யானை விலங்குகளில் மிகப் பிரமாண்டபமானது என்பது
அனைவருக்கும் தெரியும். அதன் தும்பிக்கை யானையின் தற்காப்பிற்கும், உணவினை அள்ளி உயிர் வாழ்வதற்கும் இன்றியமையானது
என்பதினை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அதேபோன்று இந்திய துணைக் கண்டத்தின்
விடுதலைக்காக பாடுபட்டு பரங்கியரை விரட்டிவிட்டு, பரங்கியரின்
பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு துண்டாடப் பட்டு, இந்திய
முஸ்லிம்கள் மைனாரிட்டி என்ற நிலைக்குத் தள்ளபட்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்து அறுவதினைத் தாண்டிய
பிறகு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில்
நிலை என்ன என்று ஆராய புது டெல்லி முன்னாள் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஆறு போர் கொண்ட குழுவினை பாரதப் பிரதமர் 2005 ஆம் ஆண்டு நியமித்தார்.
அந்தக் குழு சுமார் இருபது மாதங்கள் கழித்து 403 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையும் 30.11.2006
யில் பாராளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் பதினெட்டு சதவீத முஸ்லிம்
மக்கள் கொண்ட அமைப்பு இந்தியாவில் பதினெட்டு சதவீத சலுகையுடன் இருக்கும் தலித்
மக்கள், பழங்குடியினரைவிட கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தில் பின் தங்கி
உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் உண்மையினை தெரிவித்தது.
ஒரு உண்மை அறியும் குழு அறிக்கை கிடைத்ததும்
அதனை உடனே நிறைவேற்றும் கடமை அரசுக்கு உண்டு என்று எந்த ஜனநாயக, மத சார்பற்ற நாட்டில் உள்ள அனைவரும்
ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே நடப்பது என்ன என்று பார்ப்போமேயானால் மத்திய
அரசில் மைனோரிட்டி அமைச்சராக இருந்து இன்று வெளிநாட்டு அமைச்சராக இருக்கும்
மதிப்பு மிகு சல்மான் குர்ஷித் அவர்களே புலம்பும் அளவிற்கு இருப்பது வெட்ககேடு என்றால் அனைவரும்
ஒத்துக் கொள்ளத்தானே செய்வார்கள்!
மாண்பிமிகு மத்திய அமைச்சர் ராஜேந்தர் சச்சார்
கமிட்டி 2006
இல் அமைத்ததிற்குப் பிறகு முஸ்லிம்கள் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில் அடைந்த முன்னேற்றம் பற்றி
நடந்த கருத்தரங்கில் பேசும்போது, பல்வேறு துறைகளில்
ஏற்பட்ட குளறுபடிகளால் சச்சார் குழுவினால் பரிந்துரைக்கப் பட்ட சிபாரிசுகள்
நிறைவேற்றப் படமுடிய வில்லை எனச் சொல்லி இருக்கிறார்.
அவர் கூறும் குளறுபடிகள் பின் வருமாறு:
ஆந்திரா மாநிலம்
முஸ்லிம்களுக்கு நாலு சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததை உச்ச நீதி மன்றம் தடுத்து
இடைகால உத்தரவு வழங்கப் பட்டதினை காரணமாக கூறுகிறார்.
இதேபோன்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில்
முன்பு ஆட்சி செய்த மாயா தேவி தலித் மக்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தர
சட்டம் கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் தடை செய்தது. அப்போது மத்திய அரசு மாயா
தேவி கட்சியின் ஆதரவினைப் பெற பாராளு மன்றத்தில் மாநிலங்களவையில் வரிந்து கட்டிக்
கொண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றவில்லையா? ஏன் அதுபோன்ற ஒரு சட்டத் திருத்தம் மத்திய அரசோ
அல்லது எந்த ஒரு தனி முஸ்லிம் எம்.பியோ தனி பில்லாக
கொண்டு வரவில்லை என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா?
தமிழகத்தில் பிற்பட்டோர் இட ஒதிக்கீடு 69 சதவீதம் என்று கொண்டு வந்தபோது உச்ச நீதி
மன்றம் வரை சென்று அவ்வாறு கொண்டு வந்தது செல்லும் என்று மாநில அரசு வாதாடிப்
பெற்றதுபோல் மத்திய அரசு ஏன் செய்ய வில்லை என்று உங்களுக்குக் கேட்கத்தோனுவது
நியாயம் தானே!
சச்சார் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கைக்குப்
பின் முஸ்லிம்கள் நிலை பற்றி பொருளாதார நிபுணர் அபுசலே ஷரிப் கூறுவதாவது:
1) முஸ்லிம்கள் கல்வியில் மற்ற பிற்பட்டவரின்
பிள்ளைகள் மெட்ரிகுலேசன் பள்ளி அனுமதியினைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள்.
உயர் கல்வியில் இந்து மத மாணவர்கள் மட்டுமின்றி மற்ற மைனோரிட்டி மாணவர் அட்மிசனைக்
காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள் என்றும் கூறுகிறார்.
2) உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் மகாத்மா
காந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.நூறு கொடுக்கப்
படுவதும் அது இப்போது பாங்க் மூலம் வழங்கப் படுவதும். அந்த கிராம வேலை வாய்ப்பு
திட்டத்தில் முஸ்லிம்கள் ஆரவே பயன் பெறவில்லை என்று கூறுகிறார்.
ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களில்லையா
என்று உங்களுக்குக் கேட்கத்தோன்றும். இது அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள்
புறக்கணிக்கும் வேலைதானே! எத்தனை முஸ்லிம்கள் மாட, மாளிகைகளில் வசிக்கின்றனர். வெள்ளிக் கிழமை
பள்ளி தோறும் சென்று பார்த்தால் காலணா, அறையனாவிற்காக கையேந்தும் முஸ்லிம் வயோதிகர், பெண்கள், நோயாளிகள் போன்றோரைப் பார்க்கும் போது நெஞ்சில்
ரத்தம் கசிவது இயற்கைதானே! ஏன் அவர் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்
பெறக் கூடாதா?
3) முஸ்லிம்களுக்கு கடன் கொடுத்து உதவ ரிசர்வ்
வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திறக்காத கடிதங்களாகவே உள்ளன. அதனால் தான் முஸ்லிம் மாணவர் கல்விக் கடன்
பெறவும், தொழில் முனைவோர் கடனுக்காகவும் வங்கிகளின்
கதவுகளில் நாட்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாபமான நிலை ஏற்படுகிறது அன்றாட
வாடிக்கையாக உள்ளது.
4) இந்தியாவில் முஸ்லிம்கள் உள்பட மைனாரிட்டி
மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களாக 93 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் அந்த
மாவட்டங்கள் முன்னேற ரூ 37,800
கோடிகள் நிதி ஒதிக்கீடு செய்யப் பட்டுள்ளன.
ஆனால்
அதனில் ரூ. 856 கோடிகள் தான் மாநில ஆரசுகளால் செலவழிக்கப் பட்டுள்ளன.
மேற்கூறிய எடுத்துக் காட்டு மூலம் மாநில
அரசுகள் எந்த விதத்தில் மைனாரிட்டி மீது கருணை காட்டுகிறது என்று விளங்க வில்லையா
உங்களுக்கு? ஏன் மத்திய அரசு மைனாரிட்டி திட்டங்களுக்கு
செலவழிக்க ஒரு கண்காணிப்பு குழவினை அமைத்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று
உங்களுக்கு கேட்கத் தோனவில்லையா?
தலித்துகளுக்கு வேலை வாய்ப்பில் பதவி
உயர்வுக்கு மாநிலங்களவையில் கட்சி வேறுபாடு அல்லாமல் சமதாக் கட்சியினைத் தவிர ஆதரவுக்
கொடுத்தனர். ஏன் தெரியுமா வருகின்ற பாராளுமன்றத்தில் தலித் மக்கள் ஓட்டுகள்
இல்லையென்றால் கிடைக்காது என்பதால்தான்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமை இல்லாததால்
பல்வேறு பிரிவுகளாக தனித் தனியாக இட ஓதிக்கீடுக்கான ஆர்பாட்டங்கள், மறியல்கள் ஈடுபட்டன. காரணம் அந்த அமைப்புகள் பலத்தினைக் காட்டுவதிற்குதான்.
ஒதிங்கு இருந்த
கண்ணியமிகு காயிதே மில்லத்தால் வளர்க்கப் பட்ட
இயக்கம் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக இட ஒதிக்கீடு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக
அறிக்கை வெளியிட்டது வரவேற்கப்பட வேண்டியது
ஒன்றுதான் காலதாமதமானாலும்.
1971
ஆம் ஆண்டு காயிதே மில்லத் அலிகார் நகரில்
பேசும்போது, முஸ்லிம்கள் வேறுபட்டு இருந்தால் வெற்றியினை
பெறமுடியாது மாறாக ஒன்று பட்டால் வெற்றி காண முடியும் என்றார். அதனையேதான்
ரசூலல்லாஹ் அவர்களும், 'முஸ்லிம்கள் ஒற்றுமை என்ற கயிறினை கட்டியாக
பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்'.
தலித்துகளுக்கு வேலையில் பதவி உயர்வுக்கு
வரிந்து கட்டிக் கொண்டு மாநிலங்களவையில் கைகலப்பு வந்தாலும் பரவாயில்லை என்று
துணிந்து மசோதா நிறைவேற மாயாதேவி பாடுபட்டார். இன்று ஆளும் கட்சியில் இருந்தாலும், உயர் பதவிகள் வகித்தாலும்
முஸ்லிம்களுக்காக உரிமையினை பெற மற்ற
அமைப்புகளுடன் சேர்ந்து பாடு படவேண்டும். இல்லை என்றால் நாளை எதிர் கட்சியில் அமர
வேண்டிய நிலை வரும் என்று பயப் படவேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போன்று, 'பதவி என்பது மேலில் போட்டிருக்கும் துண்டாகக்
கருத வேண்டும்'. முஸ்லிம்களுக்கு சாதகமான சச்சார் மற்றும்
மிஸ்ரா குழு அறிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால். பதவியினை உதறித்தள்ள தயாராக
வேண்டியது தானே என்று உங்களுக்கும் எனக்கு கேட்கத் தோணுவது நியாயம் தானே!
கவிஞர் ஆதிரைத் தாகா சொன்னதுபோல், 'துணிவில்லாத சமுதாயம் பட்டுப் போகும்'.
அதேபோன்று கட்டுக் கோப்பு இல்லாத சமூதாயமும்
வீழ்ச்சி அடையும் என்று முட்டையினை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை கெடாமல் இருப்பதிற்க்கும், குஞ்சு போரிப்பதிர்க்கும் எப்படி வெள்ளைக்
கருவினையும்,மஞ்சள் கருவினையும் இணைக்கும் பாலமாக ஓடு
இருக்கின்றதோ அதேபோன்று சமூதாய இயக்கங்களும், அரசியல்
கட்சிகளும் முஸ்லிம்கள் நலனில் அக்கறையினை தங்களது மேலான கொள்கைகளாக கருதி
ஒற்றுமைப் பட்டு குரல் கொடுத்தால் காணக் கிடைக்காத கமிசன் அறிக்கைகளுக்கும் காலம்
வழி வகுக்கும். இல்லை என்றால் யானை தன் தலையில் மண்ணை அல்லைப் போட்ட கதையாகுமென்பது
சரிதானே!