Monday, 27 April 2026

நவீன காலத்திலும் மூட நம்பிக்கையா?

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்()

விஞ்ஞான உலகில் விண்வெளியில் மூன்று முறை 608 நாட்கள் பயணம் செய்தும் 62 மணி நேரங்கள் விண்வெளியில் நடந்தும் சாதனை அமெரிக்க சுனிதா வில்லியம் படைத்தும், விளி மண்டலத்தில்(atmospheric) மின்சாரம் தயாரித்தும் சாதனை படைத்த இந்தக் காலத்திலும், சமையல் ஏரி வாயு கிடைக்காத தற்போது எப்படி எரிவாயு தயாரிப்பது என்று யோசித்த ஒடிசா மாநிலத்தினைச் சார்ந்த ஒரு வாலிபர் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சூடு செய்து அதனால் வருகின்ற வாயுவினை ஒரு குழாய் மூலம் சலவை தொழிலாளி பயன் படுத்தும் அயர்ன் பாக்ஸில் செலுத்தி அதில் ரொட்டி  சுடுகின்ற வீடியோவினையும் பகிர்ந்துள்ளார். இவ்வாறு நவீன விஞ்ஞான காலத்திலும், இருண்ட காலத்தில் நடக்கின்ற மூட நம்பிக்கை கொடுமைகளும் இன்றும் மறைய வில்லையே என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

               சென்னை புற நகரில் பீகார் மாநிலத்தினைச் சார்ந்த நால்வர்  வேலை செய்தும், ஒரே இடத்திலும் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் மெலிந்த உடலைக் கொண்டவர். அவர் மற்ற தொழிலாளர்களைப் பார்த்து நீங்கள் மட்டும் உடல் பெருத்துள்ளீர்கள் நான் ஏன் மெலிந்து உள்ளேன் என்று சொல்லியுள்ளார். அதற்கு அவர்கள் நீ எங்களைப் போன்று உடல் பெருமானாக நாங்கள் உனக்கு ஒரு சிகிச்சை செய்கிறோம் என்று சொன்னதும் அவரும் அதற்கு ஒத்துக் கொண்டாராம். வேலை முடிந்து இரவு நேரத்தில் அவரை குப்பற படுக்க வைத்து சைக்கிள் காற்று அடிக்கும் பம்பினால் ஆசன வாயில் காற்று அடித்தார்களாம். அவருடைய வயிறு உப்பி கதறனவுடன்  அவரை உடனே மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்களாம். ஆனால் பரிதாபம் அவர் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து விட்டாராம்.

               உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி உடல் நலிவுற்று இருந்தாளாம். அதற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதிற்குப் பதிலாக ஒரு மாந்திரீகரிடம் பெற்றோர் கூட்டி சென்றார்களாம். அவர் உங்கள் மகளை கட்டிலில் கட்டி புனித கங்கை ஆற்றில் விட்டீர்களானால் அவர் சுகமாக திரும்பி விடுவார் என்று சொன்னாராம். அதனை நம்பி பெற்றோர் கயிற்று கட்டிலில் கட்டி கங்கை ஆற்றில் மிதக்க விட்டார்களாம். மூன்று நாட்கள் சென்று கட்டிலை எடுத்து பார்த்தபோது அந்த சிறுமி இறந்து கிடைத்ததாம். விசாரணையும் நடக்கிறதாக பத்திரிக்கை செய்தி வெளியாகி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

               கேரளாவில் ஒருவருக்கு எந்த வியாபாரம் செய்தாலும் நஷ்டத்தில் நடந்ததாம். அவர் ஒரு மாந்திரீகரிடம் சென்று  ஆலோசனை கேட்டாராம். அந்த மாந்திரீகர் நீங்கள் ஒரு சிறுமியினை பலி கொடுத்தால் உங்கள் வியாபாரம்  ஓகோ என்று நடக்கும் என்றாராம். அதனை நம்பி வீதியில் அலைந்தாராம். ஒரு ஏழு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததினை அறிந்து அதற்கு ஆசை வார்த்தை கூறி சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அதன் தலையினை துண்டித்து வந்து விட்டாராம். குழந்தையினை காணாது தேடிய பெற்றோர் அந்த கொடூர செயலை கண்டு பிடித்து காவல் நிலையம் வரை சென்றதாம்.

               மூட நம்பிக்கை, கல்வி அறிவில்லாத மக்களிடமும், கிராம புறங்களிலும் இன்னும் அதிகமாக உள்ளன. உயிர் பலிகள் மலட்டுத் தன்மை உள்ள பெண்கள் குழந்தை பாக்கியம் தருகிறேன் என்றும், வர்ண பகவானை வேண்டி மழை பொழிய வைக்கிறேன் என்றும், வியாபார நஷ்டத்தினை சரி செய்கிறேன் என்றும், புதையல் எடுக்கிறேன் என்றும் ஆசை காட்டி வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. உத்தர பிரதேசத்தில் மட்டும் 1999லிருந்து 2006 வரை 200 பலியாகி இருக்கின்றார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. 'தயான் பிரதா' என்ற மாந்திரீகம் முறையால்  முகமது நபி ரசூலுல்லாஹ் ஏழாம் நூற்றாண்டில் மக்கா நகரில் ஏழாம் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்த பிறந்த பெண் குழந்தைகள் மரணத்தை தடை செய்தார்கள், அது மட்டுமல்ல பெண்களுக்கு சொத்தில் பங்கு இருக்கின்றது என்றும், பெண்ணை திருமணம் செய்ய மகர் மணமகன்கள் கொடுக்க வேண்டும் என்றும், ஆண்களுக்கு பெண்கள் ஆடையாகவும், பெண்களுக்கு ஆண்கள் ஆடையாகவும் இருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். அது இன்றும் கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது.

          மாந்திரீகம் 'தயான் பிரதா' என்ற நடைமுறைகளை வயதான பெண்கள், விதவைகள், ஏழை பெண்கள் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டி கொடுமைப் படுத்துவதும், கொலை செய்வதும் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 2001லிருந்து 2006 வரை  300பேர்கள் கொலை செய்யப் பட்டும், ஒடிசாவில் 2005லிருந்து 2010வரை 35 பெண்களும் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்ற அறிக்கை சொல்கிறது.

          ‘சதி’ என்ற நடைமுறை கணவர் இறந்ததும் பெண்கள் கணவர் எரியூட்டும் போது தீயில் குதிப்பதோ அல்லது தள்ளப் படுவது என்ற நடைமுறை தடுக்கப் பட்டும், 1987ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ரூப் கன்வார்’ என்ற பெண்ணை அவருடை கணவர் இறந்ததும் வழுக் கட்டாயமாக தள்ளப் பட்டபோது இந்திய மக்கள் கொந்தளித்தார்கள் என்பதினை நீங்களும் படித்திருப்பீர்கள். இன்றும் விதவைகள் சுப காரியங்களில் கலந்து கொள்வது அப சகுனம்  என்றும் அதேபோன்று குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் திருமண வைபங்களில் கலந்து கொள்ளும் பொது முகம் சுளிப்பதும் இன்றும் காணலாம்.

          முட நோய்க்கும், இளம் பிள்ளை வாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்று சொல்லி கழுத்தளவு குழி வெட்டி அவர்களை வைத்து மூடி விடுவார்கள், அவர்கள், வெயில், மழையில் பாதிக்கப் பட்டு வேதனை படுவார்கள். பின்பு அவர்கள் உயிரோடு இருப்பது என்பது குதிரைக் கொம்பு என்றால் ஆச்சரிடயமில்லை. அதனை கர்நாடக அரசு தடை செய்திருக்கிறது. ஆனால் அவைகளை இந்தியா முழுவதும் தடை செய்யத்தான் எந்த சட்டமும் இருப்பதா என்ற கேள்விக்குறி எழும்பியுள்ளது. அதற்கு மாறாக இந்திய தண்டனைச் சட்டம் 302,307, 420, 345பி போன்றவைகள் உள்ளன. The Drugs and Magic Remedies Act 1954 மூலம் தவறான இதுபோன்ற நோய்களை குணமாக்கிறேன் என்று விளம்பரங்களை தடை செய்கிறது. அரசியலைப்பு சட்டம் 51(A ) ன் படி மக்களிடையே மூட நம்பிக்கைகளுக்கு விழிப்புணர்வு செய்கிறது. பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் 'Witch Practices Prevention Act' 1999/2000 மாந்திரிகம், மந்திரம் செய்யும் முறையினை தடை செய்கிறது.

          முஸ்லிம் முஃதிகளில் சிலர் முரீது கொடுக்கின்றேன் என்றும், அந்தி மறையும் நேரத்தில் குழந்தைகளுக்கு ஓதி ஊதுகிறேன் என்றும் ஏமாற்று வேளைகளில் ஈடுபடுகின்றனர். முரீது கொடுப்பவர் எல்லாம் வல்ல இறைவனில்லை என்று மக்கள் உணர வேண்டும், அதேபோன்று மனிதன் உயிர் வாழ ஆக்சிஜென் தேவை வாய், மூக்கு வழியே காற்றை சுவாசிக்கிறோம், அதே வழியில் கார்பன்டை ஆக்ஸிசிட் என்ற அசுத்த காற்றை வெளியிடுகிறோம், அதனையே வாய் வழியாக நோய் பாதிக்கப் பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு ஊதலாமா என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? தற்போது இளைஞர்கள் சிலர் மந்திரித்து கையில், காலில் கருப்பு கயிறு கட்டியும், கழுத்தில் கருப்பு கயிறில் செப்பு தாயத்தும் தொங்க விடும் பழக்கம் முஸ்லிம்களிடையே தெரிகிறது. அது வலது சாரி அமைப்பினர் கைகளில் காவி கயிறு, நாடாக்கள் அணிவதினை பார்த்து அணிந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் எந்த தாயத்தும், கயிறும் நோயினை குணமாக்காது. மாறாக சில ஏமாற்று பேர்வழிகளால் தவறான ஆலோசனையின் பேரிலே தான் அது போன்ற தவறான பழக்க வழக்கங்கள் ஏற்பட்டுள்ளதினை எடுத்துக் காட்டுகிறதல்லவா?

          நீங்கள் கேட்கலாம் உலகில் வேறெங்கும் மூட பழக்கங்கள் இல்லையா என்று. உலகில் உள்ள பண்பாடுகளின் படி மாறுகின்றது. உதாரணத்திற்கு ஒருவர் வெளியில் போகும்போது கறுப்புப் பூனை குறுக்கே வந்தாலும், நாவிதர் வந்தாலும், கண்ணாடி உடைந்தாலும், சிகப்பு மையில் எழுதினாலும், வீட்டு என் 13 என்றாலும், இரவில் விசில் ஊதினாலும்,  கைகள் அரித்தாலும், ரூபாய், நாணயங்கள் மீது மிதித்தாலும் அப சகுனம் என்றும் சொல்லும் நாடுகளும் உண்டு. சதி போன்று ஜப்பானில் மன்னர் இறந்தால் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட கத்திகளால் வயிற்றினை கீரீக் கொண்டு உயிர் மாய்ப்பதும் காலப் போக்கில் மறைந்து விட்டன.

          இந்தியாவில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடும் அறிவு சார்ந்தவர்களை கண்டு பிடித்து வேட்டையாடும் வலது சாரி கும்பலுக்கு பலர் வன் முறைகளுக்கும், கொல்லப் பட்டுமில்லனர்.

          மஹாராஷ்டிராவினைச் சார்ந்த ‘நாரென்ற டோபால்கர்’ அவர்கள் (Maharastra Andharpradhaa Nirmola Samiti} மகாராஷ்டிரா அந்த பிரதா நிர்மூல சமிதி என்ற அமைப்பினைச் சார்ந்தவர்கள் அவர் இந்து மதத்தினவர்களுக்கு எதிரானவர் என்று 30,8.2013 அன்று பூனாவில் இருக்கும்போது சுட்டுக் கொல்லப் பட்டார். அதேபோன்று தான் கோவிந்து பன்சாரே 2015ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப் பட்டார். கர்நாடகாவினைச் சார்ந்த எம்.எம்.கல்புர்கி என்ற முன்னாள் துணை வேந்தர் 2015ம் ஆண்டு கொல்லப் பட்டார். 2017ம் ஆண்டு  பெங்களூரைச் சார்ந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஸ் வீட்டில் இருந்தபோது கொல்லப் பட்டார்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர்களை வலது சாரி கும்பல் ஒரு 'ஹிட் லிஸ்ட்' அதாவது 'சனால்'  என்று கொல்லப் பட வேண்டியவர்கள் பட்டியல் தயார்  செய்திருந்தார்களாம். அதற்கு பயந்து தான் 'இடமுறுக்கி' என்ற அறிஞர் விரட்டப் பட். டு பின்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

 

ஆனால் தமிழ்நாட்டின் பகலவன், பகுத்தறிவு வெண்தாடி வேந்தர் என்று அழைக்கப் படும் பெரியார் ராமசாமி அவர்கள் தைரியமாக மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தன் மீது செருப்பு வீசப் பட்டாலும் தனது மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை வயதான காலத்திலும், போகுமிடமெல்லாம் மூத்திரப் பையினை சுமந்து கொண்டே பிரசாரம் செய்து, அவருக்குப் பின்னால் ஒரு பகுத்தறிவு படையினையே சாகும்போது விட்டுச் சென்றது இன்றும் வெள்ளிடை மலையே.