டாக்டர்
ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்,(ஓ)
ஐ.நா. சபையின் இலங்கைக்கான மனித உரிமை மீறல் தீர்மான
ஓட்டெடுப்பு 23.3.3021ல் நடந்தது. அதில் 22 நாடுகள் ஆதரவு அளித்தும், சீனா, பாகிஸ்தான்,மற்றும்
9 நாடுகள் எதிர்த்தும், இந்தியா உளபட 14 நாடுகள் வெளிநடப்பு செய்தாலும், தீர்மானம் நிறைவேறியது. இந்தியா வெளி நடப்பு செய்ததை
எதிர்பாக்காத இலங்கை தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகள், மத்திய அரசின்
செயலுக்கு கண்டனம் தெரிவித்தது ஊடகங்கள் வாயிலாக அறிவோம். இந்தியா அவ்வாறு செய்ததிற்கு
சில காரணங்கள் இருக்கலாம், எங்கே குஜராத்தில் 2002 ம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்தினை
காரணம் காட்டி கிட்டத்தட்ட 3000 அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று, அவர்கள் இருக்குமிடம்
நாசப் படுத்தி, அவர்கள் வியாபார நிறுவனகங்கள் கொலுத்தப் பட்ட விவகாரம், மற்றும் சென்ற
ஆண்டு CAA, CRC மசோதா நிறைவேற்றினத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட முஸ்லிம் எழுச்சியினை
எவ்வாறு சங் பரிவார் துணையுடன் அடக்க முயன்றனர் என்று உலகமே அறிந்திருக்கும்போது, எங்கே
அந்த விவகாரம் மறு மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு வழி வகுத்து விடக் கூடாதே என்ற
அச்சத்தால் கூட இருக்கலாம் என ஊடகங்கள் எடுத்துக் காட்டின.
இப்போது,
இலங்கையில் அப்படி என்ன மனித உரிமை மீறல் என்று பார்க்கலாம். இலங்கை ஆங்கிலேய காலனி
ஆதிக்கத்திலிருந்து 1948ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கள
மக்களின் அத்துமீறல் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தலையெடுத்தது.
மேற்படி பகுதிகளில் குடியேறியவர்கள் தமிழ் நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றால்
மிகையாகாது. 1956ம் ஆண்டு இலங்கை பிரதமர் பண்டார நாயகா சிங்கள மொழி ஆட்சி மொழி என்று
அறிவிப்பு செய்தது இலங்கை தமிழர்கள் தலையில்
இடி விழுந்தது போல இருந்தது. 1970ம் ஆண்டு கல்வியில் கொண்டு வரப் பட்ட, 'Policy of
Standardization' என்ற கொள்கை தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கட்க தடைக் கல்லாக இருந்தது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போன்றவைகள்
தொடர்ந்தன. தமிழ் மாணவர்கள் போராட்டத் தலமாக Jaffna பொது நூலகம் செயல் பட்டது. 1981ம் வருடம் சிங்கள மக்களாலும் அவர்களுக்கு உறுதுணையாக
ராணுவமும் செயல் பட்டு Jaffna நூலகம் கொலுத்தப் பட்டது. பௌத்த மதத்திற்கு அரசு முக்கியத்துவம்
கொடுத்தது தமிழ் மக்களை மொழி, இனம், மதத்தினால் அரசு பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
என்று அறிந்த படித்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து ‘தமிழ் ஈழம்’ பெறுவதே ஒரே வழி என்று
முடிவெடுத்தனர்.
ஈழ
தமிழர்களின் எழுச்சி தலைவர்களான செல்வராஜா என்ற குட்டிமணி, நடராஜா என்ற தங்கதுரை மற்றும்
30 தமிழ் இளைஞர்கள் ‘வெளிகொடா’ என்ற சிறையில் இருந்தபோது 25.7.1983 அன்று சிங்கள சிறை
அதிகாரிகள் துணையுடன் சிங்கள வெறியர்களால் பரிதாபமாக கொல்லப் பட்டது உலகெங்கும் உள்ள
தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் ஈழம் சுயாட்சி என்ற
குரலிலிருந்து தமிழ் ஈழம் விடுதலை என்ற கோசம் ஆரம்பித்தது. சிங்கள வெறியாட்டத்திற்குப்
பயந்து போராளிகள் தமிழகத்திற்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் பயிற்சி முகாம், மற்றும்
பிரசாரா பொருட்காட்சிகள் நடத்தப் பட்டன. அதற்கு மத்திய மாநில அரசுகளும் உதவி செய்தன.
1984ம் ஆண்டு ஊட்டியில் ADSP ஆக பணியாற்றியபோது என்னிடம் மூன்று இலங்கை தமிழ் இளைஞர்கள்
வந்து தமிழர் போராட்ட பொருக்காட்சி நடத்த வேண்டுமென்றனர். அப்போது அதில் ஒருவர் கழுத்தில்
செப்பு தகடால் ஆனா தாயத்து அணிந்திருந்தார். அதனை கூர்ந்து பார்த்தபோது அதில் Al
Fatah என அரபிக் மொழியில் இருந்தது. அதனை சுட்டிக் காட்டி அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்
'தான் பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றதாகவும், அவர்கள் பயிற்சி எடுத்ததிற்காக நம்பர்'
என்றார். அதன் பிறகு நான் 1986 ல் சேலம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது TELO இயக்கம் நடத்திய பயிற்சி முகாமை உத்தரவின் பேரில்
வேலூர் சரக டி.ஐ.ஜி Nailwal அவர்களுடன் சென்று கொல்லிமலையில் சோதனையிட்டோம்.
1)
ஈழ விடுதலை போராளிகளில் இரு பிரிவுகளாக
காணலாம். பிரபாகரன் தலைமையிலான LTTE மீனவர் சமுதாயமான ‘கரையார்’ என்ற சமூகத்தினை சார்ந்தவர்களாகவும்,
மற்ற அமைப்புகள் ‘வெள்ளாளர்’ என்ற விவசாய சமூகத்தினவராகவும் இருந்தனர். LTTE இயக்கத்தில்
பிரபாகரனும், பாலசிங்கமும் இணைந்து செயலாற்றினர். அவர்களுக்கு வெளிநாடுகளிருந்து பணம்
பெற்றது KP என்ற பத்மநாபனாகும் என்று உலக பயங்கரவாத பொருளாதாரம் ஈட்டும் பட்டியலில்
உள்ளார். ஆரம்பத்தில் ஒன்றாக இணைத்து போராட்டம் நடத்திய விடுதலை இயக்கத்தினர் LTTE
இயக்கத் தலைவர் பிரபாகரனால் மற்ற இயக்கங்களை கட்டுப் படுத்தும் முயற்சியில் இறங்கியதால்
இரு பிரிவாக செயல் பட்டனர். ஒன்று பிரபாகரன் ஆதரவு மற்றொன்று அரசுக்கு ஆதரவானது.
2)
Elam Revolutionary Organisation of
Students(EROS ) பாலகுமார் தலைமையில் ஈழப் போராட்டம் நடத்தினர்.
3) EPRLF Elam
People's Revolutionary Libration Front Pathamanaba தலைமையில் அரசு சார்ந்த இயக்கமாக
LTTEக்கு மாற்றாக வரவேண்டும் என்று தலையெடுத்தனர்.
4) EPDP Elam
People Democratic Front டக்லஸ் தேவானந்தா தலைமையில் அரசு சார்ந்த இயக்கமாக செயல்பட்டு
இலங்கை பிரதமர் சந்திரிகா பண்டாரநாயக்கா மந்திரி சபையில் மந்திரியாகவும்
செயல் பட்டார். இவருடைய இயக்கம் சென்னை சூளைமேட்டில் இருந்தபோது அங்குள்ள மக்களுக்கு
இடைஞ்சலாக இருக்கின்றது என்று 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற வக்கீல் தலைமையில்
ஆர்ப்பாட்டம் செய்தபோது டக்ளஸ் தேவானந்தா கைத்துப்பாக்கியால் சுட்டபோது வக்கீல் இறந்தார்.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
உலக
அளவில் மிகவும் அபாயகரமான தீவிரவாத இயக்கங்களில் முக்கியமான மிகவும் வல்லமை
கொண்ட LTTE இயக்கம் தேய் பிறையாகு மங்கி மறைந்தது ஒரு வரலாற்றுக் கதை எனலாம்:
25 வருட கால தமிழ்
ஈழப் போர் வெற்றி கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணங்கள்
ஆராய்வோமென்றால்:
1)
ஈழ போராட்டக் குழுவினரிடையே யார் பெரியவர்
என்ற போராட்டம் உச்சக் கட்டத்தில் சகோதர யுத்தம் விஸ்வ ரூபம் எடுத்தது. அதன் பலன் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த TELO அமைப்பின்
தளபதி ஸ்ரீ சபாரத்தினம் LTTE முன்னாள் சரணடைந்தபோதும், தி.மு.க தலைவர் 'விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனை நோக்கி, 'தம்பி
சபாரெத்தினத்திற்கு உயிர் பிச்சை கொடு' என்று வேண்டுகோள் விடுத்தும் சபாரத்தினம்
1986ல் கொல்லப் பட்டார். தமிழர் ஆதரவு தலைவர் பெரியவர் அமிர்தலிங்கம் 1989ம் ஆண்டு
கொல்லப் பட்டார். பிரபாகரன் தமிழகத்தில் தஞ்சம் கொண்ட நாட்களில் புலிகளின் இயக்கத்தினை
தலைமையேற்று நடத்தி இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தளபதி மாத்தையா 1994ல்
கொல்லப் பட்டார். பிரபாகரனுக்கு சிங்கப்பூரிலிருந்து கப்பலில் ஆயுதம் கொண்டு வந்த கிட்டு
என்ற கிருஷ்ணகுமார் நடுக் கடலில் மடிந்தார். EPRLF சென்னை அலுவலகத்தில் இருந்த அதன்
தலைவர் பத்மநாபா மற்றும் 12 ஸ்ரீலங்கன் தமிழர், ஒரு சென்னை வாசியும் விடுதலைப் புலிகளின்
தாக்குதலால் 1990ல் கொல்லப் பட்டதால் அன்றைய தி.மு.க அரசுக்கு அவப் பெயர் உண்டானது.
2)
இலங்கை பெட்டிக்கோலா மாவட்டத்தில் பள்ளிவாசல்களில்
அதிகாலை பாஜ்ர் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது 1990 ல் துப்பாக்கி பிரயோகம் செய்து
கிட்டத்தட்ட 300 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டது, முஸ்லிம்களிடையே இன்னமும் விடுதலைப்
புலிகள் பெயர் கேட்டாலே அதிர்ச்சியில் உறைந்து விடும் அளவிற்கு பயங்கரமான இயக்கமானது.
3)
அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் நிம்மதி
பெறவும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையவும் 1987ல் இந்திய ராணுவத்தினை அனுப்பினார்.
ஆனால் விடுதலிப் புலிகள் இந்தியப் படைகள் மீது அபாண்டமான பழிகள் சுமத்தியதுடன் இலங்கை
அரசும் உங்கள் பணி போதும் என்று சொன்னதால் 1990ம் ஆண்டு ராணுவம் திரும்பப் பெறப் பட்டது.
அதற்கு பலன் ராஜிவ் மீது கோபம் கொண்ட விடுதலைப் புலிகள் மே மாதம் 21ந்தேதி 1991ல் ஸ்ரீபெரும்புதூரில்
கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டு மூலம் அவரும் அவருடன் சேர்ந்து
13 பேர்களும் கொல்லப் பட்டனர். இந்திய மண்ணில் வருங்கால உலக தலைவர் ஒருவர் கொல்லப்
பட்டது தமிழர் மட்டுமல்லாது உலக அளவில் சோகத்தினை ஏற்படுத்தியது.
4)
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர்கள்,
'வினை விதித்தவன் வினை அறுப்பானென்று' அதற்கெனங்க புலிகள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும்
காற்றில் பறந்தது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா மற்றும் 32 ஐரோப்பிய நாடுகள்
LTTE இயக்கத்தினை தடை செய்தது.
5)
இந்தியாவில் நடத்திய கொலைவெறி தாக்குதல்
இலங்கையிலும் நடத்தப் பட்டது. 1993ம் ஆண்டு இலங்கை பிரதமர் பிரேமதாசா கலந்து கொண்ட
1993 மே தின ஊர்வலத்தில் மனித வெடிகுண்டால் கொல்லப் பட்டார். அதேபோன்று அன்றைய பிரதமர்
சந்திரிகா பண்டாரநாயகா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் மீது கொலைவெறி 1999ல் நடத்தப்
பட்டு ஒரு கண்ணை இழந்தார்.
6)
இந்திய மண்ணில் மற்றொரு தாக்குதலும்
நடைபெற்றது. 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் சென்ற வாகனத்தினை இராமநாதபுரம் பட்டினப்
காத்தான் செக் போஸ்டில் தடுத்து நிறுத்தியபோது சுப்பிரமணியன் என்ற காவலரை சுட்டுத்
தள்ளிவிட்டு சென்றது தமிழக காலவரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
7)
LTTE அமைப்பின் கிழக்குப் பகுதி தளபதியாக
இருந்த கருணா, பிரபாகரன் செயல் பிடிக்காது
5000 செயல் வீரர்களுடன் தனியாக இருந்து அரசு சார்ந்த நிலையினை எடுத்தார்.
8)
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால்
30,000 கடற்கரை ஒர மக்கள் மடிந்தது விடுதலை இயக்கத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
9)
25 வருட தமிழ் ஈழ போராட்டம் மூலம் தமிழர்
பொருளாதாரம் பெரிதே பாதிக்கப் பட்டது. ஐ.நா. ஆய்வின்படி தமிழ் விடுதலை போரில் ஒரு லட்சம்
மக்கள் மடிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
10) உலகெங்கும் தீவிரவாதத்தினை அழித்திடும் இயக்கத்திற்கு
குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்தந்த அரசுக்கும் உதவியும் உலக நாடுகள் செய்தது. தழீழ போரினால் பாதிக்கப் பட்ட இலங்கையில்
அவர்களை ஒழிக்க நிலையான அரசு வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டு அதற்கு பௌத்த சாமியார்களும்
ஆதரவு தெரிவித்ததால் இலங்கையில் ராஜபக்சே அரசு பதவி ஏற்று இறுதி கட்ட போர் நடந்து
2009ம் ஆண்டு முல்லை வாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள், பனைய கைதிகளாக
பிடிக்கப் பட்ட அப்பாவி தமிழர்கள் இறந்ததும், தளபதி பிரபாகரன் கொல்லப் பட்டும்
LTTE இயக்கத்தால் 16, மே மாதம் 2009ல் தோல்வியினை ஒப்புக் கொள்ளப் பட்டது.
இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது
என்னவென்றால், எந்த தீவிரவாத இயக்கமும் நிலையான அரசிடம் தோல்வி அடைவது உறுதி. 1991ல்
ராஜிவ் காந்தி குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டு ஜெயிலில் உள்ளனர். அதனை ஒரு கருவியாக
வைத்து தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் பொம்மலாட்டம் செய்கின்றனர். தண்டனை
அடைந்தவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று. ஆனால் தண்டனை பெற்ற முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பியாஸ், அவருடைய
சகோதரர் ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர்
ஸ்ரீலங்காவிலிருந்து
கள்ளத்தனமாக இந்தியா வந்தவர்கள். அதில் பேரறிவாளன் மட்டும் தான் தமிழகத்தினைச் சார்ந்தவன்.
ஸ்ரீலங்காவினைச் சார்ந்தவர்களை விடுதலை செய்தால் அவர்கள் இலங்கை அரசிடம் தான் ஒப்படைக்க
வேண்டும். இப்போதுள்ள சூழலில் அவர்கள் அங்கு சென்றால் அவர்கள் உயிர் வாழமுடியுமா என்பதே
சந்தேகம். அதெல்லாம் இங்குள்ள தமிழர் கட்சிகளுக்குத் தெரியும் ஆனாலும் அரசியலுக்காக
குரல் கொடுக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் எத்தனையோ தமிழ்நாட்டின் கைதிகள் 20 வருடத்திற்கு
மேலாக ஜெயிலில் வாடுகின்றனர் அவர்கள் விடுதலைக்கு குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று
கேட்க முடியவில்லை?
இந்த இடத்தில் ராஜிவ் காந்தியின் அருமை
மகளார் பிரியங்கா வேலூர் சிறையில் இருக்கும் நளினியினை பார்த்து என்ன நடந்தது என்று
விசாரிக்க 18.3.2008 ம் ஆண்டு முன்னறிவிப்பு இன்றி சென்றார். அவர் வந்ததினை ஒரு கனவு
போல இருந்தது என்று பின்பு நளினி கூறியுள்ளார்.
பிரியங்கா, நளினியினை பார்த்ததும், 'My father is a good and soft man, why did
you do it? you would have sorted out the issues whatever it may be through dialogue'
(என்னுடைய தந்தை நல்லவர், மென்மையானவர், ஏன் அவ்வாறு செய்தீர்கள், எந்த விஷயமாக இருந்தாலும்
பேசி தீர்த்து இருக்கலாமே) என்று சொன்னது மட்டுமல்லாமல் கண்ணீர் விட்டு அழுதாராம்.
தந்தையினை இழந்த மகள் அதனைவிட மிகவும் மென்மையான ஆனால் கடுமையான உள்ளர்த்தம் உள்ள வார்த்தைகளை
யாரும் சொல்ல இயலாது. நளினியும் அழுதாராம், ஆனால் தான் நிரபராரி என்று மட்டும் சொன்னாராம்.
'எங்கள் குடும்பம் உங்களை மன்னித்து விட்டது' என்று சொல்லி வந்து விட்டாராம். அந்த
வார்த்தைகள் நளினி உயிருடன் இருக்கும் வரை அவரை வாட்டி எடுக்கும் என்பது நிச்சயமல்லவா
தமிழர் பழமொழி, 'அரசன் அன்று கொல்வான்,
தெய்வம் நின்று கொள்ளும்', 'கொலைக் குற்றம்
போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தற்காலிகமாக தப்பிக்கலாம் ஆனால் ஒரு போதும் தப்பிக்க
முடியாது' 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்' போன்ற வாசகங்கள் LTTE பிரபாகரன் போன்றவர்களுக்கு
தகும் என்றால் மிகையாகாது தானே?