Tuesday 28 February, 2012

கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்! கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்!

துருக்கி நாட்டில் 2000 ஆம் ஆண்டு பழம் பெரும் அரிய பொக்கிசங்களைத் தேடி கண்டு பிடித்து அவைகளை பொருக்காட்சியத்தில் வைப்பதிற்காக அலையும் போது, தொல்பொருள் ஆராச்சியாளர்களே அறியா ஒரு அரும்பெரும் பொக்கிஷம் கிடைத்தது. அது என்ன தெரியுமா?
ஈசா நபி காலத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஹீப்ரு, அராபிக், மற்றும் பழமைவாய்ந்த போனிசியன்-அக்காடியன் மொழியின் கலப்பினமான 'அரமைக்' மொழியில் மிருக தோலினால் தங்க எழுத்துக்களில் கையினால் எழுப்பட்ட நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அதனுடைய அருமை 2012 ஆண்டு ஆரம்ப முதலில் யாருக்கும் தெரியாது.
அந்த நூலினை சமீபத்தில் தலை நகர் அங்காராவின் பழமை பொருள் பாதுகாக்கும் அருங்காட்ச்யகத்திற்கு பலத்த பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்ததினை தற்போதைய ‘போப் பெனெடிக்ட்’ அவர்கள் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள் என்றதும் அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
அதில் தான் வானவர்களும் போற்றக்கூடிய வள்ளல் பெருமான் முகமது ஸல்லல்லாகு அவர்கள் அகிலத்தில் உதிக்கப் போகிறார்கள் என்ற முன்னறிப்பாகும். அந்த அறிவிப்பின் நகல் மட்டும் ரூ 10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈமான் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் அது விலை மதிக்க முடியா பொக்கிஷம் என்றால் மிகையாகுமா?.

புனித குர்ஆனில் மாந்தரை நல்வழிப் படுத்த அகிலத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான நபி மார்கள் வல்ல அல்லா அனுப்பியதாகவும் அதில் 25 பெயர்கள் சொல்லப் பட்டதும் அனைவரும் அறிவர். அப்படி நபிகளாக வந்த மூசா அலைகிவஸல்லம் மற்றும் ஈசா அலைகிவஸல்லம் ஆகியோரை இன்று கடவுளாக யூதர்களும், கிறித்துவர்களும் சித்தரிகிறார்கள். மூசா(ஸல்) அவர்களுக்கு தௌராத் வேதத்தினையும், ஈசா நபி அவர்களுக்கு இஞ்சில் வேதத்தினையும் ஏக வல்லோன் அல்லா வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது அல் குரானிலே! அதனை அனைத்து முஸ்லிம்களும் நம்புகிறோம்.
அதற்கு உதாரணமாக குரானில் அல் அஹ்ராப்- சிகரம் என்ற தலைப்பில் அத்தியாயம் எழில், பாகம் ஒன்பதில்,

'அன்றி, (இறைவனே) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையைக் கற்பனை செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும்(செய்வாயாக). நிச்சயமாக நாங்கள் உன்பாலே முன்னோக்கினோம்".......எவர்கள் நம்முடைய வசனங்களை(மெய்யாகவே) விசுவசிக்கிரார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளாகிய) அதனை நான் கற்பனை செய்வேன்" என்றும், (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுத்தாற்றல் அற்ற(நம்) தூதராகிய இந்த நபியை (ஸல்) பின்பற்றுகிறார்களோ அவர்கள், தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இஞ்சிளிலும், இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதினைக் காண்பீர்கள். (இத்தூதரோ ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாபமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்!
அத்தியாயம் 61 பாகம் 28 அணிவகுப்பு என்று வருகின்ற இடத்தில், 'மர்யமுடைய மகன் ஈசா(ஸல்), "இஸ்ரயீளின்
சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப் பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு
முன்னுள்ள தவ்ராத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் 'அஹ்மத்' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் நன்மாராயங் கூருகிர்ன்றே" என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறுதி நபி முகமது (ஸல்) அவர்கள் உதித்ததினையோ, அவர்கள் சந்ததியினர் நமது சகோதரர்கள் என்பதினையோ ஏன் யூதர்களோ அல்லது கிருத்துவர்களோ ஒத்துக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற ஆசிய நாடுகளையும், ஓட, ஓட விரட்டி, குனிய, குனிய குத்துகிறார்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் வசிப்பவர்களில் யார் பெயரினை தங்கள் பெயருடன் சேர்த்துள்ளார்கள் ஜீசுஸ் கிரிஷ்ட்டா அல்லது முகம்மதா என்று ஆராயும் போது முகமது பெயரே அதிகம் என்று அறிந்தார்கள்.
கிருத்துவர்கள் வாழும் நகரில் முகமது பெயர் முக்கியத்துவம் வாய்ந்து, மக்களை தன் பெயர் தாங்கச் சொல்லும் அளவிற்கு செய்த ஈர்ப்பு என்ன என்று கீழே காணலாம்:
1) வரலாற்றில் வாழ்ந்து, ஏக அல்லாவால் அடையாளம் காணப் பட்டு, மாக்களாக இருக்கும் மக்கள் ஓரிறையின்பால் ஈர்க்கப்படவும், பணபடவும் வஹி மூலம் நபியாக மக்களுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டு பெருமைப் படுத்தப் பட்டவர்கள்.
ஆனால் மூஸா(ஸல்) மற்றும் ஈசா(ஸல்) ஆகியோர் நபியாக அனுப்பப் பட்டு அறியாத மக்களால் கடவுளாக சித்தரிக்கப் பட்டவர்கள் ஆவர்.
2) எல்லாப் புகழும் அல்லாவிற்கே என்று ஏக இறைவனைப் புகழ்ந்தவர்கள். தன்னுடைய தனிப்பட்ட புகழ் என்றும் தலை தூக்கக் கூடாது என்று கவனமாக செயல் பட்டவர்கள்.
ஆனால் யூதர்களும், கிருத்துவர்களும் மூசாவினையும் , ஜீசசினையும் கடவுளாக வழிபட வழி வகுத்தனர்.
3) ரசூலல்லா மார்க்க விளக்கங்களைத் தந்ததோடு திருமண வாழ்க்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தார்கள்.
ஆனால் மற்ற மதங்களில் குருமார்கள் திருமண மாகாது இருந்ததால் பிற்காலத்தில் சிறுவர்களுடன் கூடா உறவு மேற்கொள்ள வழி வகுத்து விட்டார்கள் .
4) ரசூலல்லா தனிநபர் ஒழுக்கத்தினை வலியுறித்தினார்கள்.
ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இஸ்ரேயில் ஜனாதிபதி தன் பணிப் பெண்ணுடன் அலுவலகத்தில் கள்ள உறவு கொண்டதும், அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் தன் பணிபெண்ணுடன் வாய்வழி உறவு கொண்டதும் உலக நாடுகள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தது.

5) ரசூலல்லாஹ் ஜனநாயக முறை ஆட்சி நடத்தியதால் தனக்குப் பிறகு வாரிசினை நியமிக்க வில்லை.
ஆனால் இன்னும் கூட சில கிருத்துவ நாடுகளில் முடியரசு இருந்து கொண்டுதான் உள்ளது.
6) ரசூலல்லா அரசியல் தலைவராக இருந்தபோது எளிமையினைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் இஸ்ராயில், கிருத்துவ மன்னர்கள் ஆடம்பர வாழ்கை நடத்தியும், கொடுங்கோல் ஆட்சி நடத்தியதாலும் அந்த நாடுகளில் தற்போது இஸ்லாமியர் நாடுகளில் நடந்ததுபோன்ற பிரான்ஸ் புரட்சி, ரஷ்யன் புரட்சிகள் ஏற்பட்டன.
7) ரசூலல்லா அரசியல் தலைவராக இருந்தபோது யூதர்கள், கிருத்துவர்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அமைதி ஆட்சியினை தந்தார்கள்.
ஆனால் இஸ்ரயிலர்களும், கிருத்துவர்களும் ஆளும் நாடுகளில் இன்றும் இஸ்லாமியர் வேட்டையாடப் படுகின்றனர்.
8) ரசூலல்லாஹ் தன் படையினருக்கு போர்களங்களில் பயிர்கள், மரங்கள், கட்டிடங்கள் பாதுகாக்கவும், வளர்ப்பு பிராணிகள்,பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு உடல் சேதம் கொடுக்ககூடாது என்ற கட்டளைப் பிறப்பித்தார்கள்.
ஆனால் 1090 ஆம் ஆண்டு ஜெருசலத்தினைப் பிடிக்க நடந்த சிலுவைப் போரில் கிருத்துவர்கள், முஸ்லிம் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆக மொத்தம் 60000 பேர்கள் கொன்று குவித்தனர்.
9) பெண் சிசு கொலை தடுத்தும், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கியும், திருமணம் ஒரு ஒப்பந்தம், அது ஒரு சடங்கு இல்லை என்றும், சீதன முறை ஒழித்தும், திருமண வைபவங்களில் ஆடம்பரம் ஒழித்தும் ஆணை இட்டார்கள்.
ஆனால் கிருத்துவ அமெரிக்காவில் சமீபத்தில் தான் முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த ஜனாதிபதி ஒபாமா பெண் ஊழியருக்கு வேளையில் சம உரிமை வழங்கினார்.
10) ரசூலல்லாஹ் அடிமையினை விடுதலை செய்தார்.
ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பே தென் ஆப்பிரிகா போன்ற நாடுகளில் கறுப்பின மக்களுக்கும் சம உரிமை கிடைத்தது.
11) ரசூலல்லாஹ் மது, விபச்சாரம், வட்டி போன்றவைகளை அறவே ஒழித்தார்கள்.
ஆனால் கிருத்துவ, இஸ்ரேயில் நாடுகளில் அவைகளை இன்று வரை ஒழிக்க முடியவில்லை.
12) ரசூலல்லாஹ் உணவு முறையில் ஹலால்,ஹராம் எது என்று பிரித்துக் காட்டினார்கள்.
ஆகவேதான் புழுப் பூச்சிகளை சாப்பிட்டு வந்த சீன, ஆப்பரிக்க முஸ்லிம்கள் ஹலால் உணவுப் புரட்சியினை கடைப் பிடித்தார்கள்.
ஏக இறைவன் ரசூலல்லாஹ் மூலம் வித்திட்ட இஸ்லாமிய மார்க்கம் இன்று 150 கோடி மக்களை கொண்டுள்ளது ஆச்சரியமே! அது எல்லாம் வல்ல நாயனின் கட்டளை. ரசூலல்லாவின் படைப்பிற்கும், புகழுக்கும் துருக்கியில் படைத்த சான்று ஒன்று தான் உள்ளது என்று எண்ண வேண்டாம். இன்னும் மனிதனுக்கு கிடைக்காத பொக்கிஷம் புதைந்துள்ளது. அவைகளை சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்கள் வெளிக் கொண்டு வருவதின் மூலம் நபி (ஸல்) புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்போமா?

Sunday 26 February, 2012

காயல் கடற்கரை நகர்: என் எண்ண அலைகள்!

நான் சென்னை புதுக்கல்லூரியில் 1966-1969 வருடங்களில் விடுதியில் தங்கி படித்தபோது எங்களுடன் அஹ்மத் தம்பி, புகாரி, மொஹிதீன் அப்துல் காதர் (மைனாகார்), செய்யது அப்துல் காதர், வெள்ளைத்தம்பி, லபீப் ஆகியோர் படித்தனர். எங்கள் கல்லூரியில் முதன் முதலில் திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தினை புகாரியும், நானும் சேர்ந்து ஆரம்பித்தோம். அப்போது புகாரி மூலம் காயல்பட்டண மக்கள் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என அறிந்தேன்.

1983 ஆம் வருடம் நான் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பியாக இருந்தபோது திருச்செந்தூர் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தது. காயல்பட்டணம் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற தி.மு.கவிற்கும், அ.தி.மு.கவிற்கும் கடும்போட்டி இருந்தது. காயல் நகரும், புன்னக்காயலும்தான் பதட்டமான இடங்களாக அறியப்பட்டு கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கல்லூரி நண்பர் மைனாகாரை காயல் நகர் சென்றபோது சந்தித்தேன். அவர் நண்பர் புகாரி சிறு வயதிலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டதாகவும், அவர் நினைவாக கடற்கரை அருகில் ஒரு நூலகம் [YUF] அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். அங்கே சென்று நூலகத்தினைப் பார்த்து பரவசப்பட்டேன்.

தேர்தல் நேரத்தில் இரண்டு சம்பவங்கள் காயல் நகரில் நடந்ததை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு சவுக்கில் தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசன், லீக் தலைவர் அப்துல் சமது ஆகியோர் பேச வந்திருந்தனர். கடற்கரை ஓரம் அ.தி.மு.க கூட்டத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்தது. அ.தி.மு.க. முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கொடுத்த தவறான தகவல் பேரில் முதல்வர் வாகனம் தி.மு.க கூட்டம் நடக்கும் சவுக் சந்தில் நுழைந்து விட்டது. கூட்டத்தில் இருந்த தி.மு.க. இளைஞர்கள் முதல்வர் வாகனம் மீது கல்வீச ஆரம்பித்து விட்டார்கள். தவறான பாதைக்கு வந்துவிட்டோம் என்பதனை உணர்ந்த எம்.ஜி.ஆர். உடனே காரை ரிவேர்ஸ் எடுக்கச் சொல்லி அ.தி.மு.க. கூட்டம் நடக்கின்ற இடத்திற்கு வந்து விட்டார்.

கல்வீச்சு சம்பவத்தினை கேள்விபட்டு கொதிப்படைந்த கட்சி தொண்டர்களை அங்கிருந்த கீழக்கரை தொழில் அதிபர் பி.எஸ்.ஏ. அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அமைதிப்படுத்தினார். இல்லையென்றால் அன்று காயல் நகர் அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்.

தேர்தல் முதல்நாள் இரவு காயல் வந்த அ.தி.மு.க அமைச்சர் குழந்தைவேலு குழுவினருக்கும், தி.மு.க.வை சார்ந்த வைகோ, கே.பி. கந்தசாமி குழுவினருக்கும் கடைத்தெருவில் தகராறு ஏற்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பதட்டத்தினை தடுப்பதற்காக நானும் அப்போது என்னோடு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி - காஷ்மீரைச் சார்ந்த - மகபூப் ஆலமும், அங்கு தங்குவதாக முடிவு செய்தோம். ஊர் பெரியவர்கள் எல்.கே.எஸ். வீட்டில் மேல்மாடியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

1985 ஆம் ஆண்டு நான் உதகை மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி. ஆக பணியாற்றிய போது ஹாங்காங் சென்றேன். என் கல்லூரி நண்பர் கீழக்கரையினைச் சார்ந்த முகமது இர்பான் ஒருநாள் இரவு காயல் மெஸ்ஸில் சாப்பிடலாம் வாருங்கள் என அழைத்துச் சென்றார். அங்கே முகமது அலி ஜின்னா என்ற காயல் நகரினைச் சார்ந்தவர் பார்த்து, ' சார் நீங்கள் மட்டும் டி.எஸ்.பி. யாக இல்லை என்றால் 1983 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க ஜெயித்து இருக்கும் என்ற ஆதங்கத்தினை தெரிவித்தார். இர்பானிடம் விசாரித்ததில் அவர் டி.எம்.கே. தீவிர தொண்டர் என்றார். வெளி நாட்டில் இருந்தாலும் தனது கட்சியில் எவ்வாறு பிடிப்புடன் இருக்கிறார் அவர் என்பது காட்டியது.

1988 ஆம் ஆண்டு நான் தருமபுரி எஸ்.பி.யாக இருந்தபோது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக வந்த இந்திய பிரதமர் மறைந்த ராஜீவ் காந்திக்கு மாநில பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருடன் பயணம் மேற்கொண்டேன். அவர் காயல் நகருக்கு குரும்பூர் வழியாக வந்தார். அப்போது அவருக்கு மௌலானா ஆசாத் மைதானத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த உற்சாக வரவேற்ப்பினைப் பார்த்து அங்குள்ள மக்களிடம் வாஞ்சையுடன் கலந்துரையாடியது அவர் இஸ்லாமியர் மீது எவ்வாறு பற்றுக் கொண்டுருந்தார் என்பதினைக் காட்டியது.

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடுமையாக ஈடுபட்டதிற்கு தமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகள் புலிகளுக்கு இந்தியாவில் தடை இருந்தாலும் ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சார்ந்த காயல் மகபூப் மட்டும் தைரியமாக, விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா கிழக்கு மாவட்டத்தில் காத்தான்குடி கிராமத்தில் அதிகாலை ஸுபுஹ் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை கண்முன் தெரியாது சுட்டு வீழ்த்தினார்கள். கிழக்கு மாவட்ட மக்களுக்கு குடியுரிமைக் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது யாழ்ப்பான விடுதலைப் புலிகள்தான் என்று அப்போதைய எம்.பி. மதிப்புமிகு கே.டி. கோசல்ராம் சொன்னதாக பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

2011 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினை நடுவழியில் இறக்கிவிட்ட தோழமை கட்சிப் பற்றியும், அதற்கு தனிச் சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும், மற்ற சமுதாய இயக்கங்களின் தேர்தல் நிலைப்பாடு சம்பந்தமாக நான் ஒரு கட்டுரையினை, 'ஏன் இளைத்தாய் என் இனிய சமுதாயமே' என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அதனைப் படித்த லீக் செயலாளர் தம்பி அபூபக்கர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட விளக்கத்தினைத் தந்து விட்டு, கூடிய விரைவிலே தாங்கள் தேர்தல் கமிசனில் அங்கீகாரம் பெற்று விடுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து சகோதரர் அப்துர் ரஹ்மான் எம்.பியும் தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தார். அதன்படியே நடக்கின்ற உத்திரப் பிரதேச தேர்தலில் லீக் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.

வியாபாரத்தில் முன்னோடி:

காயல் நகர மக்கள் பல்வேறு நாடுகளிலும், சென்னை போன்ற நகரங்களிலும் புகழ் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னை நகரில் நகை வியாபாரத்தில் நாணயமாக பல்வேறு போட்டிகளுக்கிடையே எல்.கே.எஸ்ஸும், வாவு சன்ஸ் போன்றோர் புகழ் பெற்று இருக்கிறார்கள். நண்பர் எல்.கே.எஸ் செய்யித் அஹ்மத் வியாபாரத்தில் சிறந்து விளங்குவதுடன், கல்விச் சேவையிலும் முன்னோடியாக இருக்கின்றார் என்பது அவர் நடத்தும் பள்ளிக் கூடத்திலும், புதுக் கல்லூரி நலனிலும் மற்றும் பல்வேறு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு உதவுதலிலும் அக்கறை காட்டுகிறார்.

அதேபோன்று திருச்சியில் உள்ள டாக்டர் அஷ்ரபும் சளைத்தவரல்ல என்று கல்வி, மருத்துவ உதவிகளை செய்து வருகின்றார் என்று நான் திருச்சியில் எஸ்.பி.யாக 1989 ஆம் ஆண்டு இருந்தபோது தெரிந்து கொண்டேன்.

வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு இ.டி.ஏ.யில் ஆடிட்டராகவும், கணினி தொழிலில் வல்லவராகவும் இருக்கும் புகாரியை அறிந்து இருப்பார்கள். அவர் சிறந்த மேலாளர் மட்டுமல்ல; மாறாக மார்க்கத்தில் பற்றுள்ளவர் என்பதினை சில சமயங்களில் அவர் அனுப்பும் மின் அஞ்சல் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் மிகவும் பிசியானார் என்று ஹஜ் கமிட்டி கட்டிடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்த எனக்கு அவருக்கு நிமிடத்திற்கு ஒருமுறை வரும் போனில் இருந்து அறிந்து கொண்டேன்.

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள்:

காயல் நகரில் நுழையும் முன்பு ஒரு பெரிய விளையாட்டுத் திடல் இருக்கும். அதில் நூலகமும் உண்டு. வருடம் ஒருமுறை மௌலானா அபுல் கலாம் நினைவு கால்பந்து விளையாட்டு இந்திய அளவில் நடத்துவார்கள். எங்களூர் இளையான்குடி அணியும் அதில் கலந்து கொள்ளும். நான் 1990 இல் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்தபோது அப்படி நடந்த போட்டிக்கு பரிசு கொடுத்துள்ளேன். அந்தப் பழக்கம்தான் தம்புச் செட்டி தெருவில் கணினி சர்வீஸ் வைத்திருக்கும் தம்பி சக்கரியாவும் ஞாயிறு காலைதோறும் மெரினா பீச்சில் வாலிபால் விளையாட்டில் ஈடுபட்டு பின்பற்றுகிறார்.

மார்க்கப் பற்றுள்ளவர்கள்:

காயல் நகர மக்கள் ஈமானை, நோன்பினைத் தவற விடாதவர்கள். இளைஞர்கள் ஆனாலும் குறுந்தாடியுடனும் தலையில் தொப்பியுடனும்தான் காணலாம். வருடந்தோறும் புஹாரி சரிப் ஒரு திருவிழா போன்று அந்த மக்கள் அனைவரும் காயல் நகருக்கு வருவதினைப் பார்க்கலாம்.

பொது சேவை:

மருத்துவமனை, கல்வி நிலையம், அரபி மதரசா போன்ற அமைப்புகள் அங்கு மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமீபத்தில் (பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில்) கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் காயல் நகர் பஸ் நிலையம் எதிரே நோட்டீஸ் விநியோகித்திருந்து கொண்டிருந்ததாகவும், அதனை அறிந்த பொதுமக்கள் தினந்தோறும் எட்டு மணிக்கு மேல் மின்வெட்டு மூலம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நீங்கள் கூடங்குளம் மின் உற்பத்தி வேண்டாம் என்கிறீர்கள், எங்களுக்கு மின் உற்பத்தித் தேவை என்று விரட்டியதாக செய்தி அறிந்து எப்படி காயல் நகர் மக்கள் பொது நோக்குடன் நடக்கின்றார்கள் என பாராட்ட முடிந்தது.

காயல் நகர் மக்கள் சிறப்புடன் விளங்க இரு கையேந்தி எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ கேட்டு விடை பெறுகிறேன்.

Thursday 23 February, 2012

அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!

நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த
‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும், எதிரிகள் விடும்
குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு
அவர்களை வீழ்த்துவதும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும். எப்படி மஞ்சு விரட்டில் மாட்டின் திமில் மீது
தொத்திக் கொண்டு சீறி பாயும் காலை மாட்டினை அடக்குகிறானோ அதேபோன்று பல களங்களை
வெற்றிக் கொண்ட வீரராகத் திகழ்ந்தார். சில நேரங்களில் தோற்றாலும் மூன்று முறை உலக குத்துச்
சண்டை பட்டத்தினை வென்று வாகை சூடிய ஒரே வீரன் அவர். இரும்புபோன்ற வலுவான உடல் வாகு கொண்ட
அவர் உள்ளம் மட்டும் ஏக இறைவன் அல்லாஹ் நோக்கியே இருந்தது. ஓரிறைக் கொள்கை கொண்ட அவர்
பெயரையும் முகமது என மாற்றிக் கொண்டது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமா அந்நிய அப்பாவி மக்களைக்
கொல்லும் அமெரிக்கா ராணுவத்தின் கட்டாய சேவையில் பதவி போனாலும் செல்ல மாட்டேன் என்று பட்டத்தினை பறி கொடுத்து, திரும்பவும் வென்று காட்டிய மாவீரன் முகமது அலியே சேரும். வல்லவன் என்பது ஒருவனை அடித்து வீழ்த்துவது அல்ல, மாறாக அவனை நேசக் கரத்தோடு நெஞ்சில் அனைத்துக் கொள்வதே ஆகும் என்ற தத்துவத்தினைப் போதித்தவரும் அவரே! ஆகவே தான் அவரை உலக நாடுகளின் சபையின் அமைதிக்கான தூதுவராக நியமித்து அழகு பார்த்தது. ஆனால் தற்போது அவர் உடல் 'பார்க்கின்சன்' நோயால் துவண்டு போய் உள்ளது.
என்னோடு புதுக் கல்லூரியில் 1966-1969 ஆண்டுகளில் படித்து, விடுதியில் ஒன்றாக தங்கி புதுக் கல்லூரிக்கு கூடைப் பந்திலும், சிறகுப் பந்துப் போட்டியிலும் பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கித் தந்த முகமது இர்பான் என் இனிய நண்பர். படிப்பிற்குப் பின்பு ஹாங்காங் நகரில் கல் வியாபாரம் செய்தார். 1985 ஆம் ஆண்டு நான் ஹாங்காங் சென்றபோது விருந்தோம்பலில் திளைக்க வைத்தார். அங்குள்ள டிராமினை விட வேகமாக நடக்கும் ஆற்றலினை அவரிடம் கண்டேன். இருபது ஆண்டுக்குப் பின்பு அவர் சென்னையில் குடியேறி விட்டார் என கேள்விப் பட்டு எங்களது கல்லூரித் தோழர் அமீர் அப்துல் காதருடன் நுங்கம் பாக்கம் வீட்டிற்கு வீட்டுக்குச் சென்றோம்.
எங்களை அதே பாசத்துடன் கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் அவர் உடல் மட்டும் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டது கண்டு மனம் வேதனையில் நொறுங்கிப் போனது. இறைவா ஏன் என் இனிய நண்பருக்கு இந்த நோயினைக் கொடுத்தாய் என்று குறை படவும் தோன்றியது.
அப்போது பார்க்கின்சன் நோயென்றால் என்ன என்று அலசத் தோன்றியது
மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் இழந்து உடல் உறுப்புகள் ஆட்டம் கண்டும், விரைப்புத்தன்மை கொண்டும், செயல்பாடுகள் மெதுவாகவும் இருத்தல் என்று அறிந்தேன்.
21.2.2012 தினசரி பத்திரிக்கையினை புரட்டும்போது ஒரு சுவையான செய்தி வெளி வந்திருந்ததினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். அமெரிக்கா நரம்பியல் இயக்குனரக தலைவர் மார்க் மாட்சென் வயது
முதிர்ச்சிப் பற்றி ஆராயும்போது ஒரு கண்டு பிடிப்பினை வெளியிட்டுள்ளார். 'ஒரு மனிதன் சில நாட்கள் உண்ணா
நோன்பு இருந்தால் அவனால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். எப்படி என்றால் உண்ணா நோன்பு இருந்தால் கலோரி மூளைக்குச் செல்வது குறைக்கப் பட்டு மூளையின் நரம்பு மண்டலத்தினை பாதுகாத்து பார்க்கின்சன் மற்றும் அல்ழேமியர் போன்ற நோய்களிடமிருந்து காப்பாற்ற முடியும்' என்கிறார்.
அல்ழேமியர் நோய் என்றால் என்ன என்று பார்க்கும்போது, சாதாரணமாக 65 வயதினரைப் பாதிக்கும் மறதி நோய்
இளம் வயதினரையும் பாதித்து, ஞாபக சக்தி குறைவு, குழப்பங்கள் ஏற்படுகின்றன என்றும் சொல்லப் படுகிறது.
அல்குரானிலும், கதிசுகளிலும் பார்க்கும்போது பல்வேறு ஆதாரங்கள் அவைகளுக்குக் கிடைத்தன. அவற்றில் சில வற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னை ஆயிசாப் பிராட்டியார் அவர்கள், " அண்ணலார் அவர்கள் ஷாபான் மாதம் அதிக நோன்பு கடைப் பிடித்தார்கள்' என்றார்கள்.
அல்குரானில் 2:183 அத்தியாயத்தில், "நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது, நோன்பில் பல நன்மைகளும் உள்ளதாக" கூறுகிறது.
இமாம் புகாரி அவர்கள், " நோன்பு நோற்பதால் பலவீனமோ, சோர்வோ அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இமாம் அபுதாவுது அவர்கள், "நோன்பு இருந்து முடித்ததும் தாகம் தீர்ந்து, நரம்புகள் வலுபெறும், இறைவன் நாடினால் திண்ணமாக நற்கூலியும் கிடைக்கும்" என்றார்கள்.
நோன்பு காலங்களில் பசித்திருந்து, தனித்துருந்து, விழித்திருந்து இறை நேசத்துடன், தீமைகளை சுட்டெரிக்கும் வகையில் ஒருவன் செயல் பட்டால் நரம்பு தளர்ச்சி நோய்கள் ஒருவனை நெருங்காது என்று மேற்கண்ட ஆதாரங்கள் கூறவில்லையா?
ஆனால் இந்த நவீன மோக உலகத்தில் நோன்பு காலங்களில் கூட வயிறுபுடைக்க சாப்பிட்டும், மது அருந்தியும், புகைத்தும், இன்னும் கூட சில இஸ்லாமிய ஊர்களிலும் அல்லது வெளி நாடு சென்ற இளைஞர்களிடம் காணலாம்.
அவர்கள் சிறார்களாக இருந்தபோது நோன்பு வைக்க பெற்றோர்கள் வற்புருத்தியிருப்பார்கள் என்பது நிச்சயம். ஆனால் எப்படி பிற்காலத்தில் அதனை கடைப் பிடிக்காமல் முரண்படுகின்றனர் என்பது ஆச்சரியமாக இல்லையா? நான் கடுமையான காவல்துறை பணியில் இரவு பகலாக வேலைப் பார்த்தாலும் நோன்பினை விட்டதில்லை. நோன்பு இருக்கும்போது மாற்றார்கூட நம்மீது மதிப்புடன் நடந்து கொள்வார்கள் என்பதினை நான் கண்கூட பார்த்திருக்கின்றேன்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு நோன்பின் தத்துவத்தினை எடுத்து இயம்பிய அல்குரான், ரசூலல்லாவின் கதீசுகள் இன்றைய விஞ்ஞான உலகில் மெய்யாகி இருக்கின்றது என்பதினை மார்க் மாட்சென் கண்டு பிடிப்பு கூறவில்லையா?
ஆகவே சமுதாய மக்கள் தங்கள் சிறார்கள், இளைஞர்கள் ஆகியோரை பார்க்கின்சன், அல்ழேமிர் நோய் போன்றவை தாக்காமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அவர்களை நோன்பு நோற்கச் செய்து, தீய செயல் பக்கம் நாடாது இருக்க அறிவுரை சொல்ல வேண்டும்.
சாதாரண காலங்களில் கூட வயிறு முட்ட சாப்பிடாது அரை வயிற்றுடன் சாப்பிட்டு அடுத்தவர்க்கு பகிர்ந்து அளிக்கும் ஈகைக் குணம் வேண்டும்.
திருமண, மற்றும் விசேசங்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் தவிர்க்க வேண்டும்.
பெரியவர்கள் உணவுக் கட்டுப் பாடுகளுடன் நடந்து கொள்வதால் அல்ழேமிர் போன்ற நோய்கள் தாக்காது இருக்கும். அத்துடன் மற்றவர்க்கு பாரமாக இருக்க மாட்டோம்.
உணவுக் கட்டுப் பாட்டு, ஆயாத்துள் குர்சி, அல்பாத்திஹா போன்ற ஆயத்துகளை ஓதி, வல்ல அல்லாஹ்வே எங்களுக்கும், எங்கள் சந்ததிகளுக்கும் பக்க வாதம், பார்க்கின்சன், அல்ழேமிர் போன்ற நோய்கள் தாக்காது பாதுகாக்க வேண்டும் என்று இரு கையேந்து துவா கேட்போமா?

Thursday 9 February, 2012

நீதி தேவதை கண்ணைத் திறந்தது!

1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 இன் படி இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவரும் சட்டத்தின் முன் சமமானவராவார்.
பிரிவு 15 இன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றைக் கொண்டோ அல்லது குடிமகன் எவருக்கும் அரசு வேற்றுமை பாராட்டுதல் கூடாது.

நீதி தேவதை இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு ஒரு தராசினை கையில் ஏந்தி, தராசுத்
தட்டுகள் சம நிலை இருக்கும் விதமான சிலைகள், படங்களைப் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் ஒரு தராசுத் தட்டின் அடியில் எடையினக் கூட்ட மாக்னெடிக் கல்லை வைத்து ஒட்டி
இருப்பதினை எங்கே அந்த நீதி தேவதையின் சிலை அறியப் போகிறது என்று 1992 ஆம் ஆண்டு
அயோத்தியில் பாரம்பரியமிக்க இஸ்லாமியர் வழிப் பாட்டுத் தளம் இடிக்கப் பட்டது. அப்போது
மத்தியில் ஆட்சியில் இருந்த மௌன சாமியார் என்று புகழப் பட்ட நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ்
ஆட்சியையும், உ.பி. மாநிலத்தில் இப்போது தன்னை பிற்பட்ட மக்களின் தலைவன் என்று சொல்லிகொள்ளும்
கல்யானசிங் தலைமையிலான ப.ஜ.க. ஆட்சியையும் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
மசூதி இடிக்கப் பட்டது ஒரு நிகழ்ச்சியாக ஒரு சில படித்த பெரியவர்களுக்கு தோணலாம். ஏனென்றால் அவர்கள்
தங்களுடைய முடிவினை அறிவிக்கும்போது நிஜக் கண்ணை மறைக்கும் கலர் கண்ணாடி அணிந்து இருந்திருப்பார்கள்
போலும். கண்ணாடி இல்லாமல் அறிவித்து இருந்தால் அவர்களின் உண்மை சொரூரம் வெளிப் பட்டிருக்கும் அல்லவா?
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பாரம்பரியமிக்க மஸ்ஜித் இடிக்கப் பட்டுவிட்டதே என்று ஆதங்கப்
படும்போது ஒரு சில உயர்ந்த மனிதர்கள் மட்டும் அது ஒரு நிகழ்வுதான் என்று சொல்லும்போது விந்தையாக
உங்களுக்குத் தெரியவில்லையா? இப்படிக்கும் அவர்கள் சட்ட மேதைகள் என்று எண்ணும்போது வேதனையாக ஒருபுறம்
இருக்கத் தான் செய்கிறது. அப்படி இடிக்கப் பட்ட மஸ்ஜித் இடம் மனித கலாசாரத்தின் இழிநிலை செயலினை எடுத்துக் காட்டும் இடமாகத் தான் உலகிற்கு தெரிகிறது. ஆனால் ஏனோ சில உயர்ந்த மனிதர்களுக்குத் தெரியவில்லை.
பண்பாட்டினை விட்டுவிட்டு அரசியல் சட்டத்திற்கு உற்பட்டதா மஸ்ஜித் இடிப்பது என்றாவது அவர்கள் ஆராய வேண்டாமா?
20 ஆண்டு காலம் இந்திய நாட்டின் 20 சதவீத மக்கள் மஸ்ஜித் திரும்பவும் அதே இடத்தில் கட்டப்பட
வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகத் தானே இருக்கின்றது என்று எண்ணும்போது வேதனையாக இல்லையா?
ஆனால் குஜராத் மாநில உயர் நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மதிப்பு மிகு பாஸ்கர் பட்டச்சார்யா மற்றும் பர்டிவாளா
ஆகியோர் 8.2.2012 அன்று சரித்திரம் வாய்ந்த நீதியினை இந்த நாட்டில் சத்தியம் அழிய வில்லை என்று காட்டியும், நீதி தேவதை எதற்கும் மயங்காமல், இன்னும் உயிருடன் தான் உள்ளாள் என்றும், அரசிய சட்டத்தினை நிலை நிறுத்தியும் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். அது என்ன தீர்ப்பு?
2002 ஆம் ஆண்டு கோத்ராவில் ஒரு ரயில் தீப்பற்றி எரிகிறது. அதில் சிலர் மாண்டு விடுகிறார்கள். அதற்கு காரணம்
இஸ்லாமியர் என்று காரணம் காட்டி முஸ்லிம்களை மனித வேட்டையாடி விளையாடி 1200 பேர்களுக்கு மேல் கொல்லப் பட்டும், பல தொழில் நிறுவனங்கள் கொளுத்தப் பட்டும், வீடுகள் இடிக்கப் பட்டும் , பல பள்ளிவாசல்கள், தர்காக்கள் தரை மட்டமாக்கவும் பட்டன.
அங்கே பி.ஜே.பி. தலைமயிலான ஆட்சி அப்போதும் இப்போதும் மத்தியில் பி,ஜே, பியும் ஆட்சி செய்தன.
அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கூட 'தான் அப்போது கண்ணீர் விட்டு அழுததாக' தனது கைஎழாத தனத்தினை ஓய்வுக்குப் பின் நிருபர்களிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னன. 'கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்று சொல்லும் பழமொழி போல.
ஆனால் நீதி இந்திய திரு நாட்டில் இன்னும் செத்து விடவில்லை என்பது போல குஜராத் உயர் நீதி மன்ற இரு அமர்வு நீதிபதிகளும், கோத்ர ரயில் விபத்துக்குப்பின் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத் அரசு தன் கடமையினை சரிவர செய்ய வில்லை வென்றும், அவ்வாறு செய்யாததினால் பல வழிப் பாட்டு தளங்கள் இடிக்கப் பட்டது என்றும், அப்படி இடிக்கப் பட்ட வழிப் பாட்டுத் தளங்களை மறுபடியும் சீரமைக்கும் கடமை அரசைச் சார்ந்தது என்றும், அப்படி சீரமைக்க 26 மாவட்ட நீதிபதிகளும் கணகெடுத்து நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆணையினை வழங்கியுள்ளார்கள்.

தற்போது குஜராத் நீதி மன்றம் வழங்கி உள்ள தீர்ப்புப் போன்று தான் அயோத்தி பள்ளிவாசல் இடித்த வழக்கிலும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய திரு நாட்டின் குடிமக்களான இருபது சதவீத முஸ்லிம்களும் ஏக்கத்துடன் உச்ச நீதி மன்றத்தினை எதிர் நோக்கி உள்ளார்கள்.
குஜராத் நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பு
சொல்லியிருப்பார்களேயானால் அந்தச் சட்டம் எப்படி அயோத்தி பள்ளிவாசலுக்குப் பொருந்தாது என்று உச்ச நீதி மன்றத்தில் சமுதாய இயக்கங்கள் வாதிட வேண்டும் . அரசியல் சட்டம் பிரிவு 15 இன் படி முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தினை கடைப் பிடிக்கவும், பள்ளியில் தொழவும் உரிமை உள்ளது. அதனை பாது காப்பது அரசின் கடமையல்லவா? அந்த அரசியல் சட்டப் படி அரசு செயல் படுகிறதா என்று கண்காணிப்பது நீதி மன்றங்களின் செயலல்லவா? அப்படி செயல் படவில்லைஎன்றால் குஜராத்தில் நீதி மன்றம் நீதியினை நிலை நாட்டியது போல உச்ச மன்றமும் நிலை நாட்டி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆணை வழங்க வேண்டும், அதற்கு சமுதாய இயக்கங்கள் குரலும் எழுப்பிக் கொண்டே இருந்து விடாது, சட்டப் பூர்வமான கருத்துக்களை உச்ச நீதி மன்றம் முன் எடுத்து வைக்க வேண்டும் என்றால் சரியாகுமா?

Sunday 5 February, 2012

பாரா உசார்-கபட்தார்

முன்பெல்லாம் கிராமங்களின் வீதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையினை நேபாள குர்காக்கள் ஈடுபட்டு வரும்போது இரவு வேளையில் ரோட்டிலும் கடைகளில் உள்ள கல்களிலும் தங்களுடைய கைத்தடியால் தட்டி ஒலி எழுப்பி உசார் என்று சொல்லி வருவதினைப் பார்த்திருப்போம். அதேபோன்று நமது ஊரிலுள்ள பெரியவர்கள் தங்கள் வீட்டிலுள்ள குழைந்தைகளை எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லும்போது ‘கபட்தார்’ என்று சொல்லுவார்கள். அதேபோன்று இன்றைய நவீன உலகில் நமது குழந்தைகள் வழி தவறிப் போகக் கூடாது எச்சரித்து வழி நடத்த வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

சென்னையினை அடுத்த நகரத்தில் இருக்கும் இஸ்லாமியர் நடத்தும் ஒரு கல்வி நிறுவனக் கட்டிடத்துக்குள் அமைந்திருக்கும் ஊழியர் குடியிருப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒரு தாய் கொலையில் மாண்டிருக்கிறார். அதுவும் எதற்காக என்றால் அந்த தாயின் கல்லூரி செல்லும் மகள் செய்த தவறினால் நடந்திருக்கின்றது என்று அறியும் பொது நம் நெஞ்சமெல்லாம் கொதிக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் பெற்றோர் வயித்தை வாயைக் கட்டி பெற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியினைக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையின் முன்னேறும் படிக்கல்லாக் அமைய வேண்டுமே என்பதிற்காக உயர் கல்வியினை கொடுக்கிறார்கள். அந்த பிள்ளைகள் உபயோகத்திற்காக நல்ல உடைகளை பல கடைகள் ஏறி இறங்கி வாங்கிக் கொடுக்கிறார்கள், பலர் வைத்திருக்கிறார்கள் என்று மேசைக் கணினி, மடிக் கணினி வாங்கிக் கொடுக்கிறார்கள், கைச் சிலவிற்கு நாலு காசுவினையும் கொடுத்து, கல்வி நிலையங்களில் பிள்ளைகள் பசியோடு இருக்கக் கூடாது என்று அதிகாலையிலே எழுந்து உணவு தயாரித்து வாசல் வரை வந்து வழியும் அனுப்புகிறார்கள். எதற்காக என்றால் பிள்ளைகளுக்கு அறிவுக்கண்ணை திறக்க வேண்டுமே என்பதால்தான். ஆனால் அப்படிப் பட்ட பிள்ளைகளில் சில சேற்றில் புரளும் பன்றிகளோடு குலாவி வீட்டை அடையும் போது பெற்றோர் மனம் கொதிப்பது இயற்கையே!
26.1.2012 அனைத்து இந்தியருக்கும் குடியுரிமைக் கொடுக்கப் பட்ட குடியரசு தினமாகும். அந்த நாளில் மகளுக்கு உரிமைக் கொடுத்ததினால் தௌசிக் நிஷா என்ற தாய் கொல்லப் பட்டிருக்கிறார். அதற்குக் காரணம் கல்லூரி செல்லும் 17 வயது செல்ல மகள் ஷர்மிதாதான். மகளை கல்லூரி செல்ல வைத்தும், மகளுக்கு அறிவினை அதிகப் படுத்த கணினி வாங்கிக் கொடுத்தும் அழகுப் பார்த்திருக்கிறார் ஷர்மிதாவின் தந்தை கல்லூரி நூலகத்தில் வேலைப் பார்க்கும் ஜியாவுதீன். ஆனால் மகள் ஷர்மிதா இன்டர்நெட்டில் அறிவினைத் தேடாது வருங்கால துணையினைத் தேடியிருக்கிறார். தாய் தௌசிக் நிஷாவினைக் கொன்ற சாந்தக் குமார் என்ற வாலிபர் கைது செய்த பிறகு போலீசில் வாக்கு மூலம் கொடுக்கும்போது, 'நான் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கிறேன். நான் இன்டர்நெட்டில் சாட்டிங் செய்யும்போது ஷர்மிதா பழக்கமானார். அது காதலாக மாறியது. நான் அவர் குடியிருக்கும் கால்லூரி வளாக வீட்டிற்கு சென்று யாரும் வீட்டில் இல்லாத வேளையில் ஷர்மிதாவின் தாயார் தௌசிக் நிஷாவிடம்
தான் காதலிக்கும் ஷர்மிதாவினை திருமணம் செய்து தரவேண்டும் என்று வலியுறித்தினேன்,
அதனை அவர் மறுத்து விட்டார், உடனே ஆத்திரத்தில் கத்தியினை எடுத்து குத்திவிட்டு ஓடிவிட்டேன்'
என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார். மகள் செய்த தப்பிற்கு தாய் உயிரை மாய்க்க வேண்டி உள்ளது பரிதாபமாக
இருக்க வில்லையா?
இது ஒரு நிகழ்ச்சி என என்ன வேண்டாம். இதுபோன்று செல் போனில் மிச்செடு அழைப்பு அனுப்பியும், இன்டர்நெட் சாட்டிங்கிலும் மைனர் பெண்களையும், திருமணமான பெண்களையும் தங்கள் ஆசை வலையில் சிக்க வைத்து மோசம் செய்வது அன்றாட நிகழ்வுகளாகத்தான் உள்ளது. சில செய்திகள் நமக்கு அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. அது என்ன வென்றால் முஸ்லிம் மார்க்கப் பெண்களை ஆசை வழியில் கவர்ந்து, அனுபவித்து விட்டு பின்பு நடுத் தெருவில் விட்டுவிடும் மாற்று மத நிறுவனங்களின் சதியாகக் கூட சொல்லப் படுகிறது.
அதனை நிருபவிக்கும் விதமாக இளையான்குடி சாலையில் ஒரு குடும்பப் பெண்ணுக்கு மிச்செடு அலைப்பு அனுப்பிய
இராமநாத புறத்தினைச் சார்ந்த மாற்று மத திருமணமான நபர் அந்தப் பெண்ணை கவர்ந்து கடத்திச் சென்று விட்டார். செய்தி தெரிந்து சமூக தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் தலையிட்டு போலீசில் புகார் செய்து அந்தப் பெண்ணை நீதிபதி முன் நிறுத்துவதிற்காக கொண்டு வரும்போது ‘இந்தப் படைபோதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா’ என்ற இஸ்லாமிய எழுச்சியினைக் காட்டி மீட்டிருக்கின்றார்கள் என்று பார்க்கும்போது இது போன்ற ஒரு சதி இருக்குமோ என்றும் யோசிக்கத் தோனத்தான் செய்கிறது இல்லையா?
அது இன்று மிகவும் பாதுகாப்பான இஸ்லாமிய கல்வி நிலைய கோட்டைக்குள் கொலையாக தௌசிக் நிஷா கொலை விசயத்தில் நடந்திருக்கிறது. ஆகவே தான் ‘பாரா உசார்’ என்று குரல் கொடுத்தேன்.
இண்டர்நெட் சாட்டிங்கில் மூன்று விதமான கிரிமினல் செயல் நடக்கின்றது:
1) கணினி டிஜிட்டல் சாட்சிகளை பாதுகாக்கும் பெட்டகமாகும். அதில் பதிவு செய்யப் பட்ட தகவல்களை
செல்போன், கையடக்க கணினி மற்றும் பல்வேறு எலக்ரோனிக்ஸ் சாதனங்களில் அதனை பரிமாற்றம் செய்யலாம். ஒருவருடைய ரகசிய பரிமாற்றங்களை உலகிற்கே போட்டுக் காட்டி அவரை அசிங்கப் படுத்தலாம்.
2) கணினியினை சமூக விரோதிகள் ஏமாற்று வேலைக்கும், குழந்தைகளை ஆசைகாட்டி செக்ஸ் மோசம் செய்வதிற்காகவும், போதைப் பொருள் கடத்தல், விற்றல் போன்றவைக்காகவும், ஆள் கடத்தல், பயமுறுத்துதல், ஆட்களை தங்கள் தேவைக்காக இழுத்தடித்தல் போன்ற சமூக விரோத செயல்களுக்காகவும் பயன் படுத்துகின்றனர்.
என்றும் பதினாறு மைனர் சிறுமி தன் கணினியில் நண்பர்கள் தேடியபோது ஒரு நபர் கிடைத்தார். அவர் தன்னை 25 வயது ஆணழகன் என்று விவரித்து அந்த சிறுமியினை தன் வலையில் வீழ்த்தினார் . அதன்பின்பு தான் உங்களுக்குத் தெரியுமே
அவன்தான் தன் கனவு கதா நாயகன் என்று சிறுமி அவன் சொன்னதெற்கெல்லாம் சரி என்று ஆடினாள். ஒருநாள் ஒரு சந்திப்பு இடத்திற்கு வந்த சிறுமிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அவளது கதா நாயகன் 46 வயது மனிதன் என்று. அப்படி மோசம் செய்தது காவல் நிலையம் வரை சென்றதாக உண்மையான செய்தியாக வெளிவந்தது.
3) கணினி வலயத்தினையே நிறுத்தி வைக்கவும், சேதப் படுத்தவும், திருடவும் சமூக விரோதிகள் ஈடுபடுகிறார்கள்.
ஏன் பல நாடுகளும் ஈடுபடுவதாக கூறப் படவில்லையா? உதாரணத்திற்கு அமெரிக்காவின் ரகசியமான ராணுவ தலைமையிடமான பெண்டகானின் கணினி தகவல்களை சீன நாடு திருடுகிறதாக சில மாதங்களுக்கு முன் குற்றம்
சாட்டப் படவில்லையா?
உலகின் கணினி வலைகளை திருடும் முயற்சியினை தடுப்பதிற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐயும், லண்டன் போலுசும் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று கருத்துக்களை கணினி மூலம் பரிமாறிக் கொண்டதை வலை திருடும் கும்பல்(Hackers) சி.டி. வடிவில் வெளியிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலினை வெளியாகி உள்ளதினைப் பார்க்கும்போது கணினி பரிமாற்றங்களை எவ்வளவு ரகசியமாகவும், கண்காணிப்புடனும் செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கணினி கலந்துரையாடல் எல்லையில்லா பலனை அளிக்கின்றது.
அப்படி குற்றனடவடிக்கைகளில் ஈடுபடுவதினைத் தடுத்து குற்றவாளிகளைப் பிடிப்பது கடினமானதாக அமைந்து விடுகிறது. அதற்குக் காரணம்:
1) கணினி வலயத்தில் பொய் விலாசம் பதிவு செய்வது.
2) இலவச மெயில் கணக்கு.
3) ஈமெயில் விலாசத்தினை திருடி மெயில் அனுப்புவது.
4) பெயரினை மறைத்து ஈமெயில் அனுப்புவது.
மைனர் குழந்தைகள் கணினி வளையத்தில் என்ன காரணத்திற்காக விழுகின்றனர்:
1) அவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாட்டில் அளவில்லா மகிழ்ச்சி அடைவது. அதனை பெற்றோரும் ஆதரிப்பது,
'என் குழந்தை கணினியில் மிகவும் கெட்டிக்காரப் பிள்ளை என்ற தவறான மகிழ்ச்சியில் பெருமைப்படுவது.
2) வீட்டில் அன்பைப் பெறமுடியாமல் அடுத்தவர்களின் ஆதரவினை நாடுவது.
3) 'டேட்டிங்' என்ற மெய்மறந்த கானல் நீரான காதல் சந்திப்பினை வெளியே ஏற்படுத்திக் கொள்வது. இதில் சில ஆண் குழந்தைகளுக்கு ஆசை காட்டி ஹோமோ புணர்ச்சியில் ஈடுபடும் கும்பலும் உள்ளது என்று அறியாத மைனர் பையன்களும் அடங்குவர்.
ஆகவே பெற்றோர்கள், உறவினர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை மிகுந்த பராமரிப்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
"காதல் ஒரு கானல் நீர், 'கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு எப்போதும் வரும்', நல்ல குணங்கள் உள்ள மாப்பிளை வரும் வரை காத்திரு என்று காதல் கனவு உலகத்தில் தவழும் பெண்களுக்கு புத்திமதி சொல்ல தவறக்கூடாது.
பெற்றோர்களும் கணினி பற்றிய கல்விகளை சிறிதளவாவது தெரிந்திருப்பது நல்லது. அப்போதுதான் குழந்தைகள்
கணினியில் என்னதான் மணிக் கணக்கில் செய்கின்றனர் என அறிய ஏதுவாகும். அதற்கு சமுதாய இயக்கங்கள்
பெற்றோர்களுக்கு கணினி விழிப்புணர்வு நிகழ்சிகள் செய்வார்களா? ஏனன்றால் கல்வி அறிவிற்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவைதானே!

கடந்த 7.2.2012 தமிழகத்தினை மட்டுமல்ல, மாறாக அகில இந்தியாவினையே உலுக்கிய சம்பவம் ஒன்று சிங்கார சென்னையில் பாரி முனையிலுள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் நடந்தது. ஹிந்தி வகுப்பில் சரியாக கவனம்
செலுத்தாத முகமது இஸ்மாயில் என்ற ஒன்பதாவது படிக்கும் மாணவனை ஹிந்தி ஆசிரியை உமா மகேஸ்வரி கண்டித்ததால் மாணவன் இஸ்மாயில் மன உளைச்சல் அடைந்து கொடூரமாக ஆசிரியைனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.
இஸ்மாயிலைப் பற்றி அறிந்த சிலர் சொல்லும்போது 'இஸ்மாயில் மிகவும் சாந்தமானவன், அமைதியானவன், அவன் ஏன் இவ்வாறு கொடும் செயலைச் செய்தான் என்பது புதிராக இருக்கிறது' என்கின்றனர்.
மண்ணில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே.ஆனால் குற்றங்களில் ஈடுபடுவதிற்கு முக்கிய காராணம் சூழ் நிலையே என்றால் மிகையாகாது. அதிக செல்லம், கையில் தேவைக்கு அதிகமான பணம் புரளுதல்,
பெற்றோர் கண்காணிப்பு குறைதல், தீய நண்பர்களின் நட்பு, சில பொழுது போக்கு சினிமாவில் வரும் வன்முறை காட்சிகளின் பாதிப்பு, பாலின உணர்சியினைத் தூண்டும் ஆபாச புத்தகங்கள், படங்கள் போன்றவை செல்வமுள்ள குழந்தைகளை கெடுக்கின்றன.
ஏழைக் குழந்தைகளைப் பாதிப்பது, வசதி குறைவான வீடு, நெருக்கமான குடியிருப்பு, பொழுது போக்க வசதியான விளையாட்டு திடல்கள் மற்றும் படிப்பதிற்கு வசதியான நூலகங்கள் இல்லாதது போன்றவையாகும். நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் சீக்கிரமே மது, போதைக்கு அடிமையாகுதல், சூதாட்டம், விபசாராம், வன்முறைகளை சீக்கிரமே கற்றுக் கொண்டு சமயம் வரும்போது அரங்கேற்றவும் செய்கிறார்கள்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நன்நடத்தையினை முக்கியமாக போதிக்க வேண்டும்.
மாணவர்கள் பாடத்தில கவனம் செலுத்தவில்லை என்றால் குற்றம் கண்டு பிடிப்பதே முக்கியமான செயலாக கருதாது, அவர்கள் கவனம் செலுத்தாததிற்கு முக்கிய காரணம் என்னவென்று அறிந்து அவர்களை நல்வழிப் படுத்த
மனோதத்துவ ஆசிரியர்களை பள்ளியில் நியமிக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் மனோதத்துவ மருத்துவரின் உதவியினை நாட வேண்டும். எப்படி தரிசு நிலத்தினை பண்படுத்தி விளச்சலினை அதிகரிக்க விவசாய அதிகாரிகளை நடுகிறோமோ அதே போன்று மேல்கூறிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
மேலை நாடுகளில் அரசு நிறுவனங்களும், சிட்டி கவுன்சிலும், தொண்டு நிறுவனமும் ஏழை மக்கள் நெருக்கமாக
வாழும் இடங்களில் 'பாய்ஸ் கிளப்' என்ற சிறார்கள் பொழுது போக்கு தளங்களை ஏற்படுத்தி அவர்களை பள்ளி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் கவனத்தினை திருப்புகிறார்கள். சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் அதுபோன்ற 'பாய்ஸ் கிளப்' இருக்கின்றன. ஆனால் அவை அவ்வளவு சிறப்பாக செயல் படுவதில்லை. காரணம் அதற்கு வழங்கப்படும் நிதி குறைந்த அளவே! அதுபோன்ற பாய்ஸ் கிளப்களை பெரும் நகரம், சிறு நகரங்களில் ஏற்படுத்தி அங்கே மனோவியல் படித்த ஆசிரியர்களின் கண்காணிப்பில் செயல் பட செய்யலாம்.
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் ராணுவ சேவை கட்டாயமாக்கப் படுகிறது. அதுபோன்று சமூக சேவை மாணவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உதாரணத்திற்கு மாணவனை என்.சி.சி, என்.எஸ்.எஸ், டிராபிக் வார்டன், ஸ்கௌட், யூத் கிளப், பர்ஸ்ட் எய்ட் கிளப் போன்ற சேவைகளில் பழக்கலாம். ஒரு மாடு தண்ணீர் குடிக்கவில்லைஎன்றால் அந்த மாட்டினை தாரை வைத்துக் குத்தி ரத்தக் காயமாக்கது, அந்த மாடு தாகத்தினை அறிந்து தண்ணீர் காட்டுகின்றதுபோல படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை மன உளைச்சல் உண்டாக்கினால் அவன் சாதுவானாலும், அது மிரண்டால் காடு கொள்ளதுபோல்தான் செயின்ட் மேரிஸ் பள்ளியில் நடந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
ஆகவே குழந்தைகள் களி மண்ணைப் போன்றவர்கள். குயவர்கள் தான் அந்த களி மண்ணை நன் பண்டங்களாக உருவாக்க வேண்டும். சிறார்களை பெற்றால் மற்றும் போதாது அவர்களை பேணிக் காப்பது பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் பணியென்பது இன்றைய நவீன உலகின் தலையாய கடைமைதானே!