(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஹிந்துத்வா அமைப்புகள் இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை
ஹிந்துக்களை விட அதிகமாகி உள்ளனர், மற்றும் இடம் பெயர்ந்தோர் வருகையால் இந்தியாவிற்கே
ஆபத்து என கூக்குரல் இடுகின்றனர். அந்த வகையான புகார்கள் உண்மையல்ல என்று ஸ்வாமிநாதன்
எஸ் அங்காலேச்சாரிய அய்யர் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையினை அமெரிக்க வாஷிங்டன் நகரில்
இயங்கும், தன்னார்வ, எந்த இயக்கத்தையும் சேரா அமைப்பான PEW ஆராய்ச்சி நிறுவனத்தின்
ஆய்வினை மேற்கோள் காட்டி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பி.ஜெ.பி இரண்டு விஷயத்தில்
பய உணர்வு கொண்டுள்ளதால் இந்தியாவில் மத மோதலுக்கு வழி வகுக்கின்றது.. இந்தியாவில்
ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர். முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு அதிகமானால் ஹிந்துக்கள்
ஜனத்தொகை குறைந்து விடும், 2) உள் துறை அமைச்சகம் சொல்வதுபோல பங்களா தேச இடம்பெயர்ந்தவர்கள்
கரையான் போல உள்ளனர் என்றும் பயப்படுகின்றனர். அவைகளல்லாம் உண்மையல்ல என்று PEW அமைப்பு
புள்ளிவிவரத்துடன் மறுத்துள்ளது.
1951ஆண்டிலிருந்து
2011 ம் ஆண்டு வரை 50 ஆண்டுகளில் முஸ்லிம் ஜனத்தொகை 6 சதவீதம் உயர்ந்தாலும் அவை ஒரே
நேரத்தில் உயரவில்லை. மாறாக சிறுக, சிறுக உயர்ந்ததாகும். அதே நிலை நீடித்தால் முஸ்லிம்
ஜனத்தொகை இந்த நூற்றாண்டில் 20 சதவீதத்திற்கு மேல் கூடாது என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
அந்த புள்ளி விவரங்கள் ஹிந்து-முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு எண்ணிக்கையினை வைத்துச்
செல்கிறது.
தேசிய
குடும்பவியல் சுகாதார சர்வே 1992-2015ன் படி முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு 4.4 சதவீதத்திலிருந்து
2.1 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால் 80 சதவீத ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 3.3 சதவீதத்திலிருந்து
2.1 சதவீதமாக மட்டுமே குறைந்து விட்டது. இதிலிருந்து முஸ்லிம் பெண்கள் குறைவாகவே குழந்தை
பெற்றுக் கொள்கின்றனர் என்று தெரிகின்றது.
உலகத்தில்
சராசரி வருமானம் அதிகரித்து விட்டாலும் குழந்தை பிறப்பது குறைந்து விட்டது. ஆனால் ஏழை
குடும்பங்கள் குடும்ப கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை, காரணம் குழைந்தை அதிகமாக பெற்றால்
அது குடும்ப வருமானத்தைப் பெருக்கும் என்றும் சொல்கின்றனர். உலகிலேயே குழந்தை பிறப்பில்
பல்வேறு காரணங்களால் அரை சதவீதம் இறந்து விடுகின்றன. வருமானம் அதிகமாக இருந்தாலும்,
குறைவான குழந்தை பெற்று, அந்தக் குழந்தைக்கு கல்வியறிவு, வசதியாக வாழ வீடு, வாகனம்
வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர். ஆகவே தான் கருத்தரிப்பு குறைவாக
உள்ளது. இந்த நிலைப் பாட்டில் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை. முஸ்லிம்கள் பொருளாதாரத்தில்
குறைவாக இருப்பதால் நாம் இருவர், நமக்கு ஒருவர் என்பதில் கவனமாக உள்ளனர். இதே நிலை
நீடித்தால் முஸ்லிம்கள் கருத்தரிப்பு பூஜ்யமானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றும்
சொல்கின்றனர்.
இந்தியாவில்
முஸ்லிம்களைவிட ஹிந்துக்கள் ஜனத்தொதை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக
ஹிந்து விதவைகள் மறுமணம் செய்து கொள்ள முன்பெல்லாம் அனுமதி வழங்கியதில்லை ஆனால் இஸ்லாத்தில் முஸ்லிம் விதவைகள் திருமணம் செய்வதினை
ஊக்கப் படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போரால் ஆண்கள் கொல்லப் படும்போது பெண்கள்
சிறுவயதிலேயே விதவையாகி விடுகின்றனர். ஏனென்றால் முன்பு சிறுமிகள் சிறு வயதிலேயே திருமணம்
முடிக்கும் பழக்கம் இருந்தது. இரண்டாவதாக முஸ்லிம்களைவிட இந்துக்கள் தான் அதிகமாக இடம்பெயர்ந்தவர்களாக
உள்ளனர். ஆகவே ஹிந்துத்துவ இரண்டு கருத்துக்களும் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
1992ம்
கருத்தரிப்பு புள்ளிவிவரப்படி முஸ்லிம்-ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 1:1 ஆகத்தான் இருந்தது.
அது 2015 புள்ளிவிவரப்படி 0:5 என்ற பாதியாக குறைந்து. ஆகவே முஸ்லிம்கள் எண்ணிக்கை ஹிந்துக்களைஅவிட அதிகமாகும்
என்ற ஹிந்துத்துவா குற்றச்சாட்டும் அடிபட்டுப் போகிறது.
அடுத்தக்
குற்றச்சாட்டு முஸ்லிம் இடம் பெயர்ந்தோர் ஹிந்துக்களை விட குறைவாகவே உள்ளனர் என்பதாகும்.
பியூ புள்ளிவிவரப்படி இந்தியாவில் பிறந்தவர்களில் 90 சதவீதம் ஹிந்துக்கள் தானாம். இந்தியாவிலிருந்து
வெளிநாட்டிற்கு இடம் பெயர்த்தவர் எண்ணிக்கை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குல் வந்தவர்களை
விட மூன்று மடங்கு அதிகமாம். 2015 அறிக்கைப்படி இந்தியர் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து
ஒரு கோடியே 50 லட்சமாம். ஆனால் இந்தியாவிற்குள்
வந்த வெளிநாட்டவர் வெறும் 56 லட்சமாம். அவ்வாறு வந்தவர்களில் வங்காளதேசத்திலிருந்து
வந்தவர்கள் 32 லட்சமும், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தவர் 11 லட்சமும், நேபாளத்திலிருந்து
வந்தவர் 5.40 லட்சமும், இலங்கையிலிருந்து வந்தவர்கள் 1,60,000 அடங்குமாம். அவர்களில்
பெரும்பாலோர் ஹிந்துக்களாம்.
இந்தியாவினைவிட்டு
வெளியேறும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதாம். அவ்வாறு செல்பவர்களில் அராபிய, வளைகுடா நாடுகளுக்குச்
சென்றவர் 35 லட்சமாம், பாகிஸ்தானுக்கு சென்றவர் 20 லட்சமாம், அமெரிக்காவிற்கு சென்றவர்
20 லட்சமாம். அதுபோன்று சென்றவர் முஸ்லிம் ஜனத்தொகை 14.2 சதவீதத்தில் 27 சதவீதமாம்.
ஆனால் 80 சதவீத ஹிந்துக்கள் கொண்ட சமுதாயத்தில் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தது
45 சதவீதம் தானாம்.
அடுத்த
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குற்றச்சாட்டு கிருத்துவ
மிஷினரிகள் ஹிந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர் என்பதாம். 1951லிருந்து 2015 வரை உள்ள
மொத்த இந்திய ஜனத்தொகையில் வெறும் 2.3 சதவீதம் தான் கிருத்துவர்கள் உள்ளனராம். ஆகவே
அந்தப் பயமும் அடிபட்டுப் போகிறது.
சமீபத்தில்
2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட CAA, CRA என்ற சட்டங்கள் வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில்
அதிகமாக உள்ளனர் என்பது போன்ற பய உணர்வில் கொண்ட சட்ட மசோதாவாகுமாம். ஆனால் அதுபோன்ற
பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மெஜாரிட்டி ஹிந்துக்களை பயமுறுத்தி 2022 ம் ஆண்டில்
நடைபெறும் சில மாநில தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் நேரத்தில்
அவர்கள் ஒட்டு வங்கியை பெறுவதிற்காக நடத்தப்படும் நாடகம் என்று மக்களுக்கு எடுத்துச்
சொல்லவேண்டும். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பகவத் இந்தியர் அனைவரும் ஹிந்துக்களே,
அவர்கள் ஒரே பண்பாட்டின் குடையின் கட்டுப் பாட்டுக்குள் உள்ளவர்கள் என்ற புது வேதாந்தத்தினை
சொல்கிறார். இந்திய நாடு பல்வேறு மத, கலாட்சார கோட்பாடுகளை கொண்டதாகும். முஸ்லிம்களுக்கு
என்று தனி கலாட்சாரம், பண்பு உள்ளது. அவைகளையெல்லாம் பாதுகாக்கத்தான் இந்திய அரசிலமைப்பு
1950ல் தோற்றுவிக்கப் பட்டது. ஆகவே இனியாவது இந்திய மெஜாரிட்டி மக்களை மத துவேஷ பய
உணர்வை ஏற்படுத்தி பிரிக்க வேண்டாம் என்று
வேண்டுகோள் விடுவது காலத்தின் கட்டாயமாகுமல்லவா?
No comments:
Post a Comment