கர்ச்சிக்கும்
சிங்கத்தினையும் எதிர்கொள்ளும் வழிகள்
நம்மை
திடீரென ஆபத்து கவ்விக் கொள்ளும்போது திக்குத் தெரியா காட்டில் தவித்தது போல செய்வதறியாது
திகைத்து நின்று விடுவோம். அ து போன்ற சம்பவங்களில் எவ்வாறு நமது அணுகுமுறை இருக்க
வேண்டும் என்று சில சந்தர்ப்பங்கள் மேற்கோள் காட்டி விளக்கலாம் என கருதி இதனை உங்கள்
முன் வைக்கின்றேன்"
1)
2015 ஆம் ஆண்டு மட்டுமல்ல அதற்கு முன்பும் ஹஜ் பயணிகள் சைத்தான் கல்லெறியும் மினாவில் ஒருவரோடு ஒருவர் முட்டி, மோதி,
கீழே விழுந்து நசுங்கி அல்லாஹ்வின் கட்டளையான ஹஜ் நிறைவேறாமல் 717க்கும் அதிமானபேர்
மடிந்ததினை அனைவரும் அறிவோம். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் கும்பமேளாவிலும் நடந்தது
நினைவிருக்கும்.
கூட்ட
நெரிசல் ஏற்படும்போது மடையினை திறந்து விட்ட தண்ணீர் போல மக்கள் கூட்டம் அலைமோதும்.
அப்போது நெரிசலில் மூச்சித் திறனரல் ஏற்படும். அதனை எப்படி எதிர் கொள்வது
கூட்ட
நெரிசல் ஏற்பட்டால் எந்தக் காரணம் கொண்டும் நின்று விடக் கூடாது. ஏனென்றால் கீழே விழ
ஏதுவாகும். நின்று விடுவதிற்குப் பதிலாக பக்க வட்டத்தில் ஒதுங்கி விட வேண்டும். அல்லது
கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நகன்று விட வேண்டும்
என்று கூட்டத்தின் தன்மை பற்றி ஆராய்ச்சி செய்த க்ரீன்விச் பல்கலைக் கழக பேராசிரியர்
எட்வின் கூறுகிறார். ஒரு வேளை பக்க வாட்டில்
ஒதுங்க முடியாமல் கீழே விழ நேரிட்டால் குப்புற விழ முயலவேண்டும். அத்துடன் இரு கைகளையும் தாடையினை
தாங்கிப்பிடித்துக் கொண்டு மூக்கினால்
காற்றினை சுவாசிக்க வேண்டும்..இது போன்ற
செயலில் ஈடுபட்டு ஒரு மனிதன் 2003 ஆம் ஆண்டு ரோம் தீவின் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ
விபத்தில் பலர் மாண்டு போக அவன் உயிர் பிழைத்துள்ளான் என்றும் கூறுகிறார்.
தொற்று நோய்கள்
காலரா,
ஸ்வைன் ஃப்ளு, பன்றிக் காய்ச்சல், சிக்கா, சிக்கின்குனியா போன்ற தோற்று நோய்கள் பரவுதல்
பற்றி அறிந்தால் முடிந்த வரை பொது மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும். பாத்திரங்கள்,
துணிகள் சுடு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல்
வீட்டில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம். விருந்தினர் வருகையினை கூடியமானவரை தவிர்க்கலாம்.
தடுப்பு ஊசிகளை தேடிச் சென்று போட்டுக் கொள்ளலாம்.
பாலின
தொல்லைகளிருந்து தப்பித்தல்:
பெண்கள்
என்றாலே பாலினப் பொருட்கள் என வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கும் ஆணாதிக்க உலகம்
இது. ஆகவே தான் பல்வேறு பாலின வன்முறைகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
உங்கள் உடை உங்கள் உடல் அந்தரங்களை வெளிக்காட்டாத
வண்ணம் இருக்க வேண்டும்.
எப்போதும்
நீங்கள் இருக்கும் இடம், உங்களை சுற்றி இருக்கும் நபர் எந்த நோக்குடன் அணுகுகிறார்
என்று எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.
உங்கள்
உள் மனது சொல்லும் எச்சரிக்கையினை காது கொடுத்துக் கேட்க வேண்டும். ஏனன்றால் உள் மனம்
எப்போதும் உண்மையினையே உணர்த்தும்.
பெண்கள்
சிறிது தற்காப்புக் கலை தெரிந்திருப்பது நல்லது.
மிளகாய்
அல்லது மிளகுப் பொடியினை தூவி விடும் விடுப்பானை வைத்திருப்பதும், பயணம் மேற்கொள்ளும்போது
ஏதாவது ஒரு ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும்.
கார்,
வீட்டின் ஜன்னல், கதவு போன்றவை எப்போதும் மூடி தாழ்ப்பாள் போட்டிருக்க வேண்டும். அழைப்பு
மணி அடையாளம் தெரிந்தே கதவு திறக்க வேண்டும்.
எதிரி
தாக்கும் போது கண், குரல் வலை, உயிர் நிலை போன்ற வற்றை கை, கால்களால் தாக்கி தப்பிக்கலாம்.
விமான
விபத்துக்களில் நடந்து கொள்ளும் விதம்
சமீப
காலங்களில் விமான விபத்துக்கள் நடப்பதும் பலர் முடிவதும் பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளன
. விமானங்கள் ஆகாயத்தில் பறக்கும்போது சில அடர்த்தியான மேகங்களின் இடையே கிழித்துக் கொண்டு செல்லும். அப்போது விமானம் குலுங்கி
விபத்து ஏற்படும். விமானம் தொழில் நுட்பம் காரணமாகவும், விமானிகள் கவனக் குறைவாகவும்
விபத்துக்கள், சண்டைகள் நடக்கும் நாட்டிற்கு அருகில் சென்றாலும், தீவிரவாதிகள் நடமாடும்
இடங்களிலும் விபத்துக்கள் ஏற்படும். அது போன்ற 20 விமான விபத்துக்களில் இறந்தவர்கள்,
உயிர் பிழைத்தவர்கள் சொல்லும் உண்மை சம்பவங்களை ஆராய்ந்தபோது கீழ்கண்ட தகவல் வெளியாகியுள்ளது
1)
விமானத்தில் பெல்ட் அணித்தவர்கள் தப்பித்துள்ளனர். காரணம் கடலில் விமானம் விழும்போது
இருக்கையை ஓர் மிதப்பானாக இருக்கும்.
2)
விமானத்தில் வால் பகுதியில் அமர்ந்திருந்தவர் தப்பித்துள்ளனர்.
3)
விமானத்தில் காற்றழுத்தம் குறைவாக உள்ளபோது பணிப்பெண் கூறுவதுபோல சுபாச முகமூடியினை
சொருகிக் கொள்ள வேண்டும்.
4)
விமானம் ஆபத்துக்குள்ளாகி என்று அறிவிப்பு
வரும்போது அமைதி காக்காமல் ஒரு பக்கமாக ஓடுவதும், அங்கும் இங்கும் எழுந்து நின்று அலைவதும்
கூடாது.
தீவிரவாத
செயல்களில் தப்பிப்பது
சமீப
காலங்களில் தீவிர வாத தாக்குல் சற்றும் எதிர்பாரா இடத்திலும், நேரங்களிலும் ஏற்படுகிறது
அனைவரும் அறிந்ததே. அது போன்ற தாக்குதல் பொது மக்கள் கூடும் இடங்களான, பூங்கா, இரவு
விடுதி, ஷாப்பிங் மால், பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையங்கள் போன்ற இடங்கள்
தப்பிப்பதில்லை. அவ்வாறு நடந்தால் எவ்வாறு தப்பிக்கலாம்
1)
கட்டிடங்களை தாக்குதல் நடக்கும்போது அவசர கதவுகள் எங்கே இருக்கின்றன என்று தேடி தப்பிக்கலாம்.
2)
உங்களுடைய செல் போன் ஒலிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் முடியுமென்றால் செல்போனில்
குறுந்தகவல் கொடுக்கலாம்.
3)
நீங்கள் மறைவதிற்கு கான்க்ரீட் கட்டிடங்களை தேர்தெடுக்கலாம். ஏனென்றால் துப்பாக்கிக்குண்டு
உங்களைத் தாக்காது என்று பாதுகாப்பு நிபுணர் 'ரீட்' கூறுகின்றார்.
4)
நம்பிக்கையானவர் துணையுடன் எதிரியினை மடக்கலாம்.
காடுகளில்,
மலைகளில் தவிக்கும் போது
மேலை
நாடுகளில் வாராந்திர ஓய்வு காலங்களில் மலையேறுவதும், காடுகளின் எழிலை ரசிப்பதிலும்
ஆர்வங்கொண்ட நபர்கள் கால் நடையாகவும், சைக்கிளிலும் வலம் வருவதினைப் பார்க்கின்றோம்.
சில விமான, ஹெலிகாப்டர் விபத்துக்களில் காடுகளில், மலைகளில் விழுந்து வழி தெரியாமல்
பயம் நம்மை கவ்வும். அது போன்ற சமயங்களில் எவ்வாறு செயல்படுவது:
1)
தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம். அந்த நேரங்களில் மழை பெய்து குன்றுகளுக்கிடையில்
கிடைக்கும் தண்ணீரை பருகலாம். மிருகங்கள், பறவைகள் பசுந்தளிர்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம்
நிச்சயமாக தண்ணீர் இருக்கும்.
2)
எப்படி மிருகங்கள், பறவைகள் காடுகளில் விளையும் பழங்களை உண்டு வாழ்கின்றனவோ அதுபோன்று
காட்டில் விளையும் கனி வர்க்கங்களை, கிழங்குகளை, சுத்தமான நீரில் வாழும் மீன்களை புசிக்கலாம்.
இப்படி ஒரு மனிதன் குறைந்தது 3 வாரங்கள் வாழலாம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்,
'பிழைக்கின்ற பிள்ளைக்கு மல்லியப்பும் நஞ்சா' என்று கூறுவார்கள். அதுபோன்று அன்று விளைந்த
காய்,கனிகள் உயிரைக் காக்கும்.
3)
பாம்பைத் தவிர மிருகங்களைப் பார்த்தால் ஓடக்கூடாது. அவ்வாறு ஓடினாள் நாம் மிருகத்திற்கு
இரையாவோம். எப்படி துரத்தி வருகின்ற நாயினை, பூனை எதிர் கொள்கின்றதோ அது போன்று எதிர்கொள்ளவேண்டும்.
மிருகங்களின் கண்கள், தலை ஆகியவற்றினை கிடைக்கும் ஆயுதத்தால் பதம் பார்க்க வேண்டும்.
உங்கள் கை நகங்கள் கூட ஒரு ஆயுதம் தான் என்பதினை மறக்கக் கூடாது.. அஸ்ஸாம் மாநிலத்தில்
குடிசையினுள்ளே உறங்கிக் கொண்டு இருந்த 4 வயது
மகளை வீட்டில் புகுந்த ஒரு சிறுத்தை கவ்வி இழுப்பதினைக் கண்ட தாய் வீட்டின் மூலையில்
கிடந்த உலக்கையை எடுத்து அடித்து சிறுத்தையினை விரட்டியுள்ளாள் என்பது ஒரு அசட்டு துணிச்சல்
தானே!
4)
மலை, குன்றுகள் மேல் ஏறி நின்று உரக்க கூவி அழைப்பது மூலமும், வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
விமானங்கள், ஹெலிகாப்டர் ஆகியற்றின் பார்வையில் படும் அளவிற்கு நெருப்பு மூட்டலாம்,
துணிகளை கொண்டு சைகை காட்டலாம்.
5)
இரவில் தங்க வேண்டுமென்றால் எப்படி ஆதிவாசிகள் குடில்கள் அமைத்தார்களோ அது போன்று அமைத்து
ஓய்வு எடுக்கலாம்.
எல்லாவற்றிக்கும்
மேலாக புரட்சிக்கவி பாடியது போல, 'பயங்கொள்ளளாகாது பாப்பா'என்று மனதில் உறுதி கொண்டு, தைரியம் புருஷ
லட்ஷணம் என்ற ஆயுதத்தினை கைக்கொண்டால் சீறி வருகிற சிங்கத்தையும் எதிர் கொள்ளலாம் என்பது
உண்மைதானோ!
No comments:
Post a Comment