Wednesday, 6 June 2012


இஸ்லாமிய போர் நெறிமுறை!
( (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
மற்ற மத அரசர்கள் போலல்லாது இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, நெறி தவறாது நடந்து கொண்டனர் என்று பெருமானார்(ஸல்) அவர்களும், அவர்களுக்குப் பின்னால் பதவியேற்ற கலிபாக்களும், அலி(ரழி) மற்றும் காலித்(ரழி) போன்ற தளபதிகளும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய கொடியினை ஜெருசலத்தில் நிலை நாட்டிய வீரத் தளபதி சலாதீன் போன்றோர் போர்களில் மாற்று மதத்தினர் கவுரவம் பாதிக்காது நடந்து கொண்டார்கள் என்றும், இஸ்லாமியர் தங்கள் மார்க்கத்தினை வாள் கொண்டு பரப்பவில்லை, மாறாக மற்ற மதம், இனத்தினவரை அன்பு, பாசத்தால் அரவணைத்து பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து மார்க்கம் பரவ ஊன்று கோலாக இருந்துள்ளனர்  என்பதினை வரலாற்று ஆசிர்யர்கள் பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளனர்.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் போரிட நேர்ந்த போதோ அல்லது தளபதிகளுக்கு வேற்று நாடுகளுக்குபோருக்காக கட்டளைகள் பிறப்பித்து அனுப்பும்போதோ, 'லக்ஷ்மன் கோடு' என்ற கடுமையான கட்டுப்பாடு மிகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்கள். உதாரணத்திற்கு, பயிர்களை, உணவினைதரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தாதும், முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொன்று குவிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்று கட்டளை இட்டார்கள். போருக்குச் செல்லும் தளபதிகள் முதலில் மார்க்க அழைப்பினை விடுப்பர். அதை ஏற்காது எதிர்த்து நின்ற இறை மறுப்பாலர்களைத் தான் இஸ்லாமிய படைகள் போரிட்டனர். ஆனால் இஸ்லாமிய படைகளின் வலிமை, மார்க்கத்தின் அருமை, பெருமை தெரிந்த இறை மறுப்பாலர்களுடன்,சமாதான உடன்படிக்கைகள் மேற் கொண்டர் என்பதிற்கு எடுத்துக்காட்டு தான், வரலாற்று சிறப்பு மிக்க 'ஹுதைபியா' உடன் படிக்கையாகும்.
போரில் கைப்பற்றப் பட்ட செல்வங்களை போர் வீரர்களோ,தளபதிகளோ, கலீபாக்களோ அபகரித்துக் கொள்ளாது  அத்தனை செல்வங்களும் அரசுடமை ஆக்கப் பட்டு, அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கி சமவுடமை தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கியது இஸ்லாமியப் போர்கள். இஸ்லாமிய மார்க்கத்தினர் எதிரிகளுடன் நேருக்கு நேர் தங்கள் மார்க்கத்தின் கொடியினை தூக்கி நிறுத்த புனிதப் போரிடும் போது உயிரிழந்தவர்களுக்கு  ஷஹீதானவர்கள் பட்டியலில் அல்லாஹுத்தாலா ஜென்னத்துல் பிர்தௌசில் நுழையச் செய்வான். ஆனால் ஏக இறைவன் கொடுத்த மனித உயிரினை, கோழைத் தனமாக எதிரிகளை தாக்குகிறோம் என்று சொல்லி, தற்கொலைப் படை அமைத்து, வெடிகுண்டு கலாச்சாரத்தில் தாக்குவதின் மூலம் எதிரிகள் மட்டும் அல்லாது மூமினான அப்பாவி சகோதர, சகோதரிகள், வயதானவர்கள், குழந்தைகள் மடிந்தும், காயம்பட்டும், கை, கால்கள், கண்கள் இழந்தும் கஷ்டப் பதுவதினை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்க வில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் போதித்த போர் நெறிகளை மேலை நாடுகள் கடைப் பிடித்து இருப்பார்களேயானால் இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாட்டின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி போன்றவற்றில் மனித இனம் கொல்லி அணுகுண்டினை வீசி, அந்த நகரங்களை கூண்டோடு அழித்து இருக்க மாட்டார்கள், அது மட்டுமல்ல,தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆப்கானிஷ்தான், ஈராக்,லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆளில்லா விமானங்களை அனுப்பி பல்வேறு இடங்களில் வாழும் அப்பாவி மக்களை அழித்திருக்க மாட்டார்கள்,அத்துடன் மற்ற அரசுகளின் உள்  விவகாரங்களில் தலை இடவோ அல்லது அந்த நாடுகளின் இறையான்மையினை நசுக்கவோ முயன்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அதுபோன்ற செயல்களில் ஈடு பட்டதால் அந்த நாடுகளின் தலைவர்கள் பதவி இழந்தும், பொருளாதார வீழ்ச்சியும் கண்டார்கள் என்பது இன்றைய உலகில் நடந்த உண்மை நிகழ்வு ஆகும்.
ஆகவே இஸ்லாமிய போர் நெறிமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபை ஏற்று அவைகளை மேலை நாடுகளும், மற்ற நாடுகளும் கடைப் பிடிக்கச் சொல்வதின் மூலம் சர்வதேச சமூதாயத்தின் அமைதியினை நிலை நாட்ட முடியுமல்லவா?

12 comments:

  1. //இறை மறுப்பாலர்களுடன்,சமாதான உடன்படிக்கைகள் மேற் கொண்டர் என்பதிற்கு எடுத்துக்காட்டு தான், வரலாற்று சிறப்பு மிக்க 'ஹுதைபியா' உடன் படிக்கையாகும்//

    இந்த ஒப்பந்தம் ஹுதைபியா என்ற இடத்தில் ஏற்பட்டது. அது மெக்காவின் மக்களுக்கும், மதீனாவுக்கு ஓடிப்போன முகமதின் குழுவிற்கும் இடையே ஏற்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தம் பத்து ஆண்டுகளுக்கானது. ஆனால் இரண்டு வருடத்திலேயே தகுந்த படைகளை திரட்டிக் கொண்டு முன்னறிவிப்பின்றி தாக்கியது முகமது. ஏற்பாடுகள் எதுவும் செய்திராத மெக்காவினர் போரிடாமலேயே சரணடைந்தனர். இதைத்தான் முகமதின் 'சமாதான இயல்புக்கு' ஆதாரமாக கூறுகிறீர்கள். இதை படிக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? முஸ்லிமல்லாதவர்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்?

    To be continued...

    ReplyDelete
  2. //மற்ற மத அரசர்கள் போலல்லாது இஸ்லாமியர் ........ போர்களில் மாற்று மதத்தினர் கவுரவம் பாதிக்காது நடந்து கொண்டார்கள் என்றும்//

    //இஸ்லாமியர் தங்கள் மார்க்கத்தினை வாள் கொண்டு பரப்பவில்லை//

    //மற்ற மதம், இனத்தினவரை அன்பு, பாசத்தால் அரவணைத்து பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து மார்க்கம் பரவ ஊன்று கோலாக இருந்துள்ளனர்//

    //வரலாற்று ஆசிர்யர்கள் பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளனர்//

    //'லக்ஷ்மன் கோடு' என்ற கடுமையான கட்டுப்பாடு மிகுந்த உத்தரவுகளை//

    //உதாரணத்திற்கு, பயிர்களை, உணவினைதரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தாதும், முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொன்று குவிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்று கட்டளை //

    //தளபதிகள் முதலில் மார்க்க அழைப்பினை விடுப்பர். அதை ஏற்காது எதிர்த்து நின்ற இறை மறுப்பாலர்களைத் தான் இஸ்லாமிய படைகள் போரிட்டனர்//

    //இஸ்லாமிய படைகளின் வலிமை, மார்க்கத்தின் அருமை, பெருமை தெரிந்த இறை மறுப்பாலர்களுடன்,சமாதான உடன்படிக்கைகள்//

    //கைப்பற்றப் பட்ட செல்வங்களை போர் வீரர்களோ,தளபதிகளோ, கலீபாக்களோ அபகரித்துக் கொள்ளாது அத்தனை செல்வங்களும் அரசுடமை ஆக்கப் பட்டு, அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கி//

    இரண்டு பாராவில் இத்தனை பொய்களா? கண்ணைக் கட்டுகிறது. இதையெல்லாம் யாருக்காக எழுதி இருக்கிறீர்கள்? முஸ்லிம்களுக்காகவா? இல்லை முஸ்லிமல்லாதோருக்காகவா?

    To be continued...

    ReplyDelete
  3. @ univerbuddy i think you dont know the history well... i belongs to Syed family blood line. Dont Blame SAW may peace be upon him.

    ReplyDelete
  4. டாக்டர் APM அவர்களின் கட்டுரை முழுக்க முழுக்க உண்மைகளையே கூறுகிறது. இதை முஸ்லிம் அல்லாதவர்கள் நம்ப வேண்டுமானால் இஸ்லாம் பற்றியா சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஓரிரு பத்திகளில் விளக்க முடியாது. " திருக்குர்ஆன் நற்செய்தி மலர் என்ற மாத இதழில் தொடராக வெளிவந்த தர்மமும் பயங்கரவாதமும் என்ற கட்டுரைத் தொடரை நமது நண்பர் univerbuddy பொறுமையோடு படித்து முடித்தால் மேற்கண்ட கட்டுரையில் காணப்படுபவ்ற்றை உண்மை என உணர்ந்து கொள்வார். இதன் முதல் பகுதி கீழே தரப் படுகிறது. மேலும் படிக்க விரும்புவோர் amkasim7@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    தர்மமும் பயங்கரவாதமும்
    பயங்கரவாதமும் தர்மத்தின் காவலர்களும்
    இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீழ்ப்படுவது மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியை அடைவதும் அதை உலகில் நிலைநாட்டுவதும்தான் இஸ்லாம் மார்க்கத்தின் குறிக்கோள். அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்றால் தனிநபர் வாழ்விலும் அதைத்தொடர்ந்து சமூக வாழ்விலும் ஒழுக்கத்தைப் பேணவேண்டும். அதாவது நம்மைச் சுற்றி தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். இக்குறிக்கோளுக்காகப் பாடுபடும்போது. சமூகத்தில் உள்ள அநீதியாளர்களும் அதர்மத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும் தர்மம் வளர்வதற்கு முட்டுக் கட்டையாக இருப்பார்கள். சிலர் சுயநலத்தின் காரணத்தாலும் பலர் அறியாமையின் காரணத்தாலும் தர்மத்திற்கு எதிராக அணிதிரள்வார்கள். முழுமூச்சாக அதை எதிர்த்து நிற்பார்கள்.
    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தர்மத்தை நிலைநாட்டப் புறப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தமது குறிக்கோளை அடைய கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் எதிர்ப்புகளைக் கண்டு துவண்டுவிடாமல் மிகமிகப் பொறுமையோடும் ஆழ்ந்த விவேகத்தோடும் நடந்து கொள்வது மூலம் மட்டுமே எதிர்ப்பவர்களைத் தன்வயப்படுத்தவும் வெல்லவும் முடியும்! நமது நோக்கம் மக்களைச் சீர்திருத்துவதுதான். மக்கள் நமது எதிரிகள் அல்ல. எதிர்ப்போரையெல்லாம் கொன்றோதுக்கி விட்டு அவர்களின் சமாதிகளின் மீது நிலைநாட்டப் படவேண்டியதல்ல தர்மம்! மாறாக மக்களைத் திருத்தி அவர்கள் கரங்களைக் கொண்டே வீழ்ந்துகிடக்கும் தர்மத்தை தூக்கி நிறுத்த வேண்டும். இதை மனித இனத்துக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தானே கருணையுள்ள இறைவன் தனது தூதர்களை அவ்வப்போது இப்பூமிக்கு அனுப்புகிறான்.
    அத்தூதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது மக்களிடம் வந்து அவர்கள் ஷைத்தானின் தாக்கத்தின்கீழ் செய்து கொண்டிருக்கும் அநியாயங்களைப் பற்றியும் அக்கிரமங்களைப் பற்றியும் எச்சரித்தார்கள், அவர்கள் முன்னோர்களின் வழக்கம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கும் மூடப்பழக்கவழக்கங்களுக்கும் பலம் வாய்ந்தவர்கள் பலவீனமாவர்களிடம் செய்து கொண்டிருக்கும் உரிமை மீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்குப் படைத்த இறைவனைப் பற்றியும் அவனுக்குக் கட்டுப்பட்டு இப்பூமியில் வாழவேண்டியதன் அவசியத்தையும் அவன் மறுமையில் நம்மை விசாரிக்க இருப்பது பற்றியும் நினைவூட்டினார்கள். பாவிகளுக்கு கிடைக்கவுள்ள நரக தண்டனைகள் பற்றியும் புண்ணியவான்களுக்குப் பரிசாகக் கிடைக்கவுள்ள சொர்க்கவாழ்வு பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
    இவ்வுலகின் சொந்தக்காரனும் சர்வவல்லமை பொருந்தியவனும் ஆன இறைவனின் தூதர்கள் என்ற முழு அதிகாரத்தோடு அவர்கள் மக்களிடம் வந்தாலும் அவர்கள் இறைவனின் கட்டளைகளை பலவந்தமாக மக்களின் மேல் திணிக்கவில்லை. படிப்படியாக மக்களிடம் போதனை செய்து அவர்களைத் திருத்தினார்கள். இறைவனுக்குக் கீழ்படிதல் என்ற கொள்கையை (அரபு மொழியில் இஸ்லாம்) ஏற்றுக்கொண்ட மக்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்து இந்தச் சீர்திருத்த இயக்கத்தை வளர்த்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மேற்படி கட்டுரையைத் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் http://quranmalar.blogspot.in/ என்ற ப்ளாகைப் பார்க்கவும்.

      Delete
  5. Hi honey2666 (SAW peace be upon you) keep your blood line to yourself. Could you explain the Hudaibiya any other way than treachery on the part of Muhamad?

    ReplyDelete
  6. Hi Kasim (SAW peace be upon you)

    //இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது// இஸ்லாமின் ஒரே பொருள் அடிபணிதல். யாருக்கு என்றால் முகமதுக்கு. முகமது ஒரு ஏமாற்றுப் பேர்வழி................ முகமதுக்கு அடிபணிவது நமக்கு மூளையைக் கொடுத்த கடவுளையே அவமதிப்பதாகும்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாம் என்றால் அமைதி என்பதும் கீழ்படிதல் என்பதும்தான் பொருள். நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருள் கொண்டு உங்களையே முட்டாளாக்கிக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. அதை நாம் மறுப்பதற்கில்லை. உங்களுக்கு மூளையைக் கொடுத்த கடவுளை நம்பும் நீங்கள் அந்தக் கடவுள் தனது இறுதி வேதம் மூலமாகவும் இறுதித் தூதர் மூலமாகவும் விடுக்கும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் நினைவூட்டுவது மனிதன் என்ற முறையில் நமது கடமை. (இது உங்களுக்கு போரடித்தால் கவலைப்பட வேண்டாம். இந்தப் பதிவைப் பார்வையிடும் வேறு பலருக்கு இது பயன்படும்)
       இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
       முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

       இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி....... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே!
       இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கம் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப் பாட புத்தகங்களில் திருத்தப்படாமலே தொடர்கிறது.

      ஆம், அன்புக்குரியவரே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் மனித குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது. அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தா.ன் ‘இஸ்லாம்’ என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.
      இந்த இறைவனின் மார்க்கம் முக்கியமாக மூன்று நம்பிக்கைகளை முன்வைக்கிறது. இவை எல்லாக் காலங்களிலும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வந்த இறைவனின் தூதர்களால் அந்தந்த மக்களுக்கு போதிக்கப்பட்டது. அவை இவையே:
      1). இறை ஏகத்துவம்: அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும் ஆகும்.

      2). மறுமை : இவ்வுலக வாழ்வு என்பது குறுகியதும் தற்காலிகமானதும் மனிதனுக்கு ஒரு பரீட்ச்சை போன்றதும் ஆகும்.. இங்கு அவன் செய்யும் செயல்கள் யாவும் பதிவு செய்யப் படுகின்றன. இவ்வுலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் நீதி விசாரணைக்காக எழுப்பப்பட்டு அவர்கள் செய்த பாவங்களும் புண்ணியங்களும் காண்பிக்கப் படுவார்கள். அன்று புண்ணியங்களை அதிகமாகச் செய்தோருக்கு சொர்க்கமும் பாவங்களை அதிகமாகச் செய்தோருக்கு நரகமும் விதிக்கப் படும். அதுவே மனிதனின் நிரந்தரமான உண்மையான வாழ்விடம் ஆகும்.
      (பதில் தொடர்கிறது.... பொறுமை!)

      Delete
    2. 3) தூதுத்துவம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்களே. அவர்கள் எங்கிருந்த போதும் எவ்வாறு பரவியபோதும் ஒரே மனிதகுடும்பத்தின் அங்கங்களே! அவர்களுக்கு இறைச் செய்திகளை அறிவிக்கவும் வழிகாட்டவும் இறைவன் அவ்வப்போது அவர்களிலிருந்தே சிறந்த மனிதர்களைத் தேர்ந்தேடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமிக்கிறான். அனைத்து காலங்களிலும் அனைத்து நாடுகளுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். அவர்களின் வரிசையில் இவ்வுலகுக்கு இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். இவருக்கு முன் வந்து சென்றவர் இயேசு நாதர். இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே கிடையாது என்கிறது இஸ்லாம்.

      எனவே சுருக்கமாக இதுதான் இஸ்லாம். திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நிற்கும் அன்பரே! நீங்கள் உங்களை மறைத்துக் கொண்டாலும் உள்ளத்தை சிறிதளவாவது திறந்து வையுங்கள். உண்மைகள் உள்ளே நுழையட்டும்!

      இது இறைவனுக்கு சொந்தமான பூமி.. அந்த இறைவனின் படைப்பினங்களில் ஒருவரே நீங்கள்! அந்த இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம். இறைவன் தந்த இந்த மார்க்கத்தை நீங்கள் ஏற்காமல் தான்தோன்றித்தனமாக இந்த பூமியில் வாழ்ந்தால் உங்களுக்கு என்ன நேரும் என்பதை திருக்குர்ஆன் எச்சரிக்கிறது: இந்தத் திருக்குர்ஆன் என்பது நூறு சதவீதம் இறைவனின் வார்த்தைகளை மட்டுமே கொண்டது. (இதுபற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் http://quranmalar.blogspot.in/ ப்ளாகில் சென்று பாருங்கள்.) அந்த உறுதிமிக்க இறைவேதம் கீழ்கண்ட எச்சரிக்கைகளை தாங்கி நிற்கிறது. அவற்றை உங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்:



      3:19. நிச்சயமாக இஸ்லாம் தான் இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகும்;.

      3:83. இறைவனின் மார்க்கத்தைவிட்டு வேறு மார்க்கத்தையா அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.

      3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.


      மறுமை நாளில் நஷ்டம் என்றால் நீங்கள் அறிவீர்கள் அல்லவா? நரக நெருப்புக்குள் நிரந்தர வாழ்க்கை! யோசியுங்கள். இன்று நீங்கள் உங்களுக்கு வந்த இறைச் செய்தியை நிராகரித்தீர்களானால் நரகில் உங்களுடைய நிலை பற்றி பற்றி இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
      4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம் அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக இறைவன் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

      23:104 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும் இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
      32:20 ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
      78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
      இறைவன் கூறுபவை பொய்யாகாது. எனவே யோசியுங்கள் திறந்த உள்ளத்தோடு சிந்தியுங்கள். இறைமறுப்பைக் கைவிட்டுவிட்டு இறைவனின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்!
      அன்பரே உங்கள் போக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஒருபுறம் கேள்விகள் என்று சொல்லி கேட்கிறீர்கள். அவற்றுக்கு பதில் அறிந்தவர்கள் பதில் கொடுத்தால் அவற்றை மறுத்து இதுதான் பதில் என்று சொல்லி உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறீர்கள். ம்ம்....உங்கள் நோக்கம் அதுவோ?

      Delete
    3. காசிம் அவர்களே,

      //நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் மனித குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது// என்று எழுதி இருக்கிறீர்கள்.

      அப்புறம் எதற்கு
      //இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.// என்றும் எழுதி இருக்கிறீர். உங்கள் வார்த்தைகளில் ஏதேனும் பொருள் இருக்கிறதா?

      இந்த ஏகத்துவம் மறுமை எல்லாம் இருக்கட்டும். இந்த தூத்துத்துவம் என்ற கன்றாவியைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவே இல்லை.

      Delete
    4. பதிலுக்கு நன்றி. அன்பரே உங்களுக்குள் இஸ்லாம் பற்றிய ஒரு இனம் புரியாத வெறுப்பு குடிகொண்டிருப்பதை உணர்கிறேன். சில முஸ்லிம்களின் இஸ்லாத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கண்ணுற்ற காரணத்தாலோ உங்கள் தவறான புரிதலோ அல்லது முன்னோர்கள் மற்றும் சொந்த மதத்தின் மேலுள்ள தீவிர பற்றின் காரணமாகவோ சிலரது பொய்ப்பிரசாரங்கள் காரணமாகவோ உங்களுக்குள் நுழைந்துவிட்ட அந்த வெறுப்புக் கண்ணோட்டத்தில் நீங்கள் வாசிப்பதால் சில உண்மைகளை உங்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
      ஒரே மார்க்கம்தான் இறைவனால் மீண்டும் மீண்டும் மறு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த மார்க்கத்தின் பெயர்தான் இஸ்லாம் என்பது. இஸ்லாம் என்றால் இறைவனுக்குக் கீழ்படிதல். அதாவது இன்று அது அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மொழிகளில் வேறு பெயர்களில் அறியப்பட்டு இருக்கலாம், ஆனால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இஸ்லாம் என்பது ஒரு கொள்கை. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வரக்கூடிய அந்த இறைவனின் கட்டளைகளை வாழ்வில் ஏற்று அதன்படி வாழுதல். அந்த அடிப்படையில் அவன் எதைச் சொல்கிறானோ அதைச் செய்தால் அதுவே புண்ணியம் என்பது. எதைவிட்டும் நம்மைத் அவன் தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது. இவ்வாறு இறைவனுக்குச் சொந்தமான பூமியில் இறைவன் வழங்கிய மார்க்கமான இஸ்லாத்தை விட்டுவிட்டு மனிதர்கள் தாமாக உருவாக்கிக் கொண்ட மார்க்கங்களை இறைவன் ஏற்பதில்லை. என்று இறைவனே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறான். அதைத்தான் மேற்படி இறைவசனம் எடுத்துரைக்கிறது.

      3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். என்பது எனது வார்த்தை அல்ல. திருக்குர்ஆன் வசனம்! இது உங்களையும் என்னையும் படைத்தவனும் இவ்வுலகின் அதிபதியும் ஆகிய இறைவனின் வார்த்தை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
      இது அவனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. இந்த எச்சரிக்கையை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை! ஏற்று நடந்தால் மறுமையில் சொர்க்கம், மறுத்தால் நரகம்! உங்கள் சாய்ஸ்!

      அடுத்ததாக, //இந்த ஏகத்துவம் மறுமை எல்லாம் இருக்கட்டும்// .... திரைமறைவு அன்பரே அப்படியென்றால் என்ன பொருள்? உங்களுக்கு விருப்பப் பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடுவீர்களா? இறைவன் தான் விரும்பியவர்களை தான் விரும்பிய காலத்தில் இறைத்தூதராகத் தேர்ந்தேடுத்து அனுப்புவான். உங்கள் மூதாதையர்கள் மீது கொண்ட கண்மூடித்தனமான பற்றின் காரணமாகவோ அகந்தை அல்லது பொறாமையின் காரணமாகவோ உங்களுக்காக வந்த தூதரை நீங்கள் வெறுத்து ஒதுக்கினால் அதன் விளைவாக உங்களைப் படைத்தவனின் கோபத்தைத்தான் வரவழைக்கிரீர்கள்! நீங்கள் உங்கள் வெறுப்புக் கண்ணோட்டத்தை சற்று நேரம் அடக்கி விட்டு http://quranmalar.blogspot.in/ இல் 'இறுதித் தூதரே நபிகளார்' தொடரை முழுமையாகப் படியுங்கள்.

      இனி அடுத்த கருத்துப் பரிமாற்றம் தொடரும் முன்..... நியாயம் அநியாயம் அல்லது நன்மை தீமை அல்லது பாவம் புண்ணியம் இவற்றை நீங்கள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் உங்களுக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாவபுண்ணியங்களை எவ்வாறு தீர்மானிப்பது?
      பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலைப் பாவமாகவோ புண்ணியமாகவோ தீர்மானிக்க முடியுமா? அல்லது ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா? அல்லது நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா? அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? king is always right! –(அரசன் எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா? அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா? நமக்கிடையே ஒரு அளவுகோல் தேவைப் படுகிறது அதை முதலில் தீர்மானியுங்கள்!

      Delete
  7. My dear Brother, Kasim
    Assalamu allaikum
    I appreciate your pain in replying to the commendator.
    There is a proverb saying, 'we may wake up the sleeping man but we may fail to wake up the man pretending as sleeping.
    When there are persons who worship the human beings like Syedna Burhani we may consider them as idol worshippers.
    Pleas read my latest blog on Reservation Bill on Promotion.
    Good day

    ReplyDelete