Thursday, 26 April 2018
Saturday, 7 April 2018
என்னைக் கவர்ந்த கலீபா உமர் சிறப்புப் பயான்!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
கி.பி.634 லிலிருந்து கி.பி.644 வரை அராபியாவில் இரண்டாவது கலிபாவாகஹஜ்ரத் உமர் அவர்கள் பதவிக்கு வந்து முஸ்லிம்கள்
ஆட்சியினை அரேபியாவிலிருந்து மெசபொமோடோமியா, சிரியா, இரான், இராக், எகிப்து ஆகிய நாடுகளில்
நிலை நிறுத்தியவர். முஸ்லிம் அல்லாத மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் உமருடைய நீதி
நிறைந்த ஜனநாயக ஆட்சி முறை பற்றி பாராட்டப் பட்டவர். அவருடைய சீரிய புகழ் பற்றி சென்ற 6 4 2018 அன்று மண்ணடி செம்புதாஸ் தெருவில் இருக்கும்
பள்ளியில் சேலத்தினைச் சார்ந்த ஒரு இமாம் ஆற்றிய உரை மிகவும் சிறப்புடையதாக இருந்தது.
அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இன்று
காவேரி தண்ணீருக்காக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. அது ஆட்சியினர் குறையே என்றால்
மறுக்கமுடியாது. ஒரு தடவை கலிபா உமர் அவர்கள் பக்ரா என்ற ஊருக்கு வருகை தந்தார்கள். அங்கே தண்ணிர் பஞ்சம் தலை விருத்தாடியது.
அந்த ஊரில் தனது நீண்ட நாள் நண்பரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பரிடம் உங்களுக்கு
ஏதாவது உதவி தேவைப் படுகிறதா கேளுங்கள் தருகிறேன் என்றாராம், அந்த நபர் வறுமையில் வாடும்
நிலை கண்டு. ஆனால் அந்த நண்பரோ தனக்கும் தனது குடும்பத்திற்கும் பொன்னும், பொருளும்
கேட்கவில்லை. மாறாக அந்த நகருக்கு தண்ணிர்
பஞ்சத்தினைப் போக்கும் விதத்தில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாராம்.
உடனே அந்த நகர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் உதவும் படி பக்ரா அணையினை
காட்டினாராம். அதனை இன்றும் ஹஜ், உம்ரா செல்பவர்கள் காண முடியும்.
உமர்
அவர்கள் மக்கள் குறை தீர்ப்பவராக இருந்ததால் ஒரு தடவை அதிகாலை நேரத்தில் நகர் வலம்
வந்தார். அங்கே ஒரு பள்ளியில் சில இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
உடனே கீழே கிடந்த கல்லை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர்களை பார்த்து ஏன் தொழுகை முடிந்து
உடனே விரைந்து சென்று குடும்பத்திற்கு தேவையான பொருள் சம்பாதிக்க வில்லை என்று கேட்டார்களாம்.
அந்த இளைஞர்களோ, நாங்கள் ஏமன் நாட்டிலிருந்து நேற்று இரவு வந்து தங்கி காலையில் வியாபாரத்திற்காக
செல்ல வேண்டும் என்று கூறினார்களாம். அதனைக் கேட்ட உமர் அவர்கள் நல்ல வேலையாக தப்பித்தீர்கள்,
இந்நேரம் இந்த நகர வேலை செய்யாமல் சோம்பேறியாக வெறுமனே கதை பேசும் இளைஞர்களாக இருந்திருந்தால் இந்தக் கல்லைக் கொண்டு தாக்கியிருப்பேன் என்கிறார்களாம். இது எதனைக் காட்டுகின்றது
என்றால் பள்ளியில் தொழுகை முடிந்ததும் வீண் பேச்சுகள் குறைத்து குடும்பத்தினை காப்பாற்ற
தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரையினைத் தானே காட்டுகின்றது. ஆனால் ஒரு மாத, மூன்று
மாத, ஆறுமாத ஜமாத்து என்று இளைஞர்களை படிப்பு, வியாபாரம், குடும்பத்தினை புறக்கணித்து
அழைத்துச் செல்வது நியாயமா என்று கேட்காத தோனவில்லியா
உங்களுக்கு. எனக்குத் தெரிந்த ஒரு ஜாமத்திற்கு சென்ற இளைஞர் தாய் நோயாய் இருக்கும்போது
வயதான தந்தையினை அருகில் விட்டு விட்டு 15 நாள் ஜமாத்திற்கு சென்றதும், தாய் மவுத்தானதும்
அந்த இளைஞர் எங்கே இருக்கின்றார் என்று கூட அறிய முடியா ஜமாத்தின் நிலை இருந்த ஒரு
நிகழ்வுனை அறிவேன். ஜாமத்திற்கு சென்ற அந்த இளைஞரின் கைபேசியினை அந்த குழுவின் தலைவர்
வாங்கி வைத்துக் கொண்டாராம் என்ற பரிதாபமான நிலையினைப் பாருங்கள். சில பள்ளியில் அஸர்
தொழுது விட்டு வெட்டியாக இஷா வரும்வரை பள்ளி வளாகத்தில் அமர்ந்து வீனே வம்படிக்கும்
சிலரைக் காணலாம். இதுபோன்ற நிகழ்வு தேவைதானா. ஏன் அந்த நேரத்தில் வீட்டிற்கு தேவையான
காரியங்களை செய்யக்கூடாது.
உமர்
அவர்கள் மக்களிடம் குறை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் ஆளுமை படைத்தவராக இருந்தார்கள்.
ஒரு தடவை மக்கள் குறை கேட்கும் நேரத்தில் ஒரு கவர்னர் பற்றி, 'அவர் தனது வீட்டிற்கு
மிகவும் அதிகமான பொருட் செலவில் கதவு அமைத்துள்ளார்' என்ற புகார் வந்ததாம். உடனே
அந்த கவர்னரை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாராம். அங்கே கலீபா உமர் அவர்களுடைய
வீட்டின் முன் வாசலில் கதவு எதுவுமில்லாமல் ஒரு கோணிப் பை மறைப்பாக தொங்கியதாம். உடனே
அந்த கவர்னர் வருந்தி தனது ஆடம்பர கதவினை நீக்கி விட்டாராம். ஆனால் இன்றைய ஜனநாயக நாட்டில்
மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தனது காலைதேநீருக்காக ரூ 3 .5 கோடி இரண்டரை வருடத்தில்
செலவு செய்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்
பட்டுள்ளது.
இன்னொருமுறை
ஒரு கவர்னர் பற்றி மூன்று புகார்கள் சொல்லப் பட்டதாம். 1 ) காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலுகத்திற்கு வராமல்
காலந்தாழ்த்தி வருகிறார், 2 ) விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வருவதில்லை,
3 ) இரவு நேரங்களில் அலுவல்கள் பார்ப்பதில்லை என்பதான குற்றச் சாட்டாகும் . ஒரு தடவை உமர் அவர்கள் சபைக்கு
அந்த கவர்னர் வருகை தந்ததும் மேற்கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் பற்றி கேள்வி கேட்கப்
பட்டதாம். அந்த கவர்னர் முதலாவது குற்றச் சாட்டிற்கு ப்
பதிலாக, 'கலீபா அவர்களே, என் மனைவி நோய் வாய்ப் பட்டவள், அவளுக்கும் என் பிள்ளைகளுக்கும்
சமையல் செய்து, அவளுக்கு நோய்க்கான மருந்துகள் கொடுத்து விட்டு வர தாமதமாகிறது என்றாராம்.
உடனே கலீபா அவர்கள் அந்த கவர்னர் நெற்றியில் முத்தமிட்டாராம். இரண்டாவது குற்றச் சாட்டிற்கு,
எனக்கு உடுத்த ஒரே ஆடை தான் உள்ளது அதனை விடுமுறை நாட்களில் துவைத்துப் போட்டு காயவைத்து
உடுத்திக் கொள்வதிற்க்காக வருவதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவருடைய நெற்றியில்
இரண்டாம்முறையாக முத்தமிட்டு, 'நான் கூட இரண்டு ஆடை வைத்துள்ளேன்' என ஆதங்கப் பட்டாராம்.
மூன்றாம் குற்றச்சாட்டிற்கு 'நான் பகல் நேரத்தில் படைப்பினங் களுக்கு
சேவை செய்து விட்டு இரவு நேரங்களில் படைத்தவனுக்கு எனது நன்றி செலுத்தி தொழுவதால் இரவு
அலுவல் செய்வதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு அவர்
எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எவ்வளவு அளவிற்கு விசுவாசமாக இருக்கின்றார் என்று சபையினரை
நோக்கிச் சொன்னார்களாம்.
நமது
இளைஞர்கள் தற்போதைய நிலையினை மேற்கூறிய கருத்துக் களோடு ஒப்பிட்டுப் பார்க்க கடமை பட்டுள்ளோம்.
பெற்றோரை பேனிக் காப்பதில்லை, மனவியினை தன் உடலின் ஒரு உறுப்பாக கருதாமல் தனக்கு நோய்
வந்தால் அவள் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமும், அவள் நோய் பட்டு விட்டால்
பிறந்த வீட்டிற்கு அனுப்பி அங்கே வைத்தியம் பார்த்து விட்டு வா என்று மூட்டை முடிச்சுடன்
அனுப்பும் செயலும் இருக்கின்றது. எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் உங்களுடன் பகிர்ந்து
கொள்ள ஆசைப் படுகிறேன். ஒரு மணமக்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அந்த
மணமகள் திடீரென்று மயக்கம் அடைந்து கணவன் வீட்டில் விழுந்து விடுகிறாள். உடனே கணவன்
வீட்டார் அந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பரிசோதித்த
டாக்டர் லோ சுகரினால் மயக்கம் அடைந்துள்ளார் என்று கூறி மருந்து கொடுத்தாராம். வீட்டிற்கு
வந்ததும் மணமகன் வீட்டார் பெண்ணிடம் உனக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருக்கின்றதா என்று
கேட்டதிற்கு அந்தப் பெண்ணும் வெகுளியாக ஆம் என்று சொல்லி விட்டதாம். உடனே அந்தப் பெண்
மீது ஆதங்கம் படாமல் கோபப் பட்டு ஏன் திருமணத்திற்கு முன்னே அதனை சொல்லவில்லை என்று
சண்டைப் போட்டு ஆடு,மாடு போல வீட்டிற்கு அனுப்பி விட்டதோடு, தலாக்கும் சொல்லி விட்டார்களாம்.
என்னே பரிதாபம். சர்க்கரை ஒரு நோய் அல்ல மாறாக அது ஒரு குறைபாடே என்று அவர்களுக்கு யார்
எடுத்துக் காட்ட வேண்டும். படித்த மணமகன் தானே செய்ய வேண்டும். ஆனால் அவன் தன் பெற்றோருடன்
சேர்ந்து ஒரு பெண்ணை சுவைத்து விட்டு மறு மணமகளை தேட ஆரம்பித்து விட்டானாம்.
இஸ்லாமிய
கவர்னர் உடுத்த ஒரே உடை தான் வைத்து விடுமுறை நாட்களில் துவைத்து உடுத்தினாராம். ஆனால்
இந்திய பிரதமர் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோட்டு அணிந்த செய்தியும் படித்திருப்பீர்கள்.
அதுவும் எந்த நாட்டில் மகாத்மா காந்தி இடுப்பில் ஒரு துணியும், மேலங்கி ஒரு துணியோடு
வாழ்ந்து காட்டிய வரலாறு உள்ளது. ஏன் தமிழ் நாட்டிலே சுதந்திர போராட்ட கம்யூனிஸ்ட்
தலைவர்கள் ஜீவாவும், நல்லக்கண்ணும் வாழ்ந்தவர் மற்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான்.
அவர்கள் ஆடையினை அவர்களே தான் துவைத்துக் கொள்வார்களாம். தலைக்கு கூட எண்ணெய் தேய்க்க
மாட்டார்கள். ஆனால் நமது சமுதாய தலைவர்கள் கூட தற்போது தங்களை மதிக்க வேண்டுமென்று
திருமண நிகழ்ச்சிக்கு கூட கோட்டு, சூட்டு அணிந்து வருகிறார்கள் என்று எதனை காட்டுகின்றது
என்றால் அவர்கள் சாமானிய இஸ்லாமிய மக்களை கீழ்த்தரமாக நினைக் கும்
போலியான நடவடிக்கை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
நமது சமுதாயத்தில்
பணம், புகழ், படிப்பு பெரும் வரை இறைவனை வணங்குகிறோம். ஆனால் அந்த மூன்றும் கிடைத்ததும்
அகம்பாவம் அடைந்து தன்னுடைய திறமையினால் தான் அத்தனையும் கிடைத்தது என்று எல்லாம் வாரி
வழங்கும் வல்ல அல்லாஹ்வினை தொழ மறந்து விடுகின்றோம். ஆகவே தான் கலீபா உமர் அவர்களும்,
அவர் கீழ் பணியாற்றிய அலுவலர்களும் சிறப்பாக மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக ஆட்சிமுறை
நடத்திக் காட்ட முடிந்தது. ஏன் அது போன்று இன்றைய இஸ்லாமிய இளைஞர் படையினால் முடியாத,
இழந்த பெருமை திரும்பப் பெற முடியாதா?
Subscribe to:
Posts (Atom)