Friday 26 January, 2024

அழிவிற்கும், ஆக்கத்திற்கும் வித்திட்ட ஆளில்லா விமானம்!

 


(.பீ . முகமது அலி, .பீ.எஸ்()

 

நீங்களெல்லாம் அறிவீர்கள் முன்பு யுத்த களங்களில் குதிரைப் படை, யானைப் படை, காலால் படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய படைகளை கொண்டு எதிரி நாடுகளுடன் போர் புரிந்தார்கள் என்று. திருகுரானில் கி.பி.570 வருடம் பெருமானார் ரஸூலல்லா பிறந்தபோது ஒரு அதிசயமான ஒன்று மாறுபட்ட யுத்தம் நடந்ததாக சூரா 'அல் பில்' அத்தியாயத்தில் 105வது சூராவில் நடந்ததாக கூறுகிறது. அது தான் யானை யுத்தமாகும். அபிஸீனியா நாட்டை ஆண்ட கிருத்துவ மன்னர் ஹிம்யானத் அவர்களிடம் மற்ற நாடுகளை எளிதாக வெல்ல முடிகிறது ஆனால் மக்காவை மட்டும் வெல்ல முடியவில்லையே என்ற கேள்விக்கு, அவருடைய அரசவை ஆலோசகர்கள், மக்காவில் ஒரு காபா என்ற கோவில் உள்ளது, அது தான் யாரும் வெல்ல முடியாமல் தடுக்கிறது என்று கூறியவுடன், 'தன் பலமான யானைப் படையினை திரட்டி தானே தலைமையேற்று மக்கா நோக்கி படையெடுத்தான். அந்தப் படை மக்கா எல்லையினை தொட்டவுடன், தலைமையேற்று வந்த யானை மண்டியிட்டு மேல் நோக்கி செல்ல மறுத்தது. அப்போது எங்கிருந்தோ விண்ணில் பறந்து வந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் தங்களுடைய அலகுகளில் சூடு செங்கல் போன்ற ஆயுதங்களை யானைப் படை மீது எறிந்ததும் அவை முற்றிலும் அழிந்ததாக சொல்லப் பட்டுள்ளது. அதனை தற்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் உறுதி படுத்துகிறார்கள்.

          பறவை கூட்டத்தால் சுடு கற்களை தாங்கி வந்து அபிஸீனியா நாட்டு யானைப் படையினை அழித்தது ஒரு கனவாக அல்லது கட்டுக் கதை என்று கூட சிலர் விமரிசிக்கலாம். ஆனால் அதனை நிரூபிக்கும் விதமாக தற்போதைய வடிவமைக்கப் பட்ட ஆளில்லா விமானங்கள் அமைக்கப் பட்டுள்ளன. நவீன உலகில் முதன் முதலில் 1849ம் ஆண்டு முதலாம் இத்தாலி யுத்தத்தில் பயன் படுத்தப் பட்டதாக கூறப் படுகிறது. ஆஸ்திரியாவின் ராணுவ தளபதி Franz Von Uchatius ஒரு பெரிய பலூனில் வெடிப் பொருட்களை வைத்து வெனிஸ் நகர் மீது அனுப்பி வெடிக்க வைத்தார், ஆனால் அது அவ்வளவு சிறப்பாக வெடிக்கவில்லை.

          அதன் பிறகு இராக் பாக்தாதில் பிறந்த ஆப்ரஹாம் கரீம் என்ற இஸ்ராயில் யூத என்ஜீனியர் அமெரிக்காவிற்கு  1970ம் ஆண்டில் குடிபெயர்ந்த பின்பு ஈடுபட்ட பல்வேறு ஆராய்ச்சியிகளின் பலனாக ஒரு ஆளில்லா விமானம் உளவு வேலைக்காக வடிவமைக்கப் பட்டது. இந்த ஆளில்லா விமானம் நவீனப் படுத்தப் பட்டு உளவு பார்ப்பதற்கும், தகவல் சேகரிக்கவும், துல்லிதமான தாக்குதலுக்கும், படைகளை காப்பாற்றுவதிற்கும், தேடுதல், காப்பாற்றுவதிக்கும், யுத்த கலன்களுக்கு தேவையான ஆயுதங்கள் கொடுப்பதற்கும், ஆளில்லா விமானங்கள் பல தரப்பானது:

1) இறக்கைகள் கொண்டது. அதிக வேகம் செல்லும்

2) கூர்மையான பிளேடு கொண்ட விமானம், அது ஹெலிகாப்டர் போல இருக்கும். அதற்கான பழுது பார்க்கும் செலவு அதிகமானது.

3) பல பிளேடுகள் கொண்டது உயரப் பறந்து உளவு பார்ப்பதற்கு ஏதுவானது. அந்த விமானம் இஸ்ராயில் நாடுகளுக்கும் அராபிய நாடுகளுக்கும் 1973ம் ஆண்டு அக்டோபர் Yom Kippur என்ற ரமதான் மாதத்தில் நடந்த சண்டையில் இஸ்ராயிலுக்கு ஆதரவாக அராபிய நாடுகளினை வேவு பார்ப்பதிற்காக உபயோகிப்படுத்தப் பட்டதாம். அதன் பிறகு 2001ம் ஆண்டு அமெரிக்க கூட்டுப் படைகள் அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி வர்த்தக மையத்தில் நடந்த வான் வழி தாக்குதலுக்கு ஆபிகானிஸ்தான் தாலிபான்கள் தான் காரணம் என்று ஆப்கானிஸ்தானை பழி வாங்க அனுப்பப் பட்ட படைகளுக்கு உதவும் பொருட்டு வெடி மருந்துகளுடன் கூடிய ஆளில்லா விமானம் மிகவும் உயதியதாம். அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் மலைகளில் ஒளிந்து கொண்டு அமெரிக்க கூட்டுப் படைக்கு பதிலடி கொடுக்கும் ஆப்கானிய படை வீரர்களையும் கண்டறியும் பொருட்டும், மலைகளை குண்டு வீசி தகர்க்காவும் உபயோகிக்கப் பட்டதாம். 2003ம் ஆண்டு இராக்கினை கைப்பற்ற அமெரிக்கா கூட்டுப் படைஎடுப்பின் போதும் ஈராக் வீரர்களின் பதுங்கு குழிகளை கண்டறிவதற்கும், சதாம் ஹுசைன் இருப்பிடம் அறிவதற்கும் பெரிதும் உதவியதாக கூறப் பட்டது.

 

         

          2) கடந்த 669 நாட்களாக கிட்டத்தட்ட இரண்டு வருடமாக ரசியா நாட்டிற்கும் அருகில் உள்ள உக்ரைன் நாட்டுக்கும் சண்டை நடந்து வருகிறது செய்தி தாள்களிலும்,, தொலைக்காட்சிகளிலும் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ரசியா ராணுவம் உக்ரைன் நாட்டின் பகுதிகளான Dontekse, Kherson, Duhansk, Reponshz ஆகிய பகுதிகளை கைபற்றிக் கொண்டது. அங்குள்ள ரசியாவின் ராணுவ வீரர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்கள் அளிப்பதற்கும், உக்ரைன் நாட்டின் மீது குண்டு மழை பொழிவதிற்கும், ரசியாவின் வீரர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் கொடுப்பதற்கும் மிகவும் அதிகமாக உபயோகிக்கப் படுகிறது.

          3) அர்மேனியா மற்றும் பக்கத்து நாடான அசர்பைஜான் ஆகியவற்றிக்கு இடையே Nagorno-Karaboke எல்லையோர சண்டையில் ஆளில்லா விமானம் தாக்குதலுக்காக 2023ம் ஆண்டு பயன்படுத்தப் பட்டது.

          சமீபத்திய இஸ்ராயில்-ஹமாஸ் யுத்தத்தில் இஸ்ராயில், அமெரிக்கா பெரிய ஆளில்லா விமானங்கள் மூலம் செங்கடல், லெபனான், எகிப்து வழியாக தப்பி விடாமல் கண் காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டது. அதேபோல் இஸ்ராயிலும், ஹமாஸும் சிறிய ஆளில்லா விமானங்களை பயன் படுத்தி வருகிறார்கள்கள்.

          ராணுவ ஆளில்லா விமானங்கள் தயாரிக்க அமெரிக்காவின் 15 மில்லியன் டாலர் ஆகும் அது இந்தியாவில் 124 கோடியாகும். அதே வேளையில் நிகழ்ச்சிகளில் படம் எடுக்க பயன்படுத்தப் படும் சிறு வகை ஆளில்லா விமானங்கள் ரூபாயை 3000/ஆகும். சில விமானங்கள் ஜி.பி.எஸ் கருவி மூலம் கேமராக்களை தடையில்லாமல் இயக்கவும் முடிகிறது.

ஆளில்லா விமானங்கள் பயன்படுத்துவதற்கு பல நாடுகளில் பலவிதமான கட்டுப் பாடுகள் உள்ளன:

விமானங்கள் பயன்படுத்துவதற்கு 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும், உரிமம் பெற வேண்டும், மூன்றாம் நபர் சேத இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், நகர் பகுதிகளில் பறக்கக் கூடாது, பாதுகாக்கப் பட்ட விறுவனங்கள், இடங்கள், சட்டசபை, பாராளுமன்றம், முக்கிய நபர்கள் வீடுகள், அலுவலங்கள், நடமாட்டம் ஆகியவற்றினை தனி நபர்கள் பயன் படுத்தக் கூடாது. ஆனால் ராணுவம், காவல் துறை போன்றவை உபயோகிக்கலாம்.

சமீபத்திய ரசிய -உக்ரைன் யுத்தத்தில் ரசிய வீரர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை ரசியா ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. அதனையே 22.1.2024ல் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆளில்லா விமானம் மூலம் அவசர மருந்து அனுப்பும் முறையினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

          காடுகளிலும், மலைகளிலும், கடலிலும் திசைமாறி போனவர்களை கண்டு பிடிக்கப் இதுபோன்ற விமானங்கள் பயன்படுத்தப் படுகிறது. அது மட்டுமா நில நடுக்கம், எரிமலை, ஆளி பெரு வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க உபயோகப் படுத்தப் படுகின்றது. விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பதிற்கும் இதுபோன்ற விமானங்களை உபயோகிக்கிறார்கள்.

          தனியார் வீடுகள், நிறுவனங்கள், நபர்கள் கண்காணிக்க விமானங்கள் உபயோகிக்கக் கூடாது. சில ஆண்கள், தங்கள் மனைவியரை கண்காணிப்பதும், மனைவியர் கணவன்மார்களை கண்காணிக்கவும் இதனை பயன்படுத்துகிறார்கள். அதற்கு மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரலாம். உங்களுக்கு எல்லாம் தெரியும் இங்கிலாந்து இளவரசர் ஹரி தனது காதலியான ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன ஹாலிவுட் நடிகை மேகான் மார்களை திருமணம் செய்ததால் அரச குடும்பத்தில் மன வேறுபாடு ஏற்பட்டு இளவரசர் பட்டத்தினை துறந்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வகிக்கின்றது. அவர்களுடைய மகனை அனுமதியில்லாமல் ஆளில்லா விமானம் மூலம் பத்திரிக்கையாளர் கண்காணித்ததால் ஹரி-மார்க்கல் மான நஷ்ட ஈடு தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

          நவீன உலகில் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டு வித விதமான கார்களை, அதிக என்ஜின் சக்தியுடனும், வேகத்துடனும் தயாரிப்பதுபோல ஆளில்லா விமானங்கள் தயாரிப்பிலும் கம்பெனிகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுள்ளன. சில விமானங்கள் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு செக்கான்ட் வரை  145 கிலோ மைல்கள் வேகமாக செல்லவும் முடியும். 2016ம் ஆண்டு உலக ஆளில்லா விமானங்கள், கார் ரேசுபோல துபாயில் நடத்தப் பட்டது. அதில் இங்கிலாந்தினைச் சார்ந்த ஒரு இளைஞர் வெற்றி பெற்று ரூ 2 கோடி பரிசாக பெற்றார் என்பதும் செய்தி.

            குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கிரிமினல்களை பிடிக்கவும் இந்தவகை விமானம் உபயோகிக்கப் படுகுகிறது. 2016ம் ஆண்டு அமெரிக்கா நாட்டின் அல்மேடா பகுதியில் குற்றவாளிகள் போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும் கடத்துகிறார்கள் என்ற தகவலை விமானம் மூலம் இடைமறித்து அந்த கூட்டத்தினை கைது செய்தும், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாம். அது ஏன் நமது ஆறு மாதத்திற்கு முன்பு தமிழில் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஏடிஎம் எந்திரங்களில் கொள்ளையடித்த வட இந்திய வாலிபர்கள் ஓசூர் பகுதியில் கொள்ளையடிக்க முற்பட்டு முடியாமல் போய் பொதுமக்களும், போலீசாரும் விரட்டும் சோளக்காடுகளில் ஒளிந்திருந்த குற்றவாளிகளை ஆளில்லா விமானம் மூலம் கண்டு பிடித்து கைது செய்ததும் ஒரு நிகழ்ச்சி. நீலகிரி கூடலூர், மேட்டுப் பாளையம் சிறுமுகை, பொள்ளாச்சி, சத்தியமங்கலம், போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை அழிப்பதும், அதன் வழியில் வந்த மனிதர்களை கொள்வதும் போன்ற சம்பவங்களை தடுக்க அந்த யானை கூட்டங்களை கண்காணிக்கவும், வால்பாறை, குன்னுர் போன்ற பகுதிகளில் சிறுத்தை புலிகள் தேயிலை தோட்டங்களில் நுழைந்து அங்குள்ள மக்களை கொள்வதையும், காயப் படுத்துவதையும் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் வனத்துறையால் கையாளப் படுகின்றன.

            ஐரோப்பா, இங்கிலாந்து, ஆஸ்திராலியா போன்ற நாடுகளில் வீடுகளுக்கு தேவையான பொருட்களை எப்படி அமேசான் கொண்டு சேர்க்கிறதோ அதேபோன்று உபயோகப் படுத்துகிறார்களாம். ஆளில்லா விமானங்களினால் வாகனங்களில் உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றுகளால் ஏற்படும் மாசுகளை தடுக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கடற்கரை ஓரங்களில் ஆமைகள் முட்டியிட்டு குஞ்சு பொரிக்கும் இடங்களை கண்டு பிடித்து அவைகளை கடல்  பிராணிகளிடமிடமிருந்து காப்பாற்றுகிற உதவுகிறது.

            தற்போது சண்டைகளில் நியுகிளயர் நீர்மூழ்கி கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவைகளை வானத்திலிருந்து கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் உபயோகிக்கப் படுகின்றன.

முதன் முதலில் 2016ம் ஆண்டு சீன நாட்டின் ‘எஹங்(ehang)’ என்ற நிறுவனம் ஆளில்லா பயணிகள் ஏற்றிச் செல்ல சோதனை ஓட்டமாக பரிசோதிக்கப் பட்டது. போக்குவரத்து நெருக்கடியான உலகத்தில் வாழும் நாமும் ஒரு நாள் ஆளில்லா விமானங்கள் மூலம் நம் பயணம் தொடர்வது சந்தேகமில்லை.