Tuesday 22 May, 2012


பழமை காலம் பொற்காலமா?
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,,பீ.எஸ்(ஓ)

வயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம். ஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.

வயதானவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை சிறந்தது என்று சொல்வதிற்கு கீழ்க்கண்ட காரணங்களை கூறுகின்றனர்:
1) பழைய பாட்டினை ரேடியோவில் அல்லது தொலைக் காட்சியில் கேட்டால் என்னோ அருமை என்று புகழுவர்.
ஆனால் அவர்கள் காலத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புலி ஏ.ஆர். ரஹ்மான் போன்று இருந்து உலக பரிசினைப் பெற்றார்களா என்றோ, அல்லது மெல்லிசை இசைப்புயல் இளையராஜா போன்று இங்கிலாந்துக்குச் சென்று சிம்பொனி இசை அமைத்தது உண்டா என்று கேளுங்கள் இல்லை என்று கையினை விரிப்பார்கள்.


2) முன்னாள் ஆசிரியர்கள் போன்று எவரும் பாடம் நடத்த இன்று முடியாது என்று ஆசிரியர் புகழ் பாடுவார்கள்.
ஆனால் அவர்கள் காலத்தில் இன்றைய திருநெல்வேலி 11 வயது சிறுமி சாலினி எம்.சி,ஏ. பட்டம் பெற்றும்திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலை மாணவர்களுக்கு நெட்வொர்க் பாடம் நடத்தி புகழ் மாலை சூட்டியது போல ஒரு நிகழ்ச்சி உண்டா என்றும், ,, டி.மெட்ராஸ் என்ஜிநீரியங் புதிய பட்டதாரி ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் வருட சம்பளம் போன்ற வேலை அன்று கிடைத்ததா என்று  கேளுங்கள் இல்லை என்பார்கள். 
3) அந்தக் காலத்து கூரைப் பட்டுசேலை சிறந்தது என்று பெட்டியில் மூடி மூடி வைத்து பேத்திகளிடம் பீற்றிக் கொள்ளும் பெண்களிடம் இன்றைய ஐம்பது டிசைன் கொண்ட ரூபாய் ஐம்பது ஆயிரம் முதல்  ஒரு லட்சம் வரை மதிப்புள்ள பரம்பரா பட்டுச் சேலை போன்று அன்று தயார் செய்ய முடிந்ததா என்று கேளுங்கள் இல்லை என்பார்கள்.
4) சில நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கும் மத, ஜாதிக் கலவரம் போன்று அன்று இல்லை என்பார்கள். ஆனால் பல்வேறு மதம், ஜாதி மக்கள் வாழும் இடத்தில் அப்போதைக்கப்போது சிறு,சிறு தீப்பொறிகள் ஏற்படுவது எப்போதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனை ஊதி பெரிதாக்கும் இன்றைய  ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று நிறைய மக்களிடம் போய்ச்சேராததால் அவர்கள் அறியாமல் இருந்து இருக்கலாம்.
5) தங்கள் காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள குடும்ப பாசத்தினை அளவிற்கு அதிகமாக புகழ்வார். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த ஜோடிகளைக் கேளுங்கள் தாங்களின் புது திருமண வாழ்வின் சுவையினை இன்றைய இளம் ஜோடிகள்போல் அறிய முடிய வில்லை என்று புலம்புவார்கள்.
6) அந்தக் காலத்தில் குடிசை வீடானாலும் காற்றோட்டமும் இயற்கை சூழலும் நிறைந்ததாக கூறுவார்கள். ஆனால் அதே பெரியவர்கள் இன்றைய ஜன நெருக்கடியிலும்  கட்டில் மெத்தையும் வசதியான ஏ.சி. அறையினைத் தேடுவது ஏன் என்று கேளுங்கள் பாரக்கலாம், அசட்டுச் சிரிப்பினை உதிர்ப்பார்கள்.
7) அந்தக் காலத்தில் கிராமங்களில் மண் ரோடும், நிலக்கரி புகை கக்கும் ரயிலும், டீசல் புகை கக்கும் கம்பி வைத்து ஸ்டார்ட் செய்யும் பஸ்சும் தான், ஆனால் இன்று பசுமை நிறைந்த அகலப் பாதை ரயிலும், ஏசி மற்றும் ஏர் பஸ்சும், பேட்டரி காரிலும் தார் மற்றும் சிமிண்ட் ரோடுகளில் பயணம் செய்து சுகம் அனுபவித்தது உண்டா என்று கேளுங்கள். இல்லை என்பார்கள். 
என் தந்தை மலேசியாவில் உள்ள பினாங் துறைமுகத்திலிருந்து  1965 ஆம் ஆண்டு நாகை துறைமுகத்திற்கு கப்பலில் ஆறு நாட்கள் பயணம் செய்து களைத்துப் போய் வந்தார்கள். அவர்களை வரவேற்க நான் சென்றிருந்தேன். கப்பல் கடலில் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தி பயணிகளை சிறு, சிறு போட்டுகளில் அழைத்து வந்து பொட்ட வெயிலில் உள்ள குவாரண்டின் என்ற முள் கம்பிக்குள் நிறுத்தி பல மணி சோதனைக்குப் பின் பயணிகள் வெளியே வந்தார்கள். ஆனால் இன்று மலேசியாவிலிருந்து குளு, குளு வசதியுடன் கூடிய விமானத்தில் மூன்று மணி நேரத்தில் சென்னை வந்து விடுகிறது, அது மட்டுமா பயணிகளுக்கும், அவர்களை வரவேற்க நிற்கும் உறவினர்களுக்கும் குளிர் வசதி செய்யப் பட்ட அறைகள்  உள்ளது போன்று அன்று இல்லையே என்று பழமை வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

8) அந்தக் காலத்தில் தகவல் ஒலி பரப்பு வசதிகள் எட்டாக் கனியாகவே இருந்தன. 1964 ஆம் வருடம் புயல் அடித்து தனஷ்கோடி தீவே அழிந்தும், ராமேஸ்வரம் ரயிலும் பாம்பனில் அடித்துச் செல்லப்பட்டது சென்னைக்கு சில மணி நேரம் தெரியவில்லையாம். தனஷ்கோடி போஸ்ட் ஆபீசில் பணியாற்றிய 'மோர்ஸ்' என்ற சங்கத மொழி தொழிலாளி அனுப்பிய  தகவல் மூலம் தான் தெரிந்து  மீட்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாம். 
சில தபால்கள் ஒரு வருடம் சென்று கூட கிடைத்ததாக சொல்லுவார்கள். ஆனால் இன்று மின் அஞ்சல் அடித்த அடுத்த நிமிடமே அறிந்து கொள்ளும் நிலை வந்து விட்டதே  என்று பெருமைப் பட வேண்டாமா?
9) அந்தக் காலத்தில் கிராமங்களில் தொலைபேசி கிராம தபால் நிலையத்திலும், டவுண் பஞ்சாயத்தில் ஓரிரு வீடுகளிலும் தான் டெலிபோன் சேவை வசதி இருந்தது. ஒரு முறை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் முதலாவது உலக யுத்தத்திற்கு பின்பு சாதாரண யாத்திரிகராக கொழும்பு சென்று விட்டு, சென்னையிற்கு வந்து அண்ணா சாலையில் ராஜாஜி ஹாலுக்குப் பின் உள்ள அட்மிராளிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கி இருந்தாராம். சர்ச்சில் மதியம் தூக்கம் போடும் பழக்கத்தினை கொண்டவராக இருந்தார். அப்படித் தூங்கும்போது வரண்டாவில் பெரிய சத்தம் கேட்டு விழித்து இருக்கிறார் . அங்கு நின்ற காவலாளியினை அழைத்து யார் சத்தம் போடுவது என்று கேட்டிருக்கிறார். காவலாளியும் பக்கத்து அறையில் தங்கி இருக்கிற மிலிடரி சார்ஜெண்ட் இங்கலாந்தில் உள்ளவர்களுடன் வரண்டாவில் உள்ள போனில் பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறார். உடனே சர்ச்சில் அந்த காவலாளியிடம் அந்த சார்ஜெண்டிடம் சொல்லுங்கள் அவர் போனில் பேசுகிறார் என்று, அவர் முன்னாள் அவருடைய சேவகர் இருப்பதுபோல சத்த மிடுகிறார் என்று கேலியாக சொன்னாராம். இது எதற்கு சொல்கிறேனென்றால், அப்போதைக்கு போன் வசதி மிகக்குறைவே, ஆனால் இன்று தெருக்  கூட்டும் ஆயாவிலிருந்து, சாகக் கிடக்கும் பெரியவர் வரை இடுப்பிலும், தலை மாட்டிலும் கைபோன் வைத்துக் கொண்டு நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசும் அளவிற்கு வசதி வந்து விட்டதே!
10) முன்பு பக்கத்து நாடான சீனாவும், பாக்கிஸ்தானும் இந்தியாவின் படை, மக்களின் மன வலிமை ஆகியவற்றினை 1965, 1971 போர்கள் மூலம் சோதித்தன. அதேபோன்று அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளும் இந்தியாவினை பஞ்ச நாடு என்றும், ஆட்டிப் படைத்தும் கொண்டிருந்தன. ஆனால் இன்று உணவில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்த படியாக உலகில் இடம் பிடித்து, அணு ஆயுத படைப்பிலும், விண்வெளிக்கு மேலை நாடுகளை மிஞ்சும் அளவிற்கு கோள்களை அனுப்பி ஆராச்சியில் மிஞ்சுகிற நாடு நம் நாடு. 
ஆகவே சிலர் பழமை பேசி தம்பட்டம் அடித்து புதிய வளர்ச்சியினை தங்களுடைய பேச்சின் மூலம் புறக்கணிப்பது, இக்கரைக்கு அக்கறை மேல் என்று சொல்வது போல் உள்ளதல்லவா? ஆனால் இன்றைய இந்தியாவே சிறந்த பொற்காலம் என்றால் மிகையாகுமா?

Wednesday 16 May, 2012


எப்படி எல்லாம் தொழுவதை விட,
இப்படித்தான் தொழுவது என்பதே மேல்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

வாழ்வியல் நெறியினை பின்பற்றி வாழ்வது எவ்வாறு என்று அணைத்து மதங்களும், இஸ்லாமிய 
மார்க்கமும் சில கட்டளைகளையும், விதி முறைகளையும் விதித்துள்ளன. ஆனால் எப்படி எல்லாமும் 
வாழெல்லாம் என்று சிலர் நினைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன.
அதே போன்று தான் அகிலத்தினைப் படைத்து, அனைத்துக் கண்டங்களையும் அதன், அதன் இடங்களிலேயே நிறுத்தி,
கடலைப் படைத்து மனிதன் பயணம் செல்லும் கப்பலையும், எண்ணெய், வாயு, ஆபரண முத்து போன்றவையினயும்,
உணவு வகைகளையும் படைத்து, மனிதன் பூமியில் வசதியாக வாழ பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, ஏக 
இறைவனுக்கு நன்றி செலுத்த வசதியாக தொழுகையினை அல்லாஹ்  கட்டாயப் படுத்தியுள்ளான்.
வீட்டில் இருந்து தொழுவதினை விட பள்ளிக்கு நடந்து வந்து ஜமாத்துடன் தொழுபவர்களுக்கு அல்லாஹ் பல நன்மையினை வழங்குவதாக இமாம் புகாரி சொல்லி உள்ளார்கள்.
தொழும்போது நெற்றி,இருக்கைகள், இரண்டு கால்கள், இரண்டு கால் மூட்டுகள் ஆகிய ஏழு உறுப்புகள் சஜ்தா செய்யும் அளவிற்கு தொழ வேண்டும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
மன அமைதிக்காகவும், உடல் உறுப்புகள் கட்டுபாடுடன் வைதிருப்பதிற்காகவும் சிலர் பணத்தினை செலவழித்து 
'யோகா' கற்றுக் கொள்கிறார்கள். சென்னையில் சில பூங்காக்களில் யோகா பயிற்ச்சியில் முஸ்லிம் சகோதரர்களும்,
சகோதரிகளும் கூட கலந்து கொள்கிறார்கள். ஆனால் பயிற்சி முடிந்ததும் யோகா குருக்கள், 'பாரத் மாதாகி கி ஜே' என்று சொல்லும் போதும் முஸ்லிம் சகோதரர்களும் அறியாமல் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு நமது நாடு இந்திய நாடு என்று தெரியாமலில்லையே! பின் ஏன் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழாமலில்லைதானே! அப்படி யோகா நடத்தும் பயிற்சியில் யோகா குரு ராம்தேவ் படம் பெரிதாக வைக்கப் பட்டு இருக்கும். ஆகவே உருவமில்லா இறைவனுக்கு உருவம் கொடுத்து முஸ்லிம்களையும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலை அல்லவா இது?
ஏன் அதே அமைதியினையும், உள், புற சுத்ததினையும்  தொழுகை தரவில்லையா? மனதில் பல்வேறு அலை பாயும் முஸ்லிம்கள் தான் தொழுகையினைப் புறக்கணித்து வேறு பயிற்சிகளை தேடுவார்கள். ஈமானுள்ள எவரும் யோகா பக்கம் தலைக் காட்டாது தொழுகையில் அத்தனை உடல், உளப் பயிற்சியும் உள்ளது என்று ஐவேளை தொழுகையினை கட்டாயமாக கடைப் பிடிப்பார்கள். 
சிலர் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டுள்ளதினை சில எடுத்துக் காட்டுதல் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்:
1)   வெள்ளி தோறும் ஜும்மா தொழுகைக்கு முந்தி அடித்துக் கொண்டு வருவதினைப் பார்க்கலாம். 'ஜும்மா தொளுகையினைப் பற்றி முஸ்லிம் 1500 யில் ரசூலல்லாஹ் கூறியிருப்பதாக சொல்லும்போது, ‘மக்கள் ஜும்மா தொழுகையினை கைவிடுவதினை விலகியிருக்கட்டும், ஏனென்றால் அவர்கள் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி அலட்சிய வாதிகளின் பட்டியலில் சேர்க்கப் பட்டு விடுவார்கள்' என்று கூறியதாக சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அப்படி முந்தி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறவர்கள், குத்பா பிரசங்கத்தினையும், குத்பாவினையும் செவி மடுத்துக் கேளாது எங்கிருந்துதான் அந்தத் தூக்கம் வருமோ, அதில் ஆழ்ந்து விடுவார்கள். அதற்கு வசதியாக தற்போது பள்ளிகளில் குளிர் சாதன வசதியும் செய்துள்ளார்கள  பின் கேட்கவா வேண்டும். 
திர்மிதி 484இல்  ரசூலல்லா கூறியிருப்பதாக சொல்லப் பட்டுள்ளதாவது, 'ஜும்மா நாளில் உங்களில் எவருக்கும் உறக்கம் வந்தால், அவர் தம் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்' என்பதினை கூட அவர்கள் செய்வதில்லை.
ஆகவே தூக்கமும் கண்களை தழுவட்டுமே என்ற நிலையினை மாற்றி தூக்கமும் கண்களை விட்டு ஜும்மாத் தொழுகையில் அகலட்டுமே என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இடம் பிடிப்பதிற்காக பிந்தி வந்தவர்கள் இடம் இல்லாவிட்டாலும் உட்கார்ந்து இருப்பவர்கள் முதுகினை மிதித்துக் கொண்டு முன்னே செல்வது மட்டு மல்லாமல், ஜும்மா பயான் இமாம் உரத்தக் குரலில் சொல்லும்போது விட்ட தொழுகையெல்லாம் எனக்கென்ன என்று உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் வரும் அளவிற்கு தொழுது  கொண்டு இருப்பார்கள். அது மட்டுமா சிலர் தொழ தக்பீர் கட்டும்போது இரண்டடி அகலத்திற்கு காலை விரித்துக் கொண்டு அடுத்தவர்க்கு இடைஞ்சல் செய்யும் அளவிற்கு நின்று கொண்டிருப்பதினைக் காணலாம். ரசூலல்லா சபைக்கோ அல்லது தொழுகைக்கோ பின்னால் வந்தால் பின் சப்பில் அமருவதையும், தொழுவதையும் கடைப் பிடித்தார்கள் என்று ஹதீசுகள் சொல்கிறதே! பின் ஏன் நாம் ரசூலல்லா வழி பின்பற்றக்கூடாது?ஒரு சிலர் பய பக்தி இல்லாமல் காலை கிப்லா நோக்கி நீட்டிக் கொண்டும், சுவரிலோ, தூணிலோ சாய்ந்து கொண்டும்  உட்கார்ந்து இருப்பதினை ஜும்மா தொழுகையினில் காணலாம். அப்படி நடப்பவர்கள் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டவர்கள் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
2)   2011 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் ஹான்ஸ்பி நகரில் உள்ள ஜும்மா தொழும் இடத்திற்கு சென்றேன். அது சிட்டி கவுன்சில்  கம்யுனிட்டி சென்டர் ஆகும். வெள்ளி அன்று வாடகைக்கு எடுத்து தொழுகை  நடத்துகிறார்கள். வருகை தந்தவர் மொத்தம் முப்பது பேர் ஆகும் அதில் நான்கு பேர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு லெபனான் நாட்டுக் காரர் ஆங்கிலத்தில் பயான் செய்து கொண்டு இருந்தார். அப்போது தொழிலாளர் மூவர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து வந்தார்கள். அதில் இருவர் பேகி என்ற முழங்கால் வரை உள்ள அரை ஆடையும், ஒருவர் முழங்கால் மேல் உள்ள கால் சட்டையும் அணிந்து இருந்தார். அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒருவர் உட்கார்ந்து கொண்டே தனது கைலியினை கழட்டிக் கொடுத்துக் கட்டிக்கொள்ள கேட்டுக் கொண்டார். அப்போது அவருடைய கால்கள் முட்டிக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப் பட்டு, பேகி என்ற முட்டுக்குக் கீழ் உள்ள டவுசர் அணிந்து இருந்தார். தொழுகை முடிந்ததும் அவரை சந்தித்து நலம் விசாரித்து அவர் பெயர் ஹுசைன் என்றும் அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும்போது கால்களை இழந்ததாக சொன்னார். நான் அவருடைய ஈமானையும், ஈகைக் குணத்தினையும் பாராட்டாமல் இருக்கவில்லை. அவர் தனது கைலியினைக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபரும் முழங்காலுக்கு மேலுள்ள டவுசரை அணிந்து தொழுதிருப்பார்.
3)   5.5.2012 அன்று இளையான்குடி மேலப் பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கு ஒரு ஹாலில் முப்பது சேர்களுக்கு மேல் போடப்பட்டு அதில் பலர் உட்கார்ந்து தொழுதும், சஜ்தாவில் தரையில் நெற்றி வைப்பதிற்க்குப் பதிலாக எழுதும் மரப் பலகையில் நெற்றியினை வைத்து தொழுவதினையும் கண்டேன். தொழுகை முடித்து வெளியே வரும்போது என் பள்ளித்தோழன் கமால் கையில் ஒரு துணிப் பையினை கொண்டு வந்தான். அவனிடம் பையில் என்ன என்று கேட்டேன். அவன் சொன்னான், 'முன்பு நானும் கால் வலியால் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவேன். ஆனால் ஒரு தடவை இமாம் பயான் செய்யும் பொது நெற்றி தரையில் பட தொழுவது நல்லது என்பதால், நான் தரையில் தொழும்போது முட்டி வலிக்காமல் இருப்பதிற்காக துண்டை முட்டிக்குக் கீழ் வைத்துத் தொழுவேன் என்றான். முடியாவிட்டாலும் எனது பள்ளித் தோழனின் ஈமானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
4)   சென்னை மண்ணடி செம்புதாஸ் பள்ளிக்கு ஜும்மா தொழுகச் செல்வேன். அங்கு ஒரு 22-25 வயது மதிக்கத் தகுந்த வாலிபர் சிறிது தாமதித்து தொழுக வந்தார். அவருடைய இடது கால் முட்டிக்கு மேல் வடிவில் வளைந்து இருந்து, வலது காலில் மாடிப் படிகளில் தத்தி தத்தி ஏறி இரண்டாவது மாடிக்கு தொழுகச் செல்வதினைக் கண்டேன். அவர் நினைத்து இருந்தால் முதல் மாடியிலே ஒரு நாற்காலியினை தயார் செய்து உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் சற்று காலந்தாழ்த்தி வந்ததால் அவர் இரண்டாவது மாடிக்கு செல்வதுதான் சிறந்தது என்று நினைத்து சென்றார். அங்கு தொழுகச் செல்லும் பலரும் ஜும்மா நாள் அன்று காணலாம். அவருடைய ஈமானும், தொழுகையின் ஒழுக்கமும் எவ்வளவுச் சாலச் சிறந்தது என்று எண்ணி வியந்தேன்.

தொழுவதினை ஒரு சடங்காக கருதும் சிலர் இனிமேல் வாகனத்தில் அமர்ந்து சினிமா பார்ப்பது போல் வாகனங்களில் பள்ளிவாசல் முன்பு உட்கார்ந்து தொழுதாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.  ஆகவே தொழுவது ஒரு சடங்காகக் கருதாது, அது கடமையாகக் கருதி, நம்மைப் படைத்து, பலன் பல வகை தந்து, அழகு பார்க்கும் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதிற்காக செய்யும் கடமையாக கருதி பய பக்த்தியுடன் நாமும் தொழுது, நமது சந்ததிகளையும் தொழச் செய்வது நமது கடமையல்லவா?Thursday 10 May, 2012


முஸ்லிம்களுக்கு உதவுங்கள், ஆனால் உபத்திரம் செய்யாதீர்கள்.
(டாக்டர் ஏ பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

சமீப கால அரசு நடவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகளுக்கும் நமது சமூதாய மக்களுக்கு விளக்கி, எந்த விதத்திலும் உங்கள் நடவடிக்கை முஸ்லிம் மக்கள் சலுகை பெற தடையாக இருக்கக் கூடாது என்பதினை வழியுறித்தி இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது:

1) அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 30 படி கல்வி நிறுவனங்களை நிறுவவும், செயலாட்சி செய்யவும், சிறுபான்மையிரின் உரிமை. கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வதில் சமய அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ சிறுபான்மையிரால் உள்ளவர்களின் மேலாண்மையில் இருக்கிறது என்ற காரணத்தைக் 
சமுதாய சொந்தங்களுக்கு சமீப கால நடவடிக்கைகளையும், அதில் நம்மவர் செயல் முறைகளையும் 
காட்டி கல்வி நிறுவனம் எதற்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டக் கூடாது.
ஆனால் சிறுபான்மையிரில் கல்வி நிறுவனத்தின் உரிமையானது, மாநில அரசின் ஒழுங்கு முறைப் படுத்தும் வழி முறைகளுக்கு கட்டுப் பட்டதாகும் என்று உச்ச நீதி மன்றம் ஜோசப் டீச்சர் ட்ரைனிங் கல்லூரி மற்றும் மாநில அரசின் 
வழிக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மைனாரிட்டி அந்தஸ்துக்காக மாநில அரசிடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஒரு வருடத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் தேசிய சிறுபான்மை ஆணையகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்ற முறையினை பல கல்வி நிலையங்கள் அறியாமல் உள்ளன. அப்படி விண்ணப்பிக்கும் போது, கல்வி நிறுவனம் முஸ்லிம் மைனாரிட்டி மாணவர்களுக்காகவும், மற்ற மாணவர்களுக்க்காகவும் நடத்தப் படுகிறது என்று விண்ணப்பம் அனுப்ப வேண்டும். 
9.5.2012 அன்று பாராளு மன்றம் ஆறு வயதிலிருந்து பதினாறு வயதுள்ள குழைந்தைகளுக்கு கட்டாய கல்வி என்ற சட்டத்தினை நிறைவேற்றி உள்ளது. அதாவது அனைத்துக் குழந்தைகளும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அத்துடன் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு அனுமதி 
வழங்க வேண்டும். ஆகவே சமுதாய மக்கள் இந்தத் தருணத்தினை விட்டுவிடாது அனைத்து முஸ்லிம் குழந்தைகளையும் கல்வி நிலையம் செல்ல வழி வகுக்க வேண்டும்.
சில முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம் அல்லாத நபர்களை தேடிச் சென்று அல்குரானை வழங்கும் பழக்கத்தினையும், அடுத்த மதத்தினவருடன் விவாதங்கள் நடத்துவதினையும் பத்திரிக்கை வாயிலாக பார்க்கின்றோம். சில ஹோட்டல் அறைகளில் இலவசமாக  பைபிளை வைத்திருப்பதினை காணலாம். எத்தனை முஸ்லிம் சகோதரர்கள் அதனை எடுத்துப் படித்திருப்பார்கள் என்றால் ஒரு சதவீதம் கூட தேறாது. நாம் சில சமயங்களில் ரோட்டில் நடந்து செல்லும்போது சில கிருத்துவர்கள் நின்றுகொண்டு மதபோதனை பிட் நோட்டிசுகளை 
விநியோகித்துக் கொண்டிருப்பதினை காணலாம். உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள். கீழே தூக்கி எறிந்து செல்வீர்கள். அதுபோன்ற நிலை அல்குரானுக்கும் மாற்று மதத்தினரிடமிருந்து வந்து விடக் கூடாது. 'உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்ற கொள்கையினை மேற்கொண்டு நமது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியினையும், உலகக் கல்வியினையும் வழங்க இது சிறந்த சமயம், அதனை நழுவ விடக்கூடாது.

2) உச்ச நீதி மன்றம் 8.5.2012 அன்று ஹஜ் பயணச் சலுகைகளை பத்து வருடத்திற்குள் குறைத்து நிறுத்தி விட வேண்டும் என்று மத்திய அரசினை கேட்டுக் கொண்டுள்ளது.
அதனை வரவேற்றும், எதிர்த்தும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அறிக்கையினை விடுவதைப் பார்க்கலாம். 
'வாகன, தங்கும் இட வசதி உள்ளவர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது' யாரும் மறுக்க மாட்டார்கள். 
ஆனால் இந்திய திருக் கண்டத்தில் அறுபது சதவீத மக்கள் சமூக,கல்வி, பொருளாதாரத்தில் தலித் மக்களைவிட 
[பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லும்போது தங்கள் வாழ்நாளில் எங்கே பெரும்பாதியான முஸ்லிம்கள் ஹஜ் செல்ல முடியும். அரசு உதவியில்லாமல் அரசு மானியம் பெரும் நவாப்களும், செல்வந்தர்களும், ஸ்டார் ஹோட்டல் முஸ்லிம் முதலாளிகளும்  தான் ஹஜ் பலனை அனுபவிக்க முடியும். அனால் அதே மதத் தலைவர்களும், செல்வந்தர்களும், அரசு வழங்கிய மற்ற சலுகைகளையும், டி.வி. காஸ் அடுப்பு, மிக்சி, போன்ற இலவசங்களை வாங்க 
வில்லை என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று கேளுங்கள். குறைந்த பட்சம் நவாப் தனது சொகுசுக் காரில் பறக்கும் கொடியினையும், அரசு சலுகையினையும் விட்டுத் தந்து சாதாரண குடிமகனாக நடமாட தயாரா என்று கேட்டுப் பாருங்கள். முடியாது என்பார்கள்.,
இந்தியாவில் புண்ணியத் தளங்களாக உள்ள இமய மலை திபெத் எல்லையில் இருக்கும் மானசரோவர், மற்றும் காஷ்மீரில் இருக்கும் பத்ரிநாத் கோயிலுக்கும் செல்ல சலுகைகள் இருக்கும்போது மைனாரிட்டி முஸ்லிம்கள் சலுகையினுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு. அதுவும் பணக்கார முஸ்லிம்களிகளிருந்தும், சில காரணங்களுக்காக மக்கா செல்ல இயலாத சமுதாய தலைவர்களிடமிருந்தும்  வருவது ஏன் என்று தெரியவில்லை. 
 ஏற்கனவே அரசு 25 சதவீத வருமானத்தினை மக்கள் சமூக நலன் கருதி செலவழிக்கலாம் என்ற நீதி மன்ற தீர்ப்பு இருக்கும்போது அரசு ஹஜ் பயண செலவிற்கு சலுகைகளை வழங்குவது தவறாகாது என்று அரசிடம் சொல்லி உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு மறு ஆய்வு செய்ய குரல் எழுப்ப வேண்டும். அத்துடன் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் லீகும், மற்ற சமுதாய இயக்கங்களும்  அரசிடம் கோரிக்கையினை வைப்பதோடு, மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்ய வேண்டும். 

3) சாதி கணக்கெடுப்பு:
மத்திய அரசு கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறிய சமூகம், பின் தங்கிய சமூகம் என்று அறிந்து சலுகைகளை வழங்குவதிற்காக சாதி வாரி கணக்கு எடுக்கப் படுகிறது. ஏற்கனேவே முஸ்லிம்  சமூதாயம் அரசு சலுகைகளுக்காக லெப்பை, தக்கினி,மாப்பிளா, தெலுகு பேசும் வகுப்பினர் என்று கணக்கு எடுத்து அதன்படி கல்விக்காகவும், வேலை வாய்ப்பிலும் சலுகை வழங்கப் படுகிறது. தற்போது எடுக்கப் படும் கணக்குப் படி துல்லிதமாக 
சலுகைக்கு தகுதியான சமூகம் எது என்று பார்பதிற்காக  கணக்கெடுப்பு நடத்தப் படுகிறது.
உடனே ஒரு மேதாவி இமாம், வெள்ளிகிழமை பிரசங்கத்தில் தனது முகம் இரவு டி.வியில் தெரிவதிற்காக அனைவரும் முஸ்லிம் என்று தெரிவியுங்கள், சாதி உட்பிரிவு இல்லை என்று தெயவியுங்கள் என்று கூறியுள்ளார்.
சிலருக்கு தங்களை பஞ்சாபின் தீவிரவாத தலைவர் பிந்தரன் வாலே என்று நினைப்பு. அதுதான் முஸ்லிம் மக்களை எந்த சலுகையும் பெறாமல் படு குழியில் தங்கள் பிரசங்கம் மூலம் தள்ளப் பார்க்கிறார்கள்.
கணக்கெடுப்பில் மதம் என்ற இடத்தில் இஸ்லாத்தினையும், சலுகைக்கான உட்பிரிவில் லெப்பையோ, தக்கினியோ மற்ற இரு பிரிவினையோ சொல்ல வேண்டும். அப்போது தான் நமக்கு சலுகை கிடைக்கும். இஸ்லாம் மதமில்லா மார்க்கமானாலும் கணக்கெடுப்பில் இஸ்லாமிய மதத்தினவர் என்றே சொல்ல வேண்டும்.
அதே போன்று தான் முக்குலத்தோர் பல பிரிவு இருந்தாலும், சலுகைக்காக அகமுடையார் என்று குறிப்பிட வேண்டும் என்று அந்த தலைவர் சொல்லும்போது, நமது இமாமிற்கு மட்டும் எப்படி இந்த ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை.  ஆகவே சமுதாய இயக்கங்களும், மார்க்க தலைவர்களும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் பெற்றுத் தர உதவ வேண்டுமே தவிர, தடைக்கல்லாக இருக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
4) 7.5,2012 அன்று இந்திய சிவில் செர்விசெஸ் பரீட்சை முடிவுகள் அறிவிக்கப் பட்டன.
அந்தப் பரிட்சையினை நாலரை லட்சம் போட்டியாளர்கள் எழுதி உள்ளனர். அதில் முஸ்லிம்கள் 1200 பேர்கள் ஆகும்.
அதில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் 29 பேராகும். அது 15 சதவீதம் கொண்ட இந்திய முஸ்லிம்களில் 2.3 சதவீதமே ஆகும்.
இன்னும் கூட முஸ்லிம் கல்வி நிலையங்களும், சமூதாய அமைப்புகளும் முனைப்பு எடுத்து முஸ்லிம் மாணவர்களை சிவில் செர்விசெஸ் மத்தியிலும், மாநிலத்திலும் எழுத தயார் செய்யவில்லை என்பதே இந்தக் கணக்கு காட்டுகின்றது.
சிலர் பயிற்ச்சி மையம் என்று போலியாக ஆரம்பித்து முஸ்லிம்களை திசை திருப்புகிறார்கள். ஒரு இமாம் I.A.S பயிற்ச்சி மையம் ஆரம்பித்திருப்பதாக சொல்லிதொழுகை நடத்துவதினை விட்டு விட்டு, ஊரெல்லாம் பவனி வருகிறார். அவர் I.A.S என்று சொல்லுவதிற்கு 'இஸ்லாமிய அட்மிநிச்ற்றேடிவ்  சர்வீஸ்' என்று  விளக்கம் தருகிறார் என்றால் பாருங்களேன். அவர் எப்படி அறிவு ஜீவியாக இருப்பார் என்று.  வீணான விளக்கங்களைத் தராது வழி தெரியாத முஸ்லிம் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க கல்வி நிலையங்களில் பயிற்ச்சி மையம் நடத்தி வழி காட்ட வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்களை, சமூதாய மக்களை நம்மால் இயன்ற அளவு நல்வழி காட்ட வேண்டும்.
அவ்வாறு முடிய வில்லை என்றால் அவர்கள் முன்னேற எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருக்ககூடாது என்று
வேண்டுகோள் விடுக்கின்றேன்.