(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
கடந்த பத்து ஆண்டுகளில் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள
நாடுகளில் 35 உள்நாட்டு கலவரம் தாக்கத்தால் 60 லட்சம் மக்கள் கொல்லப் பட்டும், ஒரு
கோடியே 12 லட்சம் மக்கள் வீடு இழந்தும், குழந்தை செல்வங்கள் குடிக்க பால் கூட இல்லாமல்
பசியும் பட்டினியாக, நோய்களுக்கு மருந்துகள் கூட அல்லல் படும் நிலையினை ஊடகங்களும், தொலைக் காட்சி
நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு படம் பிடித்துக் காட்டும் போது கல் நெஞ்சும் கறையாதவர்
யாரும் இலார். பெரும்பாலான கலவரம் நடக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்ற போது அதைவிட
பாதிக்காதவர் யாரும் இல்லை எனலாம். இஸ்லாமிய நாடுகளில் கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில்
இஸ்லாமிய ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. அதிலும் ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவியது.
அதற்கு மூல காரணம் ஆப்பிரிக்காவினை அடிமைப் படுத்திய ஐரோப்பியர் கறுப்பின மக்களுக்கு
சம உரிமை வழங்காமல் அடிமையாக நடத்தினர். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் போதித்த சகோதர பாசம்
அவர்களை வேகமாக ஈர்த்தது. கலீபா உமர் அவர்கள் மஸ்ஜித் நவபியில் மதினாவில் கொல்லப்பட்டு
இறப்பதற்கு முன், ஜனநாயக முறைப்படி அடுத்த கலீபாவினை தேர்ந்தெடுக்க ஆறுபோர்கள் கொண்ட
ஒரு குழுவினை நியமித்து மடிந்தார்கள். அந்த ஆறு பேரும் ஒரு மித்த கருத்துப் படி அறிவுசால்
அறிஞர் உதுமான்(ரழி) அவர்களை அடுத்த கலீபாவாக நியமனம் செய்தார்கள். ஆனால் அதனை ஏற்காத
சிலர் அவரையும் கொலை செய்தார்கள். அதன் பின்பு கலீபா அலி(ரழி) அவர்களும் அதன் பின்பு
அவர் மகன்கள் ஹசன் மற்றும் ஹுஸைனும் கொல்லப் பட்டார்கள் என்ற வரலாறு இன்றும் தொடர்கிறதோ
என்று எண்ணதோண்றவில்லையா உங்களுக்கு? இப்படியாக எங்கே இஸ்லாமிய மார்க்கம் போதித்த ஒற்றுமை,
ஒருமைப்பாடு போன்றவற்றை காற்றில் பறக்கவிட்டு அராபிய கண்டத்திலேயே வழிகாட்டியாக இருந்ததால்
இஸ்லாமியர் ஆட்சி செய்யும் ஆபிரிக்க நாடுகளிலும் இன்றும் தொடர்கின்றது என்று உலக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
இப்போது
ஆப்பிரிக்க நாடுகளை எந்த எந்த ஐரோப்பிய நாடுகள் ஆட்சி செய்தன என்று பார்க்கலாம். பிரிட்டன்,
பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி முக்கிய நாடுகள் ஆக்கிரமிப்பாளர்கள் . ஆப்பிரிக்காவில்
கிடைக்கும் அபரிமிதமான மூலப் பொருள்களான எண்ணெய், தந்தம், ரப்பார், பாம் ஆயில், மரம்,
பஞ்சு, பிசின், தங்கம் மற்றும் தாதுப் பொருட்கள் அங்குள்ளதால் அவற்றையையெல்லாம் கொள்ளையடிக்க
ஐரோப்பிய நாடுகள் படையெடுத்து பங்கு போட்டன. ஆக்கிரமிப்பினை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:
1) குடியேறிகள் ஆக்கிரமிப்பு: விவசாய நிலங்களை அங்குள்ள
ஆபிரிக்கர்களை வேலைக்காரர்களாக்கி அடிமையாக வைத்தனர்.
2) தாதுபொருள்கள் சுரண்டும் ஆக்கிரமிப்பு: ஆப்பிரிக்காவில்
உள்ள மூலப் பொருட்களை அபகரித்து தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்புவது; அங்குள்ள கறுப்பின
மக்களை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று பாலம், ரோடு, அணைகள் கட்ட தொழிலார்களாக்கியது.
3) ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு: அந்தந்த நாடுகளில்
உள்ள மக்களை இரண்டாம் தர மக்களாக்கி நிறவெறிக்கு ஆளாக்குவது, உதாரணமாக தென் அமெரிக்கா,
ஜிம்பாவே.
பிரான்ஸ் நாடு ஆக்கிரமித்த நாடுகள் மொரிட்டானிய,
செனிகல், மாலி, கினியா, Cote d Livoise, புர்கினா, பெனின், இப்போது ராணுவம் ஜனாதிபதியினை
கைதியாக வைத்துள்ள நைஜர் ஆகியவைகளாகும்.
மாரிட்டனியா:
10 லட்சம் மக்கள் ஜனத்தொகை கொண்ட நாடு, சுன்னத் ஜமாமுஸ்லிம் த்தினை சேர்ந்தவர்கள்.
செனிகல்: கால் பந்தாட்டத்தில் உலகளவில் பிரசித்து
பெற்றவர்கள். 1கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்டவர்கள். அதில் 97 சதவீதம் முஸ்லிம்கள்.
மாலி: மேற்கு ஆப்பிரிக்க நாடு. 2 கோடி மக்கள் தொகை
கொண்டது. முஸ்லிம்கள் 95 சதவீதம்.
கினியா: மேற்கு ஆப்பிரிக்க நாடு. ஒரு கோடி, 30 லட்சம்
மக்கள் தொகை கொண்டது. அதில் 89 சதவீதம் முஸ்லிம்கள்.
கோட் டி வோக்கர்: சிறிய வால் போன்ற பகுதியினைக் கொண்டது.
32 லட்சம் மக்கள் தொகை அவர்கள் சுன்னத் ஜமாத் முஸ்லிம்கள் ஆகும்.
நைஜர்: தற்போது ராணுவ புரட்சி உள்ள நாடு. மேற்கு
ஆப்பிரிக்காவில் பெரிய நாடு. சஹாரா பாலைவனத்தில் 80 சதவீதம் கொண்டது. 2.50 கோடி மக்கள்
கொண்ட முஸ்லிம் நாடு.
மேற்கூறிய நாடுகளை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்
விடுதலை கொடுத்தாலும், பிரான்ஸ் நாடு தன்னுடைய ஆதிக்கத்தினை செலுத்த சில படைப் பிரிவுகளை
ஆங்காங்கே வைத்தும், அணு ஆயுத தளங்களை நிறுவியுள்ளது.
ஸ்பெயின் ஆக்கிரமித்த நாடுகளில் முக்கிய நாடு மொரோக்கோ
ஆகும்.அராபிய மொழியாகவும். 3.60 கோடி மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் நாடாகும். அந்த நாடு
விடுதலையடைந்தாலும் இன்றும் கடற்கரை பகுதிகளில் ஸ்பெயின் மக்கள் வாழ்கின்றனர்.
இத்தாலி
எத்தியோப்பியா, சோமாலியா , லிபியா, எரித்திரியா போன்ற நாடுகளாகும். எத்தியோப்பியாவும்,
ஏரிதாரியாவும் பக்கத்து பக்கத்துக்கு நாடுகளானாலும், எத்தியோப்பியாவில் கிருத்துவர்கள்
அதிகமுள்ளனர், ஆனால் எரிடாரியாவில் கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் சம நிலையில்
உள்ளனர். அவர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து கொண்டு யுத்தங்கள் நடத்தி வருகின்றன
என்பதினை ஊடகங்கள் வாயிலாக அறியலாம்.
லிபியா: 96 சதவீத முஸ்லிம்கள் கொண்ட எண்ணெய் வளமிக்க
நாடாகும். இத்தாலியும், பிரான்சும் ஆக்கிரமித்தன. இரண்டாம் உலகப்போருக்கு பின்னால்
மன்னர் இத்ரீஸ் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு கர்னல் கடாபி
1969ல் ஆட்சி பீடம் ஏறினார். பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தார். எங்கே
அவர் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு இணையாக வந்து விடுவாரோ என்று பயந்த பிரான்ஸ் நாடு
சதி செய்து அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு புரட்சி செய்து அதற்கு ராணுவ உதவியும்
செய்து 2011 ம் ஆண்டு அவர் ஆட்சியை கவிழ்த்து கொல்லப் பட்டார். அப்போதும் கூட அவரை
கொல்ல வந்த அந்த நாட்டு கிளர்ச்சியாளர்களைப்
பார்த்து, 'my dear sons do not kill me' என்று அரேபிய மொழியில் சொன்னதாக ஊடகங்கள்
வெளியிட்டன. இவ்வளவிற்கும் பிரான்ஸ் நாட்டு அதிபராக இருந்த சர்கோஸ்ய் 2007ம் ஆண்டைய
பிரான்ஸ் நாட்டின் தேர்தலுக்காக பெரிய தொகையினை லிபியா அதிபர் கடாபி கொடுத்ததாக தற்போது
குற்றம் சாட்டப் பட்டுள்ளது நம்பிக்கை மோசம் செய்த செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?அதன்
பின்பு எந்த அரசும் அங்கே நிலையான அரசினை கொடுக்கவில்லை, மாறாக அந்நியர் கைப்பாவையாகவே
உள்ளன.
சூடான்:
ஆப்பிரிக்காவில் பெரிய நாடு. அங்குள்ள கிருத்துவர்களை கிளர்ச்சிக்கு மேலை நாடுகள் தூண்டி
விட்டு 2011ம் ஆண்டு தனி நாடாக தெற்கு சூடான் உருவானது. வட சூடானில் முஸ்லிம்கள் தனி
மெஜாரிட்டியாக உள்ளனர். அங்கே ஆங்கிலமும், அரேபிய மொழியும் பேசப் படுகிறது. 1956ம்
ஆண்டு வரை பிரிட்டிஷ், எகிப்து ஆக்கிரமிப்பில் இருந்த நாடு. சூடானில் தான் அதிக தங்கம்
உற்பத்தியாகவும் உள்ளது. ஆனால் அங்கே உள் நாட்டு புரட்சிப் படைகள் மூலம் மக்களை வேட்டையாக்கி
காடுகளில் தஞ்சம் புகும் நிலையுள்ளது. தார்பூர் புரட்சியில் அதிக மக்க இறந்தனர். கசாய்
தங்கச் சுரங்கம் முக்கியமானவை.
தென்
ஆப்பிரிக்கா: ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்க நாடானது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு
முன்பு உருவானதாக கூறப் படுகிறது. இதனை போர்ச்சுகல், டச், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு
செய்து வெள்ளை நிறவெறி ஆட்சிக்கு நெறிக்கப் பட்டு 1961ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஆட்சியினை
விலக்கிக் கொண்டது. இருந்தாலும் வெள்ளையர் கறுப்பின மக்களை அடிமைகளைப் போல நிறவெறி
ஆதிக்கத்தினை செலுத்தினர். அதனை எதிர்த்து குரல் எழுப்பிய நெல்சன் மண்டேலா போன்றவர்
தனிமை சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை விடுதலை செய்யவும் மெஜாரிட்டி கறுப்பின மக்களுக்கு
ஆட்சியினை கொடுக்கவும் சர்வதேச அளவில் குரல் எழுப்பி 1990ம் ஆண்டு வெள்ளை நிற ஆராட்சி
செவி சாய்த்து நெல்சன் மண்டேலாவினை விடுதலை செய்தனர். அதன் பின்பு மக்கள் அவரை
1994 ஜனாதிபதியாக்கினர் .அவர் தனக்கு கொடுக்கப் பட்ட 5 வருட ஆட்சி போதும் என்று 1999ல்
சொல்லி தானாக பதவி விலகினார்.
ஆனால்
ஐரோப்பிய நாடுகளால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு
விடுதலை பெற்ற முஸ்லிம் நாடுகளில் மட்டும் ஒரு தடவை ஆட்சி பீடத்தில் வந்தவர்கள் தங்களது
நாற்காலிகளில் பசைகளை ஒட்டியதுபோல ஒட்டிக் கொண்டு சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டும்,
நாடுகளில் உள்ள வளங்களை தனது சொத்து என எண்ணுவதும், தனக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்களை
கொன்றும், அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்தும் இருந்ததால் 2012ம் ஆண்டு உலக அளவில்
புரட்சி ஏற்பட்டது. அதில் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,
சூடான், சோமாலியா, சிரியா, ஏமன் போன்றவையாகும். முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு
கலவரத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்களது மூக்கை நுழைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்
வேலையினை செய்து கொண்டுதான் உள்ளன. கலவரம் நடக்கும் நாடுகளில் தங்கள் நாட்டில் தயாராகும்
ஆயுதங்களை விற்று பணம் செய்தும், அந்த நாடுகளுக்கு உதவுவது போல தங்களது நாட்டு படைகளை
அனுப்புகின்றனர். அதற்கான செலவுகளை அந்தந்த நாடுகளே ஏற்க வேண்டும் என்ற ஒப்பந்தமும்
செய்கிறனறன. அதன் பின்பு தாங்கள் சொல்லும் தலைவர்கள் தான் ஆட்சியில் இருக்க வேண்டும்
என்ற கட்டளையும் இடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா
சிரியா கலவரத்தில் சிரியா ஜனாதிபதி விலக வேண்டும் என்று கட்டளையிட்டார் என்று செய்தியாக
வந்தது. முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு குழப்பத்தில் உலகின் பெரிய நாடுகளான
அமெரிக்காவும், ரஷியாவும் தலையிட்டு தங்களுக்கு என தனி ராஜ்யமே செய்கின்றனர்.
முஸ்லிம்
நாடுகளில் ஏற்பட்ட 35 உள் நாட்டு கலவரங்களின் விளைவுதான், 60 லட்சம் மக்கள் கொல்லப்
பட்டும், 1.2 கோடி மக்கள் வீடு, வாசல் இழந்தும், அகதிகளாகவும், நரிக்கொறவர்கள் போல
நாடோடிகளாக திரிகின்றனர் என்றால் ஆச்சரியமில்லையா உங்களுக்கு. அதற்கு காரணம் ஆரம்ப
கால முஸ்லிம் கலீபாக்களின் எளிமையான, நேர்மையான ஜனநாயக ஆட்சியினை கடைப் பிடிக்க மறந்து
சுக போகத்தில் வாழும் நடைமுறையினை கையாண்டதால் தான். தனக்குப் பின்பு தனது வாரிசுக்கு
பதவி வர வேண்டும் என்ற வறட்டு வாதம். நாட்டின் செல்வமெல்லாம் தனது சொத்து என்ற நினைப்பு.எவ்வாறு
ரஸூலாஹ் அவர்கள் பைத்துல் மாலில் மிஞ்சிய காய்ந்த பேரித்தம் பழத்தினைக் கூட தர்மம்
செய்ய கட்டளையிட்டதினை மறந்து விட்டனர். முஸ்லிம் நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் யார்
பெரியவர் என்ற இறுமார்ப்பு ஆட்சியாளர்களை பிடித்ததால் பாதிக்கப் பட்டவர் அந்தந்த நாட்டு
மக்கள் தான்.
.
முஸ்லிம்
நாடுகளில் ஏற்பட்ட 35 உள் நாட்டு கலவரங்களின் விளைவுதான், 60 லட்சம் மக்கள் கொல்லப்
பட்டும், 1.2 கோடி மக்கள் வீடு, வாசல் இழந்தும், அகதிகளாகவும், நரிக்கொறவர்கள் போல
நாடோடிகளாக திரிகின்றனர் என்றால் ஆச்சரியமில்லையா உங்களுக்கு. அதற்கு காரணம் ஆரம்ப
கால முஸ்லிம் கலீபாக்களின் எளிமையான, நேர்மையான ஜனநாயக ஆட்சியினை கடைப் பிடிக்க மறந்து
சுக போகத்தில் வாழும் நடைமுறையினை கையாண்டதால் தான். தனக்குப் பின்பு தனது வாரிசுக்கு
பதவி வர வேண்டும் என்ற வறட்டு வாதம். நாட்டின் செல்வமெல்லாம் தனது சொத்து என்ற நினைப்பு.எவ்வாறு
ரஸூலாஹ் அவர்கள் பைத்துல் மாலில் மிஞ்சிய காய்ந்த பேரித்தம் பழத்தினைக் கூட தர்மம்
செய்ய கட்டளையிட்டதினை மறந்து விட்டனர். முஸ்லிம் நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் யார்
பெரியவர் என்ற இறுமார்ப்பு ஆட்சியாளர்களை பிடித்ததால் பாதிக்கப் பட்டவர் அந்தந்த நாட்டு
மக்கள் தான்.
அதேபோன்று தான் ஒவ்வொரு முகலாக்களிலும் பல்வேறு பிரிவுகளாக
இருந்து ஊர் குழப்பம் செய்கின்றனர். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம்
என்றது போல மற்ற மதத்தினர் அங்கு ஆதிக்கம் செலுத்த முயலுகின்றனர். ஆகவே கஷ்டப் பட்டு
குருவி கூடு கட்டுவது போல வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் தாங்கள் சேமித்த பொன்னையும்
பொருளையும் சின்ன சின்ன பிணக்குகளால் பிரிவினை கொள்ளாமல் வீட்டுக் கொடுக்கும் பெரும்
தன்மையினை கடைப்பிடித்தும் 'ஒற்றுமை என்ற பாசக் கயிறினை கெட்டியாக பற்றிக் கொள்ளுங்கள்'
என்ற ரசூலுல்லாஹ் கூற்றினை கடைபிடிப்போமா?
போன்: 9444042213
மெயில்: mdaliips@yahoo.com