Thursday, 9 February 2012

நீதி தேவதை கண்ணைத் திறந்தது!

1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 இன் படி இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவரும் சட்டத்தின் முன் சமமானவராவார்.
பிரிவு 15 இன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றைக் கொண்டோ அல்லது குடிமகன் எவருக்கும் அரசு வேற்றுமை பாராட்டுதல் கூடாது.

நீதி தேவதை இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு ஒரு தராசினை கையில் ஏந்தி, தராசுத்
தட்டுகள் சம நிலை இருக்கும் விதமான சிலைகள், படங்களைப் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் ஒரு தராசுத் தட்டின் அடியில் எடையினக் கூட்ட மாக்னெடிக் கல்லை வைத்து ஒட்டி
இருப்பதினை எங்கே அந்த நீதி தேவதையின் சிலை அறியப் போகிறது என்று 1992 ஆம் ஆண்டு
அயோத்தியில் பாரம்பரியமிக்க இஸ்லாமியர் வழிப் பாட்டுத் தளம் இடிக்கப் பட்டது. அப்போது
மத்தியில் ஆட்சியில் இருந்த மௌன சாமியார் என்று புகழப் பட்ட நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ்
ஆட்சியையும், உ.பி. மாநிலத்தில் இப்போது தன்னை பிற்பட்ட மக்களின் தலைவன் என்று சொல்லிகொள்ளும்
கல்யானசிங் தலைமையிலான ப.ஜ.க. ஆட்சியையும் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
மசூதி இடிக்கப் பட்டது ஒரு நிகழ்ச்சியாக ஒரு சில படித்த பெரியவர்களுக்கு தோணலாம். ஏனென்றால் அவர்கள்
தங்களுடைய முடிவினை அறிவிக்கும்போது நிஜக் கண்ணை மறைக்கும் கலர் கண்ணாடி அணிந்து இருந்திருப்பார்கள்
போலும். கண்ணாடி இல்லாமல் அறிவித்து இருந்தால் அவர்களின் உண்மை சொரூரம் வெளிப் பட்டிருக்கும் அல்லவா?
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பாரம்பரியமிக்க மஸ்ஜித் இடிக்கப் பட்டுவிட்டதே என்று ஆதங்கப்
படும்போது ஒரு சில உயர்ந்த மனிதர்கள் மட்டும் அது ஒரு நிகழ்வுதான் என்று சொல்லும்போது விந்தையாக
உங்களுக்குத் தெரியவில்லையா? இப்படிக்கும் அவர்கள் சட்ட மேதைகள் என்று எண்ணும்போது வேதனையாக ஒருபுறம்
இருக்கத் தான் செய்கிறது. அப்படி இடிக்கப் பட்ட மஸ்ஜித் இடம் மனித கலாசாரத்தின் இழிநிலை செயலினை எடுத்துக் காட்டும் இடமாகத் தான் உலகிற்கு தெரிகிறது. ஆனால் ஏனோ சில உயர்ந்த மனிதர்களுக்குத் தெரியவில்லை.
பண்பாட்டினை விட்டுவிட்டு அரசியல் சட்டத்திற்கு உற்பட்டதா மஸ்ஜித் இடிப்பது என்றாவது அவர்கள் ஆராய வேண்டாமா?
20 ஆண்டு காலம் இந்திய நாட்டின் 20 சதவீத மக்கள் மஸ்ஜித் திரும்பவும் அதே இடத்தில் கட்டப்பட
வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகத் தானே இருக்கின்றது என்று எண்ணும்போது வேதனையாக இல்லையா?
ஆனால் குஜராத் மாநில உயர் நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மதிப்பு மிகு பாஸ்கர் பட்டச்சார்யா மற்றும் பர்டிவாளா
ஆகியோர் 8.2.2012 அன்று சரித்திரம் வாய்ந்த நீதியினை இந்த நாட்டில் சத்தியம் அழிய வில்லை என்று காட்டியும், நீதி தேவதை எதற்கும் மயங்காமல், இன்னும் உயிருடன் தான் உள்ளாள் என்றும், அரசிய சட்டத்தினை நிலை நிறுத்தியும் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். அது என்ன தீர்ப்பு?
2002 ஆம் ஆண்டு கோத்ராவில் ஒரு ரயில் தீப்பற்றி எரிகிறது. அதில் சிலர் மாண்டு விடுகிறார்கள். அதற்கு காரணம்
இஸ்லாமியர் என்று காரணம் காட்டி முஸ்லிம்களை மனித வேட்டையாடி விளையாடி 1200 பேர்களுக்கு மேல் கொல்லப் பட்டும், பல தொழில் நிறுவனங்கள் கொளுத்தப் பட்டும், வீடுகள் இடிக்கப் பட்டும் , பல பள்ளிவாசல்கள், தர்காக்கள் தரை மட்டமாக்கவும் பட்டன.
அங்கே பி.ஜே.பி. தலைமயிலான ஆட்சி அப்போதும் இப்போதும் மத்தியில் பி,ஜே, பியும் ஆட்சி செய்தன.
அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கூட 'தான் அப்போது கண்ணீர் விட்டு அழுததாக' தனது கைஎழாத தனத்தினை ஓய்வுக்குப் பின் நிருபர்களிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னன. 'கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்று சொல்லும் பழமொழி போல.
ஆனால் நீதி இந்திய திரு நாட்டில் இன்னும் செத்து விடவில்லை என்பது போல குஜராத் உயர் நீதி மன்ற இரு அமர்வு நீதிபதிகளும், கோத்ர ரயில் விபத்துக்குப்பின் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத் அரசு தன் கடமையினை சரிவர செய்ய வில்லை வென்றும், அவ்வாறு செய்யாததினால் பல வழிப் பாட்டு தளங்கள் இடிக்கப் பட்டது என்றும், அப்படி இடிக்கப் பட்ட வழிப் பாட்டுத் தளங்களை மறுபடியும் சீரமைக்கும் கடமை அரசைச் சார்ந்தது என்றும், அப்படி சீரமைக்க 26 மாவட்ட நீதிபதிகளும் கணகெடுத்து நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆணையினை வழங்கியுள்ளார்கள்.

தற்போது குஜராத் நீதி மன்றம் வழங்கி உள்ள தீர்ப்புப் போன்று தான் அயோத்தி பள்ளிவாசல் இடித்த வழக்கிலும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய திரு நாட்டின் குடிமக்களான இருபது சதவீத முஸ்லிம்களும் ஏக்கத்துடன் உச்ச நீதி மன்றத்தினை எதிர் நோக்கி உள்ளார்கள்.
குஜராத் நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பு
சொல்லியிருப்பார்களேயானால் அந்தச் சட்டம் எப்படி அயோத்தி பள்ளிவாசலுக்குப் பொருந்தாது என்று உச்ச நீதி மன்றத்தில் சமுதாய இயக்கங்கள் வாதிட வேண்டும் . அரசியல் சட்டம் பிரிவு 15 இன் படி முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தினை கடைப் பிடிக்கவும், பள்ளியில் தொழவும் உரிமை உள்ளது. அதனை பாது காப்பது அரசின் கடமையல்லவா? அந்த அரசியல் சட்டப் படி அரசு செயல் படுகிறதா என்று கண்காணிப்பது நீதி மன்றங்களின் செயலல்லவா? அப்படி செயல் படவில்லைஎன்றால் குஜராத்தில் நீதி மன்றம் நீதியினை நிலை நாட்டியது போல உச்ச மன்றமும் நிலை நாட்டி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆணை வழங்க வேண்டும், அதற்கு சமுதாய இயக்கங்கள் குரலும் எழுப்பிக் கொண்டே இருந்து விடாது, சட்டப் பூர்வமான கருத்துக்களை உச்ச நீதி மன்றம் முன் எடுத்து வைக்க வேண்டும் என்றால் சரியாகுமா?

2 comments:

  1. salam brother,

    i have a plan to go for civil service, can u help me in this regards?\

    thank you. salam.

    ReplyDelete
    Replies
    1. Hallo Brother,
      In addition to my earlier advice you may also get in touch with the Director, JTS institute Pvt.Ltd.
      23, infantry Road, Bangalore-560001 for IAS coaching.
      Phone: 080-40810505

      Delete