Wednesday, 24 February 2016

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஒ)

சென்ற கட்டுரையில் 'உறவுகள்  இணைப்புப்   பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?' என்ற கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில் முஸ்லிம் இயக்க தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களானாலும் மனம் விட்டுப் பேசி கலந்துரையாடல் செய்வதில்லையே என்ற ஆதங்கத்தினை தெரியப்  படுத்தியிருந்தேன். அந்தக் கட்டுரைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஒத்தக் கருத்துக்களையும்  தெரியப் படுத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஒரு உண்மை சம்பவத்தினை சமூதாய நல்லிணக்கத்திற்காக எடுத்துக் காட்டுகிறேன்
மேற்காசியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பாலஸ்தீன மக்களிடையே இஸ்ரேயில்  என்ற நாட்டினை மேற்கத்திய வல்லரசு நாடுகள் உருவாக்கி, மேற்காசிய மக்களுக்கு சொல்லவென்னா துன்பத்தினை ஏற்படுத்தி வருவதுடன், எங்கே பாலஸ்தீன நாடே ஒன்று இல்லாமல் போய் விடுமோ என்ற அடக்குமுறை நிலை உள்ளதினை பத்திரிக்கை, எலக்ரானிக் மீடியாவினைத் திறந்தால் படித்தும், பார்த்தும் இருப்பீர்கள்.
பாலஸ்தீன மண்ணில் நடக்கும் வன்முறையால் வேறுபட்டிருக்கும் இஸ்ரேயில, பாலஸ்தீனர் மனங்களை இணைக்க ஒரு புது வழியினை வட இஸ்ரேயில் கிபார் விட்கின் நகரில் ஹோட்டல் நடத்தும் கோபி சபிரிர் நினைத்தார். அதன் பயனாக எழுந்தது தான் இந்த டின்னெர் டிப்ளமசி. அரேபியர் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையினைச் சார்ந்தது தான் ஹம்முஸ் என்று அரேபியா சென்றவர்களுக்குத் தெரியும். அதாவது சென்னா பயறு, எள்ளு,  வெள்ளைப் பூடு நசுக்கி பொடியாக்கி, எலும்பிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்து, சிறிது உப்பினைத் தூவி செய்யப் படும் களி என்றால் சரியாக இருக்கும். அராபியருக்கு சுவைதரும் உணவாகக் கருதப் படுகிறது. அதனை இஸ்ரேயிலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனை அறிந்த அந்த ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களைக் கவர, தன் உணவகத்தில் ஒரே மேஜையில் அமர்ந்து ஹம்முஸ் சாப்பிடும் பாலஸ்தீனருக்கும், இஸ்ரேயிலருக்கும் தாங்கள் சாப்பிட்ட உணவின் விலையில் 50 சதவீதம் மலிவு விலையில் தரப்படும் என்று அறிவிப்பு செய்தாரே பாருங்கள், அவர் ஹோட்டலில் ஈ மொயத்ததுபோல இஸ்ரேயிலரும், பாலஸ்தீனர்களும் மொய்க்க ஆரம்பித்து வியாபாரம் ஆகோ, ஓகோ என்று நடக்கின்றதாம்.
ஜும்மா தொழுகைக்குச் செல்லும்போது தொழுகை ஆரம்பிக்கும் முன்பு இமாம், தொழுகைக்கு வந்தவர்களைப் பார்த்து நேராகவும், நெருக்கமாகவும் நில்லுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வான் என்று கூறுவார். அது ஏன் என்று நினைப்பீர்கள்? உங்களில் ஏழை, பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன், வெள்ளை-கருப்பு நிறத்தவன் என்ற வேறுபாடு வராமல் இருப்பதிற்காகவே இதனைச் சொல்லுவார். சில சமயங்களில் நம்மைப் பயம் முருத்துவதிற்காக இடை விட்டு நின்றால் ஷைத்தான் நுழைந்து விடுவான் என்றும் சொல்லுவார். அது எந்த ஷைத்தானும் இல்லை, மாறாக மனதிற்குள் வேறுபாடு சுவர் எழுப்பும் ஷைத்தானைத் தான் கூறுவார்.


ஆகவே இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும், தொண்டர்களும் இன்ப, துன்பங்களில் ஒருவருக்கொருவர் கலந்துகொண்டு, மனம் விட்டு பேசிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், உங்கள் மனக் கதவைத் திறங்கள், உங்கள் நல் வாழ்விற்கு இறைவன் வழிவிடுவான் என்று கூறிக் கொள்கிறேன்!

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?

2016 மே மாத முதல் வாரத்திற்குள்ளாக தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி புது அரசு பற்றி அறிவிப்பு வரவேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது.
வழக்கம் போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பெயரளவு உள்ள அரசியல் அமைப்புகள் என்று பிரிந்து பல் வேறு நிலைப்பாட்டினை எடுக்கும் என எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம். அது ஒருபுறம் இருக்க;

இன்றைய இந்தியாவில் அரசுக்கு எதிராகப் பேசும் தலித் இனத்தவர் மற்றும் மைனாரிட்டி சமூகத்தினரை தீவிர வாத அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று முத்திரை குத்தும் அச்ச நிலை உள்ளது. அது மாணவர்கள் ஆனாலும் சரியே! அப்படிப் பாதிக்கப் பட்டவர்கள் நீதி மன்றங்களை  அணுகும்போது  குண்டர்களால் தாக்கப் படும் நிலையினை தொலைக் காட்சி நிறுவனங்கள் படம் பிடித்து காட்டுவது அதிர்ச்சியினை அளிக்கின்றது என்று பல்வேறு பத்திரிக்கைகள் கூறுகின்றன.

தமிழக முஸ்லிம் தலைவர்கள் சக  இயக்கத் தலைவர்களுடன் சுமூக உறவு காண்பது அரிதாக இருப்பது  வேதனையாக உள்ளது. தலை எப்படியோ அப்படியே தொண்டர்களும் இருக்கின்றார்கள் என்ற பரிதாப நிலை.

இஸ்லாம் ஒரு சகோதர இயக்கம் என்று மார் தட்டும் நாம், சகோதரர்களுக்குள்ளேயே வெட்டு, குத்து என்ற நிலை சமீபத்தில் மண்ணடி பகுதியில் கொடி ஏற்றும் பிரச்சனையில் வெடித்து, காவல் நிலையம் வரை சென்று, வட சென்னையே சிரித்தது. முஸ்லிம் அல்லாத சமூகத்தினரும் 'ஒற்றுமை என்னும் பாசக் கயிரினைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள' என்று சொல்லும் மார்க்கத் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி, மோதிக் கொள்கிறார்கள் என்று வட சென்னையில் பேசப் பட்டது அனைவருக்கும் தெரியும்.
அதற்குக் காரணம் இயக்கத் தலைவர்களிடையே யார் பெரியவர், யார் பேசுவதிற்கு அதிகம் கூட்டம் சேருகிறது. நானா, நீயா என்ற ஈகோ(தலைக்கனம்) இருப்பது தான் என்றால் மிகையாகாது. அந்தத் தலை, தலைக்குள் இருக்கும் அறிவு  எல்லாம் வல்ல அல்லாஹ் அருளால் வழங்கப் பட்டது, அவன் அருளிய தலையில் கனம் கூடாது. அந்தக் கனத்தினை இறைவனுக்கு சஜ்தா செய்தால் இறக்கி  விடும். தலைவர்களுக்கிடையே ஒரு புன் முறுவல், பாசம், பற்று மருந்துக்குக் கூட அரவே இல்லையே அது ஏன்? அவர்கள் உண்மையான உம்மத்தாக இருக்க முடியுமா?
உங்களுக்கெல்லாம் தெரியும் மேற்காசிய நாடுகளில் முஸ்லிம் நாடுகளில் போர்கள் நடக்கின்றன. அவைகளில் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வரும் மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய யூனியன் குடியமர்த்துகிறது. அமெரிக்காவும் அவர்களை குடியமர்த்த முன் வந்துள்ளது. அதற்கு அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தயார் நிலையில் உள்ள 'டிரம்ப்' என்பவர் முஸ்லிம்களை அமெரிக்காவில் குடியமர்த்தக் கூடாது என்று கூக்கிரலிடுகிறார். அதனை அறிந்த கத்தோலிக கிருத்துவ மத குரு போப் பிரான்சிஸ் அவர்கள் 18.2.2016 அன்று ரோமில் பேசும்போது 'மனித உள்ளங்களில் பிரிவை எற்படுத்தி சுவர் எழுப்புவன் உண்மையான கிருத்துவனாக இருக்க முடியாது'. 'மாறாக  உள்ளங்களை பாலங்கள் மூலம் இணைப்பவனே உண்மையான கிருத்துவனாக இருக்க முடியும்' என்று நெற்றியில் அடித்தது போல சொல்லியுள்ளார்.
சகோதர மதமான கிருத்துவ மத குரு போப் அவர்களே மனங்களை பாலங்கள் மூலம் இணைக்கச் சொல்லும் போது, ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று போதித்ததினை  இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களும், அதன் தொண்டர்களும் மறுக்கலாமா?

ஆகவே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று பேசி வரும் சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்ற கருத்தோடு   நின்று விடாமல், தேர்தலுக்குப் பின்னும் மனம் விட்டுப் பேசி சகோதரப் பாசத்துடன் பழக வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் சரியா?





Saturday, 20 February 2016

திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி;ஐ.பீ.எஸ்(ஓ)
உலகில் பிறந்த ஒவ்வொரு மானிடனுக்கும்  ஒரு துணை என்ற மண வாழ்வு நீதிக்குப் புறம்பாக வாழும் மனிதர்களின் சறுக்குகள் பற்றி சமீப கால செய்திகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்பதுடன், மண வாழ்வின் மகத்துவத்தினையும் சற்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்..
அமெரிக்காவினைச் சார்ந்த ‘டைமீனிக்’ என்ற பெண் 1973ம் வருடம் வருங்கால போப்பான போலந்து நாட்டின் கார்டினல் ‘கரோட்டினை’ தத்துவம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தமாக சந்தித்து ஒரு புத்தகம் எழுதுவதிற்காக போலந்து நாட்டினுக்குச் சென்று கிறுத்துவ மதக் குருவினை சந்தித்தார். அது ஒரு காலக் கட்டத்தில் மிகவும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், அதுவே ஒரு காலக் கட்டத்தில் கார்டினல் துறவரத்தினை விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு சென்று விடலாம் என்று தோன்றியதாகவும், போலந்து தேசிய நூலகத்தில் பாதுகாக்கப் பட்ட கடித போக்குவரத்தில் இருந்து புலனாகிறது என்று பி.பி.சி. நிறுவன செய்தி குறிப்பு சமீபத்தில் வெளியாக்கி உள்ளது. அந்தக் கார்டினல் தான் பிற்காலத்தில் போப் ஜான் 2 என்று அழைக்கப் பட்டார்.
இது ஒருபுறம் இருக்க அமெரிக்க, ஜெர்மனி, ஹாலந்து,ஆஸ்ட்ரிய, ஐயர்லாந்து  போன்ற நாடுகளில் பாதிரிமார்கள் தேவாலயத்தில் சாமி-கோரஸ் பாடும் சின்னஞ்சிறு பாலகர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை 14.3.2010 தேதியிட்ட ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டு மக்கள் கிறித்துவ பாதிரிமார்கள் தேவாலயங்களில் சேவையாற்ற சென்ற சிறுவர்களை பாலியல் குற்றத்திற்கு தள்ளியது கண்டு கொதித்தெழுந்து  அந்த நாட்டு மக்களின் கோபாதாபங்களை 12.3.2010 அன்று ஜெர்மன் நாட்டு பிஷப்புகள் போப் ‘பெண்டிக்கினை’ச் சந்தித்து எடுத்துரைத்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. பல்வேறு மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கை சட்டப் படி செல்லும் என்று கூறப் பட்ட நிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டிலும் இது சம்பந்தமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இ.த.ச  377( கிரிமினல் சட்டத்தினை) பரிசீலித்து அறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உத்திரவிட்ட   செய்தி வந்துள்ளது பற்றி உங்களுக்குத் தெரியும்.

அல் குரான் அத்தியாயம் 29:28:29 அல் அன் கபூத்தில், 'லூத்தை நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். அவர் தம் சமூகத்தாரிடம் மானக் கேடான ஒரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்கள். உலகத்தாரில் எவரும் அதைகண்டு உங்களை முந்தவில்லை, நீங்கள் பெண்களை விட்டு ஆண்களிடம் மோகம் கொண்டவர்களாக வருகின்றீர்களா' என்று கூறி அந்தக் கூட்டத்தினருக்கு சொல்ல, அதனை அவர்கள் உதாசீனப் படுத்திய நேரத்தில், அந்த சமூகத்தினவருக்கு தாங்க முடியாத மவேதனையைக் கொடுத்தான் எல்லாம் வல்ல அல்லாஹ்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உலக குத்துச் சண்டை சாம்பியனும், வருங்கால ஜனாதிபதியாக கனவில் இருப்பவருமான மேனி பக்யு 16.2.2016 அன்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'மனிதனும், மனிதனும், பெண்ணும், பெண்ணும் பாலின சேர்க்கையில் ஈடுபடுவது மிருகத்தினை விட கேவலமானது. எந்த மிருகமாவது அதே இனத்துடன் பாலினத்தில் ஈடுபடுகின்றதா, பின் ஏன் மனிதன் அதனைப் பற்றி பேசவேண்டும், அந்தக் கேவலமான செயலில் ஈடுபட வேண்டும். எந்த மனிதன்  தன் இன நபருடன் இன்பத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் மிருகத்தினைவிட கேவலமானவரில்லையா' என்று கூறியிருப்பது அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது.
மனிதர்களுக்கு திருமணம் ஏன் அவசியம் என்பதினை அல் குரான் அந் நூரில்(24:32) தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான் என்பது ஈமான் உள்ளவர்களுக்குப் புரியும்.
திருமண வாழ்வு ஒரு மனிதனை புனிதனாக்கிறது. திருமண வாழ்க்கை அவனை முழு மனிதனாக்குகிறது.
திருமண வாழ்வு என்பது வாழ்க்கையில் மனிதர்களை தன்னல வாதியாகவும், சுய இன்பம் கொள்பவர்களாகவும் இருப்பதிலிருந்து தடுக்கும் ஒரு தடுப்பு அணை. மண வாழ்வு என்பது ஒரு மனிதன் தன் மனைவியுடன் உனக்கு நான், எனக்கு நீ என்று செய்து கொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம். மனிதன் அமைதி பெற்று இளைப்பாறும் பசுமையாக பெண் இருக்கிறாள். இன்பத்தினைத் தரும் அதே நேரம், கணவனுக்குத் துன்பம் வரும்போது தனது எல்லா சுகத்தினையும்  அவனுக்காக தியாகம் செய்து அவனை பாதுகாக்கும் பெட்டகமாகிறாள் என்பது கண்மணி ரசூலல்லாஹ் அவர்களுக்கு கதிஜாப் பிராட்டியார்(ரழி) அவர்கள் துன்பம் வரும்போது காப்பாற்றியது பற்றி அனைவரும் படித்திருக்கின்றோம்.
திருமணம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள பாசப் பிணைப்பினை ஏற்படுத்தும் சமூக அமைப்பாகும்.
அந்த சமூக அமைப்பின் விரிசல் அந்த சமூக அமைப்பினையே தகர்த்து விடும். திருமணம் என்பது மேலை நாடுகளில் அவை ஒரு பாலின உணர்ச்சி வசப்படுகிற சடங்காகவே உள்ளது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் திருமணம் ஒரு சிவில் சட்டத்திற்குள் அடங்குவதில்லை. மாறாக திருமணம் இஸ்லாத்தில் உணர்ச்சிகரமான, உடல் ரீதியான, மத சார்பான ஒருங்கிணைப்பாகும். உடல் ரீதியான ஒருங்கிணைப்பு என்பது மணமக்கள் தங்களுக்கென்று வருங்கால சந்ததிகளான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாகும்.
கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ ஞானி அகஸ்டின், 'திருமணம் என்பது சமூக, நல்லிணக்க,  நல்லொழுக்கம் ஏற்படுத்தும் ஓர் அடித்தளமாகும்’ என்று கூறுகிறார்.
திருமணம் ஒரு உரிமை மட்டுமல்ல. மாறாக ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் பொறுப்பாகும், இணைப்புப் பாலமாகும்.
ஆமாம் இவையெல்லாம் தெரிந்ததும், கேள்விப் பட்டதும் தானே பின் ஏன் இதனைச் சொல்கிறார் என்று உங்களுக்குக் கேள்வி கேட்கத் தோன்றுவது இயற்கையே!

சமீப கால திருமணங்கள் நானா, நீயா என்று போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர செலவு செய்து திருமணம் விமரிசையாக செய்து, சென்னையினை நவம்பர்-டிசெம்பர், 2015ல் புரட்டியெடுத்த அடைமழை ஓய்ந்த பின்புபோல திருமணம் முடிந்தாலும் மணமகள், மணமகன் வீட்டிற்கு சென்ற சில மாதங்களிலேயே தாய் வீட்டிற்கு அழுகையும், பெட்டியும் கையுமாக திரும்பும் செய்திகள் எங்கே சமூதாய கட்டுக் கோப்பினை குழைத்து விடுமோ என்று பயமாக இருப்பதினால் நான் மேல்கோள் காட்டுகின்றேன். முன்பெல்லாம் மனைவியினை விட்டுவிட்டு பர்மா, மலேசியா, ஸ்ரீலங்கா போய் இரண்டு அல்லது மூன்று வருடம் சென்று மனைவியினைப் பார்க்கும் காலம் கரை ஏறிவிட்டது. அப்போது கூட கண்டதே கணவன், கொண்டதே கோலம் என்று எப்போது கணவன் வருவான் என்று காத்திருக்கும் காலம் மலையேறி விட்டது. இப்போது கணவன் அருகில் இருக்கும் போதே கணவன்-மனைவிக்கும், மனைவி-மாமியார்-நாத்தனார் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து வாழும் பெண்களை, ஆண்களை நாம் காணாமல் இருக்க முடியவில்லையல்லவா?
அது ஏன்?
!) திருமணம் நடக்கும்போது நாம் கவனம் செலுத்துவது ஆடம்பர உடைகள், ஆபரண ங்கள், சுவைமிகு உணவு வகைகள், கேளிக்கைகள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகின்றோம். அரேபியால் உள்ளது போல திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகள் ஒத்தக் கருத்துடையோராக்க இரண்டு வீட்டார் முன்னிலையில் கவுன்சிலிங் செய்து நல் போதனைகள் செய்வதில்லை.
2) திருமணம் செய்யும் போது எவ்வாறு இரு வீட்டாரும் இனணந்து வேளைகளில் ஈடுபட்டூமோ அதனை சிறிது சின்னஞ்சிறு மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த கட்டிடம் ஆடாமல், அசையாமல் இருக்க அடித்தளம் போடுவதில்லை.
3) உறவினரும் மூக்குப் பிடிக்க, நா சுவைக்க விருந்து சாப்பிட்ட கையேடு அந்த மணமக்கள் சந்தோச வாழ்க்கை நடத்துகின்றார்களா என்று பார்ப்பதில்லை, மாறாக மணமக்களுக்குள் வேற்றுமை வந்தால் அதனை ஊதி பெரிதாக்கி இன்னொரு விருந்து சாப்பிடமாட்டோமா என்று என்னும் மனநிலை தற்போது இருக்கின்றது.
4) ஜமாத்தாரும் திருமண தினத்தில் பதிவேட்டில் பதியும் அளவிற்கு நின்றுவிட்டு, மன முறிவு பற்றிய வழக்குகள் வரும்போது, அவர்களுக்கு பிரிவு நோட்டிஸ் கொடுக்கும் லெட்டெர் பேடுகளாக இருப்பதினைக் காண்பது வேதனை அளிக்கின்றது.
5) நவீன டி.வி. சீரியல்கள், நெட், செல் போன், சினிமா மோகம் நிறைய இளசுகளின் மனதுகளில் நச்சு விதிகளை விதைத்து விடுகின்றன. அவைகளைப் போக்க வயதான குடும்பத்தினர் முயற்சி எடுக்காது, அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து சிரித்து மகிழ்வது வீட்டுக்கு மட்டுமன்றி,சமூகத்திற்கே வேட்டு வைக்கும் என்று எண்ணுவதில்லை.
6)  சில அமைப்புகள் பெற்றோர் சம்பந்தம் பெறாமல் வரும் ஆண்களையும், பெண்களையும் புரட்சி செய்கின்றோம் என்று திருமணம் செய்து வைப்பது அவர்களை பெற்றோர், உற்றார், உறவினரை விட்டு ஒதுக்கித் தள்ளப் பட்டு, இளம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வரும்போது அவர்களுக்கு ஆலோசனை சொல்லக் கூட நாதியில்லா பரிதாப நிலையினைக் காண முடிகின்றது.
7) மேற்கூறிய நிலை தொடருமேயானால் வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாழாத பெண் மட்டுமல்ல, மண வாழ்வு முறிந்து தனியே வாழும் ஆண்களும் இருக்கும் நிலை வருமல்லவா?


ஆகவே மண வாழ்வு முறியாமல், நமது சமூக அமைப்பினை பலப் படுத்த மார்க்க அறிஞர்கள் கூடிய விரைவில் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 7 January 2016

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!



டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி;ஐ.பீ.எஸ் (ஓ)
பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பூமியில் உள்ளோர் மீது கருணைக் காட்டுங்கள், வானத்தில் உள்ள அல்லாஹ் உங்களுக்கு கருணைக் காட்டுவான்'(முஹ்ஜமுத் தப்ரானி)
அது போன்ற கருணையினை உத்திரப் பிரதேச ‘ரே பரேலி’  நகரில் வெளி உலக வெளிச்சத்தினைக் காணாது வெங்கொடுமை சிறையில் வாடிய 15 முஸ்லிம் அல்லாத கைதிகளை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள் இஸ்லாமிய இளைஞர்கள்.
சிறையில் வசதியுள்ளவர்களின் வாழ்க்கையில் சக்கரைப் பொங்கலாகவும், வசதியில்லாதவர் வாழ்வில் நொந்து நூலான வாழ்வாகவும் அமைந்திருப்பதினை நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள். சிலருக்கு சிறை வாசம் மாமியார் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிட்டது போலாகவும் இருக்கும். ஆனால் ரே பரேலி நகரின் சிறையில் சிறு வழக்குகளில் சம்பத்தப் பட்டு இருந்த 15 ஹிந்து சிறைவாசிகள் தங்கள் தண்டனைக் காலத்தினை முடித்து விட்டாலும், தங்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட அபராதத்  தொகையினை கட்ட முடியாமல் சிறையில் வாடியதினை அறிந்த ஒரு தன்னார்வ முஸ்லிம் இளைஞர் அமைப்பினர் அந்த 15 சிறைவாசிகளும் கட்ட வேண்டிய அபராதத் தொகையான ரூபாய் 50,000/ த்தினை வசூல் செய்து அந்தப் பணத்தினை அபராதமாக 2015 ஜூன் மாதம் செலுத்தி வெளிக் கொணர்ந்தனர். அந்தக் கைதிகள் சிறை வாசலை விட்டு வெளியேறும் போது, அந்த முயற்சியில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை கண்ணீர் மல்க நெஞ்சோடு கட்டியணைத்து தங்களது நன்றியினை சொன்னதும் தான் தாமதம், அந்த இளைஞர்கள் சிறை வாசிகளிடம் அந்த நன்றி எங்கள் அல்லாஹ்விற்கே தகும் என்றார்களாம் பாருங்களேன்!


தானத்தில் சிறந்தது அண்ண தானம்:
அன்றாடம் உண்பதிற்கு உணவில்லாமல் அல்லல் படும் பல மக்களை நாம் காண்கின்றோம். அதே போன்று உ.பி. மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிற்பங்கள் அமைந்த அஜந்தா-எல்லோரா குகைகள் கொண்ட நகரம் ஔரங்கதாபாத் ஆகும். அந்த நகரத்தில் ஒரு வாய் உணவிற்குக் கூட தாளம் போடும், கட்டிய கைகளும், ஒட்டிய  வயிர்களும் கொண்டு முடங்கிக் கிடக்கும் முஸ்லிம்களைக் கண்டு, 'ஹாருன் இஸ்லாமிக் செண்டெர்' நடத்தும் யூசுப் முகாதி வேதனைப் பட்டார். உடனே தன் மனைவி கௌசர், திருமணமான தன் 4 சகோதரிகளிடம் பசி என்ற ஆராப் பிணிப் போக்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் பயனாக டிசெம்பர் , 2015ல் ஆரம்பிக்கப் பட்டது தான், 'ரொட்டி வங்கி'.
அந்த வங்கியில் 250 உறுப்பினர்கள் இது வரை சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தனித்தனியே ஒரு உறுப்பினர் எண் வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இரண்டு ரொட்டி, அத்துடன் சைவ அல்லது அசைவ கூட்டு கொடுக்க வேண்டும். வங்கியின் அலுவல் நேரம் காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. அப்படிக் கொடுக்கப் படும் உணவின் தன்மை ஆராயப் படும். அதன் பின்பு ஏழை எளிய மக்களுக்கு ஒரு தூக்குப் பையில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் வேறுபாடு இல்லாமல் கொடுக்கப் படும். 'ஆனால் நிச்சயமாக அந்தப் பையில் இங்கு உள்ள இலவச  பைகளில் உள்ளது போன்று எந்தப் படமும் இல்லை என்று நம்புங்கள்'.
இந்த வங்கியில் 700 உணவுப் பொட்டலங்களை சேகரித்து வைக்கக் கூடிய குளிர் சாதனப் பெட்டி உள்ளது. இந்த வங்கியின் குறுகிய கால  சிறப்பினை அறிந்த முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர் விசேச நிகழ்ச்சியின் போது தயாரிக்கப் படும் உணவில் ஒரு பங்கினை இந்த வங்கியினுக்கு வழங்கி விடுகின்றனர். அதனை அறிந்து சில உணவு விடுதிகளும் தங்கள் விடுதியில் மிஞ்சிய உணவினை இந்த வங்கியினுக்கு வழங்குகின்றனர். இது போன்ற உதவியினால் கணவனால் கைவிடப் பட்ட, விதவைப் பெண்கள் பலர் பயன் படுவதாக யூசுப் அவர்களின் மனைவி கௌசர் கூறுகிறார். யூசுப் நடத்தும் , 'ஹாருன் நடத்தும் இஸ்லாமிக் செண்டரில் பயிலும் 2000 மாணவிகள் தங்களோடு படிக்கும் மாணவிகள் உணவு இல்லாதவர்களுக்கு மத வேறு பாடு இல்லாமல் உணவு எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வுலகத்தினை அல்லாஹ் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்பித்து மனிதர்களின் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப விசாரணை நடத்துவான். நன்மை, தீமைகளுக்கு ஏற்ப கூலியும் வழங்குவான் என்று இறை நம்பிக்கையாளர்களுக்குத் தெரியும். நாத்தீகர்கள் நம்புவதில்லை என்பதினை ஒதுக்கி விடுவோம். அல்லாஹ்  அப்படிக் கேட்கப் படும் கேள்விகளில் ஒன்றாக எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது; 'மானிடனே உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவு அளிக்க மறுத்து விட்டாயே' என்று கேட்பானாம் அல்லாஹ். அப்போது மனிதன், 'நீயே அகிலத்தையும் படித்துப் பராமரிப்பவனாக இருக்கின்றாய், நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?' என்று மனிதன் கூறுவான். அப்போது இறைவன், 'என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்தபோது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? என்று கேட்பானாம். மேலும் எல்லா  வல்ல நாயன் கூறுவானாம், 'நீ அவனுக்கு புசித்திருந்தால் அங்கேயே என்னைக் கண்டிருப்பாய்' என்றும் கூறுவானாம்.
மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம் என்பது இந்த விசாரணை முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாமே!


Sunday, 20 December 2015

தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பி.எச்டி; ஐ.பீ.எஸ்(ஓ)
தமிழகத்தில் 2015 நவம்பர் 14ல் பிடித்த வட கிழக்கு அடை மழை டிசம்பர் 11 வரை நீடித்தது மட்டுமல்லாமல், பள்ளி  செல்லாமல் இருந்த பிள்ளைகள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் மக்களும் 'ரெயின், ரெயின் கோ எவே' அதாவது ,'மழையே, மழையே நீ எப்போது போவாய்' என்று பாட்டுப் படிக்கும் அளவிற்கு, அண்டை மாநில அரசுகள் தண்ணீர் தரமறுத்து தரிசு நிலமான தமிழகத்தில்   சொல்லவென்னா துயரத்தினையும், துன்பத்தினையும் ஏற்படுத்தி விட்டது என்றால் மிகையாகாது
உலகத்தில் கி.மு.2500லிருந்து கி.மு.2300க்குள் அதாவது கி.மு.2348ம் ஆண்டு இறை தூதர் நோவா அல்லது நூஹு என்று அழைக்கப் படும் நேசரை அங்குள்ள மக்கள் துன்புறுத்தியதால் இறைவன் கட்டளைப் படி ஒரு மரக் கப்பலை தயார் செய்து தன் அடியார்கள், வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றினை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் போது, துரத்தி வந்த எதிரிகள் கடல் பொங்கி மூழ்கடிக்கப் பட்டதாக வரலாறு. அப்போது ஏற்பட்ட மாற்றத்தால் தான் உலகின் உயரமான எவரெஸ்ட் மலை, அண்டார்டிகா, ஆல்ப் மலை போன்றவை கடலிலிருந்து மேலே வந்ததாக கூறப் படுகிறது.
20ஆம் நூற்றாண்டு, மற்றும் இந்த நூற்றாண்டில் நடந்த வெள்ளங்களில் முக்கியமாக கருதப் படுவது 1931 ஆம் ஆண்டு சீனாவின் வெள்ளமாகும். அந்த வெள்ளம் 1,04,000 மக்களை பலி வாங்கியது.
2) 2004 ஆம் ஆண்டு ஆசியா கண்டத்தில் பல நகரங்களை புரட்டிப் போட்டு 2,80,000 மக்களை காவு கண்டது சுனாமி ஆகும்.
3) 2005 ஆண்டு அரேபியக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாக்கத்தால் மும்பை நகரம் ஸ்தம்பித்து வெள்ளத்தில் 1094 பேர்கள் உயிரிழின்தனர்.
4) ஜப்பான் நாட்டில் 2011 மார்ச் மாதத்தில் புகிஷிமா தீவு நகரத்தில் ஏற்பட்ட பூகம்பும், பெரு வெள்ளமும் 15,893 உயிர்களை பலி வாங்கியது.
5) பூனா நகரில் பைரோபா நல்லா, வகதி நல்லா, வகோலி நல்லா, ராம் நதி, அம்பில் ஓடை, நந்துகி போன்ற  ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் மறைக்கப் பட்டு 2010, 2013 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் சேதத்தினை உண்டாக்கியது.
2015 ஆண்டு நவம்பர் 13,14 தேதிகளில் ஆரம்பித்த அடை மழை டிசம்பர் 11 வரை வெளுத்து வாங்கி செம்பரம்பாக்கம், பூண்டி,புழல், போரூர் போன்ற ஏரிகள் நிரம்பி 1918 ஆண்டு108.8 செ.மீ பெய்த மழையின் அளவினை விட 119.73 செ.மீ தாண்டியது.
2015 ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி மழை பெய்த பொது 30, 000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றாலும், நீர் வரத்து அதிகமானதாக இருந்ததால் ஒரு லட்சம் கன அடியினைத் தாண்டியிருக்கும் எனக் கூறப் படுகிறது. அப்படி திறந்து விடப் பட்ட நீர் அடையார், பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு நிறைந்து தென் சென்னை பகுதிகளான அடையாறு, வேளச்சேரி, நீலாங்கரை, பெரும்பாக்கம், தாம்பரம்,பல்லாவரம், வளசரம் பாக்கம், விருகம் பாக்கம், போரூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் திறந்து விட்டததினால் மாதவரம், அம்பத்தூர், ஆவடி, முகப்பையூர், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, நேத்தாஜி நகர் போன்றவை பாதிக்கப் பட்டு மக்கள் சொல்லவொன்னா துன்பம் அனுபவித்தனர். ஏழை, பணக்காரன், குடிசையில் வாழ்பவன், கோபுரத்தில் குடியிருக்கும் கோமான் போன்றோர் தண்ணீரில் தத்தளித்தது ஒரு பிடி சோற்றுக்காகவும் , ஒரு மடக்கு தண்ணீருக்காகவும் ஏங்கும் பரிதாப நிலை கண்டு நெஞ்சை உருக்கியது. பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்களும், பத்திரப் படுத்திய பத்திரங்களும், பகட்டான உடைகளும் களி மண்ணோட, மண்ணானது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் 172 கிலோ மீட்டர் சுற்றலளவுள்ள ஜார்ஜ் டவுண், ராயபுரம், வண்ணாரபேட்டை போன்ற பழைய சென்னை நகரத்தில் வெள்ள நீர் வடிய  ஆங்கிலேய காலத்தில் கட்டப் பட்ட கால்வாய்கள் உள்ளன. ஆனால் 254 கிலோ மீட்டர் சதுர பரப்பிலுள்ள தென் சென்னையில் அபரிமிதமான மழை நீர் ஓடி நதிக் கரைகளில் கலக்கும் திட்டம் எதுவுமில்லாததால் சேதம் அதிகமானது. தற்போது உள்ள நிலையில் சென்னை நகரம் 3 செ. மீ. மழைத் தண்ணீரைத் தான் தாங்கும் சக்தி கொண்டது. நெதர் லாந்து, ஐரோப்பிய நாடுகள் இணைந்து  ரூ 1000/ கோடி உலக வங்கிக் கடனுடன் அடியார், கூவம் நதிகளை சீரமித்து 6.8 செ.மீ. மழையினை வடிகாலுக்குக் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. ஆனால் கோசல் தலையார், கோவளம் நீர்நிலை ஆகியவைகளில் மழைநீர் வடிய திட்டம் தீட்டப் பட்டும் எந்த நிறுவனமும் அமல் படுத்த முன்வரவில்லை.
ஒரு மாத அடை மழையின் தாக்கம் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. கடலூர் மாவட்டம் கடல் பகுதியானதால் வட கிழக்கு பருவமழை பெய்யும் போது எப்போதுமே பாதிப்பதினை சந்திக்கும் மாவட்டமாகும். சுனாமி காலத்தில் பல் வேறு துன்பங்களை சந்தித்தது இந்த மாவட்டம். அத்துடன் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் பக்கத்து பயிர் நிலங்களையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையில் அதிகமாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக கருதப் படுவது பின் வருமாறு:
1) வழக்கம் போல வட கிழக்கு பருவ மழை பெய்யாமல், இந்தத் தடவை வானம் பொத்துக் கொண்டு கொட்டியது போன்ற கன மழை 'எல் நினோ' காற்று சுழற்சியால்  பெய்தது.
2) சென்னையில் ரோடு, தண்ணீர், மின்சாரம், கட்டமைப்புக்கு பஞ்சமில்லை என்று வெளி முதலீட்டார்களை இழுக்க அபாயகரமான கட்டமைப்புகளை சென்னை புறநகரில் ஏற்படுத்தியது.
3) அதனால் நீர் நிலைகள், குழாங்கள், ஏரிகள்,பெரும்பாக்கம், பள்ளிக் கரனை போன்ற சதுப்பு நிலங்களில் வானளாவிய கட்டிடங்கள் எழுப்பியது சிறிய மழைக்குக் கூட வடி வாய்க்கால் அமைக்காமல் இருந்ததால் வெள்ள சேதம் அதிகமானதாக சுற்றுப் புற சூழல் கட்டமைப்பு மைய டைரக்டர் சுனிதா நாராயணன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் 1980 இல் 600 நீர் நிலைகள் 1130ஹெக்டார் ஏக்கர் நிலம் சென்னையினை சுற்றி இருந்தது. அது 2000 ஆம் ஆண்டு 645 ஹெக்டார் நிலமாக மாறியது.
பள்ளிக் கரனை, போரூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், முகைப்பையூர் ஏரி போன்ற பல கட்டமைப்பு வரைவு திட்டங்கள் நீர் நிலைகளை மறைத்து விட்டது. அதில் சில அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் தங்கள் பலத்தினை உபயோகித்து பக்கத்து நிலையங்களைக் கூட வளைத்துப் போட்ட சம்பவங்களும் உண்டு என்பதிற்கு ஒரு உதாரணத்தினை உங்களுக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்.
மணப்பாக்கத்தில் உயர் காவல் அதிகாரிகள் இல்லத்திற்கு கூட்டுறவு சொசைட்டி ஏற்படுத்தி நிலங்கள் கைப்பற்றப் பட்டு போரூர் ஆறு ஓரத்தில் உள்ள தனியார் நிலத்திலும் கை வைக்க ஆரம்பமானதால் அதனை தடுக்க வந்த நில உரிமையாளர் தள்ளி விடப் பட்டு மரணமானதால் ஒரு உயர் காவல் அதிகாரி மீது அந்த நில சொந்தக் காரர் மகன் கொடுத்த புகாரில் விசாரணையே நடந்தது 2002 ஆம் ஆண்டு. ஆனால் அந்த மணப்பாக்கம் கிராமம் கூட வெள்ளத்தில் தத்தளித்தது. பலர் உடுத்திய துணியோடு படகில் வெளியேறிய காட்சியினை தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.
சென்ற மழை 280 உயிர்களை பலி கொண்டது, 20.000/ கோடிக்கு மேல் சேதம் ஏற்படுத்தியது. வீடு இழந்த 1,64,000/ மக்கள் 460 முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர்.
பாதிப்பு உண்டான செய்திகளில் நெஞ்சை உருக்கும் சம்பவம் சில மட்டும் உங்கள் முன்பு வைக்கலாம் என நினைகின்றேன்:
1) வெள்ளம் வருகின்றதே என்று வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு கணவனும், மனைவியும், பெஞ்ச் மேல் ஏறி நின்றனர், ஆனால் வெள்ளம் அதன் மேலும் வந்ததால் ஒரு மேஜை அதன் மேல் போட்டு ஏறி நின்றனர். ஆனாலும் வெள்ளம் அவர்கள் முனங்காலுக்கு வந்ததால் மேலே உள்ள காற்றாடியினைப் பிடித்துக் கொண்டு நின்றனர். அந்தோ, மனைவி கைப்பிடி நழுவி விடுகிறது தண்ணீரில் விழுந்து மூழ்கிறாள், கணவன் கண் முன்னாள். வயதான அவர் மனம் எப்படி பதைத்திருக்கும் என்று உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
2) நந்தம்பாக்கத்தில் ராணுவ குடியிருப்பில் ஓய்வு பெற்ற ஒரு கர்னலும், அவர் மனைவியும் வெள்ளம் வருகின்றதே என்று கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கிறார்கள், அவர்களால் தப்ப முடியவில்லை. அதன் பின்பு மீட்புக் குழுவினர் கதவை உடைத்து உள்ளே செல்லும்போது இருவரும் இறைவனிடம் சேர்ந்தது கண்டு சோகமே உருவானது.
3) சென்னை புறநகர் பகுதியில் தாயும், மகனும் தரைப் பாலத்தினைக் கடக்கும் போது தண்ணீரின் வேகத்தில் தாய் கண் முன்னே மகன் இழுத்துச் செல்லப் படும் தொலைக் காட்சி பாழும் நெஞ்சை  உருக்கியது.
4) கோயிலம்பாக்கத்தில் பேங்க் ஊழியர், தனது உதவி தலைமை ஆசிரியையான மனைவியை டெல்லியில் நடக்கும்  ஒரு கருத்தரங்கிற்கு வழியனுப்ப, இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு வாடைகைக் காரில் விமான நிலையம் இரவில் செல்லும்போது, அங்கே சென்றதும் தான் தெரியும் அடை மழையால் விமான நிலையமே ஒரு சிறு குளமாக இருந்து, விமான சேவை ரத்து செய்யப் பட்டு, 1500 பயணிகள் அங்கேயே காத்திருந்தனர் என்று. பின்பு அவர்கள் வீடாவது  போய் சேரலாம் என்று கேளம்பாக்கம் வரும்போது அங்கே வெள்ளம் கடை புரண்டு ஓடியது. வாடகை கார் டிரைவர் தான் வண்டி ஓட்ட முடியாது என்று சொல்லி விட்டதால், பிள்ளைகள் இரவில் வீட்டில் தனியாக இருக்குமே, நடந்தாவது வீடு போய் சேருவோம் என்று பொடு நடையாய் வீடு திரும்பும்போது வெள்ளம் அவர்களை காவு கொண்டது. பிள்ளைகள் வீட்டில் பெற்றோரைக் காணாது தவியாய் தவித்தன. 5 நாட்கள் பிறகு தான் அவர்கள் உடல் மீட்கப் பட்டது என்று சொல்லும்போது 'பாச மலர்' பட ஞாபகம் வந்து உங்கள் நெஞ்சம் பதைக்க வில்லையா உங்களுக்கு?
5) மணப்பாக்கத்தில் அமைந்திருக்கும் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிட்சைப் பிரிவில் சேர்ந்து சிகிட்சை செய்ய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயிக்கு மேலாகும். எப்படியும் உற்றார், உறவினர் பிழைத்து விடுவார்வளே என்று கடனை, உடனை வாங்கி வைத்தியம் செய்த 18 நோயாளிகள் பிராண வாய்வு இல்லாமல் இறந்தது பரிதாபமில்லையா?
6) ஏழை மக்கள், நடுத்தர வகுப்பினர், சொகுசு பங்களாவில் வாழும் மக்கள் வித்தியாசமில்லாமல் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 30 விற்கவேண்டியது ரூ 150 க்கும், ஒரு லிட்டர் பால் ரூ 50க்கு விற்கப் படுவது ரூ 100 க்கும் விற்றாலும் கிடைக்காமல் அவதிப் பட்டக் கொடுமைமையிலும், கொடுமையில்லையா?
ஈர நெஞ்சங்கள்:
தமிழக மக்கள் படும் பாட்டினைக் கண்ட அனைத்து சமூகத்தினவரும் தங்களால் முடிந்த அளவு போட்டிப் போட்டுக் கொண்டு உதவ முன் வந்தது பாராட்டத் தக்கது. 'தானத்தில் சிறந்தது அன்ன தானம்' என்பார்கள். வெளி மாநில நல்ல உள்ளங்கள் கூட ஓடோடி வந்து சமைத்து மக்களுக்கு வழங்கினர். வெளி நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூட உதவி செய்யத் தவறியதில்லை. 'கவலைப் பட்டவரின் கண்ணீரைத் துடைப்பதும் ஒரு வணக்கம் தான் என்று இஸ்லாம் சொல்லுவது பொய்க்கவில்லை.
அல்குரான் 23:52 இல் 'நிச்சயமாக உங்கள் சமூதாயம் ஒரே சமூதாயம் தான்' என்றும் கூறுகிறது. அனைத்து ‘சமூகமும் ஒற்றுமை’ என்று  இந்த நிவாரண வேலையில் எடுத்துக் காட்டியது.
நிவாரண உதவியினைத் தடுக்க சில சம்பவம் நடந்தாலும் அதையெல்லாம் பெரிதாகக் கவலை கொள்ளாது 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நோக்கத்துடன்  உதவி செய்தது போற்றத் தக்கது.



நிவாரணப் பணியில் சிறப்பு வாய்ந்தவை:

1)  தொழிலதிபர் யூனுஸ் தன் சகாக்களுடன் நிவாரணப் பணியில் ஈடுபட்டபோது, அவருக்கு ஒரு தகவல் கிடைக்கின்றது. என்னவென்றால் ஒரு நிறைமாதக் கற்பிணிப் பெண் மொட்டை மாடியில் காப்பாற்ற கத்திக் கொண்டு இருக்கிறாள் என்று. உடனே ஒரு படகு  ஏற்பாடு செய்து வெள்ளத்தில் அந்த வீட்டிற்க் சென்று அந்தப் பெண்மணியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றார். அந்தப் பெண்ணுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அந்தக் குழந்தைக்கு தன்னைக் காப்பாற்றிய தொழிலதிபர் யூனுஸ் பெயரையே வைக்கின்றார் அதனுடைய தாய், அவர் வேற்று மதத்தினரானாலும். உடனே அந்த அதிபரும் அந்தக் குழந்தை படிப்புச் செலவு முழுவதும் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.
2)  பேரிடர் மீட்ப்புக் குழுவினர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது ஒரு மொட்டை மாடியில் ஒரு பெண் பிரசவ வலியால் அவதிப் படுவது அறிந்து அந்தப் பெண்ணை மிகவும் சிரமப் பட்டு மீட்டு போரூர் மருத்துவ மனையில் மீட்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இந்திய ஏர்-மார்சலே அங்கு சென்று பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து சொன்னதாக தகவல் கூறுகிறது.
3)  பெரு வெள்ளத்தால் வீட்டை விட்டு சென்ற ஒரு குடும்பத்தினர் வெள்ளம் சிறிது வடிந்ததும் வீடு திரும்பி நனைந்த பொருட்க்களை வெளியே தூக்கிப் போடும் பொது ஒரு பழைய துணிப் பையையும் தூக்கி வெளியே எறிந்துள்ளார்கள். அப்போது கழிவுகளை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சமூக சேவை அமைப்பினர் அந்தப் பையினை மீட்கும் போது அதனில் ஒரு டிபன் கேரியர் இருந்துள்ளது. அதனை திறந்து பார்க்கும் போது 10 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும் இருந்ததாம். அருகில் விசாரிக்கும் போது பையினை போட்ட வீட்டுக் காரர்கள் சரியாக அடையாளம் காட்டி தனது பிள்ளை படிப்பிற்காக சேர்த்து வைத்திருந்ததினை தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டதாக சொல்லி கண்ணீர் மல்க நன்றி செல்லி பெற்றுக் கொண்டார்களாம்.
4)  திருவெற்றியூர் நகரைச் சார்ந்த இம்ரான் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் பள்ளி விடுமுறையானதால் காய்ச்சலோடு இருந்துள்ளான். கார்கில் நகரில் மக்கள் படும் துயரம் கேட்டு மனசு கேட்காமல் தாயாரிடமும் சொல்லாமல் மழையோடு மழையாக நிவாரணக் குழுவினருடன் சென்று முனங்காள் அளவு தண்ணீரில் சென்று உதவி, இரவில் வீடு வந்தவன் ஜன்னி கண்டு அவதிப் பட்டுள்ளான். உடனே அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அவனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பயனில்லாது இறந்தது கண்டு திருவெற்றியூர் நகரமே சோகத்தில் மூழ்கியது.
தமிழ் நாட்டு மக்கள் சிலர் சினிமா கதாநாயகர்களை தங்கள் ஹீரோக்களாக கருதுவார்கள். 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு தமிழகம், புதுச்சேரி கடலோர மக்கள் சொல்லவொன்னா துன்பம் அனுபவித்தபோது வடநாட்டில் மிகப் பிரபலமான நடிகர் விவேக் ஓபராய் தன் காதலி தடுத்தும் கேட்காது இங்கே ஓடி வந்து 3 மாதங்கள் தங்கி இருந்து வீடுகள் கட்டித் தந்தார்.  அனைத்து பத்திரிக்கை உலகமே பாராட்டியது.
சமீபத்தில் பெய்த மழையில் இளம் நடிகர்கள் பல வெள்ள  நிவாரணம் செய்தும், நிதியாக ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 15 லட்சம் வரை கொடுத்தார்கள் முன்னணி நடிகர் உள்பட. ஆனால் உடலில் ரத்த கேன்சருடன் போராடி, அனாதை இல்லம் நடத்தும், டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ரூபாய் ஒரு கோடியும், வடநாட்டு நடிகர் அக்ஷை குமார் ரூபாய் ஒரு கோடியும் வெள்ள நிவாரணம் கொடுத்து அசத்தியதும், இங்கே உள்ள முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், அந்த அளவிற்கு தாராளமாக அள்ளிக் கொடுக்க மனம் வராததும், விவேக் ஓபராய் மாதரி முன்னணி நடிகர்கள் வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் சந்திக்காது, வெளி நாட்டில் படப் பிடிப்பிற்காக இடம் தேடுவதும் வெட்கமாக தெரிய வில்லையா உங்களுக்கு?
பெரு வெள்ளம் ஒரு மன நிறைவினைத் தந்துள்ளது. என்னவென்றால் எங்கே மழை பெய்யாது நிலத்தடி தண்ணீர் முழுவதும் உப்பாகி விடுமோ என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கும்போது வர்ண பகவானாக இறைவன் வந்து மழையினைப் பொழிந்து தள்ளியது மூலம் ஏற்கனவே இருந்த உப்பு நிலத்தடி தண்ணீரும் சுவை மிக்க தண்ணீர் ஆனது.
'விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியணுத்து உன்னின்று ஊற்றும் பசி' வள்ளுவர்.
கடல் நீர் சூழ்ந்து உலகமாயினும் மழை பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை தாளாது என்றும் பொருள். ஆகவே தான் அண்டை மாநிலத்தவர் விவசாயத்திற்கும், குடிப்பதிற்கும் தமிழகத்திற்குக் கொடுக்காமல் வஞ்சகம் செய்வதினைப் பார்த்த இறைவன் அடை மழை வெள்ளம் தந்தான்.

குறை என்று சொல்லும் போது ஒன்றே ஒன்றை பதிவு சொல்லாமல் இருக்க முடியவில்லை:
பெரு வெள்ளத்தினைத் தடுத்து நிறுத்தி கல்லணை கட்டிய கரிகால் சோழனையும், முல்லைப் பெரியார் அணையினை கட்டிய பென்னி குகையும் பின் பற்றாது. வெள்ள நீர் அநியாயமாக கடலில் கலந்தது மனத்தினை வருடியது. வடத் தமிழகத்தில் பாலார் என்ற மணல் நதியும், தென் தமிழகத்தில் வைகையும் இந்தத் தடவை கரைப் புரண்டு ஓடியது. அந்த வெள்ளத்தினைக் கூட இடை, இடையே தடுத்து செக் டேம்ஸ் கட்டாது விட்டது காலத்தின் கொடுமையா அல்லது மனிதத் தவறா, மழை நீர் வடிகால் அமைக்காது வீதிகள் தோறும் மழை நீர் கண்ணீர் மல்கிய சோக கதைகள் சொன்னது யார் தவறு என்று கருத்து சொல்லும் கடமையினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!.





Sunday, 22 November 2015

Sentiments of Ordinary Muslim

அன்புள்ள சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அழைக்கும்.
இத்துடன் சென்னை மண்ணடி பகுதியில் புதுத்தெருவில் 9/17 கதவிலக்கம் உள்ள வீட்டில் வசிக்கும் காயல் பட்டணத்தினைச் சார்ந்த ஏ. எம். பாருக் என்பவர் உலக, இந்திய, தமிழக இன்றைய நிலை பற்றியும் அவருடைய ஆதங்கத்தினையும் கூடிய 20.11.2015 தேதியிட்ட கடிதத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். உங்களுடை கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்:
அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
 அன்புள்ள முகமது அலி அண்ணன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்!

முக்கியம் தாங்கள் எழுதிய 'சமுதாய பிரட்சனைகளும், தீர்வுகளும்' என்ற  புத்தகம் சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து வாசித்தேன். சூப்பர். அல்ஹம்து லில்லாஹ்!
அதில் நம் இஸ்லாமிய சமூதாயத்திலும், நம் நாட்டிலும், உலக அளவிலும் மலிந்துள்ள அவலங்களையும் விரிவாக குறிப்பிட்டிருந்தீர்கள்.
நம் சமூதாயத்தின் சீரழிவிற்கு காரணம்-35-50 கூட இருக்கலாம். இப்படி ஆளாளுக்கு இயக்கங்கள் துவக்கி ஈகோவால் இவர்கள் பற்றி அவர்களும், அவர்கள் பற்றி இவர்களும் ஆனா, ஆவன்ன, ஈனா, ஈயன்னா என பல பெயார்களை வைத்துக் கொண்டு, வசைபாடி, அதை, இதைச் சொல்லி பண வசூல் செய்து, தமது நிலையில் சொகுசாக வாழ்கின்றனர். அவர்களில் யாருக்குமே நம் சமுதாய முன்னேற்றத்திற்கான உருப்படியான காரியங்கள் செய்ததாகக் காணோம்.
நம் தமிழ்நாட்டினைப் பொருத்தமட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் சீரழிவு ஆரம்பம் . மது, லாட்டரி, இலவசங்கள், சினிமாவுக்கு வரிவிலக்கு, தலைவர், தலைவிக்காக உயிர் விட்ட கழிசடைகளுக்காக இழப்பீடு இப்படி லக்ஷக்கணக்கில், எதற்கும், யாருக்குமே பயனில்லாதவர்களுக்கு சிலை, மணிமண்டபம், பிறந்த நாள், நினைவு நாள் விழா என இப்படி கோடிக் கணக்கில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறது.
மேலும் நமது தாய்நாடு இந்தியாவைப் பொறுத்தவரை B.J.P, V.H.P, R.S.S, Siva sena போன்ற காவி பயங்கர ஹிந்துத்வா கட்சிகள் முஸ்லிம்களுக்கு அடுத்தடுத்து துவேசத்தைப் பரப்பி பல இடங்களில், பல விதங்களில், பலவித பயங்கர தாக்குதல்கள்(அரசு, காவல்த் துறை கூட்டாக இணைந்து)நடத்தி முஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு பல ஆயிரம்,லக்ஷம், கோடிக் கணக்கில் பேரிழப்புகள் துணிந்தே செய்கின்றனர். பாதிக்கப்பட்ட நமக்கு ஏதோ பெயரளவில் நஷ்டஈடு வழங்கி அந்த கொலைகார, கொள்ளைக்காரர்களுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படுவதில்லை.அப்படியே ஏதும் தண்டனை எனில் வழக்குகள் 15, 20 வருடம் என நடந்து கைது, ஜாமீன், விடுதலை என நடக்கும்.
அதே சமயம் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப் பட்டவர் முஸ்லிம் எனில் கைது, கடும் விசாரணை, சிறையில் வன் கொடுமை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என துரிதமாக அப்பாவி முஸ்லிம்கள் கூட தண்டிக்கப் படுகிறார்கள். நம் நாட்டில் முஸ்லிம்களுக்கு சோதனை காலம். அல்லாஹ்விடம் நமது பாதுகாப்புக்கு இருகை ஏந்தி துவா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நம்மை பாதுகாக்க அவன் ஒருவனே போதுமானவன். நமது ஈமான் மிகவும் பலவீனமாக, சரீஅத்துக்கு புறம்பாக நாம் நடப்பதால் அநியாயக்கார ஆட்சியாளர்கள் நம்மீது போடப் பட்ட தண்டனை.
மேலும் உலகளவில் அமேரிக்கா, இஸ்ரேயில், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற யஹூதி-நாசகார கொடுங்கோலர்கள் , முஸ்லிம் நாடுகளில்(எகிப்து, லிபியா, துனிஸ், ஏமன், ஈராக், ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான்) பல பொய் காரணங்களை சாட்டி, அத்து மீறி புகுந்து அந்நாடுகளை இன்னும் 40,50 ஆண்டுகள் இன்னும் சீர் செய்ய முடியாத அளவிற்கு சீரழித்து விட்டனர். அரபு நாடுகளை யஹூதிகள் அடிமைகளாக்கி ட்ரில்லியன் டாலர்கள் அளவில் கொள்ளை அடித்து அவர் தம் நாடுகளை வளமாக வைத்துள்ளனர்.
அநியாயமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனையும், லிபியா அதிபர் முஆம்மர் கடாபியை சுட்டுக் கொன்றும், மேலே எழுதிய பிற நாட்டு முஸ்லிம் தலைவர்களை நாட்டை விட்டு விரட்டி, அந்நாடுகளில் மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழ வழியில்லாமல் செய்து விட்டனர். உலக அழிவு நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

அல்லாஹ் முஸ்லிம்களை சகல சோதனைகளை விட்டும் காப்பாற்றுவானாக, ஆமீன். தாங்களும் துவா செய்து கொள்ளுங்கள், மற்றவை பின் வஸ்ஸலாம்.

Thursday, 12 November 2015

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!
தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)

1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர்  உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2)     20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின் புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளோம்.
ஆனால் அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும் கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3)     உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான 2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4)     மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால் இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5) வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால் உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.

6) மது பிரியர்கள் மது அருந்துவது உஸ்னத்தினை அதிகப்படுத்தி வீரியத்தினைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் மது அருந்தினால் உடலின் சீதோசனத்தினைக் குறைத்து தாம்பத்திய நேரத்தில் வெடிக்காத புஸ் வானமாகும்.

7) உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக் கூடாது, அவ்வாறு அருந்தினால் ஜீரணத்திற்குத் தடுக்கும் என்று நம்பிக்கை.
ஆனால் உணவு உண்ணும் பொது சிறிது நீர் அருந்துவது ஜீரணத்திற்கு உதவி செய்யும்.

7) மரங்கள், வீடுகளில் தலை கீழாகத் தொங்கும் வௌவாலுக்கு கண் பார்வை தெரியாது என்று சொல்வார்கள்.
உண்மையில் வௌவாலுக்கு கண் நன்றாகவே தெரியும். அத்துடன் எதிராளியின் ஒலியினையும் நன்கு தெரியும்.

8) தினந்தோறும் முகச் சவரம் செய்வதால் முடி தடிப்பாக சொர  சொரப்பாக தெரியும் என்று சொல்வார்கள்.
உண்மையில் முகச் சவரம் செய்யும் போது முடி முனை மங்கி லேசாகவும் இருக்கும்.

9) தூக்கத்தில் நடப்பவனை தட்டி சுய உணர்விற்கு வர செய்யக் கூடாது என்பார்கள்.
உண்மையில் தூக்கத்தில் நடப்பவனை தட்டி எழுப்புவது மூலம் அவன் எங்காவது மோதி விபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.

10) காளை  மாடுகளுக்கு சிகப்பு அல்லது வெள்ளைத் துண்டு ஆகியவினைக் காட்டினால் கடுங்கோபம் வந்து முட்ட ஆக்ரோசமாக வரும் என்பார்கள்.
மாறாக காளை மாடுகள் முன்பாக ஏதாவது ஒரு துணியினை ஆட்டினால் முட்ட வரும் என்பது தான் உண்மை.

11) இருட்டில் போனால் பேய், பிசாசு வரும் என்பார்கள்.
ஆனால் சுடுகாடே கதி என்று கிடக்கின்ற வெட்டியானை மட்டும் ஏன் பேய் விட்டு வைத்திருக்கின்றது.
இருட்டாக இருக்கும் இடங்களில் வெளிச்சம் போட்டு வைத்தால் பேய் என்ற சொல்லுக்கே இடமில்லை.
முன்பெல்லாம் மின்சாரம் இல்லாத வீடுகளில் இரவில் காண்டா விளக்கு அல்லது சிறு சிம்னி விளக்கினை இரவிலும் எரிய விட்டு இருப்பதினை நாம் பார்த்திருக்கின்றோம். அது எதற்காக என்றால் சிறு குழந்தைகள் அல்லது பெண்கள் பயப்படக் கூடாது என்ற எண்ணமே!
12) 13) சிங்கம் மரம் ஏறாது என்றும், காட்டுக்குள் செல்லுபவர் சிங்கம் வந்தால் மரம் மேலே ஏறி தப்பலாம் என்று கூறுவார்.
உண்மையில் சிங்கம் நீண்டு வளர்ந்த 30 அடி ஓக் மரத்தில் கூட ஏறும்.

ஆகவே நாம் மடமையுனைப் போக்கி, தன் குழந்தைகளுக்கும் விழிப் புணர்வு அடைய அறிவுப் பூர்வாமாக எதனையும் சிந்தித்து செயலாற்றலாமே!