Wednesday 29 December, 2021

அறிவோம் அகிலத்தின் அரிதான அதிசயங்கள்!

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

நம்மை சுற்றி பவனி வரும் பல்வேறு உயிரினங்கள், பறவைகள் மற்றும் உலகின் அதிசயங்களை பற்றிய குழப்பமான செய்திகளை பற்றிய உண்மை நிலை குறித்து இந்த கட்டுரை எழுதுவதுமூலம் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முயன்றுள்ளேன். 1) அகிலத்தில் இன்றைய 775 கோடி மக்கள் தான் அதிகமானோர் என்று எண்ணலாம். உலகில் 50,000 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு நாகரீகங்களில் வாழ்ந்ததாக கூறப் படுகிறது. காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் கொலம்பியா, மெக்சிகோ, பொலிவியா மற்றும் குவாட்ரமாலா நாடுகளில் வாழ்ந்த மாயா நாகரிகமும், கம்போடியா ஆங்கர் அடங்கிய கெமர்நாகரிகமும், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளடக்கிய இண்டஸ் நதியோரம் அமைந்திருந்த ஹரப்பான் நாகரிகமும், ஈஸ்டர் தீவினை ஒட்டியுள்ள பாலினீசியன் நாகரீகம், துருக்கியினை மையமாக வைத்த கடால்ஹோயுக் நாகரீகம், அமெரிக்கா இலினோஸ் சுற்றியிருந்த மிஸிஸிப்பி நாகரீகம், லெமுரியா இந்திய பெருங்கடலினை மையமாக கொண்ட நாகரீகம் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவைகளில் எவ்வளவு மக்கள் வாழ்ந்தார்கள் என்று இன்னமும் கணக்கிடப் படவில்லை. சென்சஸ் என்ற மக்களின் கணக்கெடுப்பு பழமையான எகிப்து, ரோமன் காலங்களில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தான் செயல்பட்டது. அமெரிக்க வாஷிங்டன் நகரில் உள்ள மக்கள் கணக்கெடுப்பு குறிப்பின்படி மக்கள் தொகை கடந்த 10000 ஆண்டுகளில் உள்ளதுதான் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு உள்ள மக்கள் தொகைப்பற்றிய குறிப்பேடு எதுவுமில்லை ஆகவே தற்போதைய 770 கோடி மக்கள் தொகைதான் பெரியது என்று ஆணித்தரமாக சொல்லமுடியாது.

            2) உலகிலேயே அதிக உயரம் கொண்ட மலை எது என்று பாடப்புத்தகத்தில், மற்றும் பூலோக வரை படத்தில் இமயமலை என்று கூறுவர். ஆனால் அது உண்மையில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?

சாதாரணமாக மலையின் உயரத்தினை அடிபாகத்திலிருந்துதான் கணக்கிடுவர். அல்லது கிரகங்களிலிருந்து கணக்கிடுவர். ஆனால் இரண்டிலும் அது தவறானது. ஆனால் நிச்சயமாக தரையிலிருந்து இமயமலை 8850 மீட்டர் கொண்டதாகவும் உயரமாகவும் உள்ளது. உண்மையில் அமெரிக்காவின் ஹவாயிலுள்ள ‘மவுண்ட் கியா’ தான் மிகவும் உயரமாக 10203 மீட்டர் கொண்டதாகும். அதில் 4205 மீட்டர் மலை மட்டும் தான் கடலுக்கு மேலே இருக்கின்றது. மீதமுள்ள உயரம் கடலுக்கு அடியிலே இருக்கின்றது. அதேபோலவே  நாமெல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சஹாரா பாலைவனம் தான் உலகிலேயே பெரியது அது 8.6 மில்லியன் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என்று சொல்வோம். அது அமெரிக்காவின் நிலப் பரப்பிற்கு சமமானது என்றும் சொல்வோம். ஆனால்  ஆர்க்டிக் என்ற உலகின் வட பாகமும் பனிப்பாறை சூழ்ந்ததுமானதும் கிட்டத்தட்ட 1.40 கோடி சுற்றளவு கொண்டதும், பூமியின் தெற்குப் பாகத்தில் உள்ள அண்டார்டிகா 1.42 கோடி நிலப் பரப்பு  கொண்டதும், ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையாக இருப்பதுமே பெரிய பாலை வனமாகவும், மிகக் குறைந்த மழை பெய்யும் இடமாக கருதப் படுகிறது.

            3) 1800 ஆண்டிலிருந்து நமது மூளையினை 10 சதவீத பயனுள்ளதாகத்தான் நினைத்துள்ளோம். ஆனால் அது உண்மையில்லை. அந்த 10 சதவீத பகுதியும் நியூரான் என்ற அமைப்பினை கொண்டதாகும். அது மின்சார உற்பத்தி கொண்டதாகும். அதன் மூலம் மூளையின் எந்த பகுதி பயன் பாட்டிற்கு உள்ளது என்பதினை கண்டறிவதிக்காகும். உதாரணத்திற்கு கை தட்டுதல், கனவு காணுதல், விடைகள் கண்டு பிடித்தல் போன்றவையாகும். உண்மையில் கிளையில் செல்ஸ்(glial cells) நரம்புகளை இயக்கும் தகுதிகளை கொண்டதாகும். இன்று விஞ்ஞானிகள் மூளையின் பல்வேறு செயல்பாடுகளான சுவாசிக்கின்றது, உடலை சரியான தட்ப வெப்ப நிலைக்கு வைப்பது, நடப்பது, பல்வேறு விஷயங்களை ஞாபகத்தில் வைப்பது, படங்களை நினைவில் வைப்பது போன்றவற்றை செய்கின்றது என்றும் அறிகின்றனர். ஆனால் மனிதன் மூளையின் எல்லா பகுதியினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. அவ்வாறு செய்தால் மனிதன் ஞாபக சக்தியினை இழந்து வலிப்பு தாக்கங்கள் ஏற்படும். ஆகவே தான் அறிவாளிகள் மூளையின் அனைத்து பகுதியினையும் பயன்படுத்துவதில்லை. நியூரான் என்ற சாம்பல் நிற பகுதி உண்மையில் சாம்பல் நிறத்திலில்லை, மாறாக சிகப்பு நிறத்திலும், மூளையின் மற்ற பகுதி சாம்பல் நிறத்திலும் தான் உள்ளது.

            4) நாம் பனி மழை கட்டிகளை பார்த்திருக்கிறோம். அவைகள் பார்க்கும் போதும், தரையில் விழும்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று தான் நினைக்கின்றோம். அதனை ஆராய அமரிக்காவினைச் சார்ந்த போட்டோ கிராபர் வில்சன் பென்டலே 1885ம் ஆண்டு  டெலஸ்க்கோப் பொருத்தி உயரமான இடத்தில் இருந்து சுமார் 5000 பனி மழைக் கட்டிகளை  ஆராய்ந்துள்ளார். அப்போது தான் வானத்தில் இருந்து விழும் பனிக் கட்டிகள் பல உருவத்துடன் இருப்பது. அதனைத் தொடர்ந்து தலை முடி, இரட்டையர் ஆகியோரை ஆராய்ந்தபோது ஒருவருடைய தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமானதும், இரட்டையர் என்று சொல்லும் இருவரிடையே பல்வேறு வேற்றுமை இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

            5) உருளைக் கிழங்கு தோலை சீவி சமைப்பதினை பார்த்திருக்கின்றோம். ஆனால் அப்படி சமைத்த உருளைக்கிழங்கின் சத்து குழம்பில் கரைந்து விடுகின்றதாம். தோலில் விட்டமின் என்ற புரத சத்து உள்ளதாம். அந்த உருளைக்கிழங்கு தோல் தான் உருளைக் கிழங்கின் சத்து வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுதாம். வெளிநாட்டவர் அதனை நீராவியில் அவித்து தோலுடன் சாப்பிடுவதினை பார்த்து நமக்கு எல்லாம் சிரிப்பு வரும். அதேபோன்று தான் ஆப்பிளை தோல் சீவி சாப்பிடுவோம். ஆனால் அதனில் சத்தில்லை. சென்னையில் விற்கும் ஆப்பிளில் மெழுகு தடவி இருப்பதால் அவ்வாறு சில சமயங்களில் செய்கிறோம். அப்படி இருந்தால் கத்தியினால் தோலின் மேலே இருக்கும் மெழுகினை சுரண்டி விட்டு தோலுடன் சாப்பிடலாம். எனது தந்தை மலேசியா பெட்டாலிங் ஜெயாவின் மொத்த மளிகைக்கடை வைத்திருந்தார்கள். நான் அங்கு 1979ம் ஆண்டு சென்றபோது எனக்கு ஒரு வாழைப் பழத்தினை கொடுத்துவிட்டு அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டார்கள். நான் பழத்தோலை எடுத்துவிட்டு சாப்பிட்டேன். ஆனால் என் தந்தை தோலுடன் சாப்பிட்டால் செரிமானமாகும் என்று தோலுடன் சாப்பிட்டார்கள்..  அதனால் நம் உணவு செரிமானமாகும், உடல் கொழுப்பு சத்து குறையும், சில விஞ்ஞானிகள் சில சமயத்தில் இதய நோய் வராமலும் காப்பற்றும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

            6) நாமெல்லாம் நினைத்துள்ளோம் வெளியில் செல்லும்போது உடலை பாதுகாக்க கம்பளி துணிகளை அணிந்து சென்றால் சளி பிடிக்காது என்று. உண்மையில் சளியானது குளிரால் வருவதல்ல மாறாக கிருமிகளால் வருவது என்பது தான் உண்மை. வைரஸ் கிருமிகள் கூட்டு வாழ்க்கை வாழக் கூடியது. உடலில் உள்ள செல்களுடன் கலந்து விரிவடைகிறது. ஆனால் குளிர் காலங்களில் ஏன் கிருமிகள் பரவுகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் நீங்கள் குளிர் காலங்களில் வீட்டுக்குள்ளேதான் இருக்கின்ரீர்கள். அதனால் அடுத்தவர்களுடைய கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புண்டு. குளிர் காலங்களில் வெளிப்புற பழக்க வழக்கங்களை மற்றும் உடற்பயிற்சிகளை செய்யாது இருப்பதினால் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதினால் உங்களுக்கு சளி பிடிக்கின்றது.

            7) நமக்கெல்லாம் தெரியும் காய் கறிகள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும், அதுவும் காரட் சாப்பிட்டால் அது வைட்டமின் ஏ சத்துள்ளது, நோய்களை எதிர்க்கும் சக்தியும், பார்வை சக்தியும் கூடுதலாக இருக்கும் என்றும். ஆனால் காரட் சாப்பிட்டால் இரவில் நன்றாக தெரியும் என்ற ஒரு நம்பிக்கை ஆங்கிலேயரிடம் இருந்தது. இது உண்மையா என்று ஆஸ்திரேலியா நிபுணர் டாக்டர் அன்றோ ரோச்போர்ட ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக  பத்து நாட்களுக்கு 15 கிலோ காரட் சாப்பிட்டார். பின்பு லைட் வெளிச்சத்தினை மங்கலாக்கி பார்த்தார். ஆனால் ஒளி மங்கியதாகவே இருந்ததாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்து ராயல் விமானப் படையின் விமானங்கள் அதிக அளவில் ஜெர்மன் விமானப் படையால் தாக்குதல் உண்டானது. அதனை கண்டு அதிர்ந்த இங்கிலாந்து விமானப் படையினரிடையே ஒரு வதந்தி பரப்பினர். காரட் அதிக அளவில் சாப்பிட்டால் கண் பார்வை இரவில் பளிச்சென்று இருக்கும் அதன் மூலம் எதிரி விமானங்களை கண்டு வீழ்த்தலாம் என்று. ஆகவே  வீரர்களுக்கு உணவுடன் காரட் அதிக அளவில் கொடுக்கப் பட்டது. என்ன ஆச்சரியம் இங்கிலாந்து வீரர்கள் ஜெர்மன் விமானங்களை இரவில் கண்டறிந்து சுட்டு வீழ்த்தினர். ஆகவே சிறியளவு காரட் எவ்வாறெல்லாம் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரும் உதவி செய்தது ஆனால் அது வதந்தியே என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது டாக்டர் அன்றோ ரோச்போர்ட் மூலம் வெளியானது.       

            8) நீங்கள் கார்ட்டூன் படம் பார்க்கும் போது அவ்வளவு பெரிய யானை அருகில் எலி வந்தால் துள்ளி குதித்து ஓடுவதினை. சிலர் சொல்வார்கள் எலியானது யானையின் தும்பிக்கையில் ஏறி அதற்கு தொந்தரவு செய்யும் என்று. அப்படி என்றால் யானை மற்ற சிறிய மிருகங்களை எல்லாம் பார்த்து மிரளும். ஆனால் யானை அதுபோன்ற சிறிய மிருகங்களை தனது தும்பிக்கையின் பிளிறும் சத்தத்தின் மூலமே விரட்டிவிடும். யானை சிங்கங்கள் போன்ற  பெரிய மிருகங்கள் வரும்போது அதனை தும்பிக்கையால் மற்றும் தந்தத்தால் குத்தி விரட்டும் திறன் கொண்டதாம். உண்மையில் யானைக்கு குறைந்த தூரத்தில் உள்ள பொருட்களை மட்டுமே பார்க்க முடியுமாம்.

யானையின் காலடியில் எலி படும்போது அதனை பார்க்கும் வரை பயப்படாதாம். பார்த்து விட்டால் ஓய்வு கொண்டு விடுமாம். அதற்காக ஒரு சோதனை அமெரிக்க தொலைக் காட்சியில் நடத்தப் பட்டதாம். யானையின் காய்ந்த சாணத்தில் ஒரு எலியினை மறைத்து வைத்தார்களாம். யானையினை அதன் அருகில் வரும்போது எலியினை ஓடவிட்டார்களாம். யானை எலியைத்தாண்டி அமைதியாக சென்றதாம். உண்மையில் யானை பயப்படும் சிறிய சந்து தேனீ தானாம். ஏனென்றால் யானையின் கண் சுற்றி கனமான தோல் இருந்தாலும் தேனீ கடிக்கும் போது வலி தாங்க முடியாதாம். ஆகவே கென்யா நாட்டில் வயல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க ஒலி பெருக்கியில் தேனீ இசையினை ஒலி எழுப்புவார்களாம். அதற்கு பெயர் 'apiphobia' என்று அழைக்கப் படும். பல விவசாயிகள் யானைக் கூட்டத்தினை விரட்ட தேன் கூடுகளை வளர்ப்பாகலாம்.

            9) அதேபோன்று தான் வவ்வாலுக்கு கண் தெரியாது என்று சொல்வார்கள். உண்மையில் வவ்வால் கண் பார்வை அதிக சக்தியினை கொண்டது. தனது இரையினை இரவில் தான் தேடும். ஆகவே அதற்கு நாமாக வைத்த பெயர் கண் தெரியாது என்பது. வவ்வாலுக்கு கடலுக்கு அடியில் உள்ள ஒலியினை 'echolocation' என்று அழைக்கப் படும் மூலம் எவ்வாறு ஆராய்ச்சி செய்பவர்கள் கண்டு பிடிக்கின்றார்களோ அதேபோன்று இரவில் தன் அருகில் வரும் பூச்சிகளை எளிதாக கண்டு பிடித்து இரவில் வேட்டையாடுமாம். தனது வேட்டையினை முடித்துவிட்டு தனது புகலிடம் எது என்று துல்லிதமாக அறிந்து திரும்பி வருமாம்.

            நமக்கெல்லாம் பிரான்ஸ் நாட்டின் 18ம் நூற்றாண்டின் பேரரசர் நெப்போலியன் மிகவும் குட்டையானவர் என்று அறிமுகப் படுத்தி உள்ளனர். ஆனால் அது உண்மையில்லை. பிரான்ஸ் அளவுகோல் பிரிட்டிஷ் அளவுகோலை விட பெரியது. நெப்போலியன் உயரம் 5 பீட் 2 இஞ்சஸ் ஆகும் அது பிரிட்டிஷ் அளவு 168 செ.மீ க்கு (5பீட் 6 இஞ்சஸ்) சமமாகுமாம். அது சாதாரண குடிமகன் உயரம் தானாம். பின் ஏன் நெப்போலியனை அவ்வாறு அழைத்தார்கள் என்றால், அவர் பிரான்ஸ் தேச மன்னர் மிகவும் வேகமற்றவர் ஆதனால் மற்ற நாடுகள் படையெடுப்பிற்கு ஆளாக நேரிட்டது மட்டுமல்லாமல், அங்கே பஞ்சமும், வறுமையும் ஏற்பட்டதாம். அப்போது நெப்போலியன் ஒரு சாதாரண 'Petit Corporal' படை வீரராகத் தான் இருந்தாராம். மக்கள் புரட்சியினை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பிரான்ஸ் தேச அரியணையில் ஏறி பக்கத்து நாடுகளை வெல்லக் கூடிய சக்ரவர்த்தியாக உயர்ந்தாராம். பிரான்ஸ் மொழியில் Petit என்றால் அன்பானவர் என்று அழைப்பார்களாம். அவர் அனைத்து படை வீரர்களிடமும் அன்பாகவும், சகோதரர் போல நடந்து கொண்டாராம். ஆகவே அவரை அந்த புனைப் பெயரில் அழைத்தார்களாம். இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது. அவர் 5 அடி 6 அங்குலம் இருந்தாலும் அவரை பாதுகாக்கும் குறிப்பிட்ட வீரர்கள் 6 அடி உயரம் கொண்டவர்களாம். ஆகவே நெப்போலியனை எப்போதும் குதிரையில் அமர்ந்திருப்பது போலவும், அவரது பாதுகாப்பு படையினர் தரையில் வருவதுபோன்ற படங்கள் இடம் பெற்றதாம்.

            ஆகவே காலங்காலமாக வந்த தவறான தகவல்களை நாம்  புரிந்து கொள்வதுடன் நமது வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

           

Friday 26 November, 2021

மீலாதுநபி முக்கியத்துவ உறுதிமொழி

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆகிய உலகில் சிறந்த மனோதத்துவ நிபுணரும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும், பத்ம விருது பெற்றவருமான மதிப்புமிகு பேராசிரியர் பி.ராமகிருஷ்ண ராவ் அவர்கள் கூறியிருப்பதாவது: ரசூலுல்லாஹ் முகமது அவர்கள் பற்றிய முழு உண்மையும் மக்களுக்கு இன்னமும் அறிவதில்லை. அவர் சிறந்த போர் வீரர், நாணயமான வியாபாரி, சிறந்த நாட்டின் நலம் பேனிக் காத்தவர், மக்களைக் கவரும் பேச்சாளர், சீர்திருத்தவாதி, அனாதைகளுக்கு அடைக்கலம், அடிமைகளை காத்தவர், உலகிலேயே முதல் பெண் விடுதலைக்குக் குரல் எழுப்பியவர், நெறி தவறா நீதிமான், உண்மையிலே போற்றத்தக்க இறை தூதர் என்று வானளாவிய புகழ் சூடியுள்ளதினை பார்க்கும் போது ஒரு ஹிந்து மதத்தினை தழுவியவர், கல்விமான், உலக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் பல்வேறு தூதர்களை ஆராய்ந்து அதில் முகமது ரசூலுல்லாஹ் தான் சிறந்தவர் என்று கூறியிருப்பது சால சிறந்தது என்று நீங்கள் கருதவில்லையா?

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்றும்  விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?

Friday 12 November, 2021

அமைதியான நதியினிலே ஓடம்!

 

              

           (டாக்டர் ஏ.பீ. முகமதுஅலி,ஐ.பீ.எஸ்.(ஓ) 

வாழ்க்கை ஓர் ஓடமாகும். அந்த ஓடம் கடலோ அல்லது ஆரோ அமைதியான அலைகள் இருந்தால் தான் படகோட்டிகள் சீராக, சிறப்பாக தன்னுடைய இலக்கினை நோக்கி செலுத்தமுடியும். அதற்கு மாறாக கொந்தளித்தால் படகும் கவிழும், அவைகளை செலுத்துபவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும். அந்த அமைதியினைத் தருவது தான் இஸ்லாமிய மார்க்கம். பலருக்கு பழமும், பாலும் இருக்கும், ஆனால் தூக்கம் வராது. சிலர் மாட மாளிகைகளில் வாசிப்பர் ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தூக்கம் வராது. சிலர் ரயிலில் கூபே என்ற இரண்டு இருக்கை கொண்டதினை ரிசர்வ் செய்து பயணம் செய்வர், ஆனால் ரயில் பயணத்தில் வரும் கடக், கடக் என்ற சப்தம் அவர்களை தூங்க விடாது. சிலர் அமைதிக்காக கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வர். ஆனால் அங்கேயும் கவலை தூங்க விடாது. தமிழ்நாட்டின் பிரபல சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்ததது போல மன கொந்தளிப்பில் தவறானமுடிவினை எடுத்து விடுவர்... அப்படிப் பட்ட நிம்மதியற்ற, கரையான் அரிப்பு கவலைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது தான் இஸ்லாமிய மார்க்கம் என்றால் மிகையாகாது.

            சிலர் நிம்மதி தேடி தியானம் செய்வதிற்காக இமயமலை குகைகளை நோக்கி படையெடுப்பர். அங்கேயும் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியாது. அந்த நிம்மதி பொருள் விரையும் செய்யாத வகையில் உங்கள் இருப்பிடத்திலேயே இருக்கின்றது. அது தான் தொழுகை. தொழுகை நேர்மறை கொள்கைகளையும், படைத்த இறைவனுக்கு நன்றி மறவாமல் இருப்பதினையும், இறக்க குணத்தினையும், தன்னம்பிக்கையும், சகோதர பாசத்தினையும், உள்-புற சுத்தத்தினையும் தருகின்றது. தொழுவது மூலம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் ஞாபக சக்தியினையும் திரும்பப் பெற முடியும். சிறைகளில் கூட தொழுகை நடத்துவதினை நானும், நீங்களும், பார்த்திருக்கின்றோம். சிறைவாசிகளின் கரடு, முரடான முரட்டு வன்முறை குணங்கத்தினை தொழுகை குறைகின்றது. வேலை தளங்களில் தொழுகையில் ஈடுபடுவதினால் உற்பத்தி அதிகப் படுத்தமுடியும், கல்வி நிலையங்களில் தொழுகைக்கு வழிவகை செய்வதால் மாணவர்கள் கவனம் சிந்தாமல், சிதறாமல்  சிறந்த கல்வியிலும், மெச்சத்தக்க நன் நடத்தையினும் காண முடியும் என்று ஆய்வு குருப்புகள் கூறுகின்றன.

            அமெரிக்க ஹார்வோர்ட் பல்கலைகழக ‘நிரோசயின்ஸ்’ ஆய்வு குறிப்பில் மனிதன் தியானம் செய்வதால் மூளையின் இயக்கத்தினை ஓய்விலிருந்து தட்டி எழுப்பி நினைவாற்றலை அதிகரிக்கும் என்று கூறுகின்றது. அவ்வாறு செய்வதற்கு எட்டு வாரம் போதும் என்றும் கூறுகின்றது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐவேளையும், நடு நிசியில் தொழும் தகஜத் அமைதியாக நின்று மனதினை அலை பாயவிடாது, படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் போது மூளை செயல்பாடு இன்னும் அதிகரிக்கின்றது.  யோகாவிற்கு தனி உடை, விரிப்பு, பயிற்சியாளர் தேடி அலைய வேண்டும். ஆனால் சுத்தமான இடம் எங்கே இருக்கின்றதோ அங்கே உடுத்திய துணியுடன் தொழும் பாக்கியம் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கின்றது. கண்காணாத இடங்களில் தன் குடும்பத்திற்குக் கூட தெரியாத  இடத்தில் தியானத்தில் ஈடுபடுவது போல தொழுகையில் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் குடும்பப் பொறுப்பினையும் கவனித்துவிட்டு தொழும் நெகிழ்வுத்தன்மை வேறு எந்த வழிபாட்டிலும் இல்லை.

            யோகா, தியானம் ஆகியவைகளில் ஈடுபடுபவர்கள் ஒரு ஆடியோ கேஸட்டினை இயக்கிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு செய்வதினை பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் விளக்கம் கேட்கும்போது இசை மூளையின் செயல் திறனை தட்டி எழுப்புகின்றது என்று கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தொழும்போது கிபிலாவினை நோக்கி அல்லாஹ்விற்காக தொழுகின்றேன் என்று 'அல்லாஹு அக்பர்', இறைவன் பெரியவன் என்று சொல்லி இமாம்கள் குரான் ஆயத்துக்களை ஓதும் போது காது கொடுத்து கேட்டும், அடக்கம் ஒடுக்கத்துடன், அருகில் நிற்பவர் அந்தஸ்து பாராது, தன் பதவி பகட்டுகள் மறந்து ஓரிறைக் கொள்கையுடனும், மனதினை ஓர் நிலைப் படுத்தியும் தொழும்  போது மெய் சிலிர்ப்பு இயற்கையாகவே ஏற்படும்.

            சிலர் ரயிலிலோ, விமான பயணத்திலோ கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு பயணம் முடியும் வரை படிப்பார்கள் என்பதினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளிடம், புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி ஆய்வுகள் நடத்தப் பட்டன. அவர்கள் தங்கள் கவலை, நோய்களை மறந்து படிப்பதினை கண்டார்களாம். பள்ளிவாசல்களில், குரான், ஹதீஸ் சம்பந்தமான புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பதினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதனை எடுத்து ஓதுவதோ, படித்து பயன் பெருவரோ ஒரு சிலர் தான். தொழுகைக்கு முன்பே பள்ளிகளுக்கு வருபவர் அருகில் இருப்பவரிடம் வெளி விவகாரங்களை நிசப்தத்தினை கெடுக்கும் விதமாக சப்தம் போட்டு பேசுவதினையும், சிலர் செல்போனில் பல விஷயங்களை தேடுவதிலும், அடுத்தவர் கவனத்தினை திருப்புவதிலும் ஈடுபடுவதினை பார்த்திருப்பீர்கள். அதற்கு பதிலாக பள்ளியில் வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், அதன் மூலம் இறை தொழுகைக்கு வந்திருக்கின்றோம் என்று உணர்ந்து செயலாற்றலாம். பஜர் தொழுகைக்குப் பின்பு இமாம் குரான் ஆயத்துகளை ஓதி அதற்கான விளக்கத்தினை சொல்வது 'கம்யூனிட்டி ரீடிங்' என்று கூறப்படுகின்றது. நீங்கள் கூட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல புத்தகத்தினில் கண்டுள்ள விஷயங்களையோ அல்லது செய்தித் தாள்களில் வந்துள்ள செய்திகளையே சொல்லிக் காட்டுவது மூலம் தங்களது கவனங்கள் வேறு திசைகளில் செல்லாது பார்த்துக் கொள்வதுடன், மார்க்க மற்றும் பொது அறிவுவினை புகுத்த முடியும். இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க அறிஞர் டாக்டர் அண்ட்டிலஸ்(Antyllus) 'படிப்பது  உடலுக்கு உற்சாகம் தரும் டானிக்' என்று கூறியுள்ளார். நான் இளையாங்குடி பள்ளியில் பயின்றபோது பிரேயர் முடிந்து ஒரு அன்றைய செய்தி தாளில் வந்துள்ள தலைப்பு செய்திகளை படிக்க மற்ற மாணவர் கேட்கும் முறையினை மேற்கொண்டார்கள், அதன் மூலம் மாணவர்கள் நாட்டில் நடந்த செய்திகளை அறிந்து கொள்வதோடு பொது  அறிவினையும் அதிகப் படுத்தினர். 2007ல் லண்டனில் நடத்திய ஆய்வின்படி சமூக வாசிப்பின் மூலம் அதனில் ஈடுபாடு கொள்ளும் பேரியக்கமாக மாறும் என்று கூறுகின்றது. அதனையே உங்கள் வீடுகளிலும் செயல் படுத்தினால் சால சிறந்த செயலாகுமல்லவா?

                        இந்தியாவில் ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகமன் கூறும் விதமாக 'நமஸ்தே' என்று சொல்வதினை பார்த்திருக்கின்றோம், தமிழர்கள் 'வணக்கம்' என்றும் கூறுகின்றோம். ஜப்பானியர் ஒருவருக்கொருவர் 'தலை குனிந்து' முகமன் கூறுவதினையும், மேலை நாட்டவர் கால பருவநிலைக்கு ஏற்ப 'good morning, afternoon, evening, night' கூறுவதனை பார்க்கின்றோம். அந்த முகமென் எல்லாம் ஒருவருக்கொருவருடைய எந்த நெருக்கத்தினையும் ஏற்படுத்தாது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் 'மலகாத்' என்ற அரவணைப்பு ஆங்கிலத்தில் cuddling முறையில் ஈடுபடுவதினால் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம், பரிவு, நட்பு ஆகியவற்றினை பரிமாறிக்கொள்ள முடியும் என்று BBC நடத்திய Touch test ல் கூறுகின்றது. 12th Nov 2021 ல் Gloscow வில் நடந்த உலக தலைவர்கள் சுற்றுப் புற சூழல் சம்பந்தமான மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் கூட எப்போதும் இரு கை கூப்பி நமஸ்தே என்று சொல்பவர் இந்தத் தடவை தலைவர்களை கட்டி அணைப்பதினை காணொளியில் பார்த்திருப்பீர்கள்.

            கொரானா காலத்தில் தனிமைப் படுத்தப் பட்ட 112 நாடுகளைச் சார்ந்த 40,000 நோயாளிகளைக் கண்டு ஆய்வு நடத்தினார்களாம். தனிமைப் படுத்த காலத்தில் தங்களை உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் கூட வந்து பார்க்காதது மனதளவில் பாதிக்கப் பட்டார்களாம். பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர், மனோதத்துவ நிபுணர் James Cordova, 'We are born cuddlers' நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறந்தவர் தான் என்று கூறி அதற்கு உதாரணமாக தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை எப்படி ஒட்டி இருக்கின்றது என்ற உதாரணத்தை கூறுகின்றார்.

            பல்காரியா நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தின் immunologist நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் Velikova , 'அரவணைப்பு மூலம் ஒருவருடைய ஹார்மோன் அதிகரித்து, Cortosol என்ற சுரப்பி ரத்த ஓட்டத்தினை சீராக்கி, நரம்பின் இயக்கத்தினை முடுக்கி விடுவதுடன், ஒருவரை சோகத்திலிருந்தும், நிம்மதியற்ற தூக்கத்திலீசுந்தும், படபடப்பிலிருந்தும் விடுபடச் செய்கிறது' என்று கூறுகிறார். அதனையேதான் 2018ல் நடத்தப்பட்ட 'Proceedings of National Academy of Science' ஆய்வில் அரவணைப்பு ஒருவரை அமைதிப் படுத்துவதுடன், வலிநிவாரணியாகவும், ஒருவருக்கு பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தும்' என்றும் கூறுகிறார். அதனையே நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தோர், உற்றாரிடம் காட்டுங்கள் அவர்களிடம் பெரிய மாற்றத்தினை காண்பீர்கள் என்று பேராசிரியர் Velikova கூறுகிறார். சிலர் வளர்ப்புப் பிராணிகள் அமைதியின்றி குறைக்கும்போது அவைகளை தடவிக் கொடுத்தவுடன் அமைதியாகி விடுவதினை பார்த்திருப்பீர்கள்.

            ஆகவே அமைதியான தொழுகை, அறிவான புத்தகங்கள், திருக்குரான், அன்பான அரவணைப்பு மனிதனுக்கு ஆறுதல், அமைதி, பாசம், பரிவு, நோயிலிருந்து ஆறுதல் பெறுதல், சஞ்சலமான மனது ஆகியவற்றிலிருந்து போற்றத்தக்க மாற்றத்தினை பெற்று வாழ்க்கை ஓட்டத்தினை அமைதியாக கரடு, முரடு பயணத்திலிருந்து சீராக செலுத்தலாம் என்றால் சரிதானே!

           

           

           

Tuesday 19 October, 2021

வாயால் வடை சுடும் வலைத் தளங்கள்

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

 வலைத்தளங்கள் அறிவை விரிவு செய்யவும், புதிய தொடர்புகளை உருவாக்கி மனித நேசம் வளர்க்கவும், ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிற்காகவும், சமூக பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமாக குரல் கொடுக்கவும், சமூக ஒற்றுமை மேன்படுத்தவும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது  போன்ற பல்வேறு நன்மைக்காக  உருவாக்கப் பட்டதாகும். இந்த வலைத்தளத்தினை வயது வித்தியாசம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்ன நடக்கின்றது என்றால் அதனை கட்டுப் பாடோது பயன்படுத்தாமல், அதிக அளவிற்கு சோறு தண்ணி சாப்பிடாமல், வேலை, குடும்பம், உறவுகள்,போன்றவற்றை தவிர்த்து  அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.  சிலர் தங்கள் குடும்பப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும், தங்கள் ஊரில் நடக்கும் விருப்பு, வெறுப்பு செய்திகளை தங்கள் கருத்துடன் பகிர்ந்து கொள்ளவும், அரசியலில் தங்கள் பங்கு போன்றவற்றை வெளிக்காட்டவும், கல்வி நிலையங்களில் உள்ள உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கவும் பயன் படுத்துகின்றனர். பல செய்திகள் வீண் சண்டைகளையும், சங்கடங்களையும் ஏற்படுத்துகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். சில வியாபார பெருமக்களை தங்கள் சுயதொழில் செய்திகளை பரப்பவும், கொரானா காலங்களில் போலியான மருந்து உபகரணங்களை விளம்பரப் படுத்தி மக்களிடம் காசு பறிக்கும் தொழிலிலும் ஈடுபடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் வலைத்தளங்களிலிருந்து அவர்களுக்கு மீளத் தெரிவதில்லை.

            தற்போதைய இளைஞர்களிடமிருந்து அதனைப் பிரிப்பது மிகவும் சிரமம். ஆகவே உங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஒரு செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயலி நீங்கள் உங்கள் முக்கிய செயல்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட உங்களுக்கு நினைவூட்டும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தினை வீணான காரியங்களில் ஈடுபடுவதினை தவிர்க்கமுடியும். 

            உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வலைத்தளங்கள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்து கொண்டீர்களென்றால் அதனை தனி பகுதியில் வைக்க மறந்து விடுவதால் உங்களைப் போல போலியான வலைத்தளங்களில் உறுப்பினர்களாக ஆகி உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வார்கள். ஆகவே உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இப்போதெல்லாம் வலைத்தளங்கள் ஒரு பொழுது போக்குத் தளமாக மாறி வருகிறது உங்களுக்குத் தெரியும். சில பெண்கள் வலைத்தளங்களால் அதிகமாக ஈர்க்கப் பட்டு குடும்ப பாரம்பரியம் மறந்து குழந்தை, கணவன் போன்றவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு சீட்டாய்ப் பறந்து, பின்பு சீரழிந்தது செய்திகளில் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற நிலைகள் தேவையா என்று சுயசிந்தனை செய்யவேண்டும்.

ஆகவே வலைத்தளங்களை பயன்படுத்துபவர் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா அல்லது அழிவுப் பாதைக்கும், அடிதடிக்கும் இழுத்துச் செல்கிறதா என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும். தற்போதெல்லாம் உங்கள் வலைத்தளங்களை அரசு கண்காணிக்கின்றது என்ற உணர்வு வேண்டும். அதனை உணரவில்லையெனில் கேஸு, கோர்ட்டு என்று அல்லல் பட வேண்டும். ஆகவே உங்கள் கவன ஈர்ப்பு ஆக்கப் பூர்வமான செயலைக் கொண்டதாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டால் தவறில்லை என நினைக்கின்றேன்!

Tuesday 5 October, 2021

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

ஹிந்துத்வா அமைப்புகள் இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை ஹிந்துக்களை விட அதிகமாகி உள்ளனர், மற்றும் இடம் பெயர்ந்தோர் வருகையால் இந்தியாவிற்கே ஆபத்து என கூக்குரல் இடுகின்றனர். அந்த வகையான புகார்கள் உண்மையல்ல என்று ஸ்வாமிநாதன் எஸ் அங்காலேச்சாரிய அய்யர் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையினை அமெரிக்க வாஷிங்டன் நகரில் இயங்கும், தன்னார்வ, எந்த இயக்கத்தையும் சேரா அமைப்பான PEW ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வினை மேற்கோள் காட்டி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பி.ஜெ.பி இரண்டு விஷயத்தில் பய உணர்வு கொண்டுள்ளதால் இந்தியாவில் மத மோதலுக்கு வழி வகுக்கின்றது.. இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர். முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு அதிகமானால் ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைந்து விடும், 2) உள் துறை அமைச்சகம் சொல்வதுபோல பங்களா தேச இடம்பெயர்ந்தவர்கள் கரையான் போல உள்ளனர் என்றும் பயப்படுகின்றனர். அவைகளல்லாம் உண்மையல்ல என்று PEW அமைப்பு புள்ளிவிவரத்துடன் மறுத்துள்ளது.

            1951ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை 50 ஆண்டுகளில் முஸ்லிம் ஜனத்தொகை 6 சதவீதம் உயர்ந்தாலும் அவை ஒரே நேரத்தில் உயரவில்லை. மாறாக சிறுக, சிறுக உயர்ந்ததாகும். அதே நிலை நீடித்தால் முஸ்லிம் ஜனத்தொகை இந்த நூற்றாண்டில் 20 சதவீதத்திற்கு மேல் கூடாது என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அந்த புள்ளி விவரங்கள் ஹிந்து-முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு எண்ணிக்கையினை வைத்துச் செல்கிறது.

            தேசிய குடும்பவியல் சுகாதார சர்வே 1992-2015ன் படி முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு 4.4 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால் 80 சதவீத ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 3.3 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக மட்டுமே குறைந்து விட்டது. இதிலிருந்து முஸ்லிம் பெண்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்று தெரிகின்றது.

            உலகத்தில் சராசரி வருமானம் அதிகரித்து விட்டாலும் குழந்தை பிறப்பது குறைந்து விட்டது. ஆனால் ஏழை குடும்பங்கள் குடும்ப கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை, காரணம் குழைந்தை அதிகமாக பெற்றால் அது குடும்ப வருமானத்தைப் பெருக்கும் என்றும் சொல்கின்றனர். உலகிலேயே குழந்தை பிறப்பில் பல்வேறு காரணங்களால் அரை சதவீதம் இறந்து விடுகின்றன. வருமானம் அதிகமாக இருந்தாலும், குறைவான குழந்தை பெற்று, அந்தக் குழந்தைக்கு கல்வியறிவு, வசதியாக வாழ வீடு, வாகனம் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர். ஆகவே தான் கருத்தரிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலைப் பாட்டில் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை. முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் குறைவாக இருப்பதால் நாம் இருவர், நமக்கு ஒருவர் என்பதில் கவனமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் முஸ்லிம்கள் கருத்தரிப்பு பூஜ்யமானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றும் சொல்கின்றனர்.

            இந்தியாவில் முஸ்லிம்களைவிட ஹிந்துக்கள் ஜனத்தொதை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஹிந்து விதவைகள் மறுமணம் செய்து கொள்ள முன்பெல்லாம் அனுமதி வழங்கியதில்லை  ஆனால் இஸ்லாத்தில் முஸ்லிம் விதவைகள் திருமணம் செய்வதினை ஊக்கப் படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போரால் ஆண்கள் கொல்லப் படும்போது பெண்கள் சிறுவயதிலேயே விதவையாகி விடுகின்றனர். ஏனென்றால் முன்பு சிறுமிகள் சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் பழக்கம் இருந்தது. இரண்டாவதாக முஸ்லிம்களைவிட இந்துக்கள் தான் அதிகமாக இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே ஹிந்துத்துவ இரண்டு கருத்துக்களும் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.

            1992ம் கருத்தரிப்பு புள்ளிவிவரப்படி முஸ்லிம்-ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 1:1 ஆகத்தான் இருந்தது. அது 2015 புள்ளிவிவரப்படி 0:5 என்ற பாதியாக குறைந்து.  ஆகவே முஸ்லிம்கள் எண்ணிக்கை ஹிந்துக்களைஅவிட அதிகமாகும் என்ற ஹிந்துத்துவா குற்றச்சாட்டும் அடிபட்டுப் போகிறது.

            அடுத்தக் குற்றச்சாட்டு முஸ்லிம் இடம் பெயர்ந்தோர் ஹிந்துக்களை விட குறைவாகவே உள்ளனர் என்பதாகும். பியூ புள்ளிவிவரப்படி இந்தியாவில் பிறந்தவர்களில் 90 சதவீதம் ஹிந்துக்கள் தானாம். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு  இடம் பெயர்த்தவர் எண்ணிக்கை  வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குல் வந்தவர்களை விட மூன்று மடங்கு அதிகமாம். 2015 அறிக்கைப்படி இந்தியர் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து ஒரு கோடியே 50 லட்சமாம். ஆனால்  இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டவர் வெறும் 56 லட்சமாம். அவ்வாறு வந்தவர்களில் வங்காளதேசத்திலிருந்து வந்தவர்கள் 32 லட்சமும், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தவர் 11 லட்சமும், நேபாளத்திலிருந்து வந்தவர் 5.40 லட்சமும், இலங்கையிலிருந்து வந்தவர்கள் 1,60,000 அடங்குமாம். அவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாம்.

            இந்தியாவினைவிட்டு வெளியேறும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதாம். அவ்வாறு செல்பவர்களில் அராபிய, வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர் 35 லட்சமாம், பாகிஸ்தானுக்கு சென்றவர் 20 லட்சமாம், அமெரிக்காவிற்கு சென்றவர் 20 லட்சமாம். அதுபோன்று சென்றவர் முஸ்லிம் ஜனத்தொகை 14.2 சதவீதத்தில் 27 சதவீதமாம். ஆனால் 80 சதவீத ஹிந்துக்கள் கொண்ட சமுதாயத்தில் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தது 45 சதவீதம் தானாம்.

            அடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  குற்றச்சாட்டு கிருத்துவ மிஷினரிகள் ஹிந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர் என்பதாம். 1951லிருந்து 2015 வரை உள்ள மொத்த இந்திய ஜனத்தொகையில் வெறும் 2.3 சதவீதம் தான் கிருத்துவர்கள் உள்ளனராம். ஆகவே அந்தப் பயமும் அடிபட்டுப் போகிறது.

            சமீபத்தில் 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட CAA, CRA என்ற சட்டங்கள் வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர் என்பது போன்ற பய உணர்வில் கொண்ட சட்ட மசோதாவாகுமாம். ஆனால் அதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மெஜாரிட்டி ஹிந்துக்களை பயமுறுத்தி 2022 ம் ஆண்டில் நடைபெறும் சில மாநில தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒட்டு வங்கியை பெறுவதிற்காக நடத்தப்படும் நாடகம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பகவத் இந்தியர் அனைவரும் ஹிந்துக்களே, அவர்கள் ஒரே பண்பாட்டின் குடையின் கட்டுப் பாட்டுக்குள் உள்ளவர்கள் என்ற புது வேதாந்தத்தினை சொல்கிறார். இந்திய நாடு பல்வேறு மத, கலாட்சார கோட்பாடுகளை கொண்டதாகும். முஸ்லிம்களுக்கு என்று தனி கலாட்சாரம், பண்பு உள்ளது. அவைகளையெல்லாம் பாதுகாக்கத்தான் இந்திய அரசிலமைப்பு 1950ல் தோற்றுவிக்கப் பட்டது. ஆகவே இனியாவது இந்திய மெஜாரிட்டி மக்களை மத துவேஷ பய உணர்வை ஏற்படுத்தி  பிரிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுவது காலத்தின் கட்டாயமாகுமல்லவா?

 

           

Saturday 2 October, 2021

மீலாதுநபி முக்கியத்துவம் உறுதிமொழி (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

 

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்று விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?

Friday 24 September, 2021

இனிய திசையில் இதயம் பேசுகிறதே!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ )

உலக 'வாலெண்டின் டே' நாளான பெப்ரவரி 14 ந்தேதி அன்று  அன்பை பரிமாறிக் கொள்ள இதயத்தினை அடையாளமாக தேர்ந்தெடுத்துள்ளது உங்களுக்குத் தெரியும். இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க அறிவியல் நிபுணர் கேலன், 'இதயம் ஈரலுடன் இணைந்து வைரம் போல தோன்றுவதினை முதன் முதலில் தெரிவித்துள்ளார். வைரம் உடைந்து போனால் உருப்படியாகாது, அதேபோன்று தான் இதயமும் பழுதானால் உடல் இயங்காது. அப்படிப் பட்ட இதயத்தினை பாதுகாப்பதிற்காக உலக இதய நாள் செப்டம்பர் 29ந்தேதி கொண்டாடப் படுகிறது. அந்த இதயத்தினை எவ்வாறு பாதுகாப்பது என்று உங்களுடன்  பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

            உலகில் அபாயகரமான நோய் எது என்று கேட்டால் உடனே நீங்கள் கொரானா என்று தான் சொல்வீர்கள். ஆனால் உலகிலேயே அபாயகரமான நோய் இதய நோய் தான் என்று உலக சுகாதார மையம் சொல்கிறது. 2019ல் மட்டும் இதய நோயால் 90 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். அதிலும் 30 வயதிலிருந்து 70 வயதிற்குட்டபட்டவர்கள் 60 லட்சம் பேராம். அதில் சீன நாடு முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து இந்தியாவும், ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் உள்ளன. இதய நோயிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும் சமீப காலங்களில் கொரானா நோய் ஏற்பட்டு இதயத்திற்கு செல்லக்கூடிய ஆக்சிசன்  குறைவாகுதலால் இதய நோயால் இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆகவே தான் இதயத்தினை காப்பது ஒவ்வொருவரும் தனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் செய்யும் சிறந்தது சேவையாகும் என்றால் மிகையாகாது. இப்போது இதயத்தினை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் என்பதினை ஆராய்வோம்.

1)    அமெரிக்கா சுகாதார மைய செயல்பாட்டின் அறிவுரைப் படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பரிசோதனை செய்வது நல்லது என்று கூறுகின்றது. இந்தியாவின் Cardiology Society( இதய நோய் ஆராய்ச்சி மையம்) 2019ல்  நடத்திய ஆய்வுப் படி நமது நாட்டில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கபட்டுள்ளர் என்று கூறுகின்றது. அதில் 45 சதவீதம் கண்டுபிடிக்கமுடியாமலே போய் விடுகிறதாம். நீங்கள் கூட தெரிந்து இருப்பீர்கள், '30-35வயதில் ஒருவர் நோய் அறிகுறி இல்லாமல் இறந்து விட்டால் சொல்வீர்கள், மனுஷர் நல்லாத் தான் கல்லுமாதிரி இருந்தார் பொட்டின்று போய்ட்டாரென்று'. அப்படி இதய நோய் அறிகுறி இல்லாமலே கொன்று விடக்கூடிய ஒன்றாகும் அது ஒரு 'Silent Killer' என்று நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர்  Nieca Goldberg M.D சொல்கிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் Dr Joan H Tisch கூறும்போது இதய நோயால் பக்கவாதமும் ஏற்படுமென்கிறார்.

2)    உடலில் ஏற்படும் 77 நோய்கள் மன அழுத்தத்தால் வரக்கூடியவை என்று அமெரிக்கா சவுத் நியூ கெமிஸ்ப்பியர் பல்கலைக் கழக மனோதத்துவ நிபுணர் நிகி மார்டினஸ் சொல்கிறார். உங்கள் வயது உயர, உயர உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன் இளமை ஒருபோதும் திரும்பக் கிடைப்பதில்லை. ஆகவே மன அழுத்தத்தினைப் போக்க தியானம், மூச்சு பயிற்சி, இறை வணக்கம் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டுமாம்.

3)    உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது நாளங்களில் நீர்சத்து அதிகமாகுமாம். ஆகவே முதலில் கவனிக்க வேண்டியது கால்களைத் தான். கால்களில் வீக்கமும், கால்களில் உரைகள் அணியும் போது வரி, வரியாக தெரியும் . அதனை வைத்து ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று தெரிந்து கொண்டு டாக்டர்களை தேட வேண்டும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்  Gregg Fonarow சொல்கிறார். உணவுப் பொருட்களில் அதிக அளவில் குறைக்க வேண்டியது புளிப்பும், உப்பாகும். சமயலறையில் உடனடி உபயோகத்திற்காக எலுமிச்சை பழம், வினிகர், சோடா உப்பு, சோளமாவு போன்றவை இருக்கும். அவைகளெல்லாம் அதிகமாக சேரும்போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடலுக்கு கேடு ஏற்படும். அத்துடன் உணவு பரிமாற, தண்ணீர், தேநீர், காபி அருந்த  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. உலகத்தில் ஏற்படும் 2 கோடியே 60 லட்சம் இதய நோய்களில் 40 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகின்றதாம். சுகர்(இனிப்பு) ஒரு உயிர் கொல்லியாம். டைப் 2 நோயாளிகளுக்கு இதய நோய் வருவது அதிகம் என்று AHA என்ற அமெரிக்கா ஹார்ட் பாவுண்டேஷன் அமைப்பு சொல்கிறது. டைப் 2 நோயாளிகள் இதய மற்றும் கிட்னி நோயால் பாதிப்புள்ளாவர் என்றும் அவர்கள் நீரழிவு நிபுணர்களை ஆலோசனை செய்வது நல்லது என்று AHA பவுண்டேசன் நிபுணர் எட்வார்ட் சொல்கிறார்.

4)    மாமிச உணவு இதயத்தினை பாதிக்கின்றதா: மாமிச உணவில் புரதம் அதிகமாக உள்ளது  ஆனால் காய், கறிகளில் அவ்வாறு இல்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் Erin D Michos சொல்கிறார். மீன், கரி வகைகளை விட கார்போ ஹைட்ராட் நிறைந்த சுத்தரிக்கப் பட்ட தானியம், டின்னில் பதப் படுத்தப் பட்ட பழவகைகள், சுவையான Donuts , சோடா, உருளைக் கிழங்கு, சிப்ஸ், பிரெஞ்சு பிரை என்ற வறுத்த உருளைக்கிழங்கு, நாக்கில் நீர் வரவழைக்கும் சாக்லேட், சீனி, பாலால் தயாரிக்கப் படும் பொருட்கள் அதிக அளவு இதயநோய்க்கு ஆளாவீர் என்று பேராசிரியர் எரின் கூறுகிறார்.

5)    குறைமாத டெலிவரி இதயத்திற்கு நல்லதல்ல:

Dutch நாட்டின் ஆய்வுப்படி 37 வாரத்திற்கு முன்பு பெண்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களுக்கு இதய வால்வு சம்பந்தமான நோய் வரும் என்று சொல்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான ஈஸ்ட்ரோஜென் உடல் ஆரோக்கியத்திற்கும், எலும்பு உறுதியாகுவதிற்கும், மன அமைதிக்கும் முக்கிய தேவையாகும். பெண்களுக்கு 51 வயதினைத் தாண்டி மாதவிலக்கு நிற்கவில்லையென்றால் அவர் நிச்சயமாக இதய நோய்க்கு ஆளாகுவார்கள் என்று Okland university பேராசிரியை கவிதா சின்னையன் கூறுகிறார். இங்கிலாந்தில் உள்ள Briminhgam பல்கலைக் கழக ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுப் படி ஒரு பெண்ணுக்கு மாத விலக்கு 46 வயதிற்குள் நின்று விட்டால் அவள் இதய நோயுக்கு உட்படுவாள் என்று கூறுகிறது. அதேபோன்று தான் மாத விலக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வருமென்றால் ரத்த ஓட்ட நாளங்கள் பழுதடையலாம் என்றும், அவர்கள் மகற்பேர் மருத்துவரிடம்  பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று Woman's  Day  பத்திரிகை செய்தி கூறுகின்றது.

6)    இதய நோய் ஆண்களிருந்து பெண்களுக்கு மாறுபடும் என்று கலிபோர்னியா Cedar-Sinai Heart Institute டைரக்டர் C.Noel Bairy Marly சொல்கிறார். பெண்களுக்கு உண்டான அடைப்பு இதயத்திற்கு கொண்டு செல்லும் ரத்தம், ஆக்சிஜென் நரம்புகளில் தடைகள் ஏற்படுமாம். ஆண்களுக்கு இதயத்திலிருந்து வெளியேற்றப் படும் ரத்த வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளாக இருக்குமாம். ஆகவே பெண்களுக்கு இதயநோய் வரும்போது ரத்த அழுத்தத்தினை சோதனைகளில் கண்டு பிடிப்பது சிரமமாம். பெண்களின் இதய நோய்களுக்கு அறிகுறியாக முதுகுப் பிடிப்பு, மிகக் களைப்பு, மயக்கம், தலைவலி போன்றவைகளை வைத்து கண்டு கொள்ளலாம் என்கின்றனர். ஆண்களின் இதயத்தினை தாக்கும் முதல் எதிரியாக போதையினை உண்டாக்கும் மது வகையாகும். மேலை நாடுகளில் சொல்வர் பார்லியால் தயாரிக்கப் படும் பீர் அல்லது திராட்சையில் தயாரிக்கப் படும் ஒயின் உடலுக்கு நல்லதென்று. ஆனால் அதில் ஆல்கஹால் கலந்து விடுதலால் சிறு துளி பெரு வெள்ளம் என்பதிற்கிணங்க எந்த விதத்திலும் ஆல்கஹால் கலந்த மது வகைகள் குடிப்பது இதயத்திற்கு நல்லதல்ல.

7)    ஜன்னலைத் திற காற்று வரும்: கிராமத்தில் வாழும் மக்கள் காற்றோட்டமான மரம், செடிகளிடையே ரசனையுடன் வாழ்வார்கள். நகரத்தில் கதவு, ஜன்னலை மூடிக்கொண்டு ஏசி அறையில் வாழ்பவர்களுக்கு இதய நோய் சீக்கிரமே வருமாம். பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள் ஏசி காரில் மூடிக் கொண்டு தூங்குபவர்கள் மரணம் என்று. அவ்வாறு ஏன் ஏற்படுகின்றது என்றால் காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கினால் அந்த இடத்தில் ஏற்படும் நச்சுப் புகைகள், காற்றில் மிதக்கும் கிருமிகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்றவைகளின் புகையில் மூச்சு திணறி இறந்து விடுவார்கள். ஆகவே காற்றோட்டமாக வழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

8)    இயற்கை சீற்றமும், இதய நோயும்: 2003-2004 ஆண்டுகளில் காட்ரீனா புயல் அமெரிக்கா ஆர்லின்ஸ் நகரை தாக்கியதையும், ஆசியாவில் இந்திய உள்பட பல நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியதையும் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு தாக்கிய இயற்கை சீற்றத்தால் பல ஆயிரக் கணக்கான மக்கள் அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார்களாம். மற்றும் பலர் இதய நோயால் அவதிப் படுவதாக ஆய்வு கூறுகின்றது.

9)     தூக்கத்திற்கு முக்கியம் கொடுங்கள்: இளம் வயதில் இரவில் தூங்கினால் காலையில் தான் எழுவீர். ஆனால் வயது கூடக்கூட இரவு நேரத்தில் விழிப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதினையும் காண்பீர்கள். பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும்போதும், வெள்ளை படும்போதும், மாதவிலக்கு நிற்கப்போதும்போதும் தூக்கமின்மை ஏற்பட்டு அவதிப் படுவர்  என்று கிளீவ்லேண்ட் பேமிலி ஹார்ட் இயக்குனரகம் டாக்டர் கிறிஸ்டின் ஜெல்லிஸ் கூறுகின்றார். அதற்கு மாற்றாக பகல் தூக்கத்தினை குறைப்பதும், அடிக்கடி காபி குடிப்பதினையும், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி விடவேண்டுமாம்.

10)  ஆத்திரத்தினை அடக்கினாலும் மூத்திரத்தினை அடக்காதீர் என்ற பழமொழி உண்டு. அதற்கு காரணம் சிறுநீரை அடக்கிப் பழகினால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நாளங்கள் பாதிக்கும். தாதுப் பொருட்களின் இன்றியமையாமை: இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் தேவையான பொருட்கள். பொட்டாசியம் இயந்திர சக்தியினை செல்களுக்கு கொண்டு செல்கிறது. மாங்கனீசியம் இதய சுவர்களை பலப் படுத்துகிறது. கால்சியம் ஆண், பெண் இரு பாலாருக்கும் இதயம் சீராக செயல்பட உதவுகிறது.

11)  நொறுக்குத் தீனியின் கெடுதி: வார இறுதியில் தொலைக்காட்சி, பொழுதுபோக்கு விளையாட்டு திடல்களுக்குச் செல்லுதல், சினிமா போன்றவைகளுக்கு குடும்பத்துடன் செல்லுதல் போன்றவற்றில் கிடைத்ததையெல்லாம் அளவில்லாமல் சாப்பிடுவதும், துரித உணவு உட் கொள்வதும், வயிற்றுப் பகுதி பெருத்து, உடல் எடை கூடி, அதனால் கெட்ட கொழுப்பு அதிகமாகி இதய நோயுக்கு உங்களை இழுத்துச் செல்கிறது என்று கொலம்பியா பல்கலைக் கழக ஆராய்ச்சி சொல்கிறது.

12)  சூரிய வெளிச்சத்தின் பயன்: குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் நமது நாட்டிற்கு வந்து கோடை சுற்றுலா மையங்களில் திறந்த மேலுடன் சூரிய குளியல் செய்வது நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சூரிய பிரதேசத்தில் இருக்கின்ற நாமோ நகரத்தில் இருந்து கொண்டு சூரியனே பார்க்காது இருட்டிய அறையில் இருப்பது இதயத்திற்கு ஆபத்தினை வரவழைக்கும். ஏனென்றால் இதயத்திற்கு தேவையான வைட்டமின் D இயற்கையிலேயே சூரிய வெளிச்சத்தில் கிடைக்கின்றது. அதனை விட்டுவிட்டு அதனை மாத்திரைகள் மூலம் பெறுவது வீண் செலவு தானே!

13)  தானம் செய்வது சாலச்சிறந்தது: பிறரது மனங்குளிர அவருக்கு உதவி செய்து அவர் மட்டுமல்ல அவர் குடும்ப உறுப்பினரும் முகத்தில் மலர்ச்சி செய்வதின் மூலம் தானம் செய்பவர் உள்ளமும் சூரியனைக் கண்டா ரோஜா மொட்டு மலர்வது போல அவர் இதயமும் மகிழ்ச்சியில் மலருமாம். ஆகவே பிறருக்கு உதவி செய்வதினை ஒரு புண்ணியமாக எண்ணாது, தன் உடலுக்கும் நல்லது என்று நினைக்க வேண்டுமல்லவா?

Sunday 29 August, 2021

விளையாட்டுப் போட்டிகள் மனித பண்பின் இருப்பிடமா?

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்’ என்பது விளையாட்டுகளில் நட்பினை ஊக்குவிக்கின்றதினை எடுத்துக்காட்டாக சொல்வார்கள். ஆனால் 2021 ஆகஸ்ட் மாத ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு மனித பண்பின் அடையாளம் என்ற புது இலக்கணத்தினை போதித்துள்ளது என்று இரண்டு விளையாட்டுப் போட்டியில் நடந்த சம்பவங்களை எடுத்துக் காட்டி விளக்கினை பத்திரிக்கை செய்திகள். அவை பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்தது இல்லையா என்று நீங்கள் கேள்வியினை எழுப்பலாம். அதனை விளக்கவே இந்த கற்றுரையினை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

            2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரத்தாண்டும் போட்டியில் கடைசியாக கத்தார் தேசத்தின் மதாரும், இத்தாலி தேசத்தின் ஜெயனும் கலந்து கொண்டாரகள். அவர்கள் இருவரும் உயரத்தாண்டுதலில் 2.37 மீட்டர் 7அடி 9அங்குலம் தாண்டி விட்டனர். அதில் இத்தாலி வீரர் ஜெயன் காலில் அடிபட்டது. ஆகவே தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு நிச்சயம் சில்வர் மெடல் உண்டு என்று அவருக்குத் தெரியும். அதனை அறிந்த கத்தார் வீரர் மதார் அதற்கு மேல் தாண்டி கோல்ட் மெடல் வாங்க முடியும். இருந்தாலும் காலில் அடிபட்ட ஜெயனை பார்த்து வருத்தப் பட்ட மதார் நேராக நடுவரிடம் சென்று தானும் போட்டியிலிருந்து விலகினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நடுவர் தங்க மெடலை இருவருக்கும் பகிர்ந்து கொடுப்போம் என்றார். சற்றும் யோசிக்காத மதார் தானும் விலகுவதாக அறிவித்தார். அதனைக் கண்ட இத்தாலி வீரர் ஓடி வந்து மதாரை கட்டி அணைத்து விட்டார்.

            டோக்கியோ ஒலிம்பிக்கில் 'கிராஸ் கன்டரி' என்ற திறந்த வெளி ஓட்டத்தில் முதலாவதாக கென்யா வீரர் ஆபேலும் அதற்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டு வீரர் பெர்னாண்டஸ் ஆகியவரும் எல்லையினைத் தொடும் நோக்கத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தனர். எல்லைக் கோடு மூன்று இருக்கும், அதில் நடுவில் உள்ள கோடுதான் எல்கை ஆகும். ஆனால் கென்யா வீரர் ஆபேல் முதலில் வந்தவர் தவறுதலாக முதல் கோடுதான் எல்கை என்று நின்று விட்டார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த  பெர்னாண்டஸ் அதனை புரிந்து கொண்டு நினைத்து இருந்தால் கென்யாவீரரை முந்திச் சென்று தங்கம் வென்றிருக்காலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கென்யா வீரரைப் பார்த்து ஸ்பானிஸ் மொழியில் ஓடு என்று சொன்னார். அதனை கென்யா வீரர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் விடாத பெர்னாண்டஸ் கென்யா வீரரின் முதுகைப் பிடித்து தள்ளி தொடும் கோட்டிற்கு கொண்டு சென்று தங்கம் வெல்லச் செய்தார். அப்போது பத்திரிக்கைக் காரர்கள் ஏன் பெர்னாண்டஸைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள். நீங்கள் நினைத்து இருந்தால் உங்கள் நாட்டிற்கு தங்கம் வென்றிருக்கலாம் என்று கூறினர். அதற்கு பெர்னாண்டஸ், 'நான் முதிர்ச்சி அடைந்த உலகில் வாழ நினைக்கின்றேன். அவருடைய டோக்கியோ ஒலிம்பிக்கின் ஸ்லோகன், 'Let Live, Let others also Live' என்பது என்று சொன்னது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. (நீ வாழு மற்றவர்களையும் வாழ விடு)

            நீங்கள் கேட்கலாம் ஏன் இதுபோன்ற பண்பாடுகளின் இருப்பிடமே விளையாட்டு என்று மற்ற சர்வதேச போட்டிகளில் நடக்கவில்லையா என்று. ஏன் இல்லை, அதுபோன்ற சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:

1)    1932ம் ஆண்டு அமெரிக்க லாஸ் ஏன்ஜெல் நகரில் நடந்த உயரத் தாண்டுதலில் அமெரிக்காவினைச் சார்ந்த பாப் என்ற வீரரும் கனடாவினைச் சார்ந்த டங்கன் என்பவும் கடையில் இருந்தனர். பாப் ஏற்கனவே 2 மீட்டர் தனது நாட்டில் நடந்த போட்டியில் சுலபமாக தாண்டியுள்ளார். ஆனால் டங்கன் 1.94 மீட்டருக்கு மேல் தாண்டியதில்லை. முதலில் பாப் 1.94 மீட்டரையும் அடுத்து டங்கனும் தாண்டி விட்டார்கள். அதன் பின்பு 1.97 மீட்டருக்கு போட்டியாளர்கள் உயரத்திக்கு கொண்டு சென்றார்கள். அதனைப் பார்த்த டங்கன் தன்னால் தாண்ட முடியாது என்று நின்று விட்டார். தன்னுடன் கடைசிவரை வந்த டங்கன் மலைப்பதினைப் பார்த்து பரிதாப பட்டு அவரிடம் நேரில் பாப் சென்று, 'நீங்கள் ஓடிவந்து தாண்டும்போது  எல்லைக் கோட்டின் அருகில் உள்ள கட்டையில் மிதித்து தாண்டினால் நிச்சயம் உங்களால் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை ஊட்டினார்' அந்த அறிவுரையேற்று டங்கணும் ஓடிவந்து கட்டையில் கால் வைத்துத் தாண்டிக் குதித்தார். என்னே அதிசயம் அவர் இது வரை தாண்டாத 1.97 மீட்டரை தாண்டி விட்டார். அதன் பின்பு இருவரும் நம்பராகி கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டனர். 1987 ம் ஆண்டு பாப் மனைவி டங்கனுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இறந்து விட்டதினை தெரியப் படுத்தியிருந்தது மிகவும் கவலைக்கு ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

2)    1936ம் ஆண்டில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் தடைகளை ஜாம்பவான் ஜெஸ்ஸி ஓவென் 100,200,4into 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முடி சூடா மன்னராக திகழ்ந்தார்.  அவரைப் பார்த்து ஜெர்மன் அதிபர் ஹிட்லரே அவர் போன்று ஒரு தடகள வீரர் தன்னுடைய நாட்டில் இல்லையே என்று வருத்தப் பட்டாராம். பெர்லினில் நீளத் தாண்டுதலில் 2 தடவை தவறிழைத்தாராம். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனியினைச் சார்ந்த வீரர் லாங் ஜெஸ்ஸி ஓவனை அணுகி நீங்கள் நீலதாண்டுதல் எல்லையினை குறிக்கும் பலகையிற்கு அப்பால் இருந்து தாண்டினால் வெற்றி பெறமுடியும் என்று அறிவுரை கூறினாராம். ஜெஸ்ஸி ஓவன் மூன்றாவது முறையாக ஜெர்மனி வீரர் லாங் சொன்ன அறிவுரைபடி ஓடிவந்து தாண்டி வெற்றிகொண்டாராம். அந்த நேரத்தில் ஜெஸ்ஸி ஓவென் பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'எனக்கு இது வரை கிடைத்திருக்கும் மெடல்களை எல்லாம் உருக்கி தங்கமாக லாங்கிற்கு கொடுத்தாலும் ஈடாகாது' என்று சொல்லி பெருமைப் பட்டாராம்.

3)    201ம் ஆண்டு நடந்த Rio  ஒலிம்பிக்கில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹம்லின், மற்றும் அமெரிக்க வீராங்கனை டி அகஸ்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். அவரகள் 2000 மீட்டர் தூரத்தில் வரும்போது அமெரிக்க வீராங்கனை அகஸ்டோ தடுக்கி கீழே விழுந்து விட்டாராம். உடனே நியூஜிலாந்து வீராங்கனை இது தான் சமயம் என்று முந்தி ஓடவில்லை. மாறாக அமெரிக்க வீராங்கனையினை தூக்கி விட்டு இருவரும் ஓடினாராம். ஆகவே நியூஜிலாந்து வீராங்கனை ஹம்லினுக்கு 'Olympic Fairplay Award' வழங்கப் பட்டதாம்.

4)    விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதே தனித்தகுதியாகும். அதுவும் உலக அளவில் நடத்தப் படும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது அதைவிட சிறப்பாகும். அவ்வாறு கலந்து கொண்டபின்னர் வெற்றி பெறாவிட்டாலும் இலக்கை அடைவது மிகவும் சாலச் சிறந்தது என்பதினை ஒரு தந்தை தன் மகனுக்கு எடுத்துக் காட்டியுள்ளது  1994 ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து ஓட்டப் பந்தய வீரர் ரேமாண்ட் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டாராம். அவ்வாறு கலந்து கொண்ட போட்டியில் அவரது கால் தசை பிசகி கீழே விழுந்து விட்டாராம். அதனை பார்த்துக் கொண்ட அவரது தந்தை ஜிம் மைதானத்தில் இருந்து குதித்து மகனை கைத்தாங்கலாக அணைத்துக் கொண்டு பந்தய எல்கையினை அடையச் செய்தாராம். ரேமாண்ட் அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் அந்த மைதானத்தில் கூடியிருந்தோர் எழுந்து ரேமாண்ட் தந்தையினை பாராட்டி கரஒலி எழுப்பினார்களாம். அவருடைய செயலினை பாராட்டி 2012ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் அவரை ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடச்செய்ததாம் ஒலிம்பிக் குழு.

விளையாட்டில் நியாயமாகவும், நேர்மையாகவும், நட்புடனும் நடந்து கொண்டாலும் விளையாட்டில் மிக மோசமான நடத்தைக்கும் குறைவில்லை.

1)    1994 ம் ஆண்டு அமெரிக்க ஸ்கேட்டின் வீராங்கனை டோனி ஹார்டிங்ஸ் நார்வேயில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார். அவரைப் பழிவாங்க அவரது முன்னாள் கணவர் ஒருவரை அணுகி விளையாட்டுப் போட்டியில் டோனியின் போட்டியாளரான கெரிகானை தாக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குக் காரணம் அமெரிக்க வீராங்கனை டோனி போட்டியில் வெல்லக் கூடாது என்பதேயாகும். அதேபோன்று கெரிகான் தொடையில் காயம்பட்டு சிகிச்சைப் பெற்று போட்டியிலும் வென்று விட்டார். அந்த வன்முறை சம்பவம் குறித்து ஒரு விசாரணை நடத்தப் பட்டது. அதில் அமெரிக்க வீராங்கனை மற்றும் மூவர்மீது குற்றம் கண்டுபிடித்து அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப் பட்டது.

2)    அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை அனைவருக்கும் தெரியும் அவர் தனது 20 வயதிலேயே பட்டம் வென்றவர். 1997ம் ஆண்டு மைக் டைசன் தனது பரம எதிர் விளையாட்டாளர் ஹோலிபீல்டு உடன் சண்டையில் கலந்து கொண்டார். அப்போது மைக் டைசன் ஆத்திரத்தில் ஹோலிபீல்ட்டின் காதினை இரண்டு முறை ரத்தம் கொட்டும் அளவிற்கு கடித்து விட்டதால், அவருடைய சாம்பியன் பட்டம் பிடுங்கப் பட்டது. 2002 ஆண்டு மைக் டைசன் குத்துச் சண்டை  பிரிட்டிஷ் குத்துச் சண்டை வீரர் லென்னாஸ் லீவிஸ் உடன் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டு அதற்கு ஆயத்தமாக இரண்டு விளையாட்டு வீரர்களையும் பத்திக்கையாளர் முன் அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போதும் மைக் டைசன் பிரிட்டிஷ் வீரரை கடித்து விட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

3)    2006ம் ஆண்டு உலக கால் பந்தாட்டம் ஜெர்மனியில் நடந்தது. அதன் கடைசி போட்டியில் பிரான்சும், இத்தாலியும் மோதின. பிரான்ஸ் அணிக்கு ஜிடேன் கேப்டனாக இருந்தார். போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது இத்தாலி வீரர் மார்கோ மெட்ராஸி ஏதோ அபத்தமாக சொல்லிவிட்டார் என்று ஜிடேன் அவர் அருகே ஏதோ பேசுவது போல் வந்து தனது தலையால் மெட்ராஸி நெஞ்சில் முட்டி கீழே தள்ளி விட்டார். அதனை கவனித்த நடுவர் ஜிடேனை சிகப்பு அட்டை காண்பித்து வெளியே அனுப்பினார். அதில் இத்தாலி அணி வெற்றி வாகை சூடியது.

4)    2021 ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் மல்யுத்த Semi final ல் இந்தியாவினைச் சார்ந்த ரவி தஹியாவும், கசக்ஸ்தான் வீரர் நூருல் இஸ்லாமும் கலந்து கொண்டனர். அப்போது கசக்ஸ்தான் வீரர் ரவி தஹியாவின் கை புஜத்தில் கடித்து விட்டார். அந்த வலியையும் தாங்கிக் கொண்டு அந்தப் போட்டியில் சில்வர் மெடல் பெற்றார்.

அதேபோன்று தான் கால் பந்தாட்டம், கிரிக்கெட், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு எறிவதும், வீரர்களை நிறத்தால் வேறு படுத்தி திட்டுவதும், தோல்வியுற்றால் மைதானத்தில் நுழைந்து அராஜகம் விளைவிப்பதும் நாகரீகமான செயலாகுமா என்று சிந்திக்க வேண்டாமா?

 

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது விளையாட்டு வீரர்களின் திறமையினை மட்டும் காட்டுவதாகாது. மாறாக மனிதர்களுக்குள் நட்பையும், பண்பையும் வளர்க்கக் கூடியதாகும். மதம், ஜாதி, இனம், மொழி, பணக்கார, ஏழை நாடுகள் என்ற எல்கை கோட்டினைத் தாண்டி மனிதன் பண்புடனும், பாசத்துடனும், பரிவுடனும் கூடிய ஒரு சர்வதேச சமுதாயத்தினை நவீன உலகில் உருவாக்குவதே நமது எல்லோருடைய கடமையல்லவா?