Friday, 21 May 2021

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி--'

 


( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப் படி இந்தியாவில் கொரானா தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர் இதுவரை 2.3கோடி என்றும், அதில் இறந்தவர் 2.57 லட்சம் என்றும் கூறுகின்றது. ஆனால் சாவின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் அவைகள் கணக்கில் கொள்ளாதவை என்றும், கங்கையில் உ.பி., ம.பி மற்றும் பிகாரில் மிதக்கும் நூற்றுக் கணக்கான பிணங்களை பார்த்து சொல்லுவது மனதினை உலுக்கும் செய்தியாக உங்களுக்குத் தெரியவில்லையா? 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே சீனாவில் கொரானா அறிகுறி தெரிந்தும் சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியதின் பயனாக லட்சக் கணக்கில் விலை மதிக்க முடியாத உயிரினை இழந்திருக்கின்றோம். அதனை விட்டுவிட்டு மாட்டு மூத்திரம், மாட்டு சாணம் தான் அதற்கு உண்டான தீர்ப்பு என்று நமது அறிவு சால் அரசியல் வாதிகள் பிதற்றியதின் பயனைக் கண்டு அமெரிக்க டல்லாஸ் விமான நிலைய அதிகாரிகள் திகைத்த கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

அதனை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிய செய்தித் தொடர்பாளர் பிலிப் சேர்வேல் படம் போட்டு காட்டியுள்ளார். டெல்லியிலிருந்து வாஷிங்டன் டல்லாஸ் விமான நிலையத்தில் ஒரு இந்திய பயணியின் பையினை அங்குள்ள அதிகாரிகள் சோதனை இட்டபோது ஒரு பையில் கனமான உருண்டையான பொருள் இருந்தது கண்டு வியந்து அவரிடம் கேட்டபோது அது காய்ந்த சாணத்தின் கட்டி என்றும் அது கொரானா நோயினை கட்டுப் படுத்தும் என்று சொன்னது ஆச்சரியாமலிக்காதா என்ன? Mucormycosis என்ற பூஞ்சை நோய் புதிதாக வந்துள்ளது என்றும் அது ஈரமான, காய்ந்த, காற்றில் பரவக்கூடிய கொரானா என்றும் கூறப்படும் போது அவர் இதனைக் கொண்டு வந்தது ஆச்சரியம் அளிக்காதா என்ன? அவ்வளவு தூரம் மக்கள் அறியாமையில் மூழ்கி உள்ளனர் என்பது எடுத்துக் காட்டவில்லையா? அதற்கு மேலாக 2021 மார்ச் மாதம் ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட கொரானா  நோய் பாதித்த சுனில் பாரேடா என்ற தலைவர் தொலைக் காட்சியில் தோன்றி பெருமையாக சொன்னதும், இன்னொரு ஸ்வாமி மாட்டு மூத்திரம் குடிக்கும்(gaumutra) விழா நடத்தியதும் பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டியுள்ளன. பின் ஏன் கொரானா நோய் பரவாமல் இருக்காது சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் சொல்லும்போது, 2019ல் கொரானா அறிகுறி வந்தபோது அரசும், மக்களும் அலட்சியம் காட்டியதால் அதன் விளைவுதான் லட்சக் கணக்கில் உயிரிழைப்பு மட்டுமல்ல மாறாக வெளி நாடுகளில் ஆக்சிஜென், வெண்டிலேட்டர்,  கொரானா அறிகுறி கண்டு புடிக்கும் கருவிகள், ஊசிகள் போன்றவைகளை இறக்குமதி செய்ய வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா 120 நாடுகளுக்கு தடுப்பூசி சிரிஞ்சி தயாரித்து அரும்பியும், இந்த கொரானா காலத்தின் அவசரத்தினை பயன்படுத்தி  அவசியமான பொருட்கள் தரமற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப் படுவது இந்திய மருத்துவ உபகரண தொழிலை நசுக்குவதாக உள்ளதாக அதன் சம்மேள தலைவர் ராஜீவ் தத் சொல்லியுள்ளார். இதனை நிரூபித்து காட்டும் விதமாக திண்டிவனத்தில் மருத்துவமனை வைத்திருக்கும் ஒரு டாக்டர் பாண்டிச்சேரியில் விற்ற ரெம்டிசிவிர் ஊசியினை வாங்கி தனக்குப் போட்டுள்ளார். அதன் பின்பு அவர் இறந்து விட்டார். விசாரணை செய்ததில் பாண்டிச்சேரியில் விற்ற ஊசி மருந்து போலியானது என்று அறிந்து இரண்டு டாக்டர்களை கைது செய்துள்ளார்கள். சீன கம்பனிகள் கொரானா காலத்தின் அவசர தேவையினை பயன் படுத்தி மாஸ்க், வெண்டிலேட்டர் போன்ற தரமற்ற உபகரணங்களை போட்டி போட்டுக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளன. அவைகளை சில நாடுகளும் திருப்பி உள்ளன. தடுப்பு ஊசிகளை கடத்தி வந்து விற்றது சம்பந்தமாக 2 டாக்டர்கள், 10 மற்ற நபர்கள் கைது செய்துள்ளது வருத்தமளிக்காமலில்லை தானே! இது எதனைக் காட்டுகின்றது என்றால் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ஏரியிற வீட்டில் பிடுங்குவது லாபமென்று' அதுபோல அமைந்து விட்டதாக உங்களுக்குத் தெரியவில்லையா? அது மட்டுமல்லாமல் பக்கத்து நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய், சௌதி, குவைத், கட்டார் போன்றவற்றில்  பஞ்சம் பிழைக்க  சென்ற தொழிலாளர்கள் நம்மவர் கூட அவசர தேவைகளுக்கு உற்றார் உறவினரை காண வரமுடியா தடையும் உள்ளது என்று அறியும் போது உண்மையிலேயே ஆளுநர்கள் மேல் கோபம் வரத் தானே செய்யும்.

திருடர்களை கல் நெஞ்சக் காரர்கள் என்று கூறுவோம். ஆனால் அந்த திருடன் கூட தான் திருடி வந்த பொருள் 1270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்ஸின் மருந்து குப்பிகள் என்று அறிந்து அந்த மருந்துக்காக கொரானா நோய்  பாதித்த ஹரியானா மக்கள் பேயாய் அலைவதினை அறிந்து தன் கைப்பட தனக்கு அவைகள் கொரானா நோய்க்கான மருந்து என்று தெரியாமல் எடுத்து வந்து விட்டதாகவும் அதற்காக மன்னிக்கவும் என்று ஒரு கடிதம் எழுதி வருத்தத்துடன்  திருடிய மருந்துக் கடைக்கு அதனை திருப்பி அனுப்பியது ஒரு மனிதாபிமான செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

 

உயிர் பலிகள் அதிகமானதாலும், நோயாளிகள் தனிமையில் மருத்துவனையிலும், வீடுகளிலும் தனிமைப் படுத்துததாலும் பல்வேறு பிரட்சனைகளை சந்திக்க நேருகின்றது. அவைகளில் சிலவற்றினை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. அவைகள் பின் வருமாறு:

1) வேலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் 80 வயது முதியவர் மனைவிக்கு 70 வயது இருக்கும். அவருடைய இரு மகன்களும் பொறியாளர்களாக திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றார்கள். பெற்றோர் மட்டும் பள்ளிப் பட்டில் குடியிருக்கின்றார்கள். தந்தைக்கு கொரானா வந்து மருத்துவ மனையில் சேர்த்துள்ள தகவல் தெரிவிக்கப் படுகின்றது. அவர்கள் வரவில்லை. சமீபத்தில் தந்தை இறந்து விடுகின்றார். அதன் தகவலையும் பிள்ளைகளுக்கும், பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினருக்கும் தெரிவிக்கின்றார்கள், ஆனால் ஒருவர் கூட  வரவில்லை. சொந்த பிள்ளைகளோ  கொரானா நோயால் ஊர் மக்களே ஈமச் சடங்குகளை செய்து விடுங்கள் என்று கூறியதால் ஊர் மக்களே மகன்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்தார்களாம்.

2) சேலம் தாராமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது மகன் கொரானாவில் மருத்துவனையில் இறந்து விட்டானாம். அவருடைய தந்தை அந்த பிணத்தினை வாங்க மறுத்து விட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம், 'ஊர் மக்கள் கொரானா பிணம் என்று புதைக்க விடமாட்டார்கள், ஆகவே மருத்துவமனை நிர்வாகவே சேலத்தில் புதைத்து விடுங்கள்' என்று சொல்லி விட்டாராம்.

3) இதற்கு நேர்மறையாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆஸ்பத்திரியில் கொரானா நோயால் பாதிக்கப் பட்ட மகன் இறந்து விட்டான். அவனை ஈமக் காரியங்கள் செய்வதிற்காக எடுத்துச் செல்ல கையில் பணமில்லை. இவ்வளவிற்கும் ஜலந்தரில் 500 ஆம்புலன்ஸ் இருந்தும், தன்னார்வ நிறுவனங்கள் இருந்தும் ஓவருவரும் உதவி செய்யவில்லை. ஆகவே தந்தையே தனது தோளில் மகனுடைய பிணத்தினை சுமந்து சுடுகாடு எடுத்துச் செல்லும் காட்சி பத்திரிக்கை செய்தியாக வந்துள்ளது.

4)  ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் குழாயில் கோளாறுகளால் ஆக்ஸிஜன் சீராக வராமல் பலர் இறப்பு செய்திகள் மருத்துவ வசதிக்காக சென்றவர்கள் உயிர் பிழைத்து வருவார்களா  என்ற நம்பிக்கை மக்களிடமிருந்து மறைந்து போய் விடுகின்றது அல்லவா?

5) ஒரு மென் பொறியாளருக்கு கொரானா வந்து வீட்டில் தனிமை படுத்தப் பட்டுள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். அந்த பொறியாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தான் நோயால் இறந்து விடுவோம் என்று மகனை காரில் அழைத்துச் சென்றவர் தனியாளாக வருவதினைப் பார்த்த மனைவி குழந்தை எங்கே என்று சண்டை போட, அப்போது தான் சொன்னாராம் குழந்தையினை நாடு ரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டதாக. பெத்த மனது சும்மா இருக்குமா கணவர் சொன்ன இடத்திற்கு அவசரமாக சென்று அழுது கொண்டு இருந்த குழந்தையினை மீட்டு வந்தாராம்.

6 ) சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி  மருத்துவமனைகள் நோயாளிகளின்  படுக்கைகள் நிறைந்து வழிந்ததால் நோயாளிகளை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனை முன்பு நின்று நேரம் ஆக, ஆக ஒரு நோயாளி பின் ஒருவராக 10 பேர்களுக்குமேல் இறந்த சம்பவம் சென்னையில் நடந்தது அதிர்ச்சியூட்டும் செயல் தானே!

7) கொரானா வார்டுகளில் பெரும்பாலும் கூட உறவினர் இருப்பதற்கு அனுமதியில்லை. ஒரு வார்டில் ஒரு பெண் நோயாளி மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால் அந்த வார்டில் ஒரு ஆண் நர்ஸ் பணியமர்த்துப்பட்டுள்ளார். அந்த பெண் நோயாளியிடம் ஆண் நர்ஸ் தவறாக நடந்த சம்பவமும் நடந்து  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் கணவர் கொரானா நோயாளி, அவரை கவனிக்க அவர் மனைவி சென்றிருக்கின்றார். அவரிடம் அங்கு பணியில் இருந்த டாக்டர் பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். கொரானா களப் பணியாளர்களாக பணியாற்றிய 786 மருத்துவர்கள் முதல் அலையிலும், 270 மருத்துவர்கள் இரண்டாம் காலையிலும் இறந்தாலும், அதேபோன்று எண்ணற்ற நர்ஸுகள் பலியானாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவப் பெயர் ஏற்படுத்தி தருவது இயற்கைதானே!

கொரானா தொற்றுலிருந்து மீண்ட நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப் படுகின்றனர். அவர்களிடம் பயம், எரிச்சல், தனிமை மற்றும் கவலை பற்றிக் கொள்கிறது. அவர்களுக்கு தைரியம் ஊட்டி, அவர்களை புறக்கணிக்காது மறுபடியும் மனிதர்களாக வாழ வகை செய்ய வேண்டிய கடமை, பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், பக்கத்து வீட்டுக் காரர்களின் பொறுப்பு என்றால் மிகையாகுமா?

ஒரு மனிதன் சந்தோசமாக வாழ பொருள் மற்றும் ஆசை மட்டும் போதாது. பணத்தினை வைத்து விலையுயர்ந்த கார், உடை, செல் போன், வீடு, வித விதமான உணவு போன்றவையினை அடையலாம். அவைகளையெல்லாம் அதிர்ஷ்டத்தில் வந்தவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவையெல்லாம் தண்ணீர் போன்று கரைந்து விடும். ஒரு நாள் எங்களுடன் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஒரு இளைஞருக்கு,  வசதியுள்ள வியாபாரி பேச்சு வாக்கில் கூறிய அறிவுரை என்ன தெரியுமா , 'எனக்கு பீரோவினை திறந்தால்  ரூபாய் நோட்டு கத்தையாக இருக்க வேண்டும், அப்போது தான் எனக்கு சந்தோசமாக இருக்கும்' என்பது தான். அவருக்குத் தெரியாது அது தண்ணீர் போல கரைந்து விடுமென்று. அவைகள்  இருந்தும் சில பணக்காரர்கள் நிம்மதியாக தூக்கம் வரவில்லை என்று சொல்வதினைக் காணலாம். மனம் என்பது அலை பாயும் தகுதி பெற்றது. மூளைக்கும், நெஞ்சுக்கும் இடையே இணைப்புப் பாலம் சீராக இருந்தால் தான் அமைதி பெறமுடியும். ஆனால் மனமுடைந்த கொரானா காலமான இந்த நேரத்தில் அவர்களுக்கு மன அமைதியும் சந்தோசத்தினையும் கொடுக்க வேண்டியது நமது கடமையல்லவா?

உங்களுக்கெல்லாம் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் பற்றி தெரிந்து இருக்கும். அவர் உலகை ஆள நினைத்த மகா சக்ரவர்த்தி அலெக்ஸ்சாண்டர் குரு என்று சொல்வீர்கள். ஆனால் அவர் ஒரு தத்துவ ஞானி என்பது பலருக்குத் தெரியாது. அவர் என்ன போதித்தார் என்றால், 'நீங்கள் சங்கடத்திலும் சந்தோசமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் என்றுதான். அவர் போன்று தான் மேற்கத்திய தத்துவ மேதைகளான Marcus Aurelius, Maichael De Montaigne, Friedrich மற்றும் Simon de Bevouir போன்றோர் துன்பத்திலும் இன்பமாக இருப்பது எப்படி என்று போதித்துள்ளனர்.

தத்துவ படிப்பில் Stoicism என்று சொல்லும்போது விருப்பு வெறுப்பில்லாத மனதினை அடைவது என்று பொருள். ஒருவருக்கு கொரானா நோய் தொற்று இருக்கலாம். ஆனால் அது ஒரு உடல் நலமில்லாதது அல்ல. கொரானா நோயால் ஏற்படுகின்ற அழிவு எண்ணத்தினை வெற்றி கொண்டு நாம் வாழ வேண்டும் என்ற Essententialism  மன கோட்டையினை உறுதியாக, அறிவுடன்  கட்ட வேண்டும். அதற்காக கொரானா என்ற பயம், கவலை, தனிமை ஆகியவற்றினை தூக்கி எறிந்து ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரார் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய வில்லையென்றால் கொரானா நோயால் பாதித்தவர், கவிஞர் கண்ணதாசன் பாடியதுபோல, 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ' என்று எண்ணி, எண்ணி, மனம் புழுங்கி நடைப்பிணமாக மாற வேண்டிய சூழல் ஏற்படும். இந்த உலகம் அவசரமானது, அதில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்னு விரக்தியாக இருக்கக் கூடாது. மாறாக நோயிலும் வென்று காட்டுவேன் என்ற மன உறுதி வேண்டும்.

வாழ்க்கையின் சிரமமான நேரத்தில் மனதினை இறைநோக்கி நிறுத்தி, கவலைகளை மறந்து, தான, தர்மம் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டாலும், அன்பு, பாசத்துடனும், அடுத்தவரிடம் வெறுப்பு காட்டாமல் வாழ பழகிக் கொண்டால் உண்மையிலே நீங்கள் சன்தோஷமாக வாழ்க்கை என்ற படகினை  வெற்றி கரமாக செலுத்துவீர்கள்!

 

 

 

 

 

 

Tuesday, 27 April 2021

சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டுமா?

 


டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இந்தியாவில் மனித வாழ்வின் ஆயுள் காலம்(longevity) 1960ம் ஆண்டு 40 வயதாக  இருந்தது. அது 2020ம் ஆண்டில் 69 வயதாக  அதிகரித்துள்ளது அதன் காரணங்கள், வாழ்க்கையில் ஆரயோக்கியமாக வாழ்ந்ததும் மற்றும் சிறந்த மருத்துவசேவையும் என்பது வெள்ளிடைமலையே. அதிக வயதில் வாழ்ந்தவர்களிடம் அதிக நாட்கள் வாழ்ந்தது எப்படி என்று கனடா நியூ பவுண்ட் ஆராய்ச்சியாளரான  ஜெனடேல், கேட்கும்போது அவர்கள் சொல்லும் காரணம், 'வீட்டிலே முடங்கிக் கிடந்தால் நீண்ட நாட்கள் வாழமுடியாது',  பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததே  என்று ஆச்சரியமாக இருந்ததாக கூறுகிறார்.

            ஒரு மனிதன் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆக்கப் பூர்வமான நடவடிக்கையே முக்கியமாகும். எவ்வாறு ஒரு ஓவியன் சிறந்த படைப்பிற்கு காகிதமோ, பாறையோ  அல்லது சுவரோ தேவையோ அதேபோன்று தான் அதிக நாட்கள் பல கொடிய நோய்களுக்கிடையே வாழ சில செயல்கள் முக்கியமாகும். அவைகளை கீழே காணலாம்:

1)    உங்கள் எடையினை கவனியுங்கள்: 'Annals of Internal Medicine' வரலாற்றுப் பதிவேடுகளில், 'குழந்தைப் பருவத்திலிருந்து அதிக எடையுடன் இருந்தால் அது உங்கள் உயிருக்கு உலை வைக்கும்' என்பது தான். ஆகவே பத்து சதவீத எடையினை குறைத்தால் ஆயுளினை குறைக்கும் நோய்களான, சக்கரை போன்றவற்றைத் தடுக்கும் 

2)    2) பல்லை கவனிக்க: பல் போனால் சொல் போகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல் நோயினால் இதய நோயும், சக்கரை நோயும் உண்டாகும் என்று டொரோண்டோ பல் சினாய் ஹெல்த் சிஸ்டம் மருத்துவமனை டாக்டர் ஹாவார்டு அவர்கள் கூறுகின்றார். வாயிலுள்ள கிருமிகள் நரம்புகளில் ஊடுருவி நோயினை அதிகப் படுத்தும்' என்று கூறுகிறார்.

3)    கண்ணை பொன்போன்று கவனி : 2014ம் ஆண்டு வெளி வந்த Journal of American Medical Association அறிக்கையில் ஒருவர் கண் மங்கினால் உடனே கவனிக்கவேண்டும். ஏனென்றால்  வயதானவர்கள் கண் பார்வை மங்க ஆரம்பிக்கும், அப்போது பார்வை தெரிய அதற்கு தேவையான மறுத்துவ  சிகிச்சை அளிக்காவிட்டால் வீட்டிலே ஒரு நடை பிணமாகத் தான் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வீட்டிலே உள்ள பத்திரிக்கையினை படிக்க ஒரு பூத கண்ணாடி உதவினால் கூட தன்னுடைய வயது குறைவாகவே அவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.

4)    மூச்சிப் பயிற்சி அவசியம்: சராசரி ஒரு மனிதனுக்கு 35 வயதினை  அடைந்தாலோ மூச்சு விடுதலில் சிரமம் உண்டாகும்.. நுரையீரல் சுருங்கி, விரிந்தால் தான் மூச்சு சீராக வரும். ஆனால் அது குறைந்தால் மூச்சு தினரல் ஏற்படும். Diaphragm என்ற நுரையீரல்-வயிறு இடைப் பகுதி உதரவிதானம் ஆகும். மூச்சு இழுத்து விடும் போது நுரையீரல் கீழ் நோக்கி விரிந்து சுருங்கும். அவ்வாறு நுரையீரல் விரியாவிட்டால் மூச்சு தினரல் ஏற்படும். ஆகவே தான் தினமும் 15 நிமிடங்கள் மூச்சு இழுத்து விடும் பயிற்சி எடுக்கவேண்டும். அதுவும், மரங்கள் நிறைந்த பூங்கா பகுதி, திறந்த வெளியிடங்களில் பயிற்சி எடுப்பது சாலச் சிறந்தது ஆகும்.

5)    அதிக மாத்திரைகள் உடலுக்கு ஆபத்து: ஸ்பெயின் நாட்டின் மருத்துவர்கள் 2015ல் நடத்திய ஆய்வின்படி அதிக மாத்திரைகள் உட்கொண்டால் கிட்னி கோளாறு, வயிற்றுப புண் மற்றும் இதய பல பக்க விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

6)    இந்தியாவில் 7 கோடி சக்கரை நோயாளிகள் குறை சொல்லுவது என்னவென்றால் அவர்கள் காலில் ஏற்படும் புண்ணினால் தான் என்று கூறுகின்றனராம். ஆஸ்திரேலியாவில் நடத்தப் பட்ட ஆய்வின் படி சக்கரை நோயினால் காலில் ஏற்படும் புண்ணினால் 15 வருடங்கள் முன்பாகவே இறந்து விடுவதாக கூறுகின்றனர். காலில் வெடிப்பு ஏற்பட்டாலோ, காலில் சிகப்பு நிறம்  வந்தாலோ உடனே சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகி நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்.

7)    வயதாகும்போது எலும்புப் புரை(osteoporosis) நோயால் அவதிப் பட்டு கால்கள் நடக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். அதனை சரி செய்ய nitrogen-bisphosphonate வகைகளான மருந்துகள் மூலம 34 சதவீத இறப்புகளை தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் நாட்டில்  டார்லிக்ஸ்ட் நகரில் அமைந்துள்ள கார்வான் மெடிக்கல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டறியப் பட்டுள்ளதாம்.

8)    ஃப்ளு ஆபத்திலிருந்து  தப்பியுங்கள்: இந்தியாவில் செப்டம்பர் மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம் வரை சளித் தொல்லை அதிகமாக  இருக்கும்.  சளியினால் வருவது தான் ஃப்ளு நோயாகும். ஃப்ளு வந்தால் காய்ச்சல், அதனைத் தொடர்ந்து நிமோனியா, காது வலி, சயன்ஸ் தொந்தரவு, வயிற்றுப் போக்கு, நீர் சத்து குறைதல், ஆஸ்த்மா அல்லது சக்கரை நோய் ஏற்படும். அதனைத் தொடர்ந்து இதய நோயும் வர வாய்ப்புள்ளது. ஒரு தடவை ஃப்ளு வந்து சுகமானாலும் அதன் வைரஸ் நுரையீரல் பகுதியில் தொற்றிக் கொண்டு இருக்கும். ஆகவே சளித் தொல்லை  தானே என்று அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

9)    கழிவுப் பாதை கவனிப்பு: மனிதன் உணவு உட்கொள்ள எவ்வாறு வாய் முக்கியமோ அதே போன்று சாப்பிட்ட உணவு ஜீரணித்து கழிவுகளை வெளியே தள்ள ஆசன வாய் முக்கியம். அந்த ஆசன வாயில் ஏதாவது கட்டி வந்தால் உடனே மருத்துவரை அணுகி, கழிவு DNA பரிசோதனை, கல்சர்(culture) பரிசோதனை நடத்தி புற்று நோய் இல்லை என்பதினை உறுதி செய்ய வேண்டும்.

உணவு வழி வழிமுறைகள்: Journal of the American College of Cardiology ஆய்வின் படி 40 வயதிலிருந்து 75 வயது வரை உள்ள அமெரிக்கர்கள் 87 சதவீதம் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்திருப்பர், அவர்கள் காலை உணவினை சரியான நேரத்தில் எடுத்திராவிட்டால் என்று கூறுகின்றது. ஒரு பழமொழி சொல்வார்கள், 'காலை உணவினை இளவரசர் போல சாப்பிடுங்கள், மதிய உணவினை அரசர் போலவும், இரவு உணவினை ஏழைபோலவும் சாப்பிட வேண்டுமென்று'. காலை உணவினை மறந்தவர் யானை பலத்தினை இழந்தவர் போலாவார்.

2) 70,000 ஜப்பானிய மக்களிடம் நடத்திய ஆய்வின் படி செடிகளிருந்து முளைத்த பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக கூறுகின்றது. அவர்கள் (Longevity) சராசரி 87.45 வயதில் பெண்களும், 81.41. வயது வரை ஆண்களும் உயிர் வாழ்வதாக கூறப் படுகிறது.

3) சிகப்பு இறைச்சி(Red Meat): சிகப்பு இறைச்சியினை அதிகமாக சாப்பிடுவது உங்களுடைய உயிர் சுமார் 8 வயது குறைந்த ஆபத்து ஏற்படும் என்று Boston நகரில் உள்ள Harvard T.H Chand School Public Health ஆய்வில் கூறுகின்றது. அதே ஸ்கூல் நடத்திய ஆய்வில் சக்கரை அதிகமாக சேர்க்கப் பட்ட குளிர் பானங்கள் தினந்தோறும் குடிப்பது ஆபத்து நிறைந்தவை என்றும் சொல்கின்றது. P.MJ என்ற பத்திரிக்கை 2014ல் நடத்திய ஆய்வில் 20 ஆண்டுகளில் 89,000 பெண்களின் உணவு பழக்கங்களை ஆய்வு செய்தனர். அதில் பதப் படுத்தப் பட்ட இறைச்சி வகைகள் 22 சதவீதம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

4) நீர் அருந்துவது: சிலர் தண்ணீரினை மருந்துபோல அருந்துவர். நாம் வெப்ப மண்டலத்தில் வாழ்கின்றோம். உடலிலிருந்து வேர்வை, சிறுநீர் வெளியேறும் போது அதனை ஈடு செய்ய நீர் அருந்துவது அவசியம். உங்கள் சிறுநீர் சற்று இல மஞ்சள் நிறத்தில் வெளியேறவில்லை என்றாலும், கருப்பு நிறத்தில் வந்தாலும் நீங்கள் குறைவான நீரினை பருகுகிறீர்கள் என்பது அர்த்தம். ஆகவே சரியான அளவு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

5) நவீன உணவு தவிர்: இயற்கையாக சமையல் செய்து சாப்பிடும் பழக்கத்திலிருந்து வேக உலகில் நவீன, ஏற்கனவே தயார் செய்யப் பட்ட உணவினை சூடாக்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துடன் அதனை தொடர்ந்து உடல் ஆரோக்கியம் கெடவும் செய்கின்றது என்பதை பலர் அறியமாட்டார்கள். 2019ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் 45,000 நடுத்தர மக்களிடம் எடுக்கப் பட்ட ஆய்வில் 'ரெடி டு செர்வ்' உணவினால் பலர் உடல் கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் உணவு கெடாமல் இருப்பதற்கு பல வேதியப் பொருட்கள் சேர்ப்பதினால் அதுபோன்ற உடல் உபாதைகள் வருவதாக கூறுகின்றனர்.

6) மது உடலுக்குக் கெடுதி: 2014 ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில் மது அருந்துவதால் 14,800 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. 88,000 குடிகாரர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்திருப்பதும் தெரிகிறது. மது ஸ்பிரிட்டிலிருந்து தயாரிக்கப் படுகின்ற ஆல்ககாலனாதால் உடல் உள் உறுப்புகளை கரையான் போல அரித்து விடும்.

7) நட்ஸ் சாப்பிடுதல்: ஹார்வாட் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் தினமும் சில வால்நட்ஸ், பாதாம், முந்திரிப் பருப்பு, அத்திப் பழம் போன்றவை சாப்பிட்டால் 30 வருடங்களில் 20 சதவீதம் குறைவாகவே இறப்பார்கள் என்று கூறுகின்றது.

8) வைட்டமின்  D: மனிதன் திடகார்த்தமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ வைட்டமின் D முக்கியம். ஆகவே தான் வெளிநாட்டவர் இந்திய போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு வந்து சூரிய குளியல் செய்கின்றனர் என்பதினைக் காணலாம். நமக்கு இறைவன் இயற்கையிலே சூரிய ஒளியினை கொடுத்துள்ளான். அதனை திறந்த வெளியில் அதிகாலை மற்றும் அந்தி மயங்கும் வேளையிலும்  அனுபவிக்க வேண்டும். அதற்காக அதனை கூட்ட பல மருத்துவர்களை மருந்துக்காக நாடக் கூடாது.

9) எறும்புபோல சுறுசுறுப்பாவீர்: 2019 ம் ஆண்டு நார்வே ஸ்கூல் ஆப் சயின்ஸ் நடத்திய ஆய்வில் வீட்டில் தரையினை சுத்தம் செய்வது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தினை துடைப்பது, வீட்டுத் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, துணைவியாருக்கும்  சிறு, சிறு உதவி செய்வது மிகுந்த ஆரோக்கியம் தரும் என்று கூறுன்கிறது.  ஜெர்மனி அதிபர் அஞ்சலா மார்கல்  18 வருடம் ஜெர்மனியினை சிறப்புடன் ஆட்சி செய்து 2021 ஜனவரி 19ல் தானாகவே பதவி விலகிய போது நிருபர்கள், 'உங்கள் உடையினை யார் துவைப்பது’ என்று கேட்டபோது, துணிகளை தான் வாஷிங் மெஷினில் அடுக்கி வைப்பதாகவும், தனது கணவர் அதனை துவைத்தப் பின்பு எடுப்பார் என்றும், ‘யார் சமைப்பது’ என்ற கேள்விக்கு, தான் சமைப்பதாகவும், தனது கணவர் சமையலுக்கான காய், கறிகளை நறுக்கித் தருவார் என்றும், வீட்டினை யார் சுத்தம் செய்வது என்ற கேள்விக்கு தான் தான் என்றும், தான் வீட்டில் வேலைக் காரர்களை வைத்துக் கொள்வதில்லை’ என்றும் கூறுவது எதனைக் காட்டுகின்றது என்றால் நாட்டிற்கு ராஜாவானாலும், வீட்டிற்கு பொறுப்பான மற்றும் உறுதுணையான் மனைவியாக இருந்துள்ளார் என்பதனையும் காட்டுகின்றது தானே!

10) விளையாட்டு பயிற்சி: ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா பல்கலைக் கழக மனோதத்துவ நிபுணர், டாக்டர் ஸ்டுவர்ட் மேக் டொனால்டு, பல வயதானவர்கள் பற்றி ஆராயும் போது, வயதானவர்கள் தெரிந்த விளையாட்டினை நண்பர்கள் உடன் விளையாடுவதால் அவர்களுடைய நினைவாற்றல் அதிகப் படுத்துவதுடன், கலகலப்பாகவும் வீட்டில் நடமாடுவதாக கூறுகின்றார். விளையாட்டே தெரியாது என்றாலும் வெளியே நடைப்பயிற்சியில் சில நண்பர்களுடன் கூட செல்வது நல்லது என்றும் தங்களை தனிமைப் படுவத்திலிருந்து காக்கும் என்றும் கூறுகின்றார்.

வேலையினூடே ஓய்வெடுத்தல்: 1) ஒரு மனிதனுக்கு தூக்கம் மிகவும் அவசியம். குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் தொலைக் காட்சி, செல் போன் போன்றவைகளை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி விடுங்கள். இரவு விடி விளக்குகள் ஒளி கண்ணைக் கூசும் என்றால் தூங்கும் போது கண்ணுக்கு ஒளி வராமல் தடுக்கும் கட்டையான துணியினை கண்ணில் கட்டிப் படுங்கள். எப்படி விமானத்தில் இரவில் பயணம் செய்யும்போது தூங்குவதற்கு தனி கண் மறைப்பான் கொடுக்கின்றார்களோ அதேபோன்று வாங்கி உபயோகிங்கள்.

2) லான்செட் என்ற குடும்ப பத்திரிக்கையில் 2018ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில், அலுவலக வேலையினை வீட்டிற்கு கொண்டுபோய் அதில் கவனம் செலுத்தும் ஆண்கள் 68 சதவீத பேர்களுக்கு இதய நோய் வருகின்றது என்றும். ஆனால் பெண்களை அதுபோன்று பாதிப்பதில்லை என்றும் கூறுகின்றது.

உங்கள் மகிழ்ச்சி தரும் இடங்கள் தேடுங்கள்: 1) நீங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதோ அல்லது சைக்கிள் பயணம் செய்யும்போதோ மரம், செடி நிறைந்த பகுதிகளில் செல்லவும். அவ்வாறு இயற்கை வளங்களை ரசிக்கும் உங்கள் இறப்பு பத்து வருடங்களில் 10-15 சதவீதம் குறையும் என்று The Lancet Journal அறிக்கை சொல்கிறது.

2) அமெரிக்காவினைச் சார்ந்த John Hopkins பல்கலைக் கழகம் வயதாகுவது மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய 2013ல் நடத்திய ஆராய்ச்சியில்,  யார் குடும்ப இன்ப-துன்பங்களில் பங்காற்றுகிறார்களோ அவர்கள் உயிர் 18 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றது.

3) அமெரிக்காவின் McMaster பல்கலைக் கழகம் 2019ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் 30 வருடம் தனியாக வசித்துவரும் ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 23 சதவீதம் தனிமை வாட்டி சீக்கிரமே இறந்து விடுகின்றார்கள். ஆகவே தான் ஆணுக்குப் பெண் துணை என்ற தாரக மந்திரத்துடன் பலர் குடும்பம் நடத்துகின்றனர்.

4) புகை மண்டலத்திலிருந்து தப்பியுங்கள்: அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக் கழக ஆய்வின் படி நீங்கள் புகை பிடிக்காதவர்களாக இருந்தாலும், புகை பிடிப்பவர் அருகில் நீண்ட நாட்கள் இருந்தீர்கள் என்றால் அவர்கள் புகைக்கும் போது அதில் வரும் புகையினை நீங்கள் சுவாசித்தல், அல்லது புகை மண்டல  பகுதியில் வாழ்வது உங்கள் ஆயுளை குறைக்கும் என்றும் கூறுகின்றது.

5) உங்களுக்கு வயதாகும்போது மிகவும் வெப்பமான நேரங்களில் வீட்டினுள்ளோ அல்லது உங்கள் அலுவலக கட்டிடத்தினுள்ளோ பெரும்பாலும் இருப்பது சூரிய வெப்ப தாக்குதலிருந்து தப்பிக்க வகை செய்யும்..

மனிதன் உயிர் வாழ்வது நம் கையிலில்லை என்றாலும், மனிதன் புத்திசாலித்தனமாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் அதிக நாட்கள் வாழலாம் எபதினை தான் மேலே குறிப்பிட்ட ஆய்வுகள் கூறுகின்றன அல்லவா?

 

Tuesday, 30 March 2021

கத்தியெடுத்தவன், கத்தியால் சாவானா?

 


டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்,(ஓ)

ஐ.நா. சபையின் இலங்கைக்கான மனித உரிமை மீறல் தீர்மான ஓட்டெடுப்பு 23.3.3021ல் நடந்தது. அதில் 22 நாடுகள் ஆதரவு அளித்தும், சீனா, பாகிஸ்தான்,மற்றும் 9 நாடுகள் எதிர்த்தும், இந்தியா உளபட 14 நாடுகள் வெளிநடப்பு செய்தாலும்,  தீர்மானம் நிறைவேறியது. இந்தியா வெளி நடப்பு செய்ததை எதிர்பாக்காத இலங்கை தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகள், மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது ஊடகங்கள் வாயிலாக அறிவோம். இந்தியா அவ்வாறு செய்ததிற்கு சில காரணங்கள் இருக்கலாம், எங்கே குஜராத்தில் 2002 ம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்தினை காரணம் காட்டி கிட்டத்தட்ட 3000 அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று, அவர்கள் இருக்குமிடம் நாசப் படுத்தி, அவர்கள் வியாபார நிறுவனகங்கள் கொலுத்தப் பட்ட விவகாரம், மற்றும் சென்ற ஆண்டு CAA, CRC மசோதா நிறைவேற்றினத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட முஸ்லிம் எழுச்சியினை எவ்வாறு சங் பரிவார் துணையுடன் அடக்க முயன்றனர் என்று உலகமே அறிந்திருக்கும்போது, எங்கே அந்த விவகாரம் மறு மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு வழி வகுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தால் கூட இருக்கலாம் என ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

            இப்போது, இலங்கையில் அப்படி என்ன மனித உரிமை மீறல் என்று பார்க்கலாம். இலங்கை ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1948ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கள மக்களின் அத்துமீறல் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தலையெடுத்தது. மேற்படி பகுதிகளில் குடியேறியவர்கள் தமிழ் நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றால் மிகையாகாது. 1956ம் ஆண்டு இலங்கை பிரதமர் பண்டார நாயகா சிங்கள மொழி ஆட்சி மொழி என்று அறிவிப்பு செய்தது இலங்கை  தமிழர்கள் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 1970ம் ஆண்டு கல்வியில் கொண்டு வரப் பட்ட, 'Policy of Standardization' என்ற கொள்கை தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கட்க தடைக் கல்லாக இருந்தது. மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போன்றவைகள் தொடர்ந்தன. தமிழ் மாணவர்கள் போராட்டத் தலமாக Jaffna பொது நூலகம் செயல் பட்டது.  1981ம் வருடம் சிங்கள மக்களாலும் அவர்களுக்கு உறுதுணையாக ராணுவமும் செயல் பட்டு Jaffna நூலகம் கொலுத்தப் பட்டது. பௌத்த மதத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்தது தமிழ் மக்களை மொழி, இனம், மதத்தினால் அரசு பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறிந்த படித்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து ‘தமிழ் ஈழம்’ பெறுவதே ஒரே வழி என்று முடிவெடுத்தனர்.

            ஈழ தமிழர்களின் எழுச்சி தலைவர்களான செல்வராஜா என்ற குட்டிமணி, நடராஜா என்ற தங்கதுரை மற்றும் 30 தமிழ் இளைஞர்கள் ‘வெளிகொடா’ என்ற சிறையில் இருந்தபோது 25.7.1983 அன்று சிங்கள சிறை அதிகாரிகள் துணையுடன் சிங்கள வெறியர்களால் பரிதாபமாக கொல்லப் பட்டது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் ஈழம் சுயாட்சி என்ற குரலிலிருந்து தமிழ் ஈழம் விடுதலை என்ற கோசம் ஆரம்பித்தது. சிங்கள வெறியாட்டத்திற்குப் பயந்து போராளிகள் தமிழகத்திற்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் பயிற்சி முகாம், மற்றும் பிரசாரா பொருட்காட்சிகள் நடத்தப் பட்டன. அதற்கு மத்திய மாநில அரசுகளும் உதவி செய்தன. 1984ம் ஆண்டு ஊட்டியில் ADSP ஆக பணியாற்றியபோது என்னிடம் மூன்று இலங்கை தமிழ் இளைஞர்கள் வந்து தமிழர் போராட்ட பொருக்காட்சி நடத்த வேண்டுமென்றனர். அப்போது அதில் ஒருவர் கழுத்தில் செப்பு தகடால் ஆனா தாயத்து அணிந்திருந்தார். அதனை கூர்ந்து பார்த்தபோது அதில் Al Fatah என அரபிக் மொழியில் இருந்தது. அதனை சுட்டிக் காட்டி அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் 'தான் பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றதாகவும், அவர்கள் பயிற்சி எடுத்ததிற்காக நம்பர்' என்றார். அதன் பிறகு  நான் 1986 ல் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது TELO இயக்கம் நடத்திய பயிற்சி முகாமை உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி Nailwal அவர்களுடன் சென்று கொல்லிமலையில் சோதனையிட்டோம்.

1)    ஈழ விடுதலை போராளிகளில் இரு பிரிவுகளாக காணலாம். பிரபாகரன் தலைமையிலான LTTE மீனவர் சமுதாயமான ‘கரையார்’ என்ற சமூகத்தினை சார்ந்தவர்களாகவும், மற்ற அமைப்புகள் ‘வெள்ளாளர்’ என்ற விவசாய சமூகத்தினவராகவும் இருந்தனர். LTTE இயக்கத்தில் பிரபாகரனும், பாலசிங்கமும் இணைந்து செயலாற்றினர். அவர்களுக்கு வெளிநாடுகளிருந்து பணம் பெற்றது KP என்ற பத்மநாபனாகும் என்று உலக பயங்கரவாத பொருளாதாரம் ஈட்டும் பட்டியலில் உள்ளார். ஆரம்பத்தில் ஒன்றாக இணைத்து போராட்டம் நடத்திய விடுதலை இயக்கத்தினர் LTTE இயக்கத் தலைவர் பிரபாகரனால் மற்ற இயக்கங்களை கட்டுப் படுத்தும் முயற்சியில் இறங்கியதால் இரு பிரிவாக செயல் பட்டனர். ஒன்று பிரபாகரன் ஆதரவு மற்றொன்று அரசுக்கு ஆதரவானது.

2)    Elam Revolutionary Organisation of Students(EROS ) பாலகுமார் தலைமையில் ஈழப் போராட்டம் நடத்தினர்.

3) EPRLF Elam People's Revolutionary Libration Front Pathamanaba       தலைமையில் அரசு சார்ந்த இயக்கமாக LTTEக்கு மாற்றாக வரவேண்டும் என்று    தலையெடுத்தனர்.

4) EPDP Elam People Democratic Front டக்லஸ் தேவானந்தா தலைமையில்     அரசு சார்ந்த இயக்கமாக செயல்பட்டு இலங்கை பிரதமர் சந்திரிகா    பண்டாரநாயக்கா மந்திரி சபையில் மந்திரியாகவும் செயல் பட்டார். இவருடைய இயக்கம் சென்னை சூளைமேட்டில் இருந்தபோது அங்குள்ள மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற வக்கீல் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தபோது டக்ளஸ் தேவானந்தா கைத்துப்பாக்கியால் சுட்டபோது வக்கீல் இறந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

   உலக அளவில் மிகவும் அபாயகரமான தீவிரவாத இயக்கங்களில் முக்கியமான   மிகவும் வல்லமை கொண்ட LTTE இயக்கம் தேய் பிறையாகு மங்கி மறைந்தது   ஒரு வரலாற்றுக் கதை எனலாம்:

25 வருட கால தமிழ் ஈழப் போர் வெற்றி கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணங்கள் ஆராய்வோமென்றால்:

1)    ஈழ போராட்டக் குழுவினரிடையே யார் பெரியவர் என்ற போராட்டம் உச்சக் கட்டத்தில் சகோதர யுத்தம் விஸ்வ ரூபம் எடுத்தது. அதன் பலன்  ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த TELO அமைப்பின் தளபதி ஸ்ரீ சபாரத்தினம் LTTE முன்னாள் சரணடைந்தபோதும், தி.மு.க தலைவர்  'விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனை நோக்கி, 'தம்பி சபாரெத்தினத்திற்கு உயிர் பிச்சை கொடு' என்று வேண்டுகோள் விடுத்தும் சபாரத்தினம் 1986ல் கொல்லப் பட்டார். தமிழர் ஆதரவு தலைவர் பெரியவர் அமிர்தலிங்கம் 1989ம் ஆண்டு கொல்லப் பட்டார். பிரபாகரன் தமிழகத்தில் தஞ்சம் கொண்ட நாட்களில் புலிகளின் இயக்கத்தினை தலைமையேற்று நடத்தி இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தளபதி மாத்தையா 1994ல் கொல்லப் பட்டார். பிரபாகரனுக்கு சிங்கப்பூரிலிருந்து கப்பலில் ஆயுதம் கொண்டு வந்த கிட்டு என்ற கிருஷ்ணகுமார் நடுக் கடலில் மடிந்தார். EPRLF சென்னை அலுவலகத்தில் இருந்த அதன் தலைவர் பத்மநாபா மற்றும் 12 ஸ்ரீலங்கன் தமிழர், ஒரு சென்னை வாசியும் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் 1990ல் கொல்லப் பட்டதால் அன்றைய தி.மு.க அரசுக்கு அவப் பெயர் உண்டானது.

2)    இலங்கை பெட்டிக்கோலா மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் அதிகாலை பாஜ்ர் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது 1990 ல் துப்பாக்கி பிரயோகம் செய்து கிட்டத்தட்ட 300 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டது, முஸ்லிம்களிடையே இன்னமும் விடுதலைப் புலிகள் பெயர் கேட்டாலே அதிர்ச்சியில் உறைந்து விடும் அளவிற்கு பயங்கரமான இயக்கமானது.

3)    அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி  இலங்கையில் அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் நிம்மதி பெறவும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையவும் 1987ல் இந்திய ராணுவத்தினை அனுப்பினார். ஆனால் விடுதலிப் புலிகள் இந்தியப் படைகள் மீது அபாண்டமான பழிகள் சுமத்தியதுடன் இலங்கை அரசும் உங்கள் பணி போதும் என்று சொன்னதால் 1990ம் ஆண்டு ராணுவம் திரும்பப் பெறப் பட்டது. அதற்கு பலன் ராஜிவ் மீது கோபம் கொண்ட விடுதலைப் புலிகள் மே மாதம் 21ந்தேதி 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டு மூலம் அவரும் அவருடன் சேர்ந்து 13 பேர்களும் கொல்லப் பட்டனர். இந்திய மண்ணில் வருங்கால உலக தலைவர் ஒருவர் கொல்லப் பட்டது தமிழர் மட்டுமல்லாது உலக அளவில் சோகத்தினை ஏற்படுத்தியது.

4)    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர்கள், 'வினை விதித்தவன் வினை அறுப்பானென்று' அதற்கெனங்க புலிகள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் காற்றில் பறந்தது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா மற்றும் 32 ஐரோப்பிய நாடுகள் LTTE இயக்கத்தினை தடை செய்தது.

5)    இந்தியாவில் நடத்திய கொலைவெறி தாக்குதல் இலங்கையிலும் நடத்தப் பட்டது. 1993ம் ஆண்டு இலங்கை பிரதமர் பிரேமதாசா கலந்து கொண்ட 1993 மே தின ஊர்வலத்தில் மனித வெடிகுண்டால் கொல்லப் பட்டார். அதேபோன்று அன்றைய பிரதமர் சந்திரிகா பண்டாரநாயகா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் மீது கொலைவெறி 1999ல் நடத்தப் பட்டு ஒரு கண்ணை இழந்தார்.

6)    இந்திய மண்ணில் மற்றொரு தாக்குதலும் நடைபெற்றது. 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் சென்ற வாகனத்தினை இராமநாதபுரம் பட்டினப் காத்தான் செக் போஸ்டில் தடுத்து நிறுத்தியபோது சுப்பிரமணியன் என்ற காவலரை சுட்டுத் தள்ளிவிட்டு சென்றது தமிழக காலவரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

7)    LTTE அமைப்பின் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கருணா,  பிரபாகரன் செயல் பிடிக்காது 5000 செயல் வீரர்களுடன் தனியாக இருந்து அரசு சார்ந்த நிலையினை எடுத்தார்.

8)    2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 30,000 கடற்கரை ஒர மக்கள் மடிந்தது விடுதலை இயக்கத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

9)    25 வருட தமிழ் ஈழ போராட்டம் மூலம் தமிழர் பொருளாதாரம் பெரிதே பாதிக்கப் பட்டது. ஐ.நா. ஆய்வின்படி தமிழ் விடுதலை போரில் ஒரு லட்சம் மக்கள் மடிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

10)  உலகெங்கும் தீவிரவாதத்தினை அழித்திடும் இயக்கத்திற்கு குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்தந்த அரசுக்கும் உதவியும் உலக நாடுகள்  செய்தது. தழீழ போரினால் பாதிக்கப் பட்ட இலங்கையில் அவர்களை ஒழிக்க நிலையான அரசு வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டு அதற்கு பௌத்த சாமியார்களும் ஆதரவு தெரிவித்ததால் இலங்கையில் ராஜபக்சே அரசு பதவி ஏற்று இறுதி கட்ட போர் நடந்து 2009ம் ஆண்டு முல்லை வாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள், பனைய கைதிகளாக பிடிக்கப் பட்ட அப்பாவி தமிழர்கள் இறந்ததும், தளபதி பிரபாகரன் கொல்லப் பட்டும் LTTE இயக்கத்தால் 16, மே மாதம் 2009ல் தோல்வியினை ஒப்புக் கொள்ளப் பட்டது.

இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த தீவிரவாத இயக்கமும் நிலையான அரசிடம் தோல்வி அடைவது உறுதி. 1991ல் ராஜிவ் காந்தி குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டு ஜெயிலில் உள்ளனர். அதனை ஒரு கருவியாக வைத்து தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் பொம்மலாட்டம் செய்கின்றனர். தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று. ஆனால் தண்டனை பெற்ற  முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பியாஸ், அவருடைய சகோதரர் ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர்

ஸ்ரீலங்காவிலிருந்து கள்ளத்தனமாக இந்தியா வந்தவர்கள். அதில் பேரறிவாளன் மட்டும் தான் தமிழகத்தினைச் சார்ந்தவன். ஸ்ரீலங்காவினைச் சார்ந்தவர்களை விடுதலை செய்தால் அவர்கள் இலங்கை அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் அவர்கள் அங்கு சென்றால் அவர்கள் உயிர் வாழமுடியுமா என்பதே சந்தேகம். அதெல்லாம் இங்குள்ள தமிழர் கட்சிகளுக்குத் தெரியும் ஆனாலும் அரசியலுக்காக குரல் கொடுக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் எத்தனையோ தமிழ்நாட்டின் கைதிகள் 20 வருடத்திற்கு மேலாக ஜெயிலில் வாடுகின்றனர் அவர்கள் விடுதலைக்கு குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று கேட்க முடியவில்லை?

இந்த இடத்தில் ராஜிவ் காந்தியின் அருமை மகளார் பிரியங்கா வேலூர் சிறையில் இருக்கும் நளினியினை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்க 18.3.2008 ம் ஆண்டு முன்னறிவிப்பு இன்றி சென்றார். அவர் வந்ததினை ஒரு கனவு போல இருந்தது என்று பின்பு நளினி  கூறியுள்ளார். பிரியங்கா, நளினியினை பார்த்ததும், 'My father is a good and soft man, why did you do it? you would have sorted out the issues whatever it may be through dialogue' (என்னுடைய தந்தை நல்லவர், மென்மையானவர், ஏன் அவ்வாறு செய்தீர்கள், எந்த விஷயமாக இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே) என்று சொன்னது மட்டுமல்லாமல் கண்ணீர் விட்டு அழுதாராம். தந்தையினை இழந்த மகள் அதனைவிட மிகவும் மென்மையான ஆனால் கடுமையான உள்ளர்த்தம் உள்ள வார்த்தைகளை யாரும் சொல்ல இயலாது. நளினியும் அழுதாராம், ஆனால் தான் நிரபராரி என்று மட்டும் சொன்னாராம். 'எங்கள் குடும்பம் உங்களை மன்னித்து விட்டது' என்று சொல்லி வந்து விட்டாராம். அந்த வார்த்தைகள் நளினி உயிருடன் இருக்கும் வரை அவரை வாட்டி எடுக்கும் என்பது நிச்சயமல்லவா

தமிழர் பழமொழி, 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொள்ளும்',  'கொலைக் குற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தற்காலிகமாக தப்பிக்கலாம் ஆனால் ஒரு போதும் தப்பிக்க முடியாது' 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்' போன்ற வாசகங்கள் LTTE பிரபாகரன் போன்றவர்களுக்கு தகும் என்றால் மிகையாகாது தானே?

 

Friday, 5 March 2021

நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை நவீன உலகில்!


இந்த வருடம் பிப்ரவரி 25 ந்தேதி பாக் பிரதமர் அரசு பயணமாக இலங்கை பயணம் மேற்கொண்டபோது இந்திய வானில் அவருடைய விமானம் பறக்க நமது நாடு அனுமதி அளித்தது என்று அனைத்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் படம் பிடித்துக் காட்டின. அதற்கு காரணம் நமது நாட்டின் ஜனாதிபதி ஐலாண்ட் பயணமாக 2019 வருடம் செப்டம்பர் 7ல் பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தான் நாட்டின் வான் வெளியினை பயன் படுத்த அனுமதி அளிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த நாடு சொல்லும்போது ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு சலுகையினை ரத்து செய்ததினை காரணமாக காட்டப் பட்டடது.

            பிரிட்டிஷ் அரசினை இந்திய மண்ணிலிருந்து இணைந்து போராட்டம் நடத்தி விரட்டி விட்டு இந்திய துணைக் கண்டத்தினை இரு கூறாக்கி இந்திய நாடு என்று 1947 ஆகஸ்ட் மாதம் 15 சுதந்திர நாடாகவும் இந்தியாவிற்கு மேற்கு-கிழக்குப் பகுதிகளை இரண்டாக இணைத்து பாகிஸ்தான் நாடாகவும் 1947 ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி சுதந்திர நாடாகவும் அறிவித்தது உங்களுக்குத் தெரியும். அவ்வாறு இரு கூறாக ஆக்கியத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும், அவ்வாறு பிரிந்ததினால் இரு நாடுகள் சந்தித்த சவால்கள் பற்றி இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

            இந்தியா சந்தித்த சவால்களை மூன்று பகுதிகளாக காணலாம்:

1) முதல் பகுதி(1947-1967)

சொத்துப் பிரித்தல்: ஒப்பந்தப் படி இந்தியா பாகிஸ்தானுக்கு ரூ 55/ கோடிகள் கொடுப்பது.

அகதிகள் பிரட்சனை: 1948ம் வருட மத்தியில் 50,50,000 இந்துக்கள் இடம் பெயர்ந்து இந்தியாவிற்கும், அதேபோன்று அதிக அளவில் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து பாகிஸ்தானுக்கும் சென்றனர். அவர்களில் இந்துக்கள் ரூ 500 கோடி சொத்துக்களும், முஸ்லிம்கள் ரூ 100 கோடி சொத்துக்களும் விட்டுவிட்டு இடம் பெயர்ந்தனர்.

காஷ்மீர் பிரட்சனை: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் நீங்கா பிரட்சனை இருப்பது காஷ்மீர் ஆகும். காஷ்மீரை ஆண்ட மன்னன் ஹரி சிங் ஆகும் ஆனால் 75 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆகும். பிரிவினையின் போது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் கொடுத்தது ஷேய்க் அப்துல்லா ஆகும். ஆனால் மன்னர் ஹரி சிங் தனி அரசராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதன் பின்னர் இந்திய அரசு காஷ்மீரை இணைக்கும்போது முஸ்லீம் வாழும் பகுதி பாகிஸ்தான் துணையுடன் ஆசாத் காஷ்மீனாரது. அதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் சமரச பேச்சில் இந்திய காஷ்மீர் மக்கள் விருப்பம் என்ன என்று அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் அது இது வரை நிறைவேறவில்லை.

1950ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய பிறகு 1951ல் முதலாவது தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் 70 சதவீத வாக்குகளைப் பெற்று அரியணையில் ஏறியது.  அப்படி பதவி ஏற்ற பிறகு முதல் சவால் மொழிவாரி மாநிலம் கேட்டு நடந்த போராட்டம். ஆங்கிலேயர் இந்தியாவினை பிரிவினை செய்யும்போது இங்குள்ள மக்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநிலங்களை பிரிக்கவில்லை. ஆகவே தான் சுதந்திரத்திற்கு பின்பு போராட்டம் நடந்தது.

இண்டஸ் நதி நீர் பங்கீடு சிக்கல்: இண்டஸ் நதி பியாஸ், செனாப், கார், கொல்கிட், ஹான்ஸ், ஜீலம், கபூர், ரவி உள்ளடக்கிய 19 நதிகளைக் கொண்டது. அவை சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்கைக்குள் செல்கிறது.

இந்திய-சீன எல்லை வரம்பு லார்ட் மௌண்ட்பாட்டன் எல்லைக் கோடு இமய மலையினை ஒட்டியுள்ளது. திபெத்தினை சீனா ஆக்கிரமிப்பு 1959ல் செய்தபோது புத்த மத தலைவர் தலாய் லாமா இந்தியாவிற்கு அடைக்கலம் புகுந்தார். அதனை எதிர்த்த சீனா 1962 அக்டோபர் மாதம் தனது ஆக்கிரமிப்பினை தொடர்ந்தது. அதனை இந்தியா எதிர்த்தது. 1962 நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா-பாக் யுத்தம்-1965: பாகிஸ்தான் இந்திய காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை 1965 ஏப்ரல் மாதம் அனுப்பத்தொடங்கியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் தீவிரமான யுத்தத்தில் இறங்கின. அதன் பின்பு ரஷியாவும், அமெரிக்காவும் முயற்சி எடுத்து  ஐ.நா மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு ஜவஹர்லால் நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்று தாஷ்கண்ட் ஒப்பந்தமும் செய்து கொள்ளப் பட்டது. அதன் பின்பு லால் பகதூர் சாஸ்திரி மறைவு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியினை அதிகமாக பாதித்தது. பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1966ல் அரியணையில் பிரதமராக ஆனார்.

இரண்டாம் பாகம்(1967-1977)

1967ல் நடந்த தேர்தல் காங்கிரஸ் குறைந்த அளவே உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. எதிர்க்கட்சிகள் தங்களுடைய பலத்தினை அதிகப் படுத்தினர்.

நக்சால்பாரி தலையெடுத்தல் : வேலையின்மை, மிட்டா மிராசுதாரர்கள் ஏழை விவசாயிகளை கொடுமைப்படுத்தியது போன்ற பிரச்சனைகள் நாக்சால்பாரி  என்ற தீவிரவாத இயக்கம் மேற்கு வங்காளத்தில் நாக்சால்பாரி என்ற கிராமத்தில் வித்திட்டு படிப்படியாக தென் மாநிலங்களுக்குப் பரவியது. அதன் குறிக்கோளே ஜனநாயகம் வன்முறையில் தான் செயல் படுத்தமுடியும் என்பது தான். பங்களாதேஷ்  யுத்தம்: இந்தியா பங்களா தேஷ் யுத்தத்தில் 1971ல் பங்கேற்றது. அதன் பின்பு தனியார்வங்கிகள் தேசியமாக்கப் பட்டது.

இளைஞர்கள் வேலையின்மை, நிர்வாகம், அரசியலில் ஊழல் ஆகியவை அரசினை மிகவும் பாதித்தது. மக்கள் கிளர்ச்சி பல இடங்களில் ஏற்பட்டது. வினோபாஜியின் சீடரான பிஹாரைச் சார்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் ஒரு பெரிய இயக்கமே ஆரம்பித்து மக்கள் புரட்ச்சிக்கு வித்திட்டார். அதனை ஒடுக்க இந்திரா காந்தி எமெர்ஜென்சியினை அமல் படுத்தினார். அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி செய்த குடும்ப கட்டுப்பாடு, எதிர் கட்சி தலைவர்கள் சிறை போன்றவை மக்களை உலுக்கச் செய்து காங்கிரஸ் மீது வெறுப்பு உண்டாக்கியது.

பாகம் மூன்று1977-1984: தன்னுடைய கட்சி பலத்தினை அதிகரிக்க 1977ல் இந்திரா தேர்தல் அறிவித்தார். ஆனால்  பரிதாபமாக அவரும், சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டனர். எதிர் கட்சிகள் இனைந்து ஜனதா அரசு அமைத்தது. பாடுபட்டு அமைத்த அரசு கோமாளித்தனமான சில தலைவர்களாலும் அவர்கள் செயல் படுத்திய திட்டங்களாலும் மக்கள் நம்பிக்கையினை இழந்தனர். மறுபடி 1980ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

பஞ்சாப் தீவிர வாத இயக்கம்: பழைய பஞ்சாப் மாநிலம் சீக்கியர்களையும், ஹிந்துக்களையும் கொண்டதாக அமைந்தது. பிரிவினைக்குப் பின்பு அகாலி தால்  தனி நாடு வேண்டும் என்று குரல் கொடுத்தது. சீக்கியரின் பொற்கோவிலிலே தங்கள் தீவிர வாத தளத்தினை அமைத்தினர். ஒரு பக்கம் லோங்கோவால் தலைமையில் மிதவாத இயக்கமும், இளைஞர் பட்டாளம் இளைஞர் மதகுரு பிந்தரன் தலைமையில் தீவிரவாத இயக்கமாகியது. வன்முறை தாங்காமல் இந்திரா காந்தி பொற்கோயிலுக்குள் டாங்கி படையினை அனுப்பி அவர்களை ஒதுக்கினார். அதன் விளைவு இரும்பு பெண் என்றழைக்கப் பட்ட இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாத படை பிரிவினரால் தனது வீட்டிலேயே கொல்லப் பட்டார்.

பாகிஸ்தான் சந்தித்த சவால்கள் :

14.8.1947 அன்று இரவு சுதந்திரம் அடைந்தது. அதன் ஜனாதிபதியாக முகமது அலி ஜின்னாவும், பிரதமராக லியாகத் அலி அவர்களும் பொறுப்பேற்றார்கள். அந்த நாடு அரசியல், பொருளாதாரம், பூகோள அமைப்பில் ஒத்துவராத நாடாக அமைந்தது. குறைந்த பொருளாதாரத்தினை வைத்து லட்சக் கணக்கான அகதிகளை சீரமைக்க பெரும் செலவானது. பாகிஸ்தானின் மேற்குப் பகுதி ஒரு பக்கமும், கிழக்கு பகுதி மேற்கு வங்காளத்தினை ஒட்டி அமைந்தது.

27, Oct, 1947ல் இந்தியாவுடன் அறிவிக்கப் படா போர் நடந்தது. 21.3.1948ல்  பல மாநிலங்கள் உரிமை கேட்கும் போராட்டமும் ஆரம்பித்தது.1948ம் வருடம் ஏப்ரல் மாத தண்ணீர் பகிர்தளித்தல் சம்பந்தமாக சச்சரவு ஏற்பட்டது. மகாத்மா காந்தி சுடப் பட்டு இறந்த வருடம், 11.9.1948 அன்று கவர்னர் ஜெனரலாக இருந்த ஜின்னா அவர்கள் மறைந்தார்கள்.

1) பூகோள தாக்கம்:

பாகிஸ்தான் இயற்கையான எல்லையும், நதியும், மலையுமில்லை. கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பகுதிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் அப்பால் இருந்தது. அவர்களுக்குள் அவர்களுடைய மார்க்கமான இஸ்லாத்தினைத் தவிர எந்த பிணைப்புமில்லை.

2) மதக் கலவரம்:

மதக் கலவரத்தில் 10 லட்சம் மக்களுக்கு மேல் இடம் பெயர்ந்தனர். எண்ணெற்றோர்  மறைந்தனர்.

3) அரசு சம்பந்தமான தஸ்தாவேஜுகள் டெல்லி, கோல்கட்டா மற்றும் கராச்சியிலிருந்து வரவேண்டிருந்தது.

மேற்கு பாகிஸ்தானிலுருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு எண்ணெற்ற அதிகாரிகள் இடம் பெயர வேண்டியதிருந்தது.

4) பெரிய தொழிற்சாலைகள் இல்லை. 70 சதவீதம் விவசாயத்தினை நம்பி இருந்தனர். 90 சதவீதம் சணல் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதியானது.

5) பதிவு செய்யப் பட்ட தொழிற்சாலைகள் 10 சதவீதம், மின்சாரம் 5 சதவீதம், தாது வளங்கள் 10 சதவீதம்.

6) இந்தியா பொருளாதாரம் மற்றும் ராணுவ தளவாடங்களில் 17 சதவீதமும் பாகிஸ்தானுக்கு 5 சதவீதமும் என்ற விகிதாசாரத்தில் பிரிவு செய்யப் பட்டது.

7) இண்டஸ், ஜீலம், செனாப் நதிகள் சம்பந்தமான தகராறுகள் தீர்பாயத்திற்கு அனுப்பி வைப்பது.

பாகிஸ்தானின் நீங்கா சிக்கல்களாக கீழ்க்கண்டவை இருந்து வருகின்றன:

1) இங்குள்ள மக்கள் ஒரே கலாச்சாரத்தினை சேர்ந்தவர்களாக ஒற்றுமையாக இருந்ததில்லை. வடக்கே பக்துன் இனமும், மேற்கே பலூச் இனமும், தெற்கே சிந்தி இனமும், வட கிழக்கில் பஞ்சாபி மக்களும், கிழக்கே பெங்காலி இனமும், தனி மொழியுடன் செயலாற்றினர்.

2) பெங்காலி மக்கள் பாகிஸ்தான் ஜனத்தொகையில் 56 சதவீதம் இருந்தனர். ஆனால் 6 சதவீத மக்கள் உருது மொழி பேசுவதாகவும் இருந்தனர். 1948 ம் வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வருகை தந்தபோது இனிமேல் உருது பொழிதான் ஆட்சிமொழி என்ற பொரியினை கொழுத்திப் போட்டது தான் தாமதம் அங்குள்ள மக்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டுமென்று கூறி குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

3) பாகிஸ்தானில் பொது மக்கள் கல்வி, கேள்வியில் பின் தங்கி இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் டாக்காவில் மட்டும் ஒரு பல்கலைக் கழகம் இருந்தது.

4) காஷ்மீர் சிக்கல் மிகவும் தலைவலியானது. மஹாராஜா ஹரி சிங் முஸ்லிம்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே லட்சக் கணக்கான மக்கள் பாகிஸ்தான் நோக்கி இடம் பெயர்ந்தனர். பாகிஸ்தான் தனது படையினை அனுப்பியது. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போர் நிறுத்த ஒப்பம் செய்தது. அதன் படி காஷ்மீர் மக்கள் தங்கள் அரசியல் அமைப்பை முடிவு செய்ய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்று. ஆனால் அது இது வரை நடத்தப் படவில்லை.

5) கிழக்கு பாகிஸ்தான் மக்கள்தங்களை மேற்கு பகுதி மக்கள் புறக்கணிக்கின்றனர் என்று எண்ணி 1950ல் தங்களுக்கு தனி நாடு வேணுமென்று 1950ல் குரல் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து 1969ல் பொது மக்கள் புரட்சி கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு 1970ல் நடத்தப் பட்டது. அந்த தேர்தல்   முடிவில் அவாமி லீக் அதிக இடம் பிடித்தது. முஜீப் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தானுக்கு அதிபராக பிரகடனப் படுத்தப் பட்டார். மேற்கு பாகிஸ்தான் அவருடைய ஆட்சியினை கலைக்க படையினை அனுப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஏப்ரல் மாதம் 1971ல் தனி நாடு என்று அறிவித்தனர். 3-4, டிசம்பர் 1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்து மேற்கு பாகிஸ்தானிலிருந்து ஏற்கனவே அனுப்பிய படையினருக்கு உதவி வராததால் அங்குள்ள படையினர் இந்திய படையினரிடம் சரணடைந்தனர் என்பது ஒரு வரலாறு.

மேற்கோள் காட்டப் பட்ட தவிர்க்கமுடியா மற்றும் நீங்கா தகராறுகளால் இரண்டு நாட்டு அரசுகளும் எலியும், பூனையுமாக இருந்து வருகின்றனர். அதனை ஐநா சபை கூட தீர்க்க முடியவில்லை. கும்பனி ஆட்சியினை விரட்ட அண்ணன் தம்பிகளாக இணைந்து குரல் கொடுத்த நாம் அந்த இடியப்ப தீர்க்க முடியவில்லை என்பது ஒவ்வொரு குடிமகனுடைய குறையாக இருக்கின்றது என்பது சமீப கால நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இது போன்ற இரு நாடுகள் மனஸ்தாபங்கள் நமக்கு மட்டுமல்ல மாறாக எங்கெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் நடந்து இரண்டாம் உலக போருக்கு பின்னால் விடுதலை அடைந்ததோ அங்கெல்லாம் இதுபோன்ற சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனித இனம் ஒன்றே அவன் நிம்மதியாக அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணம் எப்போது வருகின்றதோ அது வரை இந்திய-பாக் இடியாப்ப சிக்கல் போன்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு நாடு நாயகமான ஐநா சபை தீவிர நடவடிக்கைகள் எடுத்து தீர்த்து வைப்பதே தலையாய கடமையல்லவா?

 

 

  

Sunday, 24 January 2021

கோபம் கொள்ளலாகுமா பாப்பா !


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

'கோபம் கொள்ளாதே பாப்பா' என்று நமது பெரியோர் குழந்தைகளுக்கு பாட்டு படிப்பர். தேர்தல் தோல்வியினை ஒத்துக் கொள்ளாமல் குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பார்த்து ஜோ பிடென் வெற்றி பெற்றது போலியானது ஆகவே ஜோ பிடேன் வெற்றியினை உறுதி செய்ய 7.1.2021ல் கூடிய அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான 'capital' நோக்கி படை எடுங்கள் என்ற சொன்ன கோபமான வார்த்தைகளால், அவருடைய ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்து சூறையாடியதால், பாராளுமன்ற உறுப்பினர்களே பதுங்கு குழியில் ஓடி ஒழிந்தது அனைத்துலக தொலைக் காட்சி நிறுவனங்களும் படம் பிடித்துக் காட்டியது நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். பாராளுமன்றத்தில் ட்ரம்பிற்கு எதிராக உரிமை பிரட்சனை தீர்மானம் கொண்டு வந்தபோது அவர் சார்ந்த குடியரசு கட்சியினரே அவருக்கு எதிராக ஓட்டளித்தார்கள் என்பது ஒரு நவீன வரலாறுவல்லவா?

            அடக்க முடியா கோபத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோமேயானால் ரத்த அழுத்தமும், இதய நோயும் நம்மை அண்டாமல் வைத்துக் கொள்வதோடு, உற்றார், உறவினர், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரை பகைத்துக் கொள்ளாமல் அன்பு, பாசம், பரிவு குறைவில்லாமல் வாழ முடியும்.

            சிலர் எதெற்கெடுத்தாலும் கோபப்படுவர். நீங்கள் வாகனங்களில் செல்லும்போது குறுக்கே கட்டை வண்டியோ, சைக்கிள் ரிக்கஷாவோ, ஆட்டோ ரிக்சாவோ, குறுக்கே வந்தால் கோபமான வார்த்தைகளை அள்ளி வீசுவீர்கள். பக்கத்து வீட்டு குப்பை உங்கள் வீட்டு முன் போட்டால் அல்லது வளர்ப்பு நாய் சத்தம் போட்டால், அல்லது தெரு நாய் கூட இரவில் ஊளை இட்டால் கோபப் படுவீர்கள், வீட்டு சிறார்கள் சந்தோசத்தில் சப்தம் எழுப்பினால் கூட கோபப் படுவீர்கள். அதனால் உங்கள் மனதினையும், உடலையும், உறவினையும் கூட பாதிக்கும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

            கனடாவினைச் சார்ந்த மனோதத்துவ நிபுணர் Calgery (கல்கெரி), 'பெரும்பாலானவர்கள் கோபத்தினை கட்டுப் படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். கோபம் சில விஷயங்களை கவனிக்கத் தூண்டுகிறது' என்கிறார்.நாம் அந்த விஷயத்தினை கவனித்து தீர்வு காண்போமோயானால் நமக்கு நல்லதாக அமையும்' என்றும் கூறுகிறார்.

            துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலோனோர் நமது உணர்வுகளை கட்டுப் படுத்த முயற்சி செய்கிறோம்  அவ்வாறு செய்வது நமது உடல் சுகாதாரத்தினை பல நாட்கள் சென்று பாதிக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியூயார்க் நகர் ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் (University of Rochester) ஆராய்ச்சியாளர்கள்,'கோப உணர்வுகளை அடக்குபவர்கள் நீண்ட நாள் வாழவதில்லை என்கின்றனர். ' அவர்கள் புற்று நோயால் பாதிக்கப் படலாம்' என்றும் கூறுகின்றனர். நாம் கோபத்துடன் இருக்கும்போது மன அழுத்த ஹார்மோன்களான அட்ரினாலின்(adranaline) மற்றும் கார்டிசோல் (cortisol) வெளியேறி சக்கரை நோய், மன அழுத்தம், ஆட்டோ இம்யூன் (autoimmune) நிலைக்கு தள்ளப் படுகிறார்கள் என்றும் கூறுகின்றார்கள். 'அந்தக் கோபம் தலைக்கேறி , உங்கள் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், பணியாளர்கள் ஆகியோர்களுடனான உறவு எந்தளவிற்கு பாதிக்கும் என்று அளவிடமுடியாது' என்றும்  ஆராய்ச்சியாளர் கீலன் (keelen) கூறுகின்றார். கனடாவின் Mc Master  University (மெக் மாஸ்டர்) பல்கலைக் கழக ஆராய்ச்சியில், 'கோபக் கனல் வெளிப்படுத்துததால் இதய நோய்களின் துடிப்பு அதிகமாகும்' என்றும் கூறுகின்றன.

            அது சரி மன அழுத்தம் சாமானியனைத் தான் பாதிக்கின்றதா, பிரபலங்களுக்கு வராதா என்றும் நீங்கள் கேட்கலாம். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றி குறிப்பிடும்போது அவருடைய குடும்பத்தினரால் மிகவும் கவலை கொண்டவராக இருந்துள்ளார் என்று அவருடைய நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவைகளையெல்லாம் அவர் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அதேபோன்று தான் அமெரிக்க சிவில் உரிமை போராளி மார்ட்டின் லூதர் கிங் பற்றி 1968 Time Magazine profile கூறும்போது மார்ட்டின் லூதர் தன்னுடைய பாட்டி 13 வயதில் இறந்தபோதே தற்கொலை செய்து கொள்ள நினைத்தாராம். பிற்காலத்தில் கூட அவர் அடிக்கடி உணர்ச்சி வசப் படுவதினைப் பார்த்த நண்பர்கள் அவரை நல்ல psychiatrist இடம் சென்று காட்டும்படி அறிவுரை கூறினார்களாம்.

            இங்கிலாந்து இளவரசியான டயானா பிரபலமான பின்பு மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்போன்று இருந்ததாக 1995ல் அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தாததுபோல இருந்ததாம். அவர் சொந்த வாழ்க்கை சோகமாகி இங்கிலாந்து கோடீஸ்வரர் Dodi Payaad உடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று ஒரு ஹோட்டலுக்கு தங்கிவிட்டு காரில் ஒன்றாக புறப்பட்டபோது 31.8.1997 அன்று விபத்து ஏற்பட்டு மரணமடைந்தது அனைவருக்கும் தெரிந்த சோக கதையாகும். முதலாம் உலகப் போரின் நாயகன் என்று வர்ணிக்கப் பட்ட இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எப்போது மன அழுத்தத்தில் இருந்தாரோ அப்போதெல்லாம் ஓவியம் வரைவது மூலமும், கடிதங்கள் எழுதுவது மூலமும் தனது கவனத்தினை திருப்பிக் கொண்டாராம்.

            Gallop என்ற நிறுவனம் 143 உலக நாடுகளில் நடத்திய ஆய்வின்படி கோபம் குறைவாக கொள்ளும் நாடுகளாக Chad மற்றும் Niger நாடுகளை குறிப்பிடுகிறது. கோபம் அதிகமாக கொள்ளும் நாடாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இந்திய நாடு 93 கோபம் உள்ள நாடாக உள்ளது. அதனால் தான் சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் என்ற அத்தியாயப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகமானாலும் எந்த வித ஆர்ப்பாட்டமும் நடப்பதில்லை என்பதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

            ஒரு மனிதனுக்கு கோபம் வருவது எதனால் என்று ஆராய வேண்டும். கோபம் குற்ற உணர்வு, மன அழுத்தம், ஏமாற்றம், வஞ்சகம், போன்றவை கோபத்தினை அதிமாக்கும் காரணிகளாக கருதப் படுகிறது. உதாரணத்திற்கு வேலைக்குச் செல்லும் மனைவி நேரத்திற்கு வீடு வந்து சேரவில்லை என்றால் வீணான சந்தேகங்கள், குழப்பங்கள் ஏற்படும், கடைக்குச் சென்ற மனைவியோ அல்லது கணவனோ வர நேரமானால் அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதா என்று மனம் படபடக்கச் செய்வதும்  இயற்கையல்லவா?

            தினந்தோறும் சந்திக்கும் சில நிகழ்ச்சிகளால் உங்கள் கோபம் கூடு கட்ட ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு அதிகாலையில் ஆவின் பால் பூத்தில் வண்டிக்காக வரிசையில் காத்திருக்கும்போது, அல்லது பஸ் ஸ்டாண்டில் வரிசையில் நிற்கும் போது, சினிமா அல்லது ஷாப்பிங் மாலில் காத்திருக்கும்போது இடையில் ஒருவர் புகுந்தால் உடனே அவருடன் சண்டை போடத் தூண்டும். அப்போது கோபத்தினை அடக்கிக் கொண்டு இவ்வளவு பேரும், இத்தனை நேரமும் காத்திருக்கின்றோம் நீங்கள் இடையில் செருகுவது எப்படி நியாயம் என்று அமைதியாக சொல்லுங்கள், மற்றவர்களும் உங்களுக்கு ஆதரவாக பேசுவதுடன், அவ்வாறு செய்தவர்களும் வருத்தமடைவார்கள். எப்படி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகுமோ' அதேபோன்று கோபக் கனல் மறைந்து விடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் உள்ள University of California' வின் 'Brain imaging' மூலையின் செயல் பாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் 'நீங்கள் கோபத்தினை பேசி தீர்வு காண்பதால் மூளையின், 'amygdala' செயல்பாடுகள் அதிகரித்து adrenalino மற்றும் cortird என்ற ஹார்மோன்கள் சுரக்க செய்து கோப உணர்வுகளை கட்டுப் படுத்துகின்றது' என்று கூறுகின்றது. பிரிட்டிஷ் கொழும்பிய, Vancour மனோதத்துவ நிபுணர் Diana Mcintosh என்ற நிபுணர்  'நீங்கள் உங்கள் உணர்வுகளை வார்த்தைகளாக மாற்றும்போது உங்கள் தொடர்பு மற்றவர்களை இணைக்கின்றது, அத்துடன் மூச்சுப் பயிற்சியும், யோகாவும், இறை வணக்கமும்  கூட கோபத்தினை கட்டுப் படுத்துகிறது' என்று சொல்லியுள்ளார். கோபம் வரும் நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதுதான், ஒரு அறைக்குச் சென்று அமைதியாக 5 நிமிடம் கண்ணை மூடி படுங்கள் பார்க்கலாம், உங்கள் கோபம் மறைந்து விடும்.

மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களை பிறர் முன்னிலையில் சுட்டிக் காட்டுவது, ஒட்டு மொத்தமாக ஒரு ஊரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ குறை சொல்லுவது நல்ல நட்புகளையும் கெடுத்து விடும் என்று மனோதத்துவ நிபுணர் பேட்ரிக் கீழன் கூறுகின்றார்.

நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் உங்கள் குறைகளை சுட்டிக் காட்டினால் அதற்காக கோபப் படுவதினை தவிர்த்து அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து செயலாற்றினால் உங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் அத்துடன் நல்ல உறவின் பாலத்தினையும் அமைத்துக் கொள்ளலாம். ஆகவே தான் கோபம் கொள்ளலாகாது பாப்பா என்று சிறு வயதிலேயே பாட்டி படுவது போல பாட்டினை எழுதியுள்ளது எவ்வளவு சாலச் சிறந்ததே என்று தெரியவில்லையா?

           

Monday, 21 December 2020

 

மக்கள் குரலே மகேசன் குரலாகுமா!

(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ் ( )

உலக வல்லரசு நாடானதும், ஜனநாயகக் காவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்காவில் 3.11.2020 ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேர்வுக் குழுவினரால் யார் 270 ஓட்டுக்களை வாங்குகின் றாரோ  அவர் வெற்றி அடைந்தவராக கருதப் படுவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதிடொனால்டு டிரம்ப்’ வெறும் 230 ஓட்டுக்களே வாங்கினாலும், எதிர்க்கட்சி  வேட்பாளர் ஜோ பிடென் அபரிமிதமாக 306 வாக்குகளைப் பெற்றாலும் அந்த வெற்றியினை ஏற்றுக் கொள்ள மறுத்து தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தன்னை எதிர்ப்பவர்களை தான் வசிக்கும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பே தாக்கத் தூண்டி விடுகிறார், மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தால் மார்சல் சட்டம் கொண்டு வந்தால் என்ன என்று யோசித்தார் என்ற செய்திகள் வரும்போது   எங்கே அமெரிக்காவின் ஜனநாயக அறிவுரைகள் கை கழுவுமோ என்ற அச்சமும் அங்கே மட்டுமல்ல, மாறாக உலகம் பூராவிலும் ஏற்பட்டிருக்கின்றது என்பதினை மறுப்பதிற்கில்லை.

                அதேபோன்று தான் ஆப்பிரிக்க கண்டத்தின் காம்பியா தேர்தலில் அதன் ஜனாதிபதியஹ்யா’ தனது எதிர்க்கட்சி வேட்பாளர்ஆடம்’ வெற்றி பெற்றாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்.

ஐவரி கோஸ்ட் என்ற நாடு காபி மற்றும் சாக்கலேட் தயாரிக்க பயன்படும் கோகோ பயிர்கள் விளைவிக்கும் நாடாகும். அந்த நாட்டின் ஜனாதிபதிகிபாகோ’ பதவி மாற்றத்திற்கான தேர்தல் 2005ம் ஆண்டு நடக்க வேண்டும் ஆனால் அதனை 6 தடவை தள்ளிப் போட்டு 2010ல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ‘ குட்டாரா’ வெற்றி வாகை சூட்டினார். ஆனால் ஜனாதிபதி கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண கவுன்சில் கிபாகோ வெற்றி பெற்றதாகவும், ஆனால் தேர்தல் கமிஷன் குட்டாரா வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. அதனை .நா.சபையும் அங்கீகரித்தது. ஆனால் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு ஒரே நாட்டில் ஜனாதிபதி இருவர் பணியாற்றினர்.  அங்கே வன்முறையால் இதுவரை 300 உயிர்பலி  ஏற்பட்டுள்ளது. அதன் முடிவு குட்டாராவிற்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டு படைகள் கால் பதித்தும், அந்த நாட்டின் ராணுவமும் புரட்சியில் ஈடுபட்டு  கிபாகோ கைது செய்யப்பட்டு குட்டாரா 21.11.2011 அதிகாரப்பூர அதிபரானார். அதே நிலையும் அமெரிக்க நாட்டின் ட்ரம்பிற்கும் ஏற்பட்டாலும் ஆச்சரியப் படக்கூடாது.

                அதே நிலை தான் மடகாஸ்கர் நாட்டிலும் நடக்கின்றது. 2001-2002 ஆண்டுகளில் அங்கே ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதிடிடிஆர்’ மற்றும்மார்க்’ ஆகியோர் போட்டி போட்டனர். அதில் மார்க் வெற்றி வாகை சூடியார். ஆனால் அதனை ஜனாதிபதி டிடிஆர் ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் அங்கே இரண்டு அரசுகள்  மற்றும் இரண்டு தலைநகரங்களில் ஆட்சி செய்கின்றன.

                காங்கோ நாட்டில் ‘ ஜோசப் கபிலா’ என்பவர் ஆட்சி செய்கிறரர். 2019ல் அவருடன் கூட்டணி வைத்திருந்தபெலிஸ்’ என்ற கூட்டமைப்பு அவரை பதவி நீக்கம் செய்தது. ஆனால் கபிலா கூட்டணியை கலைத்து விட்டார். அதன் விளைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நாற்காலி, மேஜைகளை கவிழ்த்து கலவரம் செய்தது வரலாற்று படிப்பினையாக உள்ளது. அதேபோன்று தான் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் (CAR) வரலாறு காணா ஊழல் நடைபெறுவதால் அங்கே மக்கள் புரட்சி வன்முறையாக வெடித்துள்ளது. பாபுவா கினியா நாட்டில் கூட்டணியை தலைவரும், 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகி நாட்டின் பிரதமர் ‘ பீட்டர் நீல்’ ஊழல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி ஆட்சியினை கைப்பற்றியுள்ளனர்.

                போலந்து நாட்டில் ஜனாதிபதிஜோசப்’ சூழ்ச்சி செய்து கைப்பற்றினார். அது மட்டுமல்லாமல் அவரே பிரதமராகவும், படைத்தளபதியாகவும் தன்னை அறிவித்துள்ளார்.

                மலேசியா நாட்டில் பல காலம் ஆட்சி செய்த பிரதமர்மகாதீர்’ முன்னாள் பிரதமர்நஜிப்’ ஊழல் செய்தார் என்று எலியும் பூனையுமாக இருந்தஅன்வர் இப்ராஹிம்’ உடன் சேர்ந்து ஆட்சி 2018ல் அமைத்து 95 வயதில் பிரதமரானார். உடன் படிக்கைபடி 2020ல் பதவி விலகி இருக்க வேண்டும், ஆனால் ஆசை யாரை விட்டது, பதவி விலக மறுத்து விட்டார். ஆகவே அன்வர் இப்ராஹிம் தற்போதைய பிரதமர்மொஹிதீன்’ உடன் சேர்த்து ஆட்சி அமைத்தார். ஆனால் அவர் ஆட்சி முறை சரியில்லை என்று தன்னை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று மன்னரிடம் முறையிட்டார். ஆனால் அது இது வரை கைகொடுக்க வில்லை. ஆகவே மைனாரிட்டி அரசு இன்னும் தொடர்கின்றது.

                2010ம் ஆண்டிற்கு பின்பு அராபிய கண்டத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்தது. முதலில் டூனிசியா நாட்டில் ஆரம்பித்தது. நடைபாதை வியாபாரிகளை அகற்றுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதினை கண்டித்து  நடைபாதை கடை வைத்திருந்தமுஹமது பௌஸிர்’ என்ற இளைஞர் தீக்குளித்தது பெரிய வைக்கோல் போரில் விழுந்த பொறியாக மாறி அராபிய கண்டம் முழுவதும் பற்றிக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக நீண்ட நாள் ஆட்சி செய்த எகிப்து அதிபர்கோஜினி முபாரக்’ தூக்கி அறியப்பட்டார். அதன் பின்பு வந்தமோர்சி’  ஆட்சி அயல் நாட்டினர் கைப்பாவையாக மாறியதால் அந்த நாட்டின் ராணுவ தளபதிசிசி’ ஆட்சியினை கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றார். சூடான் நாட்டின் நீண்ட நாள் ஜனாதிபதிஉமர் பஷீர்’ ஊழல் மிகுந்த ஆட்சியானதால் 2019ல்அப்டேல் பாட்டா’ ஆட்சி செய்கிறார்.

                லிபியா நாட்டில் ராணுவ கர்னல் ஆக பணியாற்றியகடாபி லிபிய’ நாட்டில் ஆட்சியினை 1969ல் கைப்பற்றி அனைத்து பழங்குடி மக்களையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் 42 வருடம் அசைக்க முடியா ஆட்சியினை நடத்தினார். ஆனால் அவரை வெல்ல முடியா வெளிநாட்டு சக்திகள் மற்ற பழங்குடி மக்களை தூண்டி விட்டு புரட்சி செய்து பிரான்ஸ் படையின் துணையுடன் 2011ல் அவரை சுட்டுக் கொன்று ஆட்சி மாற்றம் செய்தனர். ஆனால் இன்றும் அங்கே நிலையான ஆட்சி அமைக்க முடிய வில்லை.

                அரேபிய கண்டத்தில் நடந்த புரட்சியின் விளைவாக சிரியா நாட்டிலும் அதிபர்ஆசாத்ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி புரட்சி செய்தனர். அதில் ஆசாத் அரசுக்கு ரஷியா துணை வந்தது. புரட்சிப் படைக்கு அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகள் ஈடுபட்டனர். அதன் விளைவு சொந்த நாட்டிலே மக்கள் அகதிகளாக ஆக்கப் பட்டு பல்வேறு நாடுகளுக்கும் சொத்து, சுகங்களை இழந்து அல்லல் படுகின்றனர் என்பதினை பார்க்கும் பொது பரிதாபமாக உள்ளது.

                அராபிய கண்டத்தில் மிகவும் வறுமை, வேலையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, ஊழல், ஜனநாய அமைப்புகளின் குறைபாடு நிறைந்த நாடாக ஏமன் இருக்கின்றது. அரேபிய புரட்சியின் விளைவாக அங்கே ஆட்சி செய்தசாலே’ என்ற ஜனாதிபதி ராஜினாமா செய்தார். அதன் விளைவு ஷியா சமுதாயத்தினை சார்ந்த ஹௌதி புரட்சியாளர்கள். தலைநகரான சனாவினை 2015 ஜனவரி மாதம் கைப்பற்றி தங்கள் தலைவராகஹாதி’ என்பவரை ஜனாதிபதியாக்கினார். அவர்களுக்கு ஷியா அரசான ஈரானும் உதவி செய்தது. ஆனால் ஹாதி அரசால் புரட்சியாளர்களின் தலையீடு அதிகமானதால் ஹாதி மார்ச்சில் ராஜினாமா செய்துவிட்டு ஓடி விட்டார். ஹௌதி புரட்சியாளர்களுக்கு எதிராக சுன்னி நாட்டின் 8 நாடுகளின் கூட்டமைப்பு சௌதி அராபிய தலைமையில் களம் இறங்கி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் உத வியால் முக்கிய துறைமுகமான ஏடேனை கைப்பற்றி ஹௌதி புரட்சியாளர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். ஏமெனில் 2017ல் நடந்த கலவரத்தில் முன்னாள் ஜனாதிபதி சாலே கொல்லப் பட்டார். செப்டம்பர் 2019ல் ஹௌதி அமைப்பினர் சௌதி அராபியாவின் முக்கிய எண்ணைக் கிணறான அபிகாக் மற்றும் குறைஷ் போன்றவற்றினை ஏவுகணைகள் மூலம் தாக்கி நிர்மூலமாக்கினதால் சௌதி அரசின் 50 சத வீத எண்ணெய் உற்பத்தியும், உலக உற்பத்தியில் 5 சத வீதமும் குறைந்து விட்டது. ஏமெனில் நடந்த யுத்தத்தால் இதுவரை ஒரு லட்க்ஷம் பேர்கள் இறந்து இருப்பார்கள் என்று 2020 மார்ச் மாதத்தில் அமெரிக்கா அறிவித்துள்ளது என்பதினை பார்க்கும்போது இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலை கண்டு மன வருத்தம் அடையாமில்லை அல்லவா.

                இந்தியாவில் விவசாய சீர்திருத்த சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் 27.9.2020 அன்று இயற்றப்பட்டது. அன்றிலிருந்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி-ஜெய்ப்பூர் பாதையினை வழி மறித்து கடுங்குளிர் என்றும்  பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது வரை 33 போராட்டக் காரர்கள் இறந்துள்ளனர். ஹரியானா மாநிலத்தினைச் சார்ந்த ஒரு சீக்கிய மதகுரு போராடும் இடத்தில் வந்து விவசாயிகளுக்காக தன்னை தானே கை துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது செய்தியாக வந்துள்ளது. மத்திய அரசும் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப் படவில்லை. பிரதமர் விவசாயிகளை சந்திக்காமல் சீக்கிய விவசாயிகளை சாந்தப்படுத்த டெல்லியுள்ள சீக்கிய மதகுரு ராம்தேவ் விழாவிற்கு 2014ல் இருந்து ஆட்சி செயதும் இந்த வருடம் மட்டும் திடீர் விஜயம் செய்துள்ளார்.

                                அகில இந்தியா கிசான் காங்கிரஸ் 1936ல் சுவாமி  ஸஹ்வானந்த் சரஸ்வதியால் ஆரம்பிக்கப் பட்டது. அதில் என்.ஜி. ரங்கா பொதுச் செயலாளராக இருந்தார். அதனை ஹைதரபாத் நிசாம் நில சட்டத்திற்கு எதிரான தெலுங்கானா அமைப்பு என்ற தீவிர வாதிகள் தலையெடுத்து வன்முறை வெடிக்க ஆரம்பித்தது. நமது நாட்டு விவசாயம் வற்றாத நதிகள் கொண்ட கேரளா, கர்நாடகா, பிஹார், வங்காளம், .பி மாநில கிழக்கு மாவட்டங்களும், தமிழ்நாடு போன்ற வானம் பார்த்த பூமிகளை கொண்டது. இந்தியாவில் மொத்தம் விவசாய நிலம் 189.7 மில்லியன் ஹெக்டார் ஆகும். ஒரு ஹெக்டார் 2.47 ஏக்கர்கள் ஆகும்.

                இந்திய விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் அல்லல் படுகின்றனர்:

1) விவசாயிகளுக்கு வங்கிகள் அவ்வளவு எளிதில் கடன் கொடுப்பதில்லை, மாறாக பொய்யான செக்யூரிட்டி கொடுத்து பத்தாயிரம் கோடி லோன் வாங்கி  நாட்டினை விட்டு ஓடிப்போகும் விஜய் மல்லையா, சோஸ்கி, நீரவ் மோடி போன்ற வியாபாரிகளுக்குத் தான் எளிதில் கொடுக்கின்றனர். ஆகையால் விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவர்கள் விளைச்சல்களை அடி மாட்டு விலைக்கு வாங்கும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2) இந்திய விவசாயிகள் தங்கள் மகன்களுக்கு சரிசமமாக நிலத்தினை பங்கு போடுவதால் அரை ஏக்கர் நிலத்திலும் வாய்க்கால் வரப்பு என்று மிக குறுகிய இடத்திலே பயிரிடும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

3) குறிகிய நிலத்தில் மிஷினரி கொண்டு விவசாய வேலைகள் செய்யாது இன்றும் உடல் உழைப்பினையே நம்பியுள்ளனர்.

4) உரம், பெர்டிலைசர், பூச்சி மருந்துகள் உற்பத்தியினை அதிகப்படுத்தினாலும் நெல், கோதுமை  தரம் குறைந்ததாக கருதப் படுகிறது.

5) அரசுகள் கொள்முதல் செய்தாலும் அதனை சேமித்து வைக்க சரியான இடம் இல்லாததால் மழைக் காலத்தில் நெல் மூடைகள் முளைப்பு ஏற்படுவதுடன், கெட்டும் விடுகிறது.

6) அறுவடை செய்த நெல்களையோ அல்லது கோதுமைகளையோ கொண்டு செல்வத்திற்கு சரியான போக்குவரத்து, சாலையும் இல்லாததால் மாட்டு வண்டிகளையே விவசாயிகள் நம்ப வேண்டியுள்ளது.

7) தரமான விதைகள் கிடைப்பது அரிதாக உள்ளது.

8) விவசாயிகளின் விளைச்சலுக்கு அரசு ஒரு விலையினை நிர்னயித்து அதற்கு குறைவாக கொள்முதல் செய்யக் கூடாது என்ற கட்டுப் பாடு குறைவாகவே உள்ளது.

9) இயற்கை சீற்றத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு சோளப்பொரி போன்றும், சரியான நேரத்தில் கிடைக்காததால் வட்டிக் காரர்கள் துன்புறுத்ததில் பலர் தற்கொலை செய்தும் கொள்கின்றனர்.

10) அரசு வங்கிகளும் விவசாயிகளுக்கு கொடுத்த கடனை வசூல் செய்ய தனியார் வசூல் செய்யும் நிறுவனத்தினை நாடுவதால் அவர்கள் விவசாயிகளின் டிராக்டர்கள், ஏன் வீட்டின் நிலைக் கதவினையே பெயர்த்து எடுத்துச் செல்லும் பரிதாப செயலினை  பத்திரிக்கை. தொலைக்காட்சிகள்  வாயிலாக அறிந்துள்ளோம்.

ஆகவே தான் விவசாயிகள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பல நாட்களாக கடும் குளிரினையும் தாங்கிக் கொண்டு போராடுகின்றனர். ஆனால் அரசு நாங்கள் கொண்டு வந்த சட்டம் மாற்றப் போவதில்லை என்று பாராளுமன்ற மெஜாரிட்டி தைரியத்தினை வைத்து மறுத்து வருகின்றது. அரசு காவல் துறை, ராணுவம் உதவி கொண்டு விவசாயிகள் குரலினை ஒடுக்கி விடலாம் என்று எண்ணுகின்றது. ஏனென்றால் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீர் கொண்டு பீச்சி அடித்தும் நாங்கள் கும்பனி ஆட்சியினையே ஜாலியன் வாலாபாக் போன்ற அடக்குமுறை வந்தாலும் எங்கள் கோரிக்கையினை விட்டு விடப் போவதில்லை என்று உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். எப்படி சி... என்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடந்ததோ அதே போன்று கத்தியின்றி, ரத்தம் சிந்தவும் விவசாயிகள் தயாராகி விட்டனர். இந்த போராட்டம் பெரிதாக  இந்தியா முழுவதும் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பாமல் இருக்க விவசாய மக்களின் குறைகளை உடனே களைவது மகேசனின் கட்டாயமே!