Tuesday, 17 December 2013

உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?

உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ)
உலக வேடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால்  உத்தம நபி(ஸல்) அவர்கள் மூலம் வழங்கப் பட்ட அல்குரான்  வரலாற்று பெட்டகமாகவும், காலத்தினால் இன்று வரை ஒரு எழுத்துகூட மாசு படாமலும், கருத்துசிதையாமலும் இருக்கின்றது என்பதினை உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. 
உலகம் அழிந்து மனிதர்கள் ஒருநாள் எழுப்பப் படும்போது அவன் முன்பு செய்த செயல்களுக்கு பதில் கூற வேண்டும் என்று கூறுகிறது அல்குரான். அதற்கு உதாரணமாக சாதாரன விதையிலிருந்து செடி முளைத்து பின்பு மண்ணோடு மண்ணாக மடியும் என்பதினையும், அதன் பின்பு புதிதாக செடி உருவாகுவதையும், குளங்கள் வற்றி அதன் பின்பு மழைகாலத்தில் களி மண்ணுக்கிடையே கிடந்த மீன் முட்டைகள் உருவெடுத்து துள்ளி ஓடும் மீன்களாக உலா வருவதினையும்  உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
உலகம் அழிந்து நீதி கூறும் நாள் வரும்போது சாதாரணமான நிலா நடுக்கமாகவோ, அல்லது 1945 ஆண்டு ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மாதிரியோ இருக்காதாம். மலைகள் வானத்தில் தூக்கி எறியப் பட்டு தவிடு பொடியாக இருக்கும் நாளாக இருக்கும் என்று அல்குரான்(78:40;69:14) விரிவாக கூறுகின்றன.

அதன் கூற்றை நிருபிக்கும் விதமாக 300 மில்லியன் டாலர் பணத்தில், பல ஆண்டு காலம் நடந்த ஆராய்ச்சியின் பயனாக 'பிக் பாங்க் 'என்ற நிகழ்ச்சி 2012 ஆம் ஆண்டு நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து தென் டென்மார்க் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகம் அழியும்போது வானமும்,பூமியும் எப்படி இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
உலகம் அழியும்போது பூமியில் உள்ள ஒரு தானியத்திலிருந்து மலைகள் வரை அதன் எடை பன்மடங்காக ஆகுமாம். வானத்திலுள்ள கிரகங்களும், நட்ச்சத்திரங்களும் அதன் எடையினை விட பன் மடங்கு அதிகரிக்குமாம். அவ்வாறு பெரிதாகிய கோலங்கள் ஒன்றோட ஒன்றுடன் மோதி தீப் பிழம்பாகி ஒரு சிறிய பந்தாக மாறுமாம்.
அது எவ்வாறு மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆராய்ச்சியாளர்கள், 'தண்ணீர் சூடு செய்யும்போது எப்படி ஆவியாகுகிறதோ, அல்லது காந்த சக்கித்தியுள்ள மக்னடிசம் சம்மட்டியால் அடிக்கும்போது அதன் ஈர்ப்பு சக்த்தியினை இழந்து விடுவதினை உதாரணமாக காட்டுகிறார்கள். இதன் விபரம் டென்மார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்  வெளியிடும், 'ஹை எனெர்ஜி பிசிக்ஸ்' என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ளனர்.

மேற்கொண்ட இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பல கோடி பணத்தினை செலவழித்து என்று கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் உலக மக்களை தட்டி எழுப்புவதிற்க்காக
உண்மை நபி(ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் வழங்கியுள்ளான். உலகம் ஒருநாள் அழியும், அப்போது நீங்கள் எழுப்பப் பட்டு நீங்கள் செய்த நன்மை, தீமைகள் உங்கள் கையில் புத்தகமாக வழங்கப் பட்டுக் கூலி கொடுக்கப் படும் என்றும் அறிவிக்கின்றான் அல்குரானிலே!
அதனை அறியாத மானிடர்களுடன், மூமிங்களும் கீழ்க் கண்டவாறு உழல்கின்றனர்:
1) கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினை மது, மாது, சூது போன்ற களியாட்டங்களில் செலவிட்yuடும்,
2) இறைவன் அருளிய செல்வத்தினை ஈகை வழியில் செலவு செய்யாமலும்
3) பெற்று வளர்த்த பெற்றோரை பேணிக்காக்காது நட்டாற்றில் விட்டும்
4) சகோதர, சகோதர சொத்துக்களை பளீகரம் செய்தும் 
5) மலம் கழிக்கும் கக்கூஸ்கள் கூட தங்கம் முலாம் பூசிய கக்கூசுகலாக ஆக்கி ஆடம்பரமாக வாழ்ந்தும் 
6) அமானித, பைத்துல்மால் பணத்தினை பளீகரம் செய்தும்
7) இறை வழி, நபி(ஸல்) வழிப் படி நடக்காது பல இயக்கங்களாக மூநின்களைப் பிரித்து தன் வழி தனி வழி தனி வழி என்று கூறியும், எழுதியும்
8) அப்பாவி முஸ்லிம்களை சொற்ப அரசியல் லாபத்திற்காக பகடைக் காயாக்கியும்
9) தடை செய்யப் பட்ட வட்டி, சீதனம் வாங்கியும்
10) அதிகாரம் கிடைத்துவிட்டால் பூமி அதிரும்படி நடந்தும் நடக்கும் மாந்தர்கள் தான் 
உலகம் பிறந்தது எனக்காக, என்று உண்மை தெரியாதவர்களாக இருக்கின்றார்கள்.
டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கூற்றினையாவது நம்பி உலகில் வாழும் நாட்களில் மனம் திருந்தி வாழ வேண்டும். டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் இன்னொன்றையும் கூறுகின்றார்கள் உலகம் அழியும் நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நடக்குமாம். ஆகவே உங்கள் நன்மை, தீமை வரலாற்று புத்தகம் உங்கள் கைக்கு மகசர் நாளில் வழங்கும்போது பதில் சொல்ல தயாராகுங்கள்!    





Wednesday, 11 December 2013

பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம்,2011

பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம்,2011
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய திரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் (1950) பெரும்வாரியான மக்கள் சிறுபான்மையினர்தலித், பழங்குடி மக்களைக் கண்ணின் இனிமைபோல பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழு பல்வேறு சட்டங்கள் மூலம் வழிவகை செய்தது.
அதனை ஜவர்கர்லால் நேரு பிரதமராக இருந்தது வரை பாதுகாக்கப் பட்டு வந்தது. . ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகளால் சிறுபான்மையினருக்கும், தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அவற்றில் 1984 ஆம் ஆண்டு புது டெல்லியில் சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்ட சம்பவம், முஸ்லிம்கள் 1989 ஆம் ஆண்டு மூலைக்கு மூலை கொல்லப் பட்ட பகல்பூர் கொடுமை, 1992 ஆம் ஆண்டில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு மும்பை மற்ற நகரங்களில் நடந்த கொலைகள், குஜராத்தில்  கோத்ரா ரயில் விபத்து 2002இல் நடந்த சம்பவத்திற்குப் பின்பு முஸ்லிம் மனித வேட்டை, பழங்குடி மக்களுக்காக நோய் தீர்க்க குடும்பத்துடன் பணியாற்ற வந்த பாதிரியார் டாக்டர், ஸ்டைன்ஸ் தன்  மகனுடன் ஓடிசாவில் எரிக்கப்பட்ட சம்பவம், இன்றுவரை தலித் இன மக்கள் தென்னாப்ரிக்க நிறைவேறி கொள்கைபோல காலில் செருப்பு அணியக்கூடாது, அவர்களைத் தனிமைப் படுத்தும் சுவர்கள், கலப்புத் திருமணம் செய்யத் தடை என்ற போர்வையில் தர்மபுரி நாயக்கன்க் கோட்டைக் காலனித் தாக்கப் பட்டு ஒரு ஊரையே துவசம் பண்ணும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு உலக அளவில் மதிப்புக் கெடுகிறது என்று மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு அவைகள் திரும்பவும் நடக்காமல் இருக்க ஒரு வரைவுச் சட்டத்தினை கொண்டு வந்துள்ளனர் பாராளுமன்றத்தில்.
இந்த வரைவுச் சட்டத்தினை தயாரிக்க 9 பேர் கொண்ட உறுப்பினர்களும், 4 ஆலோசர்களும் நியமிக்கப் பட்டனர். . அதன் முக்கிய உறுபினர்களாக சர்ச்சைக்குட்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹர்ச்மதரும்அணு ஆகா என்ற சமூக ஆர்வாளரும், குஜராத்தில் நடந்த இன படுகொலைகளையும், அதற்குப் பின்பு நடந்த மனம் பதை, பதைக்க நடந்த படு கொலைகளையும் சந்திக்கு இழுத்த டீஸ்ட செடேல்வாத் மற்றும் பர நக்வி போன்றோர் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டி தயாரிக்கப் பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு:
1) தேசிய, மற்றும் மாநில மக்கள் குறை தீர்க்கும் குழுக்கள் அமைக்கப் படும். அதில் 5 பேர் மைனாரிட்டி சமூகத்தினவர் ஆவர்.
2) அந்த குழுக்களிடம் வழங்கப் படும் புகாரின் வாக்கு மூலங்கள் எந்த நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொல்லப் படும்.
3) இராணுவத்திற்கோ, காவல்த் துறைக்கோ அல்லது எந்தத் துறையானாலும் நேரடியாக அமல் செய்கின்ற உத்திரவினை அந்தக் குழுக்கள் பிறப்பிக்கலாம்.
4) வன்முறையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேரடியாக இந்தக் குழுக்கள் நிவாரணம் வழங்கலாம்.
இந்தச் சட்டத்தினை அமல் நடத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களும், மற்ற சில மாநிலங்களும் குவ்வோ, முறையோ என்று எதிர்க்கின்றன.
அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்குப் பின் வருமாறு:
1) கோத்ரா சம்பவத்திற்குப் பின்பு நடந்த மனித  வேட்டையினை கண்ணை மூடிக் கொண்டு கண்டும் காணாதுபோல இருங்கள் என்று எந்த அரசும் அதிகாரிகளுக்கு உத்திரவிட முடியாது. ஏனென்றால் அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில குழுக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதற்கும் மீறி எந்த அதிகாரியாவது நடந்தால் அவர் ஆயுள் தண்டனை பெரும் அளவிற்கு தள்ளப் படுவார்.
2) இந்த வரைவுச் சட்டம் மகாராஸ்ட்ராவில் நடக்கும் மகாராஸ்டிரா மகாராஷ்டிரா மக்களுக்கே என்ற மொழி வெறி கோசங்களை எழுப்ப சிவா சேனா அமைப்புகள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கும்.
3) மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மைனாரிட்டி, தலித், பழங்குடியினர் ஓட்டினைப் பெரும் கண்ணோட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ளது.
4) சட்டம் ஒழுங்கு அமல் படுத்துவது மாநில அரசின் கடமை. அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது.

ஆனால் நடுநிலையாளர்கள் ஆட்சியாளர்களும், மத வெறியர்களும் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு மனித வேட்டை ஆடக்கூடாது மற்றும் நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் காப்பற்றப் பட வேண்டும் என்று கூறி இந்த வரைவுச சட்டம் நாட்டிற்கு நல்லது என்கின்றனர். அதற்கு காரணங்கள் கீழ் வருமாறு:
1) 1984 ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப் பட்டபோது அரசு எந்திரம் இயக்கக் கூடிய கிரியா ஊக்கி என்ற கட்டளைகள் இட யாரும் முன் வரவில்லை.
2) 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மத்திய அரசின் கட்டுப் பாட்டில் இருந்த ராணுவம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் அதனை இயக்க மௌனம் காத்த பிரதமரைக் கொண்ட மத்திய அரசினை நாம் பெற்றதால் புராதான சின்னம் இடிக்கப் பட்டது.
3) 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்பு நடந்த நரபலி அறிந்து கண்ணீர் விடத்தான் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயனால் முடிந்ததாக அவரே பேட்டியில் சொல்லி இருந்தார்.
4) அதற்குப் பின்னரும் இந்தியாவில் பாரத ரத்னா பதக்கம்  வென்ற விஞ்ஞானி ஜனாதிபதி அப்துல் கலாம் இருந்தபோது குஜராத்தில் இனக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்கள் தங்கி உள்ள அகதி முகாம்களை பார்வையிட வேண்டும் என்றும் அப்போதைய பாரதிய ஜனதா மத்திய அரசிடம் கேட்டதாகவும்  அதற்கு அனுமதி 
மறுக்கப் பட்டு விட்டதாகவும் தன் பதவி போன பின்பு எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5) முஸ்லிம்கள் ஓட்டினை பெரும்வாரியாக பெற்று ஆட்சி அமைத்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் கிட்டத்தட்ட 50 முஸ்லிம்கள் கொல்லப் பட்டு ஹுசைனா பாக்கில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்கள் 
அப்படி சம்பவங்கள் தொடர் கடையாக வருவதிற்குக் காரணம் குற்றவாளிகள் நீதி மன்றத்தின் பால் நிறுத்தும் போது நீதி தேவதையின் கண்கள் நிரந்தரமாக கட்டப் பட்டு 
குற்ற வாளிகள் வெளி வருவதுதான் என்று மைனாரிட்டி மக்களும், தலித்தும், பழங்குடியினரும் நம்புகின்றனர்.