Wednesday, 19 August 2026

இயற்கை சீற்றங்களும்-மதங்களின் முன்னோட்டமும்!


(டாக்டர் .பீ. முகமது அலி, .பீ.எஸ்()

ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் வெப்ப நிலை அதிகரித்து, காட்டுத்தீயும் கொழுந்து விட்டு எரிந்து பல லட்சக்கண ஏக்கர் நிலங்கள் நாசமாக்கி, காட்டுப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பாதகம் ஏற்படுத்தியும், எரியும் புகை சுற்றுப்புற சூழக்கு மாசு ஏற்படுத்தியும், விலங்கினங்களை விரட்டியும் விட்டதினை தொலைக்காட்சி மூலம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோன்று வானம் வெடித்து மழை கொட்டி நகரங்களே மழைக் கடலாக்கியதினையும், நில நடுக்கம் அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் நடப்பதினையும் நீங்கள் அறிவீர்கள்.

               நவீன இயற்கை சீற்றங்களில் முக்கியமான 7,1 மற்றும் 7.5 ரிக்ட்டர் நிலை நடுக்கங்களில் வெனிசுலா நாட்டில் ஜூன் 2026 நடந்து பலத்த சேதங்கள் ஏற்படுத்தியது. 3.1.2026ல் தான் அந்த நாட்டின் ஜனாதிபதி மடுரோ மற்றும் அவரது மனவியினை அசுர ராணுவ பலத்தால் கைது செய்து அமெரிக்காவின் சிறையில் வைத்திருக்கும் நேரத்தில் அந்த சோகம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 2026ம் ஆண்டு கொலம்பியாவில் பூகம்பம் ஏற்பட்டு 200 பேர்கள் மடிந்தார்களாம்.உலகிலேயே மிகவும் கொடூரமான நில நடுக்கம் 1556ம் ஆண்டு சீனாவின் சன்சை மாகாணத்தில் 7.1 ரிக்ட்ர் ஏற்படுத்தி 8,30,000 பேர்கள் இறந்ததாக கூறப் படுகிறது.

               உலகிலேயே பிலிபைன்ஸ் நாடு இயற்கை சீற்றத்தில் ஆபத்தான நாடாக கருதப் படுகிறது. உருண்டையில் பூலோக plateau என்ற பீடபூமி திபெத், நேபால், மெஸ்சிக்கோ, ஜப்பான், ஹெய்தி, இரான், துருக்கி, நியூஜிலாந்து, தெற்கு ஆஸ்திரேலியா போன்ற 12 நாடுகளில் அமைந்துள்ளதால் அந்த நாடுகளில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுகிறது.

               பேய் மழையில் ஜூலை 2026ல் அஸ்ஸாம், ஆப்கானிஷ்தான், கிரிக்ஸ்தான் போன்ற இடங்களில் வானம் வெடித்து மொத்தமாக தண்ணீர் கொட்டியது போல இருந்து நாசம் செய்ததாம். 1937ம் ஆண்டில் சீனாவில் வெள்ளம் ஏற்பட்டு 30 லட்சம் பேர்கள் மடிந்தார்களாம். 1970ம் ஆண்டு பங்களா தேசில் மிகவும் கொடூரமான வெள்ளம் ஏற்பட்டு 3 லட்சம் பேர்கள் இறந்தார்களாம். 1939ம் ஆண்டில் இந்தியாவில் கூட கோரிங்கா புயலால் 3 லட்சம் பேர்கள் இறந்தார்களாம். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தியாவில் 16,000 பேர்கள் உள்பட மற்ற இடங்களில் 2,30,000 பேர்கள் மடிந்தார்களாம்.

 

காட்டுத்தீ ஐரோப்பிய கண்டம், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏற்பட்டு பல ஏக்கர் நிலங்கள் பாழாகி, லட்சக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து, வன விலங்குகளை பாதித்துள்ளதாம். உலகில் மிக அதிகமான காட்டுத்தீ 2003ம் ஆண்டு ரசியா சைபீரியாவில் ஏற்பட்டு 50 லட்சம் ஏக்கர் பாழானதாம். ஆந்திராவில் காட்டுது தீ பரவி 993 பேர்களும், அருணாச்சல பிரதேஷத்தில் 190 பேர்களும், பிஹாரில் 88 பேர்களும் இந்தார்களாம்.

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா என்ற பழந்திண்ணி வவ்வாலால் பரவப் படும் நோய் 16.000 பேர்களை காவு வாங்கி விட்டதாம். 60 நாடுகளில் ஏற்பட்ட காலரா நோயால் 5,60,823 பேர்களும், காச நோயால் 10,23,000 பேர்களும், பாலியல் நோயால் 6,30, 000 பேர்களும், மலேரியாவால் ஒரு கோடியே 3000 பேர்களும் இறந்து விட்டார்களாம். 

               இயற்கை பேரிடைகளால் ஏற்படும் அழிவுகளுக்கு மதங்கள், இஸ்லாமிய மார்க்கம் என்னென்ன சொல்கிறது என்று சற்று பார்க்கலாம். இஸ்லாத்தில் மனிதர்களுக்கு பூவுலகில் எண்ணற்ற இன்பங்களையும், சொல்லவொண்ணா துன்பங்களையும் இறைவன் கொடுத்துள்ளான். துன்பங்கள் மானிடரை பலி வாங்கும் செயலில்லை மாறாக ஒரு படிப்பினை வருங்கால சந்ததியர்களுக்கு வழங்கப் பட்டதாகும். அல் புஹாரி ஹதீஸ் 7036ரிலும், சூரா அல் ஹாஜி 22:1ல் நில நடுக்கத்தினை பற்றி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அவைகளில் எப்போது மனிதன் ஒழுக்கத்திற்கு பங்கம் செய்கிறானோ அப்போதும், திர்மிதி ஹதீஸ் 1447ல் ஆட்சி பீடத்தில் எப்போது தகுதியில்லா தலைவர்கள் அமர்வார்களோ அப்போதைக்கெல்லாம் ஏற்படுகிறதாம். திருகுரான் அல் அமீனில் சிறந்த கட்டமைப்புள்ள கட்டிடங்கள் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகி விடுகின்ற காட்சிகளை கொலம்பியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களைப் கண்டு பயந்து கொள்ளலாம். சூரா அல்-பரங்கா 155ல் மனிதன் தரையில் கால் படாமல் ஆடம்பரத்தில் பெருமை கொள்ளும் போதும், மனித குலம் பந்த, பாசம், அன்பு, ஈவு, இரக்கம் இல்லாமல் இருக்கும் போது நில நடுக்கங்கள் மற்ற இடர்பாடுகள் ஏற்படுகிறதாம். அல்லாஹ் மனிதர்களை அழகானவர்களாக படைத்து, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்த மானிடர்களுக்கு ஒரு படிப்பினையாக இயற்கை சீற்றங்களை அடையாளங்களாக காட்டி உள்ளான். நூஹு அலைகிவசலாம் காலத்தில் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளை உதாரணமாக எடுத்தியம்பியுள்ளான். 

               யூதர்களின் Talmud of zephaniah(3:6-7) என்ற புத்தகத்தில் இறைவன் இயற்கை சீற்றங்களை மனிதர்கள் தவறு செய்யும்போது எச்சரிக்கையாக அனுப்பியுள்ளான். சீன தத்துவ ஞானி Dong-Zhongshu, Shujing என்ற புத்தகத்தில் வெள்ளம் மனிதர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று கூறியுள்ளார்.

               ஹிந்து புராணங்களில் உலகம் cosmic serpent சிவனின் தலையில் இருப்பதால் (Sheshnaag) நில நடுக்கம் ஏற்படுகிறதாம். அதற்கு உதாரணமாக இமயமலை உச்சியில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறதாம். நில நடுக்கத்தால் 9000 பேர்கள் இறந்து விட்டார்களாம்.

 நான் மேலே எடுத்துக்காட்டிய நில நடுக்கம், வெள்ளம், காட்டுத்தீ, தொற்று நோய் போன்றவைகள் மனிதனை எல்லாம் வல்ல இறைவன் பலி வாங்குதிற்காக அனுப்பப் பட்டதில்லை மாறாக எச்சரிக்கை செய்வதற்கு என்று சொன்னால் சரியா?