இந்திய நாடு ஜனநாயக நாடாக 1950ஆம் ஆண்டு பிரகடனப்
படுத்தப் பட்டு பின்பு இந்த வருடம் 2014இல் நடக்கப் போகிற மக்களவைத் தேர்தல் ஒரு வித்தியாசமானது
என்றால் நீங்கள் எப்படி என்று கேட்கலாம். அவை பின்வருமாறு:
1) தேர்தலில் வெற்றிபெற தேசியக் கட்சிகலான காங்கிரஸ்,
பாரதிய ஜனதா, இடது சாரிகள் மாநிலக் கட்சிகளின் கூட்டணியின் வெற்றியினை எதிர் நோக்கி
இருப்பது.
2) மத்தியில் 2004 ஆண்டிலிருந்து இருமுறை பிரதமராக
இருந்த மன்மோகன் சிங் அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் சார்ந்த காங்கிரசுக்கு
தனது இமாலய சாதனை எதனையும் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளால்
தனது மந்திரிசபை முக்கி முனகியதால் அரசியலினை விட்டு சற்று ஒதுங்கி இருப்பது.
3) முக்கிய ஆளும் கட்சியான காங்கிரஸ் முக்கிய காங்கிரஸ்
தலைவரிகளை எல்லாம் பின் தள்ளி,நேரு குடும்ப வாரிசினை முன்னிறுத்தி வாக்குச் சேகரிக்க
முயல்வது.
4) பிரதான எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா தங்களை மதவாதக்
கட்சி என்ற போர்வையிலிருந்து விலகி, மற்ற மாநிலங்களின் சாதனைகளை எல்லாம் விட்டுவிட்டு
குஜராத் மாநில அரசு சாதனையினை மட்டும் முன்னுறுத்தி வெற்றி காண முயல்வது.
5) இடது சாரியின் மூத்த தலைவர்களான ஹர்கிஜித் சிங்,
ஜோதி பாசு மறைவிற்குப் பின்பு சிறந்த தலைமையினை இழந்ததோடு மட்டுமல்லாமல் மேற்கு வங்கம்,
கேரளா போன்ற மாநிலங்களின் ஆட்சியினையும் உட்கட்சிப் பூசலால் பறிகொடுத்து பொழிவிழந்து
காணப்படுவது.
6) மாநிலக் கட்சிகலான மம்தா பானர்ஜியின் திரினாமுல்
காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன சமாஜ் கட்சி, முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி, ஜெயலலிதாவின்
அனைத்திந்திய அண்ணா டி.எம்.கே, கருணாநிதியின் டி.எம்.கே.ஆகியவை அதிக இடங்களில் வெற்றிப்
பெற்றால் மத்திய அரசில் பிரதான அங்கம் வகிக்க முடியும் என்று அதிக இடங்களில் போட்டி
போடுகின்றன.
7) இடதுசாரிகள் மூன்றாம் அணியினை அமைத்துப் போட்டிபோடும்
எண்ணம் அதில் ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் வடக்கு, தெற்கு என்று ஒவ்வொரு பக்கத்தில் இழுத்ததால் அதன் கனவு
கானல் நீரானது. அந்த முயற்ச்சியில் ஈடுபட்ட
மூத்த தலைவர் பரதன் அவர்கள் தேர்தலுக்கு முன்பு மூன்றாம் அணி அமைக்க ஈடுபட்டது தவறு,
'சீ சீ இந்த பழம் புழிக்கும்' என்ற பழமொழிக் கேட்ப ஒப்புக் கொண்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின்
2014 மக்களவைத தேர்தல் முடிவினை உலக வல்லரசு நாடுகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளன
என்றால் மறுக்க முடியாது. அதற்குக் காரணம் ஆசியக் கண்டத்தில் பொருளாதார வீழ்ச்சியில்
பல்வேறு நாடுகள் துவண்டபோது, சிறந்த பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மக்மோகன் சிங் ஆட்சி
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டால் கடைசி காலத்தில் பாராளுமன்றமே இயங்கமுடியாத முட்டுக்
கட்டை ஏற்பட்டு மன வேதனையில் தேர்தலினை விட்டு சற்று ஒதுங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் மூத்த நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் போன்றவர்களும் தங்களது சாதனைகளை
சொல்லி தேர்தலில் நிற்காமல் கடைசி நேரத்தில் காமராஜர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வழிவிட்டு
ஒதுங்கி நிற்பதாக கூறிக்கொண்டு தன வாரிசையே மார் தட்டி களத்தில் விட்டிருக்கிறார்.
அது ஒருபுறம் இருக்க 2002ஆம் ஆண்டு பாரதிய ஜனதா மத்தியிலும், குஜராத் மாநிலத்திலும்
ஆட்சி செய்தபோது உலகமே வியக்கத் தகுந்த மனித படுகொலையில் சுமார் 2000 முஸ்லிம் மைனாரிட்டி
மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மாநில முதல்வர் பிரதான மந்திரியாக அறிவிக்கப் பட்டு பல்வேறு
வித்தைகளை கையாண்டு எப்படியாவது செங்கோட்டையில் அரியணையில் ஏறிவிட வேண்டும் என்று முயல்கிறது.
அவ்வாறு ஆட்சி அமைத்தால் மத்திய அரசு எப்படி இருக்கும் என்று கீழே காட்சிக்கு வைக்கின்றேன்:
1) உத்திர பிரதேசத்தில் மூன்றாம் அணியினைச் சார்ந்த
முலாயம் சிங்கின் அரசியல் வாரிசு அஹிலேஸ் யாதவ் ஆட்சி நடப்பது அனைவரும் அறிந்ததே! அந்த
மாநிலத்தில் பி.ஜே.பி. அமைப்பாளராக இருந்த அமித் சா தான் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது
உள்துறை மந்திரியாக இருந்தவர்.அவர் பொறுப்பேற்றப் பின்னர் தான் முஜாபார் நகரில் முஸ்லிம்கள்
சுமார் 60 பேர் கொலை செய்யப் பட்டு அங்குள்ள மக்கள் அனாதையாக பாய்சா பாத் நகரில் அடைக்கலம்
பூண்டுள்ளனர். அந்த மக்களை வருகிற தேர்தலில் ஓட்டுப் போட விடமாட்டேன் என்று அந்தத்
தொகுதி பி.ஜே.பி. எம்.எல்.ஏ கூறியிருக்கின்றார் என்றால் என்ன மன தைரியம் பாருங்களேன்.
அந்த கலவரத்தில் ஈடுபட்ட ஜேட் இன மக்களைக் கவர கடைகாலத்தில் காங்கிரசும் போட்டி போட்டுக்
கொண்டு அவர்களுக்கு இட ஒதிக்கீடு செய்து கவரலாம் என்று முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேற்படி செய்கைகளின் மூலம் மத்தியில் பாரதிய ஜனதா
அல்லது காங்கிரஸ் ஆட்சி வந்தால் மைனாரிட்டி சமூகத்தினவர் அமைதியாக வாழும் ஆட்சி அமையாது
என்பதே திண்ணமே!
2) அதற்கு முன்னோடியாக இப்போதே இந்தியாவின் முடி
சூட மன்னராக பி.ஜே.பியில் பல கோடிகள் செலவழித்து படம் பிடித்துக் காட்டப் படுகின்றது.
அதன் பின்னணி தான் மோடியினை, 'ஹர, ஹர மோடி' என்று ஹரி, ஹரி ராம், அல்லது ஹரி ஹரி கோவிந்தா
போன்று அவருடைய ஆதரவாளர்கள் கோஷமிடுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி போன்ற
மூத்த தலைவர்களுக்கு தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காது மட்டுமல்லாமல், ‘சுதந்திர போராட்டத்தில்
முக்மது அலி ஜின்னாவின் அரிய பங்கு’ என்ற புத்தகம்
எழுதி கௌரவப் படுத்தப் பட்ட ஜஸ்வந்த் சிங் போன்றவர்களுக்கு போட்டிபோட இடம் வழங்கப்
படவில்லை.
இந்திய தேசத்தினை, பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால்,
'பாரத நாடு' என்று தமிழ் மாநில அந்தக் கட்சியின் தலைவர் சொல்லி இருக்கின்றார் என்றால்
கொஞ்ச நாளில் மைனாரிட்டிகள், இந்த நாட்டினை விட்டே விரட்டுவோம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம்
செய்தாலும் ஆச்சரியப் படத் தேவையில்லை.
3) தேசிய கட்சிகளுக்கு அறுதி பெருமான்மை கிடைக்காதப்
பட்சத்தில், ஆட்சி அமைக்க மாநில கட்சியின் உதவியினை நிச்சையமாக தேசிய கட்சிகள் நாடும்.
இந்த நேரத்தில் மத சார்பில்லாத மாநில கட்சிகளை சிறுபான்மையினர் அதிகமாக தேர்ந்து எடுத்து மக்களவைக்கு அங்கம் வகிக்க அனுப்பினால் மட்டுமே
இந்தியாவில் சிறுபான்மையினர் நலன் காக்கப் பட்டு மத வேறு பாடு காணாமல், எல்லோராலும்
போற்றப் படும் ஆட்சி அமையும் என்பது , 'வெள்ளிடை மலை'.
ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம் யார் ஜெயிக்கப் போவது'
என்று.
No comments:
Post a Comment