தியாக பெருநாள், தியாக அடையாளம் ஏன்?
(டாக்டர் ஏ. பீ. முகமது அலி, ஐ.பீ. எஸ்(ஓ)
தியாகம் என்பது எந்த உயிரினங்களையும் கொல்லும் செயலினை கொண்டாடும் திருவிழா அல்ல,,மாறாகநரபலி கொடுப்பதிலிருந்து விலகி அநியாயமாக யாரையும் கொலை செய்வது, கடுஞ்சொல் பயன்படுத்துவதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபட மாட்டேன் என்ற சபதம் ஏற்பது ஆகும்.
ஒவ்வொருவரும் குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் தியாகம் செய்கின்றனர். பெற்ற தாய் தனது கணவனுக்கு சேவை செய்தும், பெற்ற குழந்தைக்கு தனது உதிரத்தை பாலாக்கியும், தனக்கு சாப்பாடுஇல்லாவிட்டாலும், தனது குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு, மீதியதில் கணவனுக்கும் பகிர்ந்துகொடுத்தும், குழந்தைகளை பள்ளி விட்டு விட்டு, தானும் வேலைக்கு செல்லும் தியாகத்தினை பார்க்கிறோம். தந்தை தனது வேலை பளுவினை வெளியில் சொல்லாது மாடாய் உழைத்து குடும்பத்தினை காப்பாற்ற நாலுகாசு சம்பாதித்து குடும்பத்தலைவனாக இருப்பதும் ஒரு தியாகம் தான். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்காகஊன், உறக்கம், உறவு, பொழுது போக்கு, மற்றவர் கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு அர்ப்பணிக்கும்ஜன்மங்களாக இருப்பதும் ஒரு தியாகமே!
சமதாய ஆர்வலர்கள் தங்களை சுற்றுயுள்ள சமுதாய இயற்கை வாழ்விற்காக மரங்கள், செடிகள் பராமரித்து, வளர்ப்பது, சுகாதார வாழ்விற்காக இலவச மருத்துவ முகம் நடத்துவது, கல்விக்கண் திறக்க கல்விநிலையங்கள் அமைப்பது, அனாதைகள் பராமரிக்க இல்லங்கள் அமைப்பது போன்ற செயல்களும் தியாகம்தான்.
கோடீஸ்வரர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடிப்பதினை பெரிதாக கருதாது, தான்சம்பாதித்ததில் பங்கினை உலக வெப்ப மயமாகுவதிலிருந்து தடுப்பதற்கும், உலகில் பசி, பட்டினி,பிணி, குடிப்பதிற்கூட தண்ணீர் இல்லா நிலை போக்கி, வீடில்லா மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதும் ஒரு வகையானதியாகம் தான்.
அரசியல் வாதிகள் தான் வகிக்கும் பதவிகள் தான் பகட்டோடு வாழ்ந்து, தனக்கும் தனது தற்போதையகுடும்பத்திற்கு மட்டுமல்லாமல் , தன் வருங்கால சந்ததிக்கும் சொத்து சேர்ப்பதிற்குத் தான் என்று நினைக்காது, தனது நாட்டு மக்களுக்காக உழைப்பதும் ஒரு விதமான தியாகம் தானே.
இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு பஞ்சாப் மாநில காலிஸ்தான் தீவிரவாதிகளால் பிரிவினைவந்துவிடக்கூடாது மற்றும் சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவில் தீவிரவாதிகளின் கோட்டையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுத்ததின் மூலம் சீக்கிய தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானஇந்திரா அம்மையார் இறந்ததும் ஒரு தியாகம் தான்.
அதேபோன்று இலங்கை தமிழர்கள் சுய கௌரவத்தோடு தன்னாட்சி பெற வேண்டும் என்று எண்ணத்தால்பிரதமராக இருந்த போது உழைத்த ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கக்கூடாது என்று அதே இலங்கைதீவிரவாதிகளால்
மனித வெடிகுண்டுக்கு பலியானதும் ஒரு தியாகம் தானே!
பல மதங்களில் பல்வேறு விதமான தியாக பழக்க வழக்கங்கள் இருந்து வந்துள்ளன. ஹிந்து மதத்தில் கணவன்இறந்ததும் மயான தீயில் மனைவியும் மடியும் உடன் கட்டை ஏறும் தியாகமும் இருந்தது. மன்னர்கள் இறந்துவிட்டால் அவர்களின் மனைவிகள் மட்டுமல்லாமல், அந்தப்புர பெண்களும் உயிர் விடும் தியாகமும் இருந்தது. ஜப்பானிய மன்னர் இறந்து விட்டால் அவரது பாதுகாப்புப் படையினர் தங்களது வயிற்றினை நீண்ட வால்களால்தங்களது வயிற்றினை கிழித்துக் கொண்டு மடியும் ஹராகிரி தியாகமும் உண்டு.
அமெரிக்க்காவில் மீடோஸ் மழைப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் செப்டம்பர் 7-11, 1857 நாட்களில்மோட்சம் செல்லலாம் என்று 120 பேர்கள் மாண்டதாகவும் சொல்லப் படுகிறது. Sacrifycing என்ற தியாகம்கிரேக்க, மெக்சிகோ, இந்திய நாடுகளிலிருந்து வந்த பழக்கங்கள் என்று சொல்லப் படுகிறது. மெக்சிகோநாட்டில் aziee celtic என்ற கோட்பாட்டில் சூரியனை வலிமைப் படுத்தி வணங்க வேண்டும் என்று வருடத்திற்கு20,000 பேர்கள் பலி கொடுக்கப் பட்டதாக கூறப் படுகின்றது. மாயா என்ற இனத்தவர் பெண்களை கிணற்றில்மூழ்கடிக்கும் (immersion)' என்ற கோட்பாடும் இருந்தது. சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு தோஷம் பிடித்தஉள்ளது என்று குடும்பத்தினர் முன்னிலையில் கங்கையில் மூழ்கடித்த காட்சியினையும் தொலைக்காட்சி படம்போட்டு காட்டின. பெரு நாட்டில் பாதினேழாவது நூற்றாண்டு வரை அரசர் இறந்து விட்டால் பெண்களைகழுத்து நெரித்துக் கொல்லும் பழக்கமும் இருந்தது. அதே போன்று தான் சீன நாட்டிலும் 17வது நூற்றாண்டுவரை அரசர் இறந்தால் அவருடன் இருந்தவர்களையும் மடியச் செய்யும் முறை இருந்ததாகவும் மேற்படிபழக்கங்கள் எல்லாம் மாறி பழங்கள், தானியங்கள்,பூக்கள், சில நேரங்களில் மதுக்களும் வழங்கும் வழக்கம்ஏற்பட்டது. ஆனால் நேபாலில் மாதேவி திருவிழாவிழாவில் 2019ம வருடம் எருமை,,ஆடு,,பன்றி என2,50,000'பிராணிகள் பலியிடப் பட்டதாக கூறப் படுகிறது.
முஸ்லிம்கள் இப்ராஹிம் அலைஹி வஸ்ஸலாம் வாழ்க்கையில் நடந்த தியாக சம்பவத்தினை ஏன் அதிகமாகநேசித்து ஹஜ் பெருநாள் கொண்டாடி ஆடு, மாடு, ஒட்டகம் பலியிடுகிறார்கள் என்றும், ஏன் முகமது நபிசல்லலில்லாஹு அவர்கள் நடந்த வாழ்க்கையில் உள்ள சம்பவத்தினை முக்கியமாக கருதவில்லை என்றுகேள்வி சிலர் எழுப்புகின்றனர். மக்களை பலியிடும் காலத்தில் இப்ராஹிம் அலைஹிவஸல்லம் அவர்களின்ஓரிறை பக்தியை சோதிப்பத்திற்காக ஆசையாக பெற்ற இஸ்மாயில் அலைஹிவஸ்ஸலாம் என்ற ஆசைமகனையும் அறுத்துப் பலியிட முயன்றும், அதனை அறிந்த பாலகனான இஸ்மாயில் அவர்களும் ஒத்துக்கொண்டும் இறைவன் அவர்கள் இறை பக்தியினை அறிந்து எனக்கு சதையோ, ரத்தமோ வேண்டாம் மாறாகஉங்களை சோதிப்பதிற்காகவே கட்டளை இட்டேன் என்று கொழுத்த ஆட்டையும் அனுப்பி அதனை அறுத்துயார், யாருக்கு மூன்று பங்காக வைத்து கொடுக்க வேண்டும் என்றும் சொல்லியதால் இன்று லட்சக் கணக்கானபிராணிகள் வெட்டப்பட்டு உற்றார், உறவினர், உலக ஏழை எளியவர்களுக்கும் உணவாக பயன் பெறுவதால்முஸ்லிம்கள் கடைப் பிடித்து வருகிறார்கள்.
திரு குரானில் 25 நபி மார்கள் பற்றி சொல்லப்பட்டாலும் மனித இனம் தேன்றி அவர்களை நல் வழிப் படுத்த 1,24,000 நபி மார்கள் தோன்றியதாக சொல்லப் படுகிறது. அவர்களின் அத்தனை குணங்களும் இறுதி நபிமுகமது ஸல்லல்லாஹு அவர்களிடம் காண முடிந்ததால் ரசூலுல்லாஹ் ஒரு நிகழ்வினை மட்டும் கொண்டாடமுடியவில்லை. யூதர்கள் நபி மோசஸ் குணங்களும், கிருத்துவர்கள் இயேசு பெருமானின் குணங்களும், ஜைனர்மஹாவீர் அவர்களின் குணங்களும், புத்த மத கௌதம புத்தர் குணங்களும் ஒருங்கே அமைய பெற்றவர்களாகரசூலுல்லாஹ் திகழ்ந்தார்கள்கள். அந்தந்த மதங்களின் நபி மார்கள் போதித்த நல்லுபதேசங்களை மக்கள் மீறிநடந்தும், மறந்தும் இருந்ததால் அதனை நினைவுப் படுத்தும் அடையாளமாகவே ரசூலுல்லாஹ் இருந்துவந்தார்கள். அவர்களின் ஓரிறை கொள்கையினை கைவிட மக்கா வாசிகள் உகது மலை அளவிற்கு தங்கம்தருகிறோம், பிடித்த அழகிய மங்கையினை மனம் முடிக்கின்றோம் என்று ஆசை வார்த்தை சொன்னாலும் தனதுகொள்கையினை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
ஆகவே தியாக திருநாளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒவ்வொருவரும் சில காலகட்டங்களில் தியாகம் செய்வதினால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும். உதாரணத்திற்குகணவனும்,மனைவியும் ஒருவருக்கொருவர் வீட்டுக் கொடுத்துக்கும் மன நிலை இருந்தால் மட்டுமே நல்லகுடும்பம் பல்கலைகழகமாகும். இளைஞர்கள் மது, போதை, மங்கை, சூது போன்றவற்றில் மூழ்காமல் தியாகம்செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் வீணான பொழுது போக்கில் ஈடுபடாது, விளையாட்டில் கவனம் செலுத்தாது, கல்வியில் கவனம் கொண்டால் நிச்சயமாக பரிட்சையில் வெற்றிஅடையலாம். வியாபாரிகள் நேர்மையாகவும், நாணயமாகவும் தொழில் புரிந்தால் வியாபாரத்தில் வெற்றிஅடையலாம். அதனை விட்டு, விட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து முன்னேறலாம் என்றால் எப்படி நீர் குமிழி சிலநேரத்தில் மேலே எழும்பி மறைந்து விடுமோ அதுபோன்று மறைய நேரிடும். ஊழியர்கள் நேர்மையாகஇல்லையென்றால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். எப்படி மெழுகு வர்த்தி தான் எரிந்து வெளிச்சம்தருகிறதோ அதேபோன்று தான் சில தியாகங்கள் செய்து வெற்றி அடைய முடியும். ரசூலுல்லாஹ் ஒருவராகஇருந்து பல ஆசைக்கு செவி சாய்க்காததால் இன்று 170 கோடி முஸ்லிம்கள் உலகம் முழுவதும் உள்ளதுதியாகத்திற்கு சிறந்த முன் மாதிரியாகும் என்றால் மறுக்க முடியுமா?