முதலாம்
உலக யுத்தத்தின் தாக்கமும்- பலனும்!
( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச். டி, ஐ.பீ. எஸ்(ஓ)
11.11.2018 ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாம் உலகப் போர் முடிவுற்றதினை நினைவுபடுத்தும் விதமாக விழா எடுத்தது அனைவருக்கும் தெரியும். உலக முதலாம் யுத்தம் 1914 முதல் 1918 வரை நடந்தது. அந்த யுத்தத்தில் ஒண்றரைக் கோடி மக்கள்- வீரர்கள் உட்பட பலரும் கொல்லப் பட்டார்கள், மற்றும் இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர்கள் படுங்காயம் அடைந்தார்கள். அந்த யுத்தம் 11.11 .1918 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் வட பாரிஸ் நகரில் பெர்டினாண்ட் ரயிலில் கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் கமாண்டர் பெர்டினாண்ட் ஜெர்மன் நாடு மறுபடியும் போர் தொடங்காதவாறு மிகக் கடுமையான கட்டுப் பாடு கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடச் செய்தார். ஆனால் போர் நின்றதா என்றால் இல்லை. காலச்சக்கரம் சுழலும் போது அதே பிரான்ஸ் நாட்டினைப் பழிவாங்க ஜெர்மன் அதிபர் ஹிட்லர் 1940 ம் ஆண்டு அதே பெர்டினாண்ட் ரயிலில் போர் நிறுத்த ஒப்பந்தம் பிரான்ஸை செய்ய வைத்த வரலாறும் உண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும் முதலாம் உலகப் போரின் மூலம் பல முக்கியமான சமுதாய நன்மைகளும் உலகிற்கு கிடைத்திருக்கின்றது. அவை எவை என்று நாம் காண்போம்:
1 ) உலகில் பகல் நேர வேலையினைக் குறைத்து எரிபொருளினை
மிச்சமிடும் செயல் முறையினை முதல் முதலில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன், பிறகு ஜெர்மன் மற்றும்
கூட்டுப் படை நாடுகள் கடைப் பிடித்தது.
2 ) பத்தொன்பதாம்
நூற்றாண்டில் டைம் பீஸ்கள் நேரத்தினை அறிவதற்காக உபயோகப் பட்டாலும், முதல் உலகப் போரின்
போதுதான் வீரர்கள் கைகளில் அணிந்து நேரம் பார்க்கும் விதமாக ரிஸ்ட் வாட்ச்கள் வந்தன.
போர் முடிந்ததும் அவைகள் மெரி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பரிசுப் பொருளாகவும் அளிக்கப்
பட்டது.
3 ) ரத்த வங்கி பற்றி 1600 ஆண்டே அறிந்திருந்தாலும்
, அதன் செயல் பாடு முதல் உலகப் போரின் பயனாக உலகிற்கு தெரிந்தது. அப்போது மனிதனுக்கு
மனிதன் ஒரே நேரத்தில் இரத்தம் மாற்றும் முறை அறிமுகப் படுத்தும் பழக்கம் ஏற்பட்டது.
முதலாம் உலகப் போரில் காயம் படும் வீரர்களுக்கு இரத்தம் அளிப்பதற்காக அமெரிக்கா நாட்டின்
மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் ‘கேப்டன் ஆஸ்வேல்டு ராபர்ட்சன்’ 1917 ம் ஆண்டு இரத்த சேமிப்பு வங்கியினை நிறுவி
இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
4 ) முதலாம் உலகப் போர் ஹாலிவுட் அமெரிக்காவில் அமைந்து
யுத்த வீர தீர செயல்களை தத்துருவமாக படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு பிரபலமானது.
ஆஸ்க்கார் முதல் விருதினை 'விங்ஸ்' என்ற யுத்த திரைப் படம் வென்றது ஒரு கதை.
5 ) ஒவ்வொரு நாட்டின் வெட்ப தட்ப சூழ்நிலைக் கேட்ப
மேலுடைகள் ‘சார்ள்ஸ் மெஷின்டோஸ்’ என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். அதன் மூலம் கைத்துப்பாக்கி,
வரைபடம், தேவையான பொருள்கள் கொண்டு செல்லும் விதமாகவும் அவைகள் அமைந்தன.
6 ) அமரிக்க ராணுவ வீரர்களின் சட்டைகளில் பாக்கெட் இல்லாததினால் பணம், பொருள்கள் சட்டைகளில்
எடுத்துச் செல்லும் அளவிற்கு முதல், முதலாக ஜிப்புகள் கொண்ட சட்டைப் பைகள் தைக்கப்
பட்டன.அதன் மூலம் ஜிப்புகள் உபயோகம் உலகம் முழுவதும் பரவியது.
7 ) உலகப் போரில் பெண்கள் உதவி செய்தது மூலம் பெண்களுக்கான
ஓட்டுரிமையினை அடைய மேற்கு அமெரிக்கா முழுவதும் 1917 ம் ஆண்டு அமல் படுத்தப் பட்டது.
பிற்காலத்தில் அமெரிக்கா ஜனாதிபதி உட்ரா வில்சன் காலத்தில் 1920 ம் ஆண்டு அமெரிக்கா
அரசியல் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி அமெரிக்கா முழுவதும் பெண்களுக்கான ஓட்டுரிமை
அமல் படுத்தப் பட்டது.
8 ) யுத்தத்தில் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி
அளித்த மகளிர் நர்ஸுகள் மாதவிடாய் காலத்தில் ‘கிம்பெர்லி கிளார்க்’ கம்பனி தயாரித்த
மரத்தூள்களினால் செய்யப் பட்ட சானிட்டரி நாப்கின்களை உபயோகித்தனர். அதுவே பிற்காலத்தில் பஞ்சுனால் தயாரிக்கப்
பட்ட சானிட்டரி நாப்கின்கள் உருவாக வழிவகுத்தது. கிராமங்களில் இன்னும் பெண்கள் கிழிந்த
துணிகளை நாப்கின்களாக பயன் படுத்துவதை இங்கு காணலாம்.
9 ) போரில் குண்டுக்காயங்கள் பட்டு சிதைந்த உடலில்
அவைகள் தெரியாத படி தையல் போடும் பிளாஸ்டிக்
தையல் முறையினை முதன் முதலில் ஆங்கிலேய ராணுவ சர்ஜன் ஹெரால்டு கில்லிஸ் கண்டு பிடித்து
11000 வீரர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். அதுவே பிற்காலத்தில்
முன்னோடியாக அமைந்தது.
11 ) ஜெர்மன் ராணுவத்தினர் மாமிச உணவு கெடாமல் இருப்பதிற்காக
‘மாயோர் ஆடினார்’ என்பவர் சோயா பவுடரை தடவிய மாமிச துண்டுகள் சிறிதாக(சாசேஜ்) வெட்டி
பதப்படுத்தி பிற்காலத்தில் போர்க்களத்தில் சூடு பண்ணி சாப்பிடும் முறையினை கண்டு பிடித்து
அதற்கு காப்புரிமையும் பெற்றார்.
12 ) உலக நாடுகள் சுற்றுலாவினை ஊக்குவிக்க கூட்டு நாடுகள் சபையின் வழிகோட்டிற்கு இணங்க 1920 முதல் ஒரே விதமான பாஸ்போர்ட் என்ற கடவு
சீட்டு அந்தந்த நாட்டின் பெயருடன் வழங்க வழி வகுத்தது.
உலக யுத்தங்கள் பல அழிவுகளை ஏற்படுத்தினாலும், பற்பல
நன்மைகளைகளுக்கும் முன்னோடியாக அமைந்திருந்தது என்றால் ஏற்புடையது தானே!
No comments:
Post a Comment