Thursday, 28 December 2023

பேய் மழையில் மறைந்த ஜாதி, மத துவேசம்!

 


(டாக்டர் .பீ. முகமது அலி, பீ.எஸ்()

தென் தமிழகமென்றாலே ஜாதி, சமய சண்டை என்ற செய்திகள் 1995ம் ஆண்டிலிருந்து 1998 வரை நாம் பார்த்திருக்கின்றோம். நான் பணியிலிருந்தபோது ஜாதி சண்டைகளை கட்டுப் படுத்த காவல்  தலைமையிடத்திலிருந்து பணிக்கப் பட்டேன். 1995ம் ஆண்டு தூத்துக்குடி நகரத்தில் மீனவர்களுக்கும், நாடார் சமூக மக்களுக்கும் இடையிலும், 1996ம் ஆண்டு ராஜபாளையம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தேவர்-தலித் இடையே நடந்த சண்டைகளையும், 1998யில் கோவில்பட்டி, திருநெல்வேலி  சுற்றியுள்ள ஊர்களில் நாடார்-தலித் மக்களுக்கும், 1998ம் ஆண்டு ராமநாதபுர பகுதிகளில் தேவர்-தலித் இன மக்களுக்கும் நடந்த சண்டைகளை கண்டுள்ளேன். இதுபோன்ற சண்டைகளில் பாதிக்கப் பட்டவர் பணக்காரர்களல்ல மாறாக நடுத்தர மற்றும் ஏழை விவசாய மக்களும் தானே! வீடுகள், குடிசைகள் நாசமாக்கப் பட்டு, வைக்கோல் போர்கள், கோழிப் பண்ணைகள், ஏற்றுமதிக்கான வைக்கப் பட்ட நாட்டு மருந்து செடிகளும் தீக்கிரையாக்கப் பட்டன. பசுமையான வயல்களும், தென்னை மரங்களும் நாசமாக்கப் பட்டன. இதுபோன்ற நாச வேளையில் தூண்டி விட்டவர்கள் சாதி சங்கங்களின் தலைவர்கள் தான். ஆனால் பாதிக்கப் பட்டோர் ஒன்றும் அறியா  மக்கள்.

          தமிழகத்தில் வர்தா புயல் 2016ம் ஆண்டும், கஜா புயல் 10.11.2018 லும் வந்த போது அப்போதைய அரசு நத்தை போல எவ்வாறு செயல் பட்டது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள், வேட்டியில் நீர்ப்படாமல் நடந்த முக்கிய நபர்களையும் தொலைக்காட்சிகள் படம் பிடித்தும், கடலூருக்குக் கூட பார்வையிட ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தியதையும் உங்களுக்குத் தெரியும், அதற்கு நேர் மாறாக தற்போதைய அரசும், அலுவலர்களும் எவ்வாறு முனைந்து நிவாரணப் பணிகள் செய்தது என்றும் உங்களுக்குத் தெரியும். சென்ற 17ந்தேதி, 18ந்தேதிகளில் மழையினால் எவ்வாறு தென் மாவட்டங்கள் பாதித்தது, அதனால் எப்படி அங்குள்ள மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் கான்க்ரீட் வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகையவற்றினைக்கூட விடவில்லை, வெள்ளத்தில் அடித்துச் சென்றன. 148 குளங்கள் உடைந்தன. தூத்துக்குடி வாழ் வாதாரத்திற்கு முக்கியமான உப்பளம் கூட கடலோடு கரைந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலும் கடலும் ஒன்றாகியது. 1923ம் ஆண்டிற்குப் பின்பு நூறு வருடங்களைத் தாண்டி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினது. நான் ஸ்ரீவைகுண்டம் டிஸ்பி ஆக 1983ம் ஆண்டிலும், தூத்துக்குடி எஸ்பியாக 1990ம் ஆண்டும் பணியாற்றியுள்ளேன். ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஏரல் , குரும்பூர் ஆத்தூர் போன்ற பகுதிகளில் பச்சை மெத்தை விரித்தது போன்ற நெல் வயல்களும், கரும்பு, தென்னையும் பரந்து காட்சியளிக்கும். அப்படிபட்ட ஊர்களில் மக்கள் தனிமைப்படுத்தப் பட்டு எங்கும் செல்ல முடியாமலும், ஸ்ரீவைகுண்டத்தில் கூட ரயில் மூன்று நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டும், பயணிகள் உணவில்லாமல் தவித்ததினையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

            நாங்கள் இதுபோன்ற மழை வரும் என்று கூறி மாநில அரசு தனது கடமையினை சரிவர செய்யாததினால் வந்த பேராபத்து என்று ஒரு மத்திய அமைச்சர் பழியினை போடுகிறார். அதே நேரத்தில் தென் மண்டல வானிலை நிலையத்தின் இயக்குனர் எங்களால் 28 செ.மீ. மழையினை வரை தான் கணிக்க முடியும் ஆனால் தற்போது பொய்த்த  மழை சராசரி 58 செ மீ. மழை பொழிந்துள்ளது. அதிக பட்சமாக 95 செ.மீ. காயல் பட்டணத்தில் பெய்துள்ளது எதிர் பார்க்கமுடியாதது என்றும் சொல்கிறார். அதனையே தான் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வும் வானிலையினை துல்லிதமாக கணிக்க முடியாது, மற்றும் வானிலை நிலையத்தில் ஆய்வாளர்கள் குறைவு என்றும் சொல்வது எப்படி முன்பு சொன்ன மத்திய அமைச்சர் blame game ஆடுகிறார் என்று அறிவீர்கள். அது மட்டுமல்ல அதே மத்தியமைச்சர், மாநில அரசு ரூபாய் 5000/ கோடி நிவாரணம் கேட்டதிற்கு, நாங்கள் ஏப்ரல் மாதத்திலேயே ரூபாய் 400/கோடி வடிகால் தூரெடுக்க மாநில அரசுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் சொல்கிறார். சமீபத்திய வெள்ளம் டிசம்பர் 17, 18 ந்தேதிகளில் வந்தது. அந்த பாதிப்பிற்கு நிவாரணம் கொடுப்பதிற்குப் பதிலாக இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் அரசியல் விளையாடலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற வெள்ளம் இந்த 21ம் நூற்றாண்டில் நடக்கவில்லையா என்று. ஏனெனில்லை 2004ம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3074 மக்களும், சீனாவில் 2010ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 3184 பேர்களும், 2011ம் ஆண்டு பிலிப்பைன் நாட்டில் 2828 பேர்களும், 2013ம் ஆண்டு கூட வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 6063பேர்களும் மாண்டிருக்கிறார்கள்.

            இந்த பேய் மழையில் நாம் கண்டது என்ன வென்றால் பள்ளிவாசல்கள் கட்டிய இடங்கள் எங்கள் மதத்திற்குடையது என்று வாதிட்டவர்கள் வெட்கப் படுமளவிற்கு பூந்தமல்லி பெரியபள்ளிவாசல், அது மட்டுமல்ல அதே மத்தியமைச்சர், மாநில அரசு ரூபாய் 5000/ கோடி நிவாரணம் கேட்டதிற்கு, நாங்கள் ஏப்ரல் மாதத்திலேயே ரூபாய் 400/கோடி வடிகால் தூரெடுக்க மாநில அரசுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் சொல்கிறார். சமீபத்திய வெள்ளம் டிசம்பர் 17, 18 ந்தேதிகளில் வந்தது. அந்த பாதிப்பிற்கு நிவாரணம் கொடுப்பதிற்குப் பதிலாக இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் அரசியல் விளையாடலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். அது மட்டுமல்ல அதே மத்தியமைச்சர், மாநில அரசு ரூபாய் 5000/ கோடி நிவாரணம் கேட்டதிற்கு, நாங்கள் ஏப்ரல் மாதத்திலேயே ரூபாய் 400/கோடி வடிகால் தூரெடுக்க மாநில அரசுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் சொல்கிறார். இதையெல்லாம் எதிர்பார்க்காத மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ரூபாய் 6000/ கொடுத்தது பாராட்டாமல் இருக்க முடியாதலல்லவா  சமீபத்திய வெள்ளம் டிசம்பர் 17, 18 ந்தேதிகளில் வந்தது. அந்த பாதிப்பிற்கு நிவாரணம் கொடுப்பதிற்குப் பதிலாக இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் அரசியல் விளையாடலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாட்டப்பட்டது, மேலப்பாளையம் போன்ற 50 பள்ளிவாசல்களில் பாதிக்கப் பட்ட மக்கள் எந்த ஜாதிகள் என்று பாராது, அவர்களை தங்கவைத்து, படுக்க பாய்களும், குளிரில் இதமாக இருக்க பார்வைகளும், குழந்தைகளுக்கு பாலும், மற்றவர்களுக்கு மூன்று வேலை வயிறார சுவைமிகு உணவுகளும் அளித்து ஆறுதல் தந்தது அனைவராலும் பாராட்டப் பட்டது. ஆனால் பள்ளிவாசல்களில் அதிகாலை பாஜ்ர் தொழுகை பங்கு சொல்வது எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று வழக்கு தொடர்ந்தவர்களும், பல்வேறு சங்கங்கள் வெளியூர்களில் வைத்தும், கல்யாண மஹால், பெரிய, பெரிய வியாபார ஸ்தலங்கள் நகரங்களில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், பொழுதுபோக்கு பூங்காக்கள் வைத்து காசுகள் சம்பாதிக்கும் முதலாளிகளும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ததினை காணமுடியவில்லை, ஏன் என் படங்கள் முதல் வார வசூல் நூற்று கணக்கான கோடிகள் என்று கூறி மார் தட்டி அடுத்த படத்திற்கு பூஜை போடும் பட அதிபர்களும், முன்னெனி நடிகர்களும் எந்த உதவியும் செய்ததாக செய்திகள் வர வில்லை. ஒரு வேலை அவர்கள் சம்பாதித்த பணத்தினை வியாபாரத்தில் ஈடுபடுத்தி முனைப்பு காட்டுகிறார்களோ என்று தெரியவில்லையா உங்களுக்கு!

            மத்திய பேரிடர் பாதுகாப்புக் குழுவினரும், மீனவர்களும், மற்ற மக்களும் படகுகளில், ஹெலிகாப்டர் மூலமும், தலை சுமையாகவும், வண்டிகளில் உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை பாதிக்கப் பட்ட மக்களுக்கு வாரி வழங்கினர். தங்களுக்கு ஒரு வாய் உணவும், தாகத்திற்கு தண்ணீரும் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போல இருந்தது என்று மக்கள் சொன்னது தொலைக் காட்சி நிறுவனங்கள் படங்கள் காட்டியது. கர்ப்பிணி பெண்கள் படகுகளில், ஹெலிகாப்டர் மூலமும் காப்பாற்றும் போது சுக பிரசவம் ஆனது என்ற செய்திகளும் வராமலில்லை. அவ்வாறு உதவி செய்தவர்கள் எந்த மதத்தினை சார்ந்தவர்கள், எந்த ஜாதிகள் என்றும் பார்க்கவில்லை. ஆனால் அமைதியான நேரங்களில் ஏன் அதுபோன்ற வேற்றுமைகள் வருகின்றது என்றால் ஜாதி, சமய சங்கங்களும் அதன் தலைவர்களும் தானே என்றால் மறுக்க முடியுமா? முதலில் இந்த ஜாதி, சமய சங்கங்களை தடைகள் செய்தாலே போதும் தென் மாவட்டங்களில் சண்டை, சச்சரவுகளை தடுக்கலாம். அதேபோன்று தான் வட தமிழகத்திலும் கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில்  இந்த ஜாதி சங்கங்களால் தான் கலவரங்கள் வந்தன என்பதினை நான் 1985ம் ஆண்டு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தில் ADSP இருந்த போதும், அதன் பின்னர் கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிந்தபோது 2000ம் ஆண்டு விழுப்புரம் DIG இருந்தபோதும் சாமான்ய மக்கள் பாதிக்கப் பட்டனர் என்று பார்த்திருக்கின்றேன். தீண்டாமை தலை விரித்தாடியபோது கிராமங்களில் வாழும் பட்டியலினத்தவர் மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் நடக்கக் கூடாது, அவர்கள் பொது மாயணத்தினை பயன் படுத்தக் கூடாது, பட்டியலினத்தவர் சமைத்த உணவை இலவச உணவகங்களில் உண்ணக் கூடாது, அவர்கள் குழந்தைகள் பள்ளிகளில் தனியாக உட்கார வேண்டும், அந்த குழந்தைகள் தான் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும், பட்டியலின பஞ்சாயத்து தலைவர், தலைவிகள் சுதந்திர தின கொடிகள் ஏற்றக்கூடாது, பஞ்சாயத் கூட்டங்களில் அவர்கள் மற்ற உறுப்பினர்கள் பெஞ்சில் உட்காரும் போது அவர்கள் தரையில் தான் உட்கார வேண்டும், பட்டியலின மக்கள் கோவில்களின் கருவறைக்குச் செல்லக் கூடாது, அதுயேன் கோவில் தேர்களின் கயிறுகளைக் கூட பிடித்து இழுக்கக் கூடாது என்றும் சொல்லும் சாதி சங்கங்களின் மகத்தான தலைவர்களை பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஏன் உதவவில்லை என்று மக்கள் கேட்கத்தான் செய்கின்றனர்.அதுபோன்ற சங்கங்களை தடை செய்வது காலத்தின் கட்டாயமே! தற்போது அந்த ஜாதி, சமய சங்கங்கள் அரசியல் காட்சிகளாக மாற்றம் செய்து தங்கள் ஜாதி மக்களை தூண்டிவிடும் காரியங்களில் ஈடுபடுகின்றன. தேர்தல் கமிசன்களும் அவைகளை தடை செய்ய என்ன செய்யலாம் என்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமல்லவா? சமீபத்தில் காஸ்மீர் மாநிலத்தில் அதுபோன்ற காட்சிகளை தடை செய்யும் போது ஏன் தமிழகத்திலும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது. அப்போது தான் தமிழகத்தில் அமைதி நிலை நாட்ட முடியும்.

           

Friday, 20 October 2023

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டலாமா?

 


(டாக்டர் .பீ.முகமது அலி, பிஎச்.டி.)

பாலஸ்தீனம் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்களுக்கு புனித பூமியாகும். அவர்களின் நபிமார்கள் மூஸா, இயேசு, இப்ராஹிம் ஆகியோர் அங்கு வசித்ததாக புனித புத்தகங்களில் கூறப் பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டிலிருந்து மத்திய கடற்பகுதியான காஸாவும், மேற்கு கடற்கரை பகுதியான காஸாவும் போராடும் தளமாக உள்ளது. பாலஸ்தீனம் என்ற வார்த்தை 'பிலிஸியா' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப் பட்டதாகும். அதுவே கிரேக்க எழுத்தாளர்களால் பிலிஸ்தீன் என்று அழைக்கப் பட்டு அந்த பகுதி 'சிரியா பாலஸ்தீனா' என்றும் தூதர் ஈஸா பிறந்த இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு அழைக்கப் பட்டது. முதல் உலகப் போரில் ஓட்டமன் சாம்ராஜ்யம் தோற்கடிக்கப் பட்டு. பிரிட்டிஷ் ஆளுமைக்கு வந்தது. ஆற்றின் ஓரத்தில் அமைந்திருந்தாலும் அதில் வற்றாத ஜீவ நதி எதுவுமில்லை. மலைப் பகுதியும், சுண்ணாம்பு பாறையும் கொண்டதாகவும் அமைந்துள்ளதாகும். இந்தப் பகுதியினை முக்கிய தரைவழி பாதை எகிப்திலிருந்து சிரியா வரைக்கும், மேற்கு கடற்கரை பகுதியிலிருந்து ஜோர்டான் நதிக்கு அப்பால் செல்வதாலும் இங்குள்ள இஸ்ராயில-பாலஸ்தீன மக்கள் முக்கிய இடமாக கருதப் படுகிறது. இந்தியாவிலிருந்து தரைமார்கமாக உம்ரா சென்று, அல்-அக்ஸா பள்ளிக்கு சொல்லுபவர்கள் இதனைக் காணலாம்.

          மணற்பகுதியானாலும் ஜெருசலம் நகரம் பண் மடங்கு விஸ்தீரம் செய்யப் பட்டது. 21ம் நூற்றாண்டில் ஜோர்டான் நாட்டிற்கு மேற்குப் பகுதியில் பாலஸ்தீனர் அரைப்பகுதியிலும், மற்ற பகுதியில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், டிரஸ் இன மக்கள் குடியிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசு பாரசீக வளைகுடா பகுதியில் ஆக்கிரமிப்பும், பிரான்ஸ் அரசு சிரியா, லெபனான் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்தன. இரண்டாம் உலக போருக்கு முன்னாள் சிரியாவும், லெபனானும் சுதந்திர வேட்கையால் போராட்டங்கள் நடத்தின. அதன் பின்னர் பிரிட்டிஷ், பிரான்ஸ், ரஸ்யா தங்கள் ஆக்கிரப்பு பகுதிகளிருந்து விலகின. இரண்டாம் உலக போருக்கு பின்னர் 1947ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இஸ்ராயில் யூத மக்கள்  ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லரால் வேட்டையாடப் பட்டார் என்ற இறக்கத்தில் இஸ்ராயில் என்ற நாட்டையும், பாலஸ்தீன நாட்டையும் இரண்டாக்கியது. அதிலிருந்து அங்கு அமைதியின்மைக்கு வித்திட்டது. அராபிய பழமொழி ஒன்றுள்ளது, 'இரு கூடாரத்தில் ஒட்டகத்திற்கு தனது தலையினை வைக்க அனுமதியளித்தால் அதன் உரிமையாளரை விரட்டிவிட்டு ஒட்டகம் உள்ளே நுழைந்து விடுமாம். அதேபோல தான்' பாலஸ்தீனத்தின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்ததாம் இஸ்ராயீல்.

          பலஸ்தீனத்தினை .நா முழு அந்தஸ்தில்லாத வெறும் பார்வையாள உறுப்பினரான 29 நவம்பர் 2012ல் அங்கீகரித்தது. ஆனால் .நா. சபை இஸ்ரெயிலை 11 மே 1949 அன்று முழு நேர உறுப்பினராக்கியது..நா. சபையின் 165 உறுப்பினர் நாடுகளும் அதாவது 85 விழுக்காடு நாடுகள் அங்கீகரித்தது. ஆனால் முஸ்லிம் நாடுகளான அல்ஜிரியா, பக்ரைன், ஈராக், குவைத் 1988ல் தான் அங்கீகரித்தது.31.7.2009ல் 138 நாடுகள் அங்கீகரித்தன. அதில் பி.5 என்ற சீனா, பிரான்ஸ், ரஸ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர் ஒன்று கூட அங்கீகரிக்கவில்லை.

          பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி உரிமை கொடுக்கப் பட்டு Al-Fatah என்கிற அமைப்பு யாசர் அரபாத் தலைமையில் ஆட்சி 1989ல் அமைக்கப் பட்டது. ஆனால் அதனை எந்த அதிகாரமில்லாமல், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்களை தீண்டாதவர்கள் எப்படி நடத்தப் பட்டனரோ அதேபோலவே பல் பிடுங்கப் பட்ட பாம்பாகவே இஸ்ரயேல் கருதியது. 15.9.2003 அன்று பாலஸ்தீனம் சுற்றி வளைக்கப் பட்டு மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாசப் பொருள்கள் கூடக் கிடைக்காதவாறு செய்தனர். ஜனாதிபதி அரபாத் கூட மண்ணெண்ணெய் விளக்கில் அலுவலகத்தில் இருந்ததினை தொலைக் காட்சி படம் பிடித்து காட்டின. பின்பு .நா. சபையின் தலையீட்டால் அது விலக்கப் பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி உரிமை கொடுக்கப் பட்டு Al-Fatah என்கிற அமைப்பு யாசர் அரபாத் தலைமையில் ஆட்சி 1989ல் அமைக்கப் பட்டது. ஆனால் அதனை எந்த அதிகாரமில்லாமல், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்களை தீண்டாதவர்கள் எப்படி நடத்தப் பட்டனரோ அதேபோலவே பல் பிடுங்கப் பட்ட பாம்பாகவே இஸ்ரயேல் கருதியது. 15.9.2003 அன்று பாலஸ்தீனம் சுற்றி வளைக்கப் பட்டு மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாசப் பொருள்கள் கூடக் கிடைக்காதவாறு செய்தனர். ஜனாதிபதி அரபாத் கூட மண்ணெண்ணெய் விளக்கில் அலுவலகத்தில் இருந்ததினை தொலைக் காட்சி படம் பிடித்து காட்டின. பின்பு .நா. சபையின் தலையீட்டால் அது விளக்கப் பட்டு  யாசர் அரபாத் நோய் வாய்ப்பட்டு பிரான்ஸ் சென்றார் அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். 29.10.2004 அன்று முஹமூத் அப்பாஸ் பதவியேற்றார்.

          எகிப்தில் 'Muslim brotherhood' இயக்கம் தீவிரமானபோது காசா பகுதி ஓரத்தில் ஹமாஸ் 1987ல் ஆதிக்கம் செலுத்தியது. காரணம் அல்-பத்தா இயக்கம் பாலஸ்தீனத்தில் மிதவாத கொள்கையினை கடைப் பிடிப்பதால் அதனை விரும்பாத பாலஸ்தீனர்கள் ஹமாஸ் என்ற இயக்கத்தினை ஆரம்பித்தனர். அதற்கு லெபனான் நாட்டின் ஹொஸ்புல்லா இயக்கம் ஆதரவு கொடுத்தது.2006ம் ஆண்டு பலஸ்தீன தேசிய அரசு தேர்தலை நடத்தியது, அதில்  ஹமாஸ் இயக்கம் 132 தொகுதிகளில் 72 இடங்களை கைப்பற்றியது. அதிலிருந்து அல்-பத்தா  இயக்கம் இரண்டாக பிரிந்து மேற்கு கடற்கரை பகுதி பத்தா இயக்கமும், காசா பகுதியினை ஹமாஸ் இயக்கமும் பிரித்ததிலிருந்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

         

          இஸ்ராயில், பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே முக்கிய தகராறு ஏற்பட காரணம் புனித தளமான அல்-அக்ஸா பள்ளியினை யார் கைப்பற்றுவது என்பது தான். ஒரே பள்ளியின் ஒரு பக்கத்தில் முஸ்லிம்களும், மற்ற பகுதிகளில் யூதர்களும், கிருத்துவர்களும் தொழுகை நடத்துவது தான். எப்போது எல்லாம் அல்-அக்ஸா பள்ளியில் இஸ்ராயில் தலையிடுதோ அப்போதே போராட்டங்கள் ஆரம்பமாகி விடுகின்றன. பாலஸ்தீனத்தின் ஏழை, எளிய மக்கள் இஸ்ராயில் பகுதிக்குச் சென்று தான் தொழில், மற்றும் வேலை செய்ய வேண்டும். பாலஸ்தீனர்கள் போராடினால் உடனே இஸ்ராயில் அவர்கள் வரும் வழியினை அடைத்து விடுவர். இது காலம், காலமாக நடந்து கொண்டுள்ளது. அதேபோன்று தான் 6.10.2023 அன்றும் இஸ்ராயில் ராணுவம் வெள்ளி ஜும்மா நேரத்தில் நுழைந்து தொழுபவர்களை வெளியேற்றியது, ஒரு கொதிகலனாகியது. உடனே எலி புற்றிலிருந்து கிளம்பியது போல 7.10.2023 அதிகாலை ஆரம்பித்த போர் இன்று வரை முடிவிற்கு வரவில்லை.

          இந்த பத்து நாட்கள் யுத்தத்தில் இறந்தோர் 302 இஸ்ராயில் போர் படையினரும், 1200 மக்களும் ஆகும். பாலஸ்தீனர்கள் தரப்பில் 2500 உயிரிழைப்புகள் ஆகும். இதில் பெரும் பாதிப்புகளுக்கு உண்டானோர் பெண்களும், பச்சிளம் பாலகர்களும், வாயதானோர்களும், நோயாளிகளாகும். இஸ்ராயில் பாலஸ்தீன மருத்துவமனையில் 18.10.2023ல் நடந்த குண்டு வெடிப்பில் 500 பேர்கள் கொல்லப் பட்டதாக சொல்லப் படுகிறது. கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும்  கூறப் படுகிறது.

          இதற்கு முடிவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அமெரிக்க வெளியுறவு மந்திரி இஸ்ராயிலுக்கு 8.10.2023 வந்தவர் அங்கு போரை நிற்பாட்ட முயற்சி செய்வார் என்று உலகமே எண்ணிய நேரத்தில், அவர் இஸ்ராயிலுக்குச் சென்றதும் நான் ஒரு யூதனா வந்துள்ளேன் என்று சொன்னதினை கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. பி 5 என்ற .நா. நிரந்தர உறுப்பினர் ரசியா ஒரு இடைக்கால போர் நிற்பாட்ட தீர்மானத்தினை கொண்டு வந்தார். அதனை அமெரிக்கா இங்கிலாந்து போன்ற உறுப்பினர்கள் அதனை வீடோ என்ற அதிகாரத்தினை வைத்து தோற்கடித்ததிற்கு சொன்ன காரணம் முதலில் ரசியா உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பது தான்.

          18.10.2023 அன்று அமெரிக்க அதிபர் இஸ்ராயிலுக்குச் சென்று அங்குள்ள அதிபரை சந்தித்து உங்களுக்கு அமெரிக்காவும், மற்ற கூட்டு நாடுகளும் துணை நிற்கும் என்று தைரியம் கொடுத்துவிட்டு, எகிப்து காசா வழியாக உணவு, மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் கொண்டு வர ஒப்பந்தம் செய்து விட்டார். அமெரிக்காவில் 2024ல் தேர்தல் வர இருப்பதால் அங்குள்ள யூதர்களின் ஓட்டுக்களை பெற அவருக்குள்ள கட்டாயம்.

          இந்த அமைதியற்ற நிலையினை மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து நீக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் .நா சபை நிருவப் பட்டு இதுவரை 120நாடுகளில் அமைதிப் படையினரை அனுப்பியது. அதில் முக்கியமானவை மத்திய கிழக்கு, காஸ்மீர், சைப்ரஸ், காங்கோ, மேற்கு கினியா, அங்கோலா, கம்போடியா, எல்-ஸல் குவடார், நமீபியா, யூகோஸ்லாவியா, ருவாண்டா, சோமாலியா, போஸ்னியா -ஹெர்சகோவினா, குரோஷியா , வட போஸ்னியா, குவாட்டமாலா, ஹைத்தி போன்றவையாகும். இதில் கிட்டத்தட்ட 3000 அமைதிப் படையினர் இறந்திருக்கின்றனர். இன்னும் கூட 14 நாடுகளில் 1,10.000படையினர் பணிபுரிந்து வருகின்றனர். .நா. அமைதிப் படை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஆற்றிய பணிக்காக 1988ம் ஆண்டு நோபல் பரிசும் கொடுக்கப் பட்டது. ஏன் அதுபோல .நா அனுப்பி இஸ்ராயிலுக்கும், பலஸ்தீன அமைப்புக்கும் இடையேயும், லெபனான்-இஸ்ராயிலுக்கு இடையிலும், எகிப்து-காசா எல்லை ஓரத்திலும்  நிற்பாட்டியதோடு, பாலஸ்தீனத்தில் மக்களிடையே பொதுத் தேர்தல் நடத்தி அல் பத்தா அமைப்போ, அல்லது ஹமாசோ அதிக வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைத்து அமைதி ஏற்பட உலக நாடுகள் ஈடுபடக்கூடாது என்பது தான் எந்த நாட்டையும் சேராத நடு நிலையாளர் கேள்வியாகும்.

          இந்தக் கேள்விக்கு தடையாக இருப்பது ரசியா-உக்ரைன் போராகும். அமெரிக்கா-ஐரோப்பிய கூட்டு நாடுகள் உக்ரையினையும், ரசியாவிற்கு சீனா, வட கொரியா ஆதரவு அளிப்பதால் யார் பெரியவர் இந்த உலகத்தில் காட்டுவதிலும், உலகில் எந்த பகுதியில் போர் நடந்தாலும் ஆயுதம் தயாரிக்கும் நாடுகள் தங்களுடைய படை பலன்களை விற்பனை செய்வதிலும், அங்குள்ள இயற்கை வளங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே இருப்பதினால் அமைதிக்கு யார் முதலில் ஈடுபடுவது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வியிலே காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அதன் விளைவு உலகமே எங்கே அமைதி அங்கே நிம்மதி என்ற பாட்டினை உரக்க பாடிக்கொண்டு உள்ளது வருத்தமாக இல்லையா?