(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளால் அசைக்க முடியா தலைவர்களாக இருந்த இராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன், லிபிய முவம்மர் கடாபி ஆகியோர் துரோகத்தினாலும், நாட்டினில் உள்ள பிரிவினை சக்திகளாவும் கொல்லப் பட்டு, அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் பொம்மைகளாகவும்,
அவர்களின் படைகளை தங்கள் நாடுகளில் இருக்க அனுமதி கொடுத்தது உங்களுக்குத் தெரியும். அப்படி அமைத்ததின் பலனாக மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
அதன் விளைவு தான் பாலஸ்தீன நாட்டில் உள்ள பிரிவினையால் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வந்த பகுதியினை மிகவும் எளிதாக இஸ்ராயில் நாடு சின்னா பின்னமாக்கி விட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள லெபனான் நாட்டின் மீது படியெடுத்து அந்த நாட்டு மக்களை வெளியேறுங்கள் என்றும் கட்டளை இடும் அளவிற்கு தைரியம் கொடுத்தது யார் என்றால் அது நான் தான் உலகில் முடி சூடா மன்னன் என்று மார் தட்டும் பாலியல் எப்ஸ்டென் கூட்டாளி யார் என்று உங்களுக்கு விளக்க தேவையில்லை.
ரஸூலல்லா தனது கடைசி அரபாத் உரையில் முஸ்லிம்களைப் பார்த்து உங்களை யாரும் வீழ்த்த முடியாது, ஆனால் ஒரு போதும் உங்களிடையே பிரிவினைக்கு வழி வகுத்து விடாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். ஆனால் அவர்கள் பொன்னெழுத்துக்களால்
எழுதப் பட்ட வார்த்தைகளை மதிக்காததால் இஸ்லாமியரிடையே சுன்னி, சியா என்ற பிரிவுவுகளை மதுரை உத்தமப்புறத்தில் ஜாதி தலித் மக்களை மற்ற ஜாதியிரிடமிருந்து பிரிக்கும் சுவர் போல எழுப்பி விட்டதின் பலன் தான்
கலீபா அபூபக்கருக்கு பின்னால் வந்த கலீபாக்களான உமர், உத்மான், அலி போன்றோர் கொல்லப் பட்டதும், ஒரு மறக்க முடியா வரலாறு அல்லவா?
தென் அமெரிக்க எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவினையா போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகின்றன என்ற பொய்யான குற்றச்சாட்டினை சொல்லி அந்த நாட்டின் எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்ததோடு மட்டுமல்லாமல் அதன் தலைவரையும் நவீன தொழில் நுட்பத்தினைப் படுத்தி சிறைபிடித்த்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய மனைவியையும் கைது செய்து மனிதாபமற்ற வகையில் சிறை வைத்தது தொலைக் காட்சிகளில் பார்த்து கண் களங்காதவர் யாருமிலர்.
ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்த ரத்தக் காட்டேரி யின் சுவை சும்மா இருக்குமா, உள் நாட்டில் தனக்கு எதிரான எப்ஸ்டின் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து மக்களை திசை திருப்ப
எண்ணெய் வளம் உள்ள ஈரான் மீது திரும்பியிருக்கிறது. ஆசிய முஸ்லிம் வாடுகளில் வலிமையான, வளமிக்க ஈரான் மீது ஒரு கண் வைத்த இஸ்ராயில் தூபம் போட எந்த நவீன ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை (ஆந்திராபிக் ஒன்று
"Ahropic A1Claude")கொண்டு வெனிசுலா அதிபர் மீது தாக்குதல் நடத்தப் பட்டதோ அதே தொழில் நுட்பத்தினைக் கொண்டு ஈரான் மதத்தலைவர் கொமேனி,அவர் மனைவி, மருமகள், பச்சிளம் பேரக்குழந்தை ஆகியோர் கொல்லப் பட்டனர். மேற்படி தாக்குதல்கள் எல்லாம் இஸ்லாமிய புனித ரமலான் மாதத்தில் தான் ஆரம்பித்துள்ளன.
வெகுண்டெழுந்த ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் எந்தந்த வளைகுடா நாடுகளின் தளங்கள் மீது தாக்குதல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் தடத்தியுள்ளது. ஏனென்றால் அமெரிக்க நாட்டினை தாக்க வெகு தூர ஏவு கணைகள் ஈரானில் இல்லை.
எப்போதெல்லாம் அணு உலை தயாரிக்க ஈரான் முயன்றதோ அப்போதெல்லாம் அதன் அணு விஞ்ஞானிகள் மஜித் ஷுஹ்ரிரி, மசூதி அலி 2010ம் ஆண்டிலும்,
2012ம் ஆண்டு முஸ்தபா அஹமத், 2020ம் ஆண்டு மோஹரேன் பாக்றிஸ்டாஹ், 2025-2026ம் ஆண்டு
முகமது ராசா சாதிக்கி ஆகியோரும் இஸ்ராயீல் சதிகளால் கொல்லப் பட்டனர். அணு உலையையும் அமெரிக்க உதவியுடன் இஸ்ராயில் தாக்கி அழித்தது. இதன் விளைவு ஏற்கனவே சுன்னி, ஷியா என்று பிரிந்து இருந்த இஸ்லாமிய நாடுகளிடையே வேற்றுமையை அதிகப் படுத்தி ஈரான் மீது கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அது காலனி ஆதிக்க நாட்களில் ஏகாபத்திய நாடுகள் உள் நாடுகளிடையே பிரித்தாளும் கொள்கையினை இப்போதும் கடைப் பிடிப்பதால் வந்த விளைவு தானே!
ஈரானில் அமெரிக்க போர் தொடுத்ததுமே இங்கிலாந்தும் அதில் எப்படி ஆப்கானிஸ்த்தான், ஈராக் யுத்தங்களில் கலந்து கொண்டதோ அதே போன்று கலந்து கொள்ளும் என்று நினைத்த அமெரிக்கா, இங்கிலாந்து பிரதமர் சடார்மர் நாங்கள் அமெரிக்க பாராளுமன்ற அனுமதியில்லா போரில் கலந்து கொள்ள போவதில்லை என்று சொன்னதும், அமெரிக்க அதிபர் நீங்கள் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த விண்ஸ்டன் சர்ச்சில் போல நடந்து கொள்ள வில்லை என்று சாடியுள்ளார். அதேபோன்றே மற்ற ஐரோப்பிய நாடுகளும் அதனுடன் போரில் ஈடுபட தயாரில்லை. பாராளுமன்ற அனுமதி பெறாமல் ஈரானுடன் போர் தொடுத்துள்ளதால் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளதால் டிரம்ப் அவர்கள் பிற்காலத்தில் வருந்த வேண்டியிருக்கும் என்றும் 17.3.2026ல் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் சொல்லியுள்ளார் என்பதினை காணும் போது, அவர் வெனிசுலா மீது ஆதிக்கம் செலுத்தியது போல ஈரான் மீது செலுத்த முடிய வில்லையே என்ற கோபத்தினை
வெளியிட்டுள்ளது தெளிவாக தெரிகிறதல்லவா? இந்த தருணத்தில் எனக்கு தமிழ் கிராம பழமொழி, '. ஆத்திரக்காரனுக்கு மூளை மழுங்கும்'என்பது நினைவில் வருகிறது.
தனது ஆக்கிரமிப்பு வேட்டை நீண்ட நாக்கை கனடாவில் திரும்பி அதனை தனது நாட்டின் 51வது மாநிலமாகவும்,
இடது சாரி நாடான கியூபாவை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியில்
பாராளுமன்ற அனுமதி பெறாமல் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபடக் கூடாது என்று ஒரு மனுவினை ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கொடுத்து இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.
ட்ரம்பின் ஈரான் போர் இஸ்ராயில் அழுத்தத்தாலும், அமெரிக்க்காவில் உள்ள சில முதலாளிகளும் ஆர்வம் கொடுத்து ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்று வெளிப்படையாக சொல்லி வலது சாரி தீவிரவாத படையின் இயக்குனர் ஜோ கென்ட் தனது பதவியினை விட்டு விலகியுள்ளார் என்பது இங்கே குறிப்பிட வேண்டும். இதற்கு மூல காரணமே ட்ரம்பின் மருமகனும் வியாரியுமான ஜாவித் குஸ்னர் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஊடகங்கள் கிளப்பி உள்ளன.
அடிபட்ட இரான் மற்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் தங்கள் 'gulf of hermutz' என்ற வளைகுடா பகுதியில் நுழையக்கூடாது என்று தடை விதித்துள்ளது. அவ்வாறு செய்ததினால் எண்ணெய், ஏரி வாயு, போன்றவை பற்றாக்குறையாகவும், விலைவாசிகள் பன் மடங்களும் குறிப்பாக வளரும் ஆசிய நாடுகளிடையே ஏற்பட்டு விட்டது. தற்போது அமெரிக்கா சொல்கிறது வளைகுடா பகுதியில் மற்ற கடல் படைகளை அனுப்பி முட்டுக் கட்டையினை உடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் மூலம் மற்ற நாடுகளையும் ஈரானுடன் புகையினை ஏற்படுத்தப் பார்க்கிறதல்லவா? ஈரான் 50 மைல் தொலைவில் உள்ள கார்க்கி தீவில் தான் உலகில் விற்பனை ஆகும் 90 சதவீத கட்சா எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகள் உள்ளன. உள்ளது. அதனை தற்போது அமெரிக்கா தாக்கி அழிக்கப் பார்க்கிறது. ஏன் இந்த மற்ற நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கொடூர செயல் என்று உலக மக்கள் கேள்வி எழுப்பாமல் இல்லையல்லவா?
பங்கு சந்தையில் அமெரிக்கா பின் தங்கி இருப்பதாகவும், அதன் டாலர் மதிப்பு குறைந்து ரசியாவின் ரூபிளும், சீன நாட்டின் யுவானும் அதிக மதிப்புள்ளதாக மாறியுள்ளது. இந்திய பணமதிப்பு 2011ம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.47/ ஆக இருந்தது. ஆனால் இன்று அதன் மதிப்பு ரூ. 93/ ஆக குறைந்து விட்டது. அது நமது நாட்டின் பொருளாதார கொள்கை குறைபாடா என்று தெரியவில்லை.
நான் மேலே குறிப்பிட்ட செய்திகளெல்லாம் இஸ்லாமிய நாடுகள் பிரிந்து இருந்ததாலும், மற்ற பக்கத்து நாடுகளெல்லாம் அணு ஆயுதங்கள் வைத்திருந்தாலும், எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகள் பிரிந்து இருந்ததால் ஆயுதங்களை தயாரிக்க முயலவில்லை, பாகிஸ்தான் மட்டும் பக்கத்து நாடான இந்தியா அணு ஆயுதம் வைத்திருந்ததால் பாகிஸ்தானும் அணு தயாரிப்பு விஞ்ஞானியான அப்துல் காதிர் கான் முயற்சியால் தயாரித்துள்ளது. முயன்ற ஈரானையும் தாக்கும்போது அவைகள் பார்த்துக் கொண்டு இருந்தன. காசாவினை சின்ன பின்னமாக்கிய இஸ்ராயீல் பக்கத்து நாடான லெபனானில் ஆக்கிரமிப்பினை ஆரம்பித்துள்ளது. ஈரான் தலைவர் கோமேனி கொல்லப் பட்டதும், அவருடைய காயம் பட்ட மகன் தலைவர் பொறுப்பில் அமர வைக்கப் பட்டுள்ளார். ஆனால் அதனை விரும்பாத டிரம்ப் அவரை எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லியுள்ளார். ஏதோ உலக அளவில் நடத்தப் படும் கம்பெனியின் முதலாளி போலவும் மற்ற நாடுகளின் தலைவர்களை அவரின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளிகள் போலவும் சொல்லும் சிறு பிள்ளை தனமான செயலாக உங்களுக்குத் தெரிய வில்லையா? அதனை எதிர்த்து யாரும் குரலும் எழுப்ப வில்லை என்பது பரிதாபன செயல் தானே!
தமிழ் நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 23ந்தேதி தேர்தலில் முஸ்லிம் லீகு கட்சிக்கு 2, த.ம.மு.க
2 இடங்களும், எஸ்.டி.பி.ஐ.கு ஒன்றும் தி.மு.க சார்பில் வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் 7 சதவீதம் இருந்தும் 7 இடங்களையாவது கட்சிகள் பெற்று கூட்டாக போட்டியிட்டால் 5 இடங்களிலாவது வெற்றி உறுதியாகுமல்லவா? ஆனால் ஒற்றுமை பற்றி பேசும் கட்சிகளுக்கு எங்கே நேரம் இருக்கிறது அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட. இனியாவது தேர்தல் மற்றும் பொதுவான முஸ்லிம்கள் நலன்களில் இணைந்து செயலாற்றுவார்களா என்பதினை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழ் பழமொழி, 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பதினை இஸ்லாமிய கட்சிகள் புரிந்து நடந்தால் சரி இல்லவையென்றால் அரசியலில் செல்லாக் காசுகளா ஆகிவிடுவீர் என்ற ஆதங்கத்தினை திரைப் பட இயக்குனர் இஸ்லாமிய பற்றுள்ள அமீர் ஒரு வீடியோவில் பேசியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
No comments:
Post a Comment