய தலித் உறுப்பினர்கள் 30/
ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஒரு கை ஐந்து விரல் கொண்டதாக மாறியது. இது 2006 சட்டமன்றத்தினை விட 2இடம்   குறைவானது வேதனையிலும் வேதனையல்லவா?
5) இன்று இந்திய அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் விடிவெள்ளியாக லண்டனில் பாரட் லா சட்டம் பயின்ற அசாத்தின் ஒவைசி உருவாகியுள்ளதாக ஹிந்து நாளிதழ் கூறுகின்றது. காரணம் ஆதிராவின் ஹைதராபாத் நகரின் மூன்றாது முறையாக மக்களவைக்கு 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மக்களவையில் பல்வேறு வகையிலும் சிறப்பாக பணியாற்றியதற்காக, 'சன்சாட் ரத்னா' விருதுனைப் பெற்றுள்ளார். அவர் எ.ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவராக உள்ளார்.அவர் சொல்லுவதெல்லாம் முஸ்லிம்கள் வறுமை அதிகமானதால் தீவிர வாதத்திற்கு தள்ளப் படுகின்றனர் அதனைப் போக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கை தேவை அரசிடமிருந்து என்பதுதான்.
இதனையே தான் இந்தியாவின் துணை ஜனாதிபதி மதிப்புமிகு அன்சாரி அவர்களும் 31.7.2015 அன்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அரசு முஸ்லிம்களுக்கு ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று கூறி முடித்ததும் வி.எச் பி தலைவர்கள் அவர் எப்படி சொல்லலாம் என்று கூக்கிரல் விடுகின்றனர். உயர் பதவியில் இருக்கும் துணை ஜனாதிபதியே தான் உயர்ந்த பாதையில் இருக்கின்றோம், நம் இன மக்கள் வறுமையில், வேலையின்மையில் வாடுகின்றனரே என்று மனம் நொந்து கூறியிருக்கின்றார். அவர் கூறாமல் வேர் யார் கூறுவது? ஏனென்றால் முஸ்லிம்கள் நிலை பற்றி ஆய்வு அரசு உத்திரவுப் படி நடத்தி அறிக்கையினை சமர்ப்பித்த நீதியரசர்கள் ராஜேந்திர சச்சார், ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் அந்த அறிக்கைகள் வெறும் காகிதமாக போய் விட்டதே என்று பல தடவை வேதனைப் பட்டதாகச் சொல்லி பத்திரிக்கைகளிலும் வந்திருப்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்.
ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்கப் பட வேண்டிய இடம் சட்ட சபையும், பாராளுமன்றமும் தான் என உணர்ந்த ஒவைசி முஸ்லிம்கள் அரசியலில் சக்தி வாய்ந்தவர்களாக வரவேண்டும் என்று ஆந்திராவில் கால் பதித்து, பக்கத்து மாநிலமான மகாராஸ்ட்ராவில் சிவ் சேனா, பி.ஜே.பி எதிர்ப்பினையும் மீறி 2 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று, உத்திரப் பிரதேசம், தற்போது தேர்தல் வரப் போகிற பீஹார் மாநிலங்களில் தன் சிறகுகளை விரித்திருக்கின்றார் என்று பத்திரிக்கைகள் ஆர்வத்துடன் பார்க்கின்றன.
இந்திய தேர்தல் ஆணைய பட்டியல் படி கீழ்கண்ட முஸ்லிம் அமைப்புகள் அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன:
1) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(கேரளா)
2) மஸ்ஜிஸ்-இட்டடுல்-முஸ்லிமீன்(ஆந்திரா)
3) ஆல் இந்திய ஜனநாயக முன்னேணி(அஸ்ஸாம்)
4) வெல்பார் பாட்டி ஆப் இந்தியா(மே.வ)
5) சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(மே.வ)
6) மனித நேய மக்கள் கட்சி(த.நா)
7) ஆல் இந்திய உலமா கவுன்சில்(உ .பி)
8) பீஸ் பார்ட்டி(உ.பி)
9) இந்திய தேசிய லீக்(கேரளா )
10) பீபுள் டெமாக்ரடிக் பார்ட்டி(கேரளா)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்ணியமிகு காயிதே மில்லத் மறைவிற்குப் பின்பு வடநாட்டினை விட்டகன்று தென்னாட்டிற்குள் வட்டமிடுகின்றது. தமிழகத்தில் தி.மு.க, அதிமுக துணைகளோடு சட்டசபைக்குள் நுழைய முடிந்தது. தங்களுடைய இயக்கம் வளர திராவிட இயக்கத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்க நேர்ந்தது. அதனால் தமு.மு.க, தவ்ஹீத் இயக்கங்களுக்குப் பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் அணி வகுக்க ஆரம்பித்தனர்.
இந்தியாவின் மேற்கே இருக்கின்ற குஜராத் மக்கள் தொகை 6 கோடி. அதில் ஹிந்துக்கள் 88.6 சதவீத மக்கள். முஸ்லிம் மக்கள் 9.7 சதவீதம். படேல் சமூக மக்கள் ஹிந்துக்களில் 27 சதவீதம் உள்ளனர். அந்த சமூகம் முன்னேறிய சமூகமாகும். படேல் சமூகம் பற்றி ஒரு ஜோக் சொல்லுவார்கள். அதாவது படேல் இன கல்லூரி விடுதியில் படிக்கும் மாணவர் ஒருவர் தன் தந்தைக்கு. 'கல்லூரி பாடத்திற்காக ஒரு லாக் டேபிள்' வாங்க வேண்டும்' அதற்காக ரூ 100/ அனுப்பச் சொன்னாராம். உடனே தந்தை லாக் புத்தகத்தினை தவறாக மேஜை என நினைத்து, 'நீ நல்ல திடமான தேக்கு மர மேஜையினை வாங்கிக் கொள் என்று ரூ 500/ அனுப்பி' வைத்தாராம். அது போன்ற செல்வ செழிப்பானவர்கள் படேல் சமூகத்தினவர்.  பெரும்பாலும் படேல் சமூகத்தினவர் சர்தார் வல்லபாய் படெலிலிருந்து மாதவ் ராவ் சோலங்கி வரை  காங்கிரஸ் சார்ந்தவர்களாகவே இருந்தனர். 1981 ஆம் ஆண்டு சோலங்கி முதல்வராக இருந்தபோது பிற்படுத்த மக்களுக்கு(ஒ.பி சி ) கோட்டவினை 27 சதவீதம் என்று அறிவித்ததும் படேல் சமூகத்தினவர் பெரும்பாலும் காங்கிரசை விட்டு பி.ஜே.பி பக்கம் சாய ஆரம்பித்தனர். 1985 ல் படேல் சமூகத்தினவர் ரிசர்வேசன் கேட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் அது ஹிந்து-முஸ்லிம் கலவரமானது. அதன் பின்பு வந்த அரசு ஜேசுபாய் படேல் அரசு படேல் சமூகத்தினவரை சார்ந்தே ஆட்சி நடத்தியது .  ஆனால் 22 வயதான ஹிர்திக் படேல் தன் இன மக்களை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டினுக்காக போராடியது குஜராத்தில் அரசியல் கட்சிகள் இருந்த இடமே தெரியாத வன்னம் செய்து விட்டது.
அதே போன்றே பி.ஜே.பி ஆட்சி செய்கின்ற மாநிலமான ராஜஸ்த்தானில் குஜ்ஜார் இனமக்கள் போராடி 5 சதவீத ஒதுக்கீடு பெற்றனர்.
அதே போன்று மூன்றரை சதவீத ஒதுக்கீடும் தமிழகத்தில் கொடுக்கப் பட்டது. ஆனால் அதனால் பயன் பெற்ற பயனாளிகள் எத்தனை என்று யாருக்காவது தெரியுமா? ஏனெறால் இட ஒதுக்கீடு ஒழுங்காக கொடுக்கப் படுகின்றதா என்று கண்காணிக்க ஒரு மானிட்டரிங் கமிட்டி நியமிக்காததே ஒரு காரணம்! 2011 ஆம் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இரண்டு திராவிட இயக்கங்களும் தற்போது இருக்கின்ற இட ஒதுக்கீடு கூடுதலாக்கப் படும் என்றன. ஆனால் மறு தேர்தல் 2016ல் வரப்போகிறது. அந்த உறுதி மொழி கானல் நீராகவே இருக்கின்றது.
2011 தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்தத் தொகுதியும் பெறமுடியவில்லை. ஆனால் மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களைப் பெற்றது. இருந்தாலும் அது எதிர் கட்சி வருசையில் அமர்ந்து விட்டதால் எந்தப் பெரிய பலனும் அடைய முடிய வில்லை. தற்போது சேர்ந்திருக்கும் கூட்டணியால் 2016 தேர்தலில் ம.ம.க கிடைத்த 2 தொகுதியும் இழக்கும் அபாயமும் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.காவினை ஒட்டியே அரசியல் செய்வதால் பெரிய பலன் ஒன்றையும் இதுவரை அடைந்ததில்லை என்பதினை சென்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அவர்கள் எப்படி வேலை பார்த்தார்கள் என்பதினை மதிப்புமிகு அப்துர் ரஹ்மானைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தற்போதைய அதன் நிலை எப்படி இருக்கின்றது என்பதினை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம் என எண்ணி உள்ளேன்.
தி.மு.க தளபதி 2016 சட்டசபை தேர்தல் முன்னிட்டு 234 தொகுதிக்கும் சென்று தொண்டர்களை சந்திப்பதாக அறிவுப்பு வந்த உடனேயே, லீக் தலைவர் ஒரு அறிக்கை விடுகின்றார், அது என்ன தெரியுமா, தளபதி  234 தொகுதிகளுக்கும் செல்லும்போது லீக் தொண்டர்கள் கொடியுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று. பேரறிஞர் அண்ணா முதல்வர் பதவி 1967ல் ஏற்கும் முன்பு கண்ணிய மிகு காயிதே மில்லத் வீடுதேடி சென்று ஆசி பெற்று சென்றார் என்றது வரலாறு. இன்று முஸ்லிம் மக்கள் இன்னொரு கட்சி இளைய தலைவரை வரவேற்க அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏன் வந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதில் என்ன வேடிக்கை என்றால் இன்னும் கூட கூட்டணி பற்றி அறிவிப்பு வரவில்லை என்பதுதான்
 ஆகவே தமிழ்நாடு முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஹைதராபாத் ஒவைசி போன்று அரசியலில் ஒரு வலுவான கூட்டணியினை வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் உருவாக்க வேண்டும். அந்த கூட்டணிக்கு ஒ.ஐ.யு  அதாவது 'ஆர்கனைசேசன் ஆப் இஸ்லாமிக் யூனியன்' என்று பெயரிட வேண்டும்.
மனிதரில் இறைவன் வேற்றுமையினைப் படைத்துள்ளான். ஆனால் சமூதாய முன்னேற்றத்திற்காக வேற்றுமையினை மறந்து இஸ்லாமிய மக்கள் ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயமே!
சில முஸ்லிம் இயக்கங்கள் தங்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று பூச்சாண்டிக் காட்டலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் திரைமறைவு காய் நகர்த்தும் செயல்களை அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் அறிந்தே உள்ளனர்.
முஸ்லிம்கள் ஓரணியில் திரளவில்லையானால் இனி புதுப் பள்ளிவாசல் கட்டுவதிற்கும், பழைய பள்ளிவாசல் விரிவாக்குவதிற்கும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் என்பதினை சமீப கால ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இட ஒதுக்கீடு அதிகம்  பெறவும், அரசியலில் சட்டசபை மற்றும் மக்களையில் அங்கம் வகிக்கவும் முடியாது.
உ.பி.மாநிலம் முசாபர் நகர் மக்கள் பட்ட துன்பங்கள் போன்று சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிற்கும் நிலை ஏற்படும்
ஆகவே  முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ஒ ஐ சி அமைத்து பணியாற்றி இஸ்லாமிய மக்களின் தண்டு வடத்தினை வலுப் படுத்தலாமா அல்லது தண்டு வடமே இல்லாத ஜீவனாக வாழலாமா என்பது பற்றி தீர்மானிப்பதினை  உங்கள் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்!


Sunday 23 August, 2015

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்'


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )
ஈராக் நாட்டின் அமெரிக்க கூட்டுப் படையின் யுத்தம் 2003 மார்ச் மாதத்திலிருந்து 2003 மே மாதம் வரை  நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டுப் படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து போன்ற பங்கேற்றன. அதன் பின்பு ஈராக்கினை சீறாக்குகின்றோம் என்ற நடவடிக்கையில் 36 நட்பு நாடுகள் பங்கேற்றன.

ஈராக் யுத்தத்திற்கு முக்கிய காரண, காரிய கர்த்தாக்கள் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி ஜார்ஜு பஸ்சும், இங்லாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி பிரதமர் டோனி பிளேயர் ஆகும். அவர்கள் இருவரும் ஐ.நா. உத்திரவினையும் மீறி, தன்னிச்சையாக போர் தொடங்கும் முன்பு அவர்கள் ஏன் போர் தொடுக்குகின்றோம் என்ற கீழ்கண்ட  காரணங்களைச் சொன்னார்கள்:
1) ஈராக் உயிர் கொல்லி ஆயுதங்களை கைப்பற்றி, அணு ஆயுதங்கள் ஒசாமா பின் லேடன், 'அழகடா' இயக்கத்தின் கைகளில் சிக்காமல் செய்யவும்.
2) தீவிரவாதத்திற்கு அதிபர் சதாம் ஹுசைன் ஆதரவினை முறியடிக்கவும்,
3) ஈராக் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும்
எடுக்கப் படுகிற நடவடிக்கையே! என்றும் நொண்டிச் சாக்கினை கூறினார்கள்.
ஆனால் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டுப் படையின் கமாண்டரும், மற்றும் அமெரிக்க கூட்டுப் படையின் கூடுதல் கமாண்டர் ஜெனரலான வெஸ்லி கிளார்க் எழுதியிருக்கும் புத்தகமான, 'வின்னிங் மாடர்ன் வார்ஸ்'(நவீன யுத்தங்களில் வெற்றியடைவது) என்பதில் முதலில் ஈராக் அதன் பின்னர் சிரியா,லெபனான், லிபியா,ஈரான், சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளை படிப்படியாக ஐந்து ஆண்டுகளில் கைப்பற்றுவது தான் நோக்கம் என்று கூறியிருக்கின்றார். போர் தொடங்குவதிற்கு முன்னர் அமெரிக்காவில் சி பி எஸ் நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. அதில்  64 சத வீத மக்கள் ஈராக் மீத தொடுக்க ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் 63 சதவீத மக்கள் ஈராக்கின் மீது போர் தொடுக்குமுன் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்றனர். ஏனன்றால் ஈராக் யுத்தம்  ஈராக் மக்கள் மீது மேலும் தீவிரவாதத்தினைப் புகுத்தும் என்றார்கள். அமெரிக்காவின் நெருங்கிய தோழமை நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நீயுசிலாந்து போன்ற நாடுகள் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் யுத்தம் தொடங்குவதிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிருந்து போருக்கு எதிரான கோசங்கள், ஆர்பாட்டங்கள் கிளம்பின. அந்த ஆர்ப்பட்டங்களுக்களெல்லாம் மணிமகுடமாக ரோம் நகரில் 30 லட்சம் மக்கள் நடத்திய பேரணி கின்னஸ் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்தது  என்றால் பாருங்களேன். ஆனால் அவையெல்லாம் புஸ்சுக்கும், டோனி பிளேயருக்கும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது. அவர்கள் என்ன சொல்ல நான்கேட்க, போர் தொடுத்தே ஆவேன் என்று தனது தோழன் டோனி பிளேயருடன் சேர்ந்து ஈராக்கில் போர் தொடுத்தார்.
சகோதரர்களே, மேலை நாடுகளின் யுத்த தந்திரங்கள் எதற்கு உதவுகின்றன என்றால் பொருளாதார ஆதாயம் பெற முடியும் என்பதால் தான். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அவை பின் வருமாறு:
1) உலகம் அமைதியாக இருக்குமேயானால் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூட வேண்டியிருக்கும். யுத்தங்கள் நடந்தால் துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், டாங்கிகள், பீரங்கிகள், யுத்த விமானங்கள், கப்பல்கள் ஆகியவை தயாரிக்கவும், பழைய ஆயுதங்களைப் புதுப்பிக்கவும் உதவி செய்யும்.
2) எண்ணெய் வளங்களிருந்து, விலை மதிக்க முடியா செல்வங்களை அபகரிக்க முடியும்.
3) பொம்மை ஆட்சியாளர்களை தங்களுக்கு ஆதரவாக நியமிக்க முடியும்
இதனையே தான் யூதர்கள் பழங்கால புத்தகமான, செர்கி நிலஸ், ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து தமிழிலில்  'யூத பயங்கர வாதிகளின் அரசியல் இரகசிய அறிக்கையும்'   மொழி பெயர்த்த ஆரூர் சலீம் புத்தகமும்  சொல்கிறது.
ஈராக் யுத்தத்திற்குப் பின்பு நடந்தது என்னென்ன நடந்தது என்று தூதரக அதிகாரி 'பீட்டர் டபிள்யு கால்ப்ரைத்' கீழ்காண்டவாறு கூறுகின்றார்:
1) புலி வருது, புலி வருது என்று உயிர்கொல்லி ஆயுதம் இருக்கின்றது என்று பொய்யான கூக்கிரல் போட்டு, பூச்சாண்டிக்  காட்டி, சதாம் ஹுசைனை பதவியினை விட்டு இறக்கியதோடு மட்டுமல்லாது, அவரை தூக்கு மேடைக்கும் ஏற்ற வழி விட்டதும், ஈரான் மற்றும் வாட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் வழி வகுத்தது.
2) தீவிர வாத ஒழிப்புக் கோசம் பல தீவிரவாத கும்பல் கிளம்பி நாள் தோறும் ஒரு குண்டு வெடிப்பு மூலம் ஈராக் சின்னா பின்னமானது.
3) இஸ்ரேயிலுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற கோசம் போய் நாள் தோறும் இஸ்ரேயலுக்கு ஈரான், சிரியா, ஹோஸ்புல்லா சியா இயக்கங்களிருந்து பயமுறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது.
4) அமெரிக்க ராணுவ பலத்தினை நிரூபிக்க தொடுக்கப்பட்ட யுத்தம், அமெரிக்க ராணுவத்திற்கும்,
.நிர்வாகத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டது.
5) குர்திஸ் இனத்தினர் தனி நாடு ஆதரவு அமெரிக்கா தெரிவித்ததால் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியின் பகையினை சம்பாதிக்க நேர்ந்தது.
ஈராக் யுத்தமானது 36,000 அமெரிக்க கூட்டுப் படை உயிர்களையும், 500000 ஈராக் மக்கள் உயிரையும் பலி கொண்டது. ஜார்ஜ் புஸ் அமெரிக்க போர் தொடுத்து 10 ஆண்டு நினைவு நாளில், "ஈராக் போருக்கு மன்னிப்புக் கேட்பதாக" ஒரு செய்தியினை அமெரிக்க பத்திரிக்கையின் பேஸ் புத்தகத்தில் வெளி யிட்டதினை பார்த்து உலகமே அது உண்மையா என்று கேள்வி கேட்டது. ஆனால் அந்த செய்தி ஒரு ஏப்ரல் பூல் செய்தி என்று பின்பு தெரிய வந்தது. உண்மையில் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது தான் ஈராக் போருக்கு வருந்த வில்லை என்று சொல்லியிருக்கின்றார். அதே போலதான் டோனி பிளேயரும் தான் போருக்காக வருந்த வில்லை என்றார்.
போருக்குப் பின்னால் நடந்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தேர்தலில் ஜார்ஜ் புஸ் குடியரசு கட்சியும், டோனி பிளேயர் லேபர் கட்சியும் தோற்றது இறைவன் கொடுத்த தண்டனையாகும் என்றால் மிகையாகாது.தற்போது இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் பதிவிற்கு தேர்தல் நடக்கின்றது. அதில் போட்டிபோடும் 'கார்பின்' என்பவர் தன்னை தலைவராக தேர்ந்தெடுத்தால் முதல் வேலையாக ஈராக் யுத்தத்திற்கு இங்கிலாந்து துணை போனதிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பேன் என்று அறை கூவல் விட்டுள்ளார். அதற்கான காரணத்தினையும் சொல்லும்போது, 'ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் மீது மக்கள் உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான குற்றச் சாட்டைக் கூறி போர் தொடுத்து ஈராக் மக்களுக்க எண்ணற்ற துன்பம் விளைவித்ததற்காக தான் மன்னிப்புக் கேட்பேன்' என்கிறார்.

அவருக்குள்ள குற்ற உணர்வு, நியாயமற்ற ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்க மற்றும் அதனுடன் போர் தொடுத்த அல்லது அதற்கு துணை போன நாடுகளின் தலைவர்களுக்கு வந்தால் 'கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் 'போன்ற மன ஆறுதல் செயலாக இருக்கலாம். அதே போன்று தான் குஜராத் இனக் கலவரத்தில் 2000 பேருக்கு மேல் கொல்லப்  பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லுவது போல பகிரங்க மன்னிப்புக் கேட்டால் ‘கல்லிலும் ஈரமுள்ள நெஞ்சு' என்று சொல்லலாம். இல்லையென்றால் ஈரமே இல்லாத வெறும் கட்டாந்தரை என்று தான் பெயரிட  வேண்டும்.
அல்குரான் அத்தியாயம் 9 அத் தவ்பா வில், 'இறைவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறிவான்  என்று கூறப் பட்டுள்ளது. ஆகவே நீங்கள் 'பூனை கண்ணை மூடிக் கொண்டு திருட்டுத் தனமாக பாலைக்  குடித்தால்' வீட்டு சொந்தக்காரருக்கு தெரியாமல் இருக்கப் போவதில்லை. அதே போன்று தான் குற்றங்கள் செய்வது மனித இயல்பு. உங்கள் குற்றங்களை அல்லாஹ் நன்கறிவான். உங்களின் குற்றங்களால் பாதிக்கப் பட்ட மக்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்பதினால் உங்கள் மணிமகுடம் தரையில் விழுந்து விடுவதில்லை. அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் புண் ஆறிவிடாது. மாறாக வெந்த புண்ணிற்கு சற்று  தைலம் தடவிய இதமாகவாவது  இருக்குமல்லவா?Saturday 13 June, 2015

மாப்பிள்ளை டே, புது மாப்பிள்ளை டே, யோகா டே!


12.6.2015 அன்று யோகா டே என்ற யோகா தினம் கொண்டாடப் பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என உத்திரவிடப் பட்டது அனைவரும் பத்திக்கை வாயிலாக அறிந்திருப்பீர். அதனை முஸ்லிம் அமைப்பினரும், கிருத்துவ அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததும், நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என்றும், அல்லாஹு நாமத்தினை சொல்லலாம் என்றும் கூறப்பட்டது.
கிரிராஜ் என்ற சர்ச்சையான பாராளுமன்ற உறுப்பினர் யோகா வேண்டாம் என்பவர்கள் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள் என்றும், இல்லை என்றால்  குதித்து மூழ்குங்கள் என்றும் சொல்லி சர்ச்சை எழுப்பி உள்ளார். தமிழ் சினிமா படத்தில் புது மாப்பிள்ளையினைப் பார்த்து 'மாப்பிள்ளை டே,புது மாப்பிள்ளை டே' என்று பாடும் பாடலை கேட்டிருக்கின்றோம். அதே போன்று தான் இந்த யோகாவினையும் கூவிக் கூவி மைனாரிட்டி சமூகத்தினரிடம் விற்கப் பார்க்கின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் அவர்களோ, 'இந்தியா ஒரே ஹிந்து நாடு என்பது பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை, ஏன் பாக்கிஸ்தானும், பங்களாதேசும் ஹிந்து நாடு தான்' என்று பேசி அதனால் சர்ச்சையினை கிளப்பியிருப்பது  13.6.2015 தினமணி பத்திரிக்கையில் வந்துள்ளது. இவை எல்லாம்  எதனைக் காட்டுகின்றது என்றால் எப்படியாவது முஸ்லிம்களை தங்கள் கட்டுப் பாடுகள் கொண்டு வந்து விடவேண்டும் என்று 2014 ஆண்டிலிருந்து கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன என்று முஸ்லிம்கள் எண்ணுவது சரி என்று நினைக்கவில்லையா ?
யோகா என்ற சொல் 'யுஜ்' என்ற சான்ஸ்கிரிட் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் தனி மனிதனின் உள்ளத்தினை(ஜிகாத்மா) இறைவனிடம்(பரமாத்மா) ஒப்படைப்பது ஆகும். இந்தியாவின் குடிமக்களை மதம், மனம், உடல், ரீதியாக இணைக்கும் பல்வேறு செயல்கள் 2014 புதிய ஆட்சிக்கு வந்த பிறகு நடை பெற்று வருகிறது. அதில் ஒன்றே யோகா ஸ்லோகனாகும். இந்த யோகா முறை ஹிந்து, புத்த, ஜைன மத வழிபாடுகளில் ஹதா யோகா மற்றும் ராஜ் யோகா போன்ற செயல் முறைகளில் பின்பற்றப் பட்டு வருகிறது. ஹிந்து மத 'உபநிசாத்' மற்றும் புத்த 'பாலி கேனான்' மூன்றாம் நூற்றாண்டு பி.சி யிலிருந்து செயல் முறையில் இருந்தாலும் மேற்கித்திய நாடுகளுக்கு இருபதாம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தா அமெரிக்கா சென்ற பின்பு தான் தெரிய வந்தது. தற்போது பரபரப்பாக பேசப் பட்டு வரும் யோகா உடற் பயிர்ச்சி ஒரு காலத்தில்  அதனையே தற்போது பழைய தியானம், இறையருள் போன்றவற்றிக்குத்தான் முக்கியம் கொடுக்கப் பட்டது. அவைகள் அனைத்தும் ஹிந்து மத 'சம்கிய' தத்துவத்தினை  ஒட்டியதேயாகும். பழைய வேதங்களிருந்து பதாஞ்சலி யோகா சூத்ரா பாடல்களை வாழும் கலைஞர் என்று அழைக்கப் படும் ரவி சங்கர் போதிக்கிறார்.
கீழேக் கொடுக்கப் பட்ட யோகா முறைதான் தியான முறையினைச் சார்ந்தது
அதன் செயல் முறைகள் 'கியான் யோகா'(தத்துவம்), பக்தி யோகா ( இறைபாதை அடைதல்), கர்ம யோகா ( மகிழ்வான செயல்) மற்றும் ராஜ் யோகா (மனதிணை ஓர் நிலைப் படுத்துதல்) போன்றவையாகும். ஆனால்  தற்போது உடலை வருத்தி ஆண், பெண் அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து அதற்கென்று உடலை ஒட்டிய யோகா டிரஸ் அணிந்து பொது இடங்களில் செயல்  முறையாக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவில் கூட அப்படி உடல் ஒட்டி அங்கங்கள் தெரியும் அளவிற்கு அணியும் யோகா உடை தடை செய்யப் பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஒரு யோகா குரு மீது பல்வேறு அமெரிக்க பெண்கள் கற்பழிப்பு புகார்கள் கொடுத்து அது விசாரணையில் இருப்பதும் பத்திரிக்கை வாயிலாக அறிந்திருப்ர்கள்.
யோகா பயின்றால் புற்று நோய், மனபிதற்றல், காச நோய், இருதய நோய் குணமாகும் என்றும் கூறப் படுகிறது. எப்படி 'வல்லாரை லேகியம்' விற்கும் வைத்தியர் தன் வார்த்தை ஜாலங்களால் லேகியத்தினை விற்கின்றாரோ அதே போன்றும் தான் மேற்கூறப்பட்ட நோய்களுக்கும் குணமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் பற்றி ஆய்வு நடத்தியவர்கள் புற்று நோய் சுகமாவதிற்கும், யோகப் பயிற்சிக்கும் மொட்டைத் தலைக்கும் முனங்காலுக்கும் போடுகின்ற முடிச்சு போன்ற பேச்சே அது என்றும் கூறுகிறார்கள். அது போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஒரு மனோ தத்துவ சிகிச்சையே என்றால் சரியாகும் என்று படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களே சொல்கிறார்கள்.
கீழே தரப்பட்ட யோகப் பயிற்சியினை காணுங்கள். இதில் பெண்கள் அணிந்திருக்கும் உடையினைப் பாருங்கள். அவர்கள் செயல் முறையினைப் பார்த்தால் எவ்வாறு உடல் நோய் நீங்கும் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்..

யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:
1) யோகா முறையினை ராம் தேவ் சொல்படி   அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும்,  போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள். அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும். அமெரிக்காவில் யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.
சில  ஆண்டுகளுக்கு முன்பு பிராட்வேயில் உள்ள லோன்ஸ்  ஸ்குயிர் பார்க்கில் ஆண்களுக்கான யோகவினை ஒருவர் செயல் படுத்தி வந்தார். அங்கு நடைப் பயிற்ச்சிக்கு வந்த கோசா முஸ்லிம் பெண்களையும் தூண்டி யோகப் பயிற்சியில் ஈடு படுத்தினார். தற்செயலாக கொத்தவால் சாவடி மார்க்கெட்டுக்கு வந்த ஒரு பெண்ணின் கணவர் ஆண்களுடன் தன் மனைவியும் யோகா பயிற்சியில் ஈடுபடுவதினைக் கண்டு அதிர்ச்சியுற்று, சண்டை போட்டு தன் மனைவினை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அதிலிருந்து அங்கே யோகாவும் நடக்க வில்லை.அதே போன்ற சமூதாயப் பிரச்சனை ஏற்பட வழி வகையாகி விடுமல்லவா? பின் ஏன் அமெரிக்காவில் உள்ளது போல கற்பழிப்புப் புகார்கள் வராது?
iநானும் 1982 ஆம் ஆண்டு ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் இருக்கும் காவல் அகாடமியில் 15 நாட்கள் யோகா பயிர்ச்சி பெற்று இருக்கின்றேன். ஆனால் ஒரு வயதில் தான் தற்போதிலுள்ள யோகா முறைகளை செய்ய முடியும். சென்னைக் கோட்டைக்கு வெளியே உள்ள பார்க்கில் குப்தா என்ற யோகா மாஸ்டர் பயிற்சி அளிக்கின்றார். ஆரம்பத்தில் நடைப் பயிற்ச்சிக்கு வந்தவர் யோகா ஆர்வத்தில் புது மாப்பிள்ளை போன்று பயிற்சி பெற்றனர். ஆனால் போகப் போக அந்தக் கூட்டம் குறைந்து யோகா மாஸ்டர் மட்டும் இன்று செய்து கொண்டு உள்ளார்.
ஆனால் தொழுகைக்கு ஏழு வயதிலிருந்து, மரணிப்பது வரை நின்று, உட்காந்து, படுத்துக் கொண்டு தொழ முடியும். தொழுகைக்கு தேவைப்  படுவது சுத்தமான இடம், உளுச் செய்ய சிறுது  வசதி. ஆனால் ஆணும், பெண்ணும் இணைந்து  தொழ வழியில்லை. ஏனென்றால் தொழும் இடத்தில் நப்பாசைகளுக்கும், கண்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதினால். ஐவேளை தொழுகை, சும்மாத் தொழுகை, பெருநாள் கூட்டுத் தொழுகை, தகஜாத் இரவுத் தொழுகை, இக்திகாப் தனித்துத்து இருந்து தொழல்.
உடல் திடகார்த்தமானவர் வீட்டிலிருந்து, அல்லது வியாபாரத் தளத்திலிருந்து நடந்தே தொழுகைக்கு வருவது ஒரு நடைப் பயிற்சி. வயதானவர், நோயாளி, கர்ப்பிணி, உட்கார்ந்து அல்லது படுத்துத் தொழல் வசதி. அதுவும் ஒரு பயிற்சியே! தொழுவதால் உளச் சுத்தம் ஏற்படுதல்  அதாவது மது வெறுத்தல், பொய் சொல்லுதல், பித்தலாட்டம் செய்யாதிருத்தல், நேர்மை காப்பது போன்ற உளச் சுத்தம் ஏற்படும்.
தொழும் பொது இறைவனால் அருளப் பட்ட அழ குரானை ஓது கிறோம் என்ற பய, மதிப்பு மரியாதை ஏற்படுகின்றது.அத்துடன் கூட்டுத் தொழுகையால் ஒரு சகோதர பாசம் சுரக்கின்றது.
அல்குரான் சூரா மாய்தாவில்(5:3) இஸ்லாம் முழுமையும், முதிற்சியும் பெற்றது என்று கூறுகின்றது.
தொழுகை அதிக அளவினான மன அமைதியும், மனதினை ஓர் நிலைப் படுத்தவும் செய்கின்றது.
கபீர் எமண்ட் ஹெல்மின்ஸ்கி என்பவர், 'சூபி வே டு மைண்ட்புல்ன்ஸ் அண்ட் எசென்சியல் ஸெல்ப்' என்ற புத்தகத்தில், இஸ்லாமிய ஐவேளை தொழுகை (நிற்பது,குனிவது, தரையில் தலை வணங்குவது மற்றும் காலை மடித்து உட்காருவது ஆகிய உடல் அசைவுகள் மூலம் முக்கிய எலும்பு இணைப்புகள், ஸ்பைனல் கார்ட் எலும்பு உள்பட வலுப்பெறும், வயிற்றில் குடல் அழுத்தம் பெரும், நுரை ஈரல், கல்லீரல் இயங்கவும், மூச்சு சீராகவும், சிறு மூளை மூலம் இதய ஓட்டம் நல்ல முறையில் இயங்க வழி வகுக்கின்றது என்கிறார்.

நமது முஸ்லிம் கிராமங்களில் அந்தக் காலங்களில் என்னைப் போன்ற சிறுவர்கள் கூட  கீழே காணும்  சிலம்பாட்டம், மடுக் கட்டை, மான் கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுக்களை பயிற்சியாக கொடுத்தார்கள். ஆனால் எந்தக்  காலத்திலும் முனங்காலுக்கு மேலே கைலி சென்றதில்லை. ஆனால் இன்று அரை குறை ஆடையுடன் மாணவர் மாணவியர் உடற்பயிற்சி எடுப்பது எந்த வகையில் நியாயம்?
ஆகவே யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து, பாரம்பரிய உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.