Tuesday, 13 December 2022

கூடா நட்பு சேரா உறவு!

 


ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ)

முத்தமிழ் அறிஞர் கலைஞர் இப்பெண்களின் உறவுகளை அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் உழன்றபோது, 'கூடா நட்பு சேரா உறவு' என்று தனக்கே உரித்தான பழமொழியில் சொன்னார். அதனையே, 'பன்றியோட சேர்ந்தால் 'பசுக் கன்றும் மலம் தின்னுமென்று'.  இந்த பழமொழி எவ்வாறு நவீன 'லவ்' என்ற இரண்டெழுத்து வார்த்தை பொருந்துமென்று விளக்கலாம் என நினைக்கின்றேன்.

உலக அளவில் ஒரு பெண்ணின் திருமண வயது 18 ஆக உள்ளது. சில நாடுகளில் அது 19, 20, 21 ஆகவும் உள்ளது. 18 வயது என்பதினை நமது அரசு 21 வயதிற்கு உயர்த்தலாமா என்று விவாதத்தில் உள்ளது. நமது நாட்டின் சட்டப் படி 18 வயதிற்குட்பட்டவர் சிறார் என்று அழைக்கப் படுவர். ஆனால் சில உயர் நீதிமன்றங்கள்  பெண்கள் பருவமடைந்து விட்டாலே அவள் திருமணத்திற்கு உகந்தவள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளது. சில ஊர்களில் தங்களுடைய குடும்ப சொத்து யாருக்கும் சென்று விடக்கூடாது என்றும், குடும்ப பாரம்பரியம் விட்டுப் போய் விடக்கூடாது என்றும் சிறுவயதிலேயே 'நிக்கா' என்ற திருமணம் செய்து விடுவது உங்களுக்குத் தெரியும்.

மனோ தத்துவ அறிஞர்கள் காதல் பற்றிய கருத்துக் கூறும்போது, 'அறிந்தோ அறியாமலோ ஏற்படுகின்ற காந்த சக்தியாகும்,. அது ஒருவர்  பார்வையிலோ, இனிமையான பேச்சிலோ, பழகு ம் விதத்திலோ, நளினத்திலோ, அறிவுத் திறனிலோ, செயல் முறையிலோ, விளையாட்டு போட்டிகளிலோ ஏற்படும் பழக்கத்தினை ஏற்படும், தாற்காலியமான மோகம்'  என்று சொல்கிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்' என்று. ஆகவே அந்த ஈர்ப்பு சக்திக்கு வெகு தூரம் பயணம் செய்ய முடியுமா என்றால் சந்தேகமே! அது ஒரு கானல் நீராகத்தானே அமையும் என்று அன்றாட செய்தித்தாள்களிலோ அல்லது தொலைக் காட்சிகளிலோ வரும் நிகழ்வுகளை எண்ணத் தோன்றுகளில்லவா? சில சம்பவங்களில் சினிமா மோகத்தில், போதை அடிமையில், ஒரு வித வாலிப மயக்கத்தில் சிலர் ஒரு தலையாக காதலிப்பதும், தனது விருப்பத்திற்கு உடன்படாத சிறார்களை வன்முறை மூலம் திருத்தி விடலாம் என்று பயமுறுத்துவதும், அல்லது அன்பை வரவழைக்க உயிரை மாய்த்துவிடுவேன் என்ற பாசாங்கு காட்டுவதும்  போன்ற அன்றாட செய்திகளைக் காணலாம். ஓசையானது இரு கை இணைந்து தட்டினால் தான் வெளிப்படும். மாறாக ஒரு கை பார்த்து விடுவோம் என்பது அறியாமையின் உச்ச வரம்பு தானே!

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது ஏற்படும் சோதனைகளும், வேதனைகளும் கொஞ்ச நஞ்சமில்ல. ஆனால் சிட்டுக் குருவிகள் சிறகு முளைத்ததும் பெற்றோர் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து தற்காலிக அறிமுகத்தில் பழக்கமான ஜோடிகளுடன் சிட்டாய் சிறகடித்து பறந்து விடுவது உங்களுக்கெல்லாம் வேதனையாக இல்லையா? பெண்கள் பலாப்பழ சுளைகள் போன்றவர்கள். அவைகளை சுற்றி ஈக்கள் மொய்க்கத்தான் செய்யும் என்பதினை அறியாது, பெற்றோர், உடன் பிறந்தோர், சுற்றத்தாரை புறக்கணித்து சாத்தான் வழிகெடுக்களுக்கல்களுக்கு உடன்படுவது  வேதனையிலும் வேதனை தானே!

ஒரு சமூகத்தில் எந்த ஆணும், எந்த பெண்ணும் மேஜர் ஆனால் இணைந்து வாழ சட்டத்தில் வழியுண்டு. அதற்குப்  பதிலாக எந்த ஆணும் மற்றொரு ஆணுடன் சேர்ந்து வாழ குரல் கொடுக்கும்போதோ அல்லது,  இரு பெண்கள் சேர்ந்து வாழலாம் என்று சில நீதி மன்றங்கள் கருத்துச் சொல்லும்போது, சட்டங்கள் கொண்டு வரும்போதோ எவ்வாறு ஒரு சுகாதாரமான,  ஆரோக்கியமான  சமூகத்தினை உருவாக்க முடியும் என்று யோசிக்க கூடாதா?

ஆண்கள், பெண்களை வசீகரிக்க வித விதமான உடைகளையும், முடி திருத்தங்களையும், அதேபோன்று பெண்களும், விலை மாதர்போல ஜன்னல் வைத்த சட்டைகளை, மார்பங்கள் தெரிய உடை அணிந்து ஆண்களை கவருவதும், ‘செல் போன் மிஸ்ட்டு கால்’ என்று முகம் தெரியாத ஆணோ, பெண்ணோ இனிக்க, இனிக்கப் பேசிவிட்டால் உண்மை என்று நம்பி ஏமாந்து உள்ளதும்போய் விட்டதே ‘நொள்ளைக் கண்ணு’ என்ற கிராம பழமொழிக்கிணங்க இருப்பதையும், பொருட்களையும், கட்டிய புருஷனையும், குழந்தைகளையும், அதைவிட கற்பையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதும், அதுபோன்ற நிலை குழைந்து நிற்கும் பெண்களை குறி வைத்து இழுக்கும் வல்லாறுகளாக இருக்கும் பாலியல் ஈடுபடுத்தும் கும்பலிடம் சிக்குவதும் அன்றாட நிகழ்வுகளாக நடந்து நிகழ்வுகளாக இருப்பது  வருத்தமாகத் தானே உள்ளது. திருமண வாழ்வு என்பது ஆண், பெண் இருவருக்கும் ஒருவருக்கொருவர் ஆடையாக பயன்படுத்தும் செயலாகும். அதனை விட்டுவிட்டு காதல் என்ற ஊறுகாய் போன்ற நாக்கிற்கு மட்டும் தொட்டு சுவை தரும் பொருளாக உள்ளது. அது உடலுக்கு சத்து தரும் ஊனாக ஒருபோதும் இருக்க முடியுமா?.

தேசிய குற்றவியல் பதிவேடு (NCRB) புள்ளிவிபரப்படி நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் 95 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். அதாவது ஒரு மணிக்கு 4 பெண்கள் சீரழிக்கப் படுகிறார்களாம் என்பது வேதனையுள்ள தகவல் தானே! ‘தங்கள் மனம் போன போக்கில் மனதினை அலைய விடலாமா’ என்பது யோசிக்க வேண்டிய காலம் விட்டதல்லவா?

சமூகவியல் படி ஆய்வு நிறுவனமான IPSOS நடத்திய 2013ம் ஆண்டு ஆய்வுப் படி 18-35 வயதிற்குட்பட்டோர் இந்தியாவில் 74 சதவீதம் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து கொள்கின்றனர்.  மும்பை உயர் நீதிமன்ற கருத்துப் படி சமீப காலங்களில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்வதினை விட காதல் திருமணம் செய்து கொள்ளும் திருமணங்கள் முறிவை சந்திக்கின்றன என்று வேதனையுடன் தெரிவித்துக் கொண்டன.  அமெரிக்காவில் அதுபோன்ற காதல் திருமணங்கள் 40-50 சதவீதமாக உள்ளது. ஆனால் நமது நாட்டில் அது குறைவு என்றாலும், சமீப காலங்களில் 2 அல்லது 3 குழந்தைகளை பெற்ற பின்னரும் அறிமுகமே இல்லாதவனின் ஆசைகளை செல் போனில் கேட்டுவிட்டு கால் கிளப்பி போவதும் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் வேதனை அணிக்கத்தானே செய்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் அதற்கான பல தகவல்களை தெரிவிக்கின்றனர்:

1) காதல் என்பது ஒரு வசீகர சொல், அது வந்த வேகத்தில் மறைந்து விடுகிறது.

2) உடல் புணர்ச்சியில் ஈடுபட்டவுடனும், உடல் ரீதியாக பல உடல் நலிவு ஏற்பட்டவுடன் ஒரு விதமான சலிப்பு ஏற்படுகிறது.

3) காதலிக்கும்போது வாடா-போடா என்று அழைத்துவிட்டு திருமணத்திற்குப் பின்பு பலருக்காகாக தங்கள் பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை.

4) ஒவொருவருக்கொருவர் வீட்டுக் கொடுக்கமுடியா வறட்டு கவுரவம். ஜெர்மன் பல்லாண்டு அதிபராக இருந்த ‘மார்க்கல்’ என்ற பெண் அதிபர் சொல்லும்போது, 'நான் வேலைக்கு வருமுன் துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங் மெஷினில் போடுவேன், என் கணவர் அதனை எடுத்து மடித்து, பின்பு ஐயன் செய்து வைப்பார் என்றும், நான் வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்வேன், என் கணவர் மாப்பினால் சுத்தம் செய்வார்' என்று ஒரு பேட்டியில் கூறினார். அதுபோன்ற காலங்களில் ஏதாவது குறையிருந்தால் கவுரவம் பார்த்தல் சண்டை, சச்சரவு வரத்தானே செய்யும்!

5) காதல் தம்பதிகள் திருமணத்திற்கு பின்பு தங்கள் வாழ்க்கையினை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று கலந்து ஆலோசிப்பதில்லை. அதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன திருமணத்திற்கு பின்பு.

6) காதல் திருமணம் பெற்றோர்களுக்கு தெரியாமால் செய்வதனால் தம்பதியினர் குடும்பம் நடத்த முடியா பொருளாதார நிலை ஏற்படும்போது பெற்றோரோ அல்லது உறவினரோ உதவி செய்வதில்லை. ஊராரும் ஒதுக்கி தள்கின்றனர்.

7) காதலுக்கு முன்பு தங்கள் தோழியரிடம் அரட்டை அடித்ததுபோல திருமணத்திற்கு பின்பு தொடர்பு ஏற்படுத்த கட்டுப் பாடு ஏற்படுத்தப் படும்.

8) காதல் தம்பதியினர் பல்வேறு சமயங்களில் வார்த்தைப் போர் நடத்திவிட்டு, வன்முறையில் வன்முறையில் இறங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சில சமயங்களில் திருமணத்திற்கு முன்பு 'Dating' என்ற அசாதாரண சந்திப்பு ஏற்படுத்திக் கொண்டு அந்த சந்திப்பில் திருப்தி இல்லையென்றால் அதனையே காரணமாக வைத்து காதலர்களை ஒதுக்கினால் அவர்கள் வன்முறையில் இறங்குவது அன்றாட செய்திகளாக வந்த வண்ணம் உள்ளதால்லவா? ஒரு தம்பதியர் இருந்தால் அவர்களுக்குள் பல நிறை மற்றும் குறைகள் இருக்கத்தானே செய்யும் அதனை அடுத்த பாலினர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுபோல நடித்து அபகரித்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளதல்லவா? ஆகவே கணவன்-மனைவியர் தங்களுக்குள் மனம் விட்டு குறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டுமல்லவா? 2017ம் ஆண்டு இந்தியாவில் நடத்த சர்வேயில் பெண்களில் 15-24 வயதிற்குட்பட்டோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 33.2 சதவீதம் உடல் ரீதியாகவும், 9.6 சதவீதம் மன ரீதியாகவும்  துன்புறுத்தப் படுகிறார்களாம். ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகிற பெண்கள் 24.3 சதவீதம் தான் துன்பத்திற்கு ஆளாகுகிறார்களாம். அதுவும் யாரால் குடும்ப பெண்களாகவே இருக்கின்றதாம் என்பது வேதனைதானே!

'மனம் ஒரு குரங்கு' என்ற அடிக்கடி தாவும் கருத்தினை வைத்து சொல்வார்கள். அதற்கு உதாரணமாக இஸ்ரேயிலர் காலத்தில் நடந்த ஒரு செய்தியினை உங்களுடன் இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு 'பார்சிச்சா' என்ற துறவி இருந்தார். அவர் எல்லா வேதங்களையும் கரைத்துக் குடித்தவராகவும், முரீது கொடுப்பவராகவும் இருந்தார். அவர் மேல் பலர் அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அவர் சொல்லுவது வேத வாக்காக கருதினர். அந்த ஊரில் இரு சகோதரர்கள், மற்றும் ஒரு சகோதரி இருந்தார். அவர்கள் மூவருமே திருமணம் செய்யவில்லை. ஒரு முக்கியமான வேலையாக அந்த சகோதர்கள் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. ஆகவே தனது சகோதரியை யார் பொறுப்பில் விட்டுச் செல்வது என்று ஆலோசித்தனர். ஆனால் அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் நம்பிக்கையாளர்களாக தெரியவில்லை. ஆகவே அவர்கள் துறவியினை அணுகி உங்கள் பொறுப்பில் விட்டுப் போகலாமா என்று வினவினர். அதற்கு அவர் ஒப்புதல் கொடுக்க வில்லை. மறுபடியும் பல முறை கேட்டு வற்புறுத்தினர், ஏனென்றால் அவர்கள் பயணம் தடை படுவதாக சொன்னார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு தயங்கி ஒப்புக் கொண்டார். அதன் பின்பு சகோதர்கள்கள் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர். துறவியாரும் தனக்கு தனது சிஷ்யர்கள் கொடுக்கும் உணவில் ஒரு பகுதியினை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வெளியே வைத்து விட்டு வந்து விடுவார்.

ஆனால் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. அந்தப் பெண்ணும் அதனை   எடுத்து சாப்பிடுவார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. துறவிக்கு ஒரு  யோசனை வந்தது, நாம் அந்தப் பெண் வீடு வரை சென்று உணவு வெளியே  வைத்து விட்டு வருவது எப்படி சரியாகும். அது ஒரு மிருகத்திற்கு வைக்கப்   படும்   பொருளாகவே கருத வேண்டும். ஆகவே இந்தத் தடவை நாம் வீட்டின்    உள்ளே  சென்று வைத்துவிட்டு வந்து விடுவோம் என்று வீட்டினுள்ளே சென்று    உணவை வைத்துவிட்டு வந்து விட்டார். சில நாட்கள் சென்று நாம் இவ்வளவு  தூரம் சென்று விட்டு அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் தேவையா என்று நாலு  வார்த்தை கேட்போம் என்று சென்று பேசி விட்டு வந்தார். பின்பு கொஞ்ச நேரம்  துணைக்கு இருந்து விட்டுப் போவோம் என்று எண்ணி இருந்து விட்டார். அதுவே சாத்தானின் ஊடுருளாகி அவர்களுக்குள் பழக்கமாகி உடல் ரீதியாக     தொடர்பும் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் கர்ப்பம் அடைந்தாள். இது ஊரில்     உள்ள பலருக்குத் தெரிய ஆரம்பித்தது. அந்த சகோதரர்கள் ஊர் திரும்பும் நாளும்    வந்தது. துறவி பயந்து தன்னுடைய பத்தினி வேடம் களைந்து விடுமே என்று      அந்தப் பெண்ணை கொலை செய்து அந்த வீட்டினுள்ளே புதைக்கவும் செய்து      விட்டார். சகோதரர்கள் வந்தார்கள். சகோதரி காணவில்லை. துறவியாரிடம்      கேட்டார்கள் அவர் தெரியாது என்று பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை கள்ளத்தனமாக குடிப்பது போல் நடித்தார். ஆனால் ஊரார் பலர் சொல்ல, வீட்டினுள் புது மண்ணும் இருப்பது கண்டு தோண்டிப் பார்த்தபோது துறவியின் கூட்டு வெளியானது. அவரும் கல்லால் அடித்து சாகடிக்கப் பட்டார்.

          அதேபோன்ற அபாயகரமான செயலில் தான் கூடா நட்புடன் பழகும் காதலர்களின்               நிலையும் ஏற்படும். ஆகவே தான் பள்ளிப் பருவத்தில் கூடா நட்புடன் பழகும்                      மாணவர்களைப் பார்த்து ஒருவர் காதை ஒருவர் பிடித்துக் கொண்டு, 'உன்னால்         நான் கேட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று தோப்புக்கு கர்ணம் போட்டுச்         சொல்வது இன்றைய காலக் கட்டத்தில் காதலர்களுக்கும் பொருந்துமல்லவா?

 

 

Sunday, 13 November 2022

மயக்கமென்ன, அதன் மர்மனென்ன!

 


டாக்டர் ஏ.பீ. முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)

என்னுடன் நடைப் பயிற்சிக்கு வரும் நண்பர்கள் நமது இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினையும், தொழிலையும், படிப்பினையும் சரியாக கவனிக்க முடியாமல் உடல்  கூனிக்குறுகி, பெற்றோர்கள், உற்றார் மற்றும் உணவினர்கள் கூறும் அறிவுரைகளைக்கு மதிப்பு தராமல், வன்முறையிலும் ஈடுபட்டு  சீரழிவில் செல்கிறார்களே அதற்கு முடிவு கட்டமுடியாதா என்ற கேள்வியினை எழுப்பினர்.

            அவர்கள் எழுப்பியது நியாயமான கேள்வி தானே!  முன்பெல்லாம் விவசாய தொழிலாளர்கள் பனை, தென்னை மரத்திலிருந்து இறக்கப் படும் கள்ளினை அளவோடு உடல் வலியினைப் போக்க ஒரு நிவாரனியாக குடிப்பர், அதுவும் அளவோடு. ஆகவே அவர்கள் உடல் வலிமை பெற்றும் இருந்தார்கள். அதன் பின்பு வெல்லம், வாழைப்பழ தோல்கள்,நெல், படிகாரம், வேலம் பட்டை ஆகியவைகளை ஊற வைத்து காச்சி சாராயமாக குடிக்க ஆரம்பித்தனர். அதில் மெத்தனால் கலந்து சாப்பிட்டதால் சிலர் இறந்தும், இன்னும் சிலர் கண் பார்வை மங்கியும் கஷ்டப் பட்டனர். மீனவர் பழைய சோற்றினை கிளோரின் மாத்திரை கலந்து மண்ணில் புதைத்து வைத்து உப்பி வரும்போது அதனை 'சுண்டிச் சோறு' என்று அழைக்கப்படுவதினை அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க 'தங்கலுக்காக' செல்லும்போது எடுத்துச் செல்வர். அது கடலின் உப்புக் காற்று குமட்டலை தடுத்து நிறுத்துமாம். இதுதான் தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. எப்போது அந்நிய கலாட்சாரம் 1500 நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்ததோ அதிலிருந்து IMFL என்ற 'இந்தியன் மேடு பாரின் லிகர்' என்று அழைக்கப் படும் மதுவிற்கும் , பலவகையான போதைப் பொருளுக்கும் அடிமையானர்.

            சமீப காலமாக இளைஞர்கள், மாணவர்கள் அதுவும் கொரானா காலத்தில்  வேலை, கல்விக்கூடங்களை விடுமுறை அளிக்கப் பட்டதால் கோகைன், ஹிராயின், கேட்டமின், மர்ஜூனா, ஓபியம், மெத்தம்பெட்டமின், ஆம்பிடமின், செசன்சொல், மென்றக்ஸ், எல்எஸ்டி மாத்திரை, டிடிகேசிக் ஊசி போன்றவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நான் மாநில கல்லூரியில் 1969ம் ஆண்டு எம்.ஏ படிக்கும்போது எனது வகுப்பு மாணவன் ஒரு சினிமா நடிகர் மகன் . அவன் கல்லூரிக்கு வரும்போது எல்.எஸ்.டி மாத்திரை எடுத்துக் கொண்டு வருவான். பேராசிரியர் வகுப்பு ஆரம்பித்ததும் மேஜையில் தலை வைத்து தூங்கி விடுவான். அவனை எழுப்பினால், பேராசிரியர் சொல்வார், 'தொந்தரவு செய்யாதீர்கள் அவன் தூங்கட்டும்' என்று பெருந்தன்மையுடன் சொல்வார். இதே நிலையில் தான் இன்றைய போதைக்கு அடிமையான இளைய சமுதாயம் ஒரு மயக்க நிலையில் உள்ளது என்பதினை மறுக்க முடியுமா?

            இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என அழைக்கப்படும் அர்ஜென்டினா நாட்டு வீரர் ‘மடோனா’ போதையின் அடிமையில் சிக்கி, தன உடல் நலம் குன்றி, கோடிக்கணக்கான விளம்பர வருமானம் இழந்து, புகழையும் இழந்தார். அவர் 1996 ஜனவரி மாதம் அறிவித்த பேட்டியில், 'போதைக்கு அடிமையான ஒரு மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் போதையுடன் சண்டையிட வேண்டும்" என்று கூறினார். மேலும் அவர் போதைக்கு அடிமையாவது எந்தளவிற்கு கொடுமை என்பதினை விளக்கினார். "ஒரு நாள் அவர் போதையின் உச்சக்கட்டத்தில் படுத்து இருந்தபோது நான்கு வயதான என் அருமை மகள் கியானினா, தன்னை எழுப்பி தனக்கு தாகமாக இருக்கிறது ஒரு கிளாஸ் தண்ணீர் வேண்டும் என்று கூறியுள்ளார் பிஞ்சுக் குழந்தை. ஆனால் நான் எழுந்திருக்க முயலும் போது என்னை கட்டிலோடு கட்டிலாக கட்டிப் போட்டிருப்பது போல எழுந்திருக்க முடியாத உணர்வு ஏற்பட்டது. அதற்குக் காரணம் நான் கோக்கையின் என்ற போதைப் பொருளை சுவாசித்த விளைவு தான். உடனே என் அன்பு மகள் சொன்னாள், 'அப்பாவே உன்னால் எனக்கு தாகத்திற்கு தண்ணீர் கூட எடுத்துக் கொடுக்க முடியாதா' என்று கேட்டது வாழ்நாள் முழுவதும் என் இதயத்தில் தைத்த முள்ளாக வலிக்கின்றது என்று.


 

            இப்போது போதைக்குப் பயன் பெரும் பல்வேறு போதைப் பொருட்கள் அதனை எதிலிருந்து தயாரிக்கின்றார்கள் என்று பார்க்கலாம்.: 1) கோக்கையின் போதைப் பொருள் கோகைன், கோகோ  என்ற செடியிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் விளையும் செடி. அதனை அமெரிக்கா மற்றும் வளம் பொருந்திய நாடுகளில் உபயோகிக்கப் படுகிறது. கோகைன், மர்ஜூனா வகையினைச் சார்ந்தது. அதனை புகைப்பதால் நரம்பு மண்டலத்தினை பாதித்து உயர் ரத்த அழுத்தத்தினைக் கொடுக்கிறது.

2) மார்பின் ஒரு வலி நிவாரணியாகும். அதனை உட்கொள்வதால் மூளையினை பாதித்து கோமா என்ற மயக்க நிலைக்கு சென்று இறப்பு ஏற்படுகிறது. 2010ம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப் பட்ட சர்வேயில் 18 வயதிற்குட்பட்டோர் மார்பின் உபயோகிப்பது 2,14,000 ஆக இருந்தது 2002ம் ஆண்டு 3,59,000 ஆக உயர்ந்துள்ளதாம். 3) ஹெராயின் சமையலுக்கு பயன்பெறும் கசகசா செடியின் ஓடுகளிருந்து வடியும் ரப்பர் மரத்திலிருந்து வடியும் பால் போன்ற திரவத்தில் பல வேதிய பொருட்கள் கலந்து தயாரிக்கப் படுகிறது. இவை ‘கோல்டன் ட்ரியாங்கில்’ என்று அழைக்கப் படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற முச்சந்திப்பில் பயிரிடப் படுகிறது. இந்தியாவில் உ.பி., ம.பி, ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களில் அரசு அனுமதியுடன் வளர்க்கப் படுகிறது. ஏனென்றால் அது மருந்து தயாரிக்கப் பயன் படுகிறது. நான் சிறு வயதிலிருந்த போது வயிக்குப் போக்கிற்கு நாட்டு வைத்தியரிடம் அழைக்குச் சென்றால் ஒரு சிறு கருப்பு உருண்டை கொடுப்பார். அது இப்போது தான் அபின் என்ற போதைப் பொருளுடன் சில நாட்டு மருந்தில் தயாரிக்கும் கலவை என்று. அதனை பயன் படுத்திதான் 'மற்ற போதைப் பொருட்களான சாராஸ் , மெத் என்று அழைக்கப் படும் மெத்தம்பெட்டமைன், கேட்டமின், செசன்சொல் ' என்பவைகளும் தயாரிக்கப் படுகின்றன. கேட்டமின் விலங்குகள் அறுவை சிகிச்சை செய்யும்போது பயன் படுத்துவதாகும் மயக்க மருந்தாகும். ஆனால் அதனை மனிதன் பயன் படுத்தும் பொருளாக கடத்தப் படுகிறது. 4) கஞ்சா செடிகள் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு மேகமலை, தேனி, போடிமெட்டு, கேரளா மூணாறு எல்லை ஓரங்களில் பயிரிடப் படுகிறது. அவை புகைக்கப் படும் பொருளாகி மூளை பகுதிகளை பாதித்து சுய உணர்வு குன்றும் நிலை ஏற்படுகிறது.5) ஆம்பிட்டமின் என்ற ரேவ் போதைப் பொருள் பார்ட்டிகளில் பயன்படுத்தும் போதையாகும். அது வைத்திருந்ததாகத் தான் போலியாக மும்பையில் கப்பல் பார்ட்டிக்கு செல்லும்போது தேசிய போதைப் பொருள் அணியால் கைது செய்யப் பட்டார் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்.

            5) டிடிஜே இன்செக்ஷ்ன் என்பது ஆஸ்பத்திரியில் உபயோகப் படுத்திய ஊசிகளை எடுத்து அதனில் போதை பவுடர்களை தண்ணீருடன் கலந்து போதை அடிமையானவர்களை குறைந்த செலவில் செலுத்துகிறார்கள். அதனை குத்தல் எனவும் அழைக்கின்றனர். அதன் விளைவு ஆஸ்பத்திரியில் எச் ஐ வி நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் பயன்பட்ட சிரஞ்சிகளை எடுத்து மறுபடியும் போதைக்கு பயன் படுத்துவதால் அந்த நோய்களும் அதனை உபயோகிப்பவர்களுக்கு தொற்றிக் கொள்ளும்.

6) குப்பைகளில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கும் சிறுவர்களும் பெரியவர்களும் கார், பைக், சைக்கிள் பஞ்சர் ஓட்டும் சொலுஷனை போதை பொருளாக ஸ்வாசிக்கின்றனர்.

7) இப்போது ‘இ சிகரெட்’ என்ற நடுத்தர மேல்குடி மக்கள் உபயோகிக்கும் போதையாக  பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் 2021ம் ஆண்டு நடத்தப்  பட்ட சர்வேயில் பள்ளியில் 6வதிலிருந்து 12வகுப்பு படிக்கும் மாணவர் வரை இ-சிகரெட் புகைப்பது அதிகமாகி அது துப்பாக்கி கலாட்சாரத்திற்கும் வழிவகுக்கின்றதாம்.

போதைப் பொருட்கள் கடத்துவதால் தீவிரவாதம், போட்டி அரசாங்கம் நடத்துவது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுகளுக்கும், அறிவுசால் மாணவர்கள் உயர்நிலைக்கு வரமுடியாமல் போவதற்கு  வழிவகுக்கின்றது, என்பதினை சில சம்பவங்களைக் கொண்டு உங்களுக்கு விளக்கலாம் என எண்ணுகிறேன்:

1)                  அமெரிக்கா, மற்றும் மெக்ஸிகோபோன்ற தென் அமேரிக்கா நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தும் ஒரு படையினையே வைத்திருந்த 'குஸ்மான் என்ற எல்சாக்கோ' போதைப் பொருளை கடத்துவதிற்கு கப்பல்களையே வைத்திருந்ததும், பிடிபட்டால் மிகவும் பாதுகாப்பாக உள்ள சிறைச் சாலையிலிருந்து தப்பிப்பதற்கு டிராலி என்ற ரயிலையே சுரங்கம் தோண்டி, மின்சார அமைப்பை  ஏற்படுத்தி இரண்டு தடவை தப்பித்ததும், மூன்றாவது தடவை மாட்டிக் கொண்டு தற்போது அமெரிக்க சிறைச்சாலையில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கின்றான். அவனைப் பற்றிய தகவல் காவல் துறைக்கு தெரிவிப்பவர்கள், எதிர்தரப்பு கடத்தல் காரர்கள் என்று 2000 பேர்களுக்கு மேல் கொலை செய்திருப்பதாக தகவல் சொல்கிறது. 2007ம் ஆண்டு மெக்ஸிகோவில் ஒரு வீட்டில் போதைப் பொருள் கும்பல் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் பேரில் சோதனை இடும்போது 900 கோடி அமெரிக்கன் டாலர்கள் இருந்ததாம். ஆகவே எந்த அளவிற்கும் மனிதர்களை போதைக்கு அடிமையாக்கி பணம் சேர்க்கின்றனர் என்பது நமக்கெல்லாம் அதிசயமாக இல்லையா?

2)                  போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து படகுகள், விமானப் பயணியர் மூலம் இலங்கைக்கு கடத்தப் படுகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் அதிகமாக அதனை உபயோகிப்பதில்லை. மாறாக அதனை இலங்கை கடல் எல்லையில் நங்கூரம் இட்டு இருக்கும் சரக்கு கப்பலுக்கு கொண்டு சென்று அதற்காக தங்க கட்டிகளை வாங்கி பண்டமாற்றும் முறைப் படி போராளி குழுக்களுக்கு ஆயுதங்கள் வாங்கும் பொருளாக உபயோகிக்கின்றனர். அதன் விளைவு தான் தமிழக கடற்கரை ஒர மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம், கைது நடவடிக்கைகளை செய் கின்றனர், அதனால் அப்பாவி மீனவர்களும் பாதிக்கின்றனர். போதைப் பொருள் கடத்துபவர்கள் எப்படி தீவிர வாத நடவடிக்கை எடுப்பார்கள் என்பதினை ஒரு சம்பவம் மூலம் உங்களுக்கு விளக்கின்றேன். நான் 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக போதைப்பொருள் தடுப்பு குழு எஸ்பியாக பணியாற்றியபோது சென்னை மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை சோதனை செய்தபோது முகமது ஆசாத், கலால், யோகராஜா, லாரஸ் ஆகியோரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமல்ல, தங்கள் பாதுகாப்பிற்கு ஒரு துப்பாக்கி, 3 குண்டுகள், ஒரு கத்தி வைத்திருந்தனர் என்று பார்க்கும்  அவர்கள் எதற்கும் அஞ்சா தீவிர வாத கும்பல் தானே!

3)                  அதேபோன்று காசுக்கா உயிரை பணயம் வைத்து போதைப்பொருட்கள் கடத்தும் கும்பலை 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை திருவல்லிகேனியில் பிடித்தோம். அங்குள்ள ஒருவீட்டில் இரவு சோதனையிடும்போது  பெரிய கேப்சுல் வடிவத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பிகளில் ஹெராயின் பவுடர்களை நிரப்பிக் கொண்டிருந்த இலங்கையினைச் சார்ந்த ஜிப்ரி என்ற சிராஜூதின், ரவிச்சந்திரன், காசிம் ஆகியோர்களை பிடித்து விசாரித்தபோது அதனை 'குருவி' என்ற கடத்துபவர்களுக்குக் கொடுத்து விழுங்கச் சொல்லி தயார் நிலையில் வைத்திருக்கும் இலங்கை டிக்கெட்டில் ஏற்றி விடுவார்களாம். அப்படி விழுங்குபவர்கள் கொழும்பு சென்றபின்பு இனிமா கொடுத்து கழிவுமூலம் வெளியேற்றுவார்களாம். ஆனால் வழியில் தடங்கள் ஏற்பட்டால் குறைந்த வருமானத்திற்காக கடத்தல் செய்பவர்கள் உயிரே குப்பிகள் குடலுக்குள் வெடித்து இறந்து ஆபத்து ஏற்படுமாம்.

4)                  போதைப் பொருளுக்கும், தீய நண்பர்களாலும் எப்படி மிகவும் புத்திசாலியான மாணவர் ஐ.ஏ.எஸ் தேர்வினை கோட்டைவிட்டார் என்று விலக்குகின்றேன். 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு டெலிபோன் பூத் வைத்திருக்கும் இலங்கை வாசிமூலம் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவல் மூலம் சோதனை செய்தபோது அந்த கடை உரிமையாளர் இலங்கை வாசி மற்றும் எம்பிஏ பட்டதாரி பாலசந்தர் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பட்டதாரி கனடாவில் வேலை பார்த்தபோது இலங்கைவாசிகள் மூலம் போதைக்கு அடிமையாகி அவர்கள் தொடர்பில் இருந்துள்ளார். அவருடைய தந்தை சென்னை ஹார்பாரில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி. அவரின் வேண்டுகோளை அடுத்து பாலச்சந்தர் சென்னை திரும்பி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்துவந்தார். அவருக்கென்று ஒரு தனி அறை பெசன்ட் நகர் வீட்டில் ஒதுக்கப் பட்டது. அந்த வீட்டில் சோதனையிடும்போது ஹெராயின், கஞ்சா சிகரெட்டு, பெத்தடின் போன்ற பொருட்கள் இருந்தது கண்டு அவர் தந்தையும் கஸ்டம்ஸ் அதிகாரியுமான அவருக்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஆகவே பிள்ளைகள் படித்து, அவர்கள் வாழ்க்கையில் நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆடம்பர வசதி மட்டும் செய்து கொடுத்தால் போதாது மாறாக பிள்ளைகள் வழிதவறி நடக்கக் கூடாது என்ற கண்காணிப்பு மீன் கொத்தி பறவைபோல் இருக்க வேண்டுமல்லவா?

5)                  பல்வேறு நாடுகளில் மரண தண்டனையிலிருந்து வாழ்சிறை, கடுமையான சிறை தண்டனை இருந்தும் கடத்தல் அதிகமாவே உள்ளன. பல விளையாட்டு வீரர்களிருந்து ஒலிம்பிக் வீரர்கள் வரை ‘டோப் டெஸ்ட்’ என்ற போதை பரிசோதனையில் தோல்வி காண்பதும் அவர்கள் பதக்கம் பறிக்கப் படுவதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து ரசியா சென்ற கூடைப் பந்து வீராங்கனை ‘பிரிட்டினி குர்மிட்’ அங்குள்ள விமானத் தளத்தில் சிறியளவு போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப் பட்டு, எவ்வளவோ எதிர்ப்பு கிளம்பினாலும் அங்குள்ள கோர்ட்டால் 9 வருடம் கடுந்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இவைகளையெல்லாம் காணும்போது நாம் நமது பிள்ளைகளை போதைக்கு அடிமை, கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் எவ்வளவோ லாபம் வந்தாலும் பாழும் கிணற்றில் விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். போதைக்கு அடிமையானவர்களை தமிழ்நாட்டில் உள்ள 129 ‘டி அடிக்சன்’ அதாவது போதையிலிருந்து விடுபடும் சிகிச்சையளிக்கும் தன்னார்வ மையங்களில் சேர்த்து சிகிச்சை அளித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவேண்டும்.

Sunday, 23 October 2022

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

சமீபத்தில் வெளியான கல்கி ஆசிரியர்  வெளியிட்ட சரித்திர நாவலில் வரையைப் பட்ட வரலாற்று கதையினை தழுவி வெளிவந்த திரைப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் சித்தரிக்கப் பட்ட குந்தவி இளவரசி இஸ்லாத்திற்கு தழுவிய செய்தி திருச்சி  ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் பகுதியில் சுற்றி வருகின்றதினை வலது சாரி அமைப்புகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக நீங்களெல்லாம் செய்தித்தாள்களில் படித்து அறிந்திருப்பீர்கள். வலாற்று செய்தி என்னவென்றால் கி.பி.1000ம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தினை ஆண்ட ஆதித்ய கரிகாலன் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அதற்கு மூல காரணம் அவருடைய அரச சபை ஆலோசகராக இருந்த ரவிதாசன் என்ற பிராமணர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு  கொன்று விட்டதாக கருதிய மன்னரின் சகோதரி குந்தவி மற்றும் அவருடைய சகோதரர் ராஜேந்தரன் கொலையாளிகளுக்கு கழுவில் ஏற்றி கொல்வதற்குப் பதிலாக அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ததாக கூறுகின்றது. ஏனென்றால் அவர்கள் பிரமானரர்களாக இருப்பதால் சாஸ்திரப் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக நம்பப் படுகிறது. தனது மதத்தில் உள்ள சனாதன கொள்கையில் மனித வேறுபாடுகளை வெறுத்து திருச்சி-மதுரை தரநல்லூர் பகுதியில் வாழும் துருக்கியிலிருந்து பயணம் வந்து இஸ்லாமிய நல் போதனைகளை போதிக்கும் நத்தர்ஷா(969-1039) அவர்களை சந்தித்து இஸ்லாமிய மார்க்க கொள்கைகள் தனக்கு ஒத்துப் போனதால் இஸ்லாத்திற்கு கலிமா சொல்லி மாறியதாகவும் வரலாறு சொல்கிறது.  குந்தவி தேவி இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியதாகவும் கூறப் படுகிறதுதான் பெரிய சர்ச்சையாக உள்ளது. குந்தவி தேவி என்பவர் ஒருவர் இருந்தாரா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் உள்ள குந்தவி சிலை உள்ளதாகவும் அந்த சிலையின் கம்பீரமான படம் இணைய தலத்தில் உள்ளது.

            நாடுகளில் மனித கொலைகள், கொடுமைகள் பற்றி விசாரிக்க சர்வதேச கிரிமினல் கோர்ட் 1998ல் ரோமில் அமைக்கப் பட்டு தற்போது நெதர்லாந்து நாட்டில் ஹெகுவில் இயங்கி வருகிறது. அதன் படி யூகோஸ்லாவியா நாட்டின் ஜனாதிபதி மிலாவிக் போஸ்னியா நாட்டின் முஸ்லிம்களை வேட்டையாடினர் என்றும், லைபீரியா நாட்டின் ஜனாதிபதி டெய்லர், மற்றும் ருவாண்டா பிரதமரையும் கோர்ட் முன் நிறுத்தி தண்டித்தது. ஆனால் அதே கோர்ட் 2003ம் ஆண்டு மனித ஆட்கொல்லி ஆயுதம் வாய்ப்பிருப்பதாக இராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனை சிறைபிடித்து அவருடைய எதிரிகளின் கையில் கொடுத்து அநியாயமாக மரண தண்டனையும் வாங்கி கொடுத்த அமெரிக்கா ஜார்ஜ் புஸ்ஸையோ அல்லது இங்கிலாந்து டோனி பிளேயரையோ இதுவரையும் எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் அமெரிக்காவில் ஐ.சி.சி. சட்டம் செல்லாது. அதுபோன்று தான் ரசியாவிலும் ஏனென்றால் அவர்கள் எல்லாம் சனாதன கொள்கைப்படி விளக்கு அளிக்கப் பட்டவர்களாம். ஆனால் இஸ்லாத்தில் அதுபோன்ற விளக்கெல்லாம் இல்லையல்லவா?

            நம் நாட்டில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு கி.பி. 1000ம் சோழ அரசர் காலத்தில் தான் வந்ததா என்றால் இல்லை என்றே அடித்து ஆதாரத்துடன் சொல்லலாம். ரசூலுல்லாஹ் மதினாவில் வசித்த போது வியாபாரத்திற்காக வந்த  இஸ்லாமிய வியாபாரிகள் மற்றும் சஹாபிகள் கேரளா திருசூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதிக்கு வந்து தங்கியிருந்தபோது அப்போதைய மன்னர் சேரமான் பெருமான் இஸ்லாமிய ஓரிறை கொள்கையினை பற்றி அறிந்து அவர்கள் தொழுவதிற்காக ஒரு இடத்தினை ஒதுக்கி தந்தும், ரஸூலல்லாவினை காண சௌதி அராபியாவிற்கு சென்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

            அது சரி இஸ்லாத்தில் அப்படி என்ன வேற்று மதத்தினவரை ஈர்க்கும் கொள்கை உள்ளது என்பதினை உத்தரப்பிரதேசத்தினைச் சார்ந்த சித்தார்த் பிற்காலத்தில் 2021ம் ஆண்டு இஸ்லாத்திற்கு ஏன் சாதலி என்ற முஸ்லிமாக மாறினேன் என்று விவரித்துள்ளார். சிறு வயதிலிருந்தே முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்புணர்வு இருந்தது. பின்பு அவர் 19 வயதாகும்போது கோவில்களில் அனுசரிக்கும் பல்வேறு சடங்குகளை கண்டு அதிர்ச்சியடைந்து  தங்களுடைய கிராமத்து பெரியவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் நமது முன்னோர்கள் கடைப் பிடித்து வந்ததால் தாங்களும் வழிபாட்டு வருவதாக சொல்லியுள்ளார்களாம். அது அவருடைய  அறிவிற்கு பொருத்தமான பதிலாக தெரியவில்லை. ஆகவே இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள அல் குரானை விளக்கத்துடன் படிக்க முற்பட்டாராம்.  இஸ்லாமியர் தொழும் இடங்களில் பார்த்தபோது தொழுபவர் பக்கீரோ அல்லது சீமானோ இருவரும் தோழோடு தோழாக சமமாக சகோதர பாசத்துடன் நின்று தொழுவதினை பார்த்து ஆச்சரியப்பட்டாராம். சித்தார்தரும் நின்று தொழ ஆரம்பித்தாராம். அவரை யாரும் வேற்றுமையுடன் பார்க்கவில்லையாம். அதன் பின்பு கலிமா சொல்லி இஸ்லாத்தினை தழுவி விட்டாராம். உங்களுக்கெல்லாம் தெரியும் உத்தர பிரதேசத்தில் எந்த விதமான துவேசம் உள்ளது தற்போது என்று. அவருக்கு பெற்றோரும், உற்றாரும் தாங்கொன்னா கொடுமைகள் கொடுத்தார்களாம். ஆனால் தான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் விலகவில்லை என்று கூறும் போது உங்களுக்கு உடலெல்லாம் புல்லரிக்கவில்லையா?

            நம் நாட்டின் வரலாற்றில்  சாதாரணமான ஆட்கள் மட்டுமல்ல. மாறாக அரசர்களும் இஸ்லாத்தினை தழுவியிருக்கின்றார்கள் என்ற தகவல்களை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்:

1)    ‘பேரார்’ சந்ததிகளின் பேரரசர் பாத்துல்லாஹ் இம்மதுல் மாலிக் ஆரம்பத்தில் விஜயநகர அரசரின் அடிமையாக ‘கவாரிஸ்’ என்ற இந்துவிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன் பின்பு இஸ்லாத்தின் பண்புகளில் அடிமையே இல்லை என அறிந்து இஸ்லாத்தில் சேர்ந்து பேரார் தேசத்தின் ஒரு பரம்பரையே ஏற்படுத்தினார் என்றும் அவர் 1490ம் ஆண்டிலிருந்து 1504 வரை ஆட்சி நடத்தினாராம்.

2)    வங்காளத்தினைச் சார்ந்த ராஜா கணேஷா வம்சத்தில் யாதவ குடும்பத்தில் பிறந்த 15ம் நூற்றாண்டில் பிறந்த ராஜா கணேஷ் பிற்காலத்தில் இஸ்லாத்தினைத் தழுவி ஜலாலுதின் முகமது ஸா என்று அழைக்கப் பட்டார். தனது தந்தையும் வங்கத்தின் அரசருமான கணேசா இறந்த பின்பு அரியணையில் ஏறி கி.பி.1418-1433 வரை 16 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிற்காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவினார். இவர் ஆட்சியில் வங்கம் வளம் செழித்த நாடாக இருந்தது. தைமூர் வம்சம், எகிப்தினை ஆண்ட மம்லுக், சீனாவினைச் சார்ந்த மிங் வம்சங்களுடன் நல்லுறவினை வளர்த்தார். தான் முஸ்லிமாக மாறியதோடு மட்டுமல்லாமல் மற்ற ஹிந்துக்களுக்கு இஸ்லாத்தின் சிறப்புகளை சொல்லி அவர்களையும் இஸலாத்திற்கு மாற்றினார்.

3)    18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வங்காளத்தில் சூரிய நாராயணராவ் மிஸ்ராவாக இருந்தவர் இஸ்லாத்தினைத் தழுவி 1717-1727 வரை வங்கத்தின் நவாபாக முர்ஷித் குழி கான் என்ற பெயருடன் ஆட்சி செய்தார்.

4)    டெல்லி நிசாமுதீன் தர்காவிற்கு அருகில் இருக்கும் மாலிக் மகபூல் என்பவர் தர்காவினை பார்த்திருப்பீர்கள். அவர் ஆந்திர தேசம் வாரங்களினைச் சார்ந்தவர். இவர் 13ம் நூற்றாண்டில் வலிமைமிக்க போர் வீரர். அவர் ஒரு ஹிந்து. அவருடைய உண்மைப் பெயர் யாந்தர் ஆகும்  இவர் சிறந்த நிர்வாக திறமை கொண்டவராவார்.

அவர் இஸ்லாத்திற்கு மாறி மாலிக் மகபூல் என்ற பெயரினை மாற்றி சிறந்த பக்திமானும் நிர்வாகியாகவும் இருந்தார்.

5)    மாலிக் காபூர் ஒரு அடிமையாக டெல்லி அரசர் அலாதின் கில்ஜி காலத்தில் குஜராத்தில் படையெடுப்பின் போது 1299ம் ஆண்டு பிடிக்கப் பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டார். பின்பு அவர் முஸ்லிம் மார்க்கத்திரத்தினைத் தழுவி தாஜுதீன் தௌலா என்று அழைக்கப் பட்டார். அவர் போர் திறமைகளை பாராட்டி அவரை படைத்தளபதியாக்கி மங்கோலிய படையெடுப்பினை எதிர் கொள்ளவும், யாதவ பரம்பரை, காக்கடியாஸ், கொய்சாலாஸ் மற்றும் பாண்டியர்களை போரில் சந்திக்கவும் அவரை மன்னர் அனுப்பி வைத்தார். அதன் பின்பு அவர் முன்னாள் அடிமைகளால் 1316ல் கொல்லப் பட்டார்  என்பதும் வரலாறு.

6)    பாதவுல்லாஹ் கர்நாடகா பிடார் பகுதியினைச்சார்ந்த கனரீஸ் பிரமணராவார். இவரை பாமணி படைகள் அடிமையாக பிடிக்கப் பட்டார். அதன் பின்பு அவர் முஸ்லிம் மார்க்கத்திற்கு மாறினார். சிறந்த போர் தளபதியாகவும் பயிற்சி பெற்றார். பாமணி சுல்தான் 1490ல் இறந்த பின்பு இவர் பாமணி சுல்தானாக பதவியேற்றார்.

7)    இரண்டாம் உலகப்போரினை கூட்டுப்படைகளை ஒருங்கிணைக்கும் ஜாம்பவானாக இருந்த இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இஸ்லாமிய மார்க்க கருத்துக்களின் ஆழத்தினை அடிக்கடி படித்துவிட்டு அவருடைய குடும்பத்தினரிடம் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் இணையப் போவதாவதாக சொல்வதுண்டு அவர்கள் கூறியுள்ளார்கள் என்ற வரலாறு.

8)    அமெரிக்காவில் கறுப்பினராக 1958ல் பிறந்து அமெரிக்கா மட்டுமல்லாது உலக பாப் இசை ரசிகர்களை தன்னுடைய நடனத்துடன் கூடிய இசையின் மூலம் கவர்ந்த பாடகர். மைக்கேல் ஜாக்சின் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப் படும் வேறுபாடுகளை கண்டு ஒரு கட்டத்தில் வெள்ளையர்கள் நீங்கள் தோல்களில் தான் வேற்றுமை பார்க்கின்றீர்கள் என்று வெறுப்புடன் தானும் வெள்ளையனாக மாற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சகோதர பாசம் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி வெள்ளை தொப்பி தலையில் அணிந்து உள்ள படங்களையும் நீங்கள்ட பார்த்திருப்பீர்கள். அவர் 2009ம் ஆண்டு இறைவன் அடி சேர்ந்தார்.

9)    உங்களுக்கெல்லாம் தெரியும் உலக குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் 2003ம் ஆண்டு பட்டம் வென்ற மைக் டைசன் பிற்காலத்தில் ஒரு கற்பழிப்புக் குற்றத்திற்காக பட்டத்தினையும் இழந்து, ஜெயிலுக்கும் சென்றார் என்று. ஆனால் ஜெயிலில் கிடைத்த இஸ்லாமிய நல்வழி போதனையால் கற்பழிப்பது மாபெரும்   குற்றம் என்று உணர்ந்து இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் 2017ம் ஜூன் மாதம் 4ந்தேதி உ.பி மாநிலத்தில் உன்னாவ் என்ற கிராமத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலிய குற்றத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் குலதீப் சிங் தண்டனை பெற்றாலும் சிறிதும் குற்றத்திற்காக வருந்தாது  சிரித்த முகத்துடன் பெரிய கூட்டமே வரவேற்பு கொடுத்தது. அதேபோன்று தான் 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கற்பினியாக இருந்த பில்கிஸ் பானு கற்பழிக்கப் பட்டும் மற்றும் 16 பேர்கள் கொலை செய்யப் பட்டும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்த அரசு விடுதலை செய்த பின்னர் அவர்களை மாலைபோட்டு வரவேற்ற வழக்கு உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது.

10)  உங்களுக்கெல்லாம் தெரியும் இந்திய அரசியல் புதுடெல்லி வட்டாரத்தில் அரசியல் சாணக்கியராக வலம் வரும் பி.ஜெ.பி தலைவர் சுப்ரமணியசுவாமி. இவருடைய மகள் சுபாஷினி ஒரு சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் CNN-IBN தொலைக்காட்சியில் பல ஆண்டு பணியாற்றியவர். சுபாஷினி 16.ஜூன் மாதம் 2015ல் நதீம் ஹைதர் என்ற முஸ்லிமை திருமணம் செய்து லண்டனில் பி.பி.சி தொலைக் காட்சியில் பணியாற்றுகிறார்.

 

நான் ஏன் இவ்வளவு விளக்கங்களையும் உங்களுக்குச் சொல்கிறேனென்றால் இஸ்லாம் யாரையும் வலுக்கட்டாயமாக மார்க்கத்திற்கு இழுக்கத் தேவையில்லை. பாமரர், அடிமை, அரசர், பத்திரிக்கையாளர், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின்  நல்லொழுக்கங்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்திருக்கின்றார்களாலே தவிர யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தினை பின்பற்றிய பிறகுகூட அவர்களால் தன்னிச்சையாக தங்களுடைய பழைய மதத்திற்கு சென்று விடலாம். ஆனால் அவர்கள் ஏன் செல்லவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் கொள்கை அடிப்படையில் சேர்ந்துள்ளார்கள். அதேபோன்று தான் குந்தவி தேவியும் சனாதானத்தில் ஜாதிகள் பெயரால் மதுரை உத்தமபுரம், தர்மபுரி போச்சம்பள்ளி ஜாதி தடுப்பு சுவர்போல  பெரிய தடுப்பு சுவர் எழுப்பி அவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பால் கட்டுப் படாதவர்கள் என்ற குறை தன்னுடைய உடன் பிறந்த அண்ணன்  ஆதித்ய கரிகாலன் கொலைக்குக் கூட மரண தண்டனையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்  திருச்சி நத்தர்சா அவர்கள் போதனையால் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியுள்ளார். அந்த வரலாற்று உண்மை வலதுசாரி அமைப்பிற்கு தெரிந்தும் கூட மத துவேஷம் அவர்கள் கண்ணை மறைத்து கூக்குரல் எழுப்புகின்றனர்.

           

Wednesday, 21 September 2022

யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றன்.

 

யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றன்.

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ )

தழிழ் இலக்கியம் புறநானூறு -192 அத்தியாயத்தில் வரும் சில பொன்னான வார்த்தைகளை இந்திய ஒற்றுமைக்காக சிவகங்கை மாவட்ட புலவர் கனியன் பூங்குன்றன் கூறியுள்ளார். அதன் பொருள், 'எமக்குள் எல்லாமும், எல்லாரும் சுற்றத்தார்--- யாம் வெறுப்பால் வாழ்வு இனிதன்று என்று இருப்பதுமில்லை' என்று அழகாக, ஆழமான கருத்துடன் இந்திய துணை கண்டத்தின் அடிப்படை உரிமையான, 'unity in diversity' என்ற கொள்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

Guberman, 'தேசம் என்றால் என்ன என்பதினை, 'மனித இனம் உணர்வுப் பூர்வமான பண்பாடுதான் இணைந்து வாழும் வாழ்க்கை கொண்ட வரையறுக்கப் பட்ட எல்கைக்குள் வாழும் மக்கள்' என்று கூறுகிறார். ஒரு நாடு என்பதற்கு,'நிலையான மக்கள், வரையறுக்ககப் பட்ட நிலம் கொண்டது, நிலையான அரசு, மற்ற அரசுகளுடன் தன்னிச்சையான உறவு கொள்ளும் வலிமை' கொண்ட நான்கு கொள்கைகளை அடக்கியதாகும்.

            பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியர் வருவதற்கு முன்பு இந்திய பழமை பண்பாடுகளை கொண்டு பொருளுள்ளவர், பிறப்பால் மேன்மக்கள், கற்றலில் சிறப்பு வாய்ந்தவர் என்ற வேறுபாடு இருந்தது. ஆனால் அவர்கள் வந்த பின்னரும், பிரிட்டிஷ் அறிஞர் லார்ட் மெக்காலே கொண்டு வந்த ஆங்கிலேய பாட திட்டங்களால் இந்திய மக்கள் வெளியுலக உரிமை, சுதந்திரம், இனம்- மொழி -ஜாதியில் வேற்றுமை  போன்றவற்றை தெரிந்து கொண்டனர் என்ற உண்மையினை மறுக்க முடியாது. அதுவும் கல்வி கற்ற மக்களின் எழுச்சி இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றாலும்  மறுக்கமுடியாது அது காந்திய அகிம்சா வழியானாலும் சரி, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தீவிரமானாலும் சரியே! எப்படி இஸ்லாமிய மார்க்கத்தில் படித்த மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய இளைஞர்களால் புரையோடிய சீதனம், சீர் சீராட்டு, திருமண ஆடம்பரம், வழிபாடுகளில் ஆடம்பர ஆர்ப்பாட்டம் அரவே வெறுக்கப் பட்டதோ அதே போன்று இந்திய அடிமைத்தனத்தினையும், ஜாதியக் கொடுமையினையும், ஆண்டான்- அடிமை என்ற வேற்றுமையையும் இளைஞர்கள் உணர்ந்து சுதந்திர வேட்கை அவர்களை தட்டி எழுப்பியது.

            இந்திய துணைக் கண்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு வேறு நாதுகளாக 14-15 ஆகஸ்ட் 1947 அன்று உருவானபோது இந்திய துணைக் கண்டத்தில் 584 பெரு மற்றும் குறுநில மன்னர்கள் 584 சமஸ்தானங்களாக ஆட்சி செய்தனர். அதில் பெரும்பாலான முஸ்லிம் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தன ஹைதராபாத் நிஜாம் தவிர.  இந்தியா சுதந்திரக் கொடியினை ஏற்றியபோது முதல் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேரு, 'on the midnight of 15th August 1947 Indiya woke up to life and freedom' என்று கூறியது இந்திய மக்கள் இப்போதுதான் சுதந்திர காற்றினை நுகர்ந்து உயிர் பெற்றுள்ளனர் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது ஆகும் என்று தெரிகிறதா? நமது சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி வாங்கிய சுதந்திரம் என்று ஒரு வாதத்திற்காக சொன்னாலும் ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையும், பிளாக் கோல் ஆப் கல்கத்தா, மாப்பிலா கைதிகளை மூச்சு திணறி வேனில் சாகடித்த சம்பவங்களும், சுதந்திர தியாகிகள் தூக்கு மேடையில் ஏறி உயிர்கொடுத்தும், இருட்டு தொழுவ சிறையில் பல்லாண்டுகள் வாடியும், செக்கிழுத்த வீர தழும்புகளும் வீர நெஞ்சங்கள் கொண்டு தாங்காமல் பெறவில்லை சுதந்திரம்.

            இந்தியாவுடன், காஷ்மீர், மைசூர், ஹைதராபாத் இணைய மறுத்து விட்டன. இந்திய ராணுவம் ஐராபாதிற்கு 'operation polo' என்ற ரகசிய மொழியுடன் அனுப்பப்பட்டு 13-18 செப்டம்பர் 1948 வரை போர் தொடுத்து சுமார் 30000 நிசாம் வீரர்கள் பலியாகி ஹைதராபாத் பிடிக்கப் பட்டது. ஹைதராபாத்தினை இணைத்த தினமாக 17ந்தேதி செப்டம்பர் மாதம் 2022 ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் ஹைதராபாத்தில் விழாவாக கொண்டாடினார். இரும்பு மனிதர் என்று அழைக்கப் பட்ட அன்றைய உள்துறை மந்திரி வல்லபாய் படேல் குஜராத்தில் கத்தியவார் தீபகற்பம் என்று அழைக்கப் பட்ட 222 சமஸ்தானங்களை இணைத்து 1948 ஜனவரியில் சவ்ராஷ்டிரா என்ற மாநிலமாகவும், குவாலியர், இண்டூர் மற்றும் 18 சமஸ்தானங்களை இணைத்து மத்திய பாரத் ஆகவும், பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப் ஆகியவற்றை இணைத்து 15 ந்தேதி ஜூலை மாதம் 1948ல் பஞ்சாப் மாநிலமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சமஸ்தானங்களை இணைத்து 15ந்தேதி மே மாதம் 1949ம் ஆண்டு தனி மாநிலமாகவும் உருவாக்கப் பட்டது.மைசூரும், ஹைதராபாதும் மத்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் காஷ்மீரை ஆண்ட மன்னர் மஹாராஜா ஹரி சிங் மட்டும் சுவர் மீது உள்ள ஓணானாக எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவு எடுக்கப் படாமல் இருக்கும்போது பாகிஸ்தான் பலுசிஸ்தான், மற்றும் ஆசாத் காஷ்மீரை இணைத்தது. பிறகு உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா என்று அறிந்து இந்தியாவுடன் 27ந்தேதி அக்டோபர் மாதம் 1947 ம் வருடம் இந்தியாவுடன் இணைந்தது. காஷ்மீர் மட்டும் constituent assembly என்ற தனித்தன்மையுடன் அரசியல் சட்டத்தில் பிரிவு 370 தனித்தன்மை கொண்டதாக அமைந்தது. இந்திய அரசியல் சட்டம் 1950 நிறைவேற்றிய பிறகு இந்திய மாநிலங்கள் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்தியாவுடன் இணைந்த மன்னர்களுக்கு மாநில கவர்னர் பதவிகளும், வெளி நாட்டு தூதர் பதவிகளும் கொடுக்கப் பட்டது. அப்படி முதன் முதலில் மெட்ராசிற்கு வந்த கவர்னர்  தான் பவநகர் மஹாராஜா. 1956ம் ஆண்டு மாநிலங்களை மொழிவாரி மாநிலமாக பிரிக்க 'reorganisation of states' குழு அமைத்தது அதன் படி அமல் நடத்தப் பட்டது. கடைசியாக தெலுங்கு பேசும் தனி மாநிலமாக ஹைதராபாத், தெலுங்கானா பிரிக்கப் பட்டது உங்களுக்குத் தெரியும்.

நேபாள் மற்றும் சிக்கிம் ஹிமாலய தேச நாடுகள். பிரிட்டிஷ் நேபாளுடன் செய்து கொண்ட 1923 ஒப்பந்தப்படி அது சுதந்திரம் பெற்றது.ஆனால்  பூடான் தனி மன்னராட்சியானாலும் அதன் வெளிநாட்டுக் கொள்கையினை இந்திய ஒப்புதலுடன் தான் செய்ய வேண்டும். சிக்கிமுடன் செய்து கொண்ட 1950ம் ஆண்டு ஒப்பந்தப் படி அது சுயாட்சியாக முடிவு செய்யப்பட்டது.

            அந்நிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பிரான்ஸ் ஆட்சி செய்த பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனம், மாகி, சந்திரநாகூர் போன்றவையும், போர்ச்சுகல் ஆட்சி செய்த டாமன், டையூ, டாட்ரா, நாகர் காவாலி, கோவா போன்றவை தனியாக இருந்தது  பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தை 1948ம் ஆண்டு நடத்தப் பட்டது. அதன் முடிவில் பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் மக்களின் விருப்பத்தினை அறிய ஓட்டெடுப்பு நடத்தி அதன் படி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது. 1949ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி முதல் 1954 வரை ஓட்டெடுப்பு நடத்தப் பட்டது. வாக்களித்த 7463 பேர்களில் 114 பேர்கள் மட்டும் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லை என்று தெரிவித்ததினைத் தொடர்ந்து மெஜாரிடி மக்கள் விருப்பத்தின் படி பிரான்ஸ் பகுதிகள் 1961ல் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் போர்ச்சுகல் மட்டும் இந்தியாவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வரவில்லை. அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் தன்னுடைய படையினை அனுப்பியது. ஆனால் இந்திய ராணுவம் அதற்குள் 1961ம் அவைகளை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

            கர்னாடிக் நவாப் குலான் பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்து இந்திய சமஸ்தானங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததலால் அவருக்கென்று தனி மரியாதை பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. ஆனால் அவர் 1855ம் ஆண்டு இறந்த பின்பு 'Doctrine of Lapse' படி கர்னாடிக் சமஸ்தானத்தினை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவருக்கு பின்பு வந்த ஆற்காட் நவாப் வாலாஜா தன்னை ஒரு தனிக் காட்டு ராஜாவாக நினைத்து அரசு வருமானத்தின் ஒரு பகுதியினை பிரிட்டிஷ் கும்பனி ஆட்சிக்கு செலுத்தாமல் பல தான தர்மங்களை செய்ய ஆரம்பித்தார். உதாரணத்திற்கு சௌதி அராபியாவில் தமிழ்நாடு ஹஜ் பயணிகள் தங்க மக்கா மதினாவில் தங்கும் இல்லங்கள் கட்டினார்,  அவர்கள் சென்று வர இலவச கப்பல் பயணங்களுக்கு உதவினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் உள்ள மதரசா இ ஆசம் என்ற இலவச பள்ளி அமைத்தார், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேனி பார்த்த சாரதி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் போன்ற இடங்களில் பக்தர்கள் வசதிக்காக குளங்கள் அமைத்தார்,  பிஷப் ஹீபர் பள்ளி, திருச்சி ஜெயண்ட் ஜோசெப் கல்லூரி போன்றவைகள் நிறுவ காரணமானார். அவைகள் எல்லாம் அரசு பணமட்டுமல்லாமல், பிரிடிஷ் தன்வந்தர்களிடமும் கடன் வாங்கி நல்ல காரியங்கள் செய்தார். அதன் மூலம் அரசு கஜானா திவாலானது. ஆகவே பிரிட்டிஷ் அரசு நவாபின் சமஸ்தானைத்தினை தானே எடுத்துக் கொண்டது. நவாப்பினை வெறும் ஆண்டு தோறும் ரூ 1.50 லட்ச மானியத்துடன் மதிப்புமிக நவாபாக நியமனம் செய்தது. நவாப்பின் அமீர் மஹால் மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு CPWD மத்திய பொதுப் பணி துறை சீர் செய்யவும் பணிக்கப் பட்டது. ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி, 'ஆற்காட் இளவரசர் பட்டம் ஒரு கவுரவ பதவி என்றும், அவருக்கென்று தனி அதிகாரம் எதுவும் இல்லை என்றும், அவருக்கென்று தனி அணிவகுப்பில்லை என்றும்' தெளிவாக குறிப்பிட்டது கவனிக்கத் தக்கது. எந்த நவாபிற்கு, 'பிரிட்டிஷாருடன் இணைந்து புலித்தேவன், மருது நாயகம் என்ற யூசுப் கான், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியார் போன்ற சுதந்திர வேங்ககைகளை வீழ்த்தி பல் வேறு சமூகத்தினவருக்கும் உதவி செய்த நவாபின் பரிதாப நிலை பார்த்தீர்களா?

            இப்போது புறநானூறு கவிஞர் பூங்குன்றன் கவிதை படி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலை படி நாட்டின் நிலைமை உள்ளதா என்று பார்க்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரும், தலித் மக்களும் தங்களை பெரும்பான்மையான சமூகத்தினரிடமிருந்து பாதுகாப்பற்ற நிலையினை உணர்வாக நினைக்கின்றனர். அதற்கு மூல காரணமே என்று 1992ல் அயோத்தியில் உள்ள பாபரி பள்ளி இடிக்கப் பட்டதோ, என்று அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றமும் ஒரு தலையான தீர்ப்பு வழங்கப் பட்டதோ அன்றிலிருந்து முஸ்லிம் சமூதாய மக்களிடையே பயம் கலந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாரணாசியுள்ள பள்ளிவாசலுக்கும் ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாட்டுடன் கூடிய சிந்தனையில்லாமலும், உனக்கு உன் மதம், எனக்கு என் மார்க்கம்’ என்று சொல்லும் வரம்பு இல்லாமல் மெஜாரிட்டி சமூகத்தினர் தான் வாழ வேண்டும், வழிபட வேண்டும், அவர்கள் கட்டளைப் படிதான் வழிபாடு, வணக்கஸ்தலங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்.

அரசியல் சட்டபடி இந்திய நாட்டினர் அவரவர் பண்பாடுதான் நடந்து கொள்ள அனுமதித்தும்,  பெண்கள், ஆண்கள் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் கொள்ள பயன்படும் ஹிஜாப் அணிவதற்கும் தடை வழக்கு உச்சநீதிமன்ற  கதவையும் தட்டியுள்ளது. இஸ்லாமியர் ஒழுக்க சிந்தனை தூண்டும் மதராசாவினையும் கண்காணிக்கும் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது. உதாரணத்திற்கு 18.9. 2022 அன்று மாலை அசோக் நகர் பள்ளிவாசலில் உள்ள மதரஸாவில் ஓதி விட்டு திரும்பும் தொப்பி போட்ட எட்டாம் வகுப்பு சிறுவனை ஒருவன் ஏன் தொப்பி போட்டுள்ளாய் என்று மிரட்டி அதனால் அசோக்நகர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மனம் இணைந்த இளம் ஜோடிகளை இஸ்லாத்திற்கு இழுக்கும் ‘லவ் ஜிஹாத்’ என்று மிரட்டும் சட்டத்தில் அனுமதியில்லா 'மாரல் போலீசிங்' நடந்து கொண்டுள்ளது பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. தாரை தப்பட்டை அடித்து தெருவெங்கும் அலறும் திருவிழாக்கள் நடக்கும்போது அமைதியாக தொழுகைக்கு அழைக்கும் பள்ளிவாசல் பாங்கு சொல்வதையும் தடை செய்யவேண்டும் என்று கூக்குரல்.

அத்துமீறல்களை படம் பிடித்துக் காட்டும் பத்திரிக்கைகளுக்கு எச்சரிக்கை, பத்திரிக்கையாளர்கள் சிலர் கைது, பத்திரிக்கை அலுவலங்கள், அதன் பொறுப்பாளர் வீடுகளில் சோதனை போன்ற நடவடிக்கைகளும் நடுநிலையாளர்களை அச்சுறுத்தும் செயலாக நீங்கள் கருதவில்லையா?

தலித் மக்கள் தேசியக் கொடியினை ஏற்றவிடாமல் தடுப்பது, அவர்கள் குடியிருப்புகளை சுவர் அமைத்து தனிமைப்படுத்துவது, பள்ளிகளில் கழிவறையினை தலித் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யச் செய்வது, ஆசையாக பள்ளி சிறுவர்கள் மிட்டாய் கேட்டதிற்கே ஊர் கட்டுப்பாடு உங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று சொல்லும் உலகினை எப்படி சொல்வது, தலித்துகளுக்கு இந்த நாடு இல்லையா?

கிருத்துவர்கள் ஜெபம் செய்வதினை தடுப்பது, அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஏதாவது பொய்யான மதம் மாற்றம் நடக்கின்றது என்ற குற்றச்சாட்டினை அள்ளி வீசுவது போன்றவை கிருத்துவர்களிடையே அச்ச உணர்வு வராமலில்லையே!

கருத்துக் கலந்துரையாடலில் தலையிட்டு கலவரம் செய்வது தான் நாகரீகமா? அதற்கு சட்டம் அனுமதி கொடுத்திருக்கின்றதா ? இல்லையே!

வெளி நாட்டு பத்திரிக்கை, ஐ.நா சபை மனித உரிமை ஆணையம் கூட இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை படம் பிடித்து காட்டியுள்ளது. இதற்குத்தான் அனைத்து மக்களும் இனைந்து பாடுபட்டு சுதந்திர இந்தியாவிற்காக பட்டார்களா? எத்தனை அடக்குமுறை தழும்புகள்  சுதந்திர இந்தியாவினை அந்நியரிடமிருந்து பெற இன் முகத்துடன் பெற்றனர், அது ஏன் என்றால், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கிற்கிணங்கவும், 'பாருக்குள்ளே நல்ல நாடு அது பாரத நாடு' என்ற உணர்வினை உலகிற்கு உணர்த்தவும் தான் அவ்வாறு பாடுபட்டனர். கல்லானாலும் புருஷன், புல்லானாலும் புருஷன் என்று இந்திய தேசீயத்திடன் இனைந்து நின்ற மக்களை இனியும் ஜாதி, மதம், மொழி, இனம் என்று வேறு படுத்தி தனிமைப் படுத்துவது முறையா? அது போன்ற துவேஷமான நடவடிக்கைகள் மூலம் யாரும் சர்வதேச கண்டனத்திற்கு நாம் கொடுக்கலாமா?  இந்திய மக்களுக்கு எந்தவித இழுக்கும்  ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா?

           

           

           

Monday, 22 August 2022

மனித உரிமை எடுப்பார் கைப்பிள்ளையா?

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

உலகில் பல்வேறு அரசியல் அமைப்புகள் ஆட்சி பீடத்தில் இருந்தாலும், ஜனநாயகத்திற்கு ஆதரவு குரல் ஒலித்துக்கொண்டே உள்ளன. கொடுங்கோலர்கள் பல காலம் அரியணையில் நிரந்தரமாக இருந்ததில்லை. மக்களை மறந்த மன்னர்கள் நெஞ்சில் நிலைத்ததில்லை என்பது வெள்ளிடைமலை.

உங்களுக்கெல்லாம் தெரியும் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் பிரிந்து தனி நாடானது. அதனை அங்குள்ள ராணுவ தளபதி முகமது இர்ஷாத் பின்னாளில் அரசியல் வாதியாக மாறி 1983லிருந்து 1990 வரை ஆட்சி செய்த  அவர் ஆட்சியில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இருந்தது. மக்கள் அவைகளை வெளிக்கொணர பல்வேறு வழிகளை வெளிக்காட்டினர். அதில் ஒன்று தான் 1987ம் ஆண்டு நூர் ஹுசைன் என்ற 26 வயது இளைஞர் செய்த அரசுக்கு தெரிந்த மாபாதக செயல். அது என்ன தெரியுமா? தனது முதுகில், 'Gonotontra Mukti Pak' அப்படியென்றால், 'ஜனநாயகத்தினை விடுவிப்போம்' என்ற வாசம். விடுமா சர்வாதிகார இர்ஷாத் ஆட்சி. அந்த வாலிபர் நடு ரோட்டிலே பலர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த நூர் ஹுசைன் கொழுத்திப் போட்ட தீப்பொறி நாடு ஜனநாயக உரிமையினைப் பெற்றது ஒரு வரலாறு.

உலக அளவில் வல்லரசு நாடுகள் கூட தங்கள் அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றவர்களை கூண்டுக் கிளியாக சிறையில் அடிப்பதும், கொடுமைக்கு ஆளாக்குவதும் நடந்து கொண்டுதான் உள்ளது என்பதினை சில சம்பவங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்:

1) சீனாவில் சின்ஜியாங் என்ற மாகாணத்தில் துருக்கி மொழி பேசும் முஸ்லிம் மக்கள் உள்ளனர். அவர்களின் வழிபாட்டிற்கு தடை விதித்தும், மக்கள் கூடுவதற்கு கட்டுப் பாடு விதித்தும், அந்த இனம் தழைக்காது குடும்ப கட்டுப் பாடு நடவடிக்கை எடுத்தும், பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை சிறையில் அடைத்தும், சொல்ல முடியாத துன்பங்கள் 2017ம் ஆண்டு முதல் செய்து வருவதனை அமெரிக்கா மற்றும் ஐநா சபை கண்டித்தும் கண்டு கொள்ளவில்லை.

2) ரஷியாவில் புடின் ஆட்சி ஏற்ற பிறகு சுயாட்சிக்காக போராடிய செச்சென்யா மாநில முஸ்லிம்கள் அறவே ஒழித்துக் கட்டப் பட்டனர். அது மட்டுமா ரசியாவின் மிலிட்டரி அதிகாரி ‘சேர்காய் ஸ்க்ரிபால்’ இங்கிலாந்துக்கும் உளவு பார்க்கும் இரட்டை வேலை பார்த்தார் என்று இங்கிலாந்திற்கு மூன்று ரசியர்களை சுற்றுலா பயணிகள் போல அனுப்பி அடையாளம் தெரியாத விஷம் கொண்டு அவர் தங்கி இருந்த வீட்டு அருகே அவரையும் அவருடைய மகளையும் கொல்ல முயன்று மருத்துவ அதிசியத்தால் பிழைத்தனர். அதேபாணியில் எதிர் கட்சி தலைவரும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தினை நடத்தியவருமான ‘அலெக்ஸி நாவலனியினை’   ஒரு உள் நாட்டு விமான பயணத்தில் கொடிய விஷம் வைத்துக் கொல்ல முயன்று ஜெர்மன் சென்று பிழைத்து அங்கு அடைக்கலம் கேட்காமல் சொந்த நாட்டில் போராடுவேன் என்று ரசியா திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து  வழக்குக்குமேல் பல வழக்குகள் தொடுத்து இன்னும் வெளியே வரமுடியாதது  மனித உரிமை மீறலல்லவா ?

3) சௌதி அராபியாவின் முடி சூடா மன்னராக திகழும் எம்.பி.எஸ். என்ற முகமது சுல்தான், சௌதி பணக்காரர்களான அல் வாலித் உள்பட 100 பேர்களை ஒரு ஸ்டார் ஹோட்டலில் அடைத்து வைத்து அவர்களின் சொத்தில் பாதியினை கறந்த பின்பு வல்லரசு நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பின்பு விடுதலை செய்தார். உங்களுக்கெல்லாம் தெரியும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான, 'வாஷிங்டன் போஸ்ட்'. அதில் உள்ள சௌதியின் எழுத்தாளரான ஹ்ரஜோகி. இவர் அதே பட்டத்து இளவரசர் எம்.பி.ஸ் என்ற முகமது சுல்தான் பற்றி காரசாரமாக கட்டுரை எழுதுகிறார் என்று துருக்கி நாட்டில் உள்ள சௌதி தூதரகத்திற்கு தந்திரமாக வரவழைத்து 6/10/2018ல் அடையாளம் கண்டு கொள்ளாத அளவிற்கு கொல்லப் பட்டார். அதற்காக உலக நாடுகளே கண்டனம் செய்தன.

 

4) நமது பக்கத்து நாடான பர்மாவில் தேசிய தலைவர் என்று அழைக்கப் படும் ‘ஆங் சன்’ அருமை மகள் ‘ஆங் சு கி’ பர்மாவினை ராணுவ ஆட்சிகளிடமிருந்து விடுவிக்க 15 வருடம் தனிமை சிறையில் அடைக்கப் பட்டார். உலக முழுவதும் கண்டத்தினை எழுப்பிய பின்பு  விடுதலை செய்யப் பட்டு உலகின் உயர்ந்த பட்டமான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. உலக எதிர்ப்பினுக்குப் பயந்த ராணுவம் தேர்தல் நடத்தி ஆங் சு கி யுடன் சமரசம் செய்துகொண்டு 2016லிருந்து 2021 வரை வெளியுறவு மந்திரியாக நியமிக்கப் படவும் செய்தார். ஆனால் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு ‘ராக்கினா’ மாநிலத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை நாட் டினை விட்டு துரத்தி அவர்கள் குடியிருப்பு பகுதிகளை தீக்கிரையாக்கினர். அந்த ரோகிங்கியினர் இந்தியா உள்பட பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தது உங்களுக்குத் தெரியும். அதன் பின்பு என்ன ஆனது பர்மா ராணுவ தளபதி ஆங் சு கியினை சிறையில் அடைத்து வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு வருகின்றனர். ஆனால் அதனை உலக நாடுகள் தடுக்க முடியவில்லையே!

நீங்கள் கேட்கலாம் நமது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பந்தமாக எதுவும் சொல்லலையே என்று! Amnesty International என்ற மனித உரிமை ஆணையம் இந்தியாவினைப் பற்றி சொல்லும்போது, 'இந்திய அரசு எந்த மதத்தினவருக்கும், ஜாதிக்கும், இனத்திற்கும் வேறுபாடற்ற சட்டங்கள் மற்றும் செயல் முறைகள் அமல் படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது ஒரு எடுத்துக் காட்டு. இந்திய அரசியல் சட்டம் 1951ம் ஆண்டு இயற்றப் பட்டபிறகு முதன் முதலில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? 1976ம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி இதுதான் சமயம் என்று எமெர்ஜென்சி காலத்தில் எதிர் கட்சியினரை அடக்கி ஆள 42வது சட்ட திருத்தத்தினை கொண்டு வந்து, 'குடிமக்களின் அடிப்படை உரிமைகளை’ முடக்கி, அதன் மூலம் நீதிமன்றங்கள் தலையீடு இல்லாத வகையில் அவர்களுடைய நீதிபரிபாலன நடவடிக்கைகளை சஸ்பெண்டு செய்து, ‘ட்ரிபியூனல்’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதில் தனக்கு   வேண்டியவர்களை உறுப்பினர்களாக நியமித்து முன்மாதிரி சர்வாதிகாரியாக வலம் வந்தார். இந்த சட்ட திருத்தம் மூலம், 'குடிமகன் தனது கருத்தினை சுயமாக வெளிப்படுத்தினால் கைது நடவடிக்கையினில் ஈடு படலாம் என்பது தான்’ ஆனால் அவர் ஆட்சி நிலைத்திருக்க முடிந்ததா என்றால் இல்லையே என்பதினை அடித்துச் சொல்லலாம். குறைந்த காலத்திலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி புதிய ஆட்சியினை அமைத்தனர்..

அதனையடுத்து சட்டம் 1860 ல், செக்சன்  153 பி இ.பி.கோ விலும் செக்சன்  505 இ.பி.கோ படி யார் பயத்தினை ஏற்படுத்துகிறார்களோ, வேற்றுமையினை தூண்டுகிறார்களோ, சில காரணங்களுக்காக வன்முறையினை தூண்டுகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சட்ட கமிஷன் 1986ல் பரிந்துரைத்தது.

ஆங்கிலத்தில் இரு  பழமொழிகள்  உண்டு, 'power  drunk a man', 'power corrupt a man' ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் அதிகார போதையில் தன்னிலை மறந்தும், நாட்டின் செல்வம் எல்லாம் தன்னுடையது என்றும் ஒருவன் எண்ணுவானாம். அது தான் சர்வாதிகார செயலுக்கு முன்னுதாரணம். ஜனநாயகத்தில் 'checks and balance' வேண்டும். அதாவது ஆட்சியாளர்கள் நடவடிக்கைக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பது தான். தற்போது அதுபோன்ற செயல் முறைகள் இல்லாததால் அதிகார கும்பல் பொதுக் கூட்டம், பத்திரிக்கை, எலக்ட்ரானிக் மீடியா போன்றவற்றை அடக்கி அல்லது கைக்குள் கையூட்டு கொடுத்து மடக்கியும், மாணவர், வக்கீல், நடிகர், பொது நல ஆர்வலர்கள், பொது நல தன்னார்வ அமைப்புகள் என்று சகட்டு மேனிக்கு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டனர். அதற்கு ஆதரவாக சில நீதிமன்றங்களும் அதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் உட்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வராமலே இழுத்தடித்தும், சிலவற்றில் அரசுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களில் தீர்ப்பும் வழங்கப் பட்டு அதனை நடுநிலையான ஊடகங்கள் கூட கண்டனம் செய்தன.அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1) ஆதிவாசிகள், பட்டியல் இனத்தவருக்காக சேவைசெய்த கிருத்தவ சாமியார் பேராசிரியர் ‘ஸ்டென்’ லூர்துசாமி தனது 84 வயதான காலத்தில் பார்க்கின்சன் நோயால் அவதிப் படுவரை தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்று சிறையில் அடைக்கப் பட்டு 5, ஜூலை, 2021ல் மரணம் அடைந்தது உலகத்தினையே உலுக்கியது. உலக நாடுகள் கண்டனத்தினையும் எழுப்பின.

2) எத்தனையோ நடிகர் நடிகைகளில் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் இளைஞர்களின் பணத்தினை கறந்தாலும்,   மும்பை ஆடம்பர ஜூஹூ கடற்கரை பகுதியில் ரூ 40 கோடிக்கு வீடு, ப ன்ஜ்ரா ஹில்ஸ் பகுதியில் ரூ 30 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கியதாக டமாரா அடித்து விளம்பர படுத்தினாலும், கொரானா நோய் காலங்களில் மனித நேயம் கொண்டு உணவு, தங்கும் இடம், இடம் பெயர்ந்த தொழிலாளர் சொந்த ஊர் செல்ல வாகன வசதி செய்த ‘சோனு சூடு’வினையும் விட்டு வைக்கவில்லை ரெய்டு  என்று.

3) அதேபோன்று மனித உரிமை ஆர்வலர் ‘ஹார்ஸ் மந்திர்’ நிறுவனத்தினையும் வருமான வரி ரெய்டு விட்டு வைக்கவில்லை.

4) கொரானா காலத்தில் பிரதமர் சேம நிதி எவ்வளவு வந்தது, அது யார் யாருக்கு கொடுக்கப் பட்டது என்ற தகவலையும் தரவில்லை என்றும், கொரானா காலங்களில் இறந்த கணக்கில் வராத ஆயிரக்கணக்கான பிணங்களை புனிதமான கங்கை ஆற்றில் அனாதையாக மிதக்கவிட்டுவிட்டனர் என்று செய்திகளை வெளியிட்ட 'July Dainik Baskar Group' மற்றும் 'நியூஸ் கிளிக், மற்றும் 'News Laundra' அலுவலகங்களிலும் வருமான வரி ரெய்டு நடத்தப் பட்டது.

5) புல்டோசர் பாபா என்ற புனைப்பெயர் பெற்ற மாநிலமான உத்தர பிரதேசத்தில்  ஒரு புது சட்டம் 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்துள்ளனர். 'Prohibition of unlawful religious conversion ordinances'. அதன் படி தண்டனை 10 வருடம் கடுங்காவல் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் உண்மையான மனமாற்றத்தோடு மதம் மாறினாலும், மதம் மாறி திருமணம் செய்தாலும், வழக்குத் தொடர்ந்து தண்டனை கொடுக்க முடியும். இந்த சட்டம் வந்ததிலிருந்து 79 முஸ்லிம்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். நமது நாடு சட்டங்களை எல்லாம் எப்படி தங்கள் இஷ்டப் படி தவறாக பயன் படுத்துகிறார்கள் என்று.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, 'Human Rights Watch' என்ற அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில், 'பிஜேபி' ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுதந்திரமான அமைப்புகளான போலிஸ், நீதிமன்றம், ஊடகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி வலதுசாரி அமைப்புகளுக்கு ஊக்கப் படுத்தி, சிறுபான்மையினரை பயமுறுத்தி, நீதிமன்றங்களில் வழக்குக்குமேல் வழக்குகள் போட்டு, மத அமைப்புகளில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப் பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக 23.2.2021ல் டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு 40 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும், அந்த வன்முறைக்கு காவல் துறை மற்ற துறைகள் உள்பட துணை போனதையும், சுட்டிக் காட்டியுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்ல விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் , பஞ்சாபில் 1980ல் போராடிய 'காலிஸ்தான்' தீவிரவாத அமைப்பினைச் சார்ந்தவர்கள் விவசாயிகள் என்று அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்  பட்டதாக கூறியுள்ளது' இந்திய ஜனநாயக அமைப்புகளுக்கு பெரும் கவலை அளிக்கத் தானே செய்யும்.

காலம் ஒரு நாள் கனியும், அந்த காலம் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட கனியாதா என்று மக்கள் நினைப்பதும், இனியும் UAPA, ED, IT NIA  அமைப்புகள் கொண்டு மக்களின் உண்மையான எதிர்ப்பு குரலை அடக்க முடியுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமல்லவா?

 

 

 

 

Friday, 22 July 2022

மக்கள் எழுச்சியில் உருண்டோடிய மகுடங்கள்!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

பக்கத்து தீவு நாடான இலங்கையில் இந்த வருடம்  ஆட்சி பீடத்தினை அலங்கரிப்பவர்களால் நிம்மதி இழந்து  11.7.2022 ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடியதும் அதனை தொடர்ந்து அங்கு நடந்த கொந்தளிப்புகளையும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் எலெக்ட்ரானிக் மீடியாவில் பார்த்திருப்பீர்கள். இந்த கொந்தளிப்பு ஏற்பட காரணங்கள் என்ன, இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடக்கவில்லையா என்ற கேள்விகளுக்கு விடை சொல்லி விளக்கலாம் என்று இந்த கட்டுரையினை வடிவமைத்துள்ளேன்.

பிரான்ஸ் நாட்டின் ரொட்டிப் புரட்சி :

ஐரோப்பாவில் முக்கிய நாடான பிரான்சில் 16ம் லூயிஸ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி காலத்தில் உணவு பற்றாக்குறை தலை விரித்தாடியது. மக்கள் அன்றாட காலை உணவிற்கு தேவையான ரொட்டியும் கிடைப்பது அரிதானது. மக்கள் ரோட்டில் இறங்கி மன்னரை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். 1789ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி போராட்டம் தீவிரமானது. போராடியவர்களை ‘பாசில்’ என்ற சிறையில் அடைத்தனர். அதனை அறிந்த மக்கள் பாசில் சிறையினை தகர்த்து அடைக்கப் பட்டவர்களை வெளிக்கொணர்ந்தனர். இதனை எதிர்பார்க்காத மன்னர் லூயிஸ் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்ப நினைத்த போது சிறைப்பிடிக்கப் பட்டனர். இறுதியாக 1793ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ந்தேதி மக்கள் தூக்குமேடையில் ஏற்றினர்.

ரஸ்யாவின் மகா அக்டோபர் புரட்சி: பிரான்சினைப் போலவே ரஸ்யாவில் Tzarist ஆட்சி நடந்தது. ஆட்சியாளர்களின் தொழிலாளர் அடக்குமுறையினை எதிர்த்து Bolshevik Revolution என்ற தொழிலாளர் புரட்சி அதன் தலைவர் விளாடிமிர் புடின் தலைமையில் 1917லிருந்து 1923 வரை நடந்தது. அதன் விளைவு Tzarist மன்னர் ஆட்சி கவிழ்ந்து Bolzhevik ஆட்சி அரியணையில் ஏறியது. அதிலிருந்து இது வரை ரஸியா வல்லரசு நாடாக திகழ்கிறது.

ஆப்கான் புரட்சி: ஆப்கானில் மன்னராக இருந்த ஷா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் பஞ்சமும் பட்டினியாக இருந்தனர். ஆனால் அவர் மட்டும் ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆகவே மக்கள் வெகுண்டு எழுந்தனர் மன்னருக்கெதிராக. இறுதியாக 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 17ந்தேதி மன்னருடைய ஆட்சிக்கு விடை கொடுத்தனர். அதன் பின்பு 1986 முதல் 1992 வரை டாக்டர் நஜிபுல்லா ஜனாதிபதியாக இருந்தார். அவர் ரசியாவின் கைகூலியாகவே இருந்தார். மலைப் பிரதேசமான ஆப்கானில் பல்வேறு .பழங்குடியினரின் போராட்டக் குழுவினர் களத்தில் இறங்கி போராடி ரசியாவின் படையினரை விரட்டியடித்தனர். அதன் பின்னர் அவருடைய கைக்கூலியாக ஜனாதிபதி நஜிபுல்லாவினை ஊர் முச்சந்தியில் நிறுத்தி தூக்கிலிட்டனர் என்பது வரலாறு

எகிப்தின் மக்கள் எழுச்சி: எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சாதத் ராணுவ அணிவகுப்பு மரியாதை மைதானத்தில் சுட்டு வீழ்த்தப் பட்டபின்னர் அரியணையில் 1981ம் ஆண்டு அமர்ந்தவர் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆட்சியினை சுவைத்த பூனைக்கு ஆசை விடுமா. தன்னுடைய இளைய மகனை 2011ம் வாரிசாக அறிவித்தபோது மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்ததும், முபாரக் அதனை ஒடுக்க ராணுவத்தினை அனுப்பினார். அதன் விளைவு ராணுவமும் மக்கள் போராட்டத்தினை ஆதரித்ததால் 2011ம் ஆண்டு முபாரக் முடி துறந்து சிறைக் கைதியானார். அதன் பிறகு மோர்சி என்பவர் பதவியேற்றார். அவர் ஷியா மக்கள் ஆதரவு கொள்கை உள்ளவராகவும், அமெரிக்கா கைக்கூலி என்றும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அதன் பின்பு முன்னாள் ராணுவ தளபதி அடல் பட்ட சிசி என்பவர் 2014லிருந்து ஆட்சி செய்கிறார்.

ஜாஸ்மின் புரட்சி: டூனிசியா நாட்டில் ஜனாதிபதி ஜெயினுலாபுதீனு 2011ம் ஆண்டில் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் வேலையின்மை, உணவு பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், ஊழல், அரசின் வெளிப்படைத் தன்மையில்லாமல் எதிர்கட்சினரின் குரல்வளையை நெறிக்கும் போக்கால் ஜனவரி மாதம் போராட்டம் ஆரம்பித்தது. எந்த வேலையும் கிடைக்காததால் ‘பௌசி’ என்ற  இளைஞர் ரோட்டின் ஓரத்தில் பழ வியாபாரம் கடைத் தெருவில் வைத்திருந்தார். அப்போது ரோட்டில் ரோந்து வந்த போலீசார் அவரை அடித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பழவண்டியினையும் தள்ளிவிட்டனர். அதுபோன்ற செயலை நம்முடைய நகரங்களில் கூட காணலாம். அதனால் அவமானப் பட்ட அவர் தீக்குளித்து உயிரை விட்டார். ஏற்கனவே பல்வேறு காரணங்களால் கொந்தளித்த மக்களின் கோபத்தில் எரிகின்ற நெருப்பில் எண்ணெயினை ஊற்றுவது போல இருந்தது அந்த சம்பவம். ஆகவே ஜனாதிபதி ஜெயினுலாபுதீனுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து அதனை 'Tunisia National Dialogue Quartet' என்ற அமைப்பு ஒருங்கினைத்தது. அதிபர் ஜெயினுலாபுதீன் நாட்டினைவிட்டு ஓடி சௌதி அராபியாவில் அடைக்கலமடைந்தார். TNDQ அமைப்பிற்கு 2015ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. டூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சி பிற்காலத்தில் அரேபியாவில் வசந்தம் Arab Spring என்றும் அழைக்கப் பட்டது.

இப்படிப்பட்ட மக்கள் போராட்டம் அரசுக்கெதிராக பல இடங்களில் நடந்ததினை அறிந்திருப்பீர்கள். 2019ம் ஆண்டு லெபனான் நாட்டின் மக்கள் போராட்டத்தால் பிரதமர் ‘சாத் ஹரிரி’ பதவி விலகினார். பொலிவியா நாட்டின் ஜனாதிபதி ‘எல்லோ மோரா மால்’ மூன்று முறை ஜனாதிபதியாக இருந்துவிட்டு நான்காவது முறை தேர்தலில் நிற்கும்போது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஆகவே அவர் உயிருக்குப் பயந்து நாட்டினை விட்டு துண்டைக் காணோம், துணியைக்காணோம் என்று ஓடிவிட்டார். சிலி நாட்டில் ‘சப்வே’வினை மக்கள் உபயோகிற்பதிற்கு வெறும் நாலு சென்ட் பணம் என்றதும், தினந்தோரும் அதனை உபயோகிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது உங்களுக்குத் தெரியும். இப்படிப் பட்ட போராட்டங்கள் மற்ற நாடுகளுக்கு சொல்லும் பாடமாக அமையும்.

நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற மக்கள் போராட்டம் இந்தியாவில் நடக்கவில்லையா என்று. 1973ம் ஆண்டு குஜராத்தில் ‘ஓஸா’ முதல்வர் ஆட்சி நடை பெற்றது. 1974ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றம், மற்றும் நிர்வாக ஊழலில் குஜராத் மூழ்கியதால் முதல்வர் ஓஸாவினை மாற்றி ‘சிமன்பாய் படேல்’ அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால்  நியமிக்கப் பட்டார். 10.1.1974ம் ஆண்டு மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டு நிர்வாகமே ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாகி, ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, ராணுவம் வரவழைக்கப் பட்டது. முதல்வர் சிம்மன் பாய் ராஜினாமா செயதார். குஜராத்தில் ஏற்பட்ட போராட்டம், பிஹாருக்கும் பரவி அதனை ‘ஜெயப் பிரகாஷ் நாராயணன்’ தலைமையேற்று நாடெங்கும் நடத்தினார். இந்திரா காந்தி அரசு கவிழ்ந்து ஜனதா கட்சியின் பிரதமராக ‘மெராஜி தேசாய்’ பதவியேற்றார்.

இலங்கையில் இன்றைய போராட்டத்தின் பின்னெனி பார்ப்போமோயானால் இலங்கை வட கிழக்கு யாழ்ப்பாண மாகாணத்தில் விடுதலைப்புலிகள் ஒன்று பட்டு போராடும்போது அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யார் பெரியவர் என்ற போராட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை ஒரு சர்வாதிகாரராக நினைத்துக் கொண்டு சகோதர இயக்க போராளி தலைவர்களான ஸ்ரீ சபா ரத்தினம், பத்மநாபா, மாத்தையா போன்றவர்களை ஒழித்துக் கட்டியதும், தனக்கு உறுதுணையாக இருந்த கருணாகரனை ஒழிக்க நினைத்த தருணத்தில் அவர் சுதாரித்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தனி ராஜ்யமே நடத்தினார். அதேபோன்று டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். தமிழர் தலைவர்களான அமிர்தலிங்கம், கதிர்காமர் போன்றவர்களை கொன்றது மூலம் ஈழ தமிழர் துணையையும் இழந்தார். .இந்தியா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 16 பேர்களை ஆள் அனுப்பி 21.5.1991 கொலை செய்தார். ஆகவே தமிழர் மற்றும் இந்தியர் துணையினை இழந்தார். அவர் ‘தேடப்படும் குற்றவாளி’ என்று இந்தியாவும் அறிவித்தது. இலங்கை முஸ்லிம்கள் அதிகாலை ‘காத்தான்குடி’ பள்ளிவாசலில்   பாஜ்ர் தொழுகை நடத்திக் கொண்டபோது குண்டு மாறி பொழிந்து 145 முஸ்லிம் சிறியவர் முதல் பெரியவர் வரை கொன்றதால் இலங்கை முஸ்லிம்கள் உறுதுணையும் இழந்தார். அவர் ஒரு பேட்டியில் நிருபருக்கு பதில் அளிக்கும்போது, 'ஈழ அரசு’ அமைத்தால் எந்தவிதமான ஆட்சியினை தருவீர்கள் என்று கேட்டபோது, தான் சர்வாதிகார ஆட்சி நடத்துவேன்' என்று அப்பட்டமாக கூறினார். இலங்கை பிரதமர் பிரேமதாசாவினையே வெடிகுண்டு வைத்து கொலை செய்தார். ஆகவே இலங்கை மக்கள் மற்றும் புத்தமததினர் ஒரு முடிவினை கொண்டு இருந்தனர்.

 

2009 ம் ஆண்டு விடுதலை புலிகள் ஒழிப்பிற்கு பின்னர் மஹிந்திரா ராஜபக்ஸா கை ஓங்கியது. 2015வரை அவர் ஆட்சி காலத்தில் சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். தமிழ் ஈழ யுத்தத்தின் அத்துமீறலுக்கு எதிரான ஐநா சபையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அவருடைய ஆட்சியில் இன பாகுபாடு அதிகமானது. ஊழல் தலைவிரித்தாடியது. தவறான பொருளாதார நடவடிக்கைகைகள், சீர் கெட்ட நிர்வாகம் நடத்த ஆரம்பித்தார். ஆகவே 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோக்கடிக்கப் பட்டார். விடுவார்களா மிகவும் பலம் பொருந்திய ராஜபக்ஸா குடும்பம். 2019ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 2009ல் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும்போது ராணுவ மந்திரியான மஹிந்திராவின் தம்பி கோத்தபாயா ராஜபக்ஸா ஜனாதிபதியாகவும் மஹிந்திரா ராஜபக்ஸா பிரதமராகவும் பதவி ஏற்றனர். அது மட்டுமா மஹிந்திராவின் இன்னொரு தம்பி பாசில் ராஜபக்ஸா பொருளாதார மந்திரி, ராஜபக்ஸா மகன் நமல் ராஜபக்ஸா இளைஞர், விளையாட்டு, நீர்ப்பாசன மந்திரியானார். நமல் ராஜபக்ஸா மகன் சசீந்திரா விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரி. ஆக மொத்த ராஜபக்ஸா குடும்ப ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் தங்களுக்குள்ளது என்று எண்ண ஆரம்பித்தனர்.

தவறான பொருளாதார கொள்கையால் ராஜபக்ஸா குடும்பத்தினrரால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகமாகி, வெளிநாட்டு கடன் சுமை கழுத்தை நெரித்தது. வெளிநாட்டின் கடன்களுக்குக் கூட வட்டி கட்டமுடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே எந்த நாடும் இந்தியாவினைத் தவிர கடன் கொடுக்க முன் வரவில்லை. ருசியா-உக்ரைன் போரால் பெட்ரோல், சமையல் ஏரி வாயு, உணவுப் பொருள் வரமுடியா நிலை ஏற்பட்டது. விவசாய உற்பத்தியும் இல்லை. சுற்றுலா சுருங்கி அந்த வருமானமும் இல்லை. விலைவாசி ஏற்றம் மக்கள் உணவுக்கு ஏங்கி தவித்தனர். வேலையில்லா திண்டாட்டமும் கூட வந்தது. ஆகவே மக்கள் குரல் வலையினை நெறிக்கும் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்து அதன் பின் அது மஹிந்திரா ராஜ பாக்ஸவிற்கு எதிராக திரும்பியது. அவர் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர்கள் மற்றும் மகன்கள் ராஜினாமா செய்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டினை விட்டும் ஓட எத்தனித்தும்  முடியவில்லை. அதன் பிறகு மக்கள் கோபம் ஜனாதிபதி கோத்தபய்யாவிற்கு எதிராக திரும்பி அவருடைய மாளிகைக்கு படையெடுத்து ஆக்ரமிப்பு செய்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். மாளிகையிலிருந்து சுரங்கம் வழியாக 11.7.2022 இரவு தப்பித்து மாலத் தீவிற்குப் பறந்து அங்கு அடைக்கலம் அடைய முடியாமல் சிங்கப்பூரில் தாற்காலியமாக உள்ளார். இவையெல்லாம் பார்க்கும்  போது மக்களை வெகுகாலம் ஏமாற்ற முடியாது, அல்லது ஆட்சியாளர் அடக்கி ஆள முடியாது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்தியாவில் வேலையில்லாதோர் 2014ம் ஆண்டு 5.6 சதவீதமாகும். அது படிப்படியாக உயர்ந்து 8.10 சாதமாக இன்று . ஒவ்வொரு வருடமும் வேலை தேடி அலையும் 35 வயதிற்குட்பட்டோர் 65 சதவீதமாம். அது கிட்டதட்ட ஒரு கோடியே 20 லட்சம் என்று பி.பி.சி. பொருளாதார அறிக்கை சொல்கிறது. 2017ம் ஆண்டு ரூ 1000/, ரூ 500/ செல்லாது என்று அறிவித்தபின்னர் பல தொழிற்சாலைகள் மூடு விழா நடத்திவிட்டன. அதனைத் தொடர்ந்து 2019முதல் கொரானா பாதிப்பால் பலர் பாதிக்கப் பட்டனர். GST (Goods service entry) புதிய திட்டம் அமல் படுத்திய பின்னர் வியாபாரங்கள் பாதிக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமா பாக்கெட்டில் அடைக்கப் பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத GST என்று அறிவித்ததின் மூலம் ஆவின் பால், தயிர் உள்பட அனைத்து விதமான உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து மக்கள் அவதிப் படுகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய வேண்மென்றால் கேஸ் இருக்காமல் இல்லை. அந்த எரிவாயுக்கும் ருபாய் 1015லிருந்து ரூ 1065/ அதிகப் படுத்தியது மூலம் ஒவ்வொரு குடும்பத்தலைவிகளுக்கும் பெரிய தலையில் விழுந்த இடியாக கருதுகின்றனர். இலங்கை பரிதாபமான நிலை மற்ற நாடுகளுக்கு விடுக்கப் படும் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டு அரசுகள் நியாயம், நேர்மை, ஊழல் அற்ற ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழித்து ஜனநாயக வழிமுறையில், நீதியான ஆட்சி தந்து மக்களின் பசி, பட்டினி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குதல், உணவுப் பொருட்கள் உற்பத்தியினை பெருக்குதல், இன, மத,மொழி, பகுதி போன்ற வேற்றுமையினை வேரறுத்து, மக்கள் விரும்பும் , மகாத்மா காந்தி குறிப்பிட்ட  கலீபா உமர்   நல்லாட்சி தருவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே!