Wednesday 26 September, 2012


"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?"
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
2012 செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் உலக முஸ்லிம்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்திய வாரங்களாக அமைந்தது. அதற்கு காரணம், 'மனிதரில் புனிதர், கோமான்கள் போற்றிய சீமான், ஈருலக ஒளி விளக்கு எம்பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள் பற்றி அமெரிக்கா வாழ் படத்தயாரிப்பாளர்கள் 'ரெவ்.டோரி ஜான்', 'மோரிஸ் சாதக் மற்றும் கிஸ்மத் சக்லான' ஆகியோர்  அவதூறு குறும் படம், "இன்னோசென்ஸ் ஆப் இஸ்லாம்" எடுத்து அதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் படி 'யு டுப்' என்ற வலை தளத்தில் வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். 
அதனைப் பார்த்த முஸ்லிம்கள், 'தங்கள் உயிருக்கும் மேலான ரசூலல்லாஹ் பற்றி ஏளனமும், அவமானமும் செய்கிறார்களே என்றால் பொறுத்துக் கொள்வார்களா? அது அமெரிக்காவில் கருத்து சுதந்தரமாக அவர்கள் கருதலாம். அதே கருத்துச் சுதந்தரத்தினை உபயோகித்து இயேசு பெருமானார் பற்றியோ அல்லது மோசஸ்  அவர்களைப் பற்றியோ தவறான குறும்படம் முஸ்லிம் அல்லாதவர் கூட வெளியிட்டால் சும்மா இருப்பார்களா? ஏன் முஸ்லிம்கள் கூட சும்மா இருக்க மாட்டார்கள் ஏனென்றால் இயேசு பெருமானாரும், மோசஸ் அவர்களும் இஸ்லாமியர்களுக்கு நபிகளாக ஈசா(அலை ) என்றும் மூஸா(அலை ) என்றும் போற்றப் படுபவர்கள் தானே! 
இவ்வளவு நடந்தும் அந்தக் குறும்படம் தடை செய்யப் படவில்லை, அந்த தயாரிப்பாளர்களை கைது செய்யப் படவில்லை. ஏன், அந்தப் படத்தில் நடித்த இரண்டு ஹாலிவுட் ஆண் நடிகர்களும், ஒரு பெண் நடிகையும் எங்களிடம் படத்தயாரிப்பாளர்கள் பொய்யான காரணத்தினைச் சொல்லி படம் எடுத்து விட்டனர் என்று நீதி மன்றம் வரை சென்றுள்ளனர். அதற்குப் பிறகாது அந்தப் படத்தினை தடை செய்திருக்கலாம். ஆனால் இது வரை அதற்கு முடிவில்லையே, அது ஏன் என்ற கோபம் இஸ்லாமியருக்கு இருக்கத்தானே செய்யும்!
ஆமாம் இவ்வளவிற்கும் அந்த தயாரிப்பாளர்களுக்கு எவ்வாறு அப்படி படம் எடுக்கத் தைரியம் வந்தது என்று ஆராயும்போது கீழ்க்கண்ட காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவது இயற்கை தானே:
1) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக வர்த்தக மையம் தகர்க்கபட்டதிற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்டா தான் காரணம் என்று ஆப்கானிஸ்தானில் படை எடுத்து நேட்டோ ராணுவம் அங்கிருது 2014 ஆம் ஆண்டில் தானே விலகியது.
2) மனித கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான காரணம் சொல்லி, இராக்கில் படை எடுத்து சதாம் ஹுசைனை அகற்றி விட்டு, உள்நாட்டு கலவரத்திற்கு வித்திட்டு விட்டது.
3) அரேபிய, ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஆட்சி செய்யும் தலைவர்கள் கொடுமையாளர்கள், ஊழல் பேர்வழிகள் என்று பறை சாற்றி மேற்கத்திய கல்வி கற்ற இளைஞர்களை தூண்டி விட்டு எகிப்து, லிபியா, டூனிஷியா போன்ற நாடுகளின் தலைவர்கள் மாற்றப் பட்டனர்.
4) ஏன் இன்னும் சிரியா, மன், பக்ரைன் போன்ற நாடுகளில் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பிற்கு வித்திட்டு விட்டனர் என்றால் மிகையாகாது.
ஆகவேதான் இஸ்லாமியர் கிள்ளுக் கீரைகள், அவர்களை குனியக் குனியக் கொட்டலாம் என்று எண்ணி தூங்கிக் கொண்டிருந்த சமுதாய இளைஞர்களை சிலிர்த்து எழ செய்து விட்டார்கள். அதன் விளைவு தான் உலகமெங்கும் ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை, வன்முறைக்கு 50 பேர்கள் இது வரை பலியாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.
அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுக்கும் தமிழக முஸ்லிம்களும் அதற்கு விதி விலக்கல்ல என்பதினைக் காட்ட 26 முஸ்லிம் அமைப்புகளும் சென்னை அண்ணா சாலையினை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஆகா தமிழக முஸ்லிம்களிடையே இத்தனை அமைப்புகளா என்று உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் 'அமைதிப் பூங்காவாக மாறிய' இன்னும் சில  இயக்கங்களும் உண்டு என்றால் பாருங்களேன்!
நான் கூண்ட, முஸ்லிம் அமைப்புகளிடம் வேற்றுமையினை மறந்து ஒற்றுமை காணுங்கள் என்று, 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு', சகோதர யுத்தம் சமுதாய தீங்கு', 'கண்கள் குலமாகுதம்மா', 'இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா', ஏன் இளைத்தாய் என் இனிய சமுதாயமே', 'முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்' போன்ற கட்டுரைகள் எழுதி முஸ்லிம் பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளி வந்துள்ளன என்பதினை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட ஆசைப் படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமியர் ஒன்று படுவது காலத்தின் கட்டாயம்.  மைனாரிட்டி சமூகமாக இருக்கின்றது என்றெண்ணி குனியக் குனியக் கொட்ட நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தின் அடக்கு முறைகளின் செயலுக்கு சவாலாக அமைந்து விட்டது தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பு அலை. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'சாக்காடையில் விழுந்து எழுந்து வரும் பன்றியிடமிருந்து விலகி இருங்கள்' என்று. அப்படி முஸ்லிம்களால் விலகி இருக்க முடியுமா இந்த விசயத்தில். முடியாது தானே!
தமிழில் மற்றுமொரு பழமொழி சொல்வார்கள், 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று. அது என்ன என்று விளக்கலாம் என்று நினைக்கின்றேன்.
ஒரு ரிஷி இறைவனிடம் தனக்கு எதனையும் பார்வையிலேயே சுட்டி எரிக்கும் வரம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றார். அதனை சோதனை செய்ய ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அந்த வழியில் வானத்தில் பரந்த கொக்கினை கோபமாக பார்த்தார். அது உடனே எரிந்து கருகி விழுந்தது. ஆகா நமக்கு யாரையும் வீழ்த்த தனி தகுதி வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் நடந்து ஒரு ஊரினை அடைந்தார். அங்குள்ள ஒரு வீட்டின் முன் நின்று, 'அம்மா யாசகர் வந்திருக்கின்றேன் சாப்பாடு வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கின்றார். வீட்டினுள் இருந்த பெண்மணி இந்தோ வருகிறேன் சிறிது பொறுங்கள் என்று சொல்லி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தன் கணவருக்கு பரிமாறிவிட்டு வெளியே சாதத்துடன் வந்துள்ளார். கோபம் அடைந்த முனிவர் ஏன் உடனே    வரவில்லை என்று கேட்டார் அதற்கு கொஞ்சம் தூரம் சென்றால் ஒரு கறிக்கடை வரும் அங்குள்ள முஸ்லிம் வியாபாரியிடம் கேளுங்கள் பதில் வரும் என்று சொல்லி விட்டாள். உடனே சாமியார் வேக வேகமாக கறிக்கடைக்குச் சென்று யாசகம் கேட்டார். வியாபாரி அந்த நேரத்தில் கடையினை அவசர, அவசரமாக மூடி விட்டு வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த வியாபாரியும் முனிவரிடம் வாருங்கள் தருகிறேன் என்று கூறி விட்டு நடையினைக் கட்டினார். வியாபாரி வீட்டினில் சென்று பசியுடன் இருக்கும் வயதான தன் தந்தைக்கு சாப்பாடு வழங்கி விட்டு அதன் பின்பு முனிவருக்கு சாதம் எடுத்து வந்தார். உடனே முனிவர் கோபப்பட்டு ஏன் இந்த சாதம் கொண்டு வர இவ்வளவு நேரம் என்னை யார் என்று நினைகின்றே என்று கேட்டு கோபப் பட்டார். அப்போது அமைதியாக அந்த வியாபாரி சாமியாரே, உங்களை விட என் வயதான தகப்பனார் தான் முக்கியத்துவம் என்றாரே பார்க்கலாம். அப்போது தான் அந்த முனிவரும் தனது  கோப வரத்திற்கு மேல் பாசமும் பற்றும் தான் முக்கியத்துவம் என்று உணர்ந்து அமைதியானார்'.
இஸ்லாம் ஒரு உலக அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமூதாயம் படைக்கும் மார்க்கம். அந்த மார்க்கத்தினை உலகினுக்கு அறிமுகப் படுத்திய இறுதி நபி பெருமானாரைப் பற்றியோ அல்லது ஏக அல்லாஹ்வினைப் பற்றியோ எந்த ஏகாதிப்பத்திய சக்திகளும் இழிவு படுத்தினால் முஸ்லிம்கள் பொறுக்க மாட்டார்கள், மாறாக பொங்கி எழுவார்கள் என்பதினை காட்ட அனைத்து இயக்கங்களும் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால் சரியா?

Wednesday 12 September, 2012

மாணவா, மாணவா, கம்பும், கத்தியும் நம் தோழனா மாணவா?

6.9.2012, 7.9.2012 தேதிகளில் சென்னை மாநிலக் கல்லூரி சம்பந்தமாக பரபரப்பான செய்திகள் வெளி வந்தன. நானும், 'பிரின்சஸ் ஆப் பிரெசிடென்சி' என்ற அந்த   மாநிலக் கல்லூரியில் 1969-1971 படித்ததால்  பிளாஷ் பேக்கான செய்திகளை உங்களோடு பகிர்ந்து  கொள்ளலாம் என  .நினைகின்றேன்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மூன்று மாநகரங்களான மெட்ராஸ், கல்கட்டா மற்றும் பாம்பே ஆகியவற்றில் இந்திய குடி மக்களுக்கும் தன்னுடைய மக்களுக்கும் பயன்படும் விதமாக மூன்று கல்லூரிகளை முதன் முதலில் ஆரம்பித்தார்கள்.  . ஆசியாவின் நீண்ட கடக்கரை கொண்ட மெரினாவின்  அலைகளின் ஓசை  ரசிக்கும்படி செவ்வண்ணக் கற்களால் அமைத்தார்கள்.    ஆசிரியராக பணியாற்றிய   முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாக்கிரிஷனாலும், அதன் மாணவரான நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரனாலும்   அதன் புகழ் உச்சாணிக்குச் சென்று மாநிலக் கல்லூரியில் படிப்பது என்பதே ஒரு பெருமையாக இருந்தது.. மெட்ராஸ  அங்கீக யுனிவேர்சிடியால் அங்கீக பட்ட மாணவர் பேரவை இருந்தது மாணவத் தலைவருக்கு  தனி அறை கொண்ட ஒரே கல்லூரி மாநிலக் கல்லூரியாகும்..
அப்போது தேர்தல் மாணவத் தலைவர், செயலாளர், மகளிர் செயலாளர் ஆகியோருக்கு நடக்கும். அதுவும் எப்போது என்றால் கல்லூரி நிறைவு நாள் நெருங்கும்போது டிசெம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடக்கும்
அதற்குக் காரணம் அப்போது தான் ஒரு வருடம் பழகிய மாணவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர் தேர்ந்தெடுக்கப் படுவார். போட்டியிடும் மாணவர் பெயர், பதவி வகுப்பு கொண்ட விசிடிங் கார்டு மூன்று இஞ்சி அகலமும், நான்கு இஞ்சி நீளமும் கொண்டது போட்டியிடுவர்களால் வழங்கப் படும். அது கல்.தவிர எந்த வித விளம்பரமும் செய்யக் கூடாது.     லூரி வகுப் பறைகளுக்குச் சென்று ஆசிரியர் அனுமதியுடன் ஐந்து நிமிடம் வேட்பாளர் ஆதரவு கோரலாம். அதனை மீறி யாரும் விளம்பரம் செய்தால் அவர்கள் வேட்பு மனு தள்ளுபடி செய்யப் படும். வேட்பாளர்கள் அரசியல் சார்ந்திருந்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளக் கூடாது. நாங்கள் படிக்கும்போது  பேராசிரியர் ராமச் சந்திரன் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் வெளியே வந்தால் மாணவர் பெட்டிப் பாம்பாக அடங்குவர். அப்படிப் பட்ட மரியாதை. நான் கூட அப்போது சேர்மனுக்கு போட்டியிட்ட அப்பாசாமிக்கு ஆதரவாக முன்மொழிந்தேன். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயராமன் வெற்றி பெற்றார். இருந்தாலும் அப்பாசாமியும், ஜெயராமனும் நண்பர்கள்தான். அந்த நட்பு கெடாமல் இருந்தது. ஆனால் சமீப கால சம்பவங்களை நினைக்கும் பொது எப்படி இருந்த மாநிலக் கல்லூரி இப்படி ஆகி விட்டதே என்று எண்ணி வருத்தமடையச் செய்கிறது.
சமீப கால கல்லூரி  வன்முறை கீழ்க் கண்ட காரணங்களால் ஏற்படுகின்றன:  
1) ஜாதி சண்டை: 'ஜாதிகள் இல்லையடிப் பாப்பா' என்று பாடிய பாரதியார் வாழ்ந்த நாட்டில் ஜாதிகளால் ஜாதி துவேசத்தால் மாணவர் இடையே சண்டை வந்துள்ளது. அது பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்க வில்லை.
2012 மார்ச்சு மாதம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுக்கா எம்.கல்லுப்பட்டி 
கிராமத்தில் இருக்கும் பள்ளிக் கூடத்தில்   12 ஆம் வகுப்பு மாணவர் இடையே ஒரு சிறு சண்டை ஆரம்பித்து அதில் அந்த கிராமத்தினைச் சார்ந்த மக்களும் இரு பிரிவினராக சண்டையிட்டுக் கொண்டதாக செய்தி வந்தன.
அடுத்த படியாக 2008 ஆம் ஆண்டு சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை இந்தியாவினை மட்டுமல்லாது உலக மாணவ உலகத்தினையே உலுக்கியது என்றால் மிகையாகாது. அந்த சம்பவத்தின் உண்மையினை அறிய தன்னார்வ குழு மார்க்ஸ் தலைமையில் ஆராய்ந்து ஒரு அறிக்கையினை அளித்தது. அதில் அதில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டைக்குக் காரணம் ஜாதி துவேசம் தான் என்றது.
2) பஸ் பயணத்தில் வரும் தகராறு:
நான் சென்னை புதுக் கல்லூரியில் படித்தபோது 1968 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்ணா சாலையில் அப்போது இயங்கி வந்த அரசு ஆண்கள் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது  தகராறு வந்தது. அப்போது கலைக் கல்லூரி மாணவர் சிலர் சபைர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் தாக்கப் பட்டனர். அதன் விளைவு கலைக் கல்லூரி மாணவர்கள் புதுக் கல்லூரிக்கு படை எடுத்தனர். நல்ல வேலையாக போலீஸ் பெரிய கலவராம் வராமல் தடுத்தது. அதன் பின்பு 1969 வருடம் நான் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ சேரும்போது எனது வகுப்பு நண்பனும் கலைக் கல்லூரியில் படித்தவனுமான காந்திராஜனை முதல் நாள் சந்திப்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவன், 'டேய், உங்கள் கல்லூரி மாணவர் சபைர் தியேட்டரில் தாக்கும் பொது அடி வாங்கியவனில் நானும் ஒருவன் என்றானே' பார்க்கலாம். அப்போது எனது வருத்தத்தினை அவனிடம் தெரிவித்தேன். அவன் யாருமில்லை, மறைந்த நடிகர் சந்தனத்தின் மகனும் தற்போதைய நடிகர் சந்தானபாரதியின் சகோதரனும் ஆவான்.

ii) பஸ் தகராறில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் பாதிப்பு:
1969 ஆம் வருடம் கீழ்பாக் கெல்லிஸ் சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், போக்கு வரத்து ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதன் விளைவு ஒரு பஸ் ஊழியர் இறக்கும் நிலைக்கு வந்தது. சிறு வாக்குவாதம் ஒரு கொலையில் கொண்டுபோய் முடிந்தது.

iii) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் பஸ்ஸில் தங்கள் கைவரிசையினை காட்டும் விதமாக பஸ் கூரையில் ஏறி பயணம் செய்து பஸ் ஓட்டை விழுந்தது என்ற செய்தியினை இங்கே தந்துள்ளேன். அது மட்டுமல்லாது பாது காப்பில் இருந்த பெண் போலீசாரும் காயம் அடைததாக செய்தி வந்தது.
உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட லிங்டோ குழு ஒரு அறிக்கையினை அளித்துள்ளது. அதில் மாணவர் தேர்தலில் வீண் செலவினை தவிர்க்க விளம்பர தட்டிகள், பலகைகள், நோட்டீஸ் போன்றவையும் தடை செய்யவும், ஒலி பெருக்கி தடை செய்தும், வாகனம், மிருகம் போன்றவை விளம்பர தடை செய்தும் அறிக்கை கொடுத்துள்ளது.

iv) கல்லூரிக்கு வரும் வெளியே தங்கிப் படிப்பவர்கள் தங்களுடைய ஈகோ  பிரச்சனையாலும், படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாது ஏதோ இட ஓதிக்கீடிலும், அரசு கொடுத்த சலுகையினாலும் கல்லூரிக்கு வந்து சிறு சிறு விசையங்களுக்கும் சண்டையிட்டுக் கொள்ளுகின்றனர். பஸ் தின விழா என்று அரசு பஸ் மற்றும் அதில் பல்வேறு பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்பதினை மதிக்காது, போக்கு வரத்து விதிகளை மதிக்காது அதிகம் பேர்கள் ஏறி சவாரி செய்வது மட்டுமல்லாது பஸ் மேலேயும் ஏறுவது சட்டத்திற்குப் புறம்பானது தானே! அப்படி பஸ் மேல் ஏறினால் பஸ் ஓட்டுனர் பஸ்ஸினை எடுக்ககூடாது. அதனால் பஸ்சுக்கு ஏதும் சேதம் வந்தால் மாணவரே பொறுப்பு என்ற நிலையினை எற்பதுத்த வேண்டும். போராட்டம் செய்து அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அரசியல் கட்சிகள் பொறுப்பு என்று ஏற்கனவே உயர் நீதி மன்ற தீர்ப்பு இருக்கும்போது அது மாணவர்களுக்கும் பொருந்தும் தானே!
3) மாணவர்களின் காதல் வயப்படல்:
இளமைப் பருவத்தில் மாணவர்கள் காதல் வயப் பட்டு தங்களை காதல் மன்னர்களாக நினைத்து அவர்கள் காதலுக்கு யார் போட்டியினுக்கு வருகிறார்களோ அவர்களை ஜென்ம பகைவர்களாக நினைத்து மோதல் உருவாக்குகிறது. அவர்களுக்குத் தெரியாது கல்லூரிக் காதல் என்பது ரயில் பயணத்தில் அறிமுகம் செய்து கொண்டு ரயிலை விட்டு இறங்கியதும் மறைந்து விடுவது என்று மாணவர்களுக்கு ஏனோ தெரிவதில்லை!

4) இரண்டு பகுதி மாணவர் இடையே தகராறு:
ஹைதராபாத் நகரத்தில் தெலுங்கானா பகுதி மாணவர்களுக்கும் மற்ற பகுதி மாணவர்களுக்கும் மோதல் உருவானது. அதேபோன்று மணிப்பூரில் போடோ இன மாணவர்களுக்கும்  இடம் பெயர்ந்த மாணவர்களுக்கும் மோதல் வந்துள்ளது. காரணம் உள்ளூர் மாணவர் வாய்ப்பினை வெளி மாணவர் பறிப்பதாக உள்ள பயமே காரணம்.5) அரசியல் சார்ந்த தகராறுகள்: 
மேற்கு வங்கத்தில் திருநாமுள் காங்கிரஸ் மற்றும் இடது சாரி மாணவர்களுக்கும் 2010 இல் நடந்த மோதல், 2011 ஏப்ரல் மாதம் அலிகார் யுனிவெர்சிடியில் இரண்டு கட்சி மாணவர்கள் துப்பாக்கி சகிதமாக மோதிக் கொண்டது, 2012 ஜனவரி மாதம் சிம்லாவில் கம்யுனிஸ்ட் மாணவர்களுக்கும் ஏ..பி.வி .பி. என்ற ப.ஜ.காவினருக்கும் மோதல் உருவாகி கல்லூரி ஒரு அரசியல் மோதலாக உருவானது உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளும் தனது தரப்பு மாணவர்களை தயார் செய்கிறது, ஏனென்றால் பதினெட்டு வயதினை அடைந்தத அனைவருக்கும் ஓட்டுரிமை இருப்பதால் மாணவர்களின் தேர்தலிலும் அரசியல் தலையீடு தற்போது இருக்கின்றது. 


6) ரேக்கிங்:
நானெல்லாம் சென்னை புதுக் கல்லூரியில் இருந்தபோது மலேசியா மாணவர்களையும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு யார் சீனியர் என்று வெளிப் படுத்துவதிற்காகவும், கூச்சதினை    போற்குவதிற்காகவும் சில தமாசான ரேக்கிங் நடக்கும். ஆனால் மனித உடலுக்கு பங்கம் விளைவதினை ஏற்படும் அளவிற்கு எந்த ரேக்கிங்கும் இருக்காது. ஆனால் தற்போது ரேக்கிங் என்று உடலுக்கு தீங்கு விளைவிற்கும் செயலும், ஜூனியர் கடத்தப் படுவதும், பொருள் அபகரிக்கப் படுவதும், ஜாதி துவேசம் காட்டுவதும், பாலின தவறுகளும் நடப்பதுண்டு. சில நேரங்களில் சிதம்பரம் அண்ணாமலை மெடிக்கல் கல்லூரியில் பொன் நாவரசு கொலை செய்தது போன்ற சம்பவங்களும், அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடக்கின்றது. ஆனால் உச்ச நீதி மன்றம் சமீபத்தில் ரேக்கிங் சம்பவங்களில், வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தல், கல்லூரியினை விட்டு நீக்குதல், அபராதமாக ரூபாய் 25000/ விதித்தல் போன்ற கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து அகில இந்திய தொழில் நுட்பக் கழகமும் தன ஆணையை 25.3.2012 வெளியிட்டது.

ஆகவே மாணவர்கள் தங்களின் தலையாய கடமை படித்துப் பட்டம் பெற்று நாட்டிற்கு தன்னாள் ஒரு நன்மையான காரியம் செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) பெற்றோர்களின் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசு புகைத்தல்,சினிமா பார்த்தல்,  கிளப் டான்ஸ், மது, மாது போன்ற ஈடுபட்டு     வீண் விரையம் செய்யக்  கூடாது.
3) அரசு முதல் பட்டதாரிகளுக்கு பல்வேறு சலுகைகளைத் தருகிறது. நீங்களும் அந்த சலுகையினைப் பெரும் முதல் பட்டதாரியாக மாற வேண்டும்.
4) போக்குவரத்து பஸ்களில் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் அளவிற்கு நம் நடவடிக்கை இருக்கக் கூடாது.
5) பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை உண்டு. அந்த உரிமையினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. பாலின சேச்டைகளில் ஈடுபடக் கூடாது.
6) நான் கோவை நகரி டி.எஸ்.பியாக 1977 ஆம் ஆண்டு பணியாற்றிய பொது பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி மாணவர்கள் பஸ் பாஸ் கேட்டு வேலை நிறுத்தம் செய்து கல்லூரியினை விட்டு பீளமேடு ரோடுக்கு வர முயற்சி செய்தார்கள். ஆனால் அப்போதைய கல்லூரி முதல்வர் டி.கே.பி.வரதராஜன் அவர்கள் கல்லூரி மெயின் கேட்டில் நின்று கொண்டு மாணவர் ரோடுக்கு வராமல் தடுத்தார். அவ்வாறு இல்லையென்றால் மாணவர் ரோடுக்கு வந்து பொலிசாருடன் மோதியும், ரோடில் செல்லுகின்ற வாகனமீது கல்லும் வீசி இருப்பார்கள். அதுபோன்ற முதல்வர்களை இன்று நாம் கல்லூரியில் காணுவது அரிதாக உள்ளது. மாணவர்களை கட்டுப் படுத்தும் கடமை கல்லூரி முதல்வருக்கும் ஆசிரியருக்கும் உண்டு. அது மட்டுமல்லாமல் மாணவர் தேர்வும்போது இன்டெர்னல் அசெஸ்மென்ட் அவர்கள் கையில் இருப்பதால் மாணவர்களும் பயப்படுவார்களல்லவா?
7) மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றாலும், அல்லது பொருளுக்கும் உடலுக்கும் பங்கம் வரும் என்றாலும் காவல் துறையினர் அனுமதி இன்றி கல்லூரி வளாகத்தில் நுழைந்து சட்டம் ஒழுங்கினை காப்பாற்றலாம் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதி மன்றம் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் வந்த மோதலில் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகவே காவல் துறையினரும் மாணவர்கள் சட்டத்தினை மதித்து நடக்கும் அளவிற்கு துணிந்து நடவடிக்கை எடுத்தால் பஸ்சுக்கும் சேதம் வராது,பொது மக்களும் பாதிக்கப் பட மாட்டார்கள், பெண்கள் அவமானப் பட மாட்டார்கள், மாணவர் உடலுக்கும் பங்கம் வராது.
8) மாணவர்கள் தங்களுடைய ஈகோ காரியங்களுக்காக கையில் கம்பையினையோ, கத்தியினையோ அல்லது கொடிய ஆயுதங்களையோ எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்து அதுத்தவருக்கு ஊறு விளைவித்தால் உங்களுடைய படிப்பும் பொய், வழக்கினை சந்தித்து, பெற்றோர்களுக்கு வீணான பொருள் சுமை கொடுத்து அதனால் நீங்கள் வேலை செய்யவோ, வெளிநாடு செல்லும் வாய்ப்பினையோ இழக்க நேரிடும். 
ஆகவே எதற்கு எடுத்தாலும்  கத்தியினை தீட்டாது, புத்தியினுக்கு சற்று வேலை மாணவர் தரவேண்டுமென்று வேண்டுகிறேன்.   

Thursday 6 September, 2012

அழும் பிள்ளையே நீ பால் குடிப்பது எப்போது?


இந்திய அரசாங்கம் இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு முஸ்லிம்களின் சமூக, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலையினை கண்டறிய இரண்டு முஸ்லிம் அல்லாத நீதி அரசர்களான ராஜேந்திரா சச்சார், ரங்கநாத மிஷ்ரா போன்ற அப்பழுக்கற்றவர்கள் தலைமையில் தனித்தனியே கமிசன்களை நியமித்தது. அந்த நீதியரசர்களும் அரசு உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு நன்மை செய்யத் தான் தங்களை நியமித்ததாக எண்ணி பல்வேறு நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் பரிசோதனை செய்து விட்டு இரண்டு கமிசன்களும் தங்கள் அறிக்கையினை சமர்ப்பித்தன
அந்த கமிசன்களின் இரண்டு முக்கிய முடிவுகள் பின் வருமாறு:
1) இந்திய முஸ்லிம்கள் 15 சதவீத மக்கள் அடங்குவர். அவர்களில் பெரும்பாலோர் சமூக, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் தலித் மக்களை விட பின் தங்கியவர்களாக உள்ளனர்.
2) முஸ்லிம் மக்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பினில் வழங்க வேண்டும்.

அந்தப் பரிந்துரைகள் அடங்கியப் பெட்டிகள் எங்கோ தூசித் தட்டப் படாமல் கிடக்கின்றன என்று எண்ணும்போது உங்களுக்கு ஆத்திரம், ஆத்திரமாக வருவது இயற்கையே! ஆனால் 2012 உத்திரப் பிரதேச தேர்தலில் நடுவண்  மைனோரிட்டி அமைச்சர் தன் மனைவிக்கு ஓட்டு சேகரிக்கப் போன 
இடத்தில் தங்கள் கட்சி ஆட்ச்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஒன்பது சதவீத இட ஒதிக்கீடு தருவோம் என்று முழக்கமிட்டு அதன் பின்பு அவருடைய கட்சியினராலேயே வாங்கிக் கட்டிகொண்டார்.
சமூதாய இயக்கங்களும் இட ஒதுக்கீடு கேட்டு கருத்தரங்கு, ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல், பொதுக்கூட்டம் போன்றவைகள் நடத்தி அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக போய் விட்டன.
உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்ச்சியில்  இருந்தபோது தலித் இன மக்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தரும் சட்டம் கொண்டு வந்தார். அந்தச் சட்டம் அலஹாபாத் உயர் நீதி மன்றத்திலும், அதன் பின்பு உச்ச நீது மன்றத்திலும் செல்லாது என்று தள்ளுபடி செய்து விட்டது.
அதே போன்று தான் ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கான தனி இட ஒதிக்கீடு நான்கு சதவீதம் கொண்டு வந்தது. அதுவும் உச்ச நீதி மன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப் பட்டது.
ஆனால் ஆந்திர மாநில முஸ்லிம்களுக்கு ஒதிக்கீடு தள்ளுபடி செய்யப் பட்ட மசோதாவிற்கு உயிர் கொடுக்கும் விதமாக 
அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வராமல் மாயாவதி கொண்டு வந்த தலித் பதவி உயர்வில் இட ஒதிக்கீடு சட்டத்திற்கு மட்டும் உயிர் கொடுக்க சட்டத் திருத்தம் தற்போதைய பாராளு மன்றத்தில் 5.9.2012 அன்று  கொண்டு வந்தது ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பார பட்சம் காட்டும் பம்மாத்து வேலையாக உங்களுக்குத் தெரிய வில்லையா?
தலித் இன மக்களுக்கு ஏற்கனவே 18 சதவீத ஒதிக்கீடு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளது.
தற்போது கேட்பது பதவி உயர்வில் முன்னுரிமை. இது எப்படி இருக்கிறது என்றால் அரை வயிற்றிற்கு  போடுதள்ளாடும்  முஸ்லிம்களை போடும் முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு வயிறு முட்ட  சாப்பிட்டு விட்டு ஏப்பம் போடுகிறவனுக்கு இறக்கப் பட்டு அபரிமிதமான சுவை மிகு உணவினை அள்ளி திணிப்பது போன்ற செயல் என்று உங்களுக்கு நினைக்கத் தோணவில்லையா
அது என்ன பதவி உயர்வில் 22.5 சதவீத ஒதுக்கீடு என்று உங்களுக்குக் கேட்கத் தோணும்
உதாரணத்திற்கு மூன்று ..எஸ் அதிகாரிகள் 1976 ஆம் வருடத்தில் பதவியில் சேர்ந்துள்ளனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு அதிகாரி தலித் இன ஓடிக்கீடில் தேர்வாகி இருந்து ரேங் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார் என்றால், இரண்டு செயலாளர் பதவி காலியாக இருக்கும்போது ஒருவர் பொது ஓதிகீடிலும், மற்றுமொருவர் தலித் இனத்தவர் ரேங்கில் சூனியவராக இருந்தாலும் அவருக்குத் தான் வழங்கப் படும். அப்போது பொது ஓதிக்கீடில் வந்த சீனியர் அதிகாரி மனம் புழுங்குவது இயற்கைதானே! ஆகவே தான் தற்போது பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருக்கும் பதவி உயர்வில் தலித்துகளுக்கு முன்னுரிமை மசோதா அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று முழக்கமிட்டுள்ளார்.
ஆமாம் தற்போது இந்த மசோதாவிற்கு அப்படி என்ன இப்போது முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம்.
2 ஜி, காமன் வெல்த் விளையாட்டு, நிலக்கரி ஒதிக்கீடு போன்ற பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளால் தலை நிமுர  இருக்கும் முடியாமல் அரசினை வாசிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகையும் நமது பத்திரிக்கைகளும் வெளிச்சம் போட்டு காட்டுவதினை மறைக்கவே இந்த மசோதா கொண்டு வந்திருப்பதாக நாடு நிலையாளர்கள் சொல்லவில்லையா?
நமது மக்களுக்கும் தலித் இன மக்களுக்கு சலுகையினை காட்டுவதினை எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால் நமது ஆதங்கமெல்லாம் முஸ்லிம்களுக்கும் கமிசன்களால் கோடிட்டு காட்டிய இட ஓதிகீடுக்கு ஏன் அக்கறை காட்ட வில்லை அரசு என்பது தான் என்றால் சரிதானே!
5.9.2012 மசோதா தாக்கல் செய்த பொது சமாஜ் வாடி கட்சி  மற்றும் பி.எஸ்.பி. கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு கூட வந்து விட்டது. ஆனால் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு தந்து விட்டு அதன் பின்பு தலித்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தாருங்கள் என்று குரல் எழுப்ப வில்லையே என்று உங்களுக்கெல்லாம் மன 
வருத்தம் இருப்பது நியாயமே!
நான் சென்னைப் புதுக் கல்லூரி மாணவனாக 1967 ஆம் வருடம் படித்த பொது அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது ஆற்றிய உரையில், 'தான் மக்களுக்கு உதவி செய்ய முடிய வில்லையென்றால் தோளில் இருக்கும் துண்டினை உதறி விட்டு வெளியே வந்து மக்களுக்காக பணியாற்றுவேன்' என்று குரல் கொடுத்தார். ஆகவே தான் குறைந்த நாட்கள் ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப் படுகிறார். ஆனார் நம்மிடையே இருக்கும் உறுப்பினர்களும், தலைவர்களும்  தங்கடைய பதவி நிலையானது என்று கோட்டு, சூட்டு, சபாரி செட், அணிந்து கொண்டும், சொகுசு கார்களில் பவனி வந்தும் கொண்டு இருக்கிறார்களே தவிர சமுதாய மக்களுக்காக ஏன் இந்தத் தருணத்தில் குரல் எழுப்ப தயங்குகிறார்கள் என்று உங்களுக்கு கேட்கத்தான் தோன்றும்.
நான் சென்னையில் புதுக் கல்லூரியில் இயங்கும் மியாசி என்ற தென்னக முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் அமைப்பில்
செயற்க் குழு உறுப்பினராக இருகின்றேன். 12.4.2012 அன்று நடந்த செயற்க் குழுக் கூட்டத்தில் நான் கொண்டு வந்த ..எஸ் மற்றும் சிவில் செர்விசெஸ் பயிற்சி மையம் புதுக் கல்லூரி வளாகத்தில் அமைக்கும் தீர்மானம் ஒரு மனதாக 
நிறைவேற்றப் பட்டது. அதனை விரும்பாத சிலர் அதற்கான குழுவினை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே நான் அதன் தலைவர் அவர்களுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு, 'நீங்கள் அடுத்தக் கூட்டத்தில் குழு அமைத்து மையம் செயல் பட வழி வகுக்க வில்லை என்றால் நான் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதுடன் அணைத்து முஸ்லிம் இயக்கங்களுடன் எதிர் நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்றேன்'. உடனே தலைவரும் வருகிற 13.9.2012 செயற்குழுக் கூட்டத்தில் ஒரு குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப் படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதனை நான் ஏன் இங்கு கோடிற்று காட்டுகிறேநென்றால் சமுதாயத் தலைவர்களும், இயக்க இளைஞர்களும் நமது இட ஒதிக்கீடு நோக்கி ஒரு மித்தக் குரல் எழுப்ப வில்லை என்றால் பால் குடிக்காது வாடும் பிஞ்சு சவளைக் குழந்தைகளாகி விடுவோம் என்றால் சரியாகுமா