Sunday, 24 March 2024

பல் பிடுங்கப்பட்ட அமைப்பா ஐ.நா. சபை!


(டாக்டர் .பீ. முகமது அலி, .பீ.எஸ்.()

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் 7.Oct;2023 அன்று தெற்கு  ஹமாஸ் பகுதிகளில் இஸ்ராயிலர் குடி அமர்த்தப்பட்ட பகுதியில்  நடத்திய திடீர் தாக்குதலில் 1200 பேர்கள் இறந்தும், 5000 பேர்கள் காயமுற்றனர், 240 இஸ்ரேயிலர் சிறைபிடிக்கப் பட்டனர் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு வைக்கல் போரில் விழுந்த சிறு தீப்பொறி போல இஸ்ரெயிலர் ராணுவம் 18.1.2024 முதல்  நடத்திய 140 சதுர மைல் கல் காசா பகுதிகளில் தொடர் தாக்குதலில் கட்டிடங்கள் இடிக்கப் பட்டு மண்ணோடு மண்ணாக்கி,  32, 000 மக்கள் சாகடிக்கப் பட்டு, ஒரு லட்சம் பேர் காயமுற்றும், 23 லட்சம் பேர்கள் வீடிழந்த அகதிகளாகி, போவதற்கு வழி தெரியாமல் இடிந்த கட்டிடங்களிளுக்கு இடையேயும், துணிமணிகளால் வேயப்பட்ட கூடாரங்களில், குடிப்பதற்கு தண்ணீரற்றும், உண்பதிற்கு தகரப் டப்பாவினை ஏந்தியும், காயமுற்றவர்களை சிகிச்சைகளுக்காக கொண்டு போகமுடியாமல் மருத்துவமனைகள் இடிக்கப் பட்டும், ‘வேர்ல்ட் ஹெல்த்’ ஆர்கனைசேசன் மருத்துவ மனை  மருத்துவர்கள், பத்திரிக்கைக்காரர்கள் 300 க்கு மேல் சாகடிக்கப் பட்டும், தண்ணீர் சேமிப்பு நிலையங்கள் தகர்க்கப் பட்டும், குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் பள்ளிக் கூடங்கள் இடிக்கப் பட்டும், குழந்தைகள் கூட கந்தல் துணிகளை கட்டிக்கொண்டு அலையும் பரிதாபமான காட்சிகள் தினந்தோறும் பத்திரிக்கை செய்திகளாகவும், தொலைக் காட்சிகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. முதலில் இஸ்ரயேல் தாக்குதலுக்கு சாமரம் வீசிய மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் சில கூட தாக்குதலை தாற்காலியமாவது நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் முடியாது என்று அண்ணனை மிஞ்சிய தறுதலை தம்பியாக இஸ்ரயேல் நடவடிக்கைகள் உங்களுக்குக் தோன்றவில்லையா?

            நீங்கள் கேட்கலாம்  இஸ்ராயிலின் அடாவடி போரினை நிற்பாட்ட  வேறு என்ன வழிதான் இருக்கின்றது என்று. ஏனில்ல? அதற்குத்தான் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரர்களால் இரண்டாம் உலகப் போர் மூண்டதினை இனிமேலும் வரக் கூடாது என்று 24.10.1945ல் ஐக்கிய நாடுகள் சபையினை வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரசியா, சீனா,பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உருவாக்கின.

            ஜெனிவாவில் 1949ம் ஆண்டு 150 நாடுகள் கொண்ட .நா. humanitarian affairs ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப் பட்டது. அதற்கு சர்வதேச மனிதாப சட்டமும் இயற்றப் பட்டது( International Humanitarian Law). இந்த சட்டத்தின் படி எந்த ஒரு செயலுக்கும் தண்டனை கூட்டாக கொடுக்கக் கூடாது, இஸ்ராயில் அப்பிராணி 7000 பலஸ்தீனர்களை கைது செய்திருப்பது போன்ற நடவடிக்கை கூடாது. கொடுமை செய்தல், வன்முறை போன்றவற்றை சாதாரண மக்கள் மீது காட்டக் கூடாது, மக்கள் குடியிருப்பு பகுதிகள் இடிக்கக் கூடாது போன்றவைகள் ஆகும். ஆக்கிரமிப்பு நாடுகள் மக்களுக்கு கிடைக்கக் கூடிய தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதி போன்ற முக்கியமான அத்தியாவசி தேவைகளை தடுத்து நிறுத்தக் கூடாது போன்றவையாகும். சண்டை முடிந்த பின்பு புலம் பெயர்ந்தவர்கள் திரும்பவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மறுக்கக் கூடாது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டன. ,இந்த சட்டத்தினை ஹிட்லர் ஜெர்மனி யூதர்களுக்கு வழங்காமல் அவர்களை விரட்டியடித்ததால் 'halocaust' மனித படுகொலை என்று அழைக்கப் படுகிறது. அது தவிர  எந்த அரசியல் அமைப்பினையும் தீவிரவாத அமைப்பாக கருதக் கூடாது. ஆனால் இஸ்ராயில் தடாலடி நடவடிக்கை UNRWA ஐநா சீரமைப்பு மற்றும் அகதிகள் அடைக்கலம் கொடுத்த பள்ளிகளும் தரைமட்டமாக்கப் பட்டது.

            அடுத்த அமைப்பு UN Security Council ஆகும். அதாவது ஐநா பாதுகாப்பு சபையாகும். இதில் 15 நிரந்தர உறுப்பினர்களும், 193 பொது சபை உறுப்பினர்களையும் கொண்ட அமைப்பாகும். நிரந்தர உறுப்பினர்களாக சீனா, ருசியா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த சபை கொண்டு வரும் எந்த தீர்மானத்தினையும் ஏதாவது ஒரு நிரந்தர உறுப்பினர் ஏற்காத 'வீடோ' உரிமை கொடுக்கப் பட்டுள்ளது. பல தடவை போரை நிறுத்துங்கள் என்று இஸ்ராயிலுக்கு எதிரான தீர்மானம்  உறுப்பினர் நாடுகள் கொண்டு வந்தும் யு.எஸ்., இங்கிலாந்து தனது வீடோ உரிமையினை பயன்படுத்தி இஸ்ராயிலுக்கு ஆதரவாக செயல் பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா கொண்டு வந்த தற்காலிக போர் நிறுத்த தீர்மானத்தினை ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ உரிமையினை அந்த தீர்மானம் இஸ்ராயில் தாக்குதலினை முழுமையாக நிற்பாட்டவும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு சீரமைக்கவும் எந்த நடவடிக்கையுமில்லை என்று தடுத்து நிறுத்தி விட்டன.

            ஐநா ஜெனரல் சபை: ஐநா(பொது சபை) பொது செயலாளர் அன்டோனியோ  பலமுறை வேண்டுகோள் விடுத்தும், ரோம் கிருத்துவ போப் பிரான்சிஸ் வேண்டுகோள் இஸ்ராயிலுக்கு போரை நிற்பாட்டுங்கள் என்றாலும் நிறுத்தவில்லை. .நா. பொது சபை சிறப்பு 99 தீர்மானத்தின் படி மசோதா ரமலான் மாதத்திலாவது இஸ்ராயில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், உதவிகள் தாராளமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தது, அதனையும் அமெரிக்கா தனது வீட்டோ உரிமையினால் தோற்கடித்தது, 23 நாடுகள் வெளி நடப்பும் செய்தது. இதுபோன்று அமெரிக்கா 30 தடவைகள் தடுத்து நிறுத்தி விட்டது.

            ஐநா சபை கொண்டு வந்த தீர்மானங்களை மீறும் நாடுகளையும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும் ஒரு சபையினை நெதர்லாந்து நாட்டில்ஹேகு’ நகரில் உள்ள ICC இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட்டு 1948ல் ஆரம்பிக்கப் பட்டது. எந்த நாடும் மனித கொலை, மக்கள் மீது அநியாயமாக தாக்குதல் நடத்துதல், கிரிமினல் நடவடிக்கைகள் ஈடுபடுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்த ஒரு அமைப்பு .நா சபையால் ஆரம்பிக்கப் பட்டது. அதில் இஸ்ராயில் ஒரு உறுப்பினர் நாடாக  சேரவில்லை; அதனால் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா இஸ்ராயில் தாக்குதலை ஜெர்மனிய holocausts மனிதக்கொலைக்கு ஈடாக கருத வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தாலும் நிறைவேற்றமுடியவில்லை. ஏனென்றால் அமெரிக்கா,இங்கிலாந்து அதற்கு பக்க பலமாக உள்ளன என்பதால் தானே!

            .நாவின் இன்னொரு அமைப்பு ICJ இன்டர்நேஷனல் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் ஆகும். இதன் அறிக்கைப் படி இஸ்ராயில் ராணுவம் காசா பகுதிகளில், 2012, 2014,2021,2022 ஆகிய வருடங்களில் தாக்குதல் நடத்தின என்று கூறுகிறது. அது சரி, இதற்கு முன்பு .சி.சியால் எந்த நாட்டு தலைவரும் தண்டிக்கப் பட்டார்களா என்று கேட்கலாம். ஏனில்லை, தண்டிக்கப் பட்ட 'பீலிபெல்ட்' தலைமறைவு, சிலியன் ஜனாதிபதி அகஸ்டோ வாரண்ட் கொடுக்கப் பட்டு தலைமறைவானார். மாலி ஜனாதிபதி அஹமத் அல் மெஹ்தி 7 ஆண்டுகள் தண்டனை, யூகோஸ்லாவியா அர்மேனிய முசுலிம்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மிலோசொவிச், ராணுவ தளபதி மிலாடிக் போன்றவர்களை போர் குற்றவாளிகளாக தண்டிக்கப் பட்டது ஒரு வரலாறு. ஆனால் அந்த சட்டம் இஸ்ராயில் தலைவர்கள் மீது பாயாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே மேற்கத்திய நாடுகள் ஆதரவு தானே! ஆனால் மற்ற நாடுகள் உணவுப் பொருட்களை வண்டிகளில் அனுப்பிய போது எல்லைப்பகுதியில் இஸ்ராயில் படைகள் தடுத்தி நிறுத்தி விட்டன. சரி உணவுப் பொருட்களை ஹெலிகொப்டர் மூலம் போடலாம் என்று அதன் மூலம் கீழே போட்டதினை எடுப்பதிற்காக கூடிய பொது மக்களை  இஸ்ராயிலர் படை குண்டு மழை பொழிந்ததில் 150 பேர்கள் இறந்ததாக கூறப் படுகிறது. தப்பி தவறி அந்த உதவிப் பொருட்கள் கடலில் விழுந்ததினை எடுக்க சென்ற மக்களில் 12 பேர்கள் இறந்தனர்.ஆகவே தான் .நா சபை பொது செயலாளர் அதனை விவரிக்கும் பொது 'moral outrage' சகிக்கமுடியாத அட்டூழியம் என்று அழைத்துள்ளார்.

            .நா. பாதுகாப்புப் படை: .நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் 120 நாடுகள் 2022ம் ஆண்டு வரை 74,892 வீரர்களை .நா. படை அனுப்பியுள்ளது. உதாரணத்திற்கு 1991ம் ஆண்டு மொரோக்கோ- மேற்கு சகாரா  நாடுகளுக்கும் 20ஆண்டுகளும், 10 ஆண்டுகள்  காங்கோ நாட்டிற்கும், 2011ம் ஆண்டு சூடான் நாட்டிற்கும், 2014ம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்கா குடியரசு நாட்டிற்கும் அனுப்பப் பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையே நடந்த எல்லையோர சண்டையில் .நா படை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு அனுப்பி அமைதி காத்ததும் வரலாறு உள்ளது. ஆனால் வளர்த்த கிடா மார்பில் குத்தியதுபோல இஸ்ராயிலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரமலான் மாதத்திலாவது போரை நிறுத்துங்கள் என்று சொல்லியும் இஸ்ராயில் எங்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று தைரியமாக சொல்வதற்குக் காரணம் அந்த நாடுகளில் யூத மக்களின் ஆதரவு அவர்களுக்கு வேண்டும் என்பதால் தானே!

            கிராமங்களில் சொல்வார்கள் வயதாகி பல் விழுந்தால்  சொல் போச்சு  என்று. இப்போது பொய் பல் செட்டு கட்டிக் கொள்கிறார்கள். அதேபோன்று தான் காட்டின் ராஜா என்று ஆண் சிங்கத்தினை கூறுவார்கள். அது வேட்டையாட முக்கியமாக தேவைப் படுவது  கோரமான பல்லும், பற்றிப் பிடிக்க கூரிய நகமும் தான் முக்கியம். ஆனால் அதே சிங்கம் வயதாகி விட்டால் , மற்ற சிங்கங்கள் ஒன்றுகூடி தனது இன ஆண் கிழட்டு சிங்கத்தினையே கொடூரமாக அடித்து சாப்பிடுவதினை 'animal planet' தொலைக் காட்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கழுகு வயதானாலும் அதன் நீண்ட வளைந்த அழகும், சிறகும் கீழே விழுந்தாலும் மீண்டும் முளைக்குமாம். ஏன் இதனை இங்கே சொல்கிறேன் என்றால் .நா. சபை நிறுவப்பட்டு 79 ஆண்டுகளானாலும் அதன் சட்டங்கள் அமல் நடத்த போதிய அதிகாரம் வழங்கப் படவில்லையே என்ற மன வேதனை தானே! சட்டங்கள் உருவாக்கலாம் ஆனால் அதனை அமல் படுத்த போதிய அதிகாரங்கள் .நா. சபைக்கு இல்லையே! முதலில் நிரந்தர உறுப்பினர்களின் வீடோ அதிகாரத்தினை ரத்து செய்து அனைத்து நாடுகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுக்க வேண்டும். இரண்டாம் உலகப்போர் அழிவை கொண்டு வந்தாலும், அதுபோன்ற அழிவு இனிமேலும் உறுப்பு நாடுகளுக்கு வல்லரசுகளால் மற்றும் இஸ்ராயில் போன்ற rogue போக்கிரி நாடுகளாலும் ஏற்படாத வகையில் சட்டங்கள் இயற்ற வேண்டும்.

            உங்களுக்கு ஒரு வழக்கினை உதாரணமாக கொண்டு சட்டத்திற்கும், தண்டிக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை சொல்லலாம் என நினைக்கின்றேன். முன்னாள் தமிழக முதல்வர் சென்னையில் TANSI நிலத்தினை முதல்வராக இருந்த போது தனக்கு வாங்கியதும், அது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்றது உங்களுக்குத் தெரியும். அந்த வழக்கின் போது மந்திரிகளுக்கான 'model code of conduct' என்ற வழிமுறை இல்லை என்பதினை உணர்ந்து உச்ச நீதிமன்றம் அரசு நிலத்தினை வாங்கியது தவறு என்று அதனை டான்சி என்ற அரசு நிறுவனத்திற்கே திருப்பி உத்தரவுப்படி கொடுக்கப் பட்டது உங்களுக்குத் தெரியும். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அதுபோன்ற 'model code conduct' தண்டிக்கக் கூடிய சட்டமாக உள்ளது. அதுபோன்றது தான் தற்போது அமைச்சர்களுக்கும் 'model code of conduct' அரசு ஊழியர்கள் தவறு செய்தால் தண்டிக்கக் கூடிய சட்டமாக வந்துள்ளது. அதுபோன்ற சட்டம் எப்போது .நா. சபையில் நிறைவேற்றப் படுகிறதோ அப்போது தான் இஸ்ராயில் போன்ற rogue போக்கிரி நாடுகள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்க முடியுமென்றால் உண்மைதானே!

 

           

           

            



           

           

           

No comments:

Post a Comment