தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!
தொன்று தொட்ட கற்பனையும், உண்மை
நிலையம்!
(டாக்டர்
ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)
1) பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி
நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு
நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின் மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று
பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர் உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ்
நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை
ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர்
5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2) 20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின்
புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப்
பட்டுள்ளோம்.
ஆனால்
அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும்
கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3) உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான
2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால்
விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு
நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4) மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை
தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால்
இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை
இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5)
வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால்
உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.
6)
மது பிரியர்கள் மது அருந்துவது உஸ்னத்தினை அதிகப்படுத்தி வீரியத்தினைக் கொடுக்கும்
என்பது நம்பிக்கை.
ஆனால்
மது அருந்தினால் உடலின் சீதோசனத்தினைக் குறைத்து தாம்பத்திய நேரத்தில் வெடிக்காத புஸ்
வானமாகும்.
7)
உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக் கூடாது, அவ்வாறு அருந்தினால் ஜீரணத்திற்குத் தடுக்கும்
என்று நம்பிக்கை.
ஆனால்
உணவு உண்ணும் பொது சிறிது நீர் அருந்துவது ஜீரணத்திற்கு உதவி செய்யும்.
7)
மரங்கள், வீடுகளில் தலை கீழாகத் தொங்கும் வௌவாலுக்கு கண் பார்வை தெரியாது என்று சொல்வார்கள்.
உண்மையில்
வௌவாலுக்கு கண் நன்றாகவே தெரியும். அத்துடன் எதிராளியின் ஒலியினையும் நன்கு தெரியும்.
8)
தினந்தோறும் முகச் சவரம் செய்வதால் முடி தடிப்பாக சொர சொரப்பாக தெரியும் என்று சொல்வார்கள்.
உண்மையில்
முகச் சவரம் செய்யும் போது முடி முனை மங்கி லேசாகவும் இருக்கும்.
9)
தூக்கத்தில் நடப்பவனை தட்டி சுய உணர்விற்கு வர செய்யக் கூடாது என்பார்கள்.
உண்மையில்
தூக்கத்தில் நடப்பவனை தட்டி எழுப்புவது மூலம் அவன் எங்காவது மோதி விபத்து ஏற்படாமல்
தடுக்கலாம்.
10)
காளை மாடுகளுக்கு சிகப்பு அல்லது வெள்ளைத்
துண்டு ஆகியவினைக் காட்டினால் கடுங்கோபம் வந்து முட்ட ஆக்ரோசமாக வரும் என்பார்கள்.
மாறாக
காளை மாடுகள் முன்பாக ஏதாவது ஒரு துணியினை ஆட்டினால் முட்ட வரும் என்பது தான் உண்மை.
11)
இருட்டில் போனால் பேய், பிசாசு வரும் என்பார்கள்.
ஆனால்
சுடுகாடே கதி என்று கிடக்கின்ற வெட்டியானை மட்டும் ஏன் பேய் விட்டு வைத்திருக்கின்றது.
இருட்டாக
இருக்கும் இடங்களில் வெளிச்சம் போட்டு வைத்தால் பேய் என்ற சொல்லுக்கே இடமில்லை.
முன்பெல்லாம்
மின்சாரம் இல்லாத வீடுகளில் இரவில் காண்டா விளக்கு அல்லது சிறு சிம்னி விளக்கினை இரவிலும்
எரிய விட்டு இருப்பதினை நாம் பார்த்திருக்கின்றோம். அது எதற்காக என்றால் சிறு குழந்தைகள்
அல்லது பெண்கள் பயப்படக் கூடாது என்ற எண்ணமே!
12)
13) சிங்கம் மரம் ஏறாது என்றும், காட்டுக்குள் செல்லுபவர் சிங்கம் வந்தால் மரம் மேலே
ஏறி தப்பலாம் என்று கூறுவார்.
உண்மையில்
சிங்கம் நீண்டு வளர்ந்த 30 அடி ஓக் மரத்தில் கூட ஏறும்.
ஆகவே
நாம் மடமையுனைப் போக்கி, தன் குழந்தைகளுக்கும் விழிப் புணர்வு அடைய அறிவுப் பூர்வாமாக
எதனையும் சிந்தித்து செயலாற்றலாமே!
சிறப்பான விழிப் புணர்வு தரும் விபரங்கள் அடங்கிய கட்டுரை
ReplyDeletenice comments
ReplyDelete