Friday, 30 May 2014

'பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிசத்தினை மூடுவதில்லை'

எல்லாம் வல்ல அல்லாஹ் ஐவேளை தொழுகையினை ஒவ்வொரு மானிடர் முன்னேறி ஏற்றம் பெற ஆணை இட்டுள்ளான் என்பதினை ஈமானில் நம்பிக்கை உள்ளவர்களுக்குப் புரிந்து இருக்கும். சிலர் அதனை ஒரு சடங்காகக் கருதலாம். அந்தத் தொழுகையின் மகத்துவத்தினை வலியிறுத்துவதிற்கு பல்வேறு  கதீசுகள் உள்ளன. அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக புகாரியில்,  'ஒவ்வொரு நாளும் ஐவேளை ஒருவர் தன் வீட்டு அருகில் ஓடும் ஆற்றில் குழித்து வந்தால் அவருடைய உடலில் அழுக்கு எஞ்சி இருக்குமா ? அதேபோன்று ஐவேளை ஒருவர் தொழுது வந்தால் பாவங்கள் போக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவரின் உள்ளத்தில் நன்றி உணர்வு பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாக புகாரியிலும், முஸ்லிமிலும், 'தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது' என்றும் கூறப்படுகிறது. அப்துல்லாஹ் பின் அமர் பின் ஆஸ்(ரலி) அவர்கள் கூறியதாக, '(முஸ்னத் அஹமத் இப்னுஹிப்பான்) கூறியிருப்பதாவது, 'தொழுகையின் போது அவனது உள்ளத்தின் நிலைமை எப்படி இருந்து வருகிறது ? 'உலகப் பணிகளிலும்-கற்பனை என்னும் ஓடைகளிலும் தடுமாறித் திரிந்து கொண்டிருக்காது மனதினை அல்லாஹ்வின் பால் ஓர் நிலை கொள்கிறாரோ அவர்தான் உண்மையான பலன் அடைவார்கள்'
ஆகவே தொழுகையின் மகத்துவத்தினை உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்து இருக்கும். ஆனால் விஞ்ஞானப் பூர்வமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஜெனரல் மெடிக்கல் சென்ட்டர் தலைமை இதய நோய் மருத்துவர் டாக்டர் பிரைட் தொழுகையின் ஆராச்சியினை மேற்கொண்டார். அதாவது 1982 ஆகஸ்டு மற்றும் மே 1983 இடைப்பட்ட மாதங்களில் உள்ள 393 இதய நோயாளிகளை எடுத்து தொழாத 192 நோயாளியாக ஒரு குழுவும் 201 தொழும் ஒரு குழுவாகப் பிரித்து ஆராச்சியில் ஈடுபட்டார். அதில் அவர் கண்ட உண்மை என்ன என்று உங்களுக்கெல்லாம் கேட்க ஆவலாக இருக்கும். அவர் கண்டுபிடிப்பில் தொழுவதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு, 'நுரையீரல் சார்ந்த நோய், நுரையீரல் அழற்சி மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்பு வரும் சிக்கல்கள் வருவதில்லை ' என்றும் அறிந்தார்.
தொழுகையின் இயக்கவியல் அதாவது மெக்கானிக்ஸ் பற்றிக் கூறப்படுவதாவது, 'ஒரு பொருளினை பற்றி சிந்திக்கும் முறையின் எண்ணிக்கையினைப் பொறுத்து பலன் கிடைக்கும்'. மனதினை ஓர் நிலைப் படுத்தி ஒரு பொருள்மீது செலுத்தினால் அந்த பொருளுடன் தொடர்பு கொள்ளலாம்' என்ற நியதி. மனித எண்ண அலைகள் இறைவன் பக்கத்தில் செலுத்தினால் அது சுற்றுப்புறத் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஒரு குறைபோக்க மனதினை இறைவன்பால் செலுத்தி தொழுதால் அந்தக் குறைபோக்க வழிவகை செய்யும். ஒருவன் கோமானானாலும் இறைவனுக்கு அடிபணிந்து இறைஞ்சினால் அவனது பெறுமை மறைந்து இறைவன் முன்னாள் சிறுவனாகி விடுவான். தன்னலம் தலை தூக்காது பொதுநலம் மேல்நோக்கி இருக்கும்.
ஒரு மனிதன் இன்னல் படும்போது இறைஞ்சினால் அவன் மனதினை ஓர் நிலைப்படுத்துவது அதிகரிக்கும்.
நமது குறைகளை இறைவன் தொழாமலே நிவர்த்தித்தால் எந்தப் பொருளும் உற்பத்தியாகாது. நாம் நினைப்பது முழுவதுமாக கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் இறைவன் அருளுக்கு இணையாக யாரும் இருக்கமுடியாது. நமது கோரிக்கைகள் பூர்த்தியாக மனதினை அதிகமாக ஒர்நிலைப் படுத்தி இறைவனிடம் வேண்ட வேண்டும். உனது பகைவனதின் மனதினையும் உங்களுக்கு நண்பனாக்க இறை வழிப்பாட்டில் வேண்டினால் இறைவன் நிறைவேற்றுவான்.
சமீபத்திய மின் அஞ்சல்களில் பல்வேறு நண்பர்கள் 2014இல் நடந்த ஆட்ச்சி மாற்றத்தினைப் பார்த்து அஞ்சி கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கல்லையும் கரைக்கும் வல்லமை கொண்ட அல்லாஹ்வினிடம் வேண்டினால் இந்திய முஸ்லிம்கள்  வாழ்வில் அல்லாஹ் ஒளி ஏற்றுவான்.

'தரை வணங்கிக் கேட்போருக்கு தந்து மகிழ்பவன்-தரணி எங்கும் நிறைந்திருக்கும் மகா வல்லவன், ஆர்வமோடு இறைஞ்ஜிவோருக்கு அல்லல் நீக்கும் தூயோன்  அல்லாஹ்' என்பதினை யாரும் மறக்க வேண்டாம்.