கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி(ஐ.பீ.எஸ்)
உங்களுக்கெல்லாம் தெரியும் 2003 ஆம் ஆண்டு இராக்
நாடு அதிகம் ஆள் கொல்லி ஆயுதம் கொண்டு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளுக்கு எதிராக
ஆபத்து விளைவிக்கும் என்று தெரிகிறது என்ற வடி கட்டிய பொய்யினை உலக நாடுகளில் பரப்பியதோடு
மட்டுமல்லாமல், அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அந்த நாட்டின் மீது படையெடுத்தனர்
என்று.
அத்தோடு நில்லாமல் அந்த நாட்டினைப் பிடித்து, அதன்
எண்ணெய் வளங்களை, மற்றும் அரசு, தனிப் பட்டவர் சொத்துக்களை கொள்ளையடித்து, அல் மாலுக்கி
என்ற பொம்மை ஷியா அரசை அரியணையில் ஏற்றினர்.
சில நாட்களில் அதன் ஜனாதிபதி சதாம் ஹுசைனை வஞ்சகர் மூலம் கண்டு பிடித்து கண் துடைப்பு
நீதி விசாரணை மூலம் தூக்கு மேடைக்கு ஏற்றினர். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆட்கொல்லி ஆயுதம்
சிக்கியதா என்றால் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும், உலக நாட்டு மக்களுக்கும்
தெரியும்.
ஆனால் அந்த இராக் நாட்டில் அமைதி திரும்பியதா என்றால்
இல்லையே, அது ஏன்? அதனைத் தான் உலக நாடுகளும் கேட்கின்றன. அப்படி என்ன தாரகை மந்திரம்
அதிபர் சதாம் ஹுசைனிடம். பல்வேறு இனத்தினவரையும் தன் ஆளுமையால் ஒருங்கிணைத்து வல்லரசுகளுக்கே
ஒரு சவால் விடும் அரபு நாடு இராக் ஒன்றே என்று சொல்லும் அளவிற்கு தன் நாட்டினை கட்டுக்
கோப்பாக வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
இராக் நாட்டினை பிடித்த பின்பு, சதாம் ஹுசைன் கைது
செய்து அக்கினி விசாரணையில் அதனை விசாரித்த
சி.ஐ.ஏ.என்ற அமெரிக்க உளவுப் படையின் அதிகாரி நிக்சன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதனை டெய்லி மிரர் என்ற அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனிடம், உளவுத் துறை அதிகாரி நிக்சன்,
'உங்கள் மீது ஆட்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் உள்ளதேஎன்ற என்ற கேள்விக்கு, நாங்கள் ஒரு போதும் அவ்வாறு செய்ய எண்ணவில்லை, எங்களிடம் அதுபோன்ற
ஆயுதமும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அப்பாவி பொது அவ்வாறு அழிக்க கட்டளை இடவுமில்லை.
உங்களிடம் கூட அதுபோன்ற ஆயுதம் இருந்தாலும் எங்கள் மீது அதனை உபயோகிக்கவில்லையே அது
ஏன்' என்று கேட்டுள்ளார்.
சதாம் தொடர்ந்து
கூறும்போது, இராக் நாட்டினைப் பற்றி அல்லது
மொழியினைப் பற்றியோ அல்லது அராபிய நாட்டு மக்களைப் பற்றியோ உங்களுக்குத் அதிகம் தெரியாது.
உங்களுடைய முயற்சி வெற்றி பெறாது, தோல்வியினை நீங்கள் அடையப் போவது நிச்சயம்' என்று
கூறியதாகவும், அதன் படியே அமெரிக்க கூட்டுப் படை இராக் நாட்டிலிருந்து வெளியேறினாலும்,
இன்னும் கூட 5000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கு இருந்து இராக் ராணுவத்திற்கு உதவியாக
உள்ளனர். அது மட்டுமல்லாது அவர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானம் மூலம் சுன்னி முஸ்லிம்களை
அழித்துக் கொன்று அதனை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அவர்களுக்கு மிகப் பெரிய
தோல்வியும் தந்துள்ளது என்றும் கூறுகிறார். இதனையே தான் சதாம் ஹுசைன் ஒரு தீர்க்கதரிசியாக
எச்சரித்துள்ளார் என்று கூறுகிறார் நிக்சன்.
இதனைப் போன்று தான் கடாபியும் இங்கிலாந்து அப்போதைய
பிரதமர் டோனி பிளேயரிடம் 2012 ஆம் ஆண்டு, 'நீங்கள் என்னை பதவியிலிருந்து நீக்கினால்
லிபியாவில் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இன்றும் அந்த நாட்டில் நிலையான
ஆட்சி இல்லையே அது ஏன் என்று இப்போதாவது மேலை நாடுகள் சிந்திக்க வேண்டாமா தோழர்களே!
No comments:
Post a Comment