'பெண்ணாய் பிறப்பதிற்கு மாதவம் வேண்டுமம்மா' என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.
ஆனால் அந்தப் பெண்ணாய் பிறந்ததால் மூன்று மாதத்தில் பெற்ற தந்தையினாலேயே வன்கொடுமைக்கு ஆளான ஒரு சம்பவம் பெங்களூரில் சென்ற வாரம் நடந்திருக்கிறது.
அதுவும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுத்த இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
அகிலத்தில் இஸ்லாமிய மார்க்கம் தோன்றி 1400 ஆண்டுகள் முன்பாக அடித்தளம் பெருமானார்(ஸல்) அவர்களால் அமைக்கப்பட்டு இன்று 700 கோடி ஜனத்தொகையில் 197 தொகை கொண்ட மக்கள் அமைப்பாக இருக்கிறது.
அதன் காரணம்:
1) ஆர்ப்பாட்டமில்லாத ஏக இறைக் கொள்கை,
2) சமத்துவ, சகோதரத்துவ சமுதாய அமைப்பு.
3) உபரி செல்வத்தில் சக்காத், சதக்கா என்ற பகிர்ந்துண்ணும் பண்பு.
4) பெண்ணினம் மேம்படுத்தும் கொள்கை.
இஸ்லாம் தோன்றுவதிற்கு முன்புள்ள இருண்ட காலத்தில்
அரேபியாவில் பெண்ணடிமை, பலதார மணம், பெண்சிசு வதை, கொலை போன்ற கொடுமைகள் இழைக்கப் பட்டன. ஆனால் அதனை எல்லாம் தலை கீழாக புறட்டிப்போட்ட பெருமை அல் குரான் வழிப் படி நடந்த பெருமானாரின் ஹதிசுகளும்,
வழி காட்டுதலாகும். இஸ்லாம் தோன்றிய பிறகு பெண்களுக்கு ஒரு புரட்சி யுகம் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. அவை பின் வருமாறு:
1) பெண் சிசு கொலை தடுக்கப்பட்டது.
2) பெண்ணிற்கு சொத்தில் பங்கு உத்திரவாதம் செய்யப்பட்டது.
3) பெண்ணிற்கு மஹர் கொடுத்து திருமணத்திற்கு வழி வகுத்தல்.
4) மனம் போன போக்கில் பலதார மணம் தடுக்கப் பட்டது.
5) ஆணின் மானத்தினை மறைக்கும் ஆடை என்று பெண் வர்ணிக்கப் பட்டாள்.
இந்தியாவில் கூட ஹிந்துப் பெண்களுக்கு சொத்துரிமை சம்பந்தமான சட்டம் சமீபத்தில் தான் வந்தது.
அமெரிக்காவில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளமும் சமீபத்தில் தான் அறிவிக்கப் பட்டது.
உலக நாடுகளில் இன்னும் ஸ்ரீதனம் பெரும்பாலான முஸ்லிம் அல்லாத நாடுகளில் ஒழிக்கப் படவில்லை.
மேற்கூறப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கான பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, சரித்திரத்தில் பெருமானாருக்கு கதிஜாப் பிராட்டியாராலும், அன்னை ஆயிஷாவினாலும் எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்ற வரலாறுகள் எடுத்தியம்பிய பிறகு," பொட்டப் பிள்ளை பெத்துப் போடு" என்று சொல்லுவதிற்குப் பதிலாக இடி விழுந்தாப் போல ஒரு செய்தி பெங்களூரில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடந்துள்ளது. அது என்ன என்று கீழே விவரிக்கின்றேன்:
25 வயதான உமர் பாரூகிற்கும் 19 வயதான ரேஷ்மா பானுக்கும் திருமணம் இனிதே நடந்தது. கனவுலகில்
மிதந்த திருமண வாழ்வில் ரேஷ்மா கர்ப்பமானாள். உடனே கணவன் தன் மனைவியிடம் தனக்கு பெண்
குழந்தை பிடிக்காது. எனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும் என்றிருக்கிறார். ஆனால் அது எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் படைப்பு என்று அவருக்குத் தெரியாது. தலைப் பிரசவ வேதனையெல்லாம் தாங்கிக்
கொண்டு அழனான பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள். அதற்கு அப்ரீன் என்றும் பெயரிட்டு, தன் உதிரத்தில் பாலூட்டு சீராட்டினாள். வந்ததே வினை கணவன் உமர் பாரூக் வடிவில்.
நீ பெண் குழந்தை பெற்றதால் உன் பெற்றோடிடம் சொல்லி ரூபாய் ஒரு லக்ஷம் வாங்கி வா என்று கட்டளை இட்டான்.
தன்னுடன் பிறந்த இன்னொரு சகோதரி திருமணம் நடப்ப இருப்பதால் தன் பெற்றோரால் அவ்வளவு பணம் கொடுக்க
இயலாது என்றாலே பார்க்காலாம். அன்றிலிருந்து அவனுடைய கொடூர குணத்தினைக் காட்ட ஆரம்பித்து விட்டான்.
பெற்ற குழந்தை என்றும் பாராது அதனைக் கிள்ளுவதும், கடிப்பதும், சிகரெட்டால் சூடு போடுவதும் போன்ற கொடூர
செயல்களை அந்த பச்சிளம் குழந்தையிடம் காட்டினான். இறுதியாக தலையில் கனமான ஒரு அடி கொடுத்தான் பாருங்கள், மூன்று மாதக் குழந்தை மூர்ச்சியானது. பதறிய தாய், தன் பெற்றோருடன் மருத்துவ மனையில் சேர்த்து
தன் சிறிய சகோதரி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூபாய் முப்பது ஆயிரத்தினையும் செலவழித்துப் பார்த்தும் பெண் குழந்தையினைக் காப்பாற்ற முடியாமல் இன்று 12.4.2012 அன்று பெங்களூரில் இறைவனடி சேர்ந்து விட்டது. கணவன் உமர் பாரூக் போலிசாரால் கைது செய்யப் பட்டு கம்பி எண்ணுகிறான்.
இது எதனைக் காட்டுகிறது என்றால் இன்னும் நம்மிடையே பெயரளவில் உலா வரும் முஸ்லிம்கள் தான் உள்ளனர்.
அவர்கள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறாக வாழ்ந்து கொண்டு உள்ளனர். அவர்கள் செயல்பாடுகள் பின் வருமாறு:
1) கையூட்டு வாங்கி திருமணம் செய்கின்றனர். சீர் சீராட்டு என்ற பெயரில் மணமக்கள் குடும்பத்தினை உறிஞ்சி எடுக்கின்றனர்.
2) பெண்ணிற்கு வீடு, சொத்தில் பங்குவினை திருமணத்தின் போதே எழுதி கேட்கின்றனர்.
3) பெண்ணின் சீர் சீராட்டு போத வில்லை என்றால் திருமணத்திற்குப் பின்பு பெண்ணிற்கு மனகோளாறு என்று
படிக்காத டாக்டராக இருந்து பட்டமும் கொடுத்து விடுகின்றனர்.
4) பெண் குழந்தை பிறந்தால் போதும் மருமகளை படாத பாடு படுத்தி விடுகின்றனர்.
இதில் பெரும் பங்கு குடும்பத்தில் உள்ள பெண்களாலே செயல் படுத்தப் படுத்தப்படுகிறது என்றால் கேவலமாகத்
தெரியவில்லையா?
ஆகவே சமுதாய இயக்கங்கள், மௌலவிகள், மார்க்க அறிஞர்கள், படித்த இளைஞர்கள் தங்களின் பரப்புரைகள் மூலமும், பத்திரிக்கைகள் மூலமும் புரையோடிக் கிடக்கும் இருண்ட கால பழக்கங்களிலிருந்து விடுபெற கடுமையான முயற்சிகள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது சரியாகுமா சகோதர சகோதரிகளே!
No comments:
Post a Comment