(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
நவீன காலங்களில் மக்களின் எழுச்சி நாயகர்களாக திகழ்ந்தவர்கள், அவர்களின் வெற்றிக்கு வழி வகுத்த மக்களின் அறிவிக்கப் படாத கடவுளாக கருதப் பட்டவர்கள், அவர்களுக்கு நாடு முழுவதும் சிலைகள், புகழ் பாடும் பெரிய படங்கள், புராணங்கள், கொஞ்சநஞ்சமல்ல. அவர்கள் எல்லாம் கொடுங்கோலர்களாகி, மக்களை கசக்கிப் பிழிந்ததால், கொஞ்சங்காலங்களில் மடிந்து, மண்ணோடு மண்ணாகி, அடையாளமே தெரியாதவர்களாக மக்கிப்
போனார்கள் என்ற வரலாறு உங்களுக்கெல்லாம் தெரியும். அதேபோல் கர்வத்துடனும், அதிகார மமதையுடனும் நானே நாடு, நானே ராஜா, நானே மந்திரி என்று கூறிக் கொண்டு வருபவர்களின் வரலாறு உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
எகிப்தில் வற்றாத ஜீவ நைல் நதி ஓரம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாரோஸ்’ என்ற சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரர்களுக்கு மிகவும் பிரமாண்டமான பிரமீடுகள் மக்களைக் கசக்கிப் பிழிந்து எழுப்பியுள்ளதினை .உலக மக்கள் கண்டு ஆச்சரியப் படுகின்றனர். அந்த பிரமீடுகளையும், பாரோஸ் என்ற மன்னர்களையும் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கதைகதையாக எழுதுகின்றனர். அதில் ஒரு பெண் பாரோஸ் ‘ஹாரோஸ்பாட்’ ஆண் என்று தெரிவதிற்காக பொய்யான தாடியுடனும் இருப்பதினைக் காணலாம். அந்த பாரோஸ் வரிசையில் வந்தவரும் கிருத்துவ பைபிளிலும், திருகுரானும் சொல்லியுள்ள 'பிரவுன்' ஆகும். அவன் யூதர், முஸ்லிம்களின் நபியாக கருதப் படும்
மூஸா அவர்களை எப்படியாவது கொல்ல
வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு துரத்தி வரும்போது பெருங்கடல் பிளந்து மூஸாவினை காப்பாற்றியாகவும், பிரவுன் கடலில் மூழ்கடிக்கப் பட்டதாகவும் வரலாறு. ரஸூலல்லா பிறந்த கி.பி.570ஆம் ஆண்டு பைசாண்டின் அரசன் எப்படியாவது முஸ்லிம்களின் புனித ஸ்தலம் காபாவினை அழிக்க வேண்டுமென ‘மஹமுட்’ என்ற பிரமாண்டமான யானை மீது ஏறி யானைப் படைக்கு தலைமை தாங்கி வந்தானாம். ஆனால் அந்த யானையோ மக்கமா நகர் எல்லையில் மண்டியிட்டு மேல் தொடர மறுத்து விட்டதாம். அப்போது இறைவன் அருளால் அந்தப் படை அழிக்கப் பட்ட வரலாறு திருக்குரான் 105 'அல் பீல்' என்ற அத்தியாத்தில் வருகிறது.
மத்திய கால கட்டத்தில்(medieval} Despotate of Epurus) ரோமன், பைசன்டின், ஓடமன் சாம்ராஜ்யங்கள் இருந்தன. நான்காம் சிலுவை யுத்தத்திற்குப் பின்பு 1204ம் ஆண்டு கான்ஸ்டேட்டின் தலை நகர் சீரழிக்கப் பட்டது. அப்போது ஈபிரிஸின் ஆட்சி செய்த இரண்டாம் தாமஸ் ஆகும். பைசண்டையின் அரசின் முக்கிய எல்கையை பிடித்தார்.
அவ்வாறு பிடிக்கப் பட்ட எல்லகைகளை இணைத்து யூப்ரஸின் டெஸ்பாட்டட்
ஆகும். அதன் பின்பு பைசான்டின் சாம்ராஜ்யத்தினை ஆண்ட(1352-1357) ஐந்தாம் ஜார்ஜ் ஆகும். அதன் பின்பு அந்த சாம்ராஜ்யத்தினை ஆண்ட
. கான்ஸ்டாடின் XI என்பவரை பதினான்காம்
நூற்றாண்டில் ஒட்டாமன் அரசு தோற்கடித்தது.
நவீன கால சர்வாதிகாரர்களையும் அவர்கள் அழிந்த கதைகளையும் 3 பேர்களை கொண்டு விளக்கலாம்.
1)
அடால்ப் ஹிட்லர் (1884-1945): முதலாம் உலக போருக்கு பின்னால் போரே நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்த வேளையில் ஜெர்மனியில் அரியணையில் ஏறிய சர்வாதிகாரி தான் அடால்ப் ஹிட்லர். அவர் நாசிகளை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அருகில் உள்ள போலந்து நாட்டிற்கு ஆறு தடவை படையெடுத்து லட்சக் கணக்கில் யூதர்களை கொன்று, இனப்படுகொலைக்கு வழிவகுத்தவர் என்ற பட்டத்தினை பெற்றார். அதன் பின்பு போலந்து பக்கத்தில் உள்ள இன்றைய வல்லரசு நாடான ரசியாவினை அழித்தே தீருவேன் என்று சபதம் கொண்டு போருக்கு கிளம்பிய அவரது படைகள் 'ஆ ப்பரேஷன் பார்பரா’ என்ற யுத்தத்தில் 1945ம் வருடம் ஏப்ரல் மாதம் கூட்டுப் படைகள் ஜெர்மனியை நெருங்கும் போது தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார் என்ற வரலாறு.
2)
பெனிட்டோ முசோலினி(1883-1945):இத்தாலியில் சாதாரண பத்திரிக்கை ஆசிரியராக இருந்து 1920ம் ஆண்டு பிரதமராகி ஒரு கட்சி ஆட்சியினைக் கொண்டு வந்து நானே நாடு, நானே சக்கரவர்த்தி என்று கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். அவருக்கு உறுதுணையாக அவருடைய மனைவியும் சேர்ந்து கொண்டார். கூட்டுப் படைகள் இத்தாலியினை நெருங்கும்போது அவரும் அவருடைய மனைவியும் நியூஜிலாந்திற்கு தப்பிக்கும் போது எல்லையில் பிடிக்கப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அதன் பின்பு அவகளுடைய உடல்களை 'மிலான்' நகரத்திற்கு கொண்டு வந்து முச்சந்தியில் அனைவரும் பார்க்கும் படி தூக்கிலப் பட்டார்கள் என்பதும் வரலாறு.
3)
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ருமேனியா நாட்டு சர்வாதிகாரி நிக்காலோ(1919-1989) மனிதாபமான ஆட்சியாளராக இருந்து 1970 ஆண்டு சர்வாதிகாரியாக மாறி அடக்க ராணுவத்தினை பயன் படுத்தினார். மக்கள் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்ததால் பாராளுமன்றத்தில் ஏறி, பங்களா தேஷ் அதிபர் ஷேய்க் ஹசீனா போன்று தப்பிக்க எத்தனித்தார். அந்தோ பரிதாபம் எந்த ராணுவம் அவருக்கு உடந்தையாக இருந்ததோ அதே ராணுவம் அதனை சுட்டு விடுவோம் என எச்சரித்ததால் பிடிபட்டு அவரும், அவர் மனைவியும் துப்பாக்கிக் குண்டுக்கு இறையானார்கள்
மனைவியும் துப்பாக்கி குண்டுக்கு இறையானார்கள்.என்பதும் வரலாறு.
4)
நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் லிபியா கடாபி, சிரியா ஆசாத் நிலைமையினை விவரமாக கூறியுள்ளேன். தற்போது ருசியாவினை ஆளுகின்ற புடின் அவர்கள் ரசிய ரகசிய படையான KGB யில் பணியாற்றியவர். ரசியாவின் அதிபராக இருந்த எல்டின் முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் செச்சன்யா மாநிலத்தில் புரட்சி செய்ததினை அடக்க முடியாததால் தனது பதவியினை புடினிடம் கொடுத்து வெளியேறினார். அதன் பின்பு அதிரடியாக செயல்களில்
ஈடுபட்டு செச்சென்யாவினை பிடித்து ரசியாவினை இரும்பு பிடியில் வைத்துள்ளார். பக்கத்து நாடான போலந்து அதிபரை உன் நாட்டினை ஒரு வாரத்தில் பிடித்து விடுவேன் என்று மிரட்டினார். அதன் பின்பு பக்கத்து நாடான யுக்ரைன் ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் பாதுகாப்பிற்காக சேர முயற்சி செய்தபோது போலாந்தினை ஒரு வாரத்திற்குள் பிடித்து விடுவேன் என்று மாரு
தட்டிய ருசியாவினால் போர் ஆரம்பித்து மூன்று வருந்தலானாலும் உக்ரைனை பிடிக்க முடியாமல் திக்கு முக்காடி கடைசியில் அவருடைய நீண்ட கால நண்பர் டொனால்டு அரியணையில் ஏறியதும், அவர் உதவியனை நாடி சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
5)
டிரம்ப் பதவி ஏற்றவுடன் உள்நாட்டு விவகாரங்களில் டெஸ்லா கார் உற்பத்தி முதலாளி ‘இலன்’ மஸ்க் கையில் விட்டு விட்டு வெளிநாட்டு விவகாரங்களில் அறிவித்த தடால் அறிவிப்பு சர்வாதிகார தோரணையில் அமைந்திருப்பதாக நடு நிலையாளர்கள் கூறினர். அவைகளில் முக்கியமானவை:
6)
1)
தனி பக்கத்து நாடான கனடா இறையாண்மைக்கு மதிப்பு கொடுக்காமல் அது அமெரிக்காவின் 51வது மாநிலம் என்றும் சொன்னார்.
7)
2)
மூன்று வருடமாக தங்களது நாட்டின் சுதந்திரத்திற்கு பாதகமாக படையெடுத்த ருசியாவினை பல இழப்பிற்குப் பின்பு மூச்சு பிடித்து தாங்கிக் கொண்டிருக்கிறது உக்ரைன் நாடு. அதனைப் பார்த்து ரசியா பெரிய நாடு சிறிய நாடான யுக்ரைன் பணிந்து போக வேண்டும் என்றும் சொன்னார். அது மட்டுமா முந்தைய அமெரிக்க அரசு யுக்ரைனுக்கு போருக்காக கொடுத்த 52
ஆயிரம் கோடி ரூபாயினையும் வட்டியுடன் கொடுக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அங்குள்ள மிக முக்கியமான தாதுப் பொருட்களான டைட்டானியம், லிதுலும், யூரனின், கிராபிட், மிக அரிதான மணல் ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
ஆனால் ருசியாவால் பிடிக்கப் பட்ட கிழக்கு யுக்ரைன் பகுதிகளிருந்து அந்த நாடு வெளியேற வேண்டும் என்று சொல்லவில்லையே அது ஏன் என்று நடு நிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது மட்டுமா யுக்ரைன் நாடு தனது நாடு ரசியா ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் ஆசையினை விட்டு விட வேண்டும், யுக்ரைன் அமைதியாக இருக்க அதன் அதிபர் பதவி விலகி தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லுவது அந்த நாட்டின் இறையாண்மைக்கு பாதமான செயலல்லவா?
8)
தான் பதவியேற்பதிக்கு முன்பு ஹமாஸால் கடத்தப் பட்ட இஸ்ராயில் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். ஆனால் இஸ்ராயிலால் பிடித்து வைக்கப் பட்ட 10000 பாலஸ்தீனர்கள் பற்றி வாய் திறக்க வில்லை ஏனென்றால் அவர்கள் பங்காளியல்லவா? அது மட்டுமல்ல காஸா பகுதியினை அமெரிக்க பிடித்து அதனை சுற்றுலா மையமாக்க வேண்டும். அங்கே ரியல் எஸ்டேட் உகந்த இடமாக மாற்ற வேண்டும் என்றார்.
9)
அமெரிக்காவில் பல லட்சங்கள் சம்பாத்தித்து சொந்த ஊரில் சொத்து சுகத்துடன் சொகத்துடன் வாழலாம் என்று ஏமாற்று தரகர்களிடம் வீடு, நிலங்கள் விவிற்று பல லட்சங்கள் கொட்டி பெரிய கனவுடன், குடும்பம், பெற்றோரை மறந்து ஆழ் கடல், காடு, முதலைகள் உள்ள ஆறுகள் ஆகியவற்றினை ஆபத்துடன் கடந்து அமெரிக்காவில் கள்ளத்தனமாக குடியேறிய ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களை கைது செய்து கையில் விலங்கிட்டு, காலில் சங்கிலியால் இணைத்து ராணுவ விமானங்களில், உணவு, தண்ணீர் கூட இல்லாமல் அனுப்பி வைக்கப் பட்ட செயல்களை பஞ்சாப் மாநிலம் புனித ஸ்தலமான அம்ரிஸ்தருக்கு அனுப்பி வைக்கப் பட்டத்தினை தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. தனது நாட்டின் பொருட்களுக்கு வெளிநாடுகளில் வரி விதித்தால் அந்த நாடுகளுக்கு இருவது முதல் ஐம்பது சதவீத வரி விதிக்கப் படும் என்று பய முறுத்தினார்.ஆனால் அவருடைய பாட்சா சீனாவில் பலிக்காமல் பத்து சதவீத வரிதான் விதிக்கப் படும் என்றார்
ஆகவே உலகத்தினையே அழித்து ஆள வேண்டும் என்றவர்களையும், அதிகார மமதையில் மிதந்த ஜப்பான், ஜெர்மன், இத்தாலி, ரோம், பிரவுன் போன்றவர்கள் அழித்து ஒழிக்கப் பட்ட வரலாறுகளினை மதம் பிடித்தவர்கள் தெரிந்து எப்படி முற்றிய நெற்பயிர் தலை தாழ்ந்து மக்களுக்கு பலன் தருகின்றதோ அதேபோன்று நடந்து கொண்டால் உலக நாட்டு மக்கள் நலமாக வாழ் வழி பிறக்குமல்லவா?
No comments:
Post a Comment