Wednesday, 2 September 2026

குடும்ப நன் மணிகள்

 

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.ீ.எஸ்(ஓ) 

ஒரு குடும்பத்தில் பெற்றோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் இருப்பா்கள அவர்கள் அனைவரும் முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது உள்ள நவீன உலகில் தனி, தனி குடும்பமாக வாழ்கிறார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது இளம் வயதினர்களுக்கு போதிய அறிவுரைகள் இருத்தது, குடும்பமும் பிரகாசமாக இருந்தது. ஆனால் தற்போது தனியாக வாழும் தம்பதியர் கூட மகிழ்ச்சியாக வாழாமல் அந்த வீட்டில் மின்சாரம் இருந்தாலும் இருண்ட உலகத்தில் தவழ்ந்தது போல காலம் கடத்துகின்றனர். ஆகவே ஒரு குடும்பம் சீராகவும், அன்பு, பாசம் நிறைந்ததாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு விளக்கலாம் என நினைக்கின்றேன். 

ரசூலுல்லாஹ் அவர்கள் 'சூரத்துல் நபவியா'வில் இஸ்லாமிய சமூகரித்தானிரிடையே பரஸ்பர உறவினர் மூலம் கூட்டு வாழவே சிறந்தது என்று சொல்கிறது. 

பெற்றோர்கள் படலம்: 

பெற்றோர்களை பார்த்து சொல்லக்கூடாத வார்த்தைகள்  

எல்லாவற்றிக்கும் என்னையே எதிர் பார்க்காதீர்கள், மற்ற பிள்ளைகளிடம் கேளுங்கள் ! 

உங்களுக்கு சம்பாதிக்கிறதிற்கே எனக்கு பெரிய சுமையாகி விட்டது! 

அவர்களுக்கு சொல்வதெல்லாம் பெற்றோர்கள் உங்கள் பணத்தினை மட்டும் எதிர்பார்க்கவில்லை  

உங்கள் அன்பையும்., அரவணைப்பினையும்  தான். 

அதற்கு உதாரணமாக நான் ஆஸ்திரேலிய நாட்டிற்கு 2011ம் ஆண்டு சென்றபோது என் மகன் வீட்டிற்கு அருகில் ஒரு ஆஸ்திராலியா வயதான பெண் மணி கணவர் இறந்த பின்பு தனியாக குடி இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள், நான்கு பேரும் தனி தனியாக வாழ்கிறார்கள். வாரத்தில் ஒரு முறை வந்து மூன்று மகன்கள் சிறிது நேரத்திலே போய் விட்டார்கள். ஆனால் இளைய மகன் மட்டும் தாயாரிடம் நீண்ட நேரம் இருந்தார். நான் அவரிடம் அது பற்றி கேட்டபோது சொன்னார், 'என் தாய் தனியாக இருப்பதால் அவருடைய பழைய இளம் வயது கதைகளை அவர் சொல்லி அமைதியாக கேட்டால் அவருக்கு அளவிட முடியாத சந்தோஷம் அடைகிறார், அதற்குத் தான் அவருடன் பேசுகிறேன் என்கிறார். 

பெற்றோர் அருமை: 

பெற்றோர் அறிவுரை கூறும்போது நமக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் அவர்களை இழந்த பிறகு தான் தெரியும் மிகவும் சிறந்த அறிவுரைகளை பெற அவர்கள் இல்லையே என்று. 

பாசமிகு பெற்றோர்களை அவர்களை இழக்குமுன் நேசிங்கள். தன் வெற்றிக்கு பின்னால் நின்றவர்கள் அவர்கள் தான் என்று எண்ணுங்கள். தந்தை அல்லது தாய் இந்த உலகத்தினை விட்டு சென்ற பிறகு நீங்கள் அவர்களை காப்பாற்றும் தூணாக இருங்கள், துணைவர் அல்லது துணைவி வந்த பின்பு அவர்களை பாரமாக, பழைய ஆடைகளாக  நினைத்து ரோட்டில் தூக்கி வீசிவிடாதீர்கள். பெற்றோர் வீடு உங்கள் வீடாக இருக்கும் ஆனால் உங்கள் வீடு எப்போதும் அவர்களிடையதில்லை ஆகவே நீங்கள் அவர்களை பெற்றோர்களாக மதிக்காவிட்டாலும், வீட்டுக்கு வந்த செல்வமிக்க விருந்தாளியாக மதியுங்கள், ஏனென்றால் நீங்கள் தான் அவர்களுக்கு இறைவன் கொடுத்த செல்வம். 

முதுமையில் மனைவியின் மரணம்: 

உயிருடன் இருக்கும் போது கணவன் மனைவிற்கு தேவனாகிறான், மனைவி சேவை செய்யும் பக்தையாகிறாள். ஆனால் அவளில்லா வாழ்க்கை சிலையில்லா கோவிலாகிறது. வாழ்க்கை முழுவதும் கைகோர்த்து நடந்தவள், நடக்க முடியாத நேரங்களில் தனது தோளை தூணாக கொடுத்து உதவியவள், துன்பத்தில் பங்கு பெற்றவள், கணவன் சிரிப்பு பார்த்து சிரித்தவள், அவள் மரணம் வீடே வெறுமையாகும், உள்ளமும் கணவனுக்கு வெறுமையாகி விடும், கண்களை மூடினாள் அவள் முகம் தெரியும், ஆகவே கணவன் மனைவி ஆகியோர்கள் உயிருடன் இருக்கும்போது நேசியுங்கள். 

மனைவி தனது கணவரிடம் சொல்லக் கூடாத கடும் சொல், 'நீங்கள் எதற்கும் பயனில்லை'  கணவனை மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் அது உங்கள் மீது சந்தேக பேயை கிளறும். நான் உங்களை திருமணம் செய்தது தவறு, எனக்கு எங்கள் வீட்டு மக்கள் தான் முக்கியம் உங்கள் வீட்டாரை விட. என்ன சொன்னாலும் மாறவே மாட்டீர்கள் போன்ற ஆழ வடுக்களை ஏற்படுத்தும் செல்களை தவிர்த்து விடுங்கள். 

கணவன்-மனைவி உறவை நீண்ட நாள் நீடிக்க வழிகள்: 

ஒருவரின் குறைகளை தேடாமல் நிறைகளை எண்ணி மகிழுங்கள் 

சின்ன சின்ன சம்பவங்களுக்காக அன்பையும், அக்கறையும் இழந்து விடாதீர்கள்.. 

கோபத்தில் வார்த்தைகளை கொப்பளித்து விடாதீர்கள். அமைதியாக உட்கார்ந்து தீர்வு காணுங்கள்  

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் 

பணம், வசதி, புகழ், அழகு எல்லாம் மாறலாம், கணவன் மனைவி பந்தம் உடைக்க முடியாத பந்தமாக கருதுங்கள். 

நான் 31.8.2026 அன்று காலை நடை பயிற்சிக்கு சென்று வீடு திரும்பும் போது ஆட்டோ டாக்ஸியில் ஏறினேன், அப்போது அந்த ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியில் ஒரு பெண் படம் இருந்தது. ஓட்டுனரிடம் ஏன் தம்பி இது யாருடைய போட்டோ என்று கேட்டேன். அதற்கு அவர் என் மனைவி ஏழு வருடங்கள் முன்னாடி இறந்து விட்டார் அவருடையது என்கிறார். ஏன் மறுமணம் செய்ய வில்லையா என்று கேட்டேன், அதற்கு அவர் ஐயா எனக்கு ஒரு மகன் ஒரு மகள் அவர்களை கரையேற்றுவதிக்காக உழைக்கின்றேன் என்றார். ஆனால் எனது பள்ளி தோழன்  தற்போது 80 வயது மனைவி 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது, அவர் இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற போது பிள்ளைகள் எதிர்ப்பு செய்தனர். காரணம் அவருக்கு நேரத்தோடு சாப்பாடு கொடுத்து கவனிக்க அவர்கள் கூடவே இருக்கின்றனர். ஒரு ஆட்டோ டிரைவருக்கு உள்ள உணர்வு அவருக்கு இல்லையே என்று என்னதோண்றவில்லையா? 

 

 

சொத்து பிரிவினை செய்யும் போது அண்ணன் தம்பி பாசத்தை மறந்து விடாதீர்கள். சொத்தினை நீங்கள் சம்பாதிக்கலாம் ஆனால் ஒரு முறை உடைந்த உறவை எப்படி கண்ணாடி உடைந்தால் ஓட்ட முடியாதோ அதேபோல் எப்போதும் சம்பாதிக்க முடியாது, சொத்தினை விட உறவை நேசிப்போம். தமிழக இந்நாள் அமைச்சர் பாண்டிச்சேரியில் தன் சகோதரர் வீட்டிற்குள் அரை குறை ஆடையுடன் தகராறு செய்த்துவதினை வீடியோ காட்சிகள் வெளியிட்டு நீதி மன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருப்பதனை அறிவீர்கள். 

No comments:

Post a Comment