27.5. 2018 .அன்று உலக தொலைக்காட்சி நிறுவனங்கள்
ஒரு செய்தியினை மட்டும் திரும்பத் திரும்பத் வெளிச்சம் போட்டுக் காட்டின. நீங்களும்
பார்த்திருப்பீர்கள். ஒரு மாலி தீவின் வாலிபர் செய்த ரத்தம் உறைய வைக்கும் அதிசயத்தை.
மேற்கு ஆப்ரிக்காவின் குட்டித் தீவான மாலி சமீப காலங்களில் உள் நாட்டு
போரில் உழன்று கொண்டிருக்கின்றது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன அதனைத் தடுக்க
உலக நாடுகள் சபை அமைதி காக்கும் படையும் அங்கே நிறுத்தப் பட்டிருக்கிறது என்ற செய்தியும்
அறிந்திருப்பீர்கள். மாலி தீவானது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. 1960 ம் ஆண்டு மாலி
தீவு பிரான்ஸ் பிடியிலிருந்து மீண்டு விடுதலை பெற்றது. அந்த நாட்டின் 90 விழுக்காடு
மக்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் உள்நாட்டுப் போரில் பல மக்கள் கள்ளத் தோனியில் ஐரோப்பிய
நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அப்படி தஞ்சம் புக வந்தவர்தான் 22 வயதான மோமோது கசமா
என்ற இளைஞர்.
27 .5 .2018 அன்று
பாரிஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்தவர்
அனைவரும் மேல் நோக்கி கூக்குரலுடன் பார்த்துக் கொண்டு பரபரப்பாக இருந்தனர். அப்போது
அந்த குடியிருப்பு பகுதியில் தனது முதுகில் ஏற்றப் பட்ட சிறிய பையுடன் ஹோட்டலில் தேநீர்
அருந்த வந்திருந்த மோமது அவர்கள் பார்க்கும் திசை நோக்கி தனது கண்ணை நோக்கினார். அங்கே
நான்காவது மாடியில் வெளியில் உள்ள கண்ணாடி பால்கனி விளிம்பை பிடித்துக் கொண்டு நான்கு
வயது சிறுவன் தொங்கி கொண்டு இருப்பதனை பார்த்து அதிர்ச்சியுற்று சிறிதும் யோசிக்காது
தனது முதுகுப் பையனை வைத்து விட்டு மட மட என்று 38 வினாடியில் நான்காவது மாடியினை எந்த
உறுதுணையுமின்றி ஏறி அந்த சிறுவனை அலாக்காக தூக்கி பால்கனி உள்ளே இழுத்து காப்பாற்றி
விட்டான். உலகில் 'ஸ்பைடர் மேன்' சாகசங்கள் என்று வரும் தொலைக் காட்சி செய்திகளை கண்டுள்ளோம்.
ஆனால் அவையெல்லாம் திட்டமிட்டு செய்யப் படுகின்ற அதிசயங்கள். மாலி தீவின் மோமோது செய்தது
யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் செய்த சாதனையாகும் என்றால் அதிசத்திலும் அதிசய சாதனைதானே. அதுவும் கள்ளத்தோணியில் தஞ்சம் புக வந்த வாலிபருக்கு உள்ள வீரமும் தீரமும் ஆச்சரியத்திலும்
ஆச்சரியம்தானே.
அந்த
சிறுவனின் தாயார் தனது தாயாரைப் பார்க்க பக்கத்து நகருக்கு கணவரின் பொறுப்பில் விட்டு
விட்டு சென்றிருக்கின்றார். தந்தையோ தனது 4 வயது தனயனை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு
சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். கடையில் சாமான்கள் வாங்கி விட்டு நேரே
வீட்டுக்கு வராமல் வரும் வழியில் உள்ள வீடியோ கேம்ஸ் கடையில் விளையாடிக் கொண்டிருந்ததால்
சிறுவனைப் பற்றிய கவலை அவருக்கு தெரியவில்லை. சிறுவனோ எவ்வளவு நேரம் வீட்டில் அடைபட்டு
இருப்பான். ஆகவே அந்த அறியா பாலகன் வேடிக்கை பார்க்க பால்கனியியை திறந்து கொண்டு வந்தவன்
அதன் வழியே அப்பாவை தேடி போய் விடலாம் என்று எத்தனித்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தொலைக் காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்து அலறிய தாய், தன் தாய் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு
வந்து அன்பு மகனை அள்ளிக் கொஞ்சி அவனைப் காப்பாற்றிய மோமோதை வானளாவ பாராட்டியுள்ளார்.
அவர் மட்டுமா தொலைக் காட்சி நேரலையினைக் கண்ட லட்சோப லட்சோப பாரிஸ் நகர மக்கள் பாராட்டியுள்ளனர். இதனை அறிந்த
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன், மோமோதை தன்னுடைய மாளிகைக்கு அழைத்து நாட்டின் உயர்ந்த
விருது வழங்கி, குடியுரிமையும் கொடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்சி பணியில் ஒரு வேலையும்
வழங்கி யுள்ளார். தமிழில் ஓர் பழமொழி உண்டு. 'கும்பிடபோன தெய்வம் கூரையினை பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்று. புகலிடம் தேடி கள்ளத்தோணியில் வந்த மோமோதுக்கு அந்த சிறுவன் உருவில் இறைவன் அருள் கிடைத்து அவன் புகழின் உச்சாணிக்கே சென்று விட்டான். அப்போது அங்கே வந்த நிருபர்கள் மோமோதை சூழ்ந்து கொண்டு, 'நீங்கள்
எப்படி இந்த அதிசயத்தினை செய்தீர்கள்' என்று கேட்க, அதற்கு அவர், 'கூக்குரல் கேட்டு
தேநீர் அருந்திய நான் ஓடி வந்து பார்த்தபோது அந்த சிறுவன் தொங்கி கொண்டு இருந்தான்,
எனக்கு உடனே அவனை காப்பாற்ற வேண்டும் என்று எந்த உறுதுணையும் இல்லாமல் உயிரை பணயம்
வைத்து ஏறினேன், அதற்கு என் இறைவன் உறுதுணையாக இருந்தான்' என்று கூறி இருப்பது எப்படி
ஒரு முஸ்லிம் இறைவன் மீது அசையா நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்று ஒரு சிறந்த உதாரணமாக
உங்களுக்கு தெரியவில்லையா? சிலர் ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் உலகமே இருண்டு விட்டதாக
நினைக்கின்றார்கள், சிலர் வசதி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையென்று வருத்தப் படுகிறார்கள் அவர்கள் இறை பக்தியுடன் சோம்பேறித்தனமாக இல்லாமல் எந்த வேலையும் ஆரம்பித்தால்,
'வெற்றிமேல் வெற்றி வந்து அவர்களை சேராதா சகோதர, சகோதரிகளே!
உலகப் புகழ்
கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்!
கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியாமல்
இருக்க முடியாது.. அவர் பிரான்ஸ் நாட்டில் 15 மார்ச் 1993 ல் பிறந்த ஆப்ரிக்க இனத்தவர்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவர் உலக 21 வயதிற்குட்டபட்ட வர்களின்
கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தினை பெற்றுத் தந்த சிறப்புப்
பெட்டவர். அதன் மூலம் கோல்டன் பாய் விருதை 2013 னிலும், பிராவோ விருதினை
2014 லிலும் பெற்றவர். அவருடைய கால்கள் ‘ஆக்டொபஸ்’ போன்று நீளமாக இருப்பதால் எதிரிகள்
கொண்டு செல்லும் பந்தினை லாவகமாக கைப்பற்றி அதனை எதிரி வீரர்கள் பறிக்காமல் தட்டி சென்று
கோலில் தள்ளும் வெற்றி வீரரானதால் அவரை ‘பொலபொ பால்’ என்று பிரான்ஸ் மக்கள் அழைப்பார்களாம்.
அப்படி பெயரும், புகழும் பெற்ற வீரர் சமீபத்தில்(மே 2018) இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி மக்காவிற்கு உம்ரா
ஆர்ப்பாட்டமில்லாமல் சென்ற புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
அவருக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட ரூ 811 கோடிகள் கொடுக்கப் படுகின்றது.
இப்போது அவர் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற அணியில் விளையாடி வருகிறார். அவர் 29 3
2018 ல் ரசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான கோலினை அடித்ததும் தனது மேல் சட்டையினை
கீழிலிருந்து மேலே தூக்கி காட்டினார். அதனில், என்ன எழுதியிருந்தது என்றால், தனது தந்தை
பிறந்த தின வாழ்த்தும், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டும்படியும் எழுதியிருந்தது. அவருடைய
தகப்பனார் தனது 80 வது வயதில் நோயால் இறைவனடி சேர்ந்ததினை நினைவூட்டுவதாகவும் அது இருந்ததாம்.
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் தான் எப்படியும் கோல் அடித்துவிடுவோம்
என்றும் அதனை தந்தை நினைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எல்லாம் வல்ல அல்லாஹ் கருணையுனடன்
சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது வருங்கால இளைஞர்களுக்கு
ஒரு சிறந்த பாடமாகும் என்றால் சரிதானே!
No comments:
Post a Comment