Sunday 22 December, 2019

இந்தியா எங்கள் தாய் நாடு, யாரடா எங்களை அந்நியர் என்றது?(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ)
என்னுடன் காலை நடைப் பயிற்சிக்கு வரும் அனிஸ் புர்கா உரிமையாளர் ஹாஜி கபீர் அவர்கள் என்னைப் பார்த்து, 'ஏன் சார், மக்கள் குடி உரிமை சட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டும் குரல் கொடுக்கின்றார்கள், மற்ற இந்திய குடிமக்களை பாதிக்காதா' என்ற ஒரு கேள்வியினை எழுப்பியதின் விளைவாக இந்த கட்டுரையினை எழுத முயன்றுள்ளேன்.
முதலில் குடியுரிமை சட்டம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். 2004ம் ஆண்டு பி.ஜெ.பி. அரசு ஆட்சியில் இருந்த பொது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை  இந்திய காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட ஆதரித்துள்ளார். அதாவது பாகிஸ்தானிலிருந்து, ஆபிகானிஸ்தானிலிருந்து போரினால் இடம் பெயர்ந்த மைனாரிட்டி மக்களுக்கு அகதி என்ற நிலையிலிருந்து மக்கள் குடியுரிமை  உரிமை கொடுக்க வேண்டுமென்று. அந்த சட்டத்தில் பெரிய மாற்றம் செய்து போரினால் இடம் பெயர்ந்த பாகிஸ்தான், அபிகானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் நாட்டின் ஹிந்துக்கள், கிறித்துவர்கள்,பௌத்த, சமண, பார்சி, சீக்கிய மக்களுக்கு குடி  உரிமை கொடுப்பது.  1987 ஆண்டு ஜூலை முதல் தேதிக்கு முன்பு தாயோ, தந்தையோ இந்தியாவில் பிறந்திருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு மக்கள் பிரதிக்குவ உரிமை கொடுப்பது. அசாம் மாநிலத்தினைப் பொறுத்தவரை இந்த காலக்கெடு பங்களாதேஸ் போருக்கு முன்பு 1971ம் ஆண்டாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அத்துடன் என்.ஆர்.சி. என்ற தேசிய சிட்டிசன் ரிஜிஸ்டர் தயாரிக்க ஒரு சட்டத்தினையும் தயாரிக்கப் பட்டுள்ளது. அதன் படி பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அத்தாட்சியாக காட்ட வேண்டும். வேறு எந்த ஆவணமும் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படாது.
பி.ஜெ.பி. அரசு 2019 ம் ஆண்டு நடந்த மக்களைவை தேர்தலில் முழு மெஜாரிட்டி வந்துவிட்டோம் என்ற தைரியத்தில் ஹிந்து ராஷ்டிர அமைக்கும் நோக்கத்தில் பாராளுமென்ற குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்பாமலே 9.12.2019ல் மக்களவையில் நிறைவேற்றி, 11.12.2019ல் மாநிலங்களைவையில் நிறைவேற்றி, 12.12.2019 அன்றே ஜனாதிபதி அவர்களால் கையொப்பமிட்டு அரசிதழிலும் அவசர, அவசரமாக அச்சிடப் பட்டு வெளியிடப் பட்டது. அந்த அவசரத்தில் உள்நோக்கினைக் கண்ட வட கிழக்கு மாகாண மக்கள் வெகுண்டு எழுந்து இன்று தலைநகர் டெல்லி, உ.பி. மேற்கு வங்கம், கர்நாடக, தமிழ்நாடு, கேரளா மாநிலம் போன்றவற்றில் ஆர்ப்பாட்டம் அதனைத் தொடர்ந்து பேரணி,  அதனைத் தொடர்ந்து வன்முறை, அத்துமீறல் புகார், 21 பேர் உயிர் இழப்பு, பொருள் சேதம் போன்ற விரும்பத்தகாத செய்திகள் வந்தவண்ணம் உள்ளது உணமையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டு மக்கள் வேதனைப் படுகின்றார்கள் என்பது தான் உண்மை. மத்தியில் முழு மெஜாரிட்டியில் ஆட்சியில் உட்கார்ந்து இருக்கின்றோம் என்று மக்கள் வேதனைப் படும் அளவிற்கு செயல்கள் இருக்கத் தான் வேண்டுமா என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். சமூக சேவையில் நோபல் பரிசு பெட்ரா கைலாஷ் சத்யார்த் சொல்கிறார், 'ஜனநாயகம் சுருங்குகிறது அது எப்போது என்றால், மக்களுடைய குரல் ஒடுக்கும்போது' என்று. கேரள முதல் மந்திரி பினாராயி விஜயன், 'மெஜாரிட்டி மூலம் எடுக்கப் படும் அதிரடி முடிவுகளால் நாடு சர்வாதிகார பாதைக்கு வழிவகுக்கும்' என்கிறார்.
இந்திய பொருளாதாரம் சுனாமி போன்ற பொருளாதார இழப்புக்களால் தத்தளிக்கின்றதது என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அவைகளில் முக்கியமானது:
1) வோடோபோன், ஏர்டெல், பீஸெனெல், எம்டிஎனெல், பிபிசிஎல், சையில், ஏர் இந்தியா, ஸ்பைஜெட், இண்டிகோ, பெல், இந்தியா போஸ்ட், எஸ் பாங்க், யூனியன் பாங்க், ஆக்ஸ் பாங்க் போன்றவை நஸ்டக் கணக்குக் காட்டுகின்றன.
2) வண்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்து வேலை வாய்ப்பு பலர் இழந்துள்ளனர்.
3) பல ஆயிரக்கணக்கான கட்டப் பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் விற்கப்படாமல் இருக்கின்றன.
4) பல லாபத்தில் ஓடிய கம்பெனி, தொழிற்சாலைகள் மூடப் பட்டன.
5) கிட்டத் தட்ட ரூ 2.5 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
6) 36 பெரும் வியாபாரிகள் கடன் பெற்று வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
7) 45 வருடம் இல்லாத அளவிற்கு வேலையின்னை நாட்டில் உள்ளது.
ஆனால் அம்பானி மட்டும் ரூ 990/ கோடி லாபமும், அதானி ரூ 102/ கோடி லாபமும், பிஜேபி கட்சிக்கு ரூ.1034/ நன்கொடையும் வந்துள்ளது என்றால் மக்கள் கொதித்துத் தானே போவார்கள், அதன் வெளிப்பாடு தான் மக்கள் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டம்.
            அரசுகள் அடக்குமுறை செய்தாலும் போராடும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதினை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். டெல்லி ஜந்தர்-மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பங்குபெற்ற சந்தீப் தில்மான், 'எங்கள் மீது போலீஸ் தடியடி நடத்தட்டும், நாங்கள் ரோஜா மலர்களை அவர்களுக்கு அளிப்போம், அப்படியாவது எங்கள் மீது காவல் துறையினர் அன்பினைக் காட்டட்டும்' என்கிறார்.
            தவறான சட்டத்தினை எதிர்த்து முதன் முதலில் அரசு முறையில் சுதந்திர இந்தியாவில் சுபாஷ் சந்திரா போசுவிற்குப் பின்பு மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள ஜான்சி ராணி மம்தா பானர்ஜி, அதனைத் தொடர்ந்து கேரளா முதல்வர் பினாராயி விஜயன் குரல் எழுப்பினர். அவர்களைத் தொடர்ந்து முன்னாள் பி.ஜெ.பி நண்பரும் தற்போதைய மும்பை முதல்வருமான உத்தவ் தாக்கரே, 'வட மாநிலத்தில் 16 லட்சம் மக்கள் இந்த சட்டத்தில் பயனுள்ள இடம் பெயர்ந்தவர்கள் உள்ளார்கள் அவர்களை எங்கே குடியமர்த்தப் போகிறீர்கள், அதற்கான திட்டம் உங்களிடம் உள்ளதா அல்லது ரூ. 1000/ ரூ.500/ செல்லாது என அறிவித்து விட்டு அப்படி வங்கிக்கு வந்த செல்லாத நோட்டுக்கள் எவ்வளவு என்று எண்ணக்கூட மெஷின் களை ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
            ஆனால் போராடும் மக்களைப் பார்த்து கர்நாடக மந்திரி ரவி அவர்கள் என்ன சொல்கிறார் தெரியுமா? 'போராடும் மக்களுக்கு 2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்பு என்ன நிலை ஏற்பட்டதோ அதனை நினைவு கொள்ளுங்கள்' என்று பூச்சாண்டி காட்டுகின்றார்.
            இந்திய நாடு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நாடு, வந்தாரை வாழ வைக்கும் நாடு, 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று இந்திய பிரதமர் வாயாலே உலக நாடுகள் சபையில் சொல்ல வைத்த நாடு. அப்படிப் பட்ட நாட்டில் மதத்தால் இந்தியர்களை பிரிக்கக் கூடிய சட்டம் என்பதால் தான் மக்கள் வெகுண்டு எழுந்துள்ளனர் என்பதினை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுதாரர்களால் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுக்கள் மூலம் அறியலாம். நோபல் பரிசு வென்ற வென்கிட் ராமன், 'உங்கள் மதமும், எங்கள் மதமும் ஒரேதரமுடியதல்ல என்று சொல்வது 200மில்லியன் முஸ்லிம் மக்களை இந்திய நாட்டு மக்களிடமிருந்து பிரிப்பது போன்றுள்ளது' என்று கூறுகின்றார்.
            அப்படி பிரிக்கும் ஆட்சியாளர்கள் சில வரலாற்று பின்னெனிகளை காணலாம். இந்தியாவில் ஆரியர் இனம், மதம் சம்பந்தமாக அமெரிக்க பேராசிரியர்கள் ரிச்சர்ட் மார்ட்டின், டோனி ஜோசப் ஆகியோர், நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்பு , 'ஆரியர்கள் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்றும், அவர்கள் வந்தபோது சிந்து வெளி நாகரீகம் அழியத் தொடங்கியது ஆனால் தமிழர் நாகரீகம் தழைத்தோங்கி நின்றது என்பதினை கீழடி போன்ற ஆராய்ச்சி குறிப்புகள் சொல்கின்றன. அப்படி என்றால் நாடோடிகளாக வந்த ஆரியர்களை எங்கே அனுப்புவது?
            ஆரியர்கள் வந்த பின்பு தான் வேதங்கள் முளைத்து பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர், சூத்திரர், தலித், போன்ற வாசகங்கள், நடைமுறைகள் வந்ததாக வரலாற்று பேராசிரியர்கள் கூறுகின்றனர். நடுநிலையாளர் ரோனாக் ராய் சொல்கின்றார், 'நீங்கள் ஹிந்துக்களாக இருப்பீர்கள், முஸ்லிம்கள் இருக்கும் வரை. முஸ்லிம்கள்  இல்லையென்றால் நீங்கள் ,  ஹிந்துக்களாக இருக்க மாட்டீர்கள் மாறாக பழையபடி பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், தலித்  மற்றும் தீண்டத்தகாதவராக துண்டு, துண்டாக பிரிக்கப் படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்'.
            இந்திய சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்கள் முக்கிய பங்குகளாற்றியுள்ளனர் என்பதினை ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் வரலாற்றினை முதலாம் சுதந்திரப் போர் 1857, திப்பு சுல்தான் , மாப்பிளா யுத்த 1921 வரலாறுகளை ஆட்சியாளர்களும் படிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேலை அவர்கள் படிக்கவில்லையென்றால் மாப்பிளா யுத்தத்தில் மட்டும் 2337பேர்கள் சாகடிக்கப் பட்டும், 45,405 பேர்கள் சிறைப் பிடிக்கப் பட்டும் அவர்களில் பெரும்பாலோனோர் அந்தமான் தீவு சிறைக்கு அனுப்பப் பட்டும், ஆடு மாடுகள் போன்று ரயில் வேகனில் அடைக்கப் பட்ட 90 கைதிகள் மூச்சு விடமுடியாமல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இறந்து போனதும் வேதனையிலும் வேதனை. ஏன் இந்திய கடைசி சக்கரவர்த்தி பகதூர் ஜா ஜபார்  பர்மாவிற்கு சிறைக் கைதியாக அனுப்பப் பட்டு அவருடைய இரு மகன்களின் தலைகளும் அவருக்கு தங்கத்தட்டில் பரிசாக அளிக்கப் பட்ட நெஞ்சுருகும் சம்பவம் ஆட்சியாளருக்கு மறந்து போகலாம் ஆனால் இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள் என எண்ணுகின்றேன்.
            அவ்வாறு போராடிய முஸ்லிம்களுக்கு மற்ற சமுதாய மக்களும் ஆதரிக்காமல் இருக்க முடியாது. இப்போது அரசு சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடத்துவது முஸ்லிம்கள் மட்டும் என்ற நிலையிருக்கின்றது. உண்மைலேயில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையினை மற்ற சமுதாய மக்களும், நடுநிலையாளர்களும் எதிர்க்காமலில்லை என்பதினை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதனைத் தவிர எழுத்தாளரும், வரலாற்று பேராசிரியருமான ராமச்சந்திர குஹா பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்ததிற்காக கைது செய்யப் பட்டார். பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் அனல் பிறக்க பேசும் பேச்சு அனைவரையும் கவர்ந்ததை தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது. அதேபோன்று கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களும் உணர்ச்சிமிக்க பேச்சினை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இதேபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் சி.ஏ.ஏ மற்றும் என் ஆர்.சி.சட்டத்தினை எதிர்க்கும் முஸ்லிம் அல்லாத மக்கள் இருக்கின்றனர். அவர்களிடம் மேற்கொண்ட சட்டம் எவ்வாறு இந்திய மக்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்தவர்களை மதத்தின் பேரால் பிரிக்க முயற்சி எடுக்கப் பட்டுள்ளது, என்பதினை எடுத்துச் சொல்வதுடன் என். ஆர்.சி பதிவு எப்படி அவர்களையும் பாதிக்கும் என்று அவர்களுக்கு விளக்க வேண்டும்.
உதாரணத்திற்கு 1987 ஜூலை முதல் தேதி முதல் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழ்களும் அல்லது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர் எத்தனை பேர் பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். 1987 ஜூலை முதல் தேதிக்கு முன்பு  பெற்றோர் இறந்து உறவினர் பாதுகாப்பில் இருந்தால் எப்படி பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்க முடியும். அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள் கதிதான் என்ன என்று சிந்திக்க வைக்க  வேண்டும்.  ஒரு கை ஓசை வெற்றி பெறமுடியாது. மாறாக கூட்டுறவே நாட்டுயர்வு என்று ஊரின் அத்தனை சமூதாய மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அதனை விட்டு விட்டு முஸ்லிம்கள் மட்டும் தான் இந்த சட்டம் பாதிக்கும் என்று அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனை அரசியலாக்கவும் கூடாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒ சக்கரைக் கோட்டை கிராமத்தில் சில ஆர்வமான முஸ்லிம்கள், மைக்கில், 'பி.ஜெ.பி.க்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று குரல் எழுப்புவதினை முக நூலில் பார்க்க முடிந்தது. அதுபோன்ற செயலில் இறங்காது, வேற்று மத சகோதர, சகோதரர்களின் ஆதரவைப் பெற வேண்டும். உலகமெங்கும் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் மத வேறுபாடுகளைக் களைந்து கூகிள், முகநூல், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவன உரிமையாளர்களை சி.ஏ.ஏ, என். ஆர்.சி. போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்ப வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 28. 12. 2019 ந் தேதி கேரளாவில் நடந்த 80 இந்திய வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் சம்பந்தமில்லாமல் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியதால் சிறந்த வரலாற்று பேராசிரியர் சிலரும், மாணவர்களும் மேடையில் ஏறி எதிர்ப்பு காட்டியதும் ஒரு வரலாறு தானே!
அது மட்டுமா மேற்கு வங்க ஜாதவ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவி பட்டத்தினை வாங்குமுன் மேடையிலேயே சி.ஏ.ஏ., என் ஆர்.சி;  சட்டங்களை கிழித்து வீசியது தொலைக் காட்சியில் பார்த்து அனைவரும் மெய் சிலிர்த்தனர் என்றால் ஆச்சரியமில்லையா?
அமைதியாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை  என்று இந்து மத பெண்கள் தெருவில் கோலம் போட்டு தங்களது எதிர்ப்பினை காட்டியது சுதந்திர போராட்டத்தில் மத வேறுபாடு இல்லாமல் மக்கள் சி.ஏ.ஏ.மற்றும் ஏன்.ஆர்.சி போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடுவது மூன்றாம் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னோடிபோல உங்களுக்குத் தெரியவில்லையா?
அவர்களிடம் மேற்கொண்ட சட்டம் எவ்வாறு இந்திய மக்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்தவர்களை மதத்தின் பேரால் பிரிக்க முயற்சி எடுக்கப் பட்டுள்ளது, என்பதினை எடுத்துச் சொல்வதுடன் என். ஆர்.சி பதிவு எப்படி அவர்களையும் பாதிக்கும் என்று அவர்களுக்கு விளக்க வேண்டும்.
உதாரணத்திற்கு 1987 ஜூலை முதல் தேதி முதல் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழ்களும் அல்லது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர் எத்தனை பேர் பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். 1987 ஜூலை முதல் தேதிக்கு முன்பு  பெற்றோர் இறந்து உறவினர் பாதுகாப்பில் இருந்தால் எப்படி பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்க முடியும். அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள் கதிதான் என்ன என்று சிந்திக்க வைக்க  வேண்டும்.  ஒரு கை ஓசை வெற்றி பெறமுடியாது. மாறாக கூட்டுறவே நாட்டுயர்வு என்று ஊரின் அத்தனை சமூதாய மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அதனை விட்டு விட்டு முஸ்லிம்கள் மட்டும் தான் இந்த சட்டம் பாதிக்கும் என்று அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனை அரசியலாக்கவும் கூடாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒ சக்கரைக் கோட்டை கிராமத்தில் சில ஆர்வமான முஸ்லிம்கள், மைக்கில், 'பி.ஜெ.பி.க்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று குரல் எழுப்புவதினை முக நூலில் பார்க்க முடிந்தது. அதுபோன்ற செயலில் இறங்காது, ஏற்கனேவே மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலில் இறங்கு முகத்தில் இருக்கும் பி.ஜெ.பி. அரசு 2020 ல் டெல்லி, பிஹார், 2021 ல் ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தலில் சந்திக்க உள்ளது. அப்போது ஓட்டு போடக்கூடியவர் முஸ்லிம்கள் மட்டுமல்ல மாறாக அனைத்துத் தர மக்களும் ஆவர். ஆகவே அவர்களிடம் உங்கள் நிலையினை எடுத்துச் சொல்லி உங்கள் எதிர்ப்பினை உங்கள் ஓட்டுக்கள் மூலம் காட்டுங்கள். அனைத்து மக்களிடமும் மேற்படி சட்டங்களின் பாதகங்களை எடுத்துச் சொன்னால் அவர்களும் குரல் இந்தியாவில் எழுப்பினால் அரசு அடிபணியும் என நினைப்பது சரிதானே!
            
           

Wednesday 4 December, 2019

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ ) பிஎச்.டி.)
2019 ம் ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதம் முஸ்லிம் பெண்களின் மாதம் என்று உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. பொதுவாக முஸ்லிம் பெண்கள் மென்மையானவர்கள், புகுந்த வீட்டில் அடிமை போலவும், அடுக்களையே கதியென்று அடைந்து கிடப்பவர்கள் என்று உலகில் வேற்று மதத்தவர் அல்ல. மாறாக முஸ்லிமாக பிறந்து கற்றுக் குட்டிபோல சில கதைகள், கவிதைகள் எழுதி புகழ் வரவேண்டுமென்று இஸ்லாமிய மார்க்கத்தினையே குறைகூறும் சிலரை நம்மிடையே கண்டிருப்பீர்கள்.
அவர்கெளுக்கெல்லாம் சவுக்கடி கொடுப்பதுபோல அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜோனா பிரான்சிஸ், 'முஸ்லிம் பெண்கள் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக் கற்கள் போன்றவர்கள், ஆனால் அமெரிக்க பெண்கள் விலை மாதுகளைப் போன்றவர்கள்' என்று சொல்லி அதிர்ச்சி உண்டாக்கின்றார். அதற்கான காரணத்தினை அவர் சொல்லும்போது, 'நான் முஸ்லிம் பெண்கள் பால் உள்ள ஒழுக்கம், அழகு, மனக் கட்டுப் பாடு, நளினமாக செயல் படுதல் ஆகியவற்றினைப் பார்த்து ஆச்சரியப் பட்டுள்ளேன். அமெரிக்க பெண்கள் ஹாலிவுட் படங்களில் வருகின்ற பொய் மூட்டைகளையும், மாய ஜாலங்களையும் நம்பி வாழ்கின்றனர். பாலுணர்வு என்பது இயற்கையாகவே வருகின்ற ஒன்று அதனைக் கட்டுப்படுத்துதலோ, மண வாழ்க்கைக்கு முன்பு உடலுறவு கொள்வதையோ வெறுக்கவேண்டியதில்லை என்று சினிமாவில் வரும் வசனம் போல பேசுகின்றனர். ஆனால் அவ்வாறு சொல்வது கட்டுக் கோப்பான குடும்ப-சமூக  வாழ்வு  அடித்தளத்தினையே தகர்க்கக் கூடிய ஒன்றாகும் என்பதினை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
‘அவர் முஸ்லிம் எழுத்தாளர்களைப் பார்த்து, 'நீங்கள் மேலை நாட்டினவரைப் பார்த்து உங்கள் எழுத்துக்களை பதிவு செய்யாதீர்கள், அவர்களுக்கென்று தனியான குடும்ப அமைப்புக் கிடையாது, விலைமாது போல உடை அணிவதுதான் நாகரீகம் என்று எண்ணக் கூடியவர்கள். ஆனால் அவர்களின் உண்மையான வாழ்க்கை மகிழ்ச்சி அடையக் கூடியதில்லை. பல லட்சக் கணக்கான மேலை நாட்டவர் போதைக்கு அடிமையாகி இரவில் கூட மன உலைச்சலால் சரியாக தூங்குவது  இல்லை. அவர்கள் திருமணம் என்பது அடிமையாகும், பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது உடல் அழகினை கெடுக்கும் அநாகரீயமான செயல் என்று சபிக்கின்றனர். அவர்கள் சொல்லுவதிலெல்லாம் எப்படி அவ்வா அலைவ ஸல்லம் அவர்களை இப்லிஸ் ஆசை வார்த்தை சொல்லி ஆப்பிள் பழத்தினை சாப்பிட வைத்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி பூமியில் ஆதம் அலைவஹி ஸல்லம் உடன் பூமிக்கு அனுப்பப் பட்டார்களோ அதேபோன்று சாத்தான் வேதம் ஓதுவது போல உங்களை உடை, நடை, பாவனை, வார்த்தை, செயல் மூலம் தீய வழிக்கு ஆளாக்கி விடுவர்.'
'அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்கள் மிகவும் அடக்கமான அங்க அடையாளங்கள் வெளியே தெரிந்து அதன் மூலம் அந்நியர் கழுகுப் பார்வையிலிருந்து மற்றும் தீய எண்ணங்களிருந்தும் உணர்வுகளை தூண்டாத அளவிற்கு உடை அணிவதிலும், போற்றக் கூடியவர்கள்.'
ஜோனா பிரான்சிஸ் முஸ்லிம் பெண்களைப் பார்த்து, 'நீங்கள் எல்லாம் வைரம் போன்று ஜொலிக்கக் கூடியவர்கள், ஆகவே மேலை நாட்டு மோகத்தில் நீங்கள் பலிக்கடாவாகி விடாதீர்கள், உங்கள் மார்க்கம் சொல்லும் கற்பொழுக்கம், பண்பு, பரிவு, நாணம் மற்றும் மடமையினை பின்பற்றுங்கள்' என்று அறிவுரை கூறுகின்றார்.
            இஸ்லாமிய மார்க்கத்தில் முதன் முதலில் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தவர், ‘நுசாமி பின்த் காப் அல்’ எனற பெண் தான். அவர் ஒரு தடவை ரஸூலல்லாவிஹ்னை பார்த்து, ' ரஸூலல்லாஹ்வே ஏன் அல்லாஹ் ஆண்களைப் குறிப்பிட்டே வஹிக்கள் இறக்குகின்றான், பெண்களைப் பார்த்து வஹி வருவதில்லையே என்று கேட்டார்'. அப்போது அல்லாஹ் ரஸூலல்லாவிற்கு அத்தியாயம் 33 வசனம் 35னை இறக்கினான். "நிச்சயமாக முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், அல்லாஹ் வழியில் வழிபடும் பெண்களும், அல்லாஹ்வினை தொழும் ஆண்களும், உண்மையே கூறும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும், பொறுமையான பெண்களும், பொறுமையான ஆண்களும், உள்ளச்சத்தோடு அல்லாஹ்வினை பயந்து நடக்கும் பெண்களும், உள்ளச்சத்தோடு அல்லாஹ்வினை பயந்து நடக்கும் ஆண்களும், தானம் செய்யும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், தங்கள் மர்மஸ்தானத்தினை மறைக்கும் பெண்களும், அதேபோல் உள்ள ஆண்களும், அலாஹ்வினை அதிகமாக நினைவு கூறும் பெண்களும், அதேபோல் நினைவு கூறும் ஆண்களும், அல்லாஹ்வின் மன்னிப்பையும், நற்கூலியையும் சமமாக வாரி வழங்குவான்' என்று.
            அந்த வஹியினை உண்மையாக்குவது போல பெண்கள் பல துறைகளில் சிறப்பு பெற்று விளங்கினர். அவர்கள் சிலரை உங்கள் முன்பு நிறுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
1)    மார்க்க அறிஞர்: ராபியா அல் அதாவியா என்பவர் 800 வது நூற்றாண்டில் வாழ்ந்த சூபி பெண் ஞானியாவார். அவர் அங்குள்ள ஒரு சீமாட்டி வீட்டில் அடிமையாக இருந்தார். ஒரு  நடு இரவு அவர் ஸஜ்தா செய்து இறைவனை வணங்கிக் கொண்டு இருக்கும் போது தற்செயலாக சீமாட்டி அதனை பார்த்து விட்டார். ராபியா ஸஜ்தா செய்த தலைக்கு மேல் ஒரு விளக்கு எந்த பிடிமானமுமில்லாமல் ஒளி விட்டு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்து பயந்த சீமாட்டி ராபியாவிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது என்று எண்ணி அவரை விடுதலை செய்தார். அதன் பிறகு அவர் ஒரு ஞானியாக வலம் வந்தார். ஒரு தடவை அவர் தெருவில் ஒரு கையில் வாளியில் தண்ணீரும், மற்றொரு கையில் எரியும் விளக்கினையும் ஏந்திச் சென்றார். அதனைப் பார்த்து வியந்த ஒருவர் கேட்டார், இது ஒரு வினோதமான செயலாக உள்ளதே அதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். மனிதன் நரக நெருப்பிலிருந்து தப்பித்து சுவர்க்கத்தின் சுகத்தினை அனுபவிக்கவே தொழுகின்றான், அதனைப் போக்கி அவன் இறைவனுக்கு மனிதனாக படைத்த நன்றிக்காக தொழ வைக்க வேண்டுமென்றால், ஒரு கையில் உள்ள நெருப்பினைக் கொண்டு சுவனத்தினை எரித்து விட்டு, மறு கையிலுள்ள தண்ணீர் கொண்டு நரக நெருப்பினை அணைத்து  விட  வேண்டுமென்றார். இன்றும் கூட பல பயான்களில் சுவர்க்கம், நரகம் என்று பயமுறுத்தும் கூற்று நடந்து கொண்டு தான் இருக்கின்றது.மாறாக இறைவன் மனிதனை புனிதனாக படைத்து பரிபாளம் செய்ததிற்கே நன்றி சொல்லவேண்டும் என்று கூறினால் அறிவு பொருத்தமாகுமல்லவா.
2)    கல்விக்கு வித்திட்டவர்: பாத்திமா அல் பஹ்ரி மொரோக்கோ நாட்டின் செல்வ சீமாட்டி. அவர் தனக்கு கிடைத்த செல்வத்தினை இறை வழியில் பல பள்ளிவாசல்களும் காட்டியதோடு, அல் காரா என்ற பெரிய பள்ளியினை கட்டி அங்கே கல்விக் கண்ணை திறக்கும் சிறந்த பல்கலைகழகத்தினை அபூர்வ புத்தகங்களைக் கொண்டு  நிலைநாட்டியது மூலம் உலகிலேயே மிக பழமையான பல்கலைக் கழகமாக கின்னஸ் ரெக்கார்டில் பதியப் பட்டும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப் பட்டதாகவும் உள்ளது.
3)  ஆளுமை: டெல்லியில் பதிமூன்றாம் ஆண்டு சுல்த்தான் ரசியா ஆட்சி செய்தார். அவர் ஒரு ஆணுக்கு இணையாக காட்சி அளிக்க வேண்டுமென்று தன்னை யாரும் 'சுல்தானா ரசியா' என்று அழைக்கக் கூடாது, மாறாக சுல்த்தான் ரசியா என்று தான் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஒரு ஆண் அரசர் எப்படி உடை அணிந்தாரோ அதேபோன்று உடை அணிந்து காட்சி தந்தார். ஆனால் அவர், 'ஒருவர் இறை பக்தியினை உடையில் பகட்டாகக் காட்டக் கூடாது, மாறாக உள்ளத்தில் இறை அச்சத்துடன் இறைஞ்சி  வழிபட வேண்டும் என்று நினைப்பவர். இவர் காலத்தில் பதிப்பகங்களும், நூலகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவினார்.
4 ) மேலை நாட்டு அறிஞர்: லாலே பக்தியார் என்ற அமெரிக்க பெண்மணி 2007 ல்      அல் குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் பெண்மணியாவார்           இவருடைய மொழிபெயர்ப்பு தான் இன்று உலகமெங்கும் இருக்கின்ற நூல்    நிலையங்களிலும், பள்ளி வாசல்களிலும், பல்கலைக் கழகங்களிலும் மாதிரியாக    உள்ளது.
5 ) பெண் இயக்கம் : நானா அஸ்மா என்பவர்  19 ம் நூற்றாண்டினைச் சார்ந்த நைஜீரியா இளவரசியாவார். இவர் அராபிக், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் கை தேர்ந்தவராவார். இவர் ஆப்ரிக்க கண்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பெண்களின் கல்வியினை வழியுறுத்தியுள்ளார். இன்று கூட நைஜீரியாவில் இவர் பெயர் தாங்கிய பெண்கள் இயக்கம், கல்வி நிலையங்கள் உள்ளன.
6 ) நீதியரசர் : ஈரானில் தலைமை நீதிபதி 'சிரின் அல் அபாடி' என்ற பெண் மிகவும் சிறந்த நீதிமான். அவருடைய சிறந்த நீதி பரிபாலனுக்காக நோபல் பரிசையும் பெற்றுள்ளார். இவர்தான் முதன் முதலில் ஆண், பெண் இணக்கமாக, ஜனநாயகப் படி வாழும் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
      மேலே சுட்டிக் காட்டிய பெண்களின் போராளிகளால் இந்த நவீன உலகில், பங்களா தேசில் சேக்ஹ் ஹஸீனா, ஹாலிதா ஷியா, மாலித் தீவில் கிளாஸே மரியம், கொசாவோ நாட்டில் ஆட்டி ஜாஜாக, இந்தோனேசிய மெகாவாதி, பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ, செனிகல் மடியோர் போயி, துருக்கி டன்சி சில்வர், சிங்கப்பூர் ஆமினா கரீம், இந்திய நாட்டின் பாத்திமா பீவி ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகளாக முடிந்தது. ஆகவே தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு முன்னோடிகளாக இருந்தோர்  நினைவாக முஸ்லிம் பெண்கள் மாதம் கொண்டாடப் படுகின்றது. நமது பெண் பிள்ளைகளையும் சிறந்த கல்விமான்களாக, நீதிபதிகளாக, சமூக சேவகர்களாக, அரசில் முக்கிய பங்கு வகிக்கும் பிரமுகர்களாக ஆக்குவதோடு அவர்களை மார்க்கத்தின் வழிமுறைகளை விட்டு பிறழாமல் பார்த்துக் கொள்வோமா?


Wednesday 20 November, 2019

எண்ணமும், எழுத்தும் உயர்வைத் தரும் !


   
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்,டி; ஐ.பீ.எஸ்.(ஓ )

நம்மிடையே நன்கு கற்றவர்கள், பட்டம் பெற்றவர்கள் மற்றும் பணக்கார குடும்பத்தில் பிறந்த தனவான்கள் தான் எழுத்தாளர்கள் ஆகலாம் என்ற தவறான எண்ணங்கள் உள்ளன. ஒரு நபர் நன்றாக பாடவேண்டுமென்றால், சங்கீத வித்வானிடமும்,  ஒரு ஓவியராகவோ அல்லது சிற்பியாகவோ ஆகவேண்டுமென்றால் அந்தந்த துறைகளைச் சார்ந்தவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு எழுத்தாளன் அப்படி பயிற்சியின் மூலம் உருவாக முடியாது. அவன் சுயமாக தனக்குள் உருவாக வேண்டும். அதற்கு மாறாக கட்டுமான தொழிலாளர்கள் முதல் தெரு ஓரம் டீ, காஃபி கடை வைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் புத்தகம் எழுதி புகழ் அடையலாம் என்று சில உண்மை சம்பவங்களை கொண்டு இந்த கட்டுரையை  எழுதி உள்ளேன்.
            கேரள மாநிலம் கண்ணனுரைச் சார்ந்த ஷபி சேரமாவிலவி என்ற முஸ்லிம் வறுமையின் காரணமாக பெங்களூர் வந்து கிடைக்கும் சில கூலி வேலைகளை செய்து வயிற்று பசியினை போக்கி வந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டினைச் சார்ந்த தொழிலாளர்களுடன் தங்க நேர்ந்தது.   அவர்கள் பேசும் கன்னித் தமிழ் கண்டு அதனைக் கற்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் உந்த தமிழ் பத்திரிக்கைகள், பின்பு சிறு, சிறு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். பின்பு நல்ல சிறு கதைகளை கொஞ்சும் மலையாளத்தில் மொழி பெயர்த்து எழுதினால் என்ன என்று யோசித்தார். அதன்படியே சில தமிழ் கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்து சிறு சிறு கட்டுரைகளாக எழுதி அதனை மலையாள பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அதுவும் பிரசுரமாகி, அவர் புகழ் தெரிய ஆரம்பித்தது. அப்படி எழுதிய கட்டுரைகளுக்கு மூன்று பரிசுகளையும் பெற்றது ஒரு தூண்டு கோலாக அமைந்தது. உடனே சாகித்திய அகாடமி தழிழ் புத்தகத்திற்காக பரிசு பெற்ற பெருமாள் முருகன் புத்தகத்தினை மலையாளத்தில் மொழி பெயர்த்ததோடு அல்லாமல் பெருமாள் முருகனாலேயே பாராட்டுப் பெற்றதினை பெருமையாகக் கருதுகிறார். அதன் பின்பு தோப்பில் முகமது அவர்களின் புத்தகத்தினையும் மொழி பெயர்த்துள்ளார். பல பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் பெற்றாலும் நிரந்தரமான வேலை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று மனந்தளராது கட்டிடவேலையினையே செய்து கொண்டும் புத்தகங்கள் மொழி பெயர்த்துக் கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கும் போது அவர் மன உறுதியினை பாராட்டாமல் இருக்க முடியவில்லைதானே !

போலீசின் மீது இருந்த கோபம் ஒரு இளைஞரை புகழ் மிக்க எழுத்தாளராக்கியது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா, அவர் யார் என்று பார்க்கலாம்.
கோவை மாவட்டத்தினைச் சார்ந்த சந்திரகுமார் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வீட்டினை விட்டு சில சக மாணவர்களுடன் வெளியேறி, கள்ள ரயில் ஏறி  குண்டூர் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கியுள்ளார். அங்கு ரயில்வே போலீஸால் பிடிபட்டு பதிமூன்று  நாட்கள் விசாரணையின்றி லாக்கப்பில் அடைக்கப் பட்டுள்ளார். அப்போது செய்யாத சில குற்றங்களை ஒத்துக் கொள்ளுங்கள் என்று கொடுமைப் படுத்தப் பட்டு அவர்களை ஒப்புக் கொள்ளச் சொல்லி ரிமாண்டிற்கு அனுப்பப் பட்டுள்ளார். ஐந்து  மாத ஜெயில் தண்டனையும் அனுபவித்து பின்பு நீதியரசர் அவர்கள் ஒன்றுமறியாதவர்கள் என்று அறிந்து விடுதலை செய்யப் பட்டார். சந்திரகுமார் ஜெயிலில் இருந்தபோது சிறந்த எழுத்தாளர்களான பகத் சிங் , ஹென்றி சாரியார் போன்ற புத்தகங்களை படித்து புத்தகம் படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்திக் கொண்டார். 1984 ம் ஆண்டு திரும்பிய பின்பு ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆனால் காவல் துறை மீது இருந்த கோபமும், அவர்களால் ஏற்பட்ட அவமானமும் ஒரு புத்தகமாக தமிழில் 'லாக்கப் 'என்று பெயரிட்டு வெளியிட்டார். அந்த கதைதான் 'விசாரனை 'என்ற தமிழ் படமாக வெளி வந்து 2017 ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டது என்றால் ஆச்சரியமில்லையா ? ஆனால் தனது எழுத்துப் பணியினையும் வயிறு கழுவ ஆட்டோ ஓட்டுதலையும் இன்றும்  விடவில்லை. சந்திரகுமார் சொல்லும்போது, படிப்பவர் மனம் கவரவே தான் தொடர்ந்து எழுதுவதாக' சொல்லும்போது அவரைப் பார்த்து புகழாமல் இருக்க முடியவில்லைதானே !
சந்திரகுமாரைப் போலவே மஹாராஷ்டிராவினைச் சார்ந்த லக்ஷ்மான் ராவ் என்பவர் பத்தாவது வரைப் படித்தவர். பள்ளி மாணவ பருவத்திலேயே ஹிந்தி எழுத்தாளர் 'குலசன் நந்தர்' போல எழுத வேண்டும் என்று ஆர்வமுள்ளவர். அதன் ஆர்வம் உந்த டெல்லி வந்து பல சிறு, சிறு வேலைகளை செய்து வாழ்க்கையினை ஓட்டி விட்டு ஹிந்தி பவன் வாசலிலேயே நடைபாதையில் ஒரு டீ கடையினை தரையில் அமர்ந்து துவங்க ஆரம்பித்தார். அப்போது வியாபாரத்திற்கிடையிலேயே 'நயி துணியானி , நயி கஹானி' என்ற ஹிந்தி புத்தகத்தினை  1979 ம் ஆண்டு எழுதினார். அதனை வெளியிட பதிப்பாளர்கள் கட்டிடங்களுக்கு கஜினி முகமது போன்று படையெடுத்தார். எடுத்த எடுப்பிலேயே அவர் எழுதிய நாவலை பற்றிக் கேட்காமல் அவர் செய்யும் தொழிலையும், படித்த படிப்பையும்  கேட்டுவிட்டு அவரைப் புறக்கணித்தனர். வெகுண்டெழுந்த அவர் துவழவில்லை மாறாக அவரே சொற்ப வருமானத்தினிடையே புத்தகமாக வெளியிட்டார்.
தனது விடாத முயற்சியால் தனது 50 வது வயதில் பி.ஏ.பட்டமும், எம்.ஏ. பட்டத்தினை 60 வயதில் பெற்றார். இதுவரை 20 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆனாலும் தனது ரோட்டோர டீக் கதையினை விடவில்லை. ஏனென்றால் அவருக்கு வாழ்வு கொடுத்ததே அந்த வரப்பிரசாதம் தான்  என்று நம்புகிறார்.
            மேற்கு வங்கத்தினைச் சார்ந்த ‘பேபி ஹால்டர்’ வாழ்வு சோகமோ சோகம் நிறைந்தது. குடிகார தந்தையின்  கொடுமையினால் தனது தாயார் அவரையும், அவருடைய சிறு தங்கையையும் கணவரிடம் விட்டு விட்டு கண் காணாத தூரத்திற்கு சென்று விட்டார். குடிகார தந்தைக்கு தினமும் குடிக்க காசுக்கு ஆசைப் பட்டு ஹால்டருக்கு 12 வயதாக இருக்கும் போது  ஒரு வயதான முதியவருக்கு திருமணமும் செய்து விட்டார். புகுந்த வீட்டில் ஏழாத கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப் படுத்தியதினால் வாழ்க்கையே இருண்டு விட்டது போன்ற அதிர்ச்சியில் தள்ளப் பட்டார். சிறைவாசம் போன்று அமைந்த வாழ்க்கையினை விட்டு வெளியேறி ஹரியானா மாநிலம் குறுகிராம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அங்குள்ள பத்திரிக்கைகள் மற்றும் புத்தகங்களை ஓய்வு நேரங்களில் படிக்க ஆரம்பித்தார். அதுவும் வங்காள எழுத்தாளர்கள் ரவீந்தர் நாத், காசி நஸ்ருல் இஸ்லாம், பங்கின் சந்ர சாட்டர்ஜி போன்றவர்களின் நாவல்களை விரும்பி படித்தார். வீட்டின் உரிமையாளர் கொடுத்த ஆர்வத்தில் தானும் அவர்களைப் போல் எழுதினால் என்ன என்று யோசித்து பின்பு தனக்கு வாழ்வில் நடந்த சோகங்களை ஒருங்கிணைத்து, 'ஆலோ அந்தாரி' என்ற நூலை எழுதி அது பிற்காலத்தில் 'a life less ordinary ' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரபலமானார். அதோடு விடவில்லை, மும்பை, கல்கத்தா நகரங்களில் பாலின தொழிலாளர்களை நல்வழிப் படுத்த அரசு சாரா அமைப்பையும் நிறுவி அவர்களையும் நல்வழிப் படுத்தி, அவர்கள் குழந்தைகள் பள்ளி செல்லவும் வழிவகைகள் செய்து வருவதோடு தன் எழுத்து ஆரவத்தினையும் விடவில்லை என்றால் பாருங்களேன்.
            சைக்கிள் ரிக்ஸா இழுத்துக் கொண்டே புத்தகம் எழுதும் பஞ்சாபி மாநிலம் அம்ரிஸ்டர் நகரினைச் சார்ந்த ரன்பீர்சிங்கும் புத்தகம் எழுதி பிரபலமாகியுள்ளார் என்று கீழேகாணலாம்.
ரன்பிர் சிங் சிறு வயது முதற்கொண்டே புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவருடைய தந்தை ஒரு ரிக்ஸா ஓட்டும் தொழிலாளி அதனால் குடும்ப வறுமை தந்தையினைப் போன்று அவரும் குடும்ப சூழ் நிலையில் ரிக்ஸா ஓட்ட வேண்டியதானது. இருந்தாலும் பழைய பத்திரிக்கைகள், கீழே கிடைக்கும் பழைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அவரை விடவில்லை. ஒரு தடவை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில பிரபலங்களை அந்த தொலைக்காட்சியில் அறிமுகப் படுத்தி இவர்கள் தான் சீக்கிய கோட்பாடுகளை தாங்கிப் பிடிப்பவர்கள்' என்று காட்டப் பட்டதினைப் பார்த்து  கொதித்தெழுந்த ரன்பிர் சிங் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, 'சீக்கிய மதத்தினைச் சார்ந்த ஒவ்வொருவரும்  மத கோட்பாடுகளை காப்பவர்கள் தான்' என்று நீண்ட ஒரு கடிதத்தினை எழுதினார். அதனை அந்த தொலைக்காட்சி நிறுவனமும் வெளியிட்டிதுடன் தான் தாமதம் அவருக்கு தொலைக் கட்சியிலே பல பாராட்டுகள் குவிந்து பிரபலமானார். அவர் ரிக்சாவில் பயணம் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் சொல்லும் கதைகளை வைத்து, 'ரிக்ஸா டே ஷலதி சிந்தகி'  என்று வெளியிட்டார். அவர் இன்றும் தனது சைக்கிள் ரிக்ஸா ஓட்டும் தொழிலை விடவில்லையாம்.     
எழுத்தாளர்கள் என்பது ஒரு தனி வரம். அந்த வரம் பெற்றவர்கள் கடின உழைப்புக்கு அஞ்சக் கூடாது. அது ஒரு வேலை என்று நினைக்காது ஒரு வரமாய் நினைத்து செயல்படவேண்டும். நிறைய படிப்பதும், சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும், அவலங்களையும் உற்று பார்த்து அதற்கு தீர்வு காணும் வகையில் படைப்புகளை எழுதுவதும் ஒரு த னிக் கலை. நான் காவல் துறையில் ஓய்வு பெற்ற 13 வருடத்திற்குள் மூன்று ஆங்கில புத்தகங்களையும், ஏழு தமிழ் புத்தகங்களையும் எழுதியுள்ளேன். பணத்திற்கும், புகழுக்குமல்ல. மாறாக சமுதாயத்தில் அன்றாட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அது எனக்கு திருப்தி தருகிறது. அதனைப் படித்த சிலர் உங்கள் புத்தகம் சிறப்பாக இருக்கிறது என்று கூறும் பொது மன நிறைவு பெறுகிறேன். அதுபோன்று ஆர்வமுள்ள நீங்களும் எழுதக்கூடாது?
உலகில் சிறு சிறு வேலைகளை செய்த பலர் புத்தகங்கள் எழுதும் ஆர்வத்தால் அந்தப் பட்டு சிறந்த படைப்புகளை அளித்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுகளைக் கூட பெற்றுள்ளனர்.
உதாரணத்திற்கு ஜெர்மனியினைச் சார்ந்த ஹெர்மன் செல்லி என்பவர் கடிகாரம் செய்யும் இடம் புத்தகக்கடையில் வேலை பார்த்தார். எழுத்தின் ஆர்வத்தால், 'புதிதான் ப்ரூக்ஸ்' என்ற சிறந்த இலக்கியத்திற்கான புத்தகத்தினை எழுதி நோபல் பரிசு பெற்றார். 
லண்டனைச் சார்ந்த வில்லியம் பாக்கர் வீடுகளுக்கு வர்ணம் பூசுவராகவும், புத்தகக் கடையிலும் வேலை பார்த்தார். பிற்காலத்தில் , 'லெட்டர்ஸ் ஆப் விலக்கி காலின்ஸ்' என்ற புத்தகத்தினை எழுதி இலக்கியத்திற்கான நோபல் பர்சுனைப் பெற்றார்.

சார்ள்ஸ் டிக்கென்ஸ் என்பவர் கண்ணாடி பாட்டில்களை லெபெல் ஓட்டும் வேலை பார்த்தார். புத்தகம் எழுதும் ஆர்வத்தால், 'கிறிஸ்துமஸ் கரோல்' என்ற புத்தகத்தினை எழுதி உலகப் புகழ் பெற்றார்.
உங்களிடையேயும் புத்தகம் எழுதும் ஆர்வமுள்ளவர்கள் நிறையபேர் உள்ளனர். ஆனால் தொடங்க தான் தைரியம் வருவதில்லை. அது போன்றவர்களை கண்டறிந்து ஊக்கம் கொடுத்தால் யார் கண்டது அவர்களுடைய புத்தகமும், கட்டுரைகளும் ஒரு நாள் பிரசுரிக்கப் படலாம் யார் கண்டது.           
Help to improve it!


Monday 12 August, 2019

பாரத மதாக்கி ஜே'


                       
              (டாக்டர் ஏ.பீ. முகமது அலி),

2019 ம் மக்களவை தேர்தலுக்குப் பின்பு மைனாரிட்டி முஸ்லிம்  மக்கள் சிலரை ஹிந்துத்துவ அமைப்புனர்,' பாரத மாதா கி ஜே' என்று கோசம் போடச் சொல்லி துன்புறுத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதை அனைவரும் அறிவர்.  அவ்வாறான செய்கைகள் மூலம் மைனாரிட்டி சமூகத்தினரிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதினை யாரும் மறுக்க முடியாது. மத்தியில் ஆளுகின்ற தலைமை அவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுகோள் இட்டாலும் அதற்கான செயல் திட்டம் குறைவே என்று சம்பவங்கள் அடங்கிய செய்திகள் வந்து கொண்டுள்ளனவே.
            இந்திய நாடு பல்வேறு ஜாதி, மதம், நிறம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட பண்பான நாடு என்பதினை பண்டைய கால வரலாற்றுச் சுவடிகள் பறை சாற்றும். அதனைப் போன்று தான் சீன நாட்டு வரலாறும் உள்ளது. தேர்தல் வரும் போகும், ஆனால் வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்றால் மதச்சார்பு அற்ற, சமதர்ம சமுதாயம் என்ற மிகவும் பலமான அடித்தள மிக்க ஜனநாயக  அரசினை  எழுப்பினால் மட்டுமே முடியும் என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது.
            பல தரப்பு மக்கள் வாழும் பெரிய நகரங்களில் பல்வேறு வேற்றுமை இருந்தாலும் மனக் கசப்பினை காண முடியாது. அங்குள்ள சிலரிடம் கலந்துரையாடியபோது'ஹிந்துஸ்தான்', 'பாரத்' போன்ற வாசகங்கள் மாயாஜால காலங்களில் உள்ள சமஸ்கிருத வார்த்தைகளில் வந்தது என்பது புலனாகிறது.
            ஆனால் சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்தியாவின் வடக்கேயுள்ள ஹைபர் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கேயுள்ள கன்னியாகுமாரி வரையிலும் உள்ள விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற வறுமை,கடன் தொல்லை,கந்துவட்டிக் கொடுமை, கடுமையான வீட்டு வாடகை, வரித்தொல்லை, தண்ணீர் பஞ்சம், குழந்தைகள் படிப்புச் செலவு,விவசாய நிலங்களில் அகல ரோடு, மீத்தேன்,கெயில் குழாய்கள் பதிப்பு  போன்ற கஷ்டங்கள் கதை கதையாக சொல்வது பரிதாபமும் பரிதாபமே!
            இந்திய நாட்டின் சுதந்திரம் படித்த இளைஞர்களால் மட்டுமே அடைந்து விடவில்லை. மாறாக இடுப்பில் கோவணம் தலையில் முண்டாசு கட்டிய கடைநிலை விவசாயிகள் மூலமும் தான் கிடைத்தது என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது. இவ்வளவிற்கு ஏன் காந்திஜியே தமிழ்நாட்டின் கோவணம் கட்டிய விவசாயினைப் பார்த்துத் தானே தனது உடையினை அவர்கள் போன்று மாற்றினார். இன்று முன்னேறிய நாடுகளாக அமெரிக்கா, ருசியா, சீனா, ஜப்பான்  பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து விருப்பத்திற்கு காரணம் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் ஒற்றுமைக்கும், உழைப்பிற்கும் மதிப்பினைக் கொடுத்ததினால் இன்று பரிமாண வளர்ச்சியடைந்துள்ளது.
            சுதந்திர இந்தியாவின் முதல் பிராதன மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய, 'டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலில் பாரத மாதா என்றால் யார் என்பதினை மிகவும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு  விளக்கி எழுதியுள்ளார். அதில், 'நான் சிலக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது என்னை வரவேற்கும் உற்சாகத்தில், 'பாரத மாதகி ஜே' என்று கோசம் எழுப்புவதினை பார்த்தேன். அப்படி கோசம் எழுப்புவர்களைப் பார்த்து, பாரத மாதாகி ஜே என்றால் என்ன என்று அவர்களை கேட்டேன். என்னுடைய கேள்வியினை எதிர் பார்க்காத அவர்கள் திகைப்பு அடைந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து அன்னைக்கு வெற்றியா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்வதிற்குப் பதிலாக ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்தார்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஜாட் இன வாலிபர் எழுந்து 'டர்டி' என்ற நல்ல இந்தியா என்கிறார்.
நான் அவரை விடவில்லை. மாறாக அவரிடம் நீங்கள் உங்கள் ஊரைச் சொன்னீர்களா அல்லது மாவட்டத்தினை சொன்னீர்களா அல்லது அனைத்து இந்தியாவினையும் சொன்னீர்களா இப்படியாக  வினா எழுப்பி பதில்களும் பெற்றேன். இறுதியாக அவர்களிடம் நான், இந்தியா என்பது . மலைகளையோ, காடுகள், ஆறுகள், பாலைவனங்கள், பரந்த வயல் வெளிகள் அடங்கிய ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கிய பொருள் கொண்டதில்லை.மாறாக இந்தியா என்பது அதில் வாழும் பலகோடி மக்களையும் சார்ந்ததாகும், அவர்கள் வெற்றி புன்னகையோடு இருந்தால் தான் நாடும் போற்றக்கூடிய ஒன்றாக திகழும்.என்று அவர்களுடைய  மூலையில் பசுமரத்தில் அடிக்கப் பட்ட ஆணிபோல பதிய வைத்தேன் என்று எழுதியுள்ளது இந்தக் காலத்தில் குறுகிய வட்டத்தில் குதிரை சவாரி செய்யும் குறுகிய எண்ணம் கொண்ட துவேஷ மானவர்களுக்கு முகத்தில் அறைந்தால் போல கூறும் சம்மட்டி அடியாகும்.
            உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகாய் அவர்கள் அஸ்ஸாம் தலைநகர் கௌகாத்தியில் 4 .8 .2019  ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, 'மக்களை அச்சுறுத்தும் விதமாக சில தனிநபர், குழுமம் செயல்பாடுகள் கவலையளிக்கின்றது. அப்படிப் பட்டவர்கள் நாட்டின் பண்பாது, பாரம்பரியம் ஆகியவற்றிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 'லாயல்டி' அர்ப்பணிப்பு பற்றி கூறும்போது, 'நமது அர்ப்பணிப்பு மதத்தின் பெயரால் வருவதில்லை, மாறாக இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் மேலோங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
லத்தீன் அமெரிக்கா உலகப் புகழ் பெற்ற ஆயுத போராளி சேகுவாரா போன்று இந்தியா சுதந்திரத்திற்காக இந்தியா தேசிய படையினை நிறுவிய வங்க சிங்கம் நேதாஜி அவர்கள், 'புது இந்தியா மதத்தின் பெயரால் உருவாக்க முடியாது. மாறாக அந்த குறுகிய வட்டத்தினை உடைத்தெறிந்து நாமெல்லாம் இந்தியர் என்ற எண்ணம் மேலோங்கி புது இந்தியா இளமைப் பருவம் முதலே உருவாக வேண்டும்' என்று அறைகூவல் விடுத்தார்.
ஆகவே ‘பாரத மாதகி ஜே’ என்று சொல்ல சிறுபான்மை மக்களை துன்புறுத்தும் சிலர் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்று ஹஜ் பெருநாள் இன்று கேட்டுக்கொண்டால் சரிதானே!

Thursday 7 March, 2019

எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியதேன் இஸ்லாமிய இயக்கம்?(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய முஸ்லிம் லீக் வட இந்தியாவில் மறையத் தொடங்கியது. அதன் பின்பு கண்ணிய மிகு காயிதே மில்லத் தலைமையில் தென்னிந்தியாவில் வேரூன்றத் தொடங்கியது. காயிதே மில்லத் அவர்கள் தமிழ் நாட்டினைச் சார்ந்தவரானாலும் கேரளா மாநிலத்தின் முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். அவருடைய ஆளுமை இன்று தமிழகத்தில் உள்ள அமைப்பிற்கு எவரும் உயர்ந்ததில்லை.
            தமிழ் நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பெரியார், குலக்கல்வி புகழ் ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர் போன்றோர்களிடையே மதிப்பும் மரியாதையும் கொண்டவராக காயிதே மில்லத் அவரகள் திகழ்ந்தார்கள்.1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி கூட்டணியில் சேர்ந்ததினால் காயிதே மில்லத் மீது பேரறிஞர் அண்ணா மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், முதல்வர் பதவி ஏற்குமுன்பு காயிதே மில்லத் குரோம்பேட்டை வீட்டிற்கே சென்று மரியாதை செலுத்தி விட்டு பின்பு பதவி ஏற்றார் என்பது வரலாறு.
            காயிதே மில்லத் மறைவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகு கட்சியில் ஒரு மாற்றத்தினை கண்டது. 1972 தி.மு.க வில் பிளவு ஏற்பட்டபோது லீகு கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. அப்துல் சமது தலைமையில் தி.மு.க.ஆதரவு நிலையம், அப்துல் லத்தீப் தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு நிலையம் எடுக்க ஆரம்பித்தது. முஸ்லீம் லீகு கட்சி பெரும்பாலும் வியாபாரி பெருமக்கள், கடல் கரை ஒர செல்வந்தர்கள் ஆதரவு நிலையே இருந்தது. சாமானியர்கள் இரண்டாம் தர உறுப்பினர்களாகவே இருந்தார்கள். 1977 நடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்கள் அமோக ஆதரவுடன் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி அமைத்தார்கள்.
            இந்த நேரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பொருளீட்டுவதிற்காக 1970 -1980 ஆண்டுகளில் வளைகுடா மற்றும், சௌதி அரேபியா நாடுகளுக்குச் சென்றார்கள். அப்படி சென்றவர்கள் தூய ‘வகாபிசம்’ என்ற மார்க்க கட்டுப் பாடுகளை கற்று வந்ததினால், இங்குள்ள தர்கா வழிபாடு, வலிமார்கள் துதிபாடு, மற்றும் திருமண சடங்குகளில் உள்ள வரதட்சிணை, சீர், சீராட்டு  போன்றவற்றினை கண்டு மனம் வெறுத்து தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு வழி தேடினர்.
            இந்திய யூனியன் முஸ்லிம் லீகு கட்சியின் பலவீனமும், வளைகுடா நாடுகளின் தாக்கமும் இளைஞர்களிடையே புதிய வழிகளைத் தேட ஆரம்பித்தனர்.இந்த நேரத்தில் தான் ஹிந்து அமைப்பின் ராம் ஜென்ம பூமி அமைப்போம் என்ற கோஷமும், ஷாபானு வழக்கில் விவாகரத்து பெண்ணின் ஜீவனாம்சம் சம்பநதமான தீர்ப்பும் வெகுவாகவே பாதிக்க வைத்தது முஸ்லிம் இளைஞர்களை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரிவினை ஒவ்வொரு ஜாமத்திலும் பிரதிபலித்தது. முஸ்லிம் இளைஞர்கள் எழுச்சி தவ்ஹித் என்ற ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நிலைத்து ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு ஒரே மார்க்கம் தவுஹீத் என்று பறை சாட்டப்பட்டது. அல் உமா என்ற இயக்கம் கோவையில் வேரூன்றத் தொடங்கியது.
            டிசம்பர் 6 , 1992 அயோத்தியுள்ள பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதன் பிறகு ஏற்பட்ட குண்டு வெடிப்பு, வன்முறை போன்ற சம்பவங்கள் 1995 ல்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியது. அதன் முக்கிய தலைவர்களாக மௌலவி பி.ஜெ., பேரா. ஜவஹருல்லாஹ், எஸ்.எம்.பக்கர் போன்றோர் அதன் தலைவர்களாக இருந்தனர். 1997  நவம்பரில் கோவை டிராபிக் த.கா செல்வராஜ் கொலை செய்யப் பட்டதால் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ இயக்கங்கள் அதனை ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் என நினைத்து வன்முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டது. சிலர் காவலர் துணையுடன் நடத்தப பட்டது என்ற குற்றச் சாட்டுகள் எழுந்ததின் பயனாக கோபம் அடைந்த சிலர் 14 .2 .1998 பல குண்டுவெடிப்புகளை வழி வகுத்தனர். அதன் தாக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது இன்னமும்.
            அது வரை முஸ்லிம் ஆதரவு எடுத்துவந்த தி.மு.கவும் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் 'தீவிரவாதிகள்' என்ற புனைப் பெயர் இட்டனர். தி.மு.க வும் 1999 ம் இதுவரை பி.ஜெ.பியினை மதவாத இயக்கம் என்று அழைத்து வந்த நிலையினை மாற்றி மத்தியில் அமைந்த பி.ஜெ.பி அரசில் அங்கம் வகிக்க ஆரம்பித்தது. அதனையே அ. இ.அ .தி.மு.கவும் வழி மொழிந்தது.
            ஒன்றிணைந்த த.மு.மு.க விழும் ஈகோ பிரச்சனையால் பி.ஜெ. பிரிந்து  டி.ஏன்.டி.ஜெ. என்ற தூய தவுஹீத் இயக்கம் ஆரம்பித்தார். ஆனால் த.மு.மு.க. வஹாபி கொள்கையுடன், சமுதாய சேவையான இட ஒதுக்கீடு கொள்கையினை பின்பற்றி செயலாற்ற தொடங்கியது. த.மு.மு.க விலும் பிளவு ஏற்பட்டு ஐ.என்.டி.ஜெ. பாக்கர் தலைமையில் உருவானது. த.மு.மு.க. அரசியலில் எந்த அணிக்கு போகின்றதோ அதன் எதிர் அணிக்கு ஆதரவு கொடுக்கும் நிலையினையும் நிலையினை  இரு தவுஹித் அமைப்புகளும் எடுத்தது. அதனால் தமிழ்நாட்டில் அரியணையில் இருக்கும் கட்சிகள் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஓரிரு சட்டமன்ற இடங்களை கொடுத்து விட்டு முஸ்லிம்கள் ஆதரவினை எதிர் பார்த்தனர்.
            சௌதி அராபியாவை ரியாத் நகரில் இலங்கை வீட்டு வேலை செய்யும் ரிஸ்வான என்ற முஸ்லிம் பெண் தன்னுடைய எஜமானி மேல் இருக்கும் கோபத்தால்  2007 ம் ஆண்டு இரண்டு வயது குழந்தையினை கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றியபோது உலகமே எதிர்த்தது. இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் அதனை எதிர்த்தது. அனால் தவுஹீத் அமைப்பு மட்டும் அது சரிதான் என்ற வேறுபட்ட நிலை எடுத்தது. 2012  ம் ஆண்டு ரஸூலுல்லாஹ்வினைப் பற்றி ஒரு படத்தினை அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டபோது மற்ற இஸ்லாமிய இயக்கங்கள் அமெரிக்கா கான்சுலேட் அருகில் போராட்டம் நடத்தியபோது தவ்ஹித் இயக்கம் அதில் கலந்து கொள்ளவில்லை. 2013 ம் ஆண்டு நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதினை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது தவ்ஹித் அமைப்பு அமைதியாக இருந்தது.
            முஸ்லிம் அமைப்புகள் ஒரு காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்ற கொள்கைகளை வைத்து முஸ்லிம் அமைப்பினை 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தமீம் அன்சாரி தலைமையில் மனித நேய ஜனநாயக கட்சி என்று அமைத்து இரண்டு தொகுதிகளை ஒதுக்கி அதில் தமீம் அன்சாரி வெற்றிபெற செய்தனர். தவ்ஹித் அமைப்பிலும் பெண்கள் சம்பந்தமான அதுதடுத்து புகார்கள் வந்து அதன் தலைவர்களான பி.ஜெ. அல்டாபி, செயது இப்ராஹிம் ஆகியோர் நீக்கம் செய்யப் பட்டு வலுவிழந்த இயக்கமானது தவ்ஹித்.
            இது போன்ற இஸ்லாமிய பிரிவுகளாலும், சில தப்லிக் அமைப்புகளாலும் முஸ்லிம் இளைஞர்கள் படிப்பதினை விட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றுவதும், சிறு சிறு வேலைகளை நாடி வெளி நாட்டுக்குச் சென்று சம்பதியதியத்தில் ஈடுபடுவதுதான் பல இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதும் திட்டமிட்ட இஸ்லாமிய சகோதரர்களை பிரிக்கும் செயலாகவே கருதப் படுகிறது
எஸ்.டி.பி.ஐ. கேரளாவுனைச் சார்ந்த இயக்கமாக இருப்பதினால் தமிழ் நாட்டில் அரசியல் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.
2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முஸ்லிம் இயக்கங்களில் ஆழம் பார்க்கும் விதமாக கூட்டணி அமைத்திருப்பினை காணலாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கிற்கு தி.மு.காவில் ஒரு இடம் கொடுத்து விட்டு இது வரை ஆதரவு தெரிவித்து வந்த எம்.எம்.கவிற்கு ஒரு இடமும் ஒதுக்கவில்லை. மனித நேய ஜனநாயக கட்சிக்கும் தி.மு.க.ஆதரவு நிலை எடுத்தாலும் அதவும் ஒதுக்கப் பட்டது. எஸ்.டி.பி.ஐ. மட்டும் தினகரன் கட்சியில் கூட்டு சேர்ந்துள்ளது. அதன் அரசியல் துவக்கம் இனிமேல் தான் தெரியும்.
 தி.மு.காவில் உறுபடியில்லா பாரிவேந்தருக்கு  ஒரு இடமும், மேற்கு மண்டலத்தில் மட்டும் மூன்று பிரிவுகளாக உள்ள கொங்குநாடு கட்சிக்கு ஒரு இடமும், ஐ.யு.எம்.எல்லுக்கு அவர்களுக்கு இணையாக ஒரு இடமும் ஒதுக்கியுள்ளது. வட மாநிலங்களில் மட்டும் குறிப்பிட்ட மாவட்டங்களில் கணிசமான ஓட்டுக்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கும் பொது தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் ஏழு சதவீத முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு இடம் தான் என்று பார்க்கும் போது பரிதாபமாக இல்லையா சகோதரர்களே.
            இதற்கு காரணம் தமிழ் நாடு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் ஒற்றுமையாக அரசியலில் வேறுபாடுகளை களைந்து ஒரே அணியில் சேர்ந்து இட ஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் என்று நினைத்துத் தான் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற கூற்றுக்கு இணங்க தொகுதி கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் இயக்கங்கள் வரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து அரசியல் களம் அமைத்து சட்டமன்ற, பஞ்சாயத் தேர்தல்களில் ஓர் அணியினை ஏற்படுத்தினால் ஒழிய இஸ்லாமிய இயக்கங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறும் பரிதாப நிலைதான் ஏற்படும். இஸ்லாமிய இயக்கங்களை இணைக்கும் காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் இன்று தமிழ் நாட்டில் இல்லாததே இந்த பரிதாபநிலை!
             
           
           

Sunday 3 February, 2019

உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்!(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ )
2019 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள இனாம் குளத்தூரில் நடந்துள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
பொட்டல் காடுகளாகவும், முட்கள் நிறைந்த தரிசு நிலங்களாகவும் உள்ள இடங்களில் வெள்ளையுடையும், தலையில் தொப்பியும், தாடியும் வைத்த முஸ்லிம் மக்கள் உழவர் நஞ்சை நிலத்தை பண்படுத்த செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.   அந்த நிலங்கள் யாருடையது என்று நீங்கள் கேட்கலாம். அவைகள் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமாம். அவைகளை விலை பேசி வாங்கவோ அல்லது வாடகைக்கு, அல்லது குத்தகைக்கு எடுக்கவோ இல்லையாம். அந்த ஊரில் உள்ள மக்களை அணுகி முஸ்லிம்கள் மார்க்க சம்பந்த சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும் என்று கேட்டதும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று இரவலாக கொடுக்கப் பட்டதாம். அதுதான் தமிழர் பண்பாடு மற்றும் கலாட்சாரம். அது வட இந்திய கலாட்சாரத்தினை விட்டு வேறுபட்டது என்பதினை காட்டியதாம்.
            நான்கு மாதத்திற்கு முன்பு எந்த முன் அறிவுப்புமில்லாமல் எறும்புபோல சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த 'பாய் ' மார்களைக் கண்ட மணப்பாறை நுண்ணறிவுப் பிரிவு ஏடு அங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது நிலங்களை பண்படுத்தியும், முட்புதர்களை களையெடுத்தும், நீர்நிலைகளை ஆழப் படுத்தியும், செயற்கை தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், பிரமாண்டமான பந்தல் எழுப்பியும், தற்காலிக கழிப்பறைகள் அமைத்தும், உணவிற்காக சிறு சிறு கூடாரங்கள் எழுப்பியும், வானங்கள் நிறுத்துவதிற்காக வசதி வாய்ப்புகள், சாலைகள் அமைத்தும், பூமியினை சமப் படுத்தியதோடு மணலும் பரப்பப் பட்டதாம். அங்கு வேலைகள் செய்து கொண்டிருந்தவர்களை அணுகி அங்கே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைகளை விளக்கப் போகிறோமென்றும், மக்கள் தீய செயல்களிருந்து விடுபட்டு, நலமுடன் வாழ துவா செய்யப் போகின்றோம் என்றும் கூறியதை தன்னுடைய ஆய்வாளரிடம் தெரிவித்தாராம்.
            1997 ம் ஆண்டு மே மாதம் 28 ,29 ந் தேதிகளில் வேலூர் மாவட்டம் மேல்விசாரம் மாநாட்டிற்கு பின்பு   நடக்கும் முஸ்லிம்கள் மாநாடு இதுதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னாட்டின் பல பகுதிகளிருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் கூடியதினை அங்கு கண்டார்கள். இந்த மாநாட்டிற்கு வீடுதோறும், நோட்டீஸ் கொடுக்கவில்லை, வீதிதோறும் ஒலி பெருக்கி வைத்து காது கிழிய கத்தவில்லை, தெரு முனைகளில் விளம்பர பேனர்களில்லை, டிராபிக் ராமசாமி போன்ற அனுமதியில்லா பேனர்கள் எடுங்கள் என்று போராட்டம் நடத்த வேலையில்லை, வீட்டுச்சுவர்களிலோ அல்லது அரசு அலுவலக கட்டிடங்களின் சுவர்களிலோ விளம்பரங்கள் இல்லை. மாறாக ஒவ்வொரு மகல்லாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு மட்டும் செய்யப் பட்டது. ஆனால் அங்கு கூடியதோ மனிதக் கடல் போன்று இருந்ததாம். முஸ்லிம்கள் சாரை, சாரையாக ஒன்று கூட ஆரம்பித்தார்களாம். அங்கே ரயிலில் வருபவர்கள் இறங்குவதிற்காக ரயில்வே அமைச்சகமும் ஒவ்வொரு ரயிலும் நின்று செல்ல வசதி செய்யப் பட்டதாம், வாகனங்களில் வருபவர்கள் நெடுஞ்சாலை  டோல் கேட்டுகளில் கட்டணம் செலுத்தாமல் விரைவாக செல்ல வழிகைகள் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் செய்யப் பட்டதாம், மாநில அரசும் தேவையான தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்ததாம். சமுதாய அமைப்புகளான தா.மு.க. எஸ்.டி.பி.ஐ., எம்.ஜே.கே போன்ற அமைப்புகளும் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உதவிகள் செய்தார்களாம்.  அங்கு கூடிய அனைவரும்  எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, 'லாயிலாஹ இல்லல்லாஹ்  ஹாஸ்பி ரப்பி ஸல்லல்லாஹ், மாபி கல்பி ஹைருல்லாஹ், நூரு முகமது ஸல்லல்லாஹ்' என்ற கோசம் வானைப் பிளந்ததாம்.
            இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலமைக் காவலர் ஒருவர் இரவு பணி முடித்து மணப்பாறை திரும்பும்போது திண்டுக்கல் செல்லும் முஸ்லிம்கள் காரில் பயணம் செய்யும்போது தன்னுடைய அனுபவம் குறித்து கீழ்கண்டவாறு கூறிக்கொண்டு வந்தாராம். 'நான் எத்தனையோ முக்கிய பிரமுகர்கள், பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன், அங்கெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் காதுகள் செவிடாகும், கழிப்பிட வசதி இருக்காது, உணவுக்கு அலைய வேண்டும், கூட்டத்தினருடையே தள்ளுமுள்ளு, நெரிசல்  ஏற்படும், ஒருங்கிணைப்பாளர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும் ஆனால் உங்கள் பாய் மார்கள் நடத்திய மாநாடு அவைகள் எதுவுமே இல்லை. அது மட்டுமல்லாமல் எங்களுக்கு ஒரு வேலையும் அங்குள்ள தொண்டர்கள் கொடுக்கவில்லை. என்னைப் போன்று பணியில் ஈடுபட்ட மற்ற காவலர்களுக்கும் வயிறார உணவு, தாகம் தீர்க்க தண்ணீர், களைப்பாற தேநீர் கொடுத்து விழுந்து விழுந்து உபசரித்தார்கள். அதனைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன் என்று வாயார புகழாரம். அதுவும் முக நூலில் வந்தது.
            எந்த ஒரு நல்ல விழாவிற்கும் திருஷ்டி போன்று ஒரு பாதகமான செயல் நடக்குமாம். அதேபோன்று இஸ்திமா நடக்கும் நாட்களில், வட தமிழக முஸ்லிம்கள் செல்லும் வழியான உளுந்தூர்பேட்டையில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் அதே நாளன்று குரான் மாநாடு என்று ஒன்று நடத்தியதாம். அதற்காக ஊர்கள் தோறும் வீதிவீதியாக வண்டிகளில் ஒலி பெருக்கி வைத்து அறிவிப்பு செய்தும், சுவர்களில் விளம்பரம் செய்தும், பேனர்கள் கட்டியும் பெரிய விளம்பரம் செய்து, பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்றும் அறிவிப்பு செய்யப் பட்டதும் அனைவருக்கும் தெரியும்  அப்படி கூடிய பெண்களை படமெடுத்து முகநூல், வாட்ஸாப்ப் போன்ற இணைய தளங்களில் செய்தி அனுப்பியதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே அந்த அந்த அமைப்பின் தலைவர் இருவர் மீது பாலியல் சம்பந்தமான புகார்கள் வந்தும், அது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தும் பிறகு நீக்கப் பட்ட பின்னரும், பெண்களை வரவழைத்து இரவு நேரங்களில் கூட்டம் நடத்தியது சரியான செயல் தானா என்று சிந்திக்க வேண்டாமா?  முஸ்லிம் பெண்கள் என்றால் ஹிஜாப் அணிந்து பிற ஆண்கள் கூட நேசமாக உறவாட மாட்டார்கள் என்றும், வீட்டில் கூட பெண்கள் மறைப்புடன் வாழ்வார்கள் என்றும், 2001 முதல் 2016 வரை ஆய்வு நடத்திய அமெரிக்கா உளவுப் படையான எப். பி.ஐ. அமெரிக்க 30 லட்சம் முஸ்லிம்கள் பற்றி அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் தருகின்றது. அதுவும் எங்கே தாராள கொள்கை கொண்ட அமெரிக்காவில். ஆனால் பெண்டு பிள்ளைகளை ஊரியில் பாதுகாப்பாக இருங்கள் என்று வெளி நாட்டுக்கோ அல்லது வெளி ஊர்களுக்கோ நம்பிக்கையுடன் செல்லும் பெண்களை கால் கிளப்பி அந்நியர் வெளி ஊர்களுக்கு இரவில் வரவழைக்கலாமா அதுபோன்ற செயல்கள் தவறான வழக்கு வித்திடாதா? அதோடு முஸ்லிம்கள் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போன்றவர்கள் என்று மாற்று மதத்தினர் நினைத்திருக்கும் இதுபோன்ற போட்டி மாநாடு தேவைதானா?  மதக் கலவரம் ஏற்பட்டு அந்த பெண்கள் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது?
            உத்திர பிரதேசத்தில் 45 நாட்கள் அலஹாபாத் நகரில் கும்ப மேளா நடப்பது அனைவரும் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கை வாயிலாகவும் படித்திருப்பீர்கள். அங்கு 25 லட்சம் மக்கள் திரண்டு கங்கையில் புனித நீராடுவதாக தெரிகின்றோம். அப்படி நடக்கும்போது அவர்களுக்கு போட்டியாக இந்து மதத்தினர் அங்கேயே அல்லது வேறு இடத்திலோ அந்த மாநிலத்தில் எந்த கூட்டத்தினையும் சேர்கின்றார்களா அல்லது அரசுதான் நடத்த விடுமா? ஊர் துண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி. முஸ்லிம்கள் அமைப்பின் சிதைப்பினை எதிர்நோக்கும் அமைப்புகளுக்கு இதுபோன்ற போட்டி மாநாடு சக்கரைப் பொங்கல் போன்று ஆகாதா?
            உலக முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வதினால் படும் இன்னல்களை நாள் தோறும் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளதல்லவா? இந்த சூழ் நிலையில் மறைந்த கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் 5 .5 .1970 நடந்த அலிகார் கூட்டத்தில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது முஸ்லிம்கள் மத்தியில் பேசும்போது, 'நாம் சிறுபான்மையினர், நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது  கட்டாயம். பெரும்பான்மை சமூகத்தினர் எந்த கட்சியிலானாலும் பிரிந்திருக்கலாம், ஆனால் சிறுபான்மையினர் பிரிந்து வாழவே கூடாது. அவர்கள் சேர்ந்து வாழ்வது திருக்குரானில் கட்டளையாகும்'. காயிதே மில்லத் அவர்கள் சொல்லி சென்ற வார்த்தைகளை உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்திய அமைப்பினரும், தப்லீக் இரு பிரிவு குழுவினரும் மற்ற முஸ்லிம் அமைப்பினரும் உணர்ந்து செயல் பட்டால் தமிழக முஸ்லிம்கள் வளம் பெரும் அல்லது அவர்களுடைய எதிர்காலம் கானல் நீராகும்தானே!
           
           


Sunday 13 January, 2019

பொங்கல் வாழ்த்துப்பா!ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
ஆனை கட்டி போரடித்த- தரணியிலே
அந்த யானையே ஊருக்குள் நுழைந்து
போரடிக்க நெற்பயிரெங்கே என்று
கேட்கும் காலமானதே இன்று
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே-தங்கம்
 சுவைக்கு கரும்பு, பசிக்கு சக்கரைப் பொங்கல்,
உடுக்க  பட்டாடை சகிதம் ஆனந்தக் கூத்தாடி
உழவனின் தோழன் எருதுக்கு ஒரு விழா
மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஜல்லிக் கட்டு
அகிலமெங்கும் தமிழ் புகழ் பரப்பும் தை திருநாள்.

குடிசையில் வாழ்ந்த கூன் விழுந்த பாட்டி
கொஞ்சம், கொஞ்சமாய் சேர்த்து
அஞ்சரைப் பட்டியில் வைத்த
ஆயிரம் ரூபாயும் செல்லாமல் போச்சே!

யார் கண் அல்லது ஊரார் கண் பட்டதா
உனக்குத்தான் தெரியும் ஏகனே,
மண்ணில் தாமிர கலவை கேன்சர்
கொடிய நோய் தாக்கம் தடுக்க
வெகுண்டது தூத்துக்குடி நகரம்
வீர போரில் சூழல் குண்டு பாய்ந்தது
வீர மறவன் மட்டுமல்ல வீரத்தாயும் தானே!

நடப்பதிற்கே செருப்பில்லை, எட்டு வழி சாலை ஏனோ
பொன்னைக் காப்பது போல மண்ணைக் காத்த
சேலம் மக்கள் வெகுண்டனர் குரல் எழுப்பி
நீதி அரசர்கள் வநதார்கள் கருணை காட்ட
மரம் நடும் திட்டம் ஒரு பக்கம்
அந்த மலையையே குடையும்
நியூட்ரான், எலெக்ட்ரான், மெதேன் 
என்று இனிப்பான கசப்பு 
மருந்து பசப்பு வார்த்தை 
பயிர் விளையும்விளை நிலமும் 
பாழாக்க  எங்கே சொல்வது என் வேதனையை 
வயலிலும் வாழ்வில்லை, ஒதுங்கும்
 மலையிலும் வழியில்லை !

மண்ணையும், மரங்களையும் புரட்டிப் போட்ட
கஜா காட்டேரிப் புயல் மற்றொரு பக்கம்-பலன்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற
தமிழ் மண்ணில்-துணிப் பையுடன்
ரேஷன் கடைகளில் மானியம் வாங்க
காத்திருக்கும் தரணி புகழ் சமுதாயமே!

வருடம் தோறும் நண்பர்களுக்கு பொங்கல்
 நல் வாழ்த்துப் பாடும் நான்-இன்று
வாங்கி விட்டாயா அரசு மானியம் என்று
கேட்கும் பரிதாப நிலையா வருவது
அடுத்த வருடமட்டுமல்ல இனி
இந்த நிலை என்றுமே வரக்கூடாது
என்று இறைவனை வேண்டுகிறேன்!