(டாக்டர்
ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ)
என்னுடன் காலை நடைப் பயிற்சிக்கு வரும் அனிஸ் புர்கா
உரிமையாளர் ஹாஜி கபீர் அவர்கள் என்னைப் பார்த்து, 'ஏன் சார், மக்கள் குடி உரிமை சட்டத்திற்கு
முஸ்லிம்கள் மட்டும் குரல் கொடுக்கின்றார்கள், மற்ற இந்திய குடிமக்களை பாதிக்காதா'
என்ற ஒரு கேள்வியினை எழுப்பியதின் விளைவாக இந்த கட்டுரையினை எழுத முயன்றுள்ளேன்.
முதலில் குடியுரிமை
சட்டம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். 2004ம் ஆண்டு பி.ஜெ.பி. அரசு ஆட்சியில்
இருந்த பொது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை
இந்திய காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட ஆதரித்துள்ளார். அதாவது
பாகிஸ்தானிலிருந்து, ஆபிகானிஸ்தானிலிருந்து போரினால் இடம் பெயர்ந்த மைனாரிட்டி மக்களுக்கு
அகதி என்ற நிலையிலிருந்து மக்கள் குடியுரிமை
உரிமை கொடுக்க வேண்டுமென்று. அந்த சட்டத்தில் பெரிய மாற்றம் செய்து போரினால்
இடம் பெயர்ந்த பாகிஸ்தான், அபிகானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் நாட்டின் ஹிந்துக்கள்,
கிறித்துவர்கள்,பௌத்த, சமண, பார்சி, சீக்கிய மக்களுக்கு குடி உரிமை கொடுப்பது. 1987 ஆண்டு ஜூலை முதல் தேதிக்கு முன்பு தாயோ, தந்தையோ
இந்தியாவில் பிறந்திருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு மக்கள் பிரதிக்குவ உரிமை கொடுப்பது.
அசாம் மாநிலத்தினைப் பொறுத்தவரை இந்த காலக்கெடு பங்களாதேஸ் போருக்கு முன்பு 1971ம்
ஆண்டாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அத்துடன் என்.ஆர்.சி. என்ற தேசிய சிட்டிசன் ரிஜிஸ்டர்
தயாரிக்க ஒரு சட்டத்தினையும் தயாரிக்கப் பட்டுள்ளது. அதன் படி பிறப்பு சான்றிதழ் மற்றும்
பாஸ்போர்ட் அத்தாட்சியாக காட்ட வேண்டும். வேறு எந்த ஆவணமும் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படாது.
பி.ஜெ.பி. அரசு
2019 ம் ஆண்டு நடந்த மக்களைவை தேர்தலில் முழு மெஜாரிட்டி வந்துவிட்டோம் என்ற தைரியத்தில்
ஹிந்து ராஷ்டிர அமைக்கும் நோக்கத்தில் பாராளுமென்ற குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்பாமலே
9.12.2019ல் மக்களவையில் நிறைவேற்றி, 11.12.2019ல் மாநிலங்களைவையில் நிறைவேற்றி,
12.12.2019 அன்றே ஜனாதிபதி அவர்களால் கையொப்பமிட்டு அரசிதழிலும் அவசர, அவசரமாக அச்சிடப்
பட்டு வெளியிடப் பட்டது. அந்த அவசரத்தில் உள்நோக்கினைக் கண்ட வட கிழக்கு மாகாண மக்கள்
வெகுண்டு எழுந்து இன்று தலைநகர் டெல்லி, உ.பி. மேற்கு வங்கம், கர்நாடக, தமிழ்நாடு,
கேரளா மாநிலம் போன்றவற்றில் ஆர்ப்பாட்டம் அதனைத் தொடர்ந்து பேரணி, அதனைத் தொடர்ந்து வன்முறை, அத்துமீறல் புகார், 21
பேர் உயிர் இழப்பு, பொருள் சேதம் போன்ற விரும்பத்தகாத செய்திகள் வந்தவண்ணம் உள்ளது
உணமையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டு மக்கள் வேதனைப் படுகின்றார்கள் என்பது தான்
உண்மை. மத்தியில் முழு மெஜாரிட்டியில் ஆட்சியில் உட்கார்ந்து இருக்கின்றோம் என்று மக்கள்
வேதனைப் படும் அளவிற்கு செயல்கள் இருக்கத் தான் வேண்டுமா என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும்.
சமூக சேவையில் நோபல் பரிசு பெட்ரா கைலாஷ் சத்யார்த் சொல்கிறார், 'ஜனநாயகம் சுருங்குகிறது
அது எப்போது என்றால், மக்களுடைய குரல் ஒடுக்கும்போது' என்று. கேரள முதல் மந்திரி பினாராயி
விஜயன், 'மெஜாரிட்டி மூலம் எடுக்கப் படும் அதிரடி முடிவுகளால் நாடு சர்வாதிகார பாதைக்கு
வழிவகுக்கும்' என்கிறார்.
இந்திய பொருளாதாரம்
சுனாமி போன்ற பொருளாதார இழப்புக்களால் தத்தளிக்கின்றதது என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
அவைகளில் முக்கியமானது:
1) வோடோபோன், ஏர்டெல், பீஸெனெல், எம்டிஎனெல், பிபிசிஎல்,
சையில், ஏர் இந்தியா, ஸ்பைஜெட், இண்டிகோ, பெல், இந்தியா போஸ்ட், எஸ் பாங்க், யூனியன்
பாங்க், ஆக்ஸ் பாங்க் போன்றவை நஸ்டக் கணக்குக் காட்டுகின்றன.
2) வண்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்து வேலை
வாய்ப்பு பலர் இழந்துள்ளனர்.
3) பல ஆயிரக்கணக்கான கட்டப் பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள்
விற்கப்படாமல் இருக்கின்றன.
4) பல லாபத்தில் ஓடிய கம்பெனி, தொழிற்சாலைகள் மூடப்
பட்டன.
5) கிட்டத் தட்ட ரூ 2.5 லட்சம் கோடி வாராக் கடன்
தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
6) 36 பெரும் வியாபாரிகள் கடன் பெற்று வெளி நாடுகளுக்கு
தப்பிச் சென்றுள்ளனர்.
7) 45 வருடம் இல்லாத அளவிற்கு வேலையின்னை நாட்டில்
உள்ளது.
ஆனால் அம்பானி மட்டும்
ரூ 990/ கோடி லாபமும், அதானி ரூ 102/ கோடி லாபமும், பிஜேபி கட்சிக்கு ரூ.1034/ நன்கொடையும்
வந்துள்ளது என்றால் மக்கள் கொதித்துத் தானே போவார்கள், அதன் வெளிப்பாடு தான் மக்கள்
ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டம்.
அரசுகள்
அடக்குமுறை செய்தாலும் போராடும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதினை ஒரு உதாரணம் மூலம்
விளக்கலாம் என நினைக்கின்றேன். டெல்லி ஜந்தர்-மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில்
பங்குபெற்ற சந்தீப் தில்மான், 'எங்கள் மீது போலீஸ் தடியடி நடத்தட்டும், நாங்கள் ரோஜா
மலர்களை அவர்களுக்கு அளிப்போம், அப்படியாவது எங்கள் மீது காவல் துறையினர் அன்பினைக்
காட்டட்டும்' என்கிறார்.
தவறான
சட்டத்தினை எதிர்த்து முதன் முதலில் அரசு முறையில் சுதந்திர இந்தியாவில் சுபாஷ் சந்திரா
போசுவிற்குப் பின்பு மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள ஜான்சி ராணி மம்தா பானர்ஜி, அதனைத்
தொடர்ந்து கேரளா முதல்வர் பினாராயி விஜயன் குரல் எழுப்பினர். அவர்களைத் தொடர்ந்து முன்னாள்
பி.ஜெ.பி நண்பரும் தற்போதைய மும்பை முதல்வருமான உத்தவ் தாக்கரே, 'வட மாநிலத்தில்
16 லட்சம் மக்கள் இந்த சட்டத்தில் பயனுள்ள இடம் பெயர்ந்தவர்கள் உள்ளார்கள் அவர்களை
எங்கே குடியமர்த்தப் போகிறீர்கள், அதற்கான திட்டம் உங்களிடம் உள்ளதா அல்லது ரூ.
1000/ ரூ.500/ செல்லாது என அறிவித்து விட்டு அப்படி வங்கிக்கு வந்த செல்லாத நோட்டுக்கள்
எவ்வளவு என்று எண்ணக்கூட மெஷின் களை ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளதா? என்று கேள்வி
எழுப்பியுள்ளார்.
ஆனால்
போராடும் மக்களைப் பார்த்து கர்நாடக மந்திரி ரவி அவர்கள் என்ன சொல்கிறார் தெரியுமா?
'போராடும் மக்களுக்கு 2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்பு என்ன
நிலை ஏற்பட்டதோ அதனை நினைவு கொள்ளுங்கள்' என்று பூச்சாண்டி காட்டுகின்றார்.
இந்திய
நாடு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நாடு, வந்தாரை வாழ வைக்கும் நாடு, 'யாதும் ஊரே யாவரும்
கேளீர்' என்று இந்திய பிரதமர் வாயாலே உலக நாடுகள் சபையில் சொல்ல வைத்த நாடு. அப்படிப்
பட்ட நாட்டில் மதத்தால் இந்தியர்களை பிரிக்கக் கூடிய சட்டம் என்பதால் தான் மக்கள் வெகுண்டு
எழுந்துள்ளனர் என்பதினை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுதாரர்களால் தாக்கல் செய்யப்
பட்டுள்ள மனுக்கள் மூலம் அறியலாம். நோபல் பரிசு வென்ற வென்கிட் ராமன், 'உங்கள் மதமும்,
எங்கள் மதமும் ஒரேதரமுடியதல்ல என்று சொல்வது 200மில்லியன் முஸ்லிம் மக்களை இந்திய நாட்டு
மக்களிடமிருந்து பிரிப்பது போன்றுள்ளது' என்று கூறுகின்றார்.
அப்படி
பிரிக்கும் ஆட்சியாளர்கள் சில வரலாற்று பின்னெனிகளை காணலாம். இந்தியாவில் ஆரியர் இனம்,
மதம் சம்பந்தமாக அமெரிக்க பேராசிரியர்கள் ரிச்சர்ட் மார்ட்டின், டோனி ஜோசப் ஆகியோர்,
நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்பு , 'ஆரியர்கள் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான்
போன்ற நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்றும், அவர்கள்
வந்தபோது சிந்து வெளி நாகரீகம் அழியத் தொடங்கியது ஆனால் தமிழர் நாகரீகம் தழைத்தோங்கி
நின்றது என்பதினை கீழடி போன்ற ஆராய்ச்சி குறிப்புகள் சொல்கின்றன. அப்படி என்றால் நாடோடிகளாக
வந்த ஆரியர்களை எங்கே அனுப்புவது?
ஆரியர்கள்
வந்த பின்பு தான் வேதங்கள் முளைத்து பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர், சூத்திரர்,
தலித், போன்ற வாசகங்கள், நடைமுறைகள் வந்ததாக வரலாற்று பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
நடுநிலையாளர் ரோனாக் ராய் சொல்கின்றார், 'நீங்கள் ஹிந்துக்களாக இருப்பீர்கள், முஸ்லிம்கள்
இருக்கும் வரை. முஸ்லிம்கள் இல்லையென்றால்
நீங்கள் , ஹிந்துக்களாக இருக்க மாட்டீர்கள்
மாறாக பழையபடி பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், தலித் மற்றும் தீண்டத்தகாதவராக துண்டு, துண்டாக பிரிக்கப்
படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்'.
இந்திய
சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்கள் முக்கிய பங்குகளாற்றியுள்ளனர் என்பதினை ஆங்கிலேயரை
எதிர்த்துப் போராடிய முஸ்லிம் வரலாற்றினை முதலாம் சுதந்திரப் போர் 1857, திப்பு சுல்தான்
, மாப்பிளா யுத்த 1921 வரலாறுகளை ஆட்சியாளர்களும் படிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
ஒரு வேலை அவர்கள் படிக்கவில்லையென்றால் மாப்பிளா யுத்தத்தில் மட்டும் 2337பேர்கள் சாகடிக்கப்
பட்டும், 45,405 பேர்கள் சிறைப் பிடிக்கப் பட்டும் அவர்களில் பெரும்பாலோனோர் அந்தமான்
தீவு சிறைக்கு அனுப்பப் பட்டும், ஆடு மாடுகள் போன்று ரயில் வேகனில் அடைக்கப் பட்ட
90 கைதிகள் மூச்சு விடமுடியாமல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இறந்து போனதும் வேதனையிலும்
வேதனை. ஏன் இந்திய கடைசி சக்கரவர்த்தி பகதூர் ஜா ஜபார் பர்மாவிற்கு சிறைக் கைதியாக அனுப்பப் பட்டு அவருடைய
இரு மகன்களின் தலைகளும் அவருக்கு தங்கத்தட்டில் பரிசாக அளிக்கப் பட்ட நெஞ்சுருகும்
சம்பவம் ஆட்சியாளருக்கு மறந்து போகலாம் ஆனால் இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள் என எண்ணுகின்றேன்.
அவ்வாறு
போராடிய முஸ்லிம்களுக்கு மற்ற சமுதாய மக்களும் ஆதரிக்காமல் இருக்க முடியாது. இப்போது
அரசு சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடத்துவது முஸ்லிம்கள் மட்டும் என்ற நிலையிருக்கின்றது.
உண்மைலேயில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையினை மற்ற சமுதாய மக்களும், நடுநிலையாளர்களும்
எதிர்க்காமலில்லை என்பதினை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களிலிருந்தே
தெரிந்து கொள்ளலாம். அதனைத் தவிர எழுத்தாளரும், வரலாற்று பேராசிரியருமான ராமச்சந்திர
குஹா பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்ததிற்காக கைது செய்யப் பட்டார். பேராசிரியர் சுந்தரவல்லி
அவர்கள் அனல் பிறக்க பேசும் பேச்சு அனைவரையும் கவர்ந்ததை தொலைக் காட்சி படம் பிடித்துக்
காட்டியது. அதேபோன்று கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களும் உணர்ச்சிமிக்க
பேச்சினை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இதேபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் சி.ஏ.ஏ மற்றும்
என் ஆர்.சி.சட்டத்தினை எதிர்க்கும் முஸ்லிம் அல்லாத மக்கள் இருக்கின்றனர். அவர்களிடம்
மேற்கொண்ட சட்டம் எவ்வாறு இந்திய மக்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்தவர்களை மதத்தின் பேரால்
பிரிக்க முயற்சி எடுக்கப் பட்டுள்ளது, என்பதினை எடுத்துச் சொல்வதுடன் என். ஆர்.சி பதிவு
எப்படி அவர்களையும் பாதிக்கும் என்று அவர்களுக்கு விளக்க வேண்டும்.
உதாரணத்திற்கு 1987 ஜூலை முதல் தேதி முதல் பிறந்தவர்கள்
பிறப்பு சான்றிதழ்களும் அல்லது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர்
எத்தனை பேர் பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். 1987 ஜூலை முதல் தேதிக்கு
முன்பு பெற்றோர் இறந்து உறவினர் பாதுகாப்பில்
இருந்தால் எப்படி பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்க முடியும். அனாதை
ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள் கதிதான் என்ன என்று சிந்திக்க வைக்க வேண்டும்.
ஒரு கை ஓசை வெற்றி பெறமுடியாது. மாறாக கூட்டுறவே நாட்டுயர்வு என்று ஊரின் அத்தனை
சமூதாய மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அதனை விட்டு விட்டு முஸ்லிம்கள் மட்டும்
தான் இந்த சட்டம் பாதிக்கும் என்று அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனை
அரசியலாக்கவும் கூடாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒ சக்கரைக் கோட்டை கிராமத்தில் சில
ஆர்வமான முஸ்லிம்கள், மைக்கில், 'பி.ஜெ.பி.க்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று குரல் எழுப்புவதினை
முக நூலில் பார்க்க முடிந்தது. அதுபோன்ற செயலில் இறங்காது, வேற்று மத சகோதர, சகோதரர்களின் ஆதரவைப் பெற வேண்டும். உலகமெங்கும் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் மத வேறுபாடுகளைக்
களைந்து கூகிள், முகநூல், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவன உரிமையாளர்களை சி.ஏ.ஏ, என். ஆர்.சி.
போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்ப வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
28. 12. 2019 ந் தேதி கேரளாவில் நடந்த 80 இந்திய வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியில் ஆளுநர்
சம்பந்தமில்லாமல் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியதால் சிறந்த வரலாற்று
பேராசிரியர் சிலரும், மாணவர்களும் மேடையில் ஏறி எதிர்ப்பு காட்டியதும் ஒரு வரலாறு தானே!
அது மட்டுமா மேற்கு வங்க ஜாதவ் பல்கலைக் கழக பட்டமளிப்பு
விழாவில் ஒரு மாணவி பட்டத்தினை வாங்குமுன் மேடையிலேயே சி.ஏ.ஏ., என் ஆர்.சி; சட்டங்களை கிழித்து வீசியது தொலைக் காட்சியில் பார்த்து
அனைவரும் மெய் சிலிர்த்தனர் என்றால் ஆச்சரியமில்லையா?
அமைதியாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று இந்து மத பெண்கள் தெருவில் கோலம் போட்டு தங்களது
எதிர்ப்பினை காட்டியது சுதந்திர போராட்டத்தில் மத வேறுபாடு இல்லாமல் மக்கள் சி.ஏ.ஏ.மற்றும்
ஏன்.ஆர்.சி போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடுவது மூன்றாம் இந்திய
சுதந்திரப் போருக்கு முன்னோடிபோல உங்களுக்குத் தெரியவில்லையா?
அவர்களிடம் மேற்கொண்ட சட்டம் எவ்வாறு இந்திய மக்கள்
அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்தவர்களை மதத்தின் பேரால் பிரிக்க முயற்சி எடுக்கப் பட்டுள்ளது,
என்பதினை எடுத்துச் சொல்வதுடன் என். ஆர்.சி பதிவு எப்படி அவர்களையும் பாதிக்கும் என்று
அவர்களுக்கு விளக்க வேண்டும்.
உதாரணத்திற்கு 1987 ஜூலை முதல் தேதி முதல் பிறந்தவர்கள்
பிறப்பு சான்றிதழ்களும் அல்லது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர்
எத்தனை பேர் பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். 1987 ஜூலை முதல் தேதிக்கு
முன்பு பெற்றோர் இறந்து உறவினர் பாதுகாப்பில்
இருந்தால் எப்படி பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்க முடியும். அனாதை
ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள் கதிதான் என்ன என்று சிந்திக்க வைக்க வேண்டும்.
ஒரு கை ஓசை வெற்றி பெறமுடியாது. மாறாக கூட்டுறவே நாட்டுயர்வு என்று ஊரின் அத்தனை
சமூதாய மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அதனை விட்டு விட்டு முஸ்லிம்கள் மட்டும்
தான் இந்த சட்டம் பாதிக்கும் என்று அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனை
அரசியலாக்கவும் கூடாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒ சக்கரைக் கோட்டை கிராமத்தில் சில
ஆர்வமான முஸ்லிம்கள், மைக்கில், 'பி.ஜெ.பி.க்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று குரல் எழுப்புவதினை
முக நூலில் பார்க்க முடிந்தது. அதுபோன்ற செயலில் இறங்காது, ஏற்கனேவே மஹாராஷ்டிரா, ஜார்கண்ட்
தேர்தலில் இறங்கு முகத்தில் இருக்கும் பி.ஜெ.பி. அரசு 2020 ல் டெல்லி, பிஹார்,
2021 ல் ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மேற்கு வங்கம்
போன்ற மாநிலங்களில் தேர்தலில் சந்திக்க உள்ளது. அப்போது ஓட்டு போடக்கூடியவர் முஸ்லிம்கள்
மட்டுமல்ல மாறாக அனைத்துத் தர மக்களும் ஆவர். ஆகவே அவர்களிடம் உங்கள் நிலையினை எடுத்துச்
சொல்லி உங்கள் எதிர்ப்பினை உங்கள் ஓட்டுக்கள் மூலம் காட்டுங்கள். அனைத்து மக்களிடமும்
மேற்படி சட்டங்களின் பாதகங்களை எடுத்துச் சொன்னால் அவர்களும் குரல் இந்தியாவில் எழுப்பினால்
அரசு அடிபணியும் என நினைப்பது சரிதானே!
No comments:
Post a Comment