Monday 19 February, 2024

நீங்களும் ஒரு நாள் தலைவராகலாம்!

 

(டாக்டர் .பீ. முகமது அலி, .பீ.எஸ்( )

ஒரு மனிதன் தலைவராகுவதிற்கு, பல வீர, தீர செயல் செய்திருக்க வேண்டும் என்பதில்லை, வித விதமான ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மிங்க் கோட்டு போன்ற ஆடைகளை தினந்தோறும் அணிவதில்லை. மெடல்களை சட்டைப் பைகளில் அணிந்து கொள்ள வேண்டுமதிலில்லை. மிகவும் விலை உள்ள கார்களில் பயணம் செய்ய வேண்டுமில்லை, சொகுசு பங்களாக்களில் வசிக்க வேண்டுமில்லை 7அடி உயரமுள்ளவராகவும், 56 இஞ்சு நெஞ்சு அகலமுள்ளவராகவும் வேண்டியதுமில்லை,  பல கோடி மதிப்புள்ள விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை எபோதாவது உபயோகத்திற்கு வைத்து பெருமை கொள்ள வேண்டியதுமில்லை, ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவர்களாக இருக்க வேண்டும்,  மற்றவர்களை உண்மைக்கு தட்டி எழுப்புவர்களாக இருக்க வேண்டும், என்று உணர்த்த சில உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என எண்ணி இந்த கட்டுரை எழுதுகிறேன்.

          ஒரு தலைவருக்கான கீழ்கண்ட தகுதிகள் வேண்டும்:

1) விழிப்புணர்வு: self awareness

2) மரியாதை : respect

3) இரக்கக் குணம் : Compassion

4) தொலை நோக்குப் பார்வை : vision

5) தொடர்பு: communication

6) கற்றறிதல் சுறுசுறுப்பு : learning  ability

7) இணைந்து செயலாற்றல் : collaboration

8) செல்வாக்கு : influence

9) நேர்மை : integrity

10) தைரியம்: courage

11) நன்றியுணர்வு: gratitude

12) விரி திறன் : resilience

ஒரு தலைவரின் உள்ளடங்கிய தகுதிகளை தமிழ் நாட்டில் முத்தமிழ் அறிஞர் வார்த்தையில் 'நான் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டு மரமாக சுமந்து தமிழ் மக்களுக்கு உழைப்பேன்' என்று இரத்தின சுருக்கமாக சொன்னார், அதற்கு காரணம் அவருடைய ஆட்சி இரண்டு தடவை  கலைக்கப் பட்டாலும், மீண்டும் வீறு கொண்டு எழுந்து நடை போட்டு ஆட்சி பீடம் ஏறினார் என்பதினை எடுத்துக் காட்டத்தான் அவ்வாறு சொன்னார் என்றால் ஆச்சரியமில்லையா?

ரஸூலல்லா பிறக்கும் போது தந்தையினை இழந்து, வளர்ப்புத்தாயால் பராமரிக்கப் பட்டார் என்றால், அவருடைய நாணயமான செயலும், மற்றவர்களுக்கு உதவும் செயலும் அவர்களுக்கு 'அல் அமீன்' என்று மக்கா நகர் மக்களால் அழைக்கப்பட்டார். அவர்கள் சொல்லும், செயலும் ஒன்றாக இருந்தது. அவர்களுடைய கொள்கைகளுக்கு எந்த எதிர்ப்பும் வந்தாலும், அதனை எதிகொண்டார்கள்.

          உலகில் மற்ற தலைவர்களான முற்காலத்திய ஜூலியஸ் ஜீசஸ், எகிப்தைச் சார்ந்த கான்ஸ்டாண்டின், மங்கோலிய செங்கிஸ்கான், சுலைமான் மெக்னீபிஷியன்ட், அமெரிக்க ஜார்ஜ் வெல்லின்கடன், பிரான்ஸ் நெப்போலியன், ஜெர்மனி ஹிட்லர், ரசிய ஸ்டாலின், இத்தாலி முசோலினி, இங்கிலாந்து சர்ச்சில், ஜான்சி ஆப் ராணி, ரசியாவின் கேத்தரின், போன்ற தலைவர்கள் உலகில் இருந்தாலும் போர்க்களத்திலும், பல நாடுகளை அடிமைப் படுத்துதலும், பல உயிர்களை பலி வாங்குவதிலும் சிறந்த தலைவர்கள் என்று போற்றப் பட்டவர்கள். ஆனால் அமெரிக்காவின் வானிலை இயற்பியலாளரும், வெள்ளை நிற ஆதரிப்பாளருமான மிக்கேல் கார்ட்ஸ் அவர்கள் உலகின் பல தலைவர்கள் பற்றி ஆராய்ந்து கடைசியில் ரஸூலல்லா பற்றி சொல்லும்போது இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். இன்று கூட அவர்களுடைய உருவமோ அல்லது படமோ அல்லது அதன் சம்பந்தமாக எந்த பத்திரிக்கையாவது எழுதினால் இஸ்லாமியர் வெகுண்டு எழுவதிற்குக் காரணம் ரஸூலல்லா தன்னை உயிருடன் இருக்கும் பொது எல்லாம் வல்ல இறைவனைத் தவிர இந்த உலகில் புகழக் கூடியவர் யாருமில்லை என்று காட்டியது தான் என்றும், நண்பர்கள், உறவினர்கள் அண்டை வீட்டார் மாற்று கொள்கை உள்ளவராக இருந்தாலும், அவர்கள் இன்ப துன்பங்களில் பங்கேற்ற வேண்டும், மற்றவர்கள் கருத்துச் சொன்னால்,  அதில் உண்மை இருந்தால், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதம் செய்யாமல்  ஏற்றுக் கொள்ளும் பண்பு வேண்டும், தன்னுடைய வெற்றியையும் தோல்வியினையும் ஒப்புக்  கொண்டவர்களாக இருந்தார்கள், மற்றவர்களின் வேலைகளில் தானும் பங்கு கொண்டார்கள் ஆகவே தான் மிக்கேல் ஹாட்ஸ் தான் ஆராய்ந்த நூறு தலைவர்களில் ரசூலுல்லாஹ் சிறந்தவர் என்று கூறுகிறார்.

          2) உலகில் மதிக்கத் தக்க தலைவராக உள்ளவர் மகாத்மா காந்தி:

இந்திய நாட்டின் தேசப் பிதா என்று அழைக்கப் படுகிறார். அவர் இந்திய நாட்டினிலும் மற்றுமல்ல தென் ஆப்பிரிக்காவிலும் தொழிலாளர்களர்கள் நலனுக்கும் உழைத்தவர். மகாகவி பாரதி 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக வருகிறது' என்று கூறிய கருத்தை நிரூபிக்கும் விதமாக அகிம்சா வழியில் உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், கதர் துணி நெய்வதினை ஆதரித்து கிராம தொழிலை ஊக்குவித்தல், இந்தியாவில் செல்வம் மலையும் மடுவும் போலல்லாமல் கடல் போன்று சமமாக இருக்க கிராம ராஜ்யம் ஏற்படுத்த வேண்டும், போன்ற உன்னதமான கொள்கைகளைக் கொண்டு வெள்ளையனே இந்திய நாட்டினை விட்டு வெளியேறு என்று குரல் கொடுத்து பல சிறைக் கொடுமைகளையும் அனுபவித்தார். ஆனால் சிலர் காந்தி 'ராம ராஜ்யம்' வேண்டும் என்று கூறி அதிகார வெறியால் திரித்து கூறுகின்றனர். தீண்டாமை, ஜாதி ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தார். அது மட்டுமா கள்ளுக்கடை, மது, போதைப் பொருட்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இந்திய நாட்டில் இஸ்லாமிய நாட்டின் இரண்டாம் கலீபா உமர் போன்று ஜனநாயக ஆட்சி நடத்த அறிவுரை வழங்கினார். மதத்தினை அரசியலில் புகுத்துவதினையும் வெறுத்தார். நாட்டில் கலவரங்கள் மதத்தின் பெயரால் நடப்பதினை கண்டு வெகுண்டு எழுந்து சாகும் வரையான உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இன்று அவருடைய தியாகங்களை ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றோம் என்று சிலர் சிறுமைப் படுத்த முயல்கின்றனர். ஆனாலும் சூரியனை திரை கொண்டு மறைத்தால் முடியாது என்று அந்த மூடர்களுக்கு விளங்கங்கது. ஆனாலும் உலகில் பல நாடுகள் அவருடைய தியாகங்களை பாராட்டுகின்றன.

          அடுத்த பாராட்டத் தக்கத் தலைவர் தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா:

தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகமாக இருந்தாலும், குறைந்த அளவிலான நில உரிமையினை வெள்ளை நிற இங்கிலாந்து மக்கள் வைத்திருந்தனர். அவர்கள் கறுப்பின மக்களை அடிமைபோல நடத்தி வெள்ளை நிற வெறியினை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு சம உரிமை மறுக்கப் பட்டது. அவைகளை எதிர்த்து குரல் கொடுத்து பல இன்னல்கள் அனுபவித்தார். அதுமட்டுமல்ல சிறையில் தள்ளப் பட்டு ஆளில்லா தனி சிறையில் 27 வருடம் தோட்ட வேளையிலும், கல்லுடைக்கவும் கொடுமைப் படுத்தப் பட்டார். அதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து அவருடைய விடுதலையும், தென் ஆப்பிரிக்காவில் தேர்தலும் நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பின. அதற்கு பணிந்து வெள்ளை நிற ஆட்சி அவரை விடுதலை செய்ததது. தேர்தல் நடத்தவும் ஒத்துக் கொண்டது. ஆகவே அன்றைய வெள்ளை நிற ஜனாதிபதி டி கிளர்க்குகிற்கும், நெல்சன் மண்டேலாவிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தது. அது மட்டுமல்ல பொதுத் தேர்தலும் 1994ல் நடந்து கறுப்பின மக்கள் ஆட்சி நெல்சன் மண்டேலாவினை ஜனாதிபதியாக கொண்ட ஆட்சி 1999 வரை நடந்தது; தனக்கு இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி தேவையில்லை என்று மறுத்தும் விட்டதால் அவர் மிகவும் போற்றக்கூடிய தலைவராக கருதப் படுகிறார்.

          மார்ட்டின் லூதர் கிங்: மார்டின் லூதர் கிங், இளையவர் ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர் ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். ஆனால் என்னானது காந்தியைப்போல வெள்ளை நிற வெறியாளர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். ஆனால் தன் கறுப்பின மக்கள் உரிமைக்காக சிந்திய குருதி பிற்காலத்தில் வீண் போகவில்லை. காரணம் கலப்பின பாரக் ஒபாமா அந்த வெள்ளை நிறவெறி மக்களையும் வென்று ஒரு தடவையல்ல இரு தடவை அமெரிக்கா ஜனாதிபதியானார் என்பதும் வரலாறு.

          சீன நாட்டின் மாசே துங் ;  கிராம விவசாய குடும்பத்தில் பிறந்து, சிறு காலனி விவசாய நாடாக இருந்த சீன நாட்டினை இன்று மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக பொருளாதாரம், கல்வி, பெண்கள் உரிமை, விஞ்ஞானம், நல்ல சுகாதாரம், வின்வெளி  ஆராய்ச்சி, அணு ஆயுதம் போன்ற பல்வேறு துறையிலும் சவாலாக இருக்கிறதிற்கு மூல காரணமே மாசே துங் தான் என்றால் மிகையாகாது. சாதாரண விவசாய குடும்ப உடை எப்படி அணிந்திருந்தாரோ அதனை விட்டு விடவில்லை, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் படவில்லை. 1949 ம் ஆண்டிலிருந்து 1976 வரை சீனாவினை வழி நடத்திய மகா பெரிய தலைவராவார்.

 

                    காயிதே மில்லத் முகமது இஸ்மாயில்: எல்லோராலும் கண்ணியமிகு என்று அடை மொழியுடன் அழைக்கப் பட்டவர். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்பு நாங்கள் இந்தியர்கள் ஆகவே இந்தியாவில் தான் இருப்போம் என்று கூறி இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்தவர். இந்திய அரசியலமைப்பு சபையில் உறுப்பினராகவும் இருந்தார். இந்திய பாராளுமன்றத்தில் ராஜ்ய சபை உறுப்பினராக ஒரு தடவையும், மக்களவையில் மூன்று முறையும் தேர்தலுக்கு அடுத்த மாநிலமான கேரளாவிற்கு செல்லாமலே உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார் என்றால் அவர் மற்ற தலைவர்களை விட உயர்ந்த மனிதரலல்லவா. அது மட்டுமா அறிஞர் அண்ணா 1967ம் ஆண்டு முதன் முதலில் பதவி ஏற்பதிற்கு முன்னர் குரோம்பேட்டையிலுள்ள காயிதே மில்லத் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு பதவியேற்றார் என்பது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் பெருமை சேர்த்துத் தந்தவர். பேட்டை முதலாளி என்று தோல் தொழில் வைத்திருந்தாலும் ஆடம்பர மில்லாமல் தனது குரோம்பேட்டை வீட்டிலிருந்து மின்சார ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்து பீச் ரயில் நிலையம் வந்து இறங்கி கட்சி அலுவலகத்திற்கு சைக்கிள் ரிக்சாவில் சென்றதினை நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கண்டுள்ளேன். ஆனால் இன்றைய இஸ்லாமிய தலைவர் அவ்வாறு ஒருவர் உள்ளார் என்று சொல்ல முடியுமா?

          நான் மேலே சுட்டி காட்டிய தலைவருக்குண்டான தகுதிகள் தற்போதைக்கு சமுதாயத்தில் யாருக்காவது இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்.பிரிந்து கிடந்த சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்ததால் ஆங்கிலேயர் இந்தியாவினை கைப்பற்றி 200 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர்.இன்று 17 சதவீதம் உள்ள நம் சமுதாயம் ஒற்றுமை இல்லா தலைவர்களால் மற்றவர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் நாங்கள் இத்தனை சதவீதம் இருக்கிறோம், எங்கள் சமுதாயம் ஒற்றுமையாக உள்ளது எங்களுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்குங்கள் என்று நென்சுயர்த்தி சொல்ல முடியவில்லையே அது ஏன்.எப்போது ஒற்றுமை என்ற பாசக்கயிறுனை கெட்டியாக பிடித்துக் கொள்கிறதோ அப்பொதுக்குத்தான் சமுதாயத்திற்கு விடிவுகாலமாகும். நாம் எல்லோரும் படித்த ஒரு கதை 'நான்கு காளை மாடுகள் ஒற்றுமையாக வயலில் மேய்ந்ததாம், அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சென்றதாம், சில காலங்கள் நகர்ந்து காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு தனியே வயலில் மேய்ந்ததாம், அதனைப் பார்த்து சந்தோஷம் அடைந்த புலி காளை மாடுகளை வேட்டையாடியதாம், அதுபோன்ற நிலை தான் தற்போது உள்ளது நமது சமுதாயத்தில், இந்த நிலை எப்போது மாறுமோ அப்போது தான் நமது சமுதாயத்திற்கு விடிவு காலமா?